Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாசிகளின் வதை முகாம் மீட்கப்பட்டு 75 ஆண்டுகள்

Featured Replies

இரண்டாம் உலகப் போர்க்காலத்தில் நாசி ஜேர்மனியால் நடத்தப்பட்ட பாரிய வதை முகாமான அவிஸ்விற்ஸ் பிர்கனவ் முகாம் (Auschwitz-Birkenau  concentration camp)  சோவியத்தின் செம்படைகளால் மீட்கப்பட்டு இன்று 27.ஜனவரி 2020 ல்  75 ஆண்டுகள் பூர்ததியாகி உள்ளது. அதன் நினைவை உலகமக்கள்  இன்று நினைவு கூர்ந்தனர்

பல ஐரோப்பிய நாட்டு தலைவர்கள் இன்றுஅங்கு விஜயம் செய்து அங்கு கொல்லப்பட்ட மக்களை. நினைவு கூர்ந்தனர். வதைமுகாமிலிருந்து மீட்கப்பட்டவர்களில் இன்று உயிருடன்  வாழும் 200 கு மேற்ப்பட்ட மக்களும் நிகழ்வில் கலந்துகொண்டனர். 

நாசிகளால் நடத்தப்பட்ட பல வதை முகாம்களில் மிகப் பெரியது இந்த முகாம் ஆகும்.  போலந்தின்  தென்பகுதியில் உள்ளது.  செம்படைகளால் விடுவிக்கப்படும் போது 7000 கு மேற்ப்பட்ட கைதிகள் அங்கு இருந்தனர். கிட்டத்தட்ட 1.1 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் 1940 - 1945 காலப்பகுதியில் இந்த முகாமில் மாத்திரம் படுகொலை செய்யப்பட்டனர். 

வார்சோவை கைப்பற்றி இம்முகாமை நோக்கி செம்படைகள  முன்னேறிய வேளை அவசரம் அவசரமாக  தம்மிடம் இருந்த கைதிகளை நாசிகள் கொலை செய்ய ஆரம் பித்தனர். இருப்பினும் சோவியத் படைகளின் வேகமான முன்னேற்றத்திற்கு  ஈடு கொடுக்க முடியாமல் நாசிப் படைகள்  பேர்லினை நோக்கி பின்வாங்க பல ஆயிரக்கணக்கான கைதிகள் காப்பாற்றப்பட்டனர். இருப்பினும் இம்மகாம் தொர்பான பெருமளவு தடயங்களை நாசிகள  அழித்து விட்டனர். 

தற்போது நினைவு சின்னமாக பராமரிக்கப்பட்டு வரும் இந்த பாரிய முகாமை வருடாந்தம் பல லட்சக்கணக்கான மக்கள் வந்து பாரவையிடுகின்றனர. 

சென்ற வருடம் நான்  இந்த முகாமிற்கு  சென்ற பின்னர் அங்கு கண்ட காட்சிகள் மனத்தை உறைய வைப்பவை. அதில் நான்  இருந்து மீண்டுவர பல வாரங்கள் எடுத்தது.அப்போது எடுக்கப்பட்ட படங்களை பின்னர் இணைக்கிறேன்.  
 
https://www.ndr.de/geschichte/schauplaetze/Auschwitz-KZ-Befreiung-durch-die-Rote-Armee-vor-75-Jahren,auschwitz592.html

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, tulpen said:

சென்ற வருடம் நான்  இந்த முகாமிற்கு  சென்ற பின்னர் அங்கு கண்ட காட்சிகள் மனத்தை உறைய வைப்பவை. அதில் நான்  இருந்து மீண்டுவர பல வாரங்கள் எடுத்தது.அப்போது எடுக்கப்பட்ட படங்களை பின்னர் இணைக்கிறேன்.  
 
உங்களைப் போல் நேரில் போய்ப் பார்கக எனக்கு இன்னும் வாய்ப்பு அமையவில்லை Tulpen

நாசிகளின்  Auschwitz வதை முகாமில் இருந்தவர்களை,  ரஷ்யா செம்படைகள் விடுவித்த 75 வது  வருட நினைவு நாளை இன்று நினைவு கூர்ந்தார்கள். அதைத் தொலைக் காட்சியில் பார்த்தேன்

Auschwitz வதை  முகாமில் இருந்த 200 பேர்வரையிலானவர்கள் அந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்கள். வயதுகள் 90ஐத் தாண்டி இருந்தாலும், அந்த நினைவு நாளில், மெல்லிய நீலம், வெள்ளை கலந்த யூதர்களின் கொடியின் நிறத்திலான துண்டுகளை கழுத்தில்  கட்டிக் கொண்டு கதிரையில் அவர்கள் அமைதியாக அமர்ந்திருந்தார்கள்.

அவர்களின் மனதுக்குள் சோகங்கள் நிறைந்திருந்ததை அவர்களது பேச்சு வெளிப்படுத்தியது. வதை முகாமிற்கு கொண்டு போனதன் பின்னர் தாய்,தந்தை, உடன்பிறப்புகள் என்று ஒவ்வொருவராகப் பிரிந்து போனது, பின்னர் அவர்களை வாழ்நாள் முழுவதுமே காண முடியாமல் தவித்தது என்று அவர்கள் கதை கதையாகச் சொன்னார்கள்.

94 வயதான Lewin தனது கதையைச் சொல்லத் தொடங்கு முன்னரே மெலிதான குரலில் "முதலில் நான் எனது கண்ணீரை மறைத்துக் கொள்கிறேன்" என்று சொல்லிவிட்டே ஆரம்பித்தார்.

BAECC8-CD-5-C54-4-A5-C-8133-896-DCF945-A

“Warschau வில் பிறந்தேன். என்னுடை மூன்று சகோதரர்களுடன் சந்தோசமாக இருந்தேன். 1942இல் என்னையும் எனது ஒரு சகோதரனையும் இரும்பு ரெயில் பெட்டியில் அடைத்து Auschwitzக்கு  கொண்டு வந்தார்கள். அங்கே பல மணித்தியாலங்கள் ஓய்வின்றி கட்டாயவேலை செய்ய வேண்டியிருந்தது.

அப்படி வேலை செய்து கொண்டிருக்கும் போது ஒருநாள்  நான் கேட்ட ஒரு செய்தி எனக்குப் பெரும் அதிர்ச்சியைத் தந்தது. அந்தச் செய்தி இன்றும் என்னைத் துரத்திக் கொண்டே இருக்கிறது. என்னுடைய சகோதரனை சுட்டுக் கொன்று விட்டார்கள் என்பதே அந்தச் செய்தி. ஒரு காரணமும் இல்லாமல் ஏன் அவனைச் சுட்டார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் காணாமல் போனவர்களது பெயர்ப் பட்டியலில்தான் அவனது பெயர் இன்றும் இடம் பெற்றிருக்கிறது.

நான் இருந்த வதை முகாமிற்கு கொண்டு வரப் படுபவர்களில் அனேகமானோர் எரிவாயு (gas chamber) மூலமாகக் கொல்லப் பட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த இடத்தை Sauna என்றுதான் சொல்வார்கள். அதை death sauna என்று சொல்வதுதான் மிகப் பொருத்தமாக இருக்கும்.

ஒரு மில்லியனுக்கு மேலானவர்கள் கொல்லப்பட்ட அந்த வதை முகாமில்1945இல் விடுவிக்கப் பட்டவர்களில் நானும் ஒருவன். நிலக்கரி ரெயிலில் எங்களை Buchenwaldக்கு கொண்டு வந்தார்கள். என்னால் அவ்வளவு சுலபமாக இயல்பு வாழ்க்கைக்குள் வந்து விட முடியவில்லை. ஆனாலும் வாழத் தொடங்கினேன். அந்த கடினமான காலங்களின் வலிகள் இன்றும் என்னைத் தொடர்கின்றன. எனது பெற்றோரைக் கொன்று விட்டார்கள் என்று அறிந்தேன். எனது சகோதரி? அவளுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. பலநாள் தேடினேன். கிடைக்கவில்லை

அந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்த்த பொழுது, ஒரு விடியல் வருமா? நாளை எங்களது சோகங்களும் இப்படியான ஒரு நிகழ்வில் பகிரப்படுமா? என்ற கேள்விகள் எனக்குள் எழுந்தன.

  • கருத்துக்கள உறவுகள்

சோவியத் படைகள் இவர்களை விடுவிக்கவில்லை என்றும் அமெரிக்க + படைகள் விடுவித்ததாக புதுக்கதை ஒன்றை பரப்புகிறார்கள். எங்கள் கண்களுக்கு முன்னால் நடந்தவைகளையே மாற்ற முயற்சிக்கிறார்கள். 

தக்கன(?) பிளைக்கும் என்பது இதுதானோ ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, Kavi arunasalam said:

நான் இருந்த வதை முகாமிற்கு கொண்டு வரப் படுபவர்களில் அனேகமானோர் எரிவாயு (gas chamber) மூலமாகக் கொல்லப் பட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த இடத்தை Sauna என்றுதான் சொல்வார்கள். அதை death sauna என்று சொல்வதுதான் மிகப் பொருத்தமாக இருக்கும்.

நாஷிகளின் பெயரை வைத்து   பிற/அயல் நாட்டவர்களும் அகோரக்கொலைகளை திறம்பட செய்து முடித்தார்கள் என பல ஜேர்மனியர்கள் மனதுக்குள் முணுமுணுப்பார்களாம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

நாஷிகளின் பெயரை வைத்து   பிற/அயல் நாட்டவர்களும் அகோரக்கொலைகளை திறம்பட செய்து முடித்தார்கள் என பல ஜேர்மனியர்கள் மனதுக்குள் முணுமுணுப்பார்களாம்.

அதுஉண்மையும் கூட. போலந்து படுகொலையில் தனது பிரசைகள் ஈடுபட்டதை தற்போது மறுக்கிறது.

  • தொடங்கியவர்
On 1/28/2020 at 8:12 PM, Kapithan said:

சோவியத் படைகள் இவர்களை விடுவிக்கவில்லை என்றும் அமெரிக்க + படைகள் விடுவித்ததாக புதுக்கதை ஒன்றை பரப்புகிறார்கள். எங்கள் கண்களுக்கு முன்னால் நடந்தவைகளையே மாற்ற முயற்சிக்கிறார்கள். 

தக்கன(?) பிளைக்கும் என்பது இதுதானோ ?

அவ்வாறு கதை பரப்பப்படுவது குறித்து நான் இதுவரை அறியவில்லை. இரண்டாம் உலகப்போரில் கிழக்கு போர்முனையில் சோவியத்துருப்புக்கள் மட்டுமே போரிட்டதற்கான ஆதாரங்கள் வெளிப்படையாக வரலாற்று பதிவுகளக  இருக்க இவ்வாறு கதை பரப்புவது  சாத்தியமல்ல. 

On 1/28/2020 at 9:17 PM, குமாரசாமி said:

நாஷிகளின் பெயரை வைத்து   பிற/அயல் நாட்டவர்களும் அகோரக்கொலைகளை திறம்பட செய்து முடித்தார்கள் என பல ஜேர்மனியர்கள் மனதுக்குள் முணுமுணுப்பார்களாம்.

ஹிட்லரின் இராணுவ நடவடிக்கையில் தான் ஏற்கனவே வெற்றி கொண்ட கிழக்கு ஐரோப்பிய நாட்டு இராணுவ வீரகளும் இருந்தனர். ஆனால் கட்டளை உயர் அதிகாரிகளாக ஜேர்மனியர்களே இருந்தனர். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

அவ்வாறு கதை பரப்பப்படுவது குறித்து நான் இதுவரை அறியவில்லை. இரண்டாம் உலகப்போரில் கிழக்கு போர்முனையில் சோவியத்துருப்புக்கள் மட்டுமே போரிட்டதற்கான ஆதாரங்கள் வெளிப்படையாக வரலாற்று பதிவுகளக  இருக்க இவ்வாறு கதை பரப்புவது  சாத்தியமல்ல. 

ஹிட்லரின் இராணுவ நடவடிக்கையில் தான் ஏற்கனவே வெற்றி கொண்ட கிழக்கு ஐரோப்பிய நாட்டு இராணுவ வீரகளும் இருந்தனர். ஆனால் கட்டளை உயர் அதிகாரிகளாக ஜேர்மனியர்களே இருந்தனர். 

இது சிறிது நேரத்திற்கு முன்னர் sputniknews.com ல் வந்தது. நேற்று டென்மாற்க்கிற்கான அமெரிக்கத் தூதரகம் தனது ட்வீற்ரர் பக்கத்தில் இம் முகாம் கூட்டணிப் படைகளால் மீட்கப்பட்டதாக கூறி அதனால் ஏற்பட்ட மிகக் கடுமையான விமரிசனங்களின் பின்னர் தவறுக்கு மன்னிப்பைக் கோரியிருந்தது. நேற்று முன்தினம் ஜேர்மனியின் முன்ணணிப் பத்திரிகையான spergel இதேமாதிரியான மோசமான பிழையுடன் கட்டுரையை வெளியிட்டு பின்னர் தனது தவறுக்கு மன்னிப்பைக் கோரியிருந்தது. இது போன்ற தகவல்களை நான் கடந்த ஒரு மாத மாக வாசித்து வருகிறேன். போலந்துதான் நாசிக்களின் படுகொலைகளுடன் தமக்குள்ள தொடர்பை  மிகவும் கடுமையாக மறுத்துவருகிறது. 

(மேற்குலகு சார்பான செய்திகள் எமக்கு தேவைக்கும்  மேலதிகமாக எம்மேல்  கொட்டப்படுகிறது. ஆனால் கிழக்கு ஐரோப்பிய, ஆசிய, ஆபிரிக்க செய்திகள் மிக அரிதாகவே(தாமதமாக) எமக்கு வந்தடைகிறது.) கீழே தரப்பட்டது மிகச் சிறிய ஒரு  உதாரணம் மட்டுமே.)

.  tps://sptnkne.ws/BkPZ

 0 102

Subscribe

PARIS (Sputnik) - Kiev’s and Warsaw’s pursuit to rewrite the history of World War II is among the most serious political problem of modern Europe, Russian Permanent Delegate to UNESCO Alexander Kuznetsov said on Wednesday in the Russian Centre for Science and Culture in Paris.

Kuznetsov voiced his concerns during an opening ceremony of an exhibition dedicated to the role played by Soviet Jews in WWII. The exhibition will be open to visitors from 30 January to 10 April.

"Let’s face the truth: since the end of the second world war, there have never been such explicit, arrogant and shameless attempts to rewrite the history of the second world war", Kuznetsov said.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் நாஷிப்படைகள் செய்தது சரியென வாதிடவில்லை.
யூத படுகொலைகளுக்கு மேற்குலகம் இன்றும் கண்ணீர் வடித்துக்கொண்டுதான் இருக்கின்றது. வருடாவருடம் அதை நினைவு கூந்து இன்னொரு முறை அப்படி நடந்துவிடக்கூடாது என வருங்கால சந்ததிக்கு அறிவுறுத்துகின்றது.
சரியானதும் நியாயமானதும் கூட......
ஆனால் இன்று மத்திய கிழக்கில் இஸ்ரேல் எனும் யூத நாடு பலஸ்தீன மக்களுக்கு செய்த/செய்யும் அட்டூழியங்களை யாராவது அல்லது மேற்குலகம்  கண்டிக்கின்றதா? தாங்கள் நாஷிகளால் அழிக்கப்பட்டோமே அது போல் இன்னொரு இனம் அழியக்கூடாது என்றொரு மனப்பான்மை ஏன் அவர்களுக்கு வரவில்லை? விட்டுக்கொடுத்து சரிசமமாக வாழும் பழக்கம் இல்லாதவர்களா?

அல்லது கிட்லரை விட மோசமானவர்களா? ⬇️

Bild

https://twitter.com/EmanAhm56576131/status/1221939719690489857

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

என்னைப் பொறுத்தவரை மேற்குலகு கண்ணீர் வடிக்கவில்லை. அப்படி வடிப்பதானால் இவர்கள் செய்த, செய்துகொண்டிருக்கும்  படுகொலைகளுக்கு வருடம் 365 நாட்கள் போதாது.

யூதர்களின் பணபலம், அவர்களின் ஒற்றுமை, அவர்களின் தூர நோக்கு மேற்குலகை கட்டாயமாக கண்ணீர் விட  வைக்கிறது.

தக்கன பிழைக்கும் என்கின்ற கோட்பாடை  இங்கேயும் பிரயோகிக்கலாமா ?

1 minute ago, Kapithan said:

நன்றி கு சா உங்கள் லைக்ஸ் க்கு 

மை செயலீஸ் ஆ நொட் வேக்கின் 😀

  • தொடங்கியவர்

large.IMG_2744.JPG.1583aa469577f786cd29a2d5ee233ffc.JPGAuschwitz  முகாமில் லட்சக்கணக்கான மக்கள் கொலை களத்திறகு அழைத்து செல்லப்பட்ட பாதை

large.IMG_2831.JPG.2f0a8ce4398ec187420f5c13338515f1.JPGDeath wall. லட்சக்கண‍க்கான மக்கள் இந்த சுவரில் நிறுத்தபட்டு  சுடபட்டு இறந்த‍னர். 

  • தொடங்கியவர்

large.IMG_2762.JPG.0d8514594cd80374103d89a7f52b9839.JPGநச்சு வாயு கூடங்களுக்கு (Gas champer)  பயன்படுத்த‍ பட்ட  Zyklon B  என்ற நச்சு மருந்தின் வெற்று டப்பாக்ககள்.

large.IMG_2776.JPG.219499ae68e6883011e37c163b5ec28e.JPGlarge.IMG_2775.JPG.e821ace6a905c442978a25cc632d19ff.JPGகொல்லபட்ட மக்களின் பயணப்பெட்டிகள். ஐரோப்ப‍ முழுவதும் இருந்து வேலைக்கென ஏமாற்றி அழைத்துவரப்பட்ட மக்களே இம்முகாம்களில் படுகொலை செய்யப்பட்டனர். 

  • தொடங்கியவர்

large.IMG_2787.JPG.dce7efc11ae41ac9c6e8b4695ebb2c96.JPGlarge.IMG_2785.JPG.b565cd2a89bfaf72310bd6a0dba57914.JPGகொல்ல‍ப்ப‍ட்ட ம‍க்களின் லட்சக்கணக்கான பாதணிகள்

  • தொடங்கியவர்

large.IMG_2857.JPG.f88d4fc15ccc42e578ee2c380d1e20b9.JPGlarge.IMG_2861.JPG.4a6d7e8b9b91965221276663cda15406.JPGஅன்றாடம் கொல்லபட்டும் மக்களுக்காக விசேடமாக அமைக்கபட்ட Crematorium. இம்முகாம் கிட்டத்தட்ட ஒரு தொழிற்சாலை போல் நடத்த‍ப்பட்டது தினசரி கொல்லபட்டும் மக்களை தெரிவு செய்வதில் இருந்து சடலங்களை எரிப்பது வரை systematic  ஆக எந்த பதட்டமும் இன்றி நடைபெறும். 

Edited by tulpen

  • தொடங்கியவர்

large.IMG_2869.JPG.918f0d7c10a49bad9f833dad33a5b38e.JPGlarge.IMG_2870.JPG.1f4f885d706aaf7e5e118de637d5c686.JPGlarge.893293529_IMG_2878(1).JPG.4cf1bf34ecf4d109c8d012ec44e7325c.JPGGas chamber அமைந்திருந்த இடம்

Edited by tulpen

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, tulpen said:

large.IMG_2787.JPG.dce7efc11ae41ac9c6e8b4695ebb2c96.JPGlarge.IMG_2785.JPG.b565cd2a89bfaf72310bd6a0dba57914.JPGகொல்ல‍ப்ப‍ட்ட ம‍க்களின் லட்சக்கணக்கான பாதணிகள்

கொல்லப்படுபவர்களின் பாதணிகளை ஏன் சேகரித்தார்கள்?

  • தொடங்கியவர்
10 hours ago, குமாரசாமி said:

கொல்லப்படுபவர்களின் பாதணிகளை ஏன் சேகரித்தார்கள்?

முகாம் கைப்பற்றப்பட்ட வேளையில் அங்கு இருந்த பொருட்கள், ஆவணங்கள்  அனைத்தும் நினைவு சின்னங்களாக பராமரிக்கப்பட்டு வருகின்றன. அப்பொருட்களில் ஒரு சிறிய பகுதிதான் இந்த பாதணிகள். பொலந்து கம்யூனிச ஆட்சியில் இருந்த போது இந்த அருங்காட்சியகத்தை மேற்குலக மக்கள் பார்வையிடுவது சிரமமாக இருந்தது. தற்போது இலகுவாக பல ஆயிரக்கணக்கான மக்கள் தினந்தோறும் அங்கே சென்று வருகின்றனர். 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 1/31/2020 at 12:30 AM, குமாரசாமி said:

கொல்லப்படுபவர்களின் பாதணிகளை ஏன் சேகரித்தார்கள்?

On 1/31/2020 at 10:41 AM, tulpen said:

முகாம் கைப்பற்றப்பட்ட வேளையில் அங்கு இருந்த பொருட்கள், ஆவணங்கள்  அனைத்தும் நினைவு சின்னங்களாக பராமரிக்கப்பட்டு வருகின்றன. அப்பொருட்களில் ஒரு சிறிய பகுதிதான் இந்த பாதணிகள். பொலந்து கம்யூனிச ஆட்சியில் இருந்த போது இந்த அருங்காட்சியகத்தை மேற்குலக மக்கள் பார்வையிடுவது சிரமமாக இருந்தது. தற்போது இலகுவாக பல ஆயிரக்கணக்கான மக்கள் தினந்தோறும் அங்கே சென்று வருகின்றனர். 

இப்படி வெகு சிரத்தையாக பாதுகாத்து பராமரிக்கின்றார்கள்.வருங்கால சந்ததியினருக்கு இது ஒரு பாடமாக அமையும்.
இருந்தாலும்.....
ஆங்கிலேயர்கள் ஆசிய நாடுகளுக்கு படையெடுத்து அழிவுகளை செய்ததை யாரும் நினைவு கூர மாட்டார்களா?
வட அமெரிக்க கண்டத்திற்கு  படையெடுத்து செவ்விந்தியர்களை பூண்டோடு அழித்ததை வரலாறாக கருத மாட்டார்களா?
அவுஸ்ரேலியா எனும் தனிக்கண்டத்தில் வாழ்ந்த மூத்த குடியினரை ஒதுக்கி தங்கள் நாடாக அறிவித்த ஆங்கிலேயர்களுக்கு என்ன தண்டனை?
ஆபிரிக்காவில் ஆங்கிலேயர் செய்த கொடூரங்களின் வடுக்கள் இன்னு ஆற்வில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.