Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

பூமி ஏன் கொதிக்கிறது?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

13512461971.jpg

இதுவரை நாம் புத்தகங்களில் படித்த ஒரு செய்தியை, உண்மை என்று இதுவரை நம்பிக் கொண்டிருந்த செய்தியை, அப்படியே தவறு என்று துல்லியமாக நிரூபித்து ஒரு கட்டுரை வந்தால் எப்படி இருக்கும்? ஸ்தம்பித்து விடாது? அப்படித்தான் சமீபத்தில் எல்லா விஞ்ஞானிகளுக்கும் ஆகிவிட்டது. ப்ராங்க் கெப்ளர் மற்றும் தாமஸ் ராக்மேன் என்கிற இரு விஞ்ஞானிகளும் புதிய கண்டுபிடிப்பு ஒன்றை வெளியிட்டு விஞ்ஞானிகள் உலகத்தை ஸ்தம்பிக்க வைத்து விட்டார்கள்.

அவர்கள் சொல்லியிருப்பது என்ன? இதுவரை மீத்தேன் என்கிற இயற்கை வாயு ஆக்ஸிஜன் தேவைப்படாத பாக்டீரியாக்களின் செயல்பாட்டின் போதுதான் வெளிவருகிறது என்று நம்பப்பட்டிருந்தது. ஆனால், மேற்சொன்ன இருவரும் சாதாரண மரம் செடி கொடிகள் கூட மீத்தேனை வெளியிடுகின்றன என்று நிரூபித்திருக்கிறார்கள்.

இதனால் என்ன? இந்த மீத்தேன் தான் கண்டபடி தற்சமயம் பூமியில் நடக்கிற பருவ மாற்றங்களுக்கும், எப்போதும் இல்லாத அளவிற்கு பூமி கொதிப்பதற்கும் காரணம்.

சற்று விரிவாகக் கவனிப்போம்.

1351246209.jpg

இந்த மீத்தேனை வேதியியல் படிக்கிறவர்கள் சிபி4 என்று எழுதுகிறார்கள். இது ஒரு இயற்கை வாயு. பொதுவாக எண்ணெய்க் கிணறுகளிலும், நிலக்கரி சுரங்கங்களிலும், கேஸ் வயல்களிலும் காணப்படும்.

ஒவ்வொரு வருஷமும் மனிதர்களின் செயல்களின் மூலமும், (இதனை ஆந்த்தபோஜெனிக் ஆக்டிவிடி என்கிறார்கள்) இயற்கையாகவும் 600 மில்லியன் மெட்ரிக் டன் மீத்தேன் உருவாகிறது. இவற்றில் பெரும்பகுதி ஆக்ஸிஜன் தேவைப்படாமல் வாழ்ந்து தன் வேலைகளைச் செய்யும் பாக்டீரியாக்களின் சிதைவுச் செயல்களில் இருந்து வருவதாகச் சொல்லப்படுகிறது. ஈர நிலங்கள், நெல்வயல்கள் இதில் பெரும்பங்கு எடுத்துக் கொள்கின்றன. ஆடு, மாடு போன்றவைகளும் மீத்தேன் உருவாக்கத்தில் சிறிய பங்கு கொள்கின்றன. காடுகளும் மீத்தேனை வெளியிடுகின்றன. கடந்த வருடங்களில் ஆய்வாளர்கள், உலகில் மீத்தேன் சுழற்சி எப்படி நடக்கிறது என்பதைச் சற்று அறிந்து வைத்திருக்கிறார்கள்.

இருந்தாலும், இதில் சில கேள்விகளுக்கு விடை இல்லாமல் இருந்தது. காற்று வெளியில் இருக்கிற மீத்தேன் அளவு ஏன் இருவேறு காலங்களில் கண்டபடி ஏற்ற இறக்கம் காட்டுகிறது என்பதற்குத் தெளிவான பதில் இல்லை. இந்தக் காலத்தை ஐஸ் ஏஜ் மற்றும் வார்ம் ஏஜ் என்கிறார்கள். ஆனால் 2001 வரை எந்த விஞ்ஞானியும், இதற்கு தாவரங்கள் மீத்தேனை வெளியிடுவதுதான் காரணம் என்று சொல்ல முடியவில்லை. காரணம், ஒவ்வொருவருமே மீத்தேன் வெளிவர அனரோபிக் பாக்டீரியாக்களின் ஆதரவு மட்டுமே தேவை என்று நம்பினார்கள்.

தாவர உலகத்தின் பெரும் காற்றாக மீத்தேன் இருப்பதால், அதன் ஆரம்ப இடங்களும், வெளிவருகிற அளவும் முக்கியமானதாக ஆகிவிட்டது. ஒரு கிலோகிராம் மீத்தேன் பூமியை சூடாக்குகிற அளவு, கார்பன் டை ஆக்ஸைடு சூடாக்கும் அளவை விட 23 தடவை அதிகம். கூடவே மனித குலத்தின் பங்கும் சேர்ந்து காற்று மண்டலத்தில் மீத்தேன் அளவு 150 வருடங்களுக்கு முன்பு இருந்ததை விட மூன்று மடங்காக உயர்ந்துவிட்டது. இது இப்படியே போனால் 21_ம் நூற்றாண்டின் முடிவில் பூமியின் வெப்பநிலை எவ்வளவு உயரும்? பூமியும் மக்களும் தாங்குவார்களா? பருவகால விஞ்ஞானிகள் என்ன செய்ய வேண்டும்? இந்த மீத்தேன் உருவாகிற அளவைக் கட்டுப்படுத்த வழிகள் என்ன? போன்ற கேள்விகளுக்குப் போகும்முன், இந்த மீத்தேனின் ஆரம்ப உலகமும், எதிர்கால விதியும் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

13512462010.jpg

கெப்ளர், ராக்மேன் இருவரும் நார்த்தர்ன் அய்லன்டில் இருக்கும் டிபார்ட்மென்ட் ஆஃப் அக்ரிகல்ட்சர் அன்ட் ஃபுட் ஸயின்ஸ் பிரிவில் ஆய்வில் இருந்தபோது, வயதான தாவரங்கள் க்ளோரோமீத்தேன் என்கிற வாயுவை வெளியிடுவதைக் கவனித்தார்கள். ஒரு வேளை உயிரோடு இருக்கிற தாவரங்களும் இப்படி வெளியிடுமோ என்று யோசித்த போதுதான் அவர்களுக்குப் புதிய வழி கிடைத்தது.

முப்பது விதமான தாவரங்களின் இலைகளையும், மரங்களின் இலைகளையும் வெவ்வேறு இடத்தில் இருந்து கொண்டுவந்து ஒரு பெட்டியில் வைத்தார்கள். அதற்குள் வளி மண்டலத்தில் இருக்கும் ஆக்ஸிஜன் அதே அளவில் இருந்தது. சோதனையின் முடிவு அவர்களை ஆச்சர்யத்திற்குத் தள்ளியது. அந்த வெவ்வேறு இலைகளும் மீத்தேனை வெளியிட்டிருந்தன. ஒரு கிராம் வறண்ட இலைகள் 0.2_3 நானோகிராம் மீத்தேனை ஒரு மணி நேரத்தில் வெளியிட்டிருந்தன.

இது தாவரங்களிலிருந்துதான் வெளிவந்ததா? அல்லது இயல்பாகவே சுற்றியிருக்கும் காற்றில் இருந்து வந்ததா? என்கிற சிரமத்தையும் தாண்டி இந்தச் சோதனை வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டது. இதற்காக அந்த பெட்டிக்குள் இருக்கும் இயற்கை காற்றின் மீத்தேனை அகற்றிவிட்டு மீத்தேன் இல்லாத காற்றிலேயே பரிசோதனை நடத்தப்பட்டது. இதன் பிறகு இவர்கள் இருவரும் நேரடியாக தாவரங்களிடம் சோதனை நடத்தினார்கள். அவை உருவாக்குகிற மீத்தேன் அளவு வறண்ட இலைகளைவிட 10_லிருந்து 100 சதவிகிதம் அதிகமாக இருந்தது.

இதற்கு தெளிவான காரணத்தைச் சொல்ல முடியாவிட்டாலும் விஞ்ஞானிகள் இருவரும் சந்தேகப்பட்டது தாவர செல்களின் சுவர்களில் இருக்கும் பெக்டின் என்கிற பொருளைத்தான்.

13512462041.jpg

தாவரங்களில் இருந்து உருவாகும் மீத்தேன் அளவு பூமியில் இருக்கும் மொத்த மீத்தேன் அளவில் எவ்வளவு என்று யோசித்தால், ஒவ்வொரு இலையும் ஏற்கெனவே இருக்கும் மீத்தேன் அளவை அதிகரிக்கின்றன. கெப்ளர், ராக்மேன் கொடுத்திருக்கிற அளவின்படி ஒவ்வொரு வருஷமும் தாவரங்களிலிருந்து 60 மில்லியன் முதல் 240 மில்லியன் மெட்ரிக் டன் வரை மீத்தேன் வெளி வருகிறது. இது பூமியில் மீத்தேன் உருவாக்கத்தின் மொத்த அளவில் 40 சதவிகிதத்தை எடுத்துக் கொள்கிறது.

இதை எப்படி நம்புவது என்று ஒரு கேள்வி இருக்கிறது? சோதனையில் ஒரு இலையை எடுத்துக்கொண்டு பூமிக்கான மொத்த மீத்தேனையும் கணக்கிட முடியுமா என்றால், சற்று தயக்கமாகத்தான் இருக்கிறது. ஆனால் நிச்சயமாக நம்ப முடியாத அளவு அதிகமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இவர்களின் ஆய்வுக்கு வலு சேர்க்கும் வகையில் மற்றொரு ஆய்வு முடிவும் இருக்கிறது. ஜெர்மனியின் ஹெடில் பெர்க்கில் இருந்த இயற்கை பௌதிக விஞ்ஞானிகள் 2005_ல் வான்வெளியிலிருந்து பூமியின் வளிமண்டல அளவை ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, செயற்கைக் கோள் புகைப்படங்கள் காடுகளுக்கு மேலே மீத்தேன் சூழ்ந்த சூழலைப் படம் எடுத்துக் காட்டின. ஆக பச்சைத் தாவரங்களுக்கும் மீத்தேன் அளவுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது மெல்ல நம்பப்பட ஆரம்பிக்கப்பட்டது. தவிர 2006_ல் விஞ்ஞானி பால் ஜே க்ரூட்ஸன் (1995_ல் நோபல் பரிசு பெற்றவர்) தன்னுடைய ஆய்வுக் கட்டுரை ஒன்றில் வெனிசுலன் சவானாவில் எடுக்கப்பட்ட காற்று மாதிரிகளின் கணக்கெடுப்பின் படி 30 மில்லியன் முதல் 60 மில்லியன் மெட்ரிக் டன் வரை அந்தப் பகுதியில் மீத்தேன் நிறைந்திருப்பதாகச் சொல்லியிருந்தார்.

இந்த ஆய்வின்படி கெப்ளர், ராக்மென் இருவரும் இதுவரை பருவகாலத்தை ஆய்வு செய்யும் விஞ்ஞானிகளின் பல குழப்பங்களுக்கு விடை கொடுத்துள்ளனர். முக்கியமாக காற்று மண்டலத்தில் மீத்தேன் அளவு மாறுவதற்கும், பூமியின் உஷ்ணத்திற்கும் இருக்கிற தொடர்பு.

இதற்கு முன்பு கார்பன் டை ஆக்ஸைடுதான் இந்தப் பூமியின் உஷ்ணம் கூடிக் கொண்டு வரக் காரணம் என்று கருதப்பட்டது. கூடவே மீத்தேன் ஹைட்ரேட் என்று வாயுவும் சந்தேகத்திற்கு உட்பட்டு பின் நிராகரிக்கப்பட்டது. காரணம், இந்த வாயு கிட்டத்தட்ட 40,000 வருஷங்களாக நிரந்தரமாக இருந்தும் மிகக்குறைந்த அளவு பூமியின் உஷ்ண மாற்றத்தில் பங்கு பெறுகிறது என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது.

இந்த மீத்தேன் உருவாக்கத்தில் முக்கியப் பங்கு பெறும் தாவர இடம் காடுகள்தான். இப்போது இருக்கிற மரங்களைவிட 21,000 வருடங்களுக்கு முன்பு அமேசான் காடுகளில் பாதி மரங்கள்தான் இருந்தன. இப்போது இருக்கும் அளவை விட 10 மடங்கு அதிகமாக மீத்தேன் இன்னும் சில வருடங்களில் வெளிவரும் என்கிறார்கள். பூமி உருகி வழிந்துவிடுமா என்று தெரியவில்லை.

இந்த ஆய்வை வெளியிட்டுவிட்ட பிறகு கெப்ளருக்கும், ராக்மெனுக்கும் புதிய குழப்பம் ஒன்று வந்தது. மீடியாக்கள் தாவரங்கள்தான் பூமியின் வெப்பம் உயர்ந்துகொண்டே போகக் காரணம் என்று தலைப்பு வைத்து செய்தி வெளியிட்டன. ஈ.மெயில்களிலும், தொலைபேசியிலும் இது உண்மைதானா என்று கேட்டுத் துளைத்து எடுத்தார்கள். இதற்காக மறுபடியும் அவர்கள் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தினார்கள். தாவரங்கள் மீத்தேனை நூறு மில்லியன் வருஷங்களாக உமிழ்ந்து கொண்டு இருக்கின்றன. அவை கூடவே தாவர உலகை ஸ்தாபித்துக் கொண்டும் இருக்கின்றன. பலன்தான் நாம் இப்போது வைத்திருக்கும் உலகம். மீத்தேனின் தடாலாடி உயர்வுக்குக் காரணம் தாவரங்களல்ல. உலகம் தொழிற்சாலை மயமானது என்பதும், அதனால் நடைபெறுகிற மனிதகுல செயல்பாடுகளும்தான். தாவர உலகம் மனிதவாழ்வின் நுரையீரல் போன்றது. அவை ஆக்ஸிஜனைக் கொடுக்கின்றன என்பதை மறந்துவிடாதீர்கள், என்றெல்லாம் பெரிய விளக்கம் கொடுத்தார்கள்.

இருந்தாலும், பூமியின் உஷ்ணம் உயர்ந்து கொண்டே போவதற்கு தாவரங்களிலில் இருந்து வரும் மீத்தேன் முக்கியக் காரணங்களில் ஒன்று என்பது உறுதியாகிவிட்டது.

என்ன செய்யப்போகிறது விஞ்ஞானிகளின் உலகம் என்று தெரியவில்லை?

இந்த கண்டுபிடிப்பிற்காக கெப்ளர், ராக்மென் இருவருக்கும் வரும் ஆண்டில் நோபல் பரிசு நிச்சயம் உண்டு என்றே தோன்றுகிறது.

தகவல்:-குமுதம்.

Posted

அர்ரா சக்க.... :(:o:lol::)

இதுதான் விஞ்ஞான உலகமா.... :D:lol:

இதுதான் ஆதியும் அந்தமும் இல்லையோ.... இயற்கைக்கு. :unsure:

நன்றி குமாரசாமி

Posted

தாத்தா பூமி ஏன் கொதிக்கிறது இருக்கட்டும் மனிதன் ஏன் கொதிக்கிறான் என்று முதலில் சொல்லுங்கோ?

:unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

தாத்தா பூமி ஏன் கொதிக்கிறது இருக்கட்டும் மனிதன் ஏன் கொதிக்கிறான் என்று முதலில் சொல்லுங்கோ?

:unsure:

உங்களை மாதிரி ஆக்களை பார்க்கிறதால தான் :) :P :P :P

Posted

உங்களை மாதிரி ஆக்களை பார்க்கிறதால தான் :) :P :P :P

ஜம்மு எவ்வளவு நல்ல பிள்ளை என்ன பார்த்து ஏன் கொதிக்கிறது

:unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

ஜம்மு எவ்வளவு நல்ல பிள்ளை என்ன பார்த்து ஏன் கொதிக்கிறது

:unsure:

எனக்கு தெரியாது :P

Posted

எனக்கு தெரியாது :P

உங்களுக்கு தெறியும் தெறிந்தும் சொல்லாட்டி சரியில்லை

:P

Posted

ஜமுனாக்கா உங்களாளை மட்டும் எப்படி நல்ல அறிவுபூர்வமாக கேள்வி கேட்கக் கூடியதாகவுள்ளது?

எல்லாம் யாழுக்கு வந்த பிறகு தான்

:P

Posted

எல்லாம் யாழுக்கு வந்த பிறகு தான்

:P

அப்பிடியே வடமராட்சிப்பக்கம் போங்கோ..அங்க தான் அறிவு கூட இருக்காம் :unsure:

Posted

அப்பிடியே வடமராட்சிப்பக்கம் போங்கோ..அங்க தான் அறிவு கூட இருக்காம் :unsure:

1 கிலோ எவ்வளவு

:P

Posted

அப்பிடியே வடமராட்சிப்பக்கம் போங்கோ..அங்க தான் அறிவு கூட இருக்காம் :unsure:

அங்கே ஓல்ரெடி நான் இருக்கிறேன்

1 கிலோ எவ்வளவு

:P

என்ன நக்கலா ஜம்மு.........? :angry: :angry:

Posted

1 கிலோ எவ்வளவு

:P

மாட்டுத்தலை யோட..150 ரூபாக்கு எடுக்கலாம் :P

அங்கே ஓல்ரெடி நான் இருக்கிறேன்

உந்த வேகத்தைப்பார்க்க தெரியுது :unsure:

Posted

அங்கே ஓல்ரெடி நான் இருக்கிறேன்

என்ன நக்கலா ஜம்மு.........? :angry: :angry:

நீங்க இருக்கிறீங்க என்று எனக்கு தெரியும்

இப்ப நான் கேட்டதுக்கு ஏன் டென்சன்

:unsure:

மாட்டுத்தலை யோட..150 ரூபாக்கு எடுக்கலாம் :P

மலிவா இருக்கு

:P

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அதை எக்காரணம் கொண்டும் செய்ய மாட்டார்கள் என நினைக்கின்றேன். இராணுவமும் அதே நிலைகளில் இருக்கும். பல அனாவசிய அரச செலவுகளை அதிரடியாக குறைத்துக்கொண்டிருக்கும் அனுர தேவையில்லாத இராணுவ செலவுகளை குறைப்பாரா என அடுத்த வருடத்தில் பார்க்கலாம்.
    • புதுமைப் பெண்களடி . .........!  😍
    • மறவன்புலவும் சாவகச்சேரி ஏரியாதான் என்பதை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். 😂
    • ஓம்.  நான் கேட்ட கேள்விகளிலே இதற்கு பதில் இருக்கிறது 
    • வணக்கம் வாத்தியார் . .......! பெண் : அழகு மலராட அபிநயங்கள் கூட சிலம்பொலியும் புலம்புவதை கேள் என் சிலம்பொலியும் புலம்புவதை கேள் பெண் : விரல் கொண்டு மீட்டாமல் வாழ்கின்ற வீணை குளிர் வாடை கொஞ்சமல் கொதிக்கின்ற சோலை பகலிரவு பல கனவு இரு விழியில் வரும்பொழுது ஆகாயம் இல்லாமலே ஒரு நிலவு தரை மீது தல்லாடுது ஆதாரம் இல்லாமலே ஒரு கொடியும் ஆடாமல் தலை சாயுது பெண் : தாளத்தில் சேராத தனி பாடல் ஒன்று சங்கீதம் காணாமல் தவிக்கின்றது பெண் : விடியாத இரவேதும் கிடையாது என்று ஊர் சொன்ன வார்தைகள் பொய்யானது பெண் : வசந்தம் இனி வருமா வாழ்வினிமை பெருமா ஒரு பொழுது மயக்கம் ஒரு பொழுது கலக்கம் பதில் ஏதும் இல்லாத கேள்வி ஊதாத புல்லாங்குழல் எனதழகு சூடாத பூவின் மடல் தேய்கின்ற மஞ்சள் நிலா ஒரு துணையை தேடாத வெள்ளை புற பெண் : பூங்காற்று மெதுவாக பட்டாலும் போதும் பொன்மேனி நெருப்பாக கொதிகின்றது பெண் : நீரூற்று பாயாத நிலம்போல நாலும் என் மேனி தரிசாக கிடக்கின்றது பெண் : {தனிமையிலும் தனிமை கொடுமையிலும் கொடுமை இனிமை இல்லை வாழ்வில் எதற்கு இந்த இளமை} (2) வேறென்ன நான் செய்த பாவம்.......! --- அழகு மலராட ---
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.