Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனித வெடிகுண்டாக செயல்பட இருந்தவனை சுட்டுக்கொன்ற போலீஸ்

Featured Replies

லண்டனில் பொதுமக்களை கத்தியால் தாக்கியதுடன் மனித வெடிகுண்டாக செயல்பட இருந்த இளைஞனை போலீசார் சுட்டுக்கொன்றனர்.

வணிகவளாகங்கள், பொழுதுபோக்கு அரங்குகள் நிறைந்த ஸ்ட்ரீதம் ஹை ரோட்டில்((Streatham High Road)) சுற்றித்திரிந்த 20 வயது இளைஞன், திடீரென பொதுமக்கள் 2 பேரை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.
 

இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த போலீசார், பொதுமக்களை விலகச் சொல்லி இளைஞனை சுட்டுக்கொன்றனர். கொல்லப்பட்ட சுதேஷ் மாமூர்((Sudesh Mamoor)) என்ற அந்த இளைஞன் உடலில் வெடிகுண்டுகள் கட்டியிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டதாக மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சுதேஷ், கடந்த ஜனவரி மாதம் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

https://www.polimernews.com/dnews/99127/மனித-வெடிகுண்டாக-செயல்படஇருந்தவனை-சுட்டுக்கொன்றபோலீஸ்

 

  • தொடங்கியவர்

லண்டனில் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டவருக்கு இலங்கை தொடர்பு?

லண்டனில் ஞாயிற்றுக்கிழமை கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டவேளை காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட  சுடேஸ்அமானிற்கு இலங்கையில் குடும்பத்தவர்கள் உள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுடேஸ் அமானின் பெற்றோர் இலங்கையை சேர்ந்தவர்கள் என டெய்லி மெயில் தெரிவித்துள்ளது.

சுடேஸ் மமூர் பர்சார் அமான் இஸ்லாமிய தீவிரவாதம் குறித்த பிரசுரங்களை இணையத்தில் ஊக்குவித்தமைக்காக சிறையில் அடைக்கப்பட்டவர்,தனது காதலியை அவரின் பெற்றோரின் தலையை துண்டிக்குமாறு ஊக்குவித்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர் ஒருமுறை இணையத்தில் தனது இலட்சியங்களை பதிவு செய்திருந்தார் அதில் மாவீரனாக  மரணிப்பதற்கான விருப்பத்தை வெளியிட்டிருந்தார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

லண்டனில் தனது தாய் மற்றும் நால்வர் சகோதரர்களுடன் ஹரோவில் வாழ்ந்த வேளை தனது 17 வயதில் அவர் முதன் முதலில் பயங்கரவாத குற்றங்களில் ஈடுபடதொடங்கினார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏப்பிரல் 2018 இல் அவரது நடவடிக்கைகளை அறிந்த காவல்துறையினர் மே மாதத்தில் அவரை கைதுசெய்துள்ளனர்.
sudesh_amman.jpg

அவ்வேளை அவரது கணணியையும் கையடக்க தொலைபேசியையும் ஆராய்ந்த அதிகாரிகள் சுடேஸ் அமான் குண்டுகளை தயாரிப்பது,பயங்கரவாத தாக்குதல்களை மேற்கொள்வது குறித்த ஆவணங்களை தரவிறக்கம் செய்துள்ளதை கண்டுபிடித்தனர் என நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்துள்ளன.


london_stab_fe3.jpg 

உங்கள் தாயாரின் சமையலறையில் எவ்வாறு குண்டுகளை தயாரிப்பது,இராணுவ கத்தியை பயன்படுத்தி போரிடுவது, பிரேசில் கத்தியை பயன்படுத்துவது போன்ற விடயங்களை அவர் தரவிறக்கம் செய்துள்ளார் என நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்துள்ளன.


அமான் தனது குடும்பத்தவர்கள்,நண்பர்கள், காதலியுடன் தனது தீவிரவாத கொள்கைகள் குறித்து கருத்துப்பரிமாற்றத்தில் ஈடுபட்டார்,கத்தியை பயன்படுத்தி தனது தாக்குதலை மேற்கொள்வதற்கான விருப்பத்தை வெளியிட்டார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உங்கள் காதலியுடனான இணைய உரையாடலின் போது நீங்கள் ஐஎஸ் அமைப்பிற்கு விசுவாசமாகயிருப்பதாக சத்தியப்பிரமாணம் எடுத்துள்ளதாகவும்,அசிட் தாக்குதலை மேற்கொள்ளப்போவதாகவும் நீங்கள் தெரிவித்திருந்தீர்கள் என அமானிடம் நீதிபதி தண்டனை வழங்கியவேளை தெரிவித்திருந்தார்.
streatham_forensics_pa.jpg

குண்டுகளை விட நீங்கள் கத்தியை பயன்படுத்த விரும்புகின்றீர்கள் உங்கள் வீட்டிற்கு கத்தி விநியோகிக்கப்படுவதை விரும்பினீர்கள் எனவும் நீதிபதி தெரிவித்திருந்தார்.

டிசம்பர் 2017 இல் அமான் ஐஎஸ் அமைப்பின் தலைவரின் படத்தை பதிவு செய்திருந்தார் எனவும் நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்துள்ளன.

இன்னொரு செய்தியில் அவர் தனது காதலியை அவரின் பெற்றோர்களின் தலையைதுண்டிக்குமாறு கேட்டுக்கொண்டார் என நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்துள்ளன.

https://www.virakesari.lk/article/74832

  • கருத்துக்கள உறவுகள்

Sudesh-Amman-1.jpg

எனது மகன் நல்ல சிறுவனாகவே வளர்ந்தான் : சுதேஷ் அம்மானின் தாயார்

ஸ்ரெதம் நகரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி சுதேஷ் அம்மான் குறித்து தாயார் ஹலீமா ஃபராஸ் கான் தெரிவிக்கையில்; தனது மகன் ஒரு கண்ணியம் மிக்க நல்ல சிறுவனாகவே வளர்ந்ததாகக் கூறியுள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை மகன் என்னுடன் தொலைபேசியில் பேசியபோது அம்மா எனக்கு கொஞ்சம் பிரியாணி வேண்டும் நீங்கள் செய்யும் சுவையான மட்டன் பிரியாணி என்று கேட்டதாகத் தாயார் தெரிவித்துள்ளார்.

வடமேற்கு லண்டன், ஹரோவைச் சேர்ந்த 20 வயது சுதேஷ் அம்மான், தீவிரவாதப் பிரசாரங்களைப் பரப்பியதற்காக சிறைத் தண்டனை பெற்று கடந்த வாரம் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

எப்போதும் சிரித்துக் கொண்டிருக்கும் அழகு நிறைந்த கண்ணியமான எனது மகன் ஒரு பயங்கரவாதத் தாக்குதலை நடத்துவார் என்று தன்னால் நம்பமுடியவில்லை கண்ணீர் மல்க தாயார் ஹலீமா ஃபராஸ் கான் ஸ்கை நியூஸுக்கு தெரிவித்தார்.

Sudesh-Amman-1-1.jpg

இணையத்தில் இஸ்லாமிய மதவாதப் பிரசாரங்களை பார்த்தபின் தனது மகன் தீவிரமயமாக்கப்பட்டதாக நம்புவதாகவும், பெல்மார்ஷ் உயர் பாதுகாப்புச் சிறையில் இருந்தபோது மூளை சலவை செய்யப்பட்டிருக்கவேண்டும் என்று கூறினார்.

ஹலீமா ஃபராஸ் கான் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவர். தற்போது (Bedfordshire) பெட்ஃபேர்ட்ஷையரின் டன்ஸ்ரபிலில் (Dunstable) வசிக்கிறார்.

Sudesh-Amman-3.jpg

ஸ்ரான்மோர் (Stanmore) நகரில் உள்ள பார்க் உயர்நிலைப் பாடசாலையில் 2011 மற்றும் 2016 க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் சுதேஷ் அம்மான் கல்விகற்றுள்ளார் என்பதை பாடசாலை உறுதிப்படுத்தியுள்ளது.

அவரது பாடசாலை நண்பர் ஸ்கை நியூஸிடம் கூறுகையில்; தீவிரவாதத்தின் அறிகுறிகள் எதுவும் சுதேஷிடம் காணப்படவில்லை என்று தெரிவித்தார்.

மேலும் 2018 ஆம் ஆண்டில் கடைசியாகத் தனது நண்பனைப் பார்த்ததாகவும் இதுபோன்ற ஒரு துன்பகரமான காரியத்தைச் செய்திருப்பது உண்மையிலேயே ஒரு அவமானம் என்றும் குறிப்பிட்டார்.

பயங்கரவாத ஆவணங்களை வைத்திருந்த மற்றும் விநியோகித்த குற்றத்திற்காக சுதேஷ் அம்மான் 2018 டிசெம்பரில் 40 மாதங்கள் சிறைத் தண்டனை பெற்றார்.

சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் கடந்த இரண்டு வாரங்களாக ஸ்ரெதம் நகரில் உள்ள ஒரு பிணை விடுதியில் தங்கியிருந்தார்.

அம்மான் விடுவிக்கப்பட்ட திகதியை வெளியிட, நீதி அமைச்சகம் மறுத்துவிட்டது. ஆனால் கடந்த ஆறு வாரங்களுக்குள் விடுவிக்கப்பட்டார் என்பதை உறுதிப்படுத்தியது.

http://athavannews.com/எனது-மகன்-நல்ல-சிறுவனாகவ/

  • கருத்துக்கள உறவுகள்

நான் பேரை பார்த்தவுடனேயே கொஞ்சம் யோசித்தனான் ...இனி மேல் இலங்கை மூனாக்களுக்கு சர்வதேசத்திலும் பிரச்சனை 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.