Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மதவெறிக்கு எதிரான பிரதிக்கினை. - வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மதவெறிக்கு எதிரான பிரதிக்கினை.  - வ.ஐ.ச.ஜெயபாலன்

தமிழரின் விடுதலைப்பாதையில் கண்ணி வெடிகளாக மத மோதல்கள் விதைக்கபடுகிறதா? வடமாகாணத்தில் இடம் பெறும் நிகழ்வுகள் சர்வதேச அரங்கில் தமிழரை வெட்க்கித் தலைகுனிய வைத்துள்ளது. இது அவசர சிகிச்சையை நாடி நிற்க்கும் ஆபத்தான அரசியல் புற்று நோயாகும்.

மத நல்லிணக்கம் தமிழரின் பல்லாயிரம் வருடத்து இயல்பு. சமயச் சார்பின்மை எங்கள் மகத்தான மரபாகும். மணிமேகலையில் சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதை எல்லா சமய நிறுவனங்களும் ஒரே தெருவில் பக்கம் பக்கமாக நல்லிணக்கத்துடன் செயல்பட்டதை கூறுகிறது. 

போர்க்காலத்தில் மதபேதம் இல்லாமல் தமிழர் மத்தியில்  மனித உரிமை முதல் புனர்வாழ்வு ஈறான பல பணிகளிலும் முன்னின்றவர்கள் கிறுஸ்துவ மத தலைவர்கள் என்பதை நாம் அத்தனை இலகுவாக மறந்துவிடுதல் கூடாது.

1960பதுகளில் இருந்தே திருகேதீஸ்வரத்து சமய முரண்பாடுகள் தமிழருக்கு அவமானச் சின்னமாக வளர்க்கபட்டு வருகிறது.  போர்காலத்தில் வெளிப்படுத்திய மனித நேயத்துடனும் தமிழர் மீதான  பேரன்போடும் நடுநிலையான தலமைப் பண்போடும் வணக்கத்துக்குரிய  மன்னார் கத்தோலிக்க பேராயர்  தாமாக முன்வந்து திருகேதீஸ்வர பாதை வழைவு பிரச்சினைக்கு தீர்வை முன்வைக்க வேண்டுமென்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். 

சச்சி அண்ணா இளமையில் தமிழரிடையே சாதி சமய நல்லிணக்கத்துக்கு அறவழியில் உழைத்த மதிப்புக்குரிய வரலாற்றை கொண்டவர் என்பதை அறிவேன்.  சச்சி அண்ணா தனது இறுதிக் காலத்தில் மதப்பகை வளர்பவராக செயல்படுவதை நம்பவோ ஏற்கவோ முடியவில்லை. அண்ணா தமிழர் நலன்களுக்கு எதிரான மதவாதப் போக்கை கைவிட்டு திருகேதீஸ்வரம் பாதை வளைவு பிரச்சினைகள் தொடர்பாக மன்னார் பேராயரோடு பேசி தீர்வு காண முயலுங்கள். 

சமய சர்ச்சைகளும் விவாதங்களும் மேலோங்கியிருந்த பிரிட்டிஸ் கலோனில் ஆட்ச்சிக் காலத்தில்கூட தமிழர் மத்தியில் இடம்பெற்ற சைவ கிறிஸ்துவ மத சமய விவாதங்கள் நாகரீகமாகவே இடம்பெற்றன.  இன்றும் மத மோதல்களை முன்னெடுக்கும் சைவர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் மக்கள் ஆதரவு கிட்டவில்லை என்பது நம்பிக்கை தருவதாக உள்ளது.  சைவ கிறிஸ்துவ மக்கள் போர்க்காலத்தில் ஏற்பட்ட இறுகிய பிணைப்பை ஒருமைப்பட்டை எந்த விலை கொடுத்தாயினும் காப்பாற்றிட வேண்டும் என பணிகிறேன். 

மதவெறி தமிழ் பேசும் மக்களது கனவுகளின்மீது தீயாக மூட்டப்படுகிறது.  நமது விடுதலைக்காக இரத்தம் சிந்திய சகல மதங்களையும் இயக்கங்களையும் சேர்ந்த மாவீரர்களின் திருவுடல்கள் புதைந்துகிடக்கும் தாய்மண்ணைத் தொட்டு மதவெறிக்கு எதிராக பிரதிக்கினை எடுப்போம் வாருங்கள்.  

On 2/21/2020 at 11:48 PM, poet said:

மத நல்லிணக்கம் தமிழரின் பல்லாயிரம் வருடத்து இயல்பு. சமயச் சார்பின்மை எங்கள் மகத்தான மரபாகும். மணிமேகலையில் சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதை எல்லா சமய நிறுவனங்களும் ஒரே தெருவில் பக்கம் பக்கமாக நல்லிணக்கத்துடன் செயல்பட்டதை கூறுகிறது. 

உண்மை. ஆனால், இன்று ஒரு பல்லின - மத சமூகங்களுடன் தான் நாம் வாழ்கின்றோம். எமக்கு என இருந்த தேசம் இன்று இல்லை. 

ஒரு 70% புத்த சமயத்தை பெரும்பான்மையாக கொண்டதுடன் மட்டுமல்லாமல் ஒரு தீவிரவாத போக்கையும் கொண்ட சுற்றத்திற்குள் வாழும்பொழுது, 72 ஆண்டுகளையும் கடந்து இன, மத, கலாச்சார அழிவை எதிர்நோக்கி உள்ளது தமிழ் சமூகம். 

அகிம்சை, சகிப்பு என்ற உயர்ந்த குணங்கள் இருக்கத்தான் வேண்டும். அதேவேளை, அதை மதிக்கத்த சமூகங்கள் மத்தியில் தான் அவற்றிற்கும் பயன் இருக்கும். 

எல்லோரும் இந்து மத மனித்களை தானே விட்டு கொடுக்க சொல்கிறீரகள் எங்கேயும் யாருமே இந்தனைக்கும் காரணமான அந்த குருமாரை குற்றம நேரடியாக சொல்லவில்லை அவர்கள் போரக்காலத்தில் உதவி செய்தபடியால் அவர்கள் நல்லவர்கள் செய்வது எல்லாம் சரி என்று கண்ணையும் எல்லாத்தையும் பொத்திக்கொண்டு இருக்க தான் சொல்கிறாரகளோ??? அவர்கள் ஆங்கிலம் சிங்களம் பேச தெரிந்தபடியால தலையிட்டாரகள் எங்கட சைவ ஐயருக்கு சமஸ்கிரதமும் சரியா வராதே தமிழும் அதே 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மார்த்தாண்டன் said:

எல்லோரும் இந்து மத மனித்களை தானே விட்டு கொடுக்க சொல்கிறீரகள் எங்கேயும் யாருமே இந்தனைக்கும் காரணமான அந்த குருமாரை குற்றம நேரடியாக சொல்லவில்லை அவர்கள் போரக்காலத்தில் உதவி செய்தபடியால் அவர்கள் நல்லவர்கள் செய்வது எல்லாம் சரி என்று கண்ணையும் எல்லாத்தையும் பொத்திக்கொண்டு இருக்க தான் சொல்கிறாரகளோ??? அவர்கள் ஆங்கிலம் சிங்களம் பேச தெரிந்தபடியால தலையிட்டாரகள் எங்கட சைவ ஐயருக்கு சமஸ்கிரதமும் சரியா வராதே தமிழும் அதே 

நீங்கள் சுய பரிசோதனை செய்வதற்கான சாத்தியக் கூறுகள் ஏதும் உண்டோ ?

கவி மத சகிப்புத்தன்மைபற்றி கவலைப்பட்டால், நீங்கள் அதிலும் குறை கண்டுபிடிக்கிறீர்கள். 🤔

On 2/23/2020 at 12:39 AM, ampanai said:

உண்மை. ஆனால், இன்று ஒரு பல்லின - மத சமூகங்களுடன் தான் நாம் வாழ்கின்றோம். எமக்கு என இருந்த தேசம் இன்று இல்லை. 

ஒரு 70% புத்த சமயத்தை பெரும்பான்மையாக கொண்டதுடன் மட்டுமல்லாமல் ஒரு தீவிரவாத போக்கையும் கொண்ட சுற்றத்திற்குள் வாழும்பொழுது, 72 ஆண்டுகளையும் கடந்து இன, மத, கலாச்சார அழிவை எதிர்நோக்கி உள்ளது தமிழ் சமூகம். 

அகிம்சை, சகிப்பு என்ற உயர்ந்த குணங்கள் இருக்கத்தான் வேண்டும். அதேவேளை, அதை மதிக்கத்த சமூகங்கள் மத்தியில் தான் அவற்றிற்கும் பயன் இருக்கும். 

எங்களிடையே சகிப்புத்தன்மை இல்லையென்றால் அது சமயங்களின் பிழை அல்ல. அது எம் இனத்தின் பண்பு. 

 

நான் தமிழ்..., இந்து அல்ல!
****************************

நான் சில மாதங்களுக்கு முன் ஒரு பெண்ணை தாய்லாந்தில் சந்தித்தேன். அது ஒரு Starbucks காபி நிலையம். கருப்பாய் இருந்தாள். ஆனால் தோற்றத்தில் இந்தியப் பெண் மாதிரி இருந்தாள். சினேகமாய்ச் சிரித்தேன். அவளும் பதிலுக்கு சிரித்தாள்.

"இந்தியாவிலிருந்து வருகிறீர்களா?"

"இல்லை தென் ஆப்பிரிக்காவிலிருந்து"

என்றாள். எனக்கு ஆர்வம் தொற்றிக்கொண்டது. அவளது கையில் ஒரு காபி, எனது கையிலும் ஒரு காபி.

"இங்கு உக்காரலாமா?"

"ஓ"

என்று தலையசைத்தாள். அவள் தான் கால்நடை மருத்துவர் என்றும், உயிர் தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளேன் என்றும் சொன்னாள்.அவளது பணி, தாய்லாந்துக்கு வந்ததற்கான காரணம் போன்றவற்றைச் சுற்றி எங்களது உரையாடல் சென்று கொண்டிருந்த்தது. மொழி பற்றி லேசாக உரையாடல் திரும்பியது.

"உங்கள் தாய் மொழி என்ன?"

"தமிழ்"

என்றாள். எனக்கு மேலும் ஆர்வம் பற்றிக்கொண்டது.

"உங்களுக்குத் தமிழ் தெரியுமா?"

"தெரியாது, தாத்தா, பாட்டி பேசுவார்கள். ஆனால் எனக்குத் தெரியவில்லையே என்று வருத்தமாக உள்ளது".

"ஏன் கற்றுக் கொள்ளாமல் விட்டீர்கள்"

"எனது பள்ளிப் பருவத்தில் வாய்ப்புகள் இல்லை. ஆனால் இப்பொழுது நிறைய தமிழ் சொல்லிக் கொடுக்கும் பள்ளிகள் தோன்றியுள்ளன. ஆகவே இளைய தலைமுறை தமிழை நன்கு கற்கும்"

என்றாள். உள்ளத்தில் ஏதோ இனம் புரியாத மகிழ்ச்சி. மெதுவாய் எங்கள் பேச்சு மதத்தை நோக்கித் திரும்பியது.

"நீங்கள் இந்துவா?"

"இல்லை. நான் தமிழ்"

என்றாள். எனக்குச் சங்கட்டமாகப் போய்விட்டது. ஒருவரிடம் நீங்கள் என்ன மதம் என்று கேட்க வேண்டுமே ஒழிய நீங்கள் இந்த மதத்தைச் சேர்ந்தவரா என்பது நாகரீகம் இல்லை என்று எண்ணிக்கொண்டு

"மன்னிக்கவும், நான் நேரடியாகக் கேட்டிருக்கக் கூடாது. நீங்கள் தமிழ் தான். ஆனால் உங்கள் மதம் என்ன?"

என்று மறுபடியும் வினவினேன்.
அவள் மறுபடியும்

"தமிழ் தான்"

என்றாள். சொல்லிவிட்டு

"ஏன் மறுபடியும் கேட்கிறீர்கள்? ஏதாவது தவறுதலாய்ச் சொல்லிவிட்டேனா?"

"இல்லை, தமிழ் என்பது இனம். ஆனால் மதமில்லையே? இந்தியாவில் எங்களைக் கேட்டால், தமிழன் என்று சொல்லுவோம். ஆனால் மதம் என்றால் இந்து என்றுதான் சொல்வோம்"

என்றேன்.

"எங்கள் சமூகத்தில் அப்படி ஒரு வழக்கம் இல்லை. நாங்கள் தமிழ் என்றுதான் சொல்வோம். தென் ஆப்பிரிக்காவில் உள்ள சமூகத்தில் தமிழ், இந்துஸ்தானி, முஸ்லீம் என்று வேறுபாடு உள்ளது. நாங்கள் முருகன், காளி போன்ற தெய்வங்களை வணங்குபர்கள், இந்துஸ்தானியர்கள் போல் அல்ல ஆகையால் தமிழர்களை இந்துஸ்தானிகள் என்றோ, இந்து என்றோ சொல்வதில்லை, தமிழர்கள் என்றுதான் அழைப்பார்கள்"

என்றாள். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. சிறிது நேரம் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்துவிட்டு, விடை பெற்றுச் சென்றாள்.

எனக்கு ஏன் இந்தியாவில் மட்டும் தமிழர்கள் தங்களை இந்து என்று அழைத்துக் கொள்கிறார்கள் என்ற சிந்தனை வந்தது. ஏதாவது மத மாற்றம் நடந்திருக்குமோ?

அதன் பிறகு சமீபத்தில் எனக்கு தென் ஆப்பிரிக்காவின் டர்பனுக்கும், நாடேல் மாகணத்துக்கும் பயணம் செய்யும் வாய்ப்புக் கிடைத்தது. அந்தப் பெண் சொன்னது உண்மையென்று நேரடியாக உணர்ந்தேன். அங்கு தமிழர்கள் முருகனையும், சிறு தெய்வங்களையும் வழிபட்டுக்கொண்டு தமிழர்களாகவே வாழ்கிறார்கள்.

அதேபோல் இன்றும் எனக்கு ஒரு அனுபவம். எனது அலுவலகத்தில் ஒரு பர்மியன் இருக்கிறான். பார்த்தால் சிரிப்பதுண்டு ஆனால் பேசியதில்லை. இன்று எதேச்சையாக நேருக்கு நேராகச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவனிடம் பர்மா அரசியல் நிலையை அறிந்துகொள்ளும் பொருட்டு நிலைமை எப்படி உள்ளது என்று வினவினேன். அரசு சுடுவதை நிறுத்தியுள்ளது என்றான். தான் ரங்கூனிலிருந்து வருகிறேன் என்றான். அங்கு தமிழர்கள் சிலர் வாழ்கிறார்கள் தானே என்றேன். ஆமாம் என்றவன் சிலர் அல்ல, பலர் என்றான். தமிழர்களுக்கென்று மன்றங்கள் எல்லாம் இருக்கிறது. தமிழர்கள், இந்துக்கள், முஸ்லீம்கள் என்று தனித் தனியே மன்றங்கள் வைத்துள்ளார்கள் என்றான். எனக்கு மறுபடியும் ஆச்சரியம், இங்கும் தமிழர்கள் தங்களை இந்துக்கள் என்று சொல்லிக்கொள்வதில்லை போல என்று உணர்ந்தேன்.

Robin என்று எல்லோராலும் அழைக்கப்படும் அந்த பர்மியன் மெதுவாய் என் காதருகே வந்து

"என் உண்மையான பெயர் என்ன தெரியுமா, வடிவேலு"

என்றான். முருகக் கடவுளின் பெயர். அவன் தந்தை தமிழராம். தாய் பர்மியராம்.

பகிரியில் வந்த பதிவு

 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  ஐஐயோ  மார்த்தாண்டன் , அபாண்டமாக பழி சுமத்தலாமா. என்பதிவை தயவு செய்து வாசியுங்க. நான் இந்துக்கள் மட்டும் விட்டுக்கொடுக்க வேணும் அல்லது கிறிஸ்துவர்கள் மட்டும் விட்டுக்கொடுக்க வேணுமென்று ஒருதலைப் பட்சமாக ஏதும் எழுதவில்லையே. திரும்ப ஒருதடவை வாசியுங்க. 

Edited by poet

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.