Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கடவுள் என்னும் மாயை

Featured Replies

கடவுள் இந்த உலகத்தைப் படைத்தார் எனில், கடவுளை யார் படைத்தார்?

இந்த உலகம் சிக்கலானது அதிசயமானது எனில், உலகத்தைப் படைத்த கடவுளும் அதிசயமானவரா சிக்கலானவரா?

இவ்வாறான பல சிக்கலான கேள்விகளுடன் இன்று பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கும் புத்தகம், The God Delusion.'Richard Dawkins'என்னும் ஒக்ஸ்போர்ட் பேராசிரியர் எழுதி இருக்கும் இந்தப் புத்தகத்தில் அப்படி என்ன எழுதி இருக்கிறார்?

மாய உலகில் ஒருவர் சஞ்சரிப்பார் எனில் நாம் அவருக்கு பித்துப் பிடித்து விட்டது என்போம், அனால் அதே மாயையில் பலரும் சஞ்சரிக்கும் போது அவர்கள் ஒரு சமயத்தைப் பின் பற்றுகிறார்கள் என்போம்.ஏன்? எதற்கு? என்கிற கேள்விகளுக்கு அப்பால் இது இப்படித் தான் இது புனிதமானது நீ இதனை நம்பு என்பது சமயம்.இது பற்றி எனக்குத் தெரியவில்லை, என்னால் இந்தச் சோகத்தை எதிர்க்கொள்ள முடியவில்லை ஆகவே நான் கடவுள் என்னும் ஒரு மாயையில் நம்பிக்கை வைக்கிறேன் என்பது, கடவுள் நம்பிக்கை பற்றி அண்மையில் கண்மணி எழுதிய பதிவின் தொனிப் பொருளாகவும் இருந்தது.ஆகவே கடவுள் என்பது நாமாகவே உருவாக்கும் ஒரு மாயை என்பதை ஏற்றுக் கொள்கிறோமா? சரி அப்படி என்றால் ஏன் நாம் அப்படியான ஒரு மாயைக்குள் வாழ வேண்டும்? உளவியல் ரீதியாக மன ஆற்றலை ஆரய்ந்த வல்லுனர்கள் சொல்வார்கள் ,எவனொருவன் தனது தலைவிதியயைத் தானே தீர்மானிக்கும் உள உரனை உடையவனாக இருக்கிறானோ அவனே தனது தலை விதியை நிர்ணயிக்கும் ஆற்றலைப் பெறுகிறான் என்ங்கிறார்கள்.

தமிழரைக் கடவுள் தான் காப்பாற்ற வேண்டு மென்று சொல்லிச் செத்துப் போன தந்தை செல்வாவுடன், தமிழர் தலை விதியை நாம் தான் மாற்ற வேண்டும் என்று புறப்பட்ட ஒரு பதினாறு வயசுப் பையன் நிகழ்த்திய சாதனைகளின் பின்னால் இருப்பது இந்த உள உரன் என்பது எமக்கெல்லாம் தெரிந்த ஒரு உதாரணம்.என்னால் மாற்றங்களை நிகழ்த்த முடியும் என்று எழும் நம்பிக்கையே மாற்றங்களை நிகழ்த்த வல்லது.என்னால் எதுவும் முடியாது அவன் இன்றி ஒரு அணுவும் அசையாது, அப்பனே முருகா என்னைக் காப்பது என்பதால் என்ன மாற்றத்தை நிகழ்த்தி விட முடியும்?இது எனது விதிப் பயன்,இது தான் எனது தலை எழுத்து என்று சொல்லி விட்டு முயற்ச்சி எதுவும் அற்று இருப்பதால், விதி என்னும் புற நிலையை நாமே எமது அகத்திற்குள் வரவழைத்துக் கொள்கிறேம் அல்லவா?ஆகவே இந்த கடவுள் என்னும் மாயையில் இருந்து விடுபட்டால் இந்த 'விதி வழி ' என்னும் மாயைக்குள் சிக்கித் தவிக்க வேண்டிய நிலை ஏற்படாது அல்லவா?

கடவுள் உலகத்தைப் படைத்தார் என்று கூறும் எல்லா மதங்களும் டார்வினின் பரிணாமத் தத்துவத்தை மறுதலிக்கின்றன.பரிணாமத் தத்துவத்திற்கு எதிர்வினையாக முன் வைக்கப்பட்ட ஒரு பிரபலமான கூற்று, பின் வருமாறு வருகிறது.

//Fred Hoyle who reportedly stated that the "probability of life originating on Earth is no greater than the chance that a hurricane, sweeping through a scrapyard, would have the luck to assemble a Boeing 747."//

இதை தமிழில் மொழி பெயர்த்தால், உலகில் உயிர்கள் பரிணாமத்தால் தோன்றியதற்கான நிகழ்தகவு ,ஒரு கழிவுப் பட்டறைக்குள் உள் நுழைந்த சூறாவழியால் ஒரு போயிங் 747 விமானம் ஒன்று வடிவமைக்கப் படுவதற்கான நிகழ்தகவை விடக் குறைவானது என்பதாகும்.படைப்பை நிருபிப்பதற்காக fரெட் கொயில் என்பவரால் முன் மொழியப்பட்ட இந்த தர்க்கத்தை, ரிச்சர்ட் டார்க்கின் பின்வருமாறு கட்டுடைக்கிறார்.

முதலாவதாக மிகவும் சிக்கலான ஒரு விமானத்தை வடிவமைப்பதற்கு ஒரு தேர்ச்சி பெற்ற வடிவமைப்பாளர் தேவை.ஆகவே சிக்கலான உயிரினக்களை வடிவமைத்த கடவுள் இன்னும் சிக்கலானவராகவே இருப்பார்.அப்படியான சிக்கலான கடவுளை வடிவமைத்தவர் யார்? அவரைக் கடவுளின் தந்தை என்று கொள்வோமாயின், இன்னும் சிக்கலான கடவுளின் தந்தையை வடிவமைத்த திறமைசாலி யார் என்று இது ஒரு தொடரான கேள்வியாகச் செல்லும்.ஆகவே உயிர்களின் தோற்றத்தைப் பற்றி விளக்கக்கூடிய ஒரு கோட்பாடாக பரிணாமக் கோட்பாடே இருக்கிறது எனலாம்.ஒரு விமானத்தைப் போலன்றி பரிணாமம் என்பது நெடு நாட்களாக நிகழ்ந்த ஒரு விடயம்.பல்வேறு விதமான விகாரங்கள்,தேர்வுகளின் இறுதியில் தக்கன பிழைத்து நிகழ்ந்ததே பரிணாமம்.உயிரினக்கள் இப்போது உள்ள நிலையிலையே வடிவமைக்கப்பட்டன என்பது ஒரு வகை மாயையே.பரிணாமத்திற்கான பல் வேறு வளர்ச்சி நிலைகள் அடையாளம் காணப்பட்டு அந்தச் சங்கிலியில் இருந்த பல் வேறு உயிரிகளும் அடையாளம் காணப்படுள்ளன.பல்லாயிரம் ஆண்டுகளின் முன் இருந்த உயிரிகளும் அகழ்வாராச்சிகள் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளன.ஆகவே இன்று இருக்கும் உயர் நிலை உயிரிகளின் வடிவமே பல்லாயிரம் ஆண்டுகளின் முன்னும் இறைவனால் படைக்கப்பட்டன என்பது ஏற்றுக்கோள்ள முடியாத ஒரு வாதமாகும்.

அடுத்ததாக எல்லா கடவுள் சம்பந்தமான வாதங்களும் சங்கமிக்கும் ஒரு வாதம் இருக்கிறது ,அது தான் மனித சிந்தனைக்கு தெரியாத விடயத்தை எதோ ஒரு சக்தியைத் தான் கடவுள் எங்கிறோம் என்னும் வாதம்.இந்த வாதத்தில் இருக்கும் தர்க்கவியற் பலவீனம் என்ன என்பதைப் பார்ப்போம்.முதலாவதாக மனிதனால் விளங்கப் படுத்த முடியாதது என்று சொல்லிக் கொண்டே அதனை 'கடவுள் 'என்னும் கோட்பாட்டால் விளக்கங்கப் படுத்த முயல்கின்றனர்.விளங்கப்படுத்

  • கருத்துக்கள உறவுகள்

பிறப்புக்கும் இறப்புக்குமிடையில் உள்ளதையே விளங்கிக்க முடியாதது உள்ள மாயை வாழ்க்கைக்குள்ள.. கடவுள் என்றும் அதை மாயை என்றும்.. கடவுளே..! எத்தனை வகையில மனித அறியாமைகள் வெளிப்படுகின்றன..! :P :lol:

பிறப்புக்கும் இறப்புக்குமிடையில் உள்ளதையே விளங்கிக்க முடியாதது உள்ள மாயை வாழ்க்கைக்குள்ள.. கடவுள் என்றும் அதை மாயை என்றும்.. கடவுளே..! எத்தனை வகையில மனித அறியாமைகள் வெளிப்படுகின்றன..! :P :lol:

தன்னைக்கட்டுப்படுத்த கடவுள் என்ற ஒரு மாயையை உருவாக்கி அதற்க்காக அடிபடும் மனிதனை என்ன வென்று சொல்லி பாராட்டுவது? :lol::lol:

தன்னைக்கட்டுப்படுத்த கடவுள் என்ற ஒரு மாயையை உருவாக்கி அதற்க்காக அடிபடும் மனிதனை என்ன வென்று சொல்லி பாராட்டுவது? :lol::lol:

எனக்கு கடவுள் நானே தான்

:lol:

  • தொடங்கியவர்

ரிச்சர்ட் டாக்வின்னின் சனல் நான்கிற்காகத் தயாரிக்கப்பட்ட 'கேடுகளின் மூலம்' என்னும் விவரணம்.

கேடுகளின் மூலம்

இராக்கிய யுத்தம் ,சமயமும், புஸ்ஸும் பிளயரும், கிருத்துவ மத வாதமும்,பரிணாமாத் தத்துவமும்.

டாக்வின்னின் சுவரசியமான பேட்டி

http://www.youtube.com/watch?v=sM3l5WJk6fY

http://www.youtube.com/watch?v=z0-Nxg--5rs

http://www.youtube.com/watch?v=Gq9C6HglKRY

Edited by அற்புதன்

  • 4 weeks later...

எனக்கு கடவுள் நானே தான்

:icon_idea:

What you are telling is right. that is Athvaidha

"உன்னைக் கடந்தால் உள்ளே இருப்பது கட-வுள். உன்னுள்ளே இருப்பவை எல்லாம் உனக்கு தெரிவதில்லை. அப்படி தெரியும் போது நீயே கடவுள்"

"சீவனார் வேறு சிவனார் வேறில்லை

சீவனார் சிவனாரை அறிவாராகில்

சீவனாரே சிவனார் ஆவார்" (திருமூலர் திருமந்திரம்)

பூமிக்கு கீழ் இருக்கும் வைரங்கள் தோண்டுபவனுக்குத்தான் கிடைக்கும்.

பட்டை தீட்டினால் தான் ஜொலிக்கும்.

Edited by vettri-vel

கடவுள் எனப்படுவது எந்த உருவமும் அற்ற ,விருப்பு வெறுப்பு அற்ற ..... இந்த பூமியையும் பிற கிரகங்ங்களையும் அதன் பாதையில் இயங்க வைத்து ...... தண்ணீருக்கு மட்டும் உறை நிலையில் அதன் நிறையானது அதன் நீர்ம நிலையை விட குறைவாக உள்ளது போல் செய்து....... அதனால் உயிர்கள் உருவாக காரணமுமான ஒரு அற்புதமான தட்ப வெப்ப நிலை உருவாகாக்கி ....... இன்னும் பல குழப்பங்களுக்கு விடைகாண முடியாத ஒரு ஆற்றலாக வேண்டுமானால் இருக்கலாம்

எந்த மதமும் கடவுளை சரியாக விவரிக்கவில்லை ...... கடவுளின் பெயரால் சண்டையிடுவது போன்ற ஒரு முட்டாள்த்தனம் வேறொன்றுமில்லை........ ஏனென்றால் கடவுளென்று ஒரு ஆற்றல் இருக்குமாயின் அதற்கு எந்த விருப்பும் வெறுப்பும் இருக்கமுடியாது...... இயங்க வைத்து இயக்கும் இயற்கையே கடவுளை உருவகப்படுத்தலாம்...

கடவுள் பற்றி விவாதிப்பதும் நேரத்தை வீணடிப்பது தான் ஏனென்றால் அது முடிவற்றதாகவே இருக்கும் ...எல்லாம் இயற்கையின் வினோதங்கள்

எந்த மதமும் கடவுளை சரியாக விவரிக்கவில்லை ...... கடவுளின் பெயரால் சண்டையிடுவது போன்ற ஒரு முட்டாள்த்தனம் வேறொன்றுமில்லை........ ஏனென்றால் கடவுளென்று ஒரு ஆற்றல் இருக்குமாயின் அதற்கு எந்த விருப்பும் வெறுப்பும் இருக்கமுடியாது...... இயங்க வைத்து இயக்கும் இயற்கையே கடவுளை உருவகப்படுத்தலாம்...

நீங்கள் சொல்வது 100% சரி. இதுவே வேதசாரமாகும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடவுளை மாயை என்றதும் இன்னொரு மாயை தான். மதங்களின் குளறுபடிகளை உணர்ந்து அவற்றிலிருந்து விடுபடலாம். அப்படி விடுபடுவதற்கு 'நாத்திகம்' என்று பெயரிட்டு அது ஒரு கோட்பாடாகி இன்னுமொரு மானிடப்பிரிவிற்கே வழிவகுக்கும்.

'We have invented GOD. The thinking created god for itself. That means due to unhappiness, fear and depression we created something called god. God did not create us after his imagination, I wish He had'.
- J.K

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.