Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச அளவில் பாரிய பொருளாதார நெருக்கடியை உருவாக்குகின்றது கொரோனா வைரஸ்- மூடப்படும் வர்த்தகங்கள்- வீழ்ச்சியடையும் பங்கு சந்தைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அசோசியேட்டட் பிரஸ்

 

 

 

 

மிகவும் ஆழமானதாக மாறிவரும் சுகாதார நெருக்கடி, வெள்ளிக்கிழமை நிதிச்சந்தைகளின் வீழ்ச்சி வர்த்தகங்கள், வர்த்தக நடவடிக்கைகள் மூடப்பட்டமை களியாட்ட நிகழ்வுகள்- விளையாட்டுப்போட்டிகள் இரத்து செய்யப்பட்டமை காரணமாக பொருளாதார நெருக்கடியாக மாற்றமடைந்துள்ளது.

பல நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களை வீடுகளிற்கு செல்லுமாறு கேட்டுள்ளன,அதிகாரிகள் அயல்களையும் பாடசாலைகளையும் மூடியுள்ளனர்.

coro_viru_fe29.jpeg

கொரோன வைரசினை கட்டுப்படுத்துவதற்கான பரந்து பட்ட நடவடிக்கைள் வேலைவாய்ப்புகளிற்கும்,இலாபங்களிற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளன.

 

வெள்ளிக்கிழமை பல நாடுகள் தாங்கள் வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளதாக புதிதாக அறிவித்துள்ளதை தொடர்ந்து  பாதிக்கப்பட்ட நாடுகளின் எண்ணிக்கை 60ற்கும் அதிகமானதாக  அதிகரித்துள்ளது.

இதேவேளை வைரஸ் காரணமாக உயிர்களிற்கு ஏற்படக்கூடிய ஆபத்து குறித்த அச்சத்தை  போல பொருளாதார பாதிப்புகள் குறித்த அச்சநிலையும் தோன்றியுள்ளது.

பொருளாதார அடிப்படையில் பார்த்தால் சிகிச்சை என்பது நோயை விட மோசமானதாக காணப்படுகின்றது என ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

நீங்கள் நகரங்களை தனிமைப்படுத்தும்போது நீங்கள் பொருளாதார நடவடிக்கைகளை இழக்கின்றீர்கள் அதனை நீங்கள் மீளப்பெறப்போவதில்லை எனவும் அவர் தெரிவிக்கின்றார்.

 

இது கொலராவோ அல்லது பிளேக்கோ இல்லை என தெரிவித்துள்ள இத்தாலி -வெனிசின் பொருளாதார அபிவிருத்திக்கான நகர கவுன்சிலர் நாங்கள் பொருளாதாரத்திற்கான பாதிப்பு குறித்தே அதிக கவலை கொண்டுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வருடம் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருந்த இத்தாலியின் பொருளாதாரம் கொரோனவைரஸ் காரணமாக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

வைரஸ் பரவலை தொடர்ந்து உலகில் மக்களை அதிகளவில் ஈர்க்கும் டோக்கியோவின் டிஸ்னிலான்ட் யுனிவேர்சல் ஸ்டுடியோ போன்றன தங்கள் நிகழ்ச்சிகள் செயற்பாடுகள் நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளன.

coro_ec.jpeg

ஜப்பான் போன்ற நாடுகளில் பெருமளவு மக்கள் பங்கேற்கும் இசைநிகழ்வுகளும் இரத்துச்செய்யப்பட்டுள்ளன.

ஆசியாவில் பல நாடுகளில் பங்குசந்தைகள் வீழ்ச்சியடைந்ததை முதலீட்டாளர்கள் அச்சத்துடன் பார்த்தவாறு உள்ளனர்.

சியோலின் குவாங்ஜங் சந்தையில் வெள்ளிக்கிழமை குறைந்தளவு மக்களையே காணமுடிந்தது.

coro_eco2.jpeg

எவருமே வருவதில்லை வைரஸ் விரைவில் கட்டுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கின்றேன் என தெரிவித்தார் சிற்றூண்டிகள் விற்கும் ஒருவர்

பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தென்கொரியாவில் அதிகரித்துக்கொண்டு செல்லும் நிலையிலேயே இவ்வாறன சூழல் காணப்படுகின்றது.

ஆசியாவிற்கு வெளியே அதிக பாதிப்பினை எதிர்கொண்டுள்ள  இத்தாலியில் ஹோட்டல்களிற்கான முன்பதிவுகள் வீழ்ச்சியடைந்துள்ளன.

இத்தாலிய பிரதமர் பொருளாதார மந்தநிலை குறித்து எச்சரித்துள்ள அதேவேளை வெனிசில் மூன்று தசாப்த காலத்திற்கு மேல் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் இந்த தாக்கத்திலிருந்து தங்களால் தப்ப முடியுமா என அச்சம் வெளியிட்டுள்ளனர்.

coronoa_virus_ecno.jpeg

எங்கள் வர்த்தக நிலையங்களின் சாவிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்போகின்றோம் என ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொள்ளும் நிகழ்வுகளிற்கு சுவிஸ் அரசாங்கம் தடை விதித்துள்ளது.

ஜேர்மனியின் கொலோன் கதீட்டிரலில் புனித நீரில்  கிருமிகள் பரவலாம் என்ற அச்சம் காரணமாக அதனை வீசியுள்ளனர்.

ஐரோப்பிய பொருளாதாரமும் மந்த  நிலையில் தத்தளிக்கின்றது,ஜேர்மனியில் வர்த்தக நடவடிக்கைகள் குறித்த உற்சாகம் குறைவடைந்துள்ளது,சில நிறுவனங்கள் முதலீடுகளையும் விரிவாக்க நடவடிக்கைகளையும் இடைநிறுத்தியுள்ளன.

ஜேர்மனிக்கான மிகப்பெரும் ஏற்றுமதி சந்தை சீனா என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் அமேசன் நிறுவனம் தனது 800,000 ஊழியர்களை தேவையற்ற பயணங்களை மேற்கொள்ளவேண்டாம் என எச்சரித்துள்ளது.

அமெரிக்க பொருளாதாரம் இன்னமும் வலுவானதாக உள்ளது,தேவைப்பட்டால் கொள்கை வகுப்பாளர்கள் எங்கள் கருவிகளை பயன்படுத்துவார்கள் என அமெரிக்க மத்திய வங்கியின் - பெடரெல் ரிசேர்வ்- சிரேஸ்ட பொருளாதார ஆலோசகர் ஜேரோம் பொவெல் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியின் பொருளாதார ஆலோசகர் வைரஸ் குறித்து அளவுக்கதிகமான அச்சம் வெளிப்படுவதே பங்கு சந்தைகளின் வீழ்ச்சிக்கு காரணம் என தெரிவித்துள்ளார்.

பாரிய விநியோகசங்கிலியில் எந்த குழப்பத்தையும் நாங்கள் காணவில்லை  ஆனால் தாக்கங்கள் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

corona__eco_3.jpeg

பாங்கொக் போன்ற நகரங்களில் தாக்கங்கள் ஏற்கனவே தென்படத்தொடங்கியுள்ளன.

தாய்லாந்திற்கான சுற்றுலாப்பயணிகளின் வருகை ஐம்பது வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.

2020 இல் பொருளாதார வளர்ச்சி  பாதிக்கப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்த பொருளாதார நிபுணர்கள் கொரோனா வைரஸ் சர்வதேச நோய் பரவலாக மாறினால் சர்வதேச பொருளாதார வளர்ச்சி மோசமாக பாதிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/76769

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.