Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வவுனியாவில் படையினரின் ஊடுருவல் முறியடிப்பு: 30 படையினர் பலி- 7 போராளிகள் வீரச்சாவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியாவில் படையினரின் ஊடுருவல் முறியடிப்பு: 30 படையினர் பலி- 7 போராளிகள் வீரச்சாவு

[ஞாயிற்றுக்கிழமை, 20 மே 2007, 11:01 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

வவுனியா பாலமோட்டை, நவ்வி ஆகிய பகுதிகளுக்கு அண்மையாக சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட ஊடுருவல் நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது.

நேற்று சனிக்கிழமை முதல் படையினர் ஓமந்தை வழியாக பாலமோட்டை, நவ்வி பகுதிகளுக்கு அண்மையாக ஊடுருவல் நகர்வை மேற்கொண்டனர்.

உடுருவிய படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் கடுமையான எதிர்த்தாக்குதலை தொடுத்தனர்.

ஊடுருவி தாக்குதல் நடத்திய படையினர் மீதான முறியடிப்புத் தாக்குதலை விடுதலைப் புலிகள் தொடர்ச்சியாக நடத்தி நேற்று மதியத்துடன் படையினருக்கு கடும் இழப்புகளை ஏற்படுத்தியுள்ளனர்.

இழப்புக்களை ஏற்படுத்தி ஓமந்தை மேற்கு முன்தளத்துக்கு படையினரை விடுதலைப் புலிகள் விரட்டியடித்தனர்.

இம் மோதலில் படையினர் தரப்பில் 30 தொடக்கம் 40 பேர் வரையானோர் கொல்லப்பட்டுள்ளனர் என்பதும் 100-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளதாக அனுராதபுரம் மற்றும் கொழும்பு மருத்துவமனைகளின் ஊடாக கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அநுராதபுரம் மருத்துவமனைக்கு படையினரது சடலங்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. காயமடைந்த படையினர் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

கொல்லப்பட்ட படையினரில் கப்டன் நிருசா உட்பட 4 அதிகாரிகளும் 30 படையினரும் அடங்குவர் என்று கொழும்பு படைத்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இம் முறியடிப்புத் தாக்குதலில் படையினரின் ஆயுத தளபாடங்களை விடுதலைப் புலிகள் கைப்பற்றியுள்ளனர்.

விடுதலைப் புலிகள் தரப்பில் லெப். கேணல் அப்பன் அல்லது குயிலன் உட்பட7 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர்.

நன்றி புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இச்சமர் குறித்து சம்பந்தப்பட்ட இரு தரப்பும் மெளனம் சாதித்தது.. தமிழூடகங்கள்.. புளுகச் செய்தி.. கிடைக்காமல் போட்டுதே..??! :lol::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

aaah thaa னே இப்பொழுது த நேஷன் தான் போட்டு உடைத்து இருக்கின்றது இப்பொழுது தான் புதினம் விழித்து எழுந்து இருக்கிறது... ஜயோh...ஜயோ...

Edited by SUNDHAL

ஏன் இச்சமர் குறித்து சம்பந்தப்பட்ட இரு தரப்பும் மெளனம் சாதித்தது.. தமிழூடகங்கள்.. புளுகச் செய்தி.. கிடைக்காமல் போட்டுதே..??! :lol::lol:

வன்னிப் பகுதியில் இந்த வாரம் நடைபெற்ற கடும் மோதல்களில் 4 அதிகாரிகளும், 30 படையினரும் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட அதிகாரிகளில் சிறப்பு படை அதிகாரியான கப்டன் நிருசாவும் அடங்குவார். இதில் காயமடைந்த படையினரில் 18-க்கும் மேற்பட்ட படையினர் அனுராதபுரம் மற்றும் கொழும்பு மருத்துவமனைகளுக்கு வானூர்தி மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=23877

  • கருத்துக்கள உறவுகள்

ஈழவன் இந்த செய்திகள் நேஷன் சொல்லி தான் வெளி உலகுக்கு கொண்டு வரப்பட்டு இருக்கு...

மேலதிக செய்திகள் எதுவுமே கிடைக்கவில்லையா?

ஈழவன் இந்த செய்திகள் நேஷன் சொல்லி தான் வெளி உலகுக்கு கொண்டு வரப்பட்டு இருக்கு...

அதைத்தான் சுண்டல் அவசரத்தில் அப்படி மேற்கோள்காட்டி விட்டு போய்விட்டேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஞாயிறு 20-05-2007 15:23 மணி தமிழீழம் [மோகன்]

வவுனியா மன்னார் முன்னரங்க நிலைகளில் நான்கு நாட்களில் 4 அதிகாரிகள் உட்பட 30 படையினர் பலி

வவுனியா மன்னார் முன்னரங்க நிலைகளில் உள்ள இராணுவத்தினர் கடந்த நான்கு நாட்களில் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்ற முயற்சி விடுதலைப்புலிகளால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது.

இதன்போது விடுதலைப்புலிகளின் தாக்குதலில் விசேட அதிரடிப்படையின் கப்ரன் நிருஷா உட்பட நான்கு அதிகாரிகள், 30 க்கு மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டும் 100 க்கு அதிகமான படையினர் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை முதல் உயிலங்குளம் மற்றும் ஓமந்தை சோதனைச்சாவடிகளின் ஊடான போக்குவரத்து சிறீலங்கா இராணுவத்தால் தடைப்பட்டிருந்தது தெரிந்ததே.

மன்னார், வவுனியா பாலமோட்டை ஆகிய களமுனைகளில், கடந்த 16ஆம், 17ஆம், 18ஆம் நாட்களில், சிறீலங்கா படைகளுடன் இடம்பெற்ற மோதல்களில் களப்பலியாகிய எட்டுப் போராளிகளின் விபரங்கள், தமிழீழ விடுதலைப் புலிகளால் வெளியிடப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மன்னார் களமுனையில் நிகழ்ந்த மோதல்களில், 2ஆம் லெப்ரினன்ட் முல்லைச்செல்வன் என்ற போராளியும், வவுனியா பாலமோட்டை களமுனையில் இடம்பெற்ற மோதலில், வீரவேங்கை தூயமணி என்ற போராளியும் களப்பலியாகியுள்ளனர்.

கடந்த 17ஆம் நாளன்று வவுனியா பாலமோட்டை களமுனையில் நிகழ்ந்த மோதல்களில், லெப்ரினன்ட் கிசோக்குமார், 2ஆம் லெப்ரினன்ட் நடராஜா, 2ஆம் லெப்ரினன்ட் பசீலன், 2ஆம் லெப்ரினன்ட் கணேசலிங்கம், 2ஆம் லெப்ரினன்ட் ஜோசப் பெற்றா ஆகிய நான்கு தமிழீழ தேசிய துணைப்படை வீரர்களும் களப்பலியாகியுள்ளனர்.

அதே களமுனையில், கடந்த 16ஆம் நாளன்று இடம்பெற்ற மோதல்களில், 2ஆம் லெப்ரினன்ட் ராஜகோபால் என்ற தமிழீழ தேசிய துணைப்படை வீரர் களப்பலியாகியுள்ளார்

இதேவேளை இராணுவத்தின் ஆக்கிரமிப்பு முன்னகர்வு நடவடிக்கைகளால் 1700 முதல் 2000 வரையான குடும்பங்கள் மடுவை அண்டிய பகுதிகள், பெரியபண்டிவிரிச்சான், சின்னபண்டிவிருச்சான் உட்பட்ட பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து பெரிய மடுப்பகுதியில் தற்காலிய அகதிகள் நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்.

pathivu

தமிழீழ தாயகத்திற்காக மடிந்த மாவீரர்களிற்கு வீர வணக்கங்கள்!

கண்ணீர் அஞ்சலிகள்!

sympathywreath2infoyp6.gif

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.