Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செவனகலையில் 1800 பேர் சுயதனிமை

செவனகல பிரதேச செயலகப் பிரிவிலுள்ள நெலும்சிறி, உடமவ்வார, கிரிஇ;ப்பன்ஆர, குமாரகம ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 1800 பேரை சுயதனிமைப்படு;த்த நடவடிக்கை எடுத்துள்ளதாக மொனராகலை பிரதேச சுகாதார பணிப்பாளர் எச்ஏ.வி. நிரோசன் தெரிவித்துள்ளார்.


வெலிசர கடற்படை முகாமில் கடமையாற்றிய கடற்படை வீரரொருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை 24ஆம் திகதி கண்டறியப்பட்டுள்ள நிலையில், குறித்த வீரர் விடுமுறையில் செவனகலயிலுள்ள தனது வீட்டுக்கு வந்துள்ளதுடன், அயல் கிராமங்களுக்கும் சென்றுள்ளதால், குறித்த கிராமங்களிலுள்ளவர்களை சுயதனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


அத்துடன், குறித்த கடற்படை சிப்பாயின் மனைவி, குழந்தைக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை நேற்று கண்டறியப்பட்டுள்ளதுடன், இவர்கள் மூவரும் கொழும்பு ஐ.டி.எச் க்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்

 

http://www.tamilmirror.lk/செய்திகள்/சவனகலயல-1800-பர-சயதனம/175-249336

 

  • Replies 1.1k
  • Views 268.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

94818219_2787060021342542_5770759166037590016_n.jpg

  • தொடங்கியவர்

thumb_27_04_2020.gif

  • தொடங்கியவர்

திருகோணமலையில் முதலாவது கொரோனா தொற்றாளர் பதிவு

அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை மாவட்டத்தின், பதவிசிறிபுர பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் இனங்காணப்பட்டுள்ளாரென, பதவிசிறிபுர சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு இணங்காணப்பட்டவர் பதவிசிறிபுர - 10 கொலனியைச் சேர்ந்த 28 வயதுடைய கடற்படைச் சிப்பாய் எனவும் தெரியவருகின்றது.

வெலிசற கடற்படை முகாமில் கடமையாற்றி வந்தவர் எனவும் இவரது மாதிரிகள், அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பரிசோதனை செய்யப்பட்டிருந்த நிலையில் இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பதவிசிறிபுர சுகாதார வைத்திய அதிகாரி எரங்க குறுசிங்க தெரிவித்தார்.

அத்துடன், இந்நோயாளியுடன் தொடர்புடைய மூன்று குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

http://www.tamilmirror.lk/திருகோணமலை/திருகோணமலையில்-முதலாவது-கொரோனா-தொற்றாளர்-பதிவு/75-249320

  • தொடங்கியவர்

PCR பரிசோதனைகளை அதிகரிக்க தீர்மானம்

 

தற்போது மேற்கொள்ளப்படும் பீ.சீ.ஆர் பரிசோதனையை அதிகரிக்க அரசாங்கம்  தீர்மானித்துள்ளது. 

இதற்கமைய, பல்கலைக்கழக மருத்துவ பீடங்களுடன் இணைந்து இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளது. 

இது குறித்த கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம் (27) பிரதமர், சுகாதாரப் பிரிவு பிரதானிகளுக்கிடையில் நடைபெற்றது. இதன்போது, தற்போது மேற்கொள்ளப்படும் பரிசோதனைக்கு மேலதிகமாக நாள் ஒன்றுக்கு 1,000 பீ.சீ.ஆர் சோதனைகளை மேற்கொள்ள  தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

http://www.tamilmirror.lk/செய்திகள்/PCR-பரிசோதனைகளை-அதிகரிக்க-தீர்மானம்/175-249355

  • தொடங்கியவர்

நாட்டில் 21 மாவட்டங்களில் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனரென, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. 

கிளிநொச்சி, மன்னார், நுவரெலியா, முல்லைத்தீவு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் இதுவரை எவரும் பதிவாகவில்லை.

கொழும்பு மாவட்டத்திலேயே இதுவரை அதிகமானோர் இனங்காணப்பட்டுள்ளனர். 

http://www.tamilmirror.lk/செய்திகள்/21-மாவட்டங்களில்-தொற்றாளர்கள்-அடையாளம்/175-249358

  • தொடங்கியவர்

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் சிலர் இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 588 ஆக அதிகரித்துள்ளது. 

அந்தவகையில் இன்று (27) மட்டும் 65 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/கரன-தறற-588-ஆக-உயரவ-ஒர-நளல-65பரகக-தறற/150-249365

  • தொடங்கியவர்

enclinfo18.jpg

  • கருத்துக்கள உறவுகள்

ஊரடங்கை இருவாரங்கள் நீடித்து மக்களை முடக்குக!

ஊரடங்கு சட்டத்தை மேலும் இரண்டு வாரங்களுக்கு அமல்படுத்துவது சிறந்தது என்று அரசு வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கடற்படையில் இருந்து 800 கடற்படை வீரர்கள் விடுமுறையில் சென்றுள்ளனர். அவர்களில் ஒருவர் 10 பேருடன் பழகியிருந்தால் மொத்தமாக 8000 பேர் வரை பழகியவர்கள் வட்டம் காணப்படும்.

எனவே அவற்றைத் தேடி ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க – தொற்று மேலும் பரவாமல் இருக்க மக்களை வீட்டுக்குள் முடக்கி வைக்க வேண்டும். அதற்கு ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்க வேண்டும். – என்றார்.

 

https://newuthayan.com/ஊரடங்கை-இருவாரங்கள்-நீட/

  • கருத்துக்கள உறவுகள்

வெலேவத்த முடக்கம்

மொனராகலை - வெலேவத்த பிரதேசத்தில், கடற்படை வீரர் ஒருவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டதையடுத்து, அப்பிரதேசம் முடக்கப்பட்டுள்ளதாக, மொனராகலை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்திலிருந்து எவருக்கும் வெளியேறவோ, புதிதாக எவரும் உள்நுழையவோ தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.

 

http://www.tamilmirror.lk/மலையகம்/வலவதத-மடககம/76-249396

  • தொடங்கியவர்

கர்ப்பிணிகளுக்கு விசேட அறிவித்தல்

நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கருத்திற்கொண்டு, கர்ப்பிணிகள் பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள் குறித்த விசேட அறிவித்தலை, சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க வெளியிட்டுள்ளார். 

இதற்கமைவாக கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பின், கர்ப்பிணிகள் உடனடியாக வைத்தியசாலைக்கு செல்வது அவசியம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

காய்ச்சல், இரத்தம் வெளியேறல், கடுமையான தலைவலி, சுவாசிப்பதில் பிரச்சினை, வலிப்பு, பார்வை குறைபாடு, மார்பு, வயிற்று வலி, சிசுவின் அசைவு குறைவு, உடல் வீக்கம் உள்ளிட்ட, ஏனைய அறிகுறிகள் இருப்பின், கர்ப்பிணிகள் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவது அவசியம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், வைத்தியசாலைகளில் சன நெரிசலைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், கிளினிக் செல்ல வேண்டுமாயின், கர்ப்பிணிகள் அது குறித்து முன்கூட்டியே பதிவு செய்துகொள்ளுமாறும் அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

http://www.tamilmirror.lk/செய்திகள்/கர்ப்பிணிகளுக்கு-விசேட-அறிவித்தல்/175-249407

  • தொடங்கியவர்

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய நபருக்கு 600 ரூபா தண்டம்

ஊரடங்குச் சட்டத்தை மீறியமை, தனிமைப்படுத்தல் சட்டத்தை மதிக்காது நடந்தமை ஆகிய இரண்டு குற்றங்களுக்காக நபர் ஒருவருக்கு 600 ரூபாய் தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டார்.

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள காலப்பகுதியில் வீதியில் பயணித்த ஒருவரை பொலிஸார் கைது செய்தனர். அவருக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பொலிஸார் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தனர்.

ஊரடங்குச் சட்டத்தை மீறிச் செயற்பட்டமை, தண்டனைச் சட்டக்கோவை 264 ஆம் பிரிவின் கீழ் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ள இடங்களில் அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிகளை அறிந்திருந்தும் அதனை மதிக்காது நடந்துகொண்டமை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுக்கள் அந்த நபர் மீது முன்வைத்து குற்றப்பத்திரம் பொலிஸார் தாக்கல் செய்திருந்தனர்.
 

சந்தேக நபர் யாழ்ப்பாணம் நீதிமன்றில் நீதிவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் இன்று (28.04.2020) செவ்வாய்க்கிழமை முற்படுத்தப்பட்டார். அவருக்கு குற்றப்பத்திரம் வாசித்துக் காண்பிக்கப்பட்டது.

சந்தேக நபர், தன்மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டார். அதனால் அவரை குற்றவாளியாக இனங்கண்ட மன்று, ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றத்துக்கு 100 ரூபாய் தண்டப் பணமும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமைக்காக 500 ரூபாய் தண்டப்பணமும் விதித்து உத்தரவிட்டது.

இதேவேளை, இலங்கை தண்டனைச் சட்டக்கோவை 264 ஆம் பிரிவின் கீழ் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ள இடங்களில் அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிகளை அறிந்திருந்தும் அதனை மதிக்காது நடந்துகொள்ளும் நபர் ஒருவருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை அல்லது ஆயிரத்து 500 ரூபாயை விஞ்சாத தண்டம் அல்லது சிறை மற்றும் தண்டப்பணம் அறவீடு ஆகிய தண்டனைகளை விதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/80947

  • தொடங்கியவர்

https://covid19.gov.lk/tamil/

 

இலங்கையின் உத்தியோகபூர்வ இணையத்தளம்


COVID-19 என்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தொற்று நோய். இத் நோய்த்தொற்றானது 2019 டிசம்பரில் சீனாவின் வுஹான் நகரில் பரவத் தொடங்கியது, உலக நாடுகளுக்கு பாரிய நெருக்கடியாக மாறியுள்ளது. COVID-19 தொடர்பான அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய வலைத்தளமாகும். மேலும் குடிமக்களுக்கு சமீபத்திய அறிவிப்புகளுடன் கூடிய துல்லியமான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு செய்திகளை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டது.

  • தொடங்கியவர்

28. 04.2020. 5.30 pm. (செவ்வாய்க்கிழமை)

78 பேருக்கும் கொரோனா தொற்றில்லையென உறுதி செய்யப்பட்டது.

கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு பகுதிகளிலும் இருந்து 78 பேருக்கான COVID - 19 பரிசோதனை யாழ் மருத்துவபீட ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்டன.
பரிசோதனைக்குட்பட்டவர்களின் விபரங்கள்:

* போதனா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டவர்கள் - 7 பேர்.

* போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் பரிசோதிக்கப்பட்டவர்கள் - 14 பேர்

* வவுனியா பொது வைத்தியசாலை - 4 பேர்.

* யாழ் மாவட்டத்தில் இருந்து கொழும்புக்கு பார ஊர்திகளில் அடிக்கடி சென்று வந்தவர்கள்(சாரதி மற்றும் உதவியாளர்) - 30 பேர்

* வவுனியா மாவட்டத்தில் இருந்து கொழும்புக்கு பார ஊர்திகளில் அடிக்கடி சென்று வந்தவர்கள் (சாரதி மற்றும் உதவியாளர்) - 10 பேர்

* மன்னார் மாவட்டத்திற்கு கொழும்பிலிருந்து கடமையின் நிமித்தம் வந்தவர்கள் - 13 பேர்.

  • தொடங்கியவர்

இலங்கையை தாக்கியுள்ள கொரோனா வைரஸின் வகை எது?

 

  • கருத்துக்கள உறவுகள்

611ஆக அதிகரித்தது-இன்று மாத்திரம் 23 பேருக்கு தொற்று

கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 12 பேர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 611ஆக அதிகரித்துள்ளது.

http://thinakkural.lk/article/39673

 

மேலுமொரு கிராமம் முடக்கப்பட்டது

கண்டி பொட்டஹேகெட்ட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள நஹிவலவெல கிராமம் முடக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான கடற்படை வீரருடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டிருந்த 8 குடும்பங்கள் இந்த பகுதியில் வாழ்வதால், கிராமம் முடக்கப்பட்டுள்ளது.

8 குடும்பங்களை சேர்ந்த 38 பேரும் தற்போது சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொட்டஹேகெட்ட சுகாதார மருத்துவ அதிகாரி மற்றும் தலத்துஓயா பொலிசார் தெரிவித்தனர்.

நாளை அவர்கள் தனிமைப்படுத்தல் மையங்களிற்கு அனுப்பப்படவுள்ளனர்.

http://thinakkural.lk/article/39676

  • கருத்துக்கள உறவுகள்

நாவலப்பிட்டி வர்த்தக நிலையங்கள் முடக்கம்!

navy-quarantine-3.jpg?189db0&189db0

 

கண்டி – நாவலப்பிட்டி நகரத்தின் வர்த்தக நடவடிக்கைகளானது முற்றாக முடக்கப்பட்டுள்ளது.

வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த இரண்டு கடற்படை வீரர்கள் தங்களது விடுமுறை நாட்களில் நாவலப்பிட்டிக்குச் சென்றிருந்தனர்.

தற்போது குறித்த கடற்படை வீரர்கள் இருவரிடமும் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்ட கடற்படை வீரர் ஒருவர் நாலவப்பிட்டியில் தங்கியிருந்த காலப்பகுதியில் நான்கு கடைகளுக்கு விஜயம் செய்ததாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே நாவலப்பிட்டி வர்த்தகர்கள் சங்கத்தின் தலவர் கித்சிறி கருணாதாசா, நவலப்பிட்டி காவல்துறை மற்றும் வர்த்தகர்கள் சங்க உறுப்பினர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னர் வர்த்தக நடவடிக்கைகளை இவ்வாறு முடக்குவதற்கு தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

அதன்படி அனைத்து கடைகளையும் மூடி, நாவலப்பிட்டி நகரத்தை கிருமி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

https://newuthayan.com/நாவலப்பிட்டி-வர்த்தக-நி/

 

சற்று முன்னர் வெளியான அறிக்கை; ஸ்ரீலங்காவில் மேலும் அதிகரித்துள்ள கொரோனா தொற்று

ஸ்ரீலங்காவில் சற்று முன்னர் மேலும் 3 கொரோனா தொற்றுள்ளவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றுள்ளவர்களின் எண்ணிக்கை 619 இலிருந்து 622 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை 134 பேர் குணமடைந்துள்ள நிலையில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

ஸ்ரீலங்காவில் அண்மைய நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் தற்போது படிப்படியாக ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.ibctamil.com/srilanka/80/142152?ref=imp-news

குருநாகலில் 326 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டனர்!

In இலங்கை     April 29, 2020 8:31 am GMT     0 Comments     1189     by : Benitlas

குருநாகலில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகிய 326 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

வடமேல் மாகாண சுகாதாரப் பணிமனையின் பணிப்பாளர் என்.பரீட் இதனைத் தெரிவித்துள்ளார்.

அலவ்வ, பொல்கஹவெல, மடஹபொல, நிக்கவெரட்டிய, கொடவெஹெர, தும்மலசூரிய, உடுபத்தாவ, மாவத்தகம, கல்கமுவ, குளியாப்பிட்டிய, மாஹோ, வாரியப்பொல, பண்டாரகொஸ்வத்தை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தொற்றுக்குள்ளானவர்கள் குருநாகல் மாவட்டம் முழுவதும் சுற்றி திரிந்துள்ளார்களென, அவர்களுடன் தொடர்புப்பட்டவர்கள் மூலம் தெரியவந்துள்ளது.

குருநாகல் மாவட்டத்தில் இதுவரை 13 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அதில் 9 பேர் இராணுவத்தினர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

http://athavannews.com/குருநாகலில்-326-பேர்-சுய-தனி/

  • தொடங்கியவர்

enclinfo08.jpg

 

enclinfo18.jpg

  • தொடங்கியவர்

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

  • தொடங்கியவர்

நாளை முதல் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு

நாளை (30) இரவு முதல் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் நாளை காலை 5 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்குச் சட்டம், மீண்டும் இரவு 8 மணிக்கு அமல்படுத்தப்படும். அதனைத் தொடர்ந்து, நாளை இரவு 8 மணி முதல் மே மாதம் 4 ஆம் திகதி காலை 5 மணி வரையில் ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/நள-மதல-நடளவய-ரதயல-ஊரடஙக/150-249485

  • கருத்துக்கள உறவுகள்

போதைக்கு அடிமையான பலருக்கே கொரோனா! – புலனாய்வுத் தகவல்

கொழும்பின் நெருக்கமான பகுதிகளில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரில் பலர் போதைப் பொருள் மற்றும் பிற சட்டவிரோத பாணங்களுக்கு அடிமையானவர்கள் என்பதை புலனாய்வாளர்கள் மற்றும சுகாதார அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர் என்று பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கடந்த திங்கள் (27) வெலிக்கடை பொலிஸ் பிரிவில் போதைப் பொருளுக்கு அடிமையான 48 பேர் கண்டறியப்பட்ட நிலையில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த உத்தரவிடப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் நெருக்கமான பகுதிகளில் வீட்டுத் தொகுதிகளில் போதைக்கு அடிமையானவர்கள் குறித்து விழிப்பாக இருக்குமாறும், அதுகுறித்து தகவல் வழங்குமாறும் அவர் கோரியுள்ளார்

 

https://newuthayan.com/போதைக்கு-அடிமையான-பலருக/

  • கருத்துக்கள உறவுகள்

sanakkiyan-news-12.jpg

நாடளாவிய ரீதியில் இன்று இரவு முதல் எதிர்வரும் 4ஆம் திகதி வரை ஊரடங்கு!

நாடளாவிய ரீதியில் இன்று(வியாழக்கிழமை) இரவு 08 மணி முதல் மீண்டும் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது.

ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இரவு 8 மணி முதல் எதிர்வரும் 4 ஆம் திகதி காலை 5 மணிவரை ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அபாய வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுவது குறித்து எந்தவிதமான தகவல்களும் வெளியாகவில்லை.

http://athavannews.com/நாடளாவிய-ரீதியில்-இன்று/

  • கருத்துக்கள உறவுகள்

திருகோணமலை மாவட்டத்தில் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று

திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா நோயாளர்கள் அதிகரிக்குமாயின் அதனை தடுப்பதற்கு தயார் நிலையில் இருப்பதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் 2,829 பேர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சந்தேகிக்கப்பட்ட 47 பேர், பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர் எனவும் அவர் தெரிவித்தார்.

அவர்களில் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பதவிசிறிபுர பகுதியில் இரண்டு பேரும் மஹதிவுல்வெவ பகுதியில் ஒருவரும் இவ்வாறு இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், 2,101 பேருக்கு 14 நாள்கள் சுய தனிமைப்படுத்தல் முடிவடைந்துள்ள நிலையில், 728 பேர் தொடர்ந்தும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனரெனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 பேரின் மாதிரிகளும், தம்பலகாமம் பிரதேசத்தில் 12 பேரின் மாதிரிகளும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா நோயாளர்கள் அதிகரிக்குமானால் அவர்களை தனிமைப்படுத்துவதற்குரிய அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தும் நிலையங்களை ஒவ்வொரு பிரதேச செயலாளர்கள் ஊடாகத் தெரிவுசெய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

http://thinakkural.lk/article/39873

  • தொடங்கியவர்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: உரை

 

 

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.