Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வணக்கம்

Featured Replies

வணக்கம் தமிழ் பேசும் கள உறுப்பினர்களே!

தமிழ் பேசும் நல்லுலகத்துக்கோர் நான் ஒரு வழிகாட்டி. என் பெயர் முற்பிறப்பினில் வள்ளுவன், தமிழ் மக்களுக்காக நான் சொல்லிவிட்டு போனவை கருத்தில், நடைமுறையில் இடம்பெறவில்லை ஆகவே மீண்டும் பிரம்மாவிடம் அனுமதி பெற்று இங்கே வருகிரேன். எத்தனை வருட அனுபவங்கள்,எத்தனை மனிதர்களினை பார்த்து இருக்கின்றேன்,. ஆகவே நான் இங்கே வருவதால் தமிழ் வளர சந்தர்ப்பங்கள் உண்டு என்று நினைத்து வருகிறேன். என்னை வரவேற்க வேண்டாம் ஏனென்றால் நான் இப்பவே சாகலாம்.

அதற்கு முதல்...

திருவள்ளுவர் என்று நான் முன்னம் எழுதியவைகளை அப்படியே பிரிண்டு பண்ணி வியாபாரம் ஓகோவாக நடக்கின்றது. ஒவ்வொரு வீட்டிலும் என் நூலைக்காணக்கூடியதாக இருக்கிறது. இங்கே யாழ் களத்தில் எத்தனை பேர் அதன் கருத்துகளுக்கு அமைய வாழ்க்கையினை அமைத்து தமிழீழ விடுதலைப்போராட்டம் வெற்றிபெற உங்களை ஒருங்கமைத்து வாழ்க்கையின் வெற்றி படிக்கட்களில் பயணிக்கிறீர்கள்?

நான் பிறந்த காலத்தினை வரையறை செய்ய அகச்சான்றுகள் ஏதும் இல்லை. ஆனா வள்ளுவன் என்ற ஒரு தமிழன்( அதை நான் போகப்போக சொல்ல்வேன்) வந்தான், ஏதோ கிறுக்கி விட்டான், மீண்டும் செத்துப்போனான் என்று காலம் நகர்த்துவது தெரிகிறது. அனால் என் புறச்சான்றுகளினை வைத்து என்னை நீங்கள் ஊகிக்கலாம். என் காலத்தினை ஒரு இரும்புக்காலம் என்று கூட சொல்லலாம்.

என்ன வரவேற்பு இருக்குமோ ....தமிழ் வளரனும் அதிலரொம்ப நம்பிக்கை வைப்பவர்கள் என்னை வரவேற்கலாம்.

  • Replies 102
  • Views 12k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

வணக்கம் தமிழ் மொழி விரும்பிகளே!

நான் அந்தக்கால மரபின் படி நிலப்பிரபுத்தத்துவத்தில் ஊறி தமிழ் வளர சப்பி கொட்டை போட்டனான். அதனால் தான் இந்த அறிவுமிக்க திருகுறள் என்னும் தமிழ் நூலை வேலையொன்றும் இல்லாது சாப்பிட்டுவிட்டு, கொழுப்பேற எழுதுதியதாக பலர் தற்காலத்தில் எழுதிவருவது என் கண்களுக்குபடுகிறது. எனக்கு வறுமை இருந்திருந்தால், தெரிந்திருந்தால் இப்படியாக இருந்து ஓர் இடத்தில் அசைவற்று இருந்து இதைபடைக்க முடியுமா என்று வேறு கேட்கிறார்கள். அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் அப்படி வறுமை இருந்திருந்தால் நானும் ஊருராக , சபைகள், சபைகளாக ஏறி கவிதை பாடி பரிசு பெற்றிருப்பேன் என்று.இதனால் தான் நான் மற்றவர் பிட்சை எடுப்பது ஆகாது என எனது குறளில் கூறுவது போலவும் கூறுகிறார்கள். நான் கூறிய " பரந்துகெடுக இவ்வுலகியற்றியான்" என்று எழுதியதை சான்றுக்கு எடுக்கிறார்கள்.

ஆகவே எனது நோக்கம் இங்கே எல்லாவற்றையும் மீண்டும் தெளிவு படுத்திவிட்டு மீண்டும் மறைந்துவிடுவதே!!

யாழ் களம் என்ன கோவில் திருவிளாக்களில் தண்ணீர்பந்தலில் தேசிக்காய் தண்ணீர் வேண்டி குடித்துவிட்டு போகும் என்ன தண்ணீர்பந்தலா? தமிழ் வளரனும். அந்த தமிழால் தமீழீழ், புலம் பெயர் தமிழர்களில் தமிழின உணர்வு உருவாக்கப்படனும், அதனூடு தமிழனுக்கென்று ஒரு தனித்துவமான தமிழீழம் அமைய அவர்களின் பங்களிப்பு இதயத்தில் இருந்து வரனும். தமிழ் மொழி தேன் போல அவர்களின் இதயத்தினை இனிப்பாக வைத்திருக்க வேண்டும் அல்லவா அகவே என் போன்ற வள்ளுவன்கள் இங்கே வரனும், தமிழ் உலகத்திற்கோர் நல்லூலாகிய திருகுறளை படிக்கனும். தம்மை திருத்தனும். இதுதான் இன்றைய முக்கிய தேவை!!! :lol:

மீண்டும் மீண்டும் மீண்டும் உங்களை வரவேற்கிறேன், வள்ளுவனாக கலியுகத்தில் மறுபிறவி எடுத்ததற்காக.

திருக்குறளைப் பற்றி மேலும் கூறுங்கள்.

  • தொடங்கியவர்

1. அறத்துப்பால் என்பதுவினை இப்போது முதலாவதாக எடுப்போம். எதற்காக இப்படி அறத்துப்பால என்று நான் அன்று உங்களுக்கு கூறினேன் என்று மீண்டும் தெரிந்து கொள்வோம்.

1. 1 அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்கே உலகு.

எல்லா எழுத்துகளுக்கும் "அ" என்ற முதல் எழுத்து தமிழில் இருப்பது போல தமிழ் மொழி பேசும் உலக தமிழர்களுக்கு வாழ்க்கையில் சீரான பண்புகளினை மன அடக்கதுடன் கையாண்டு அதீத வீரச்செயல்களினை செய்யும் எமது தமிழீழ தேசத்தின் மான்புமிகு வேலுப்பிள்லை பிரபாகரன் அவர்கள் முதன்மையான கடவுள் போன்றவர். அவர் அடிபற்றி வாழும்போதே வாழ்க்கையில் சீரான் ஒழுக்கங்களினை கடைப்பிடித்து, மற்றைய தமிழன் வாழ்னும் என்ற சுயநலமில்லாத பெருநலம் கூடிய வாழ்க்கை வாழ்வதே ....இந்த மானிடப்பிறப்பு எடுத்தற்கு நாம் செய்யும் நன்றிக்கடன்! என்பதே மேற்கொண்டு நான் சொன்ன குறள் 1 இன் தற்போதைய விளக்கம். :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்

வாருங்கள்

கூறுங்கள் திரும்பவும்

இந்த மரமண்டைக்குப் புரிகிறா என!!..

என்னை வரவேற்க வேண்டாம் ஏனென்றால் நான் இப்பவே சாகலாம்.

அதென்ன

இவ்வளவு அவநம்ம்பிக்கை .....

:lol: வணக்கம் வாருங்கள்

வணக்கம் நண்பரே வாருங்கள் உங்கள் இந்த பிறப்பு நல்ல பிறப்பாக அமைய நல்வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்

தமிழ் பேசும் நல்லுலகத்துக்கோர் நற்செய்தி:

தமிழர்கள் எல்லோருமே பயங்கரவாதிகள், அவர்களின் சுதந்திரத்துக்கான போராட்டம், அல்காதா குழுவுடன் ஒப்புடுவதினை எதிர்த்து முழு உலகமே வியக்கும் வகையில் அதே நேரம் தமிழனின் ஒற்றுமையை வலியுருத்தி,

இந்த தமிழ் வள்ளுவன் சாகும் வரை உண்ணாமல் இருந்து மீண்டும் ஒரு அன்னை பூபதி, தியாகச்செம்மல் திலீபன் அவர்களின் அடிபற்றி முதல் தடைவையாக வாழும் சுகம்கள், சொத்துக்கள், பதவிகள் எல்லாம் தமிழீழ போராட்டத்துக்குமுன்னால் ஒன்றுமே இல்லை என்று நிருபிக்க போகின்றான் தான் வாழும் இடத்தில்.

ஆக்வே அவனது ஆத்மா சாந்தியடைய முதல் மீண்டும் இந்த திருகுறளின உண்மையான மொழிபெயர்ப்பை, தற்கால போராட்டவாழ்க்கைமுறைகளினினை உலகதமிழ் வாழ் மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் தர உங்கள் ஆதரவு இங்கே தேவை. வள்ளுவனையும் கழுத்திலே பிடிச்சு தள்ளும் காலமப்பா... :( .

  • கருத்துக்கள உறவுகள்

வாங்கோ வாங்கோ தமிழ் வள்ளுவன்...உங்கள் வரவுக்காக நாம் எல்லோரும் நெடு நாளாக காத்திருந்தோம்.

உங்கள் அறிமுகம் சற்று வித்தியாசமாகவுள்ளது பாராட்டுக்கள், தொடருங்கள் உங்கள் பணியை.

ஆமா இந்த திருக்குறளின் விரிவாக்கத்தை சற்று நவீன முறையில்

என்னைப் போன்றோர்க்கு புரிகின்றமாதிரி பதிவு செய்ய முயற்சி செய்யுங்களேன்.

பன மரத்துல வவ்வாலா..

வள்ளுவத்துக்கே சவாலா..

தமிழ்வள்ளுவனே...

என்று வள்ளுவத்தையே பொரட்டிப்போட்டு

சொல்லாட்சி,பொருளாட்சி,நடையாட

வணக்கம் வாங்கோ

வணக்கம் வருக வருக வள்ளுவப் பெருந்தகையே! உங்கள் தமிழ் கடல் சுனாமி போல் அடிக்க எங்கள் களத்தில். தமிழ் பகுதியில் உங்கள் தொண்டை ஆரம்பியுங்கள்

  • தொடங்கியவர்

:lol: வணக்கம் யாழ் கள தோழர்களே, உண்மையைச்சொல்லப்போனால் நான் ஒரு தமிழ் வழிப்போக்கன், தமிழ்வள்ளுவன் என்று இந்த உலகத்திலே மீண்டும் பிறந்தேன். வளரும் போது என் அம்மோய் எப்பவும் பால் சோறு தீத்தேக்க . நிலா நிலா ஓடி வா என்று எல்லாம் பாடவில்லை. எப்பவும் தங்கத்தலைவன் அவர்களின் தனிபட்ட வாழ்க்கை முறை, போராட வந்த கதைகள், தமிழர்களின் அவலவாழ்க்கைகளினை சொல்லியே சாப்பாவினை ஊட்டி விடுவா?

அப்படி வாழ்ந்த ஒரு குடும்பம் ஆனா இப்ப உலகமேமாறிவிட்டது. வெளிநாடுகளில வேலைக்கு போற அவசரத்தில இந்தா ரிவி ஐப்பார் என்று சொல்லி பிள்ளைகளினை வளர்க்கிறார்கள். தமிழ் பாடசாலைகளோ மூலைக்கு மூலை இருந்தாலும், படிப்பதற்கு மாணவர்கள் இல்லை. திருகுறள் என்றா என்ன என்று கேள்வி கேட்கும் பிள்ளைக்கு விடைசொல்லத்தெரியாத தமிழ்ப்பெற்றார்கள். அப்ப எப்படி தமிழ் வளரும். தமிழன் பரம்பரைபரமபரையாக மூளை வளம் கூடி, கடின உழைப்புக்கும், சிக்கனுத்துக்கும் பெயர் பெற்றவன். இப்படி கட்டுப்பாடாக வாழ்ந்து தன் வாழ்க்கையை வெளிநாடுகளுக்கு வந்து தொலைத்து விட்டான்.

எங்கே எம் பலம் ?, எங்கே எம் மனதைரியம்? எதற்காக தமிழர் எல்லோரும் ஒற்றுமையில்லாது ஆளை ஆள் பிடித்துத்திண்ணும் நிலைக்கு வரவேண்டும். எங்கே தவறு இழைக்கப்பட்டிருக்கிறது. எப்படி அதை மீண்டும் நிவர்த்தி செய்யலாம். அதற்கான வழிமுறைகள் தான் என்ன?

இங்கே தான் திருகுறளும் அதன் வாழ்வீக நடைமுறை சூட்சுமங்களும் வெளிவருகின்றன. இதைபற்றி வாழ்ந்த எம் மூதாதயர் சேமித்து விட்டுப்போன சொச்ச சக்த்தியில் எம் தமிழ் தேச மக்கள் புலம் பெயர்ந்து வாழ்ந்துகொண்டுஇருக்கிறார்க

குருவே!

இந்த குறளைப் பற்றி என்ன கருத்து சொல்றீங்க

"சுத்தமான காதுக்கு அறிவு சாப்பாடு இல்லாதப்ப

பசிச்ச தொந்திக்கும் கொஞ்சம் கூழ் ஊத்தப்படும்"

எனக்கு சரியான் குறள் தெரியாது இருப்பினும் அர்த்தம் மட்டும் மனசுல ஓடுது

  • தொடங்கியவர்

வணக்கம் யாழ் போக்கிரியவர்களே!

ஒரு புறம் வேடன், மறு புறம் நாகம் இரண்டுக்கும் நடுவே ஒர் அழகிய தமிழ்க்குருவி!

அசைஞ்சால் இருபக்கத்தாலும் சாவு நிச்சயம். இதுதான் உலக வாழ்க்கை, இயற்கை தந்த வழி!

உங்கள் ஆதங்கம் புரிகிறது. இந்த குறளுக்கு விளக்கம் என்னால் தரமுடியும் அதற்கு முதல்,

கல்லுக்குள் தேரைக்குகுஞ்சுக்கு முட்டையில் இருந்து வெளியில் வரமட்டும் வாழ்வழித்த இயற்கை, கருப்பைக்குள் உள்ள முட்டை வளர்ந்து இப்படியாக மனித மூளைக்கே ஆச்சரியபடுத்தும், விஞ்ஞான தொழில்நுட்பங்களினூடு ஓர் உயிர் படைக்கப்பட இருக்கும் அந்த அற்புத இயற்கை விதி அல்லது சக்தி,

"சுத்தமான காதுக்கு அறிவு சாப்பாடு இல்லாதப்ப

பசிச்ச தொந்திக்கும் கொஞ்சம் கூழ் ஊத்தப்படும்"

எனக்கு சரியான் குறள் தெரியாது இருப்பினும் அர்த்தம் மட்டும் மனசுல ஓடுதுசுத்தமான காதுக்கும், பசித்த தொந்திக்குமா சாப்பாடு கொடுக்காமல் இருந்திடும்..என்ன யோசிக்கிறீங்க.

எல்லாம் தன்டபாட்டில நடக்குது. காத்தில பறக்கிற பறவை இறகு மாதிரி ரொம்ப நிறையில்லாம வாழ்க்கையினை அமைப்பவன் இவ்வுலகில் ஆனந்தமான் மனிதன். துன்பம்- இன்பம் இரண்டும் கூடினா வாழ்க்கைக்கு, அதாவது மனித மனம் குளப்பத்தில் போய் இதயதுடிப்பு கூடி, மனிதன் சம்நிலையினை இழப்பதால் அவன் கீழ் நோக்கிய பாதையில் பயனிப்பான். இதை அறிந்து மனிதவாழ்வினை தன்பாட்டில் பயநிக்கவே ஆறாவது அறிவு என்ற ஒன்று எமக்கு, மாட்டுக்கு கொம்பு வைத்தது போன்று இயற்கை வைத்துள்ளது. அதன் விவேகத்திற்கேற்ப மனித விலங்கு நல்ல பாதையிலும் செல்லலாம், பிழையான கூடாதவழிகளிலும் செல்லாலா. சொய்ஸ் இஸ் யுவேர்ஸ்....இதுதான் வெள்ளைக்காரனின் வேத வாக்கு.

இதை நாம் எம் மூதாதய தமிழர்கள் தம் புத்திக்கூர்மையினால் அறிந்து காலம் காலமாக நிலைத்திருக்க எமக்கு திருகுறளாக எழுதிவைத்து போயுள்ளார்கள். வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான ரசியங்கள் அடங்கிய ஏடுகளினை. நாம் அதை படிப்பதே இல்லை. ஏன் பணம் மேலும் உழைக்கணும். எம் பிள்ளைகளினை மட்டும் படிப்பித்தால் போதும் என்ற குறுகிய சிந்தனை. ஆனா தமிழ் படிக்க விட்டால் வெட்கம். ஆங்கிலம் மட்டம் படிக்க அதுவும் கூட காசு வேற குடுத்து படிப்பிப்பதென்பதே எம் இப்போதய விலாசம்.

திருகுறள் என்பது ஒரு வழி...அதாவது வெற்றி பெறுவதற்காக , இமாலய சாதனைகள் என்று சொல்லும் அளவிற்கு தமிழர்கள் சாதிக்கவேண்டும் என்பதற்காக எம் முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்டவை. இன்று தமிழ்நாட்டு முதலமைச்சர் மதிப்புக்குறிய கலைஞர் கருனாநிதி எப்படி இந்த வயதிலும் சாதிக்கிறார். எப்படி?

இந்த திருகுறள் தந்த அந்த ரகசிய ஆலோசனைகளால் இல்லையா? எமது தங்கத்தலைவன் இன்று உலகையே தன்னை நோக்கி திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறார் என்றால் எதனால். இதே திருகுறள் காட்டிய வாழ்க்கை மூறைகளினால். மாவீரர்கள் தம வாழ்க்கையினையே விடுதலைக்கு அர்பணித்து தம்மை வீரகாவியமாக்கிவிட்டார்களே எப்படி...இதே திருக்குறள் காட்டி தந்த பாதை...அப்படியிருக்க...

புலம் பெயர்ந்த நாம் மாத்திரம் தொந்தியை மட்டும் வளர்க்கிறமே இது நியாயமா?

மூதாதையர் தம் மனதினை அடக்கி, தம் இரத்தில் அந்த சக்தியினை சேகரித்து, ஆண்-பெண் உறவின் மூலம், ஒரு உயிராக எம்மை இவ்வுலகில் படைத்துவிட்டார்கள். சக்தி அழிக்கப்படமுடியாது. ஆனா அது ஆக்க சக்திக்கும் பயன்படலாம் அதே நேரம் அழிவுக்கும் பயன்படலாம். நாம் எப்படி அந்த சக்தியினை பாவிக்கின்றோம் இன்று என்பதுதான் எம்மையே நாம்கேட்க வேண்டிய கேள்வி.

பாங்கில பணம் சேர்த்துவைத்துவிட்டு எம் தாய் தகப்பன் சேர்த்துவிட்டு இறந்து போகிறார்கள். இப்ப இது உங்க ரேண். நீங்க அதை மேலும் விருத்திசெய்வதா அல்லது வீணே செலவழித்து அதை அழிப்பதா எது முக்கியம்?

அதை எப்படி தங்க வைப்பது என்று விலாவாரியாக சொல்வதுதான் திருக்குறள் என்ற நூல். அது மட்டும் நீங்க அறிந்தீங்கண்ணா..நீங்க இந்த உலகத்தினையே பில்கேட்ஸ் மாதிரி ஆளலாம். புலிகள் அதை வாழ்க்கையில் கடைப்பிடிப்பதால் தான் நாம் இன்று புருவத்தினை உயர்த்தி பார்க்கக்கூடியதாக இருக்கிறது. இல்லையா!!. அதுதான் ஒழுக்கமான வாழ்கைமுறையினூடு வியக்கதகு சாதனைகள் செய்வதற்கு ஒரு உதாரணம்!! :lol:

  • தொடங்கியவர்

அறத்துப்பால் 1.12

கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்

இன்று நான் மீண்டும் ஒரு தமிழ் வள்ளுவனாக உங்கள் முன் வந்திருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் நான் அன்று தொட்டு என் தங்கத்தலைவனின் தூய பாதங்களினை தொட்டு அவரினை என் மானிடசக்திகளுக்கெல்லாம் ஒரு பெரும் சக்தியாக அதாவது இயற்கை எம் காலத்தில் எமக்கு காட்டித்தந்த கிருஸ்ணபரமாத்மா என்றும் என்னை இரக்கத்துக்கும், வீரத்துக்கும் , அறிவுக்குமாக பிறப்பெடுத்த அர்ச்சுனன் ஆக கருதி வருவதால் தான்.

ஆகவே நான் என்ன படித்தோம், எப்படி மார்க் வேண்டினோம் என்பதல்ல வாழ்க்கை,

மேலே சொன்ன தங்கத்தலைவனின் பாதம் தொழுகாமல், எம் மனத்தினை அடக்காமல், திருகுறளினை எம் வாழ்க்கையில் கடைப்பிடிக்காமல் வாழ்வது என்பது ஒரு போதும் பயனில்லாமல், கருத்தின்றி காய்ந்து துன்பத்தில் ஆழ்த்தி அதாவது பாங்கில் பணம் இல்லை என்ற நிலைக்கு ஆக்கி தவிக்க வைத்துவிடும்!!

அது தான் இயற்கை என்ற அற்புத சக்தி. அதனால் ஆக்கவும் முடியும் அதே நேரம் அழிக்கவும் முடியும். சொய்ஸ் ஸ் அவேர்ஸ். ஸ்ன்ன்டிட்?

  • தொடங்கியவர்

அறத்துப்பால் 1.13

மலர்மிசை ஏகினான் மாண்டி சேர்ந்தார்

நிலமிசை நீடுவாழ் வார்

போலி வாழ்க்கை வாழும் இந்திய, உலக தமிழர் தலைவர்களுகெல்லாம் உலகதலைவனாய் உலகதமிழர்களிற்கு வீரத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக அதே நேரம் துரோகம் செய்பவர்களுக்கு தண்டணை கொடுக்கும் ஒரு புரட்ச்சித் தமிழீழ வீரவல்வை மைந்தன் எம தங்கத்தலைவன். அப்படிப்பட்ட அந்த மைந்தனை நினையாமல் பிற உருவங்களினை கடவுளாக தொழுபவர், மனித மனவளம் குன்றிய ஒரு சாதராண பயந்த ஒரு விலங்கு மனிதன். அப்படிப்பட்டவன் மனிதனாக பிறந்தது நீடித்து வாழ்வார் என்பது நடைப்பெறக்கூடிய காரீயமல்ல!! :lol:

  • தொடங்கியவர்

அறத்துப்பால் 1.14

வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு

யாணடும் இடும்பை இல

வாழ்க்கையில் மற்றவர்களினைப்போல தன் வாழ்வுண்டு, தன் வேலையுண்டு இருக்கும் மனிதர்களினிடையே, தமிழ் மக்களுக்கு சிங்களவனால் ஏற்பட்ட சோகமான வடுக்களினை கண்டு கொதித்து, தன் விருப்பு- வெறுப்பு அற்று ஒரு பிஸ்டலின் உதவியுடன் தமிழர்களுக்கென்று ஒரு தனித்துவமான ஒரு சுதந்திர தமிழ்த்தேசியத்தினை கட்டி விட வேண்டும், என்ற ஒரே நோக்கில் களமாடப்புறப்பட்ட எம் தங்கத்தலைவனின் பாதமலர்களினை வழிபடுகின்ற எம் தமிழ் மக்கள் படை வீரர்களுக்கு என்றுமே தோல்வி கிடைக்காது, எத்துயரமும் அவரினை சென்றடையாது! :icon_idea:

  • தொடங்கியவர்

யாரால்?

சொந்த நில புலன் சொத்து பணம் பண்டம்

பெருவீடு, பெருவாசல் பெற்றது எதனால்?

தமிழன் தன் சொந்த முயற்ச்சியால்

இன்று தமிழன் அகதியாகி வெளிநாடுகளில் வாழ்வது யாரால்?

வன்செயல் புரிந்த சிங்களத்தில் அரசாலும் காடைகளினால்

முற்றத்து மண்ணைத்துறந்து அற்றைத் திங்கள் தனில்

திசை மாறிய பறவைகளாய் திக்கெட்டும் பறந்தது யாரால்?

அக்கிரமே உருவான ஈழத்துப் பெரும்பான்மை சிங்கள இனத்தினர் சார்ந்த

அநீதிக் காரராரலால்

எம் முன்னே எம் கலாச்சாரம்,

காடைகளினால் கற்பழிய காரணமாயிருந்தது எதனால்?

ஈழத்தினை கைப்பற்றி அரசாண்ட ஐரோப்பியர்கள் போகும் போது

விட்டுச்சென்ற பெரும் அலட்ச்சிய அரசியல் மூளைபழுதால்!

எம் பிள்ளைகள் இன்றுமிங்கு வெளிநாடுகளில் வாழ்ந்து கொண்டு,

தமிழ் மொழி மறந்தும் வளர்வது எதனால்?

பிறநாட்டு வாழ்வு கொண்டோம், நமக்கென்ன எனி தமிழ்

என்று கொண்ட அந்த அநாகரீகமற்ற எம் தமிழர் மேற்கொண்ட செயலால்,

உன் சொந்த தமிழ் பேசுவது தான் உனக்கு அநாகரீகமெனில்,

நீ பிறந்து விட்ட பிறப்பில் பெரும் பிழையிருக்கு அதை நீ அறியவில்லையா?

ஆனால் இன்றும் நாம் தமிழர் என்று தலை நிமிர்ந்து சொல்ல வைக்க

எமக்கு என்று ஒரு தலைவன் இல்லையென்று வைத்திட்டால்,

தமிழின் நிலை என்ன? தமிழ் மொழிதான் எங்கே?

சிந்தித்துப்பார் அப்போதான் விடை தெரியும்!! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க என்ன சாமி சொல்லுகிறீங்க எனக்கு ஒன்னுமே புரியல்ல.

  • தொடங்கியவர்

வெளிநாட்டு வாழ் தமிழ்மக்களின் குழந்தைகள் ஆங்கில மொழியில் பாடங்கள் படிக்கின்றன.

தமிழ்ப்பெற்றார்கள் தமிழ்குழந்தைகளின் தமிழறிவினை அவர்களின் படிக்கும் நேரங்கள் அல்லாத சமயங்களில், கடும்முயற்ச்சி எடுத்தாவது படிப்பிக்கவேண்டிய ஒரு கட்டாய தேவை.

ஒவ்வொருதமிழனுக்கும் இன்று இது ஒரு கடமை. புலம்பெயர்ந்துவிட்டோம் நமக்கென்ன எப்படிப்பட்டாவது இருந்துவிட்டுப்போகட்டுமே என்ற சிந்தனைகள் களையப்பட்டு,

ஒவ்வொரு தமிழனும் தமிழீழத்திற்காக ஒவ்வொரு தமிழ்ப்பிள்ளையும் தமிழ்மொழியில் தனித்துவமான அறிவைபெற இன்றைய சூழலில் ஆவணசெய்யவேண்டும். அதற்காக கடுமையாக போராடவேண்டும். அது தற்போது பெரிதளவில்பேச்சளவில் சிறிதளவே செயலுருவிலும் நடைபெறுகின்றன.

காலச்சக்கரம் வேறு அதிவேகமாகச் சுழல்கிறது. நம் தங்கத்தலைவன் வாழும் காலத்தில் எமது விடுதலை பெறப்படவேண்டும். :icon_idea:

  • தொடங்கியவர்

அறத்துப்பால் 1.15

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு

தமிழ்ர்க்கு விடிவுவேண்டித்தர வேழ்வித்தீயில் தனி ஒருமனிதனாக போராடப்புறப்பட்ட எம் தங்கதலைவன், அவனின் மெய்யான, களங்கமில்லாத, சுயநலமில்லாத போராட்ட சிந்தனைகளுக்கு, மெய்யாக வேலைசெய்து, உலகமக்களின் தமிழர்மீதான கவனத்தினை ஈர்க்கவைக்க, தனித்துவமாக போராடுபவர்களின் வாழ்க்கையில், இருள்ளாகிய துன்பவினை என்றுமே நெருங்காது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.