Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரே பார்வையில் அவுஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ்; - மூன்று நாட்களில் 35000 பேர் வேலையை இழந்தனர்- இதுவரை 12 பேர் பலி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே பார்வையில் அவுஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ்; - மூன்று நாட்களில் 35000 பேர் வேலையை இழந்தனர்- இதுவரை 12 பேர் பலி

1

அவுஸ்திரேலியாவில் கடந்த மூன்று நாட்களில் 35000 பேர் வேலைகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

கசினோக்கள் விமானசேவைகள் வர்த்தக நிலையங்கள் போன்றன  பணியாளர்களை வேலையிலிருந்து நீக்கியுள்ளன.

புதன்கிழமை  வெர்ஜின் அவுஸ்திரேலியா விமானசேவை 8000பேரை வேலையிலிருந்து நீக்கியுள்ளது.

கசினோ நிறுவனமான ஸ்டார் என்டர்டெய்மன்ட் 8100 பேரை பணிநீக்கம் செய்துள்ளது.

virgin_1_australia.jpg

வெஸ்ட்பக்கின் பிரதம பொருளியல் நிபுணர் பில் இவான்ஸ் ஜூன் மாதத்திற்குள் 814,000 பேர்  வேலைகளை இழப்பார்கள் என  தெரிவித்துள்ளார்.

இதேவேளை கொரோனா வைரசினால் தாங்கள் பாதிப்பை  எதிர்கொண்டுள்ளதாக அவுஸ்திரேலியாவின் பல வர்த்தக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன

2

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12

australia_nurses_1.jpg

அவுஸ்திரேலியாவில் கொரோனவைரஸ் காரணமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

புதன்கிழமை இரவு 68 வயது கொவிட் நோயாளியொருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவதற்கு முன்னரே பல நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தார் என குயின்லாந்தின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை உயிரிழந்த இருவர்  70 வயதினை தாண்டியவர்கள் என விக்டோரியாவின் பிரதம சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.

3

காவல்துறைக்கும் பாதிப்பு

australia_polce.jpg

கொரோன வைரஸ் தொற்று காரணமாக அவுஸ்திரேலியாவில் 200 ற்கும் மேற்பட்ட காவல்துறையினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

200 காவல்துறையினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என விக்டோரியாவின் காவல்துறை அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

இதேவேளை விக்டோரியாவில் காவல்துறையினருக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை என காவல்துறையினரின் சங்கம் தெரிவித்துள்ளது.

விக்டோரியாவில் போதியளவு முகக்கவசங்கள் பாதுகாப்பு சாதனங்கள் உள்ளன ஆனால் அவற்றை காவல்துறையினருக்கு வழங்கவில்லை என சங்கம் தெரிவித்துள்ளது.

எனினும் விக்டோரியா காவல்துறை இதனை நிராகரித்துள்ளதுடன் போதியளவு உபகரணங்கள் உள்ளன அவற்றை தேவைக்கேற்ப விநியோகிப்போம் என குறிப்பிட்டுள்ளது.

கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவருடன் தொடர்கொண்டுள்ளனர் என சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது உறுதியானலோ உடனடியாக காவல்நிலையத்தையும் வாகனங்களையும் சுத்தம் செய்கின்றோம் என விக்டோரியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

4

விக்டோரியாவின் சமூக  தனிமைப்படுத்தல் கொள்கையை மீறி சிட்னி விமானநிலையத்தில் பெருமளவானவர்கள் நெருக்கமாக காணப்படுவதை காண்பிக்கும்; வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

sydneyb_airporyt.jpg

சிட்னியில் இன்று காலை இந்த காட்சிகள் பதிவாகியுள்ளன.

குறிப்பிட்ட வீடியோவில் பலர் நெருக்கமாகயிருப்பதை காணமுடிந்துள்ளது.

வீடியோவை பதிவு செய்துள்ள நபர் பயணிகளை ஒழுங்குபடுத்துவதற்கான நடவடிக்கைகள் எதுவும் இடம்பெறவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

5

அவுஸ்திரேலியா தன்வசம் உள்ள முகக்கவசங்கள் உட்பட பாதுகாப்பு கவசங்களின் கையிருப்பை பேணுவதற்கான நடவடிக்கையை எடுக்கவேண்டும் என அவுஸ்திரேலியாவின் மருத்துவ சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

australia_corona.jpg

அவுஸ்திரேலியாவில் இயங்கும் முகக்கவசங்கள் உட்பட பாதுகாப்பு உபகரணங்களை தயாரிக்கும் சீனா நிறுவனம்  தனது உற்பத்தி பொருட்களை சீனாவிற்கு மாத்திரம் அனுப்பிவருவதை தொடர்ந்து அவுஸ்திரேலிய மருத்துவர்கள் சங்கம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.
 

https://www.virakesari.lk/article/78671

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரே பார்வையில் அவுஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ்- நாட்டிற்குள் நுழையும் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள் - பிரதமர் அறிவிப்பு- வர்த்தகர்களை காப்பாற்ற புதிய திட்டம்-

1

அவுஸ்திரேலியாவிற்குள் வெளிநாடுகளில் இருந்து வரும் அனைவரும் இரண்டு வாரங்களிற்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் என பிரதமர் ஸ்கொட் மொறிசன் அறிவித்துள்ளார்.

இன்று நள்ளிரவு முதல் இந்த விதிமுறைகள் அமுலிற்கு வருவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து தாய்நாட்டிற்கு திரும்பும் அவுஸ்திரேலியர்களை கையாள்வதில் நாங்கள் எதிர்கொண்டுள்ள அழுத்தங்களை இந்த நடவடிக்கைகள் குறைக்கும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

australia_airport.jpg

அவுஸ்திரேலியாவிற்கு திரும்பும் அனைவரும் ஹோட்டல்களில் இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய மாநில அரசாங்கங்கள் இதனை அமுல்படுத்தவுள்ள, பாதுகாப்பு தரப்பினரினதும் காவல்துறையினரினதும் உதவி நாடப்படும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு வாரங்களில் வீடுகளிற்குள் தங்கியிருந்ததன் மூலம் பல அவுஸ்திரேலியர்கள் பலரின் உயிர்களை காப்பாற்றியுள்ளனர்,வாழ்வாதாரத்தை காப்பாற்றியுள்ளனர்  ஸ்கொட்மொறிசன் தெரிவித்துள்ளார்.

தாஸ்மேனியாவில் வசிக்குமட் ஒருவர் மெல்பேர்ன் ஊடாக அவுஸ்திரேலியாவிற்குள் நுழைந்தால் அவர் மெல்பேர்னிலேயே தங்கியிருக்கவேண்டும் என பிரதமர் அறிவித்துள்ளார்.

2

அவுஸ்திரேலியாவின் ஒவ்வொரு பிரஜையும் ஒவ்வொரு நிமிடமும் சமூக தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை பின்பற்றவேண்டும் என தலைமை மருத்துவ அதிகாரி பிரென்டன் மேர்பி தெரிவித்துள்ளார்.

3000__1_.jpg

வீடுகளில் இருந்து பணியாற்றுங்கள்,தேவையென்றால் மாத்திரம் வெளியே செல்லுங்கள் வணிக வளாகத்திலேயே வாகனத்தரிப்பிடத்திலேயே நண்பர்களுடன் சேர்ந்து நிற்காதீர்கள்  சமூக தனிமைப்படுத்தல் கைசுத்தம் ஆகியவற்றை பயன்படுத்துங்கள் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அவுஸ்திரேலிய மக்களின் நடவடிக்கைகளில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது ஆனால் சமூக விலக்களை பின்பற்றவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

சமூகத்திற்குள் பரவுதல் குறித்தே நாங்கள் உன்னிப்பாக அவதானித்த வண்ணமுள்ளோம் விதிமுறைகளை மீறுவதற்கு எவருக்கும் அனுமதிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

3

அவுஸ்திரேலியாவின் பொருளாதாரத்தை செயல்அற்ற நிலைக்கு கொண்டு செல்லும் திட்டம் குறித்து அரசாஙகம் ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

scot_morrison.jpg

கொரோனா வைரசின் பின்னர் மீண்டும் வர்த்தகங்கள் கடனின்றி மீள்வதை உறுதி செய்வதற்காகவே இந்த நடவடிக்கையை அரசாங்கம் அறிவிக்கவுள்ளது.

வர்த்தக உரிமையாளர்கள் கடனால் பாதிக்கப்படாத நிலையை உறுதி செய்வதற்கான திட்டத்தினை அவுஸ்திரேலியா உருவாக்கி வருகின்றது

வங்கிகள், நிதி வழங்குநர்கள், சொத்து உரிமையாளர்கள் அனைவரும் சிறிது காலத்திற்கு கடினமான நிலையை சகித்துக்கொள்ளுமாறு கேட்கப்படுவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன

அடுத்த ஆறு மாதங்களிற்கு வாடகைகள் குத்தகைள் போன்றன தள்ளுபடி செய்யப்படவுள்ளன எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன் இன்று அது குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் வர்த்தக நடவடிக்கைகளை உறக்க நிலைக்கு கொண்டு செல்லும் திட்டம் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் மக்களின் சுகாதார நோக்கங்களின் அடிப்படையிலும் பொதுமக்கள் மீதான தாக்கத்தை குறைக்கும் நோக்கத்துடனும் இதனை முன்னெடுக்க விரும்புகின்றோம் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக பொருளாதார அடிப்படையிலான தாக்கங்கள் குறித்து நாங்கள் சிந்திக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்த அறிவிப்பு அடுத்த சில நாட்களில் வெளியாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்

4

மேற்கு அவுஸ்திரேலியாவில் பெண்மணியொருவர் தனிமைப்படுத்தப்பட்டு;ளார் என  மாநிலத்தின் தனிமை மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

14 நாட்களின் பின்னர் அவர் வெளியேறுவதற்கு அனுமதிக்கப்படுவார் என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் எந்த சூழ்நிலையில் அவர் பாதிக்கப்பட்டார் என்ற விபரத்தினை அதிகாரி வெளியிடவில்லை.

corona_austra_4.jpg

5

அவுஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்டு;ள்ள அச்சநிலையை இணைய வழி மோசடிக்காரர்கள் பயன்படுத்துகின்றனர் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

ஆபத்தான இணைப்புகளை அழுத்துமாறு மக்களை கேட்டுக்கொள்கின்ற போலி மின்னஞ்சல்கள் மற்றும் குறுந்தகவல்கள் குறித்து அவுஸ்திரேலியாவின் சைபர் பாதுகாப்பு நிலையம் எச்சரித்துள்ளது.

வந்திருக்கும் செய்தியை கவனமாக வாசியுங்கள், சரியானதாக தென்படாத எதனையும் உன்னிப்பாக அவதானியுங்கள் என சைபர் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
 

https://www.virakesari.lk/article/78728

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

அவுஸ்திரேலிய மக்களின் நடவடிக்கைகளில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது ஆனால் சமூக விலக்களை பின்பற்றவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்

கடந்த வெள்ளி Bondi(NSW) கடற்கரையிலும், இன்று St.Kilda(VIC) கடற்கரையிலும் கூடியவர்களைப்பார்த்தால் சமூகவிலக்களை பின்பற்றுபவர்களாகவோ, அதை அறிந்தவர்களாகவோ தெரியவில்லை.. 

92-D2-C47-E-4946-4-A06-BAA0-087-C54-ACCE

Images of massive crowds at Bondi on Friday went viral online

5-D482419-7669-46-A7-B537-63-FB62-A3-F92

Dozens of people have been spotted at St Kilda beach, despite social distancing rules.
 

https://apple.news/AefCzJ1z6Rb67Md14A0pfEQ

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரேலியாவில் கடந்த சில தினங்களுக்குள் 35,000 பேர் வரை வேலைகளை இழந்துள்ள நிலையில், தீடீரென அதிகரித்துள்ள Customers Call Centre வேலைவாய்ப்புகளை(தற்காலிக) இந்த வேலை இழந்தவர்களை கொண்டு நிரப்புவதாக Supermarkets Giants Woolworths, Coles மற்றும் Telstra  போன்றன தெரிவித்துள்ளன. வேலை இழந்த விமான ஊழியர்கள், உணவக ஊழியர்கள், திரையரங்கு ஊழியர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதாக கூறப்படுகிறது. தற்காலிக வேலைவாய்ப்பாக இருந்தாலும் கூட தற்காலிகமாக ஆறுதலடையலாம்

https://apple.news/AvgTDQOS7TgqWRwxRvdWpeA

 

22 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

அவுஸ்ரேலியாவில் கடந்த சில தினங்களுக்குள் 35,000 பேர் வரை வேலைகளை இழந்துள்ள நிலையில், தீடீரென அதிகரித்துள்ள Customers Call Centre வேலைவாய்ப்புகளை(தற்காலிக) இந்த வேலை இழந்தவர்களை கொண்டு நிரப்புவதாக Supermarkets Giants Woolworths, Coles மற்றும் Telstra  போன்றன தெரிவித்துள்ளன. வேலை இழந்த விமான ஊழியர்கள், உணவக ஊழியர்கள், திரையரங்கு ஊழியர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதாக கூறப்படுகிறது. தற்காலிக வேலைவாய்ப்பாக இருந்தாலும் கூட தற்காலிகமாக ஆறுதலடையலாம்

https://apple.news/AvgTDQOS7TgqWRwxRvdWpeA

 

சிலர் தயங்குவார்கள் இந்த வேளைகளில் சேருவதற்கு. ஆனாலும், பண்டகசாலையில் வேலைசெய்வது பாதுகாப்பாக இருக்கலாம். 

சில மக்கள் சார்ந்த பல்பொருள் அங்காடிகள், வேலை செய்பவர்களுக்கு அதிக ஊதியத்தை தருகின்றது. 

வால்மார்ட், அமேசான் பல நூறு ஆயிரம் வேலையாட்கள் தேவை என அறிவித்தள்ளார்.

மருந்தக  ஆய்வுகூட  பரிசோதனை கூடங்களும் வேலைக்கு ஆட்கள் தேவை என கூறியுள்ளன.  

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ampanai said:

சிலர் தயங்குவார்கள் இந்த வேளைகளில் சேருவதற்கு. ஆனாலும், பண்டகசாலையில் வேலைசெய்வது பாதுகாப்பாக இருக்கலாம். 

சில மக்கள் சார்ந்த பல்பொருள் அங்காடிகள், வேலை செய்பவர்களுக்கு அதிக ஊதியத்தை தருகின்றது. 

வால்மார்ட், அமேசான் பல நூறு ஆயிரம் வேலையாட்கள் தேவை என அறிவித்தள்ளார்.

மருந்தக  ஆய்வுகூட  பரிசோதனை கூடங்களும் வேலைக்கு ஆட்கள் தேவை என கூறியுள்ளன.  

உண்மைதான் Customer Call Center போன்ற வேலைகளுக்கு நிறைப்பேர் தயங்குவார்கள்.அத்தோடு இந்த வேலைகளுக்கு ஓரளவு Customer Service அனுபவம் இல்லாமல் எடுப்பதும் கஷ்டம். அதனால்தான் வாடிக்கையாளர்களுடன் நேரடிதொடர்புடையவர்களான விமான பணியாளர்களிற்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.

ஆனால் பல்பொருள் அங்காடிகளில் வேலைகள், மற்றும் Food delivers (Dominos) வேலைவாய்ப்புகளும் இப்பொழுது அதிகரித்துள்ளது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.