Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நேர்மையாக இல்லாததால் பொருளாதார சிக்கலில் தமிழ் வணிகர்கள், தற்தொழில் செய்பவர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kapithan said:

நீங்கள் கூறுவதில் சில நடைமுறைச் சிக்கல்கள் உண்டு.

Bankruptcy and Insolvency செய்வதற்குரிய  Licences உடையோர் தமது வாடிக்கையாளர்களால் வழங்கப்படும் தரவுகளை வைத்துத்தான் Filing செய்வர். இவர்களை Fraud க்கு அனுசரணையாக இருந்தார்கள் என நடைமுறையில் நிரூபிப்பது கடினம். ஆனால் மிகவும் காத்திரமான நிறுவனங்கள் தமது வாடிக்கையாளர் Fraud ஏமாற்று செய்கின்றனர் என அடையாளம் காணுமிடத்து அவர்களுக்கு தமது சேவையை வழங்காது விடலாம். 

ஆனால் மிகவும் அதிக சிறு நிறுவனங்கள் பெரிதளவு இவற்றைக் கவனத்தில் கொள்வதில்லை என்பது கசப்பான உண்மை.

புத்தகவியல் துறை அல்லது நூலகவியல் (?) ஒன்றும் சீர்தனம் அள்ளித்தரும் துறையல்லவே 😀 நாங்கள் படிப்பதற்கு. ☹️

நான் சொன்னது அடிப்படை அறிவு பற்றியது

 

8 minutes ago, tulpen said:

அதே தான். அதை விட இன்னுமொன்றும் உண்டு. அது அதை விட அனுபவஸ்தர்கள். ஆனால் அதுவும் தமிழ் முறைபடி தான் புத்தகங்களை அலங்கோலமாக வைத்திருந்தார்கள். 

பிரான்சில் இன்னொரு புத்தக கடையும் இருக்குதா?...நான் இங்கு போயிருந்த போது பின்னறைக்கு போய் பார்த்து எடுக்க சொன்னார் 😅
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

நீங்கள் கூறுவதில் சில நடைமுறைச் சிக்கல்கள் உண்டு.

Bankruptcy and Insolvency செய்வதற்குரிய  Licences உடையோர் தமது வாடிக்கையாளர்களால் வழங்கப்படும் தரவுகளை வைத்துத்தான் Filing செய்வர். இவர்களை Fraud க்கு அனுசரணையாக இருந்தார்கள் என நடைமுறையில் நிரூபிப்பது கடினம். ஆனால் மிகவும் காத்திரமான நிறுவனங்கள் தமது வாடிக்கையாளர் Fraud ஏமாற்று செய்கின்றனர் என அடையாளம் காணுமிடத்து அவர்களுக்கு தமது சேவையை வழங்காது விடலாம். 

ஆனால் மிகவும் அதிக சிறு நிறுவனங்கள் பெரிதளவு இவற்றைக் கவனத்தில் கொள்வதில்லை என்பது கசப்பான உண்மை.

நடைமுறைச்சிக்கல் திவால் அடிப்பதில் தான் உள்ளது.

முதலாவதாக, நீங்கள் திவால் அடிக்கபோவதன் நோக்கம் என்ன என்ற கேள்வியை தான் அந்த முகவர் கேட்பார்.

அதிலே, உங்கள் நோக்கம், துரத்தும் கடன்காரர்களிடம் இருந்து தப்ப வேண்டும் என்றால், அதுக்கு திவால் தேவையில்லை. இடத்தை மாத்தி கம் என்று இருந்து கொள் என்பார்கள். முக்கியமாக அவர்களுக்கு தேவையான கட்டணம் கொடுக்க கூடிய நிலையில் இல்லாதவர்களுக்கு திவால் நடைமுறை செய்வதே வேஸ்ட்.

பெரும்பாலும், ஆரம்ப ஆலோசனை சந்திப்புக்கே பணம் பல ஆயிரங்களில் இருக்கும் போது.... எப்படி முடியும்?

அவருக்கு பணம் கொடுக்க கூடிய நிலையில் இருந்தால், அதிலேயே கடனை அடைத்து விடலாமே.

இரண்டாவதாக, வங்கியில் பெரும் பணம் எடுத்து, அல்லது ஒரு நிறுவனத்தில் கடனுக்கு பொருட்கள் வாங்கி தொப்பி போட விரும்புபவர்கள்.

உதாரணமாக சிறிலங்கன் அரச விமான சேவையின் குறித்த ஒரு நாட்டின் பொது வியாபார முகாமையினை ஒரு அரசியல்வாதியின் துணையுடன் எடுத்துக் கொள்ளுதல்.

அந்த நாட்டின் சகல விமான சீட்டுகளும் அந்த நிறுவனத்தின் ஊடாகவே விலைப்படும். கொமிசன் பணத்தில் கொழுப்பார்கள்.

குறித்த தருணம் வந்ததும், ஒரு மாதம் பணத்தினை கொடுக்காமல் இழுப்பார்கள். அடுத்தமாதம் சேர்த்து கொடுப்பார்கள். அரசியல்வாதியும் ஆதரவு கொடுப்பார். உள்ளேயும் லஞ்சம் பூந்து விளையாடும் ஆகவே, எச்சரிக்கை மணி அடிக்கப்பட்ட மாட்டாது.

இது போல செய்து, பழக்கப்படுத்தி பின்னர், இரண்டு மாத தாமதம், மூன்று மாத தாமதம் எனப் போய் ஒரு கட்டத்தில் பல மில்லியன்களுடன் திவால் நோட்டீஸ் கொடுப்பார்கள்.

இப்படியானவர்களுக்கே மேல சொன்ன முகவர்கள் சேவை உள்ளது. உண்மையில் அவர்களே, இந்த திட்டத்தினை வடிவமைத்துக் கொடுப்பவர்கள்.

முதலில் Kenton என்னுமிடத்திலும், பின்னர் Rayners lane என்னுமிடத்திலும் ட்ராவல் ஏஜென்ட் வைத்திருந்த ஒருவர் இவ்வாறு சிறிலங்கன் அரச விமான நிறுவனத்துக்கு மஞ்சள் துண்டு போட்டார். இவர் தொப்பி போட்டது, பல மில்லியன்கள். ஆனாலும் முதலை மாதிரி என்னத்தே கன்னையா போல கதை சொல்லிக்  கொண்டு இருப்பார். இவர் அங்குள்ள அரசியல்வாதிக்கும், பங்கு கொடாமல் கடுக்காய் கொடுத்தார் என்று பின்னர் வந்த கதை.

இன்னுமொருவர் இலங்கை தொலைத்தொடர்பு நிறுவனத்துக்கு, லண்டனில் (சீசர என்று பெயர் என்று நினைக்கிறேன்) போன் காட்டுகளை விற்பனை செய்தவகையில் பெரும் பணம் உழைத்தார்.

அது மெகா சுத்து. உதாரணமாக, வாட்ஸ்அப், ஸ்கேய்ப் வருமுன்னர், ஒருவர், BT ஊடாக இலங்கைக்கு போன் செய்தால், BT இங்கு அறவிடும் பணத்தில், ஒரு பகுதியினை இலங்கையினுள் வழங்கப்படும் சேவைக்காக SLTC க்கு கொடுக்க வேண்டும். 

அதேபோல மறுவளமாகவும் கட்டணம் உண்டு. ஆனால் அந்த நேரத்தில், அங்கே இருந்து போன் பண்ண மாட்டார்கள், இங்கிருந்து தான் கால் போகும். ஆகவே BT தான் SLTC கொடுக்கவேண்டி இருக்கும்.

திலங்க சுமதிபாலா என்ற மெகா ஊழல் பேர்வழி SLTC தலைவர் ஆக இருக்கும் போது, இந்த கட்டணத்துக்கு பதிலாக, லண்டனில் SLTC இலச்சினை பொறித்த போன் அட்டைகளாக,  BT இடம் வாங்கி, இலங்கைக்கு மலிவு விலையில் கால் செய்ய, அந்த அட்டைகளை, (இன்று லைக்கா விற்பது போல) தமிழர் கடைகளில் விற்றரர்கள். 

கடைசியில் அந்த லண்டன் கம்பனி, மஞ்சள் துண்டு போட்டு, நஷடம் SLTC க்கு தான்.

ஆகவே, இந்த ஜுஜுபி தமிழ்க்கடைக்காரர்கள், திவால் வரை போவார்கள் என்பது நடைமுறை சாத்தியமில்லாதது.

அதாவது குறைந்தது 2 மில்லியன் ஆவது தேறாவிடில், முகவர்கள் மினக்கட மாட்டார்கள்.

Edited by Nathamuni

இதை எல்லாவற்றையும் விட கொடுமைகள் திகதி முடிந்த குளிருட்டிய கடலுணவு (depresser) இறைச்சிவகை பால்மா இரண்டு வருடங்கள் முடிந்த பின்பு விசேட திரவத்தாலும் புதிய அடையாளப்பையுடமுனும் மாற்றப்பட்டு (அதை செய்ய புதிதாக வந்த முகாமில இருக்கும் பொடியங்கள கூப்பிட்டு குறைந்த சம்பளத்தில திகதி மாற்றப்பட்டு) கடைகளுக்கு வரும் அந்த உண்மைகளை செய்த பொடியங்களை கேட்டால் அண்ணை எங்களுக்கு கடன் என்ன எண்டாலும் வேலை தானே என்று அவர்கள் நிலை அப்படி நிறைய நடக்குது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.