Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நேசக்கரம் ஆயுர்வேதம் நிலம் மாணவர்கள் கற்கை உதவி தேவை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேசக்கரம் அமைப்பினால் 2013ம் ஆண்டு சித்த ஆயள்வேத தோட்டம் நிறுவப்பட்டது. 2ஏக்கர் நிலத்தில் உருவான ஆயர்வேத நிலமானது செங்கலடி பிரதேசசெயலர் பிரிவில் பலாச்சோலை எனும் இடத்தில் அமைந்துள்ளது.

அருகிவரும் தமிழ் பாரம்பரிய சித்த வைத்தியத்தை மேம்படுத்திப் பேணும் வகையிலும் ஆங்கில வைத்தியத்தால் குணப்படுத்த முடியாத நோய்களைக் குணப்படுத்தும் நோக்கிலும் தமிழ் மாணவர்களுக்கு சித்த வைத்தியப் பயற்சியை வழங்கவும் எம்மால் உருவாக்கப்பட்டதே சித்த ஆயர்வேத மூலிகைத் தோட்டமாகும்.

ஆயுர்வேத வைத்திய நிலையத்தை உருவாக்கிக் கொள்வதன் மூலம் எமது மருத்துவத்துறையை விருத்தி செய்யக்கூடிய வாய்ப்பினையும் உருவாக்க முடியும். முழுமையாக அழிந்து வரும் சித்த ஆயுர்வேத வைத்தியத்தினை எமது மக்கள் சரியான வகையில் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பினையும் இம்முயற்சி மூலம் உருவாக்கியுள்ளோம்.

இயற்கையோடு இணைந்த வாழ்வும் அதன் அவசியமும் இந்நிலம் மூலம் உருவாக வேண்டுமென்ற நம்பிக்கையோடு நகர்கிறோம்.

முதற்கட்டம் தேவைப்பட்ட நிதியுதவி - 436000.00ரூபா.
மூலிகைத் தோட்ட உருவாக்கத்திற்கு தங்கள் பங்களிப்பை நல்கியவர்கள்:-
பேரம்பலம் - 600யூரோ.
பிரித்தானிய
Tamil Community Centre Hillingdon   நிறுவனத்தினர் 52310.00 ரூபா
யாழ்கவி 33780.00 ரூபா
கொக்குவிலான் 560யூரோ.
கனடாவிலிருந்து சுரேஸ் , ரவி - 157350.00ரூபா

ஆரம்பகட்ட உதவிகளின் பின்னர் உதவிகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. அதன் பின்னர் பிரித்தானியாவில் வாழும் உறவு பேரம்பலம் ஐயா அவர்களது பங்களிப்பும் எனது பங்களிப்போடும் தொடர்ந்து மூலிகைத் தோட்டம் பராமரிக்கப்பட்டு வந்தது. இக்கால இடைவெளியில்  ஒரு வைத்தியரை உருவாக்கத் தேவையான நிதியுதவியில் ஒரு பகுதியை பேரம்பலம் ஐயா அவர்கள் தந்துதவினார். குறித்த வைத்தியத்தின் மேலதிக கற்கைக்கு குறித்த நபரை 3மாதம் இந்தியாவிற்கு பயிற்சிக்காக அனுப்பியிருந்தோம்.

2017ம் ஆண்டு வசதிகள் பெருமளவு இல்லாத நிலையில் எம்மால் உருவாக்கப்பட்ட  மூலிகைகளைக் கொண்டு வைத்தியம் செய்யத் தொடங்கினோம். தற்போது சனி ஞாயிற்றுக்கிழமைகளில் வைத்தியசேவை நடைபெற்று வருகிறது. எனினும் சிகிச்சை பெற வருவோருக்கான தங்கிடம் மலசலகூடம் வைத்தியம் செய்வதற்கான கட்டட வசதிகள் இல்லாத போதிலும் மரங்களின் கீழ் பயனாளிகளை வைத்து வைத்தியசேவை நடைபெற்று வருகிறது. வாரம் தோறும் 60பேர் வரையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சிகிச்சை வழங்கப்படும் நோய்கள் வரிசை வருமாறு :-
நீரிழிவு , கொலஸ்ரோல்    
வாதங்கள்    80 வாதங்கள், (முடக்கு வாதம், திமிர் வாதம், கிரந்திவாதம் )
இதயக்கோளாறுகள்    இதய இரத்தக்குளாய் அடைப்புகள், இதய பலவீனம்
கிரந்தி வகைகள்    புடர்தாமரை, சோரியாசிஸ்,வாரி,ஆறாத காயங்கள். ஓவ்வாமை
முறிவு தறிவு    எலும்பு முறிவுகள், முள்ளந்தண்டு கோளாறுகள், சில்லு விலகல்கள்
கண்நோய்    கண் கிரந்தி, பார்வை குறைவு
சுவாச நோய்கள்    ஆஸ்மா, காசம், வறட்டு இருமல்
தலை நோய்கள்    தலை வலி, ஒற்றை தலைவலி, தலையில் நரம்பு அடைப்புக்கள்
உன்மந்தம்    16வகையான மனநோய்களுக்கான வைத்தியம்.
புற்றுநோய் .

ஏழுவருட முயற்சியின் வளர்ச்சியை இவ்வளவே எம்மால் கொண்டுவர முடிந்துள்ளது. இதுவொரு நீண்டகால திட்டமாகும். சித்தஆயுர்வேத நிலத்தில் மலசலகூடம் , தண்ணீர் வசதி , மருத்துவக் கொட்டகை , தூரத்திலிருந்து சிகிச்சைக்கு வருவோருக்கான தங்கிடம் போன்றவற்றை அமைக்க வேண்டிய தேவையிருக்கிறது.

அத்தோடு 10மாணவர்களை ஆயுர்வேத கற்கையை கற்பதற்காக தெரிவு செய்துள்ளோம். இம்மாணவர்கள் பாடசாலைக்கல்வியை தொடர்ந்தபடி ஆயுர்வேத மருத்துவத்தையும் கற்கவுள்ளனர். இரண்டுவருட கற்றல் நெறிக்கான கற்றலில் இணையும் ஒரு மாணவருக்கான மாதாந்தம் செலவு 8ஆயிரம் இலங்கை ரூபாய்.

இவர்களது குடும்ப பொருளாதார நிலமையானது வறுமைக்கோட்டின் கீழ் இருப்பதால் கல்வியில் கெட்டிக்காரர்களாக இருந்தும் குடும்ப நிலமை இவர்களை கூலித்தொழிலாளர்களாக மாற்றும் நிலமையே காணப்படுகிறது. இம்மாணவர்களுக்கான சிறந்த கல்வியைக் கொடுக்கும் சமநேரம் ஆயுர்வேத வைத்தியத்தையும் கற்பிக்க விரும்புகிறோம். ஓரு பிள்ளையைப் பொறுப்பேற்று கல்விக்காக நீங்கள் உதவும் உதவியானது ஒரு சந்ததியின் முன்னேற்றத்திற்கான வழியை ஏற்படுத்திக் கொடுக்கும்.


உதவ விரும்புவோர் என்னுடன் தொடர்பு கொள்ளுங்கள்.
சாந்தி நேசக்கரம் யேர்மனி
தொலைபேசியிலக்கம் 0049 1521 6758149 (whatsapp & viber)

Email : - nesakkaram@gmal.com

ஆயுர்வேத மூலிகைத்தோட்டம் உருவாக்கம் தொடக்கம் பற்றிய விபரங்களை அறிந்து கொள்ள கீழ்வரும் இணைப்பில் சென்று பார்வையிடுங்கள்.

“தேன்சிட்டு” ஆயுர்வேத மருத்துவ குறுநிலம் உருவாக்கம்

 

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்

அக்கா இர‌ண்டு கிழ‌மையால் ( இல‌ங்கை காசுக்கு 35ஆயிர‌ம் அனுப்பி விடுகிறேன் ) இப்போது என்னால் இவ‌ள‌வு தான் உத‌ முடியும் அக்கா /

  • கருத்துக்கள உறவுகள்

இதுவா....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

இதுவா....

இதுவே தான் இதன் இணைப்பை தேடினேன். எடுக்க முடியாமல் இருந்தது. இணைப்பை தந்தமைக்கு நன்றி மீரா.

2 hours ago, பையன்26 said:

அக்கா இர‌ண்டு கிழ‌மையால் ( இல‌ங்கை காசுக்கு 35ஆயிர‌ம் அனுப்பி விடுகிறேன் ) இப்போது என்னால் இவ‌ள‌வு தான் உத‌ முடியும் அக்கா /

நன்றி பையா, உங்கள் உதவி மலசலகூடம் கட்ட பயன்படுத்தப்படும். விபரங்கள் தனிமடலில் அனுப்பியுள்ளேன் பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களிடம் PayPal account இருந்தால் எனது பங்களிப்பை அனுப்பி விடுகிறேன். நான் கடந்த 8 வருடங்களாக ஒரு அநாதை இல்லா சிறுமிகளுக்கு உதவி வழங்கி கொண்டிருக்கிறேன். என்னால் முடிந்ததை அனுப்புகிறேன் 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, shanthy said:

 

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்

நிர்வாகம் இங்கு நான் நீக்கியதை மீண்டும் இணைக் முடியுமா,,,,?

 

(சில விளக்கம் குறைந்தவர்களுக்காக)

என்ன எழுதினேன் என்று எனக்கு தெரியும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 3/28/2020 at 12:18 PM, பையன்26 said:

அக்கா இர‌ண்டு கிழ‌மையால் ( இல‌ங்கை காசுக்கு 35ஆயிர‌ம் அனுப்பி விடுகிறேன் ) இப்போது என்னால் இவ‌ள‌வு தான் உத‌ முடியும் அக்கா /

வணக்கம் பையா, நீங்கள் அனுப்பிய உதவி 52450ஆயிரம் ரூபா கிடைத்தது. உங்கள் உதவியின் மூலமான முன்னேற்ற அறிக்கை திட்ட முன்னெடுப்பின் ஒழுங்கில் அறியத்தரப்படும். நன்றி உறவே.

On 3/28/2020 at 3:14 PM, nilmini said:

உங்களிடம் PayPal account இருந்தால் எனது பங்களிப்பை அனுப்பி விடுகிறேன். நான் கடந்த 8 வருடங்களாக ஒரு அநாதை இல்லா சிறுமிகளுக்கு உதவி வழங்கி கொண்டிருக்கிறேன். என்னால் முடிந்ததை அனுப்புகிறேன் 

வணக்கம் நில்மினி,
பேபால் வசதி இடைநிறுத்தப்பட்டுள்ளது. அதனால்  வங்கியிலக்கம் ஊடாக அனுப்ப வாய்ப்பு உள்ளதா அறியத்தாருங்கள். மீதி விபரம் தனிமடலில் அல்லது whatsappஅனுப்பி வைக்கிறேன்.

Edited by shanthy

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சித்த ஆயுர்வேதம் மட்டக்களப்பு அறிமுகம். 2019ம் ஆண்டு பதிவுசெய்யப்பட்ட காணொளி இது.

https://youtu.be/QVNlnqtfz90

https://youtu.be/QVNlnqtfz90

 

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, shanthy said:

வணக்கம் பையா, நீங்கள் அனுப்பிய உதவி 52450ஆயிரம் ரூபா கிடைத்தது. உங்கள் உதவியின் மூலமான முன்னேற்ற அறிக்கை திட்ட முன்னெடுப்பின் ஒழுங்கில் அறியத்தரப்படும். நன்றி உறவே.

வணக்கம் நில்மினி,
பேபால் வசதி இடைநிறுத்தப்பட்டுள்ளது. அதனால்  வங்கியிலக்கம் ஊடாக அனுப்ப வாய்ப்பு உள்ளதா அறியத்தாருங்கள். மீதி விபரம் தனிமடலில் அல்லது whatsappஅனுப்பி வைக்கிறேன்.

xoom.com மூலமாக வங்கிக்கு அனுப்பலாம் என்று நினைக்கிறேன் சாந்தி . whatsApp க்கு விபரத்தை அனுப்பவும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.