Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிலவிற்கு மனிதன் ஏன் மீண்டும் செல்லவில்லை/Why Haven't humans Gone Back to the Moon?/science in tamil

Featured Replies

ஆம்ஸ்ட்ராங்குடன் சென்ற சக நிலவுப் பயணியான அல்ட்ரின் கொடுத்த பேட்டிகள் அனைத்தும் அதிர்ச்சி வகையைச் சேர்ந்தவை. சந்திரப் பயணத்தை முடித்துக் கொண்டு, ஆம்ஸ்ட்ராங், அல்ட்ரின், காலின்ஸ் ஆகிய மூவரும் சந்திரனை விட்டுப் புறப்பட்டுப் பூமியை நோக்கி விண்கலத்தில் வந்து கொண்டிருக்கையில், அல்ட்ரின் கலத்துக்கு வெளியே விண்வெளியில் ஒரு வினோதமான பொருளைக் கண்டார். அல்ட்ரின் தனது படப்பிடிப்புக் கருவியினால் விண்கலத்தின் ஜன்னலினூடாக வெளியே படம் பிடித்துக் கொண்டு வரும் போது, திடீரென இன்னுமொரு விண்கலம் போன்ற ஒன்றைக் கண்டார். சூரிய ஒளியில் தகதகத்துக் கொண்டு, நீண்ட குழாய் வடிவ விண்கலம் ஒன்று இவர்களின் விண்கலத்தை அவதானித்தபடியே தொடர்ந்து வருவதைக் கண்டு பயந்து போனார். உடனடியாகத் தன் சக பயணிகளான ஆம்ஸ்ட்ராங்கிடமும், காலின்ஸிடமும் அதைக் காட்டினார். மூவரும் ஆச்சரியத்தின் எல்லைக்கே சென்றார்கள். அத்துடன் பயமும் அவர்களைப் பற்றிக் கொண்டது. விண்கலங்களில் செல்பவர்கள் தங்களுக்குள் உரையாடும் போதும், நாசாக் கட்டுப்பாட்டு நிலையத்துடன் உரையாடும் போதும் ஒரு விதியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது நியதி. இது போன்ற சிக்கலான சமயங்களில் வெளிப்படையாக அவர்கள் தங்களுக்குள் உரையாடிவிட முடியாது. காரணம் இந்த உரையாடல்களை ரஷ்யா உட்படப் பலரும் கிரகித்துக் கொள்ளலாம். எனவே பேசுபவை அனைத்தும் அவதானமாகப் பேசப்பட வேண்டும். அத்துடன் இது போன்ற சிக்கலான சமயங்களில் சங்கேதமான மொழியில் பேசவேண்டும். அல்லது மௌனமாக இருந்துவிட வேண்டும். இந்தச் சமயத்தில் அல்ட்ரின், ஹூஸ்டன் கட்டுப்பாட்டு நிலையத்திடம் ஒரு கேள்வியைக் கேட்டார். "ஹூஸ்டன், S4B இப்போது எங்கே இருக்கிறது? (‘where was the S4B?)" என்பதே அந்தக் கேள்வி. இரத்தினச் சுருக்கமாகக் கேட்கப்பட்ட ஒரு கேள்வி அது. அதற்கு "6000 நாட்டிகல் மைல்களுக்கு அப்பால் அது இருக்கிறது" என்னும் பதில் ஹூஸ்டனிடமிருந்து கிடைத்தது. 'S4B' என்பது இவர்கள் பயணம் செய்த ராக்கெட்டிலிருந்து பிரிந்து விழுந்த பகுதியாகும். 'அப்படி வெடித்துப் பிரிந்து போன பகுதியைத்தான், தாங்கள் ஜன்னலினூடாகக் காண்கிறோமோ?' என்ற சந்தேகம் அல்ட்ரினுக்குத் தோன்றியதால், அதை நிவர்த்தி செய்வதற்காகவே அந்தக் கேள்வியைக் கேட்டிருந்தார்.

ஆனால், அந்தப் பிரிந்து விழுந்த பகுதியைத் தாங்கள் காணவில்லை என்ற விடயம் கட்டுப்பாட்டு நிலையத்தின் பதிலால் மூவருக்கும் நிச்சயமாகத் தெரிந்து போனது. காலின்ஸ், தொலைநோக்கியால் அந்தப் பொருளைப் பார்த்த போது, அது வேறு வடிவத்தில் இருந்திருக்கிறது. அதனால், உடனடியாக மூவரும், விழித்திருந்தால் அது பற்றிப் பேச வேண்டியிருக்கும், பேசினால் அவை பதிவு செய்யப்படும் என்பதால் மூவரும் தூங்கச் சென்று விட்டார்கள். இந்தச் சம்பவத்தில், அந்த மூவருமே அது ஒரு UFO (Unidentified Flying Object) தான் என்ற முடிவுக்கே வந்திருந்தனர். அல்ட்ரின் எடுத்த படப்பிடிப்புக் கருவியில் அது பதிவாகியுமிருந்தது. இந்தச் சம்பவத்தை பல பேட்டிகளில் தெளிவாக அல்ட்ரின் விவரித்துள்ளார். சமீபத்தில் லாரி கிங் (Larry King) அவர்களுக்குக் கொடுத்த ஒரு பேட்டியில் மட்டும், தான் பார்த்தது அந்த உடைந்த பகுதியாக இருக்கலாம் எனக் கூறினார்.

 

 

     சந்திரனில் தாங்கள் இருவரும் மட்டுமல்லாமல், வேறு யாரோ கூட இருப்பது போல உணர்ந்ததாகவும் அல்ட்ரின் தனது பேட்டிகளில் சொல்லியிருக்கிறார். 'ஏலியன்கள் நிச்சயம் இருக்கின்றன' என்று அவர் சொல்வதற்குத் தயங்கியதேயில்லை. அல்ட்ரினைப் போல வெளிப்படையாக ஆம்ஸ்ட்ராங் எப்போதும் பேசியதில்லை. ஆனால், தான் கண்ட அனைத்தையும் ஆம்ஸ்ட்ராங்கும் கண்டார் என்பதை அல்ட்ரின் உறுதிப்படுத்தினார். 'ஆம்ஸ்ட்ராங் இரண்டு பறக்கும் தட்டுகளைச் சந்திரனில் கண்டதாகவும், அவை தங்களை எப்போதும் அவதானித்துக் கொண்டிருப்பதாகவும்' தன்னிடம் கூறியதாக, நாசாவில் முக்கிய பதவி வகித்த 'மௌரிஸ் ஷட்டலின்' (Maurice Chatelain) என்பவர் 1979ம் ஆண்டுகளில் பேட்டியளித்தார். ஆம்ஸ்ட்ராங். 'இரண்டு பறக்கும் தட்டுகள் தங்களை அவதானிப்பதாகச் சொன்னதை' ரஷ்யாவும் கேட்டுக் கொண்டிருந்ததாகப் பின்னர் ரஷ்ய விஞ்ஞானிகளால் தெரிவிக்கப்பட்டது. இவையெல்லாம் உண்மையாக இருக்கும் பட்சத்தில், என்ன முடிவுக்கு நாம் வருவதென்றே தெரியவில்லை.

 இத்துடன்  விடயம் முடிந்து விடவில்லை. 'அப்போலோ 14' விண்கலத்தில் சந்திரனுக்குப் பயணம் செய்த விண்வெளி வீரரான 'எட்கார் மிட்செல்' (Edgar Mitchell) ஏலியன்கள் இருக்கின்றன என்று அடித்துச் சொல்கிறார். சந்திரனில் அதிக நேரம் 'சந்திர நடை' (Moon Walk) நடந்தவர் என்ற சாதனையைப் படைத்தவர் இவர். 9 மணி 17 நிமிடங்கள் இவர் மொத்தமாக சந்திரனில் நடந்திருக்கிறார். அந்த அளவுக்குச் சாதனை செய்தவரே ஏலியன்கள் இருக்கின்றன என்று அடித்துக்கூறியிருக்கின்றார் ஏலியன் சம்பவங்கள் இவர்களுடன் மட்டும் முடிந்துவிடவில்லை. உச்சக்கட்டமாக 'அப்போலோ 17' சென்றவர்கள் சந்திரனில் இறங்கி அங்கு ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த போது, வானத்தில் திடீரென ஒளியை உமிழ்ந்தபடி மிகை வேகத்துடன், ஒரு பொருள் தங்களைக் கடந்து செல்வதை அவதானித்திருக்கிறார்கள். முதலில் பார்த்தவர், பெரும் திகைப்புடன், "அங்கே பார்! அந்த ஒளி என்ன?" என்று அடுத்தவரிடம் அலறுவது படக்காட்சிகளாகப் பதிவாகியுள்ளது. 'அப்போலோ 17' விண்கலத்தில் சென்றவர்கள் பல சம்பவங்களை அவதானித்துள்ளனர் என்று இதிலிருந்து தெரிய வருகிறது. அதே 'அப்போலோ 17' இல் சென்றவர்கள் எடுத்ததாகச் சொல்லும் படம்தான் இப்போது பரபரப்பாகவும் பேசப்பட்டு வருகிறது.

ஏன் மனிதன் மீண்டும் நிலவுக்கு செல்லவில்லை மிரளவைக்கும் உண்மைகள்

  • கருத்துக்கள உறவுகள்
On 4/1/2020 at 5:56 AM, selfywalking said:

ஆம்ஸ்ட்ராங். 'இரண்டு பறக்கும் தட்டுகள் தங்களை அவதானிப்பதாகச் சொன்னதை' ரஷ்யாவும் கேட்டுக் கொண்டிருந்ததாகப் பின்னர் ரஷ்ய விஞ்ஞானிகளால் தெரிவிக்கப்பட்டது. இவையெல்லாம் உண்மையாக இருக்கும் பட்சத்தில், என்ன முடிவுக்கு நாம் வருவதென்றே தெரியவில்லை.

நிலவிற்கு சென்று வந்த பலரும்...   ஏலியன்கள் இருப்பதை கண்ட போது,
நாமும் நம்பித்தான் ஆகவேண்டும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.