Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வுகான் ஆய்வு கூடத்தில் வெளவால்களில் இருந்து வைரஸ் குறித்து ஆராய்ச்சிகள் இடம்பெறுகின்றன- 2018 இல் அமெரிக்க தூதரகம் எச்சரித்தது- வோசிங்டன் போஸ்ட் செய்தி

Featured Replies

கொரோன வைரஸ் எவ்வாறு பரவியது என்பது குறித்த பல கதைகளின் மையமாக உள்ள வுகானின் ஆய்வுகூடம் குறித்து இரண்டு வருடங்களின் முன்னரே அமெரிக்க இராஜாங்க திணைக்களத்திற்கு பல எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன என வோசிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.

whuhan_lab.jpg


2018 ஜனவரியில் சீனாவிற்கான அமெரிக்க தூதரக அதிகாரிகள் வுகானின் வைரஸ் தொடர்பான நிறுவகத்தின் ஆய்வுகூடத்தின் பாதுகாப்பின்மை குறித்து எச்சரித்துள்ளனர் என வோசிங்டன் போஸ்ட் குறிப்பிட்டு;;;ள்ளது.

வெளவால்களில் இருந்து கொரோனா வைரஸ் குறித்த ஆபத்தான ஆராய்ச்சிகள் இடம்பெறுகின்றன என அமெரிக்க தூதரக அதிகாரிகள் எச்சரித்தனர் என வோசிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.

அமெரிக்க தூதரகத்தின் முதலாவது எச்சரிக்கையில் வெளவால்களிற்கும் வைரசிற்கும் இடையிலான தொடர்பு குறித்த ஆராய்ச்சி குறித்தும், குறிப்பாக மனிதர்களிற்கு பரவக்கூடிய ஆபத்து குறித்தும், சார்ஸ் குறித்த புதிய வைரஸ் ஆபத்து குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் இது குறித்த ஆவணம் தனக்கு கிடைத்துள்ளதாகவும் வோசிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.

whuhan_lab_3.jpg


குறிப்பிட்ட ஆய்வு கூடத்தின் விஞ்ஞானிகளுடான உரையாடல்களின் போது, புதிய ஆய்வுகூடத்தில் உரிய முறையில் பயிற்றுவிக்கப்பட்ட தொழில்நுட்பவியலாளர்கள் போதியளவிற்கு இல்லை என குறிப்பிட்டனர் என சீனாவிற்கான அமெரிக்க தூதரகத்தின் சூழல் மற்றும்நோய்கள் குறித்த நிபுணர்கள் 2018 இல் தகவல்அனுப்பியுள்ளனர் என வோசிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.

whuhan_lab_main.jpg

 


வுகானில் வெளவாலிற்கும் கொரேனாவைரசிற்கும் இடையிலான தொடர்புகள் குறித்த ஆராய்ச்சிகள் இடம்பெறுகின்றன இது ஆபத்தானது என்பதால் வுகான் ஆய்வுகூடத்தில் உள்ள சீன ஆராய்;ச்சியாளர்களிற்கு அமெரிக்கா ஆதரவை வழங்கவேண்டும் என அவ்வேளை தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது என வோசிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.

சீனாவிற்கான அமெரிக்க தூதரக அதிகாரிகள் சீனாவின் பிரபல வெளவால் ஆராய்;ச்சியாளர் ஜி ஜெங்கிலி குறித்தும் 2018 இல் சுட்டிக்காட்டியுள்ளனர்.
 வெளவாலிருந்து பரவக்கூடிய சார்ஸ் போன்ற கொரோனா வைரஸ் மனிதர்களிற்கு தொற்றி சார்ஸ் போன்ற நோய்களை உருவாக்கலாம் எனவும் அமெரிக்க தூதரக அதிகாரிகள் எச்சரித்திருந்தனர் என வோசிங்டன் போஸ்ட் குறிப்பிட்டுள்ளது.

us_embassy_china.jpg


இதன் காரணமாக வெளவால்களில் உள்ள சார்ஸ் போன்ற வைரசினை தொடர்ந்து கண்காணக்கவேண்டியதும் விலங்குகளில் இருந்து மனிதர்களிற்கு பரவுவது குறித்து ஆராய்வதும் எதிர்காலத்தில் உருவாககூடிய கொரோனா வைரஸ் பாதிப்பினை தடுப்பதற்கும் தவிர்ப்பதற்கும் அவசியமானது என சீனாவிற்கான அமெரிக்க தூதரக அதிகாரிகள் எச்சரித்திருந்தனர் என வோசிங்டன் போஸ்ட் குறிப்பிட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/79976

  • தொடங்கியவர்

கொரோனா குடும்பத்திலிந்து புதிதாக வைரஸ்கள்?

கொவிட் 19 எனும் உயிர்க்கொல்லி வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த மேலும் ஆறு வகையான வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

மியன்மார் நாட்டைச் சேர்ந்த வௌவால்கள் மூலம் இந்தப் புதிய வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாகவும் இவை, மியன்மாரிலுள்ள 3 வகையான வௌவால்களிடமிருந்து அடையாளம் காணப்பட்டுள்ளன என்றும், விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

இந்தப் புதிய வைரஸ்கள், கொவிட் 19 உள்ளடங்கிய SARS-CoV-2 குடும்பத்தைச் சேர்ந்தவை என்றும் இவை, உலகம் முழுவதும் தற்போது பரவி வருகின்ற கொரோனா வைரஸுடன், மரபணு ரீதியில் தொடர்புபடாதவை என்றும், விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வைரஸ்கள், விலங்குகள் ஊடாக மனிதர்களுக்கும் பரவக்கூடிய வாய்ப்புள்ளதா என்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/கரன-கடமபததலநத-பததக-வரஸகள/175-248637

  • கருத்துக்கள உறவுகள்

சீனா மட்டுமல்ல.. உலகில் பல்வேறு நாடுகளும் உயிர்தொழில்நுட்ப ரீதியில் மாற்றியமைக்கப்பட்ட கொரானா வைரசுகளை.. பல்வேறு ஆய்வுகளுக்குப் பயன்படுத்தியே வருகின்றனர். அதில் ஒன்று கடந்த பத்தாண்டுகளில் அதிக கவனத்துடன் வளர்ந்து வரும்.. ஜீன் தெரபி.. மற்றும் புற்றுநோய் கலங்களை தேடி அழிக்கும் ஆய்வுகள்.

கொரானா வைரஸ் இலகுவாக மனிதனின் கலங்களை இனங்கண்டு தாக்கும் தன்மை கொண்டதால்.. இவற்றை மரபணு மாற்றம் செய்து வேறு தேவைகளுக்குப் (காவிகளாக) பயன்படுத்தி வந்துள்ளனர்.

இதை சீனா மட்டும் தான் செய்கிறது என்றில்லை.

அப்படி மரபணு மாற்றம் செய்யப்பட்ட வைரஸ் ஏதோ ஒரு ஆய்வுசாலையில் இருந்து தற்செயலாக அல்லது வேண்டுமென்றே பிற சோதனைக்குரிய உயிரினங்கள் வாயிலாக.. அல்லது சோதனைக்கு உட்படுத்தப்பட்ட மனிதர்கள் வாயிலாக.. பரவ விடப்பட்டிருந்தால் கூட இந்த நிலைமை தோன்றி இருக்கலாம்.

Gene therapy is facing its biggest challenge yet

ஒரு உதாரணம்.

படம்: நேர்சர் அறிவியல் இதழ். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
Curr Top Microbiol Immunol. 2005;287:161-97.

Coronavirus reverse genetics and development of vectors for gene expression.

 

Abstract

Knowledge of coronavirus replication, transcription, and virus-host interaction has been recently improved by engineering of coronavirus infectious cDNAs. With the transmissible gastroenteritis virus (TGEV) genome the efficient (>40 microg per 106 cells) and stable (>20 passages) expression of the foreign genes has been shown. Knowledge of the transcription mechanism in coronaviruses has been significantly increased, making possible the fine regulation of foreign gene expression. A new family of vectors based on single coronavirus genomes, in which essential genes have been deleted, has emerged including replication-competent, propagation-deficient vectors. Vector biosafety is being increased by relocating the RNA packaging signal to the position previously occupied by deleted essential genes, to prevent the rescue of fully competent viruses that might arise from recombination events with wild-type field coronaviruses. The large cloning capacity of coronaviruses (>5 kb) and the possibility of engineering the tissue and species tropism to target expression to different organs and animal species, including humans, has increased the potential of coronaviruses as vectors for vaccine development and, possibly, gene therapy.

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
3 hours ago, nedukkalapoovan said:

கொரானா வைரஸ் இலகுவாக மனிதனின் கலங்களை இனங்கண்டு தாக்கும் தன்மை கொண்டதால்.. இவற்றை மரபணு மாற்றம் செய்து வேறு தேவைகளுக்குப் (காவிகளாக) பயன்படுத்தி வந்துள்ளனர்.

இதை சீனா மட்டும் தான் செய்கிறது என்றில்லை.

அப்படி மரபணு மாற்றம் செய்யப்பட்ட வைரஸ் ஏதோ ஒரு ஆய்வுசாலையில் இருந்து தற்செயலாக அல்லது வேண்டுமென்றே பிற சோதனைக்குரிய உயிரினங்கள் வாயிலாக.. அல்லது சோதனைக்கு உட்படுத்தப்பட்ட மனிதர்கள் வாயிலாக.. பரவ விடப்பட்டிருந்தால் கூட இந்த நிலைமை தோன்றி இருக்கலாம்.

ஒரு தனிப்பட்ட இனத்தின் மரபணுவை மட்டுமே தாக்கும் வழியில் ஒரு வைரசை வடிவமைப்பது சாத்தியமா?  

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ampanai said:

ஒரு தனிப்பட்ட இனத்தின் மரபணுவை மட்டுமே தாக்கும் வழியில் ஒரு வைரசை வடிவமைப்பது சாத்தியமா?  

தேவையெனில் சாத்தியப்படுத்தலாம்.

கொரானா வைரசுகளில் கொவிட்-19 கூட மரபணு பார்த்துத் தாக்குவதாக.. அதாவது.. குறைந்த.. மிதமான.. கூடிய நோய்த்தாக்கம் என்பது மரபணு சார்ந்தும் தீர்மானிக்கப்படுகிறதா என்ற ஒரு ஆய்வும் போய்க்கிட்டு இருக்குது. UK Biobank: DNA to unlock coronavirus secrets

மேலும் மிக நுட்பமாக தொற்றும் இயல்பை தரத்தக்க வைரசை உருவாக்க சாத்தியக் கூறு உள்ளது. அப்படி உருவானால்.. அது ஒரு குறிப்பிட்ட இனத்தில் காணப்படும் அந்தக் குறிப்பிட்ட இனத்திற்கான தனித்துவமான கல இயல்பை அடையாளம் கண்டு அதன் வழி தொற்றக் கூடிய வைரசை வடிவமைக்கலாம்.

இந்தக் கோவிட்-19 க்கு முதலே.. முழுவதுமாக  மனிதன் வடிவமைத்த ஒரு நுண்ணுயிரையை  உருவாக்கிவிட்டிருந்தார்கள். World’s first living organism with fully redesigned DNA created

'Artificial life' breakthrough announced by scientists

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.