Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மிருசுவில் படுகொலையாளிக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு விலக்கப்பட வேண்டும் - சர்வதேச மன்னிப்பு சபை ஜனாதிபதிக்கு மகஜர்

Featured Replies

(நா.தனுஜா)

மிருசுவில் படுகொலை வழக்கின் குற்றவாளியான சுனில் ரத்நாயக்கவைப் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை நீக்கிக்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி சர்வதேச மன்னிப்புச்சபைஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை அனுப்பிவைக்கவுள்ளது.

அது குறித்த விபரங்களைத் தமது உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்திருக்கும் மன்னிப்புச்சபை, குறித்த மகஜரில் கையெழுத்திட்டு, ஆதரவை வெளிக்காட்டுமாறு பொதுமக்களிடம்கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து மன்னிப்புச்சபை மேலும் கூறியிருப்பதாவது:
யாழ்.மிருசுவிலில் கடந்த 2000 ஆம் ஆண்டு 5 வயது சிறுவன் உள்ளிட்ட 8 தமிழர்களைப் படுகொலை செய்த வழக்கில் குற்றவாளியென நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்ட முன்னாள் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க கடந்த மார்ச் மாதம் 26 ஆம் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவினால் மன்னிப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.

இவ்வழக்கில் சுமார் 13 வருடகாலவிசாரணைகளின் பின்னர் கடந்த 2015 ஆம் ஆண்டு கொழும்பு மேல்நீதிமன்றம் சுனில் ரத்நாயக்கவைக் குற்றவாளியெனத் தீர்ப்பளித்தது. எனினும் சுனில் ரத்நாயக்க இதுகுறித்து மேன்முறையீடு செய்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு மீண்டும் உயர்நீதிமன்றத்தினால் இத்தீர்ப்பு உறுதிப்பட்டுத்தப்பட்டது.

எந்தவொரு சட்டத்தின் பிரகாரமும் மரணதண்டனை நிறைவேற்றப்படுவதை நாம் முற்றாக எதிர்க்கின்ற போதிலும் போர்க்கால படுகொலை குற்றவாளியொருவரை பூரணமாக விடுதலை செய்வதற்கு இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.

ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்டுள்ள இத்தீர்மானம் மனித உரிமை மீறல்கள் தொடர்பான சர்வதேச சட்டங்களையும் இலங்கையினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளையும் மீறுவதாக அமைந்துள்ளது.

எனவே சுனில் ரத்நாயக்கவை மன்னிப்பு வழங்கி விடுதலை செய்வதற்கு மேற்கொண்ட தீர்மானத்தை உடனடியாகநீக்கிக்கொள்வதுடன் மிருசுவில் படுகொலைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்குமான நீதி நிலைநாட்டப்படுவதை உறுதி செய்யவேண்டும் என்றும் வலியுறுத்துகின்றோம்.

https://www.virakesari.lk/article/80172

Just now, ampanai said:

அது குறித்த விபரங்களைத் தமது உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்திருக்கும் மன்னிப்புச்சபை, குறித்த மகஜரில் கையெழுத்திட்டு, ஆதரவை வெளிக்காட்டுமாறு பொதுமக்களிடம்கோரிக்கை விடுத்துள்ளது.

https://www.amnesty.org/en/get-involved/take-action/sri-lanka-demand-justice-for-mirusuvil-massacre-victims/

  • தொடங்கியவர்

கைநாட்டை போட்டு விட்டேன் !

இந்தப்பக்கம் கொஞ்சம் கூடுதலாக கொடுத்தால் இவர்களது அறிக்கை வேறு மாதிரி இருக்கும்। இன்னும் இவர்களை எல்லாம் நம்புவதை பார்க்கும்போது பரிதாபமாக இருக்குது। பாவம் தமிழ் மக்கள்।

  • தொடங்கியவர்
4 minutes ago, Vankalayan said:

இந்தப்பக்கம் கொஞ்சம் கூடுதலாக கொடுத்தால் இவர்களது அறிக்கை வேறு மாதிரி இருக்கும்। இன்னும் இவர்களை எல்லாம் நம்புவதை பார்க்கும்போது பரிதாபமாக இருக்குது। பாவம் தமிழ் மக்கள்।

பாவப்படுவதையும் பரிதாபப்படுவதையும் கையால் ஆகாதவன் மட்டுமே சொல்லுவான்... செய்வான்.

ஒரு முயற்சி தானே. நம்பிக்கை வையுங்கள். 

14 minutes ago, ampanai said:

பாவப்படுவதையும் பரிதாபப்படுவதையும் கையால் ஆகாதவன் மட்டுமே சொல்லுவான்... செய்வான்.

ஒரு முயற்சி தானே. நம்பிக்கை வையுங்கள். 

அறுபது , எழுபது வருடமாக தமிழன் இதைத்தானே சொல்லுறான்।

38 minutes ago, ampanai said:

ஒரு முயற்சி தானே. நம்பிக்கை வையுங்கள். 

முயற்சி திருவினை ஆக்கும், முயற்சியின்மை
இன்மை புகுத்திவிடும்!

  • தொடங்கியவர்
21 hours ago, Vankalayan said:

அறுபது , எழுபது வருடமாக தமிழன் இதைத்தானே சொல்லுறான்।

இல்லை.

எமது இனம் ஐ.நா.வின் சுயநிர்ணய உரிமை சாசனத்தின் அடிப்படையின் கீழ் சாத்வீகமாகவும், 1977 ஆம் ஆண்டு பொது தேர்தலை ஒரு அங்கீகர வாக்கெடுப்பாகவும், ஆயுதப்போராட்டமும் நடத்தியவர்கள். 

1 hour ago, ampanai said:

இல்லை.

எமது இனம் ஐ.நா.வின் சுயநிர்ணய உரிமை சாசனத்தின் அடிப்படையின் கீழ் சாத்வீகமாகவும், 1977 ஆம் ஆண்டு பொது தேர்தலை ஒரு அங்கீகர வாக்கெடுப்பாகவும், ஆயுதப்போராட்டமும் நடத்தியவர்கள். 

மக்களுக்கு எதாவது நன்மை கிடைத்ததா? எதாவது இனியாவது கிடைக்குமா?

இவர்கள் எப்போது உங்கள் ஈழத்தின் தலை நகராக திருகோணமலையை அறிவித்தார்களோ , அப்போது தொடங்கிய சிங்கள குடியற்றம் இன்னும் தொடர்கிறது। இப்போது அந்த மாவடடமே அவர்கள் கைகளில்। இதைவிட வேறு என்ன நன்மையை தமிழர்களுக்கு கொடுத்தார்கள்।

உங்கள் முயட்சி தொடரட்டும்। நம்பிக்கைதானே வாழ்கை। இருந்தாலும் கிறிஸ்தவர்கள் தமிழர்களுக்கு இரண்டாம்தர பிரஜையாக வடக்கு கிழக்கில் இருக்க மாடடார்கள்।

  • தொடங்கியவர்
1 minute ago, Vankalayan said:

போராடி தோற்றது வெட்கமில்லை. போராடாமல் வாழ்வது தான் வெட்கம். 

எந்த  இனத்தவரும் இன்னொருவருக்கு அடிமை இல்லாமல் வாழவேண்டும். அது சிங்கள நாட்டில் என்றுமே அமையாது.  

Just now, ampanai said:

போராடி தோற்றது வெட்கமில்லை. போராடாமல் வாழ்வது தான் வெட்கம். 

எந்த  இனத்தவரும் இன்னொருவருக்கு அடிமை இல்லாமல் வாழவேண்டும். அது சிங்கள நாட்டில் என்றுமே அமையாது.  

போராடுங்கள் , போராடுங்கள்। சங்கரி ஐயா சொன்னமாதிரி இங்குள்ள தமிழன் எல்லாம் பிச்சைக்காரனாக மற்றும் வரையும் போராடுங்கள்। இப்பவே 75 % பிச்சைக்காரர்கள்தான்।

சிங்களவனைப்பற்றி எழுதி இருந்தீர்கள்। அது தமிழனுக்கும் பொருந்தும்।

  • தொடங்கியவர்
2 minutes ago, Vankalayan said:

சரி, சுதந்திர சிங்கள மக்களும் தானே பிச்சைக்காரர்கள்? 

On 19/4/2020 at 07:45, ampanai said:

சரி, சுதந்திர சிங்கள மக்களும் தானே பிச்சைக்காரர்கள்? 

சிங்களவன் பிச்சைக்காரரனாக இருந்தாலும் தமிழனிடம் கையேந்துவதில்லை। தமிழன்  --------------

  • தொடங்கியவர்
6 minutes ago, Vankalayan said:

சிங்களவன் பிச்சைக்காரரனாக இருந்தாலும் தமிழனிடம் கையேந்துவதில்லை। தமிழன்  --------------

ஆம், சரியாக சொன்னீர்கள். அவன் கொள்ளையடிப்பான், தட்டிப்பறிப்பான், வெருட்டி பறிப்பான்  தமிழன் உழைத்து வாழ்பவன் 

23 hours ago, ampanai said:

நிச்சயமாக சிங்களவன் பிச்சை எடுக்க மாடடான்।

  • தொடங்கியவர்
1 minute ago, Vankalayan said:

நிச்சயமாக சிங்களவன் பிச்சை எடுக்க மாடடான்।

எடுத்து கொண்டு இருக்கிறானே ? 

1948 இல் சிங்கப்பூர் பார்த்து வியந்தது. இன்று, நாட்டை சீனாவிற்கு விற்றும், பல இலட்சம் தலைக்கு கடனையும் வைத்து மக்களை மத்திய கிழக்கில் வீட்டு பராமரிப்பிற்கு அனுப்புவது பிச்சைதானே ?  

6 minutes ago, ampanai said:

எடுத்து கொண்டு இருக்கிறானே ? 

1948 இல் சிங்கப்பூர் பார்த்து வியந்தது. இன்று, நாட்டை சீனாவிற்கு விற்றும், பல இலட்சம் தலைக்கு கடனையும் வைத்து மக்களை மத்திய கிழக்கில் வீட்டு பராமரிப்பிற்கு அனுப்புவது பிச்சைதானே ?  

எல்லா நாடும்தான் அந்த பிச்சை எடுக்குது। IMF , World Bank , ADB போன்றவை கடன் வழங்கும் நிறுவனங்கள்। இவைகள் கடனே ஒழிய பிச்சைகள் இல்லை। இவை திருப்பி செலுத்தப்பட வேண்டும்। உலகில் 90 % மான நாடுகள் கடன் வாங்குகின்றது। இவர்கள் சரியான முகைத்துவம் செய்திருந்தால் இந்த கடன் பிரச்சினையில் இருந்தும் தப்பிக்கலாம்। முக்கியமாக FDI (Foreign  Direct  Investment ) ஐ சரியாக ஊக்குவித்திருந்தால் இந்த கடனும் பெரிதாக தேவைப்பட்டிருக்காது। எனவே இது பிச்சை இல்லை கடன்। பிச்சைக்காரனுக்குபோடட பிச்சை திரும்பி கொடுக்க வேண்டிய அவசியமில்லை।

ஆனால், சுதந்தர நாட்டை இந்தியா, அமெரிக்கா  மற்றும் சீன போன்ற நாடுகளுக்கு கொடுத்து, ஊழல் ஊடாக அடுத்த தலைமுறைகளை கடன் காரர் ஆக்குவது ஒரு வித நவீன பொருளாதார அடிமைத்தனம். அந்தந்த நாடுகளுக்கு உழைத்து கொடுப்பதும் நவீன பிச்சைகாரத்தனம். 

ஏன் சிங்கப்பூர் தென்கொரியா கடன் இல்லாமல் வளர்ந்து நிற்கின்றன, ஆனால் சிங்களத்தால் முடியவில்லை?

சதி, நல்ல கடன்களும் கூடாத கடன்களும் உள்ளன.  சிங்களம் பல கூடாத கடன்களை எடுத்தும் சில நல்ல கடன்களையும் எடுத்துள்ளது. 

47இல் சுதந்திரம் இந்தியா என்ற நாடு  உருவானது. அனால், அன்று பின்தங்கி இருந்த இந்தியா உலகில் பல தொழில்நுட்ப அறிவியலாளர்களை உருவாக்க, சிங்களம் வேலைவாய்ப்பிற்கு , ஜப்பான் , தென்கொரியா ...அனுப்பி சம்பாதிப்பதில் குறியாக உள்ளது. அதுவும் பிச்சைக்கு ஆட்களை அனுப்பவது தான். 

சரி, சிங்கள நாட்டில் எத்தை வீதம் வறுமைக்கோட்டிற்கு கீழே வாழுகின்றது? 
இந்த வீதம் அதிகரிக்கின்றதா இல்லை குறைகின்றதா?  

தமிழர்களுடன் ஒப்பிடும்போது சிங்களவர்கள் புறக்கணிக்க தக்க அளவுதான் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கிறார்கள்।

இலங்கையின் அரசியல்வாதிகள் நாடடை குட்டிசுவர்க்கியது உண்மை। அதைப்பற்றி நிறைய எழுதலாம்। மற்றைய நாடுகளுடன் ஒப்பிட்டுக்கொண்டு இருந்த காலம் இனி வராது।

உங்களுக்கு தெரியும் viyathkama எனும் ஒரு அமைப்பு இயங்குகிறது । இது புத்திஜீவிகளை (Intellectuals ) கொண்ட ஒரு அமைப்பு। இனி இங்குதான் தீர்மானங்கள் எடுக்கப்படும்। அரசியல்வாதிகள் அல்ல। நூறு வீதம் இல்லாவிடடாலும் எண்பது சத வீத தீர்மானங்கள் இங்குதான் எடுக்கப்பட இருக்கிறது।

எனவே ஒரு வித்தியாசமான திடடமிடல்களை காணலாம்। கொரோனாவின் பின்னர் உலக பொருளாதாரமே தலைகீழாகிவிட்ட்து। எனவே புதிய திடடமிடல் அவசியமாகிறது। பின்னர் இந்த செயல்படுகளை எழுதலாம்।

  • தொடங்கியவர்
1 minute ago, Vankalayan said:

தமிழர்களுடன் ஒப்பிடும்போது சிங்களவர்கள் புறக்கணிக்க தக்க அளவுதான் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கிறார்கள்।

ஆதாரம் ?  

எமது மக்களின் மத்தியில் வறுமை உள்ளது. அந்த வறுமைக்கு காரணம் சிங்களம், அவர்களின் இராணுவ, அரசியல், பொருளாதார அடக்குமுறை  

2 minutes ago, ampanai said:

ஆதாரம் ?  

எமது மக்களின் மத்தியில் வறுமை உள்ளது. அந்த வறுமைக்கு காரணம் சிங்களம், அவர்களின் இராணுவ, அரசியல், பொருளாதார அடக்குமுறை  

Just now, ampanai said:

ஆதாரம் ?  

எமது மக்களின் மத்தியில் வறுமை உள்ளது. அந்த வறுமைக்கு காரணம் சிங்களம், அவர்களின் இராணுவ, அரசியல், பொருளாதார அடக்குமுறை  

 கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையா?

நீங்கள் இடட பதிவிலேயே தெரியுது தென்பகுதியில் வேலைக்கு கூட வடக்கிலிருந்து ஆட்களை கொண்டுபோவதாக। அப்படி என்றால்  ---------------------

  • தொடங்கியவர்
2 minutes ago, Vankalayan said:

 கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையா?

நீங்கள் இடட பதிவிலேயே தெரியுது தென்பகுதியில் வேலைக்கு கூட வடக்கிலிருந்து ஆட்களை கொண்டுபோவதாக। அப்படி என்றால்  ---------------------

1972இல் கல்வி தராதர படுத்தல் கொண்டு வந்தமை ஏன் ?

கலவரங்கள் மூலம் தமிழர்களை அவர்களின் பொருளாதாரத்தை சிதைத்தது ஏன் ?

மலையை மக்களை வேலைக்கு ஏற்ற ஊதியம் தராமல் அடிமைகளாக வைத்திருப்பது ஏன் ?

எமது மக்கள் வடக்கில் சொந்த நிலத்திலும், கடலிலும் வேலை செய்ய முடியாமல் தடுக்கப்படுவதாயும் 40000 இராணுவம் மையம் கொண்டு பயமுறுத்துவதாலும், சிங்கள இராணுவம் வட-கிழக்கில் பொருளாதாரத்தை கட்டுப்படுத்துவத்துவதாலும் மக்கள் வேறு வழி இல்லாமல் கொழும்பு செல்கிறார்கள். 

  • தொடங்கியவர்
8 minutes ago, Vankalayan said:

 கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையா?

நீங்கள் இடட பதிவிலேயே தெரியுது தென்பகுதியில் வேலைக்கு கூட வடக்கிலிருந்து ஆட்களை கொண்டுபோவதாக। அப்படி என்றால்  ---------------------

உலககெங்கும் சிங்கள அடக்குமுறை காரணமாக புலம்பெயர்ந்த தமிழர்கள் எவ்வாறு பொருளாதார ரீதியாக ஒப்பீட்டளவில் உயர்ந்த நிலையில் உள்ளனர்??

புரியாத மொழி, தெரியாக சூழல் - இந்த நாடுகளிலே முதலாம் தலைமுறை தமிழர்கள் ஏன் வறுமையாக இல்லை ? ஆனால், சிறிலங்காவில் ?? 

சரி, சிங்கள இனவாத அரசியல் தொடங்க முன்னர் இல்லை 1948 மாசி 4ஆம் திகதி எமது உரிமைகளை ஒற்றையாட்ச்சி அரசியல் முறைக்கு இழக்க முன்னர் ஏன் எம் மத்தியில் ஒப்பீட்டளவில் வறுமை இருக்கவில்லை ?

22 hours ago, ampanai said:

வெளி நாடுகளில் தமிழர்கள் நல்ல வசதியாக , வளமான வாழ்கை வாழ்கிறார்கள் என்று எமக்கு தெரியும்। அதைப்பற்றி பேச விரும்பவில்லை।

ஏன் தமிழ் தலைமைகள் அதை (1948) பாதுகாத்துக்கொள்ளவில்லை। நடந்தவைப்பற்றி பேசுவதால் ஏதும் நடக்குமென்றால் நடக்கட்டும்।

இப்போது இருக்கும் அதிகாரமில்லாத மாகாண சபையையாவது பாதுகாத்துக்கொள்ள முடியுமென்றால் அதுவே பெரிய காரியம்।

எனவே உங்களுக்கு வேண்டுமென்றால் சரித்திரத்தை மீண்டும் புரட்டி பாருங்கள்। எனக்கு அதைப்பற்றி விவாதிக்க அவசியமில்லை।

எதிர்காலத்தை கதைப்போம். சிங்களம் சிறுபான்மை இனங்களை, மதங்களை  அழித்து எதிர்கால சிங்கள சந்ததிகளையும் அழித்துக்கொண்டு உள்ளது. 

தற்போதைய இலங்கையின் தனிநபர் கடன் 468,613 ரூபாய்கள்.  இப்போது வந்திருக்கும் அரசாங்கம் இந்தத்தொகையை 10 இலட்சமாக வெகுவிரைவில் மாற்றும் என நம்புவோமாக.

என்ன கவலை என்றால், நாம் எமக்குள் அடிபட்டு இருப்பது சிலர் விரும்புவதே, 

கருத்தால் பிரிந்தாலும் தளத்தால் இணைந்திருப்போம்.

நன்றிகள். 

21 minutes ago, ampanai said:

உண்மையாகவே இங்கு கருத்து எழுதுபவர்களைவிட எனக்கு தமிழ்ப்பற்று அதிகம்। நான் பொதுவாக மற்றைய தளங்களில் தமிழை உயர்த்திய, தமிழர்களை உயர்த்திதான் எழுதுவேன்। இருந்தாலும் சில மதவாதிகள் செய்யும் தவறுக்காக எல்லா கிறிஸ்தவர்களையும் தாக்கி எழுதும்போது அது என்னை மிகவும் பாதித்ததுடன் நான் ஒரு தமிழன் அல்ல, கிறிஸ்தன் என்ற நிலைக்கு கொண்டு சென்றது। எனவே இங்கு எழுதுபவர்களின் நிலைமையை பொறுத்து சில வேளைகளில் மற்றம் ஏட்படலாம்। இருந்தாலும் இப்போது நாங்கள் ஒரு கிறிஸ்தவ (RC / Non  RC ) அமைப்பை உருவாக்கி கிறிஸ்தவ மக்களின் உரிமைக்காக பரிந்து பேச இருக்கிறோம்।  எனவே இப்போதைக்கு அப்படியே தொடருவோம்।    இருந்தாலும் உங்கள் கருத்துக்கள் , நடுநிலைமை என்னை கவர்ந்த ஒன்று। உங்களுக்கும் நன்றி , வணக்கம்।

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.