Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாட்டிக் கொண்ட சிறீலங்கா

Featured Replies

தப்புத் தாளங்கள்: மாட்டிக் கொண்ட சிறீலங்கா

கோவிட்-19 உருவாக்கியுள்ள பெரும் சவால்களை எதிர்கொள்ள அரசுகளும் அதன் தலைவர்களும் தமது தேவைக்கேற்றவாறு பலமுனை பரப்புரைகளை முன்னெடுத்து தமது மக்களை ஏய்க்கும் பல பணிகளை திரைமறைவில் முன்னெடுத்து வருகின்றன. அதில் சிறீலங்கா தலைமைகளுக்கும் எவ்வித விதிவிலக்கும் இல்லை. இதைத் தான் அவர்கள் எப்போதும் செய்கின்றனரே என்கிறீர்களா?

 சமீபத்தில் ஒரு கணணி வலையத்தில் வந்த செய்தி ஒன்று சிறீலங்காவில் மேற்கோள் காட்டப்பட்டு அறிவார்ந்த சமூகம் மத்தியில் பேசப்பட்டது. ஆனால் அதன் பின்புலத்தைத் தேடினால் வெளிநாட்டில் இருந்து வெளியாகும் நம்பிக்கையான சிறந்த இணையவெளி போன்ற மாயயையில் மறுபுறத்தில் சமீபத்தில் பதிவுசெய்யப்பட்டு ஆரம்பிக்கபட்டு சிறீலங்கா இராணுவ புலனாய்வுப் பிரிவின் பின்னணியில் வெளியான தகவல்களே அவை. இது குறித்து பின்னர் விரிவாகப் பார்ப்போம்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் இவ்வாறு மேலும் ஒரு பதிவு மேற்கோள் காட்டப்பட்டு கோவிட்-19 விடயத்தில் சிறப்பாக தொழிற்படும் நாடு என சிறீலங்கா உலகில் 9ஆவது இடத்தில் போட்ப்பட்டு அதற்காக கொழும்புத் தலமைகள் அதிகம் புகழப்பட்டு ஒரு செய்தி சிறீலங்காவிற்குள் பகிரப்பட்டிருந்துது. அது குறித்து தேடிய போது மீண்டும் இவ்வாறு காத்திரமில்லாத அதேவேளை உத்தியோகப்பற்றற்ற நம்பத்தன்மை குறைந்த தரவுகளும் பதிவுகளுமே ஆதாரமாக கிடைத்தன. அதுவும் அவுஸ்திரேலியாவில் உள்ள ஒரு தனிநபரின் ஆய்வே அதன் அடித்தளம். அது கூட அது குறித்த பகிர்வில் தெரிவிக்கப்படவில்லை. அவ்வாறாயின் ஏன் இந்த முயற்சி? இதற்கு பின்னால் ஏதோ ஒரு விடயம் பாதகமாக இருக்கிறது அதனால் அதை முன்கூட்டியே மூடி மறைக்க இந்த முயற்சி என்பது புலனானது. அதைத் தேடிய போது கிடைத்த புதையலே இது.

இன்று 17ஆம் நாள் வெள்ளிக்கிழமை கூட முன்னைய கதைக்கு வலுச்சேதர்க்கும் வகையில் மேலும் சோடிப்புகளுடன் அதேவேளை அவுஸ்திரேலிய விடயத்தை குறிப்பிட்டு ஒரு விரிவான கதையை கொழும்பின் டெய்லி மிறர் இன்றும் வெளியிட்டுள்ளது விந்தை தான். அக்கதையின் சில பகுதிகள் வருமாறு (SL performs well in fighting Coronavirus & ranked 9 in GRID Index. Sri Lanka and its leadership were ranked 9th in the Global Response to Infectious Diseases (GRID) Index which evaluates how efficient and effective the leadership of the country and the preparedness of its health system were in tackling COVID-19 pandemic.)

சரி விடயத்திற்கு வருவோம். டீப் நொலோஜ் குரூப் கோவிட்-19 என்ற ஆய்வுக்குழு உலகின் உத்தியோகபபூர்வ தகவல் மையங்களின் கோவிட்-19 குறித்த தரவுகளை தொகுத்து ஆய்விற்கு உட்படுத்தி அதுவும் 70 விடயதானங்களிலான தரவுகளையும் தகவல்களையும் கருத்தில் கொண்டு தனது கோவிட்-19 குறித்து ஆய்வுத்தகவல்களை 150 நாடுகளை கவனத்தில் கொண்டு வெளியிட்டு வருகின்றது. இவை குறித்து உலகில் மிகவும் மதிக்கப்படும் ஊடக வலையமைப்பான பிரசித்தி வாய்ந்த போப்ஸ் (Forbes) வெளியிட்ட கட்டுரையும் தகவல்களுமே என் கண்ணில் முதலில் பட்டன. அதன் அடிப்படையில் உலக ரீதியாவும் வட்டார ரீதியாகவும் அது கோவிட்;-19 குறித்த பல விடயங்களிலான நாடுகளின் நிலைகளை தரவரிசைப் பட்டியலாக அது வெளியிட்டு காலத்திற்கு காலம் ஏற்படும் மாற்றங்களின் அடிப்படையில் அதில் மாற்றங்களையும் செய்து வெளியிட்டு வருகிறது.

அதில் சிறீலங்கா குறித்த முக்கிய விடயத்திற்கு வருவோம். உலகில் கோவிட்-19 வியடத்தில் அதிக ஆபத்தை எதிர்கொள்ளும் நாடுகளாக 20 நாடுகள் அடையாளம் காணப்பட்டு அதிலுமான தரவரிசையில் அவர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர். அப்பட்டியல் வருமாறு. 1. இத்தாலி 2. அமெரிக்கா 3. இங்கிலாந்து 4. ஸ்பெயின் 5. பிரான்ஸ் 6. சுவீடன் 7. ஈரான் 8. ஈகுவடோர் 9. பிலிப்பைன்ஸ் 10. ரூமேனியா 11. நைஜீரியா 12. ரஸ்சியா 13. பங்களாதேஸ் 14. மெக்சிக்கோ 15. இந்தியா 16. சிறீலங்கா 17. இந்தோனேசியா 18. மயன்மார் 19. கம்போடியா 20 லாவோஸ்

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

இவ்விடயத்தை ஆழமாக தொடர்ந்தும் நோக்கி ஆய்விற்கு உட்படுத்தி வரும் எவருக்கும் இப்பட்டியல் எவ்வளவு தூரம் உண்மையை வெளிப்படுத்துகிறது என்பது புரியும். இதிலும் பட்டியலில் முன்வரிசையில் உள்ள நாடுகள் ஆபத்தான நிலையை பட்டவார்தனமான தற்போதே வெளிப்படுத்துகின்றன. பட்டியலில் கீழே உள்ள நாடுகள் அத்திசையில் பயணிக்கின்றன ஆனால் வெளிப்படையாக அந்நிலையை இன்னும் வெளிப்படுத்தவில்லை என்பதுவும் புலனாகும். இப்பட்டியலில் இணைந்து வேகமாக முன்னகரும் நிலையில் தற்போது பிரேசில் உண்டு.

;சரி இப்போது சொல்லுங்கள் கண்ணால் காண்பதுவும் காதால் கேட்பதுவும் எல்லாம் உண்மையா? அல்லது எப்போதும் தீரவிசாரித்து அறிவதே மெய்யா? 

- முகநூல் 

Ref http://www.dailymirror.lk/breaking_news/SL-performs-well-in-fighting-Coronavirus-ranked-9-in-GRID-Index/108-186696

https://www.dkv.global/covid

  • கருத்துக்கள உறவுகள்

எங்கை ஒருத்தரையும் கானவில்லை என்று பாத்தால் வந்திட்டினம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழ் ஊடகங்கள் என்பன  அநேகமானவை சொறிலங்காவின் பிடிக்குள்ளேயே உள்ளன சிங்கள ஊடகங்களும் உள்ளடங்கள் இது மே  18 பின் க்கு பின் சிங்கள அரசு முனைப்பாக செய்த வேலை முடிவு போருக்கு முந்தியே பலரை  ஊடக சம்பந்தப்பட்டவர்கள் போட்டுத்தள்ளியது அல்லது பக்குவமாய் நாட்டை விட்டு அகலும்படி  கேட்டுக்கொள்ளப்பட்டனர் . 

இந்தநேரம் அதன் உச்ச அறுவடையை அனுபவிக்கினம் கோத்தாவின் பிம்பம் பலரை பயத்தில் வேலை வாங்கும் ஒன்றாகியுள்ளது கடந்த நல்லாட்சி அரசில் நடந்த விபத்துகளில் கொல்லப்பட்டவர்களில் பத்தில்  நான்குக்கு மேற்பட்டவர்கள் அரசுக்கு வேண்டப்படாதவர்கள் ஆனால் எந்த தமிழ் ஊடகமும் அந்த விடயங்களை துணிந்து  வெளியிட முன்வரவில்லை . இப்போ கோத்தாவை மக்கள் மனதில் எல்லாம்வல்லவராக காட்டுவதுக்கு  முனைப்பு எடுக்கினம் காலம் பதில் சொல்லும் .

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பெருமாள் said:

பெருமாள் ,இப்ப என்ன சொல்ல வாறீங்கள்? ...இலங்கை கொரோனாவை ஒழிப்பதில் பின் தங்கியுள்ளதா?

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, ரதி said:

பெருமாள் ,இப்ப என்ன சொல்ல வாறீங்கள்? ...இலங்கை கொரோனாவை ஒழிப்பதில் பின் தங்கியுள்ளதா?

COVID-19 தொற்றுநோயைக் கையாள்வதில் நாட்டின் தலைமை மற்றும் அதன் சுகாதார அமைப்பின் தயார்நிலை எவ்வளவு திறமையான மற்றும் பயனுள்ளவை என்பதை மதிப்பிடும் தொற்று நோய்களுக்கான உலகளாவிய பதில் (GRID) குறியீட்டில் இலங்கையும் அதன் தலைமையும் 9 வது இடத்தைப் பிடித்தன.

ஆஸ்திரேலியாவின் சான்றளிக்கப்பட்ட மேலாண்மை கணக்காளர்கள் நிறுவனம் (ஐ.சி.எம்.ஏ) தொற்று நோய்களுக்கான உலகளாவிய பதிலை (ஜி.ஆர்.ஐ.டி.டி.எம்) குறியீட்டை உருவாக்க ஒவ்வொரு நாட்டிலும் காட்டப்பட்டுள்ள பதிலையும் தலைமையையும் மதிப்பீடு செய்ய ஆராய்ச்சி ஆய்வை நியமித்தது.

அடுத்த உலகளாவிய தொற்றுநோய்க்கு அல்லது நெருக்கடிக்கு தயாராக இருப்பதன் அடிப்படையில் குறியீட்டில் ஒரு நாட்டின் தரவரிசை ஒரு நாட்டிற்கு ஒரு உந்துதலாக இருக்கக்கூடும் என்பது ஐ.சி.எம்.ஏ.

இந்த குறியீட்டில் இலங்கை 9 வது இடத்தைப் பிடித்தது மற்றும் ஹாங்காங், யுஏஇ, ஜப்பான் மற்றும் தைவான் ஆகிய நாடுகளுடன் தரவரிசையைப் பகிர்ந்து கொண்டது.

வூஹானில் கொரோனா வைரஸ் நாவலின் தோற்றம் அறிவிக்கப்பட்டதால், ஏற்படக்கூடிய ஆபத்தைத் தடுப்பதில் இலங்கை அதிகாரிகள் விழிப்புடன் இருக்கத் தொடங்கினர் என்று இலங்கை அறிமுகம் செய்ததில் இந்த குறியீடு தெரிவித்துள்ளது.

http://www.dailymirror.lk/breaking_news/SL-performs-well-in-fighting-Coronavirus-ranked-9-in-GRID-Index/108-186696

மேல் உள்ளது சொறிலங்கா டெய்லி மிர்ரர் புளுகு .

கீழே உள்ளது போர்ப்ஸ் தரவரிசை .

Screenshot 2020-04-17 at 16.31.18.png

Risk Ranking.png

Asia-Pacific Safety Ranking

https://www.forbes.com/sites/cognitiveworld/2020/04/13/covid-19-complexity-demands-sophisticated-analytics-deep-analysis-of-global-pandemic-data-reveals-important-insights/#73f53c042f6e

COVID-19 Risk Ranking

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

கீழே உள்ளது icma  வெளியிட்டது .

d1.jpg

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

பெருமாள் , ஒருவரை உங்களுக்குப் பிடிக்காது என்றால் அவரை பாராட்ட தேவையில்லை. ஆனால் குறை சொல்லாது தவிப்பது நல்லது...நாளைக்கு அவர் ஒரு விடயத்தை சரி வர செய்யாவிடின், அவரை விமர்சிக்கும் தகுதியை நீங்கள் இழக்குறீர்கள்...நாளைக்கு நீங்களே உண்மையே சொன்னாலும்,இந்த "பெருமாள்" எப்பவுமே இப்படித் தான். அவர் எப்பவுமே இவரை குறை சொல்லிக் கொண்டு தான் இருப்பார் என்று சொல்லுவினம்

நீங்கள் என்ன தான் சொன்னாலும் கோத்தா இந்த விடயத்தில் சிறப்பாய்த் தான் செயற்படுகிறார்...அவரால் தான் அங்கு ஊரடங்கை போட்டு  அங்குள்ள மக்களை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடிந்தது...ஆனால்,அவரால் இன்னும் சிறப்பாக செயற்பட முடியும் என்று நான் நினைக்கிறேன்.
குறைகளும் இல்லாமல் இல்லை ,... அதை சுட்டிக் காட்டுங்கள் ...அதை விடுத்து நக்கலடிப்பது ஒரு பலனையும் தராது   

அபிவிருத்தி அடைந்த நாடுகளில் இருக்கும் வளங்களோடு இலங்கையும் ஒப்பிட்டு பார்க்கிறீர்கள் ..வளங்கள் குறைவாய் இருந்தும் இருக்கின்ற வளங்களை கொண்டு சிறப்பாய் செயற்படுகின்ற்னர் ...கொரோனா மேலும் பரவ கூடாது என்பதில் உறுதியாய் இருக்கின்றனர் ...தேர்தல் நடக்கவிருப்பதாலும் சிறப்பாய் செயற்பட்டு தங்களை நிரூபிக்கின்றனர் 

இவரை விட வேறு யாராவது பதவியில் இருந்தால் இந்தளவிற்கு கட்டுக்குள் வைத்திருக்க மாட்டார்கள் என்பது எனது கருத்து.
 
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

பெருமாள் , ஒருவரை உங்களுக்குப் பிடிக்காது என்றால் அவரை பாராட்ட தேவையில்லை. ஆனால் குறை சொல்லாது தவிப்பது நல்லது...நாளைக்கு அவர் ஒரு விடயத்தை சரி வர செய்யாவிடின், அவரை விமர்சிக்கும் தகுதியை நீங்கள் இழக்குறீர்கள்...நாளைக்கு நீங்களே உண்மையே சொன்னாலும்,இந்த "பெருமாள்" எப்பவுமே இப்படித் தான். அவர் எப்பவுமே இவரை குறை சொல்லிக் கொண்டு தான் இருப்பார் என்று சொல்லுவினம்

என்ன செய்வது உங்களை போல் நான் இருந்தால் நல்லதாகி இருக்கும் தமிழ்மக்களுக்கு கோத்தா செய்ததை மறக்க  முடியவில்லை .

கவனியுங்கள் icma தரவு  பட்டியலை நன்றாக கவனியுங்கள் ஸ்ரீலங்கா ன் உண்மையான தரவுகள்தானா ?

  • தொடங்கியவர்

இந்த தொற்றும் அதை சமாளிக்க எல்லா நாடுகளும் பல வழிகளும் வெற்றி கொள்ள முயன்றாலும், இது இரண்டு வருடங்கள் வரை நீடிக்கும். 

அதனால், மக்கள் மனங்களை வெல்வதும், அரசியல் மற்றும் இரானுவ நலன்களை முன்னெடுப்பதும் கூட நடக்கின்றது. அதற்கு, சிங்களமும் விதி விலக்கல்ல. மாறாக, இந்த மாமகிந்த அண்ட் கோவிற்கு கை வந்த கலை.

சீனாவின் பொருளாதாரமும் மந்தமடையும் நிலையில் சீனாவால் கூட கை கொடுக்க முடியாத நிலை ஏற்படலாம்.     

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தா ஜனாதிபதியான பின் தமிழருக்கு மேலும் முட்டாள்கள் ஆக்கப்பட்டு கொண்டு இருக்கினம் மிருசுவில் கொலையாளிக்கு பொது மன்னிப்பு தமிழ் அரசியல் கைதிகளுக்கு விடிவில்லை .காணாமல் போனோர் பற்றி கதைத்த  கதை இப்படி பல .

அதிகப்படியான கடன் சுமையால் நாட்டில் ஏட்பட்ட  ஆகாயத்தை தொடும் விலைவாசி உயர்வு ஒரு இனத்தின் வளர்ச்சி விகிதத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த நிலையில் இவரில்லாவிட்டாலும் ரணில் இருந்தாலும் முதுகுடைந்த மைத்திரி இருந்தாலும் கொள்ளை நோயால் தமது இனம் அழிந்து  போகக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள் .யாழ்ப்பாணத்தில் இப்படி இறுக்கமாக இருக்கிறார் என்றல்லாம் பெருமை பட ஒன்றுமில்லை ஏனென்றால் அங்கு தேவைக்கு அதிகமாக குந்தி இருக்கும் ராணவத்துக்கு பாதிப்பு வரக்கூடாது எனும் நல்லெண்ணம் மட்டுமே .

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பெருமாள் said:

என்ன செய்வது உங்களை போல் நான் இருந்தால் நல்லதாகி இருக்கும் தமிழ்மக்களுக்கு கோத்தா செய்ததை மறக்க  முடியவில்லை .

கவனியுங்கள் icma தரவு  பட்டியலை நன்றாக கவனியுங்கள் ஸ்ரீலங்கா ன் உண்மையான தரவுகள்தானா ?

கோத்தாவை  பழி வாங்க  வேண்டும் என்பதற்காக அல்லது அவர் தோக்க வேண்டும் என்பதற்காக அங்குள்ளவர்களுக்கு கொரோனா வரோணும் என்று நினைக்காதீங்கோ...மிச்சம் இருக்கும் மக்களையாவது நிம்மதியாய் வாழ விடுங்கோ 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

கோத்தாவை  பழி வாங்க  வேண்டும் என்பதற்காக அல்லது அவர் தோக்க வேண்டும் என்பதற்காக அங்குள்ளவர்களுக்கு கொரோனா வரோணும் என்று நினைக்காதீங்கோ...மிச்சம் இருக்கும் மக்களையாவது நிம்மதியாய் வாழ விடுங்கோ 

கோத்தா என்ன அந்த நாட்டை உண்மையான மதனமுத்து   ஆட்ச்சி செய்தாலும் கொரனோ  ஒரு கட்டுக்குள் இருக்கும் .

  1. தங்கள் இனத்தின் மீதான இயல்பான கரிசனை .
  2. அதே போல் அங்கிருக்கும் மற்றைய இனமக்களின் எதிர்பார்ப்பு .
  3. மிச்சம் இருக்கும் மக்களின் மீதான உங்களை போன்றவர்களின் அக்கறை .
  4. குளிர் நாடுகளை விட வெப்ப வலய நாடுகளில் இறப்பு எண்ணிக்கை குறைவாக உள்ளது இதை ஆராய சென்றவர்களுக்கு ஒரு உண்மை புலனாகியது .நெஞ்சு  சளியை  குறைப்பதில் அல்லது மார்பு நோய்த்தொற்றுகளுடன் கொள்ளுப்படுதலில்   விற்றமின் டி  முக்கியமான ஒன்றாக உள்ளதை அவதானித்து உள்ளார்கள் அது அங்குள்ளவர்களுக்கு நிறையவே உள்ளது காரணம் வரம்பின்றி கிடைக்கும் சூரிய ஒளி . கீழே சில இணைப்புகள்  இணைக்கிறேன் நேரம் கிடைக்கும் போது  மொழி மாற்றுகிறேன் .https://www.dailymail.co.uk/news/article-8233529/Can-Vitamin-D-help-fight-against-coronavirus.html?ito=social-facebook&fbclid=IwAR1L5Wf83p5ihwp0Xl5nUuOLJskkQ3W6WCSZR4UApoUBCv7nCt9od_nxpyQ

Edited by பெருமாள்
பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட வைட்டமின் டி எடுக்குமாறு This Morning doctor இங்கிலாந்து மக்களை கேட்டுக்கொள்கிறார்

டாக்டர் கிறிஸ் ஒரு வைட்டமின் டி யை எடுத்துக் கொண்டார் (வலது: பங்கு படம்)  
 
கொரோனா வைரஸ் பரவுதலுக்கு  மத்தியில் வைட்டமின் டி முக்கியத்துவத்தைப் பற்றி டாக்டர் கிறிஸ் பேசினார்.

கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட வைட்டமின் டி சப்ளிமெண்ட் எடுத்துக்கொள்வது குறித்து பரிசீலிக்குமாறு This Morning டாக்டர் கிறிஸ் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.

வைட்டமின் d  பொதுவாக சூரிய ஒளியில் மக்கள் பெறும் - கோவிட் -19 க்கு எதிராக போராட உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு உதவக்கூடும் என்று அவர் கூறினார்.

இந்த காலை குறித்து டாக்டர் கிறிஸ் இன்று ஆலோசனை வழங்கினார்  

பூட்டுதலின் போது எங்களில் பலர் உள்ளே தங்கியிருப்பதால், வைட்டமின் உங்கள் பரிந்துரைக்கப்பட்ட தினசரி கொடுப்பனவை (ஆர்.டி.ஏ) பெறுவது கடினம், எனவே ஒரு சப்ளிமெண்ட் எடுத்துக்கொள்வதை பொதுமக்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார்.

டாக்டர் கிறிஸ் ரூத் லாங்ஸ்போர்டு மற்றும் ஈமான் ஹோம்ஸிடம் கூறினார்: "வைட்டமின் டி உங்கள் தோலிலும் சூரிய ஒளியின் செயலிலும் தயாரிக்கப்படுகிறது.

"நாம் அனைவரும் வைட்டமின் டி குறைவாக இருக்கிறோம், நாங்கள் வைட்டமின் டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

டாக்டர் கிறிஸ் இன்று காலை ஈமான் மற்றும் ரூத்துடன் பேசினார்  

அவர் ஒரு ஆய்வுக் கட்டுரையையும் வாசித்தார்: "வைட்டமின் டி குறைபாடு பொதுவானது - கொரோவைரஸின் ஆபத்து உள்ளவர்கள் கோவிட் -19 க்கு எதிர்ப்பை அதிகரிக்க வைட்டமின் டி உடன் அவசரமாக சேர்க்க வேண்டும் என்று நாங்கள் பரிந்துரைக்கிறோம், மேலும் இந்த அறிவுரை பொது வயதுவந்தோருக்கு நீட்டிக்கப்பட வேண்டும் பொது. "

லேபிளில் 'வைட்டமின் டி 3' உடன் கூடுதல் மருந்துகளைத் தேட அவர் பரிந்துரைத்தார்.

வைட்டமின் டி உங்களை கொரோனா வைரஸ் பெறுவதைத் தடுக்காது என்று ரூத் வலியுறுத்தினார், ஆனால் அதை எதிர்த்துப் போராட நீங்கள் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் உள்ளன.

டாக்டர் கிறிஸ் ஒரு வைட்டமின் டி சப்ளிமெண்ட் (பங்கு படம்) எடுக்க பரிந்துரைத்துள்ளார்  

என்ஹெச்எஸ் வலைத்தளம் கூறுகிறது: "நீங்கள் வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸ் எடுக்க விரும்பினால், ஒரு நாளைக்கு 10 மைக்ரோகிராம் பெரும்பாலான மக்களுக்கு போதுமானதாக இருக்கும்.

வீடியோவை        "தீங்கு விளைவிக்கும் என்பதால் ஒரு நாளைக்கு 100 மைக்ரோகிராம் வைட்டமின் டி எடுத்துக் கொள்ளாதீர்கள். இது கர்ப்பிணி மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் மற்றும் 11 முதல் 17 வயதுடைய குழந்தைகள் உள்ளிட்ட பெரியவர்களுக்கு பொருந்தும்."

சப்ளிமெண்ட்ஸ் பற்றி ஏதேனும் கேள்விகள் இருந்தால் எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகவும்.

https://www.heart.co.uk/news/coronavirus/vitamin-d-immune-system/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.