Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊரடங்கு சட்டத்திலும் தொடரும் சட்டவிரோதங்கள்

Featured Replies

Editorial   / 2020 மே 03 , பி.ப. 04:18 - 0     - 57

கனகராசா சரவணன், எஸ்.சபேசன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டத்தையும் மீறி, கசிப்புத் தயாரிப்பு - விற்பனை, கஞ்சா, ஹெரோய்ன் போதைப்பொருள் பாவனை, மணல் அகழ்வு, மரக் கடத்தல், கால்நடைகள் கடத்தல், திருட்டுகள் என பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கும் பொலிஸார், அவற்றைத் தடுக்கும் செயற்பாட்டில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊரடங்கை மீறிய, கசிப்பு, கஞ்சா, ஹெரோய்னுடன், வெள்ளிக்கிழமை (01) காலை 6 மணி தொடக்கம் நேற்று (02) காலை 6 மணிவரையிலான 24 மணித்தியாலயத்தில் 32 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஏறாவூர், களுவாஞ்சிக்குடி, காத்தான்குடி, வாழைச்சேனை, வவுணதீவு, கொக்கட்டிச்சோலை, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுகளில், ஊரடங்குச் சட்டத்தை மீறி வீதியில் நடமாடிய 21 பேரையும் கசிப்புடன் 8 பேரையும், கஞ்சா, ஹெரோய்னுடன் மூவரையும் இவ்வாறு கைதுசெய்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள், அந்தந்தப் பொலிஸ் நிலையங்களுக்கு வரவழைக்கப்பட்டு, நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு, பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், சிலரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/ஊரடஙக-சடடததலம-தடரம-சடடவரதஙகள/73-249662

  • தொடங்கியவர்

ஊரடங்கு வேளையில் மணல் கடத்தல்: மூவர் கைது, வாகனங்கள் பறிமுதல்!

In இலங்கை     May 2, 2020 8:57 am GMT     0 Comments     1218     by : Litharsan

ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள நிலையில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிவந்த மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், மணல் ஏற்றிவந்த இரண்டு உழவு இயந்திரங்கள் மற்றும் ஒரு கனரக வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

வாழைச்சேனை, கடதாசி ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கமைய வாகனேரி, பொண்டுகள்சேனை பகுதியில் இருந்தே மணல் கடத்தல் இடம்பெற்றுள்ளது.

கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் சட்டவிரோத மண் அகழ்வு மற்றும் மணல் கடத்தல் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும், அதனைத் தடுப்பதற்கு தனது தலைமையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.

Sand-conduction-in-Valaichchenai-Battica

Sand-conduction-in-Valaichchenai-Battica

Sand-conduction-in-Valaichchenai-Battica

 
 

மரக்கறி கொண்டுசெல்லும் வாகனத்தில் போதைப் பொருள் கடத்தல்- சாரதி கைது!

In இலங்கை     May 2, 2020 6:12 am GMT     0 Comments     1217     by : Litharsan

Drug-trafficking-in-Puttalam.jpg

கொழும்பு மற்றும் தம்புள்ள ஆகிய நகரங்களுக்கு காய்கறிகளுடன் போதைப்பொருட்களைக் கடத்திச்சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மரக்கறி விற்பனைக்காக பொலிஸ் அனுமதிப் பத்திரங்களை பெற்ற வாகனத்தின் சாரதி காய்கறிகளுடன் சுமார் 60 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐஸ்  மற்றும் ஹெராயின் போதைப் பொருட்களை கொண்டுசென்றமை, விமானப்படையின் புலனாய்வுப் பிரிவினரும் முந்தல் பொலிஸாரும் இணைந்து நேற்று (வெள்ளிக்கிழமை) சோதனையிட்டபோது கண்டுபிடிக்கப்பட்டது.

காய்கறிகளை ஏற்றிச் செல்லும் வாகனத்தின் சாரதியின் இருக்கைக்கையின் கீழ் ஒரு சிறிய பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 47 கிராம் ஐஸ் போதைப் பொருளும் மற்றும் 12 கிராம் ஹெரோயினும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட வாகனத்தின் சாரதி பாலாவி புழுதிவாயல் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மதுரங்குளி-கடையாமோட்டைப் பகுதியில் இருந்து கொழும்பு மனிங் சந்தைக்கு காய்கறிகளைக் கொண்டுசென்றதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொழும்பில் உள்ள மனிங் சந்தை வளாகத்திற்கு அருகே மூன்று சந்தர்ப்பங்களில் கற்பிட்டி, அலங்குடாவில் வசிப்பவருக்குப் போதைப் பொருள் பொதிகள் வழங்கப்பட்டதாக சந்தேகநபரிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின்போது  தெரியவந்துள்ளது.

இதுகுறித்து முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Drug-trafficking-in-Puttalam-1-scaled.jp

Drug-trafficking-in-Puttalam-3-scaled.jp

Drug-trafficking-in-Puttalam-4-scaled.jp

  • தொடங்கியவர்

கசிப்பு கோட்டையாக மாறிவரும் யாழ்!

kasipu.png

கசிப்பு வேட்டையில் கோப்பாய் பொலிசார் அதிரடி. தற்போது நாட்டில் உள்ள மதுபான நிலையங்கள் அனைத்தும் பூட்டப்பட்ட நிலையில் கிராமங்கள் தோறும் தற்பொழுது கசிப்பு உற்பத்தி அதிகரித்துள்ளது.

கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வீரசிங்க தலைமையில் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது கோப்பாய் குப்புலாவத்தை பகுதியில் 45லீற்றர் கசிப்பு,150 லீற்றர் கோடா மற்றும் கசிப்பு காய்ச்சும் உபகரணங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.

https://www.todayjaffna.com/189102

  • தொடங்கியவர்

ஊரடங்குவேளையில் கொள்ளை! சி.சி.ரீவி ஆதாரங்களுடன் பொலிஸார் தேடுதல் வேட்டை

திம்புள்ள - பத்தன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை நகரில் அமைந்துள்ள மதுபான விற்பனை நிலையமொன்று இன்று அதிகாலை உடைக்கப்பட்டு, மதுபான போத்தல்கள் களவாடப்பட்டுள்ளன.

நாடுதழுவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று காலை 5 மணிக்கே தளர்த்தப்பட்டது. எனினும், ஊரடங்கு அமுலில் இருந்த நேரமான அதிகாலை 1.30 மணியளவிலேயே குறித்த மதுபான விற்பனை நிலையம் உடைக்கப்பட்டுள்ளது.

களவாடப்பட்ட மதுபான போத்தல்களை, பெட்டியில் போட்டுக்கொண்டு மதுபான சாலைக்கு அருகில் இருந்த குறுக்கு வழியொன்றின் ஊடாக இவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

இவ்வாறு தப்பிச்செல்லும் வேளையில், அவ்வழியில் இருந்த வீடொன்றில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரீவி கமராவில் காட்சிகள் பதிவாகியுள்ளன.

வீடொன்றின் மதில் மீது ஏறி தப்பிச்செல்ல முற்படும் காட்சிகள் தெரிந்தாலும், மின் விளக்கின் எதிர்திசை ஒளி காரணமாக நபர்களின் முகங்களை சரிவர அடையாளம் காணமுடியவில்லை.

இந்நிலையில் கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை கைது செய்வதற்கான தேடுதல் வேட்டையை திம்புள்ள - பத்தன பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/142451

  • தொடங்கியவர்

மாவட்டங்களுக்கு இடையில் பயணத்தடை: 710 கிலோ மாட்டிறைச்சியுடன் ஒருவர் கைது

மாவட்டங்களுக்கு இடையிலான பயணத் தடையை மீறி சட்டவிரோதமாக 710 கிலோ மாட்டிறைச்சி கொண்டு சென்றவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்காவில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன் மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்துக்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாவட்டங்களுக்கு இடையிலான பயணத் தடையை மீறி சட்டவிரோதமாக 710 கிலோ மாட்டிறைச்சி கொண்டு சென்றவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமான முறையில் 8 மாடுகளை வெட்டி இறைச்சியாக புத்தளம் மாவட்டத்தில் இருந்து கம்பஹா மாவட்டத்துக்கு குளிரூட்டப்பட்ட லொரி ஒன்றில் கொண்டு சென்ற போது குறித்த நபரை கொச்சிக்கடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

https://www.ibctamil.com/srilanka/80/142431

  • கருத்துக்கள உறவுகள்

95856918_611742456362742_7590348788569473024_n.jpg?_nc_cat=111&_nc_sid=110474&_nc_ohc=4cTsL3dbX5kAX-4A56x&_nc_ht=scontent.fcmb1-1.fna&oh=fd36a22bbad10658031f8180ab79e166&oe=5ED53A65இது கிளிநொச்சியில்  எடுத்த படங்கள் பொலிசாரால் பிடிக்கப்பட்டவை தெரிந்த பொலிஸ் ஒருவர் அனுப்பியிருந்தார் எனக்கு 

Image may contain: tree, outdoor and nature

கஞ்சாவிற்கு சட்ட அங்கீகாரம் வழங்கி, மது கடைகளை திறந்தால் இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகள் குறையும். 

அரசிற்கும் வருமானம் வரும். காவல் துறையும் வேறு முக்கிய விடயங்களில் கவனம் செலுத்தலாம். 

  • தொடங்கியவர்

யாழில் இடம்பெற்ற பாரிய கொள்ளை! மூன்று இளைஞர்கள் கைது

யாழில் சுமார் 2 லட்சம் பெறுமதியான தண்ணீர் இறைக்கும் மோட்டர்கள் மற்றும் காஸ் சிலிண்டர்கள் திருடி விற்பனை செய்த மூவரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ தலைமையிலான சிறு குற்றத்தடுப்பு பொலிஸ் அதிகாரி தலைமையிலான பொலிஸ் உத்தியோகத்தர்கள் இணைந்தே நேற்று கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம் அரசடி பகுதியைச் சேர்ந்த 20 முதல் 25 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர்களால், திருடப்பட்ட பொருட்களின் உரிமையாளர்கள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம், யாழ்ப்பாணம் அரசடிப் பகுதியைச் சேர்ந்த இம் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருடப்பட்ட பொருட்களை கல்வியங்காடு மற்றும் கட்டப்பிராய் பகுதிகளில் கொண்டு சென்று விற்பனை செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரையும், யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய வேளை, அவர்களை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

https://www.ibctamil.com/srilanka/80/142460?ref=home-imp-parsely

  • தொடங்கியவர்

பதின்ம வயது சிறுமி வன்புணர்வு – இளைஞர்கள் இருவர் கைது

In இலங்கை     May 5, 2020 5:08 am GMT     0 Comments     1383     by : Jeyachandran Vithushan

பதின்ம வயது சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் அவரது சகோதரனும் மாமன் உறவு இளைஞனும் கைது செய்யப்பட்டுள்ளனர் என கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

உரும்பிராயில் இடம்பெற்றுள்ள இந்தச் சம்பவம் தொடர்பாக குறித்த சந்தேக நபர்கள் இருவரும் இன்று கைது செய்யப்பட்டனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

வைத்தியசாலைக்கு சிறுமியை மருத்துவ சிகிச்சைக்கு கொண்டு சென்ற போது சந்தேகம் ஏற்பட்டு பொலிஸார் விசாரணை முன்னெடுத்தனர். அதனடிப்படையில் சிறுமியிடம் வாக்குமூலம் பெற்றப்பட்டது.

சிறுமியால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சிறுமியின் சகோதரரான 19 வயது இளைஞனும் சிறுமியின் மாமன் உறவு முறையுடைய 22 வயது இளைஞனும் கைது செய்யப்பட்டனர்.

சிறுமியை சுமார் 6 மாதங்களாக இந்த சந்தேக நபர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தியுள்ளனர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் குறித்த சிறுமி, சட்ட மருத்துவ பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரியிடம் முற்படுத்தப்பட்டுள்ளார். இதேவேளை சிறுமி கர்ப்பவதி என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக சட்ட மருத்துவ அதிகாரியின் அறிக்கை எதிர்பார்க்கப்படுகிறது. அறிக்கை கிடைத்ததும் சந்தேக நபர்கள் இருவரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள் என்று கோப்பாய் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

http://athavannews.com/பதின்ம-வயது-சிறுமி-வன்பு/

  • தொடங்கியவர்

வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதால் ஏற்பட்ட விபரீதம்: ஒருவர் பலி

மாரத்தென்ன பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்கான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பின்னவலை பம்புகொலை கீழ்ப்பிரிவை சேர்ந்த 43 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையான வேலுகுமார் ராஜ் என்பவரே கத்திக்குத்து இலக்காகி பலியாகியுள்ளார்.

பம்புகொலை கீழ்பிரிவு தோட்டத்தில் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் கைகலப்பாக மாறியே கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதுன் மோதலில் ஈடுபட்ட இருவரும் அந்த நேரம் கசிப்பு அருந்தியிருந்ததாக பின்னவல பொலிஸார் தெரிவித்தனர்

கத்திக்குத்து சம்பவத்துடன் தொடர்புடையவர் என கைது செய்யப்பட்ட சந்தேகநபரை பலாங்கொட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பின்னவல பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.

https://www.ibctamil.com/srilanka/80/142663?ref=home-imp-flag

  • தொடங்கியவர்

கோப்பாயில் ஊரடங்குவேளை நிகழ்ந்த சம்பவம் -பொலிஸாரின் வலையில் சிக்கினர் ஐவர்

கோப்பாயில் ஊரடங்கு வேளையில் தொடர்ச்சியாக மூன்று வீடுகளில் திருட்டில் ஈடுபட்ட ஐவர் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரந்தன் வீதி ஊரெழு பகுதியில் மே மாதம் முதலாம் திகதி ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த வேளையில் தொடர்ச்சியாக மூன்று வீடுகளுக்குள் அத்து மீறி நுழைந்து வீட்டில் உள்ளவர்களை தாக்கி காயப்படுத்தி வீட்டில் இருந்த பணம் நகை சைக்கிள் மற்றும் வீட்டில் இருந்த பொருட்களை திருடிய குற்றச்சாட்டின் பேரில் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் இரண்டு பெண்கள் உள்ளடங்கலாக ஐவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து திருட்டில் ஈடுபடுவதற்கு பயன்படுத்திய சைக்கிள் ,வாள் திருட்டுப்போன கோடரி சைக்கிள்,திருடிய நகைகளை அடைவு வைத்ததற்கான அடைவு சிட்டைகள் மற்றும் விற்பனை செய்ததற்கான சிட்டைகள் என்பவற்றினை பொலிசார் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 20 தொடக்கம் 35 வயதுடைய மல்லாகம் மற்றும் உடுவில் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவித்த யாழ் மாவட்ட குற்றத்தடுப்புபிரிவின் பொறுப்பதிகாரி பிரான்சிஸ் கைது செய்யப்பட்டவர்கள் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

https://www.ibctamil.com/srilanka/80/142683

  • தொடங்கியவர்

பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசியத் தகவல்! சங்குவேலி பகுதியில் திடீர் முற்றுகை

யாழில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மானிப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய சங்குவேலி பகுதியில் மேற்கொண்ட திடீர் முற்றுகை நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் வீட்டில் வைத்து சட்டவிரோதமான முறையில் மதுபான பொருட்களை விற்பனை செய்தார் என்ற சந்தேகத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அதே பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டதையடுத்து அவரது வீட்டில் தொடர்ந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது மறைத்து வைக்கப்பட்டிருந்த 180 மில்லி லிட்டர் கொள்ளளவுடைய 85 அரச மதுபான போத்தல்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/142714

  • தொடங்கியவர்

யாழ். சண்டிலிப்பாயில் சிவில் உடையில் சென்ற பொலிஸாருக்கும் குடும்பத்தாருக்கும் இடையே மோதல் – இருவர் காயம்

In இலங்கை     May 9, 2020 11:59 am GMT     0 Comments     1305     by : Jeyachandran Vithushan

IMG-20200509-WA0017-720x450.jpg

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் இரட்டைப் புலவு வைரவர் ஆலயத்துக்கு அருகில் இன்று நண்பகல் சிவில் உடையில் சென்ற பொலிஸாருக்கும் குடும்பத்தாருக்கும் இடையே மோதல் இடம்பெற்றுள்ளது.

இந்த மோதலில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் குறித்த வீட்டில் வசிக்கும் இளைஞன் ஒருவரும் காயமடைந்துள்ளனர்.

குறித்த வீட்டில் வசிப்போருக்கு இடையே சில காலமாக முரண்டாடு இருந்துள்ளது இந்நிலையில் இன்று மதியம் குறித்த வீட்டிற்கு சாதாரண உடையில் சென்ற இரு பொலிஸார் அங்கு உரையாடிய பின்பு வேலி பாய்ந்து குறித்த வீட்டிற்குள் பிரவேசித்ததை அடுத்து அங்கு குழப்பம் நிலவியது.

அவர்கள் எழுப்பிய குரல் கேட்டு அயலில் உள்ள இளைஞர்களும் குறித்த வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு இரு பகுதியினருக்கும் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் சிவில் உடையில் சென்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் காயத்துக்கு உள்ளாகி இருந்தார் அத்தோடு குறித்த வீட்டை சேர்ந்த இளைஞன் ஒருவரும் காயத்திற்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து அந்த வீட்டிலுள்ள நால்வர் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வரவளைக்கப்பட்ட நோயாளர் காவு வண்டியும் பொலிஸாரால் திருப்பிவிடப்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

IMG-20200509-WA0017-1-428x208.jpgIMG-20200509-WA0021-428x208.jpg

  • தொடங்கியவர்

பயன்தரு பழமரங்களை வெட்டிச் சாய்த்த விஷமிகள்

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட உடுப்புக்களம் பகுதியில் சூரிய மின்கலத்தில் விவசாயம் மற்றும் பழச்செய்கை மேற்கொண்டு வரும் விவசாயியின் பப்பாசிகன்றுகள் வெட்டி சாய்க்கப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் இரு சந்தேக நபர்கள் முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உடுப்புக்குளம் பகுதியில் உள்ள செல்லத்தம்பி முத்துராஜ் என்ற விவசாயி சூரிய மின்கலத்தினை பயன்படுத்தி விவசாயம் மற்றும் பப்பாசி செய்கையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

நேற்று இரவு விசமிகள் சிலரால் தனிப்பட்ட காணத்தினால் இவரின் விவசாய பழச்செய்கை அழிக்கப்பட்டுள்ளது.

இதன்போது 126 பயன்தரு பப்பாசி மரங்கள், சூரிய மின்கலம், தண்ணீர் பைப்புகள், முருங்கை மரம் உள்ளிட்ட மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/142809?ref=home-imp-parsely

  • கருத்துக்கள உறவுகள்

மரங்களை... நட்ட விவசாயி...  
இந்தப் படங்களைப் பார்த்து எவ்வளவு வேதனைப் பட்டிருப்பார்.
சொத்துக்களை நாசமாக்குபவர்கள் மீது,  அதனை விட பல மடங்குகள் அபராதம் விதித்து,
சம்பந்தப் பட்ட விவசாயியிக்கு கொடுக்க வேண்டும்.

வீதியில் நடப்பட்ட மரக்கன்றுகளின் பாதுகாப்பு கூடுகளை திருடிய நபர்

வீதியில் நடப்பட்ட மரக்கன்றுகளின் பாதுகாப்பிற்காக போடப்பட்ட மரக் கூடுகளை ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளை திருடி சென்றவரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இலங்கையின் தேசிய மர நடுகை செயல்திட்டத்திற்கமைய சம்மாந்துறை பிரதேசத்தின் வங்கலாவடி தொடக்கம் மல்வத்தை பிரதேசம் வரையான அரச நிறுவனங்களின் பிரதானிகள் ஊடாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாட்டப்பட்ட மரங்களின் பாதுகாப்பிற்காக மரக் கூட்டுத்தாபனத்தினால் அமைத்துக் கொடுக்கப்பட்ட பாதுகாப்புக் கூடுகள் திருடப்பட்டுள்ளதாக கல்முனைப் பிராந்திய வனப் பரிபாலனை திணைக்களத்தின் உத்தியோகத்தர் மற்றும் பெளதீக வள அதிகாரியினால் முறைப்பாடு ஒன்று சம்மாந்துறை பொலிஸாருக்கு வழங்கப்பட்டிருந்தது.

சம்மாந்துறை பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டினை அடிப்படையாக கொண்டு சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எச். ஜயலத்தின் வழிகாட்டலுக்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய சிறு குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஏ.எமு.நெளபீர் தலைமையில் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் நவகீதன் உள்ளிட்ட குழுவினர் சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர்.

மேலும் பொலிஸ் ஊரடங்கு நேரத்தில் சட்டத்தினை மீறி குறித்த மரக்கூடுகளை திருடி தன்னுடைய உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 56 வயதுடைய சந்தேக நபர் சனிக்கிழமை (09) கைது செய்யப்பட்டு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

https://www.ibctamil.com/srilanka/80/142827

ஊரடங்கு காலத்தில் களுவாஞ்சிக்குடியில் அதிகரித்துள்ள சட்டவிரோத செயற்பாடு

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுலில் இருந்த போது களுவாஞ்சிக்குடியில் சட்டவிரோத மதுபான உற்பத்திகள் அதிகரித்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையப் பெறுப்பதிகாரி எம்.ஜி.யு.ஐ.குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த இரு வாரங்களுக்குள் 2 இலட்சத்து 27 ஆயிரத்து 675 மில்லி லீற்றர் கசிப்பு மற்றும் 2 இலட்சத்து 27000 மில்லி லீற்றர் கோடோ, 45 ஆயிரத்து 240 மில்லி லீற்றர் சட்ட ரீதியற்ற முறையில் விற்பனைக்குத் தயாரான மதுபானம் ஆகியன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

தற்போது பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல் உள்ள நிலையில் பல இடங்களிலும் கசிப்பு, கோடா, மற்றும் சட்ட ரீதியற்ற முறையிலான மது விற்பனை என்பன இடம்பெறுகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்தும் முகமாக களுவாஞ்சிகுடி பொலிசார் தீவிர செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவினுள் சட்டவிரோத செயற்பாடுகளுடன் தொடர்புபட்ட 75 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையப் பெறுப்பதிகாரி எம்.ஜி.யு.ஐ.குணவர்த்தன மேலும் தெரிவித்துள்ளார்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/142866

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.