Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரபிக் கடலில் இன்று உருவாகிறது நிசர்கா புயல் – மும்பைக்கு சிவப்பு எச்சரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Raining.jpg

அரபிக் கடலில் இன்று உருவாகிறது நிசர்கா புயல் – மும்பைக்கு சிவப்பு எச்சரிக்கை

அரபிக் கடலில் இன்று உருவாகும் நிசர்கா புயல் காரணமாக மகாராஷ்டிரா, குஜராத், கோவாவில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அரபிக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகலுக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலமாகி பின்னர், புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று உருவாகவுள்ள புயலுக்கு நிசர்கா என பெயரிடப்பட்டுள்ளது.

நிசர்கா புயல் வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை பிற்பகல் மகாராஷ்டிராவின் ஹரிஹரேஸ்வர்-டாமன் இடையே கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

நிசர்கா புயல் காரணமாக, மேற்கு இந்திய பகுதிகள் குறிப்பாக மகாராஷ்டிராவின் மும்பை உட்பட சில பகுதிகள்  கோவா மற்றும் குஜராத் மாநிலங்களில் மணிக்கு 115 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.  அடுத்த இரண்டு நாட்களுக்கு கன மழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. மேலும் மும்பைக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று பிற்பகலுக்கு பிறகு கிழக்கு-மத்திய அரபிக்கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும். அடுத்த 24 மணி நேரத்திற்கு தென்கிழக்கு அரபிக் கடல், லட்சத்தீவு பகுதி மற்றும் கேரள கடற்கரை பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேபோல் கிழக்கு-மத்திய மற்றும் வடகிழக்கு அரபிக் கடல் மற்றும் கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, தெற்கு குஜராத் கடற்பகுதிகளுக்கு ஜூன் 3 வரை மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

http://athavannews.com/அரபிக்-கடலில்-இன்று-உருவ/

 

################    #################    #################   ################

 

 

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

%E2%80%98%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E2%80%99-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D.jpg

இன்று கரையைக் கடக்கிறது ‘நிசா்கா’ புயல்!

அரபிக்கடலில் உருவாகியுள்ள நிசா்கா புயல், வடக்கு மகாராஷ்டிரம் மற்றும் தெற்கு குஜராத் கடற்கரைகளுக்கு இடையே இன்று(புதன்கிழமை) கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையொட்டி, இவ்விரு மாநிலங்களிலும் முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைமை இயக்குநா் மிருத்யுஞ்சய் மொகபத்ரா கூறுகையில், அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இப்புயலுக்கு நிசா்கா என பெயரிடப்பட்டுள்ளது.

நிசா்கா புயல் மேலும் தீவிரமடைந்து, வடக்கு மகாராஷ்டிரம் மற்றும் தெற்கு குஜராத் கடற்கரைகளுக்கு இடையே புதன்கிழமை பிற்பகலில் கரையைக் கடக்கும் என்றாா்.

மகாராஷ்டிரத்தின் ராய்கட் மாவட்டம், ஹரிஹரேஷ்வா் மற்றும் டாமன் இடையே நிசா்கா புயல் கரையை கடக்கும்போது, மணிக்கு 110 கி.மீ. முதல் 120 கி.மீ வரை பலத்த காற்றுடன் கனமழை பெய்யும்.

மகாராஷ்டிரத்தில் மும்பை மற்றும் புகா் பகுதிகளிலும் தாணே, பால்கா், ராய்கட், ரத்னகிரி, சிந்துதுா்க் ஆகிய மாவட்டங்களிலும் புயலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மும்பையில் ஏற்கெனவே கரோனா நோய்த்தொற்று பாதிப்பு அதிகம் காணப்படும் நிலையில், நிசா்கா புயலால் புதிய சவால் எழுந்துள்ளது. புயல் மீட்புப் பணிகளின்போது, முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய சூழல் நிலவுகிறது.

இதுதொடா்பாக முதல்வா் உத்தவ் தாக்கரேவின் அலுவலகம் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், நிசா்கா புயலின் தாக்கத்தால், மும்பை உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும். இதனால் ஏற்படும் நிலச்சரிவு போன்ற பாதிப்புகளை சமாளிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மீட்புப் பணிகளுக்காக தேசிய பேரிடா் மீட்புப் படையின் 10 குழுக்கள் பணியமா்த்தப்பட்டுள்ளன. மின் விநியோகம் தடைபடும் என்பதால், உரிய முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பால்கா், ராய்கட் மாவட்டங்களில் உள்ள ரசாயன ஆலைகளுக்கும், அணுமின் உற்பத்தி நிலையத்துக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. புயல் பாதிப்புகளை கண்காணிக்க மாநில தலைமை செயலத்தில் 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தின் தெற்கு கடற்கரையை நோக்கி புயல் நெருங்கி வரும் நிலையில், வல்சாத், நவ்சாரி ஆகிய மாவட்டங்களில் உள்ள 47 கடலோர கிராமங்களில் வசிக்கும் 20 ஆயிரம் போ் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனா்.

கடலோர பகுதிகளில் தேசிய பேரிடா் மீட்புப் படையின் 14 குழுக்கள் பணியமா்த்தப்பட்டுள்ளன. வேறு மாநிலங்களில் இருந்து மேலும் 5 குழுக்கள் வரவழைக்கப்படவுள்ளதாக அந்த மாநில அதிகாரிகள் தெரிவித்தனா்.

நிசா்கா புயல் புதன்கிழமை கரையை கடக்கவுள்ள நிலையில், மேற்கு கடற்கரை பகுதிகளில் நிலவும் சூழல் தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடி உயரதிகாரிகளுடன் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

இதுதொடா்பாக அவா் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ஒவ்வொருவரின் நலனுக்காக பிராா்த்திக்கிறேன். உரிய முன்னெச்சரிக்கை, பாதுகாப்புடன் செயல்பட மக்களை கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளாா்.

மேலும், மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரே, குஜராத் முதல்வா் விஜய் ரூபானி ஆகியோருடன் தொலைபேசி வாயிலாக பேசிய பிரதமா் மோடி, இரு மாநிலங்களுக்கும் தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கும் என்று உறுதியளித்தாா்.

அத்துடன், டாமன், டையூ மற்றும் தாத்ரா நகா்ஹவேலி யூனியன் பிரதேசத்தின் நிா்வாக அதிகாரி பிரபுல் கே படேலுடனும் பிரதமா் பேசியதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

http://athavannews.com/இன்று-கரையைக்-கடக்கிறது/

  • கருத்துக்கள உறவுகள்

மும்பை அருகே கரையை கடக்கத் தொடங்கியது நிசர்கா புயல்; பலத்த மழை

cyclone-nisarga-makes-landfall-close-to-alibaug-near-mumbai  

மும்பை

அரபிக்கடலில் உருவெடுத்து நிசர்கா புயல் மும்பை அருகே அலிபாக் பகுதியில் கரையை கடந்து வருகிறது. முழுவதும் கரையை கடந்து முடிக்க 3 மணிநேரம் ஆகும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை நீண்டகால அடிப்படையில் 107 சதவீதம் என்ற அடிப்படையில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

 

இந்த புயலுக்கு நிசர்கா எனப் பெயரிடப்பட்டுள்ளது. அரபிக் கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவான புயல் தற்போது கரையை கடந்து வருகிறது. நிசர்கா புயல் கரையை கடப்பதை தொடர்ந்து, மஹாராஷ்டிரா, குஜராத், டாமன் & டியூ, தாத்ரா & நாகர் ஹவேலி ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.

#WATCH Maharashtra: Strong winds and high tides hit Ratnagiri area. #CycloneNisarga pic.twitter.com/Cg85bxwMdL

— ANI (@ANI) June 3, 2020

 

இதனால் வடக்கு மஹாராஷ்டிரா, தெற்கு குஜராத்தில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மும்பையில் கடற்கரை ஒட்டிய பகுதிகள், பூங்காக்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது இன்று (ஜூன் 3) காலை முதல் நாளை மதியம் வரை அமலில் இருக்கும். தடையை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

ani_mic_logo_normal.jpg
 
 

#WATCH Effect of #NisargaCyclone in Sindhudurg District of Maharashtra: India Meteorological Department, IMD

 
Embedded video
 
 
 
 

 

புயல் கரையை கடப்பதால் மணிக்கு 100-120 கிமீ வேகத்தில் காற்று வீசுகிறது. புயல் கரையை கடந்து முடிக்க 3 மணிநேரம் ஆகும் என தெரிகிறது.

https://www.hindutamil.in/news/india/557673-cyclone-nisarga-makes-landfall-close-to-alibaug-near-mumbai-1.html

 

  • கருத்துக்கள உறவுகள்

சூறாவளி காற்றுடன் பலத்த மழை: மும்பை அருகே ‘நிசர்கா’ புயல் கரையை கடந்தது

சூறாவளி காற்றுடன் பலத்த மழை: மும்பை அருகே ‘நிசர்கா’ புயல் கரையை கடந்தது

 

மும்பை, 

கேரளாவில் கடந்த 1-ந் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில், அரபிக்கடலின் தென்கிழக்கு பகுதி, அதையொட்டிய மத்திய பகுதி, லட்சத்தீவு பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது.

பின்னர் இது வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. அதன்பிறகு மேலும் வலுவடைந்து புயலாக உருவெடுத்தது. இந்த புயலுக்கு ‘நிசர்கா’ என பெயரிடப்பட்டது.


கடற்கரையை நோக்கி நகர்ந்து வந்த இந்த புயல் வடக்கு மராட்டியம்-தெற்கு குஜராத் இடையே நேற்று பகலில் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

இதனால் இரு மாநிலங்களின் கடலோர மாவட்டங்களிலும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தேசிய பேரிடர் மீட்புப் படையினர், மாநில பேரிடர் மீட்புப்படையினர், தீயணைப்பு படை வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டனர். கொரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள மும்பை நகரிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.

பிரதமர் மோடி மராட்டிய, குஜராத் மாநில முதல்-மந்திரிகளையும் தொடர்பு கொண்டு பேசினார்.

மராட்டியத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மும்பை, தானே, ராய்காட், பால்கர், ரத்னகிரி, சிந்துதுர்க் ஆகிய கடலோர மாவட்டங்களில் தாழ்வான பகுதிகள், குடிசைகள் மற்றும் பாழடைந்த கட்டிடங்களில் வசித்து வந்த சுமார் 2 லட்சம் மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டு தங்க வைக்கப்பட்டனர். மும்பையில் மட்டும் கடலோரம் வசித்து வந்த 40 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.

மும்பை பி.கே.சி.யில் உள்ள எம்.எம்.ஆர்.டி. மைதானத்தில் அமைக்கப்பட்ட கொரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 150-க்கும் மேற்பட்ட நோயாளிகள் ஒர்லியில் உள்ள சிகிச்சை மையத்துக்கு மாற்றப்பட்டனர்.

மும்பை விமான நிலையத்தில் பிற்பகல் 2.30 மணி முதல் இரவு 7 மணி வரை விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. மேற்கு ரெயில்வே சார்பில் இயக்கப்பட்ட ரெயில் நேர அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டது.

மும்பையில் ஊரடங்கின் தளர்வாக நேற்று முதல் பொது இடங்களில் சென்று நடைபயிற்சி, தனிநபர் உடற்பயிற்சி மோற்கொள்ள அனுமதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் புயல் காரணமாக பொது மக்கள் வெளியே வர வேண்டாம் என மாநகராட்சி சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

மேலும் கடற்கரை பகுதிகளுக்கு செல்ல போலீசார் 144 தடை உத்தரவு பிறப்பித்து இருந்தனர். ஒர்லி கடல் வழிபாலம் மூடப்பட்டது.

புயல் காரணமாக நேற்று முன்தினம் மாலை முதலே மும்பை உள்ளிட்ட கடலோர பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியது. நேற்று மதிய நேரத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. கடல் கொந்தளிப்பாக காணப்பட்டது.

இந்த நிலையில், மும்பையில் இருந்து 95 கிலோ மீட்டர் தொலைவில் ராய்காட் மாவட்டத்தில் உள்ள அலிபாக் கடற்கரை பகுதியில் நேற்று மதியம் 12.30 மணி நிசர்கா புயல் கரையை கடக்க தொடங்கியது.

புயலின் கண் பகுதி 65 கிலோ மீட்டர் விட்டத்தில் பரந்து விரிந்து இருந்தது. புயல் முழுவதுமாக கரையை கடக்க சுமார் 3½ மணி நேரம் ஆனது.

கரையை கடந்த புயல் வடகிழக்கு திசையில் நகர்ந்து சென்றது. நிலப்பகுதிக்குள் வந்து பிறகு சற்று பலவீனம் அடைய தொடங்கியது.

புயல் கரையை கடந்த போது மும்பை, தானேயில் மணிக்கு 90 முதல் 100 கி.மீ. வேகத்திலும், அலிபாக்கில் 100 முதல் 110 கி.மீ. வேகத்திலும் சூறாவளி காற்று வீசியது.

அப்போது மராட்டியத்தின் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.

‘நிசர்கா’ புயல் மும்பையில் பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தாமல் கரையை கடந்ததால் மக்கள் ஆறுதல் அடைந்தனர். அந்தேரி உள்ளிட்ட பகுதியில் லேசான தாக்கம்தான் இருந்தது.

புயல் கரையை கடந்த மைய பகுதியான அலிபாக்கில் பலத்த சேதம் ஏற்பட்டது. அங்கு ஏராளமான மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன. வீட்டின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன. அலிபாக் மட்டுமின்றி அந்த பகுதி அடங்கிய ராய்காட் மாவட்டம் அதிக சேதத்தை சந்தித்தது. தானே, பால்கர், புனே உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்தது. இங்கும் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன.

தயார் நிலையில் இருந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் அங்கு உடனடியாக சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குஜராத் மாநிலத்தில் 8 கடலோர மாவட்டங்களில் 63 ஆயிரத்து 700 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். ஆனால் குஜராத்தில் புயல் பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/04033301/Heavy-Rain-with-Hurricane-Wind-The-Nisarga-storm-crossed.vpf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.