Jump to content

பிரசாதம் இல்லை, புனித தீர்த்தம் இல்லை, பஜனை பாடல்கள் இல்லை” மத வழிபாட்டு தலங்களில் புதிய விதிமுறைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரசாதம் இல்லை, புனித தீர்த்தம் இல்லை, பஜனை பாடல்கள் இல்லை” மத வழிபாட்டு தலங்களில் புதிய விதிமுறைகள்

”பிரசாதம் இல்லை, புனித தீர்த்தம் இல்லை, பஜனை பாடல்கள் இல்லை” மத வழிபாட்டு தலங்களில் புதிய விதிமுறைகள்

 

பிரசாதம் இல்லை, புனித தீர்த்தம் இல்லை, பக்திபாடல்கள் இல்லை மத வழிபாட்டு தலங்கள் திறப்பின்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளது.
பதிவு: ஜூன் 05,  2020 08:57 AM
புதுடெல்லி

மத வழிபாட்டு தலங்கள் திறப்பின்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் 24-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கும் இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஆனால் தற்போது 5-ஆம் கட்டமாக நடைமுறையில் உள்ள ஊர்டங்கில் பொது இடங்களை திறப்பதில் 3 கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 


அதன்படி, வரும் 8 ஆம் தேதி முதல் வழிபாட்டு தலங்களை திறக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் வழிபாட்டு தலங்கள் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகளை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அவற்றை காணலாம்.

நுழைவாயில்கள் கண்டிப்பாக சுகாதாரத்துடன் சானிடைசர்ஸ் கொண்டிருக்க வேண்டும். அத்துடன் வெப்ப அளவீடு செய்யும்முறை இருக்க வேண்டும்.

அறிகுறிகள் இல்லாத நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.

கொரோனா விழிப்புணர்வு குறித்த பதாகைகள் இருக்க வேண்டும். அதுதொடர்பான ஆடியோ மற்றும் வீடியோ தொடர்ந்து ஒளிபரப்பப்பட வேண்டும்.

அனைத்து காலணிகளும் அவரவர் சொந்த வாகனங்களில் விட வேண்டும். இல்லையென்றால் தனித்தனியே குடும்பம் வாரியாக வைத்துக்கொள்ளலாம்.

சமூக இடைவெளியுடன் கூடிய முறையான பார்க்கிங் வசதி இருக்க வேண்டும்.

வழிபாட்டு தலங்களை சுற்றி செயல்படும் கடைகள், உணவகங்களில் முறையான சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட வேண்டும்.

வரிசையில் நிற்பவர்கள் இடைவெளியுடன் நிற்பதற்கு தரையில் குறியீடுகள் (வட்டம் அல்லது சதுரம்) வரைந்திருக்க வேண்டும்.

முறையான நுழைவாயில் மற்றும் வெளியே செல்லும் வழி என தனித்தனியே இருக்க வேண்டும்.

வரிசையில் நிற்கும்போது குறைந்தபட்சம் 6 அடி சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

வளாகங்களுக்குள் நுழைவதற்கு முன்பு மக்கள் தங்கள் கைகளை சோப்பால் கழுவ வேண்டும்.

இருக்கைகள் சமூக இடைவெளியுடன் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஏசி பயன்படுத்துவோர் அறிவிக்கப்பட்டுள்ள அளவீட்டை (24-30 செல்சியஸ்) பின்பற்ற வேண்டும். அவ்வப்போது புதிய காற்று உள்ளே நுழையும்படி வழிவகை செய்திருக்க வேண்டும்.

சிலைகள், சிற்பங்கள், புத்தகங்களை தொடுவதற்கு அனுமதிக்கக்கூடாது.

அதிக அளவு மக்கள் கூடுவதற்கு அனுமதி கிடையாது. அத்துடன் பஜனைகள் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கும் அனுமதி இல்லை.

ஒருவரை ஒருவர் தொடுவதை தவிர்க்க வேண்டும்.

வழிபாட்டில் ஈடுபடுவோர் தங்கள் சொந்த துணிகளை கொண்டு வந்து வழிபட வேண்டும். பின்னர் அவர்களே அதை கொண்டு செல்ல வேண்டும்.

பிரசாதம் அல்லது தீர்த்தம் உள்ளிட்டவற்றை நேரடியாக வழங்கக் கூடாது.

சமுதாய கூடங்கள், அன்னதானம் உள்ளிட்டவற்றில் பார்செல் செய்து சமூக இடைவெளியுடன் வழங்க வேண்டும்.

கழிவறைகள், கை - கால்கள் கழுவுமிடம் ஆகிய இடங்களை முறையாக பராமரித்து அங்கே சானிடைசர்களை வைக்க வேண்டும்.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/05085714/No-Prasad-Holy-Water-Or-Singing-In-Religious-Places.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 💯 உண்மை  எனக்கு இலங்கையும் பிடிக்கும் சுவிஸ்சும் பிடிக்கும். லண்டனைவிட எடின்பேர்க்கிற்கு மேலே உள்ள இடங்கள் பிடிக்கும்.
    • முடிவுக்கு வரும் இஸ்ரேலுடனான உறவு! கொலம்பியா அறிவிப்பு. இஸ்ரேல் நாட்டுடனான உறவை முறித்துக் கொள்வதாக கொலம்பிய ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ (Gustavo Petro) அறித்துள்ளார். சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நேற்றைய தினம் பொகோட்டாவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே கொலம்பிய ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது இனப்படுகொலை செய்யும் இஸ்ரேல் அரசுடனான உறவை தாம்  முறித்துக் கொள்வதாகவும், காசாவில் நடைபெறும் மனித உரிமை மீறலை உலகம் வேடிக்கை பார்க்காது எனவும்  அனைத்து நாடுகளும் இது தொடர்பில் தீவிர நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். காசா மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலுக்கு கொலம்பிய அரசு தொடர்சியாக கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், கொலம்பியாவுக்கான பாதுகாப்பு தளவாட  ஏற்றுமதியை இஸ்ரேல் நிறுத்தியது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1380784
    • விண்ணப்ப படிவங்கள் எப்படியென்றால் கனடா விசா விண்ணப்பிக்கும்போது கனடா செர்வீஸ் இணய தளத்திலேயே செய்யவேண்டும், எல்லா விபரங்களையும் பதிவு செய்து "அனுப்பு' பொத்தானை அழுத்திய பின்பு இவை பிரிடிஸ் கொலம்பியாவில் உள்ள பிரதான க‌னடிய எல்லை கட்டுப்பாட்டு காரியாலயத்திற்கு செல்லும், சில நாட்களின் பின் கைரேகை பதிவுக்காக VFS போகச்சொல்லி மின்னஞல் கடிதம் வரும். (இந்த முகவர் VFS) முதலில் கைகளிள் இரண்டையும் விரித்து கமராவில் காட்டிய பின் ஒவ்வொரு விரலாக ஸ்கான் செய்வார்கள்.  பிறகு சில வாரங்களின் பின் விசா அப்ரூவல் ஆனவுடன் மின்னஞல் கடிதம் வரும் அதை எடுத்துக்கொண்டு, பாஸ்போட்டுடன் இடம் கொடுத்தால் இவர்கள் இதை கனேடியன் ஹைகமிசனுக்கு அனுப்பி விசாவை குத்தி வைத்திருப்பார்கள் 5 நாட்களின் பின் பெற்றுக்கொள்ளாலாம். பொதுவாக இன்டெர்வியூ நடைபெறுவதில்லை. அமெரிக்க விசாவும் இவ்வாறே ஆனால் ஒன்லைனில் விண்ணப்பித்த பின் சிஸ்டம் தானாக இன்டெர்வியு நேரத்தை எடுக்க சொல்லும், எடுத்தவுடன் ஒதுக்கப்பட்ட அந்த நேரத்திற்கு கட்டாயமாக செல்லவேண்டும். எம்பஸியெலேயே கைவிரல் பதிவு செய்யப்படும். கவுண்டருக்கு அந்தப்பக்கத்தில் இருக்கும் வீசா ஆபீசாருடன்  2 ‍தொடக்கம் 3 நிமிடங்கள் வரை அவர் கேட்க்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும், இது மிகவும் சவாலுக்குறியது, அது முடிதவுடன் அவர் பாஸ் என்றால் பாஸ்போட்டை கொடுக்க சொல்வார், பெயில் என்றால் முகத்திற்கு சொல்லிவிடுவார். அதேபோல் அமெரிக்க வீசா விண்ணபம் ஒர் மிக நீண்ட கேள்விக்கொத்து, Facebook, LinkedIn போன்ற சமூக தளங்களின் தரவுகளையும் கேட்பார்கள். மேலும் அமேரிக்க விசா இருந்தால் மெக்ஸிகோ, போன்ற லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு விசா இன்றி பயணிக்கலாம் என்பதும் ஒரு காரணமாகும்.    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.