Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மௌத்தையே நீ மறந்து

 

  • Replies 2.9k
  • Views 227k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • உடையார்
    உடையார்

  • Maruthankerny
    Maruthankerny

    இணைப்புக்கு நன்றி உடையாரண்ணா  இவரின் குரலில் சில இஸ்லாமிய பாடல்கள்  மனதையே கொள்ளை கொண்டுவிடும்  சில வருடங்கள் முன்பு ஒரு யூஸ்பி யில் பதிந்து வைத்திருந்தேன்  எங்கோ தவற விட்டுவிட்ட்டேன் ... ம

  • உடையார்
    உடையார்

    யேசுவே எனக்கு என்று யாருமேயில்லை   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குழலும் யாழும் குரலினில் தொனிக்க
கும்பிடும் வேளையிலே
மழலை யேசுவை மடியில் சுமந்து 
மாதா வருவாளே! ஆரோக்கிய மாதா
வருவாளே!

******************
அருளே நிறைந்த மரியே என்று
அன்புடன் அழைக்கயிலே....
அருளே நிறைந்த மரியே என்று
அன்புடன் அழைக்கயிலே.

இருளே நீங்க இறைவனை ஏந்தி
இன்னருள் தருவாளே- மாதா
இன்னருள் தருவாளே.

குழலும் யாழும் குரலினில் தொனிக்க
கும்பிடும் வேளையிலே
மழலை யேசுவை மடியில் சுமந்து 
மாதா வருவாளே! ஆரோக்கிய மாதா
வருவாளே!
*****************

ஜபமே செய்து தவமே புரிந்து
ஜெபிக்கும் வேளையிலே...
ஜபமே செய்து தவமே புரிந்து
ஜெபிக்கும் வேளையிலே

ஜயமே தருவாள் பயமே வேண்டாம்
ஜகத்தின் இராக்கினியே- இந்த
ஜகத்தின் இராக்கினியே.

குழலும் யாழும் குரலினில் தொனிக்க
கும்பிடும் வேளையிலே
மழலை யேசுவை மடியில் சுமந்து 
மாதா வருவாளே! ஆரோக்கிய மாதா
வருவாளே!

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கேது தேவா நீ வருக

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாதேஷு சர்வ பூதேஷு லக்ஷ்மி ரூபேண ஸ்தம்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ
ஜெயலக்ஷ்மி ஜெயலக்ஷ்மி ஜெயலக்ஷ்மி பாஹிமாம்
ஜெயலக்ஷ்மி ஜெயலக்ஷ்மி ஜெயலக்ஷ்மி ரக்ஷமாம்

செல்வம் கொழிக்குது செல்வம் கொழிக்குது
செய் தொழில் செழிக்குதம்மா

சிந்தை மகிழுதென் சிந்தை மகிழுது செல்வாக்கு பெருகுதம்மா
வாழ்வில் செல்வாக்கு பெருகுதம்மா

ஓரெட்டு லக்ஷ்மியும் ஈரெட்டு செல்வத்தை
என் வீட்டில் நிறைத்து விட்டாள் . . என் வீட்டில் நிறைத்து விட்டாள்

ஈரெட்டு செல்வமும் எட்டெட்டு கலைகளும்
சிந்தையில் ஏற்றிவிட்டாள் என் சிந்தையில் ஏற்றிவிட்டாள்

கற்பகவிருக்ஷமும் காமதேனுவையும்
பரிசாய் எனக்கு தந்தாள் . . பரிசாய் எனக்கு தந்தாள்

அக்ஷயபாத்ரமும் அமுதசுரபியும்
சீரென வழங்கி விட்டாள் வம்ச சீரென வழங்கி விட்டாள்

பாற்கடலமுதென மார்போடணைத்தெனை
பாங்காய் ஊட்டி விட்டாள் . . பாங்காய் ஊட்டி விட்டாள்

பூட்டிய பிணிகளும் வாட்டிய வறுமையும்
மாயமாய் மாய்த்துவிட்டாள் இன்று மாயமாய் மாய்த்துவிட்டாள்

செந்தாமரை தாயே செந்தாமரை கையால்
சீர்பெற வாழ்த்தி விட்டாள் எம்மை சீர்பெற வாழ்த்தி விட்டாள்

செந்தாமரை கண்ணன் மனமாய் நின்றவள்
சேயென சேர்த்தணைத்தாள் எனை சேயென சேர்த்தணைத்தாள்

 

 

 

Edited by உடையார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாலை மாற்றினால் கோதை | கல்யாணப்பாடல்கள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
சேவடி செவ்விதிருக் காப்பு.

* அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய்நின் வலமார்பினில் வாழ்கின்றமங்கையும் பல்லாண்டு
வடிவார்சோதிவலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு
படையோர்புக்குமுழுங்கும் அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே.

வாழாட்பட்டுநின்றீருள்ளீரேல் வந்துமண்ணும் மணமும் கொண்மின்
கூழாட்பட்டுநின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதலொட்டோம்
ஏழாட்காலும் பழிப்பிலோம் நாங்களிராக்கதர்வாழ், இலங்கை
பாழாளாகப்படைபொருதானுக்குப் பல்லாண்டுகூறுதுமே.

ஏடுநிலத்திலிடுவதன் முன்னம்வந்து எங்கள் குழாம்புகுந்து
கூடுமனமுடையீர்கள் வரம்பொழிவந்தொல்லைகூடுமினோ
நாடுநகரமும்நன்கறிய நமோநாராயணாயவென்று
பாடுமனமுடைப்பத்தருள்ளீர் வந்துபல்லாண்டுகூறுமினே.

அண்டக்குலத்துக்கதிபதியாகி அசுரரிராக்கதரை
இண்டைக்குலத்தையெடுத்துக்களைந்த இருடீகேசன் தனக்குத்
தொண்டக்குலத்திலுள்ளீர்! வந்தடிதொழுது ஆயிரநாமம் சொல்லிப்
பண்டைக்குலத்தைத்தவிந்து பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்மினே.

எந்தைதந்தை தந்தைதம் மூத்தப்பன் ஏழ்படிகால்தொடங்கி
வந்துவழிவழியாட்செய்கின்றோம் திருவோணத்திருவிழவில்
அந்தியம்போதிலரியுருவாகி அரியையழித்தாவனைப்
பந்தனைதீரப்பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்றுபாடுதுமே.

தீயிற்பொலிகின்றசெஞ்சுடராழி திகழ்திருச்சக்கரத்தின்
கோயிற்பொறியாலேயொற்றுண்டுநின்று குடிகுடியாட் செய்கின்;றோம்
மாயப்பொருபடைவாணனை ஆயிரந்தோளும் பொழிகுருதி -
பாயச், சுழற்றியவாழிவல்லானுக்குப் பல்லாண்டுகூறுதுமே.

நெய்யெடைநல்லதோர்சோறும் நியதமும்மத்தாணிச்சேவகமும்
கையடைக்காயும் கழுத்துக்குப்பூணொடு காதுக்குக்குண்டலமும்
மெய்யிடநல்லதோர்சாந்தமும்தந்து என்னைவெள்ளுயிராக்கவல்ல
பையுடைநாகப்பகைக்கொடியானுக்குப் பல்லாண்டுகூறுவனே.

உடுத்துக்களைந்தநின்பீதகவாடையுடுத்துக் கலத்ததுண்டு
தொடுத்ததுழாய்மலர் சூடிக்களைந்தன சூடுமித்தொண்டர்களோம்
விடுத்ததிசைக்கருமம்திருதித் திருவோணத்திருவிழவில்
படுத்தபைந்நாகணைப்பள்ளிகொண்டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே.

எந்நாளெம்பெருமான் உன்தனக்கடியோமென்றெழுத்துப்பட்ட-
அந்நாளே, அடியோங்களடிக்குடில் வீடுபெற்றுய்ந்ததுகாண்
செந்நாள்தோற்றித் திருமதுரையுள்சிலைகுனித்து, ஐந்தலைய -
பைந்நாகத்தலைப்பாய்ந்தவனே உன்னைப்பல்லாண்டுகூறுதுமே.

*அல்வழக்கொன்றுமில்லா அணிகோட்டியர்கோன், அபிமானதுங்கன்
செல்வனைப்போலத் திருமாலே! நானுமுனக்குப்படிவடியேன்
நல்வகையால் நமோநாராயணாவென்று நாமம்பலபரவிப்
பல்வகையாலும் பவித்திரனே! உன்னைப்பல்லாண்டுகூறுவனே.

* பல்லாண்டென்றுபவித்திரனைப் பரமேட்டியைச், சார்ங்கமென்னும்
வில்லாண்டான்தன்னை வில்லிபுத்தூர்விட்டுசித்தன்விரும்பியசொல்
பல்லாண்டென்றுநவின்றுரைப்பார் நமோநாராயணாயவென்று
பல்லாண்டும்பரமாத்மனைச் சூழ்ந்திருதேத்துவர்பல்லாண்டே.

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கார்த்திகை மைந்தா வேல்முருகா கணிந்தருள் செய்வாய் வேல்முருகா
போற்றிடவந்தோம் வேல்முருகா  புண்ணியம் சேர்ப்பாய் வேல்முருகா 

வேல்முருகா திருவேல்முருகா வெற்றிகள் தருவாய் மால்மருகா
வேல்முருகா திருவேல்முருகா வெற்றிகள் தருவாய் மால்மருகா

சக்தியின் பிள்ளை வேல்முருகா சண்முகநாதா வேல்முருகா
பக்தியில் உன்னை வேல்முருகா பணிந்திட வந்தோம் வேல்முருகா

உத்தமர் போற்றும் வேல்முருகா உன்னடிபணிவோம் வேல்முருகா
சித்தம் குளிர்வாய் வேல்முருகா செய்திடுவாயருள் வேல்முருகா

அறுமுகன் நீயே வேல்முருகா அரவணைப்போனே வேல்முருகா
கருணையின் வடிவே வேல்முருகா களிப்புறச் செய்வாய் வேல்முருகா

திருமுகம் காட்டி வேல்முருகா தீவினை மீட்கும் வேல்முருகா
ஒருதரம் உன்னை வேல்முருகா வணங்கிட நன்மை வேல்முருகா

அறிவினைப் பேருக்கும் வேல்முருகா அன்பினை வளர்ப்பாய் வேல்முருகா
பெருமைகள் சேர்ப்பாய் வேல்முருகா பிழைகளை களைவாய் வேல்முருகா

குருபரன் நீயா வேல்முருகா குமரனும் நீயே வேல்முருகா
வரும்வினைத் தீர்க்கும் வேல்முருகா வளமுடன் காப்பாய் வேல்முருகா

குறமகள் வள்ளியை மணம்முடித்தாயே வேல்முருகா
சமநிலை ஓங்கிட வேல்முருகா நெறிதனை வகுத்தாய் வேல்முருகா

சூரனை வென்றாய் வேல்முருகா சோதனைத் தீர்த்தாய் வேல்முருகா
மாமயிலேறி வேல்முருகா வலம்வருவோனே வேல்முருகா

கணபதி இளையோன் வேல்முருகா கருணைபுரிவாய் வேல்முருகா
துணைவருவாயே வேல்முருகா தொழுதிடுவோமே வேல்முருகா

அறுபடைவீடு வேல்முருகா அழகுடன் கொண்டாய் வேல்முருகா
திருவருள் செய்திட வேல்முருகா எழிலுடன் நின்றாய் வேல்முருகா

ஆறெழுத்தோனே வேல்முருகா அபயம் தருவாய் வேல்முருகா
தேரிழுப்போமே வேல்முருகா திருவடிப் பணிந்தே வேல்முருகா

சீறிடும் பகைமை வேல்முருகா சிதறிட வைப்பாய் வேல்முருகா
கூறிடும் அன்பில் வேல்முருகா ஒன்றிட வேண்டும் வேல்முருகா

பூவுலகெங்கும் வேல்முருகா புதுமைகள் பரவிட வேல்முருகா
நீயருள் செய்வாய் வேல்முருகா நின்தழல் பணிந்தோம் வேல்முருகா

வானவர் போற்றும் வேல்முருகா வடிவழகோனே வேல்முருகா
தேனமுதான வேல்முருகா தீந்தமிழ்த் தந்தாய் வேல்முருகா

சுப்ரமண்யனே வேல்முருகா சொக்கிடும் எழிலே வேல்முருகா
செப்பிடும் போதே வேல்முருகா செந்தேன் ஊறிடும் வேல்முருகா

கங்கையின் புதழ்வா வேல்முருகா கைகொடுப்பாயே வேல்முருகா
கையினில் கூசம் வேல்முருகா தாழ்பணிவோமே வேல்முருகா

மாமலை மருதம் வேல்முருகா மகிழ்வுடன் கண்டாய் வேல்முருகா
காவலும் நீயே வேல்முருகா கைதொழுவோமே வேல்முருகா

தண்டம் ஏந்தி வேல்முருகா தனித்திருப்போனே வேல்முருகா
குன்றம் நாடி வேல்முருகா குடியிருப்போனே வேல்முருகா

குகன் வடிவோனே வேல்முருகா கும்பிடவந்தோம் வேல்முருகா
மகிழ்வினையளிப்பாய் வேல்முருகா மலரடிப் பணிந்தோம் வேல்முருகா

கோதண்டபாணி வேல்முருகா குலத்தைக் காப்பாய் வேல்முருகா
பாதம் பணிந்தோம் வேல்முருகா பழநியாண்டவா வேல்முருகா

செந்தில்நாதர் வேல்முருகா செய்திடுவாயருள் வேல்முருகா
உந்தன் நாமம் வேல்முருகா உரைத்திட வந்தோம் வேல்முருகா

முத்துகுமாரா வேல்முருகா மோகனவடிவே வேல்முருகா
முக்தியைத் தருவாய் வேல்முருகா முன்வினைத் தீர்ப்பாய் வேல்முருகா

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாகூர் ஹனிபாவின் எங்கும் நிறைந்தோனே இரு கரம் ஏந்துகிறேன்|

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செய்திடவே இறைவன் வருகின்றான் பிறரை அன்பு செய்திடவே இதயம் தருகின்றான் 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மருதமலை சத்தியமா 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓடி வா முருகா நீ ஆடி வா முருகா

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிவ ஷக்திய தூயது பவதி ..
சத்தியப் பிரபிவிதும் ..
நசே தேவம் தேவோனகள குசலஹச்பந்திதுமபீ ..
அகஸ்த்மாம் ..ஆராத்யாம் ..
ஹரிஹர விரிஞ்சாதி பிறவி .
ப்ரனம்தும் ஸ்தோதும் ம ..
கதமஹிர்த்த புண்யாக பிரபாவதி ...ஆ 

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ

ஒரு மான் மழுவும் கூன் பிறையும் 
சடை வார் குழலும் பிடை வாகனமும்
கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே
நின்ற நாயகியே இட பாகத்திலே 
ஜகன் மோஹினி நீ சிம்ம வாஹினி நீ
ஜனனி ....

சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும்
ஷன் மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்
அஷ்ட யோகங்களும் நவ யாகங்களும்
தொழும் பூங்கழலே  மலை மாமகளே
அலை மாமகள் நீ கலை மாமகள் நீ.

ஜனனி ....

ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த
லிங்க ரூபிணியே மூகாம்பிகையே 
பல ஸ்தோத்திரங்கள் தர்ம சாத்திரங்கள்
பணிந்தே துவழும் மணி நேத்திரங்கள்
சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ.


ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தூயோன் அல்லாஹ் திருப்பெயர் கூறி 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு -4
என் இயேசையா அல்லேலூயா -4

இன்பத்திலும் நீரே, துன்பத்திலும் நீரே -2
எவ்வேளையும் ஐயா நீர் தானே -2  - உம்மை அல்லாமல்

என் ஸ்நேகமும் நீரே, என் ஆசையும் நீரே -2
என் எல்லாமே ஐயா நீர் தானே  -2   - உம்மை அல்லாமல்

இம்மையிலும் நீரே, மறுமையிலும் நீரே  -2
எந்நாளுமே ஐயா நீர்தானே -2  - உம்மை அல்லாமல்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓம் ஆஞ்சனேய நமோ

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரகுபதி ராகவ ராஜாராம்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது!
சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது!
கந்தகிரி கோவில் வந்தால்
நன்மையெல்லாம் நடக்குது..!

நித்தமும் பாலிலே நீராட்டுவோம்
பச்சை நிறத்திலே பட்டாடை நாம் கட்டுவோம்!
நித்தமும் பாலிலே நீராட்டுவோம்
பச்சை நிறத்திலே பட்டாடை நாம் கட்டுவோம்!
திருநீறின் தத்துவம் தந்தையென்போம்! அதில்
திகழும் குங்குமத்தை அன்னையென்போம்!
திருநீறின் தத்துவம் தந்தையென்போம்! அதில்
திகழும் குங்குமத்தை அன்னையென்போம்!

சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது
கந்தகிரி கோவில் வந்தால்
நன்மையெல்லாம் நடக்குது..!

பன்னிரு விழிகளில் மை தீட்டுவோம்!
பன்னிரு செவிகளில் நகை பூட்டுவோம்!
பன்னிரு விழிகளில் மை தீட்டுவோம்!
பன்னிரு செவிகளில் நகை பூட்டுவோம்!
திருமார்பில் ஒளிவீசும் கவசமிட்டு
தேன்சிந்தும் முல்லைப்பூ மாலை அணிவோம்!
திருமார்பில் ஒளிவீசும் கவசமிட்டு
தேன்சிந்தும் முல்லைப்பூ மாலை அணிவோம்!


விரலுக்கு மோதிரம் பவளத்திலே!
கையில் விளையாடும் கங்கணங்கள் வைரத்திலே!
முருகன் விரலுக்கு மோதிரம் பவளத்திலே!
கையில் விளையாடும் கங்கணங்கள் வைரத்திலே!
தங்கத் திருப்பாதம் வணங்கும்போது,
தங்கத் திருப்பாதம் வணங்கும்போது,
பெறுகின்ற சுகத்திற்கு எல்லையேது!
பெறுகின்ற சுகத்திற்கு எல்லையேது!

சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது
கந்தகிரி கோவில் வந்தால்
நன்மையெல்லாம் நடக்குது..!


மயில்மீது மன்னனை இருக்கவைத்து
ஏழு ஸ்வரம் பாடும் கிங்கிணி சலங்கை கட்டி
மயில்மீது மன்னனை இருக்கவைத்து
ஏழு ஸ்வரம் பாடும் கிங்கிணி சலங்கை கட்டி
வெற்றிவேலுடன் சேவல் கொடி ஏற்றிவைத்து,
வெற்றிவேலுடன் சேவல் கொடி ஏற்றிவைத்து,
இந்த ராஜாதி ராஜனுக்கு முடி சூட்டுவோம்!
இந்த ராஜாதி ராஜனுக்கு முடி சூட்டுவோம்!

சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது
கந்தகிரி கோவில் வந்தால்
நன்மையெல்லாம் நடக்குது..!
சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது
கந்தகிரி கோவில் வந்தால்
நன்மையெல்லாம் நடக்குது..!
நன்மையெல்லாம் நடக்குது..!
நன்மையெல்லாம் நடக்குது..!

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முருகா ! முருகா ! முருகா ! முருகா! முருகா ! முருகா !  
என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இரங்க வில்லை! 
இன்னும் என்ன சோதனையா ? முருகா ! முருகா ! 

அன்னையும் அறிய வில்லை ! 
தந்தையோ நினைப்பதில்லை   !
மாமியும்    பார்ப்பதில்லை ! 
மாமனோ  கேட்பதில்லை ! ( என்ன கவி ) 

அட்சர லட்சம்  ! அட்சர லட்சம்  தந்த  அண்ணல்  போஜ ராஜன் இல்லை !
பட்ச முடனே அழைத்து பரிசளிக்க யாருமில்லை ! 
இக்கணத்தில்   நீ நினைத்தால் எனக்கோர்  குறைவில்லை ! 
 லட்சியமோ உனக்கு !   முருகா ! உன்னை நான் விடுவதில்லை !

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ராகம் வராளி தாளம் ஆதி

பல்லவி

கா வாவா கந்தா வாவா எனைக் கா வா வேலா வா
பழநிமலை யுறையு முரு (கா)

அனுபல்லவி

தேவாதிதேவன் மகனே வா - பர
தேவி மடியி லமரும் குஹனே வா வள்ளி -
தெய்வயானை மணவாளா வா - சர
வணபவ பரமதயாள ஷண்மு (கா)

சரணம்

ஆபத்திருளற அருளொளி தரும் அப்பனே அண்ணலே ஐயா வா
பாபத் திரள் தரும் தாபம் அகல வரும் பழநி வளர் கருணைமழையே வா
தாப த்ரய வெயிலற நிழல்தரும் வான் தருவே என் குலகுருவே வா
ஸ்ரீபத்மநாபன் மருகா ராமதாஸன் வணங்கும் முத்தய்யா விரைவொடு (கா

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரமலான் புனித ரமலான்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன் (2 )
தாயென்று உன்னைத்தான் (2 )
 பிள்ளைக்கு காட்டினேன் மாதா  
மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்

மேய்ப்பன் இல்லாத மந்தை வழிமாறுமே (2 )
மேரி உன் ஜோதி கண்டால் விதி மாறுமே 
மெழுகுபோல் உருகினோம் கண்ணீரை மாற்றவா - மாதா 
மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்

காவல் இல்லாத ஜீவன் கண்ணீரிலே (2 )
தரைகண்டிடாத ஓடம் தண்ணீரிலே 
அருள்தரும் திருச்சபை மணிஓசை கேட்குமோ - மாதா 
மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்

பிள்ளைப பெறாத பெண்மை தாயானது (2 )
அன்னை இல்லாத மகனை தாலாட்டுது 
கர்த்தரின் கட்டளை நான் என்ன சொல்வது - மாதா 
மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்
தாயென்று உன்னைத்தான் (2 )
 பிள்ளைக்கு காட்டினேன் மாதா  
மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்
ம்ம்...ம்ம்..ம்ம்ம்........

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமைதி தேடி அலையும் நெஞ்சமே
அனைத்தும் இங்கு அவரில் தஞ்சமேஅமைதி தேடி அலையும் நெஞ்சமே
அனைத்தும் இங்கு அவரில் தஞ்சமே
நிலையான சொந்தம் நீங்காத பந்தம் 
நிலையான சொந்தம் நீங்காத பந்தம் 
அவரன்றி வேறில்லையே
அமைதி தேடி அலையும் நெஞ்சமே
அனைத்தும் இங்கு அவரில் தஞ்சமேபோற்றுவேன் என் தேவனை பறைசாற்றுவேன் என் நாதனை 
எந்நாளுமே என் வாழ்விலே போற்றுவேன் என் தேவனை பறைசாற்றுவேன் என் நாதனை
எந்நாளுமே என் வாழ்விலே காடு மேடு பள்ளம் என்று கால்கள் சோர்ந்து அலைந்த ஆடு
நாடுதே அது தேடுதே காடு மேடு பள்ளம் என்று கால்கள் சோர்ந்து அலைந்த ஆடு
நாடுதே அது தேடுதே அமைதி தேடி அலையும் நெஞ்சமே
அனைத்தும் இங்கு அவரில் தஞ்சமேஇறைவனே என் இதயமே இந்த இயற்கையின் நல் இயக்கமே
என் தேவனே என் தலைவனே இறைவனே என் இதயமே இந்த இயற்கையின் நல் இயக்கமே
என் தேவனே என் தலைவனே பரந்து விரிந்த உலகம் படைத்து  சிறந்த படைப்பாய் என்னைக் கண்ட
தேவனே என் ஜீவனே பரந்து விரிந்த உலகம் படைத்து  சிறந்த படைப்பாய் என்னைக் கண்ட
தேவனே என் ஜீவனேஅமைதி தேடி அலையும் நெஞ்சமே
 அனைத்தும் இங்கு அவரில் தஞ்சமேஅமைதி தேடி அலையும் நெஞ்சமே
அனைத்தும் இங்கு அவரில் தஞ்சமே
நிலையான சொந்தம் நீங்காத பந்தம் 
நிலையான சொந்தம் நீங்காத பந்தம் 
அவரன்றி வேறில்லையேஅமைதி தேடி அலையும் நெஞ்சமே
அனைத்தும் இங்கு அவரில் தஞ்சமே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

யோகநாதனே || பாடியவர் :S P பாலசுப்ரமணியம் || இசை : வீரமணி கண்ணன் || வரிகள்: வாரஸ்ரீ || ராகு பெயர்ச்சி பாடல்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கூவி அழைத்தால் குரல் கொடுப்பான்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

துணை வருவாய் என் தாயே

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.