Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நம்பிக்கையானை தூய விநாயகனை
நினை மனமே
நினை மனமே
தினம் அவனை நினைத்தாலே
துன்பம் பறந்திடும் அருளும் கிடைத்திடும்

 

 

  • Replies 2.9k
  • Views 225.1k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • உடையார்
    உடையார்

  • Maruthankerny
    Maruthankerny

    இணைப்புக்கு நன்றி உடையாரண்ணா  இவரின் குரலில் சில இஸ்லாமிய பாடல்கள்  மனதையே கொள்ளை கொண்டுவிடும்  சில வருடங்கள் முன்பு ஒரு யூஸ்பி யில் பதிந்து வைத்திருந்தேன்  எங்கோ தவற விட்டுவிட்ட்டேன் ... ம

  • உடையார்
    உடையார்

    யேசுவே எனக்கு என்று யாருமேயில்லை   

  • கருத்துக்கள உறவுகள்

சங்கடங்கள் தீர்க்கின்ற சதுர்த்தி நாயகனே

சந்தன கணபதியே நலம் தருவாயப்பா

கல்வழை நாயகனே அருள் தருவாயப்பா

பாலும் இளநீரும் பஞ்சாமிர்தமும் நாளும் அபிசேகம்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

கல்வளையான் சந்நிதியில் கண்கள் மூடி கும்பிடவே
தொல்லயெல்லாம் நீங்கிவிடும் பாருங்க
இந்த தும்பிக்கையான் அற்புதத்தை கேளுங்க
 என்றும் கருணையின் வடிவான

 

  • கருத்துக்கள உறவுகள்

கல்வளை அழகோன் நாயகனே உன்னை
கைகூப்பி தொழுகின்றோம் நாயகனே
கல்வளை அழகோன் நாயகனே உன்னை
கைகூப்பி தொழுகின்றோம் நாயகனே
வல்வினைகள் நீக்கி எமை காத்திடய்யா
கல்வளையாரின்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

வேழ முகனே ஆளய்யா வேளை இதுவே தானையா அய்யா

வேழ முகனே ஆளய்யா வேளை இதுவே தானையா

ஈழ கருணையம் பதி தலத்தில் கோவில் கொண்ட முத்த விநாயகா

ஈழ கருணையம் பதி தலத்தில் கோவில் கொண்ட முத்த விநாயகா

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சந்தன வாசம் வீசும் சபரி காட்டிலே வாழும்

அய்யப்பா சாமியே அய்யப்பா அய்யப்பா

சுந்தர வதனம் கண்டவர் வாழ்வினிலே

சுகங்கள் ஒன்றல்ல நூறப்பா

காலையில் உதயம் காண்கின்ற பொது

கண்ணனின் மைந்தா உன் முகம்தெரியும்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஞானாம்பிகை தாயே போற்றி

ஞானலிங்கர் திருவே போற்றி

சிவமே போற்றி

இன்பத்தமிழே போற்றி போற்றி

ஞானலிங்கன் வருகிறான்

ஞானமள்ளி தருகிறான்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

மாதர் மடப்பிடி யும்மட வன்னமு மன்னதோர்

நடை யுடைம் மலை மகள் துணையென மகிழ்வர்

பூதவி னப்படை நின்றிசை பாடவு மாடுவர்

அவர் படர் சடை நெடு முடியதொர் புனலர்

வேதமொ டேழிசை பாடுவ ராழ்கடல் வெண்டிரை

இரைந் நுரை கரை பொரு துவிம்மி நின்றயலே

தாதவிழ் புன்னை தயங்கு மலர்ச்சிறை வண்டறை

எழில் பொழில் குயில் பயில் தருமபு ரம்பதியே

 

 

  • கருத்துக்கள உறவுகள்

கயமுகா உனக்கென்ன தயிரியமா

சிவனிடம் வரம் பெற்ற ஆணவமா

காலனை வதம் செய்ய கங்கணமா க

டவுளை மதியாத திமிர்க்குணமா

தீர்ந்தது உன் கதை தீர்ந்தது உன் கதை

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நவதழ கோபுரம் வாய்த்தவளே

நயினை நகருறையும் நாக பூசணியே

பாவ வினை நீக்கிட அப்பரவன்சல்லி

பாங்குற வீற்றிருந்து ஆள்பவளே

 

  • கருத்துக்கள உறவுகள்

நாகம்மை பாதத்தை நாடுமடா

இது நமக்கின்ப மோட்ச வீடடா

அலை கடல் சூழ்ந்த தலமடா

அறுபத்துனால்பீட திலகமடா

நாகம்மை பாதத்தை நாடுமடா

 

 

  • கருத்துக்கள உறவுகள்

மாரியம்மா மாரியம்மா தேரில் ஏறிவாரா இங்கு தேரில் எறிவாரா

எம்மை தேடி எல்லோ மாரியம்மா நேரில் காண வாரா

எம்மை நேரில் காண வாரா

ஊரில் உள்ள வினைகளெல்லாம் தூர ஓட்டபோறா

 

 

  • கருத்துக்கள உறவுகள்

வடிவேலன் வடிவம் கண்டேன்

மூளாயூர் வதிரன் புலோவாசல் வந்ததுமே

நெற்றிக்கண் பொறியொன்று வந்து விழுந்ததுபோல்

வெற்றிவேல் ஆயுதனின் வீடிங்கு எழுந்ததுவோ

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆதி தொட்டு அரசடியில்

ஒற்றுமையே எங்கள் முதல்ப்படி

அதைத்தந்தது ஐங்கரனே உன் அருள்ப்படி

யோதி கொண்டு வாழுகின்றோம்

சொன்னபடி அப்பனே நீ

 

 

  • கருத்துக்கள உறவுகள்

விழியோரம் கனவொன்று தெரிந்தது அய்யா

நான் விழித்தெழுந்து பார்த்தது உன் முகம் அய்யா

மனதோடு மனவலிமை சேர்ந்தது அய்யா

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்டாண்டு காலமாய் நாம் ஆண்ட பூமியின்


நாயகன் நல்லை  கந்தன்

அந்த வேல் காணும் நாள் எண்ணி

பாரினில் போராடும் ஊமை உள்ளம்

எந்தன் செவ்வேள் எழுந்தெப்போது நாடாளும்

நல்லைக்கந்தனே நம்மை

நம்மாளும் நாளென்று கை  கூடும் 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆடு கின்றிலை கூத்துடை யான்கழற்
கன்பிலை என்புருகிப்
பாடு கின்றிலை பதைப்பதுஞ் செய்கிலை
பணிகிலை பாதமலர்
சூடு கின்றிலை சூட்டுகின் றதுமிலை
துணையிலி பிணநெஞ்சே
தேடு கின்றிலை தெருவுதோ றலறிலை
செய்வதொன் றறியேனே.

 

  • கருத்துக்கள உறவுகள்

அந்திக்குளி வைரவா அந்திக்குளி வைரவா
அருள் மழை அள்ளித்தரும் அந்திக்குளி வைரவா
எம் சந்ததியை காத்திடுவாய் அந்திக்குளி வைரவா
 அந்திக்குளி வைரவா அந்திக்குளி வைரவா

 

  • கருத்துக்கள உறவுகள்

யாரறிவார் லீலை  விளையாடுவது அவன் வேலை
யாரறிவார் லீலை  விளையாடுவது அவன் வேலை
நீரலையை தாலாட்ட நெடுநாளாய் ஆடிநின்றான்
சூரர் குலம் வேரறுத்தான் தேவர் குலம் காத்து நின்றான்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணா கண்ணா கண்ணா
காத்தருள்வாய்  காத்தருள்வாய் கண்ணா வந்தோமே
கருணை கடல் நாயகனே கண்ணா வந்தோமே
நீலமேனி கோலம் காண கண்ணா வந்தோமே
நித்தம் உந்தன் பூசை காண கண்ணா வந்தோமே 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

பருத்தி நகர் கிழக்கே வல்லிபுரம் அமர்ந்த பராமதாமா
பாற்கடலில் குடியிருக்கும்

கண்ணா உன்னிடம் வந்தோம் நாம்
கருணை கடலே அருள் புரிவாய்
இன்பம் துன்பம் இரண்டிலுமே நாம்
இணைந்து வாழ்ந்திட அருள் புரிவாய்

 

  • கருத்துக்கள உறவுகள்

முனியாண்டி வடிவெடுத்து அமர்ந்தவனே
முனியாண்டி வடிவெடுத்து அமர்ந்தவனே
இந்த பூவுலகும் பாடுகின்ற  பரம் பொருளே  

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சாம்பல் மண்ணில் வீற்றிருக்கும்  
துர்க்கை  அம்மன் தாயே
 மாநிலமும் தொழுதெற்க்கும் எங்கள் தேவி நீயே
நாடி உன்னை சரணடைந்தோம் துர்க்கை அம்மன் தாயே
 நாயகியே திருவருளால் காக்கவேண்டும் நீயே

 

  • கருத்துக்கள உறவுகள்

கால கணபதி கருணை கணபதி
தர்மத்தை காத்திட வருவாயா
விரகணபதி சக்தி கணபதி
நல்வழி தந்திட வருவாயா
நிதிய கணபதி நிர்த்திய
கணபதி எம்மை காத்திட வருவாயா

 

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சிவபுராணம்

தொல்லை இரும்பிறவிச் சூழும் தளை நீக்கி
அல்லல் அறுத் தானந்தம் ஆக்கியதே - எல்லை
மருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன்
திருவாசகம் என்னும் தேன்
(திருப்பெருந்துறையில் அருளியது தற்சிறப்புப் பாயிரம்)


சிவபுராணம்
நமச்சிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க
நமச்சிவாய இமைப் பொழுதும் என் நெஞ்சில்! நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க


வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க
பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் தன்பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரம் குவிவார் உள்மகிழும் கோன் கழல்கள் வெல்க
சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் குழல் வெல்க

ஈசன் அடி போற்றி! எந்தை அடி போற்றி!
தேசன் அடி போற்றி ! சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீர் ஆர் பெருந்துறை நம்தேவன் அடி போற்றி

 


ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான்

கண் நுதலான் தன் கருணைக் கண் காட்ட வந்து எய்தி
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர் கழல் இறைஞ்சி
விண் நிறைந்து மண் நிறைந்து மிக்காய் விளங்கு ஒளியாய்
எண் நிறைந்து எல்லை இலாதானே நின் பெரும் சீர்
பொல்லா வினையேன் புகழும் ஆறு ஒன்று அறியேன்

புல் ஆகிப் பூடு ஆய்ப் புழுஆய் மரம் ஆகிப்
பல் விருகம் ஆகிப் பரவை ஆய் பாம்பு ஆகிக்
கல் ஆய் மனிதர் ஆய்ப் பேய் ஆய்க் கணங்கள் ஆய்
வல் அசுரர் ஆகி முனிவர் ஆய் தேவர் ஆய்ச்
செல்லா அ நின்ற இத்தாவர சங்கமத்துள்

 

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றே
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரம் ஆய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே!

வெய்யாய் தணியாய் இயமானன் ஆம் விமலா
பொய் ஆயின எல்லாம் போய் போய் அகல வந்து அருளி
மெய்ஞானம் வி.மிளிர்கின்ற மெய்சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல் விக்கும் நல் அறிவே

 

ஆக்கம் அளவு இறுதி இல்லாய் அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய்! சேயாய் நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே

கறந்த பால் கன்னலோடு நெய் கலந்தாற் போலச்
சிறந்து அடியார் சிந்தனையுள் தேன் ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்துடையாய்! விண்ணோர்கள் ஏத்த
மறைந்து இருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை

மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டிப்
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய

விலங்கு மனத்தால் விமலா உனக்குக்
கலந்த அன்பு ஆகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன் மேல் வந்து அருளி நீள் கழல்கள் காட்டி
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்

 

தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே!
மாசு அற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே!
தேசனே தேன் ஆர் அமுதே! சிவபுரனே

பாசம் ஆம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள் புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப்

பேராது நின்ற பெரும் கருணைப் பேர் ஆறு
ஆரா அமுதே! அளவு இலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆர் உயிர் ஆய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே! உள்ளானே

அன்பருக்கு அன்பனே! யாவையுமாய் அல்லையுமாய்
சோதியனே! துன் இருளே! தோன்றாப் பெருமையனே
ஆதியனே! அந்தம் நடு ஆகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட் கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய்ஞானத்தால் கொண்டு உணர்வார் தம் கருத்தின்

நோக்கு அரிய நோக்கே நுணுக்கு அரிய நுண் உணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் எம் காவலனே ! காண்பு அரிய பேர் ஒளியே
ஆற்று இன்ப வெள்ளமே ! ஆத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச், சொல்லாத நுண் உணர்வாய்

 

மாற்றம் ஆம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே ! தேற்றத் தெளிவே ! என் சிந்தனையுள்
ஊற்றான உண்ணார் அமுதே! உடையானே
வேற்று விகார விடக்குடம்பின் உட் கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா! அரனே ஓ ! என்று என்று

போற்றிப் புகழ்ந்து இருந்து பொய் கெட்டுமெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப் பிறவி சாராமே

கள்ளப் புலக் குரம்பை கட்டு அழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லையுள் கூத்தனே! தென் பாண்டி நாட்டானே!

அல்லல் பிறவி அறுப்பானே! ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக் கீழ்ச்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக் கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.