Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகம் தோன்றிட காரணமான.. உத்தம நபி மகள் 

 

  • Replies 2.9k
  • Views 225.3k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • உடையார்
    உடையார்

  • Maruthankerny
    Maruthankerny

    இணைப்புக்கு நன்றி உடையாரண்ணா  இவரின் குரலில் சில இஸ்லாமிய பாடல்கள்  மனதையே கொள்ளை கொண்டுவிடும்  சில வருடங்கள் முன்பு ஒரு யூஸ்பி யில் பதிந்து வைத்திருந்தேன்  எங்கோ தவற விட்டுவிட்ட்டேன் ... ம

  • உடையார்
    உடையார்

    யேசுவே எனக்கு என்று யாருமேயில்லை   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1. துதித்துப் பாடிட பாத்திரமே
துங்கவன் இயேசுவின் நாமமதே
துதிகளின் மத்தியில் வாசம் செய்யும்
தூயனை நேயமாய் ஸ்தோத்தரிப்போமே

ஆ! அற்புதமே அவர் நடத்துதலே
ஆனந்தமே பரமானந்தமே
நன்றியால் உள்ளமே மிக பொங்கிடுதே
நாம் அல்லேலூயா துதி சாற்றிடுவோம்

2. கடந்த நாட்களில் கண்மணிபோல்
கருத்துடன் நம்மைக் காத்தாரே
கர்த்தரையே நம்பி ஜீவித்திட
கிருபையும் ஈந்ததால் ஸ்தோத்தரிப்போமே

3. அக்கினி ஊடாய் நடந்தாலும்
ஆழியில் தண்ணீரைக் கடந்தாலும்
சோதனையோ மிகப் பெருகினாலும்
ஜெயம் நமக்கீந்ததால் ஸ்தோத்தரிப்போமே

4. இந்த வனாந்திர யாத்திரையில்
இன்பராம் இயேசு நம்மோடிருப்பார்
போகையிலும் நம் வருகையிலும்
புகலிடம் ஆனதால் ஸ்தோத்தரிப்போமே

5. வாஞ்சைகள் தீர்த்திட வந்திடுவார்
வாரும் என்றே நாம் அழைத்திடுவோம்
வானத்திலே ஒன்று சேர்ந்திடும் நாள்
விரைந்து நெருங்கிட ஸ்தோத்தரிப்போமே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கண்மணியே விண்மணியே பொன்மணியே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாவிளக்கு போடவந்தோம்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓம் என்ற ப்ரணவ ஸ்வரூபனே
சிவ சரவணபவ குக சண்முகனே
சரணம் சரணம் சரணம் வடிவேலா
குருபர சிவ கந்தய்யா . . .

வேலுண்டு வினை இல்லையே
உந்தன் தாளின்றி கதி இல்லையே

சரவணனே சண்முகனே ஸ்வாமிமலையாளும் முருகா
பவ குகனே பாலகனே ஞானச்சிலையான முருகா

சிந்தையெங்கும் சொந்தமாகி வந்தே
உந்தன் புகழை பாடும் எண்ணம் தந்தே

நாவினில் நாமம் நாளும் பெருக செய்வாய் முருகா

தந்தை மடியில் அமரும் ஒரு நிலையும் தவமானதே
தந்தை செவியில் மொழியும் குரு நிலையும் சுவையானதே

ஐம்முகம் தோன்றிய ஆறுமுகா எங்கள்
ஐம்புலனை ஆளும் ஞான குகா

வேத ரூப ஆனனா நாதமாக ஆனவா
சங்கதம் நெஞ்சினில் வந்து மகிழ்ந்திடும் முருகா குமரய்யா

முருகா முருகா முருகா முருகா

ப்ரணவம் என்னும் நாதம் அது மலையின் ரீங்காரமே
பரமா உனது தோற்றம் அதன் பொருளும் ஓங்காரமே

அன்பரை வாவென்னும் ஏரகனே
அவர் அறிவினில் சுடர்விடும் ஆரணனே

ஸ்வாமிநாத நாயகா ஞானமேற நீயுமா
மந்திரமாகிய சுந்தர குருவே வருவாய் முருகய்யா

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த
அந்த நாளும் வந்திடாதோ ! நந்த குமாரன்
விந்தை புரிந்த அந்த நாளும் வந்திடாதோ !

அனைவரும் கூடி அவன் புகழ் பாடி
நிர்மல யமுனா நதியினில் ஆடி
வனம் வனம் திரிந்து வரதனைத் தேடி 
அனுதினம் அமுதனை தரிசனம் செய்த (அந்த)

மானினம் நாணிடும் மங்கையரோடு
மாதவத்தோரும் மயங்கிடுமாறு
தேனினும் இனித்திடும் தீங்குழல் ஊதி
மானிடர் தேவரின் மேல் என செய்தான் !

கானனம் அருங்கானனம் சென்று ஆநிரை கன்று
கருணை மாமுகில் மேய்த்திட - அன்று
புனித மேனியில் புழுதியும் கண்டு
வானோர் பூமியை விழைந்ததும் உண்டு

போதமிலா ஒரு பேதை மீரா
ப்ரபு கிரிதாரி இதய சஞ்சாரி 
வேதமும் வேதியர் விரிஞ்சனும் தேடும்
பாத மலர்கள் நோக நடந்த (அந்த)

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒங்காரமே அது கன நாதமே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 கருணை உள்ளம் கொண்டவன்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன என் ஆனந்தம்! என்ன என் ஆனந்தம்!
சொல்லக் கூடாதே
மன்னன் கிறிஸ்து என் பாவத்தையெல்லாம்
மன்னித்து விட்டாரே

1. கூடுவோம் ஆடுவோம் பாடுவோம் ஒன்றாய்
மகிழ் கொண்டாடுவோம்
நாடியே நம்மை தேடியே வந்த
நாதனை ஸ்தோத்தரிப்போம்

2. பாவங்கள் சாபங்கள் கோபங்கள் எல்லாம்
பரிகரித்தாரே
தேவாதி தேவன் என் உள்ளத்தில் வந்து
தங்கியே விட்டாரே

3. அட்சயன் பட்சமாய் இரட்சிப்பை எங்களுக்கு
அருளினதாலே
நிச்சயம் ஸ்வாமியை பற்றிய சாட்சி
பகர வேண்டியதே

4. வெண்ணங்கி பொன்முடி வாத்தியம் மேல் வீட்டில்
ஜெயக் கொடியுடனே
மண்ணுலகில் வந்து விண்ணுலகம் சென்ற
மன்னனை ஸ்தோத்தரிப்போ

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நந்தா விளக்கே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருவடைந்து பத்துற்ற திங்கள்
வயிறிருந்து முற்றிப்ப யின்று
கடையில்வந்து தித்துக்கு ழந்தை, வடிவாகிக்
கழுவியங்கெ டுத்துச்சு ரந்த
முலையருந்து விக்கக்கி டந்து
கதறியங்கை கொட்டித்த வழ்ந்து, நடமாடி
அரைவடங்கள் கட்டிச்ச தங்கை
இடுகுதம்பை பொற்சுட்டி தண்டை
அவையணிந்து முற்றிக்கி ளர்ந்து, வயதேறி
அரியபெண்கள் நட்பைப்பு ணர்ந்து
பிணியுழன்று சுற்றித்தி ரிந்த
தமையுமுன்க்ரு பைச்சித்தம் என்று, பெறுவேனோ
இரவிஇந்த்ரன் வெற்றிக்கு ரங்கி
னரசரென்றும் ஒப்பற்ற உந்தி
யிறைவன்எண்கி னக்கர்த்த னென்றும், நெடுநீலன்
எரியதென்றும் ருத்ரற்சி றந்த
அநுமனென்றும் ஒப்பற்ற அண்டர்
எவரும்இந்த வர்க்கத்தில் வந்து, புனமேவ
அரியதன்ப டைக்கர்த்த ரென்று
அசுரர்தங்கி ளைக்கட்டை வென்ற
அரிமுகுந்தன் மெச்சுற்ற பண்பின், மருகோனே
அயனையும்பு டைத்துச்சி னந்து
உலகமும்ப டைத்துப்ப ரிந்து
அருள்பரங்கி ரிக்குட்சி றந்த, பெருமாளே.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்பா நான் வேண்டுதல் கேட்டு

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஞான சூரியன் உனது வதனமாம்  ஞானத்துந்துபி உனது  நயனமாம் 
ஒன்று சேர பெரும் விந்தையானவா போற்றி குருவே போற்றி 
வரம் அளித்திடும் உனது பாதமே போற்றி குருவே போற்றி

குரு பகவானே சரணம்(2)  கோடி நலம் அருளும் பார்வையின் ஈசா பதம் சரணம் நிதம் சரணம்  
மஞ்சள் ஆடைக்  கொண்ட நாயகா ஆளும் ஞான காலகா  
வேதம் கண்ட  ஈஸ்வரா வியாழன் என்னும் மன்னவா 
தேவ லோகம்  போற்றுகின்ற எங்கள் யுவநாதா 
குருவே சரணம் உந்தன் குருவடி சரணம் ஐயனே என்றும் நீதானே அறிவின் கிரகணம் (2)
குரு பகவானே சரணம் கோடி நலம் அருளும் பார்வையின் ஈசா பதம் சரணம் நிதம் சரணம்

கரம் இருக்குமோர் கமண்டலம் கருணை என்பதோ அதில் ஜலம் 
கணக்கேதும் இல்லாமல் நீ அருள்பவன் தானே 
அதை கவிழ்த்தாலும்  ஜீவ வெள்ளமே குரு பகவானே   (2)
திருமுகப்பார்வை சிறிதே சேர்த்து எறுவினை  எங்கள் மனதில் ஊற்று 
கஜமதில் உலவும் கனகநாதனே குருபகவானே     (2) 
வில்லும் மீனும் ஆளும் அரசே வாக்கில் நின்றிட வேண்டினோம் 
வியாழக்கிழமை வாரந்தோறும் தீபமேற்றியே போற்றினோம் (2)
ப்ரஹஸ்பதியே சுடர் நிதியே ஜாதகமெங்கிலும் சாதகமாகிட வேணும் குருவே வா 
குருவே சரணம் உந்தன் குருவடி சரணம் ஐயனே என்றும் நீதானே அறிவின் கிரகணம் (2)
குரு பகவானே சரணம் கோடி நலம் அருளும் பார்வையின் ஈசா பதம் சரணம் நிதம் சரணம்

தவவிளக்கமே தரும் கரம் தண்டம் ஏந்திடும் இடப்புறம் 
எமக்காக தவமுகம் காட்டும் குருபகவானே 
இங்கே எமக்காக  அறிவொளி ஏற்றும் ஜெபனிலையானே (2)
அபயமாய் தோன்றும் வரமாய்  உந்தன் அருளினைக் காட்டும் கரமே கொண்டு  
ஆங்கீரசனின் சுதனே எம்மை அணைக்க வேணும்   (2)
உபதேசங்கள் நிகழுமிடத்தில் உறையும் தீதாம்பரநாதா  
உன்னை நினைந்து வலமாய் வந்தோம் உறுதுணை செய்வாய் சந்தானா  (2)
குரு பலமே தரவருவாய் கோளில் நின்று கோலம் காணும் எங்கள் குருதேவா
குருவே சரணம் உந்தன் குருவடி சரணம் ஐயனே என்றும் நீதானே அறிவின் கிரகணம் (2)
குரு பகவானே சரணம் கோடி நலம் அருளும் பார்வையின் ஈசா பதம் சரணம் நிதம் சரணம்
மஞ்சள் ஆடைக் கொண்ட நாயகா ஆளும் ஞான காலகா  
வேதம் கண்ட  ஈஸ்வரா வியாழன் என்னும் மன்னவா 
தேவ லோகம்  போற்றுகின்ற எங்கள் யுவநாதா 
குருவே சரணம் உந்தன் குருவடி சரணம் ஐயனே என்றும் நீதானே அறிவின் கிரகணம் (2)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அண்ணல் நபி

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் அழுகின்றாய் கண்ணே?
எதற்கழுகின்றாய்?
நிச்சயம் முடிவு உண்டு
நம்பிக்கை வீண் போகாது (2)

கண்ணீரைக் காண்பவர்
கணக்கினிலே வைப்பவர்
விதையாய் நினைப்பவர்
விடுதலை அளிப்பவர் (2)                     - ஏன் அழுகின்றாய்

அன்னாளும் ஜெபித்தாளே குழந்தையைப் பெற்றெடுத்தாள்
ஆகாரும் அழுதாளே ஊற்றினை கண்டறிந்தாள் (2)
உந்தனின் அழுகை மட்டும் அவர் சமூகம் எட்டாதோ
உன்னை அற்புதங்கள் என்றும் அவர் காணச்செய்வார் (2)
                                                                                      - ஏன் அழுகின்றாய்

யாக்கோபும் ஜெபித்தானே போராடி மேற்க்கொண்டான்
தாவீதும் அழுதானே இழந்ததைத் திருப்பிக்கொண்டான் (2)
உந்தனின் கெஞ்சுதலை அவர் செவிகள் கேட்காதோ (2)
உன்னை விடுவித்து என்றும் அவர் மகிழச்செய்வார்
                                                                                      - ஏன் அழுகின்றாய்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிலையாப் பொருளை உடலாய் கருதி - திருப்புகழ் 72 

நிலையாப் பொருளை யுடலாக் கருதி
நெடுநாட் பொழுது மவமேபோய்
நிறைபோய்ச் செவிடு குருடாய்ப் பிணிகள்
நிறைவாய்ப் பொறிகள் தடுமாறி
மலநீர்ச் சயன மிசையாப் பெருகி
மடிவேற் குரிய நெறியாக
மறைபோற் றரிய வொளியாய்ப் பரவு
மலர்தாட் கமல மருள்வாயே
கொலைகாட் டவுணர் கெடமாச் சலதி
குளமாய்ச் சுவற முதுசூதம்
குறிபோய்ப் பிளவு படமேற் கதுவு
கொதிவேற் படையை விடுவோனே
அலைவாய்க் கரையின் மகிழ்சீர்க் குமர
அழியாப் புநித வடிவாகும்
அரனார்க் கதித பொருள்காட் டதிப
அடியார்க் கெளிய பெருமாளே.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தங்க வாகனத்தில் நீ பவனிவர 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சி கொஞ்சி ஆடி வரும் ஆலிலை கண்ணா

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையார் பட்டிக்குதான் போனீகளா கற்பக கன்று குட்டி கண்டீர்களா

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன தருவான் தில்லை அம்பலத்தான் ?
தன்னையே தருவான் பொன் அம்பலத்தான் 

என்ன தருவான் தில்லை அம்பலத்தான் ?
தன்னையே தருவான் பொன் அம்பலத்தான்

என்ன தருவான் தில்லை அம்பலத்தான் ?
தன்னையே தருவான் பொன் அம்பலத்தான்

பொன்னும் பொருளும் அள்ளித்தருவான் -உடன் 
போதும் என்ற மனதையும் சொல்லித்தருவான்

பேரும் புகழும் பெற்றுத்தருவான் -அதன்பின் 
போகாமல் வாழ்வதற்க்கு கற்றுத்தருவான்

அதன்பின் போகாமல் வாழ்வதற்க்கு கற்றுத்தருவான்

என்ன தருவான் தில்லை அம்பலத்தான் ?
இக லோக வாழ்வில் உடன் இருப்பான் -ஆயினும் 
பரலோக வாழ்வதற்கு வழி அமைப்பான் 

சுகவாசி ஆயிருப்பான் அம்பலத்து பொதுவினிலே

சுகவாசி ஆயிருப்பான் அம்பலத்து பொதுவினிலே - அவனே 
பரதேசி ஆய் திரிவான் அடியார்கள் நடுவினிலே. 

அவனே  பரதேசி ஆய் திரிவான் அடியார்கள் நடுவினிலே.

என்ன தருவான்  தன்னையே தருவான்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கையில் குழலுடன் பைய வருகிறான் பார் கண்ணன்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பைத்துல் முகத்தஸ்...உயர்வு மேவும் இறை இல்லம் || இசை முரசு E.M.நாகூர் ஹனிபா | ISLAMIC SONGS.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிலுவை நாதர் இயேசுவின்
பேரொளி வீசிடும் தூய கண்கள்
என்னை நோக்கி பார்க்கின்றன
தம் காயங்களையும் பார்க்கின்றன

என் கையால் பாவங்கள் செய்திட்டால்
தம் கையின் காயங்கள் பார்கின்றாரே
தீய வழியில் என் கால்கள் சென்றால்
தம் காலின் காயங்கள் பார்கின்றாரே


தீட்டுள்ள எண்ண்ம் எண் இதயம் கொண்டால்
ஈட்டி பாய்ந்த நெஞ்சை நோக்குகின்றார்
வீண்பெறுமை என்னில் இடம் பெற்றால் 
முள்மூடி பார்த்திட ஏங்குகின்றார்

அவர் இரத்தம் என் பாவம் கழுவிடும்
அவர் கண்ணீர் என்னை மெருகேற்றிடும்
கலங்கரை விளக்காக ஓளி வீசுவேன் 
கலங்குவோரை அவர் மந்தை சேர்ப்பேன்

திருந்திடா பாவிக்காய் அழுகின்றார்
வருந்திடா பிள்ளைக்காய் கலங்குகின்றார்
தம்கண்ணீர் காயத்தில் விழுந்திட 
கண்ணீரும் இரத்தமும் சிந்துகின்றார்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்னை பராசக்தி

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருடக்கொடியோன் காணமாட்டாக் கழற்சே வடியென்னும் 
பொருளைத் தந்திங் கென்னை யாண்ட பொல்லா மணியேயோ
இருளைத் துரந்திட் டிங்கே வாவென்றங்கே கூவும் 
அருளைப் பெறுவான் ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. ⁠418 

மொய்ப்பால் நரம்பு கயிறாக மூளை என்பு தோல் போர்த்த 
குப்பாயம்புக் கிருக்க கில்லேன் கூவிக்கொள்ளாய் கோவேயோ 
எப்பா லவர்க்கும் அப்பாலாம் என்னாரமுதேயோ 
அப்பா காண ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. ⁠419 

சீவார்ந் தீமொய்த் தழுக்கொடு திரியுஞ் சிறுகுடில் இது சிதையக் 
கூவாய் கோவே கூத்தா காத்தாட் கொள்ளுங் குருமணியே 
தேவா தேவர்க் கரியானே சிவனே சிறிதென் முகநோக்கி 
ஆவா வென்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. ⁠420 

மிடைந்தெலும் பூத்தை மிக்கழுக் கூறல் வீறிலி நடைக்கூடம் 
தொடர்ந்தெனை நலியத் துயருறு கின்றேன் சோற்றமெம்பெருமானே 
உடைந்துநைந் துருகி உன்னொளி நோக்கி உன்திரு மலர்ப்பாதம் 
அடைந்து நின்றிடுவான் ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. ⁠421

அளிபுண்ணகத்துப் புறந்தோல் மூடி அடியேனுடையாக்கை 
புளியம் பழமொத் திருந்தேன் இருந்தும்விடையாய் பொடியாடி 
எளிவந்தென்னை ஆண்டுகொண்ட என்னாரமுதேயோ 
அளியேன் என்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. ⁠422 

எய்த்தேன் நாயேன் இனியிங் கிருக்ககில்லேன் இவ்வாழ்க்கை 
வைத்தாய் வாங்காய் வானோர் அறியா மலர்ச்சே வடியானே 
முத்தா உன்றன் முகவொளி நோக்கி முறுவல் நகைகாண 
அத்தா சால ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. ⁠423 

பாரோர் விண்ணோர் பரவியேத்தும் பரனே பரஞ்சோதீ
வாராய் வாரா வுலகந்தந்து வந்தாட்கொள்வானே 
பேராயிரமும் பரவித் திரிந்தெம் பெருமான் என ஏத்த 
ஆரா அமுதே ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. ⁠424 

கையால் தொழுதுன் கழற்சே வடிகள் கழுமத் தழுவிக்கொண்டு 
எய்யா தென்றன்தலைமேல் வைத்தெம்பெருமான் பெருமானென்று 
ஐயா என்றன் வாயா லரற்றி அழல்சேர் மெழுகொப்ப 
ஐயாற் றரசே ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. ⁠425 

செடியா ராக்கைத் திறமற வீசிச் சிவபுரநகர்புக்குக் 
கடியார் சோதி கண்டுகொண்டென் கண்ணினை களிகூரப் 
படிதா னில்லாப் பரம்பரனே உன்பழஅடியார் கூட்டம் 
அடியேன் காண ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. ⁠426 

வெஞ்சேலனைய கண்ணார்தம் வெகுளிவலையில் அகப்பட்டு 
நைஞ்சேன் நாயேன் ஞானச் சுடரே நானோர் துணைகாணேன் 
பஞ்சேரடியாள் பாகத்தொருவா பவளத் திருவாயால் 
அஞ்சேல் என்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே. ⁠427 

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.