Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அஹ்மது நபியின் அழகிய நூரால்
அகிலம் ஒளியாய் ஜொலிக்கும்
 எண்ணத்தில் தவழும் அணையா தீபம்
 ஏகாந்தான் அருளாய் அளித்தான்

1. நற்குணத்தின் தாயகம் நீங்கள்தான் என்றே
 நாயனும் நவின்றான் அன்றே
இறையவன் மறைபோல் இனிதாங் குணமாம்
 இரஸூல் நபியை படைத்தான்

2. ஆமினாவின் வயிற்றில் ஆற்றல்மிகும் அன்பாளன் அருட்சுடர் நேசரை அமைத்தான்
ரஹ்மத்துலில் ஆலமீன் ராஜரை போற்றி
 ரஹ்மான் மறையில் புகழ்ந்தான்

3. அண்ணலே தாங்கள் அவனியில் வந்ததால் நிமலோன் நிலத்தினை அமைத்தான்
ஆதி நபி ஆதம் முதல் ஈஸா நபி வரையில்
 ஆலத்தை அஹதோன் படைத்தான்

4. மங்களங்கள் பொங்கிடும் தங்கள் ஒளிமுகத்தை எங்கள் இரு கண்களால் காண
அங்கங்கள் தங்கமாய் இலங்கிடும் தங்களை
 பங்கங்கள் நீங்கவே பார்க்கணும்

5. வஞ்சனைகள் சஞ்சலங்கள் வாகாய் நீங்கிடும் வாஞ்சை நபிகள் வந்த நாள்
அஞ்சிடும் நெஞ்சமும் தஞ்சமே தந்திடும் பிஞ்சு மனம் கொண்ட சிங்கம் பிறந்த நாள்

 

 

 

 

 

 

Edited by உடையார்

  • Replies 2.9k
  • Views 225.6k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • உடையார்
    உடையார்

  • Maruthankerny
    Maruthankerny

    இணைப்புக்கு நன்றி உடையாரண்ணா  இவரின் குரலில் சில இஸ்லாமிய பாடல்கள்  மனதையே கொள்ளை கொண்டுவிடும்  சில வருடங்கள் முன்பு ஒரு யூஸ்பி யில் பதிந்து வைத்திருந்தேன்  எங்கோ தவற விட்டுவிட்ட்டேன் ... ம

  • உடையார்
    உடையார்

    யேசுவே எனக்கு என்று யாருமேயில்லை   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இயேசுவின் இருதயமே என்றும்; இரங்கிடும் அருள் மயமே 
உந்தன் ஆசியும் அருளும் சேர்த்து வந்தால் 
எங்கள் ஆனந்தம் நிலைபெறுமே - 2

1. இறைவனுக்கிதயம் உண்டு - அந்த 
இதயத்தில் இரக்கம் உண்டு - 2 - என்றும் 
இரங்கிடும் இறைவன் இருப்பதனால் 
எங்கள் அனைவர்க்கும் மகிழ்ச்சி உண்டு - 2

2. கடவுளின் கருணை உண்டு அந்த 
கருணைக்கும் உருவம் உண்டு -2 
என்றும்; உருவத்தில் உதித்தேழும் உயிர் அதனால் 
எங்கள் உள்ளத்தில் உவகை உண்டு

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நம்புங்கள் செபியுங்கள் நல்லது நடக்கும்

துன்பங்களோ துயரங்களோ 
சோதனையோ வேதனையோ
பதுவை புனிதர் பரிந்துரைப்பார்
எல்லாம் வல்லவர் நடத்தி வைப்பார்

மனச்சுமையோ பாரங்களோ
உடற்பிணியோ ஊனங்களோ
பதுவை புனிதர் பரிந்துரைப்பார்
எல்லாம் வல்லவர் நலம் தருவார்

வறியவரோ சிறியவரோ
முதியோரோ இளையோரோ
பதுவை புனிதர் பரிந்துரைப்பார்
எல்லாம் வல்லவர் அணைத்துக் கொள்வார்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

துஞ்சலும் துஞ்சல் - நால்வர் அருளிய நமசிவாய பதிகங்கள் | சோலார் சாய் | சிவலோகம் | பக்தி டிவி

துஞ்சலும் துஞ்சல் இல்லாத போழ்தினும்
நெஞ்சகம் நைந்து நினைமின், நாள்தொறும்;
வஞ்சகம் அற்று அடி வாழ்த்த, வந்த கூற்று
அஞ்ச உதைத்தன, அஞ்சு எழுத்துமே.

நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய
நமச்சிவாய 

மந்திரம் நான்மறை ஆகி, வானவர்
சிந்தையுள் நின்று, அவர்தம்மை ஆள்வன;
செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு
அந்தியுள் மந்திரம் அஞ்சு எழுத்துமே.

நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய
நமச்சிவாய 

ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி, ஒண்சுடர்
ஞான விளக்கினை ஏற்றி, நன்புலத்து
ஏனை வழிதிறந்து ஏத்துவார்க்கு, இடர்
ஆன கெடுப்பன, அஞ்சு எழுத்துமே.

நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய
நமச்சிவாய 

நல்லவர் தீயர் எனாது, நச்சினர்
செல்லல் கெடச் சிவமுத்தி காட்டுவ;
கொல்ல நமன்தமர் கொண்டு போம் இடத்து
அல்லல் கெடுப்பன, அஞ்சு எழுத்துமே.

நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய
நமச்சிவாய 

கொங்குஅலர் வன்மதன் வாளிஐந்து; அகத்து
அங்குள பூதமும் அஞ்ச; ஐம் பொழில்
தங்கு அரவின் படம் அஞ்சும்; தம் உடை
அங்கையில் ஐவிரல்; அஞ்சு எழுத்துமே.

நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய
நமச்சிவாய 

தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்,
வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்,
இம்மை வினை அடர்த்து எய்தும் போழ்தினும்
அம்மையினும் துணை அஞ்சு எழுத்துமே.

நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய
நமச்சிவாய 

வீடு பிறப்பை அறுத்து மெச்சினர்;
பீடை கெடுப்பன; பின்னை நாள்தோறும்
மாடு கொடுப்பன; மன்னு மாநடம்
ஆடி உகப்பன, அஞ்சு எழுத்துமே.

நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய
நமச்சிவாய 


வண்டு அமர் ஓதி மடந்தை பேணிண,
பண்டை இராவணன் பாடி உய்ந்தன;
தொண்டர்கள் கொண்டு துதித்தபின், அவர்க்கு
அண்டம் அளிப்பன அஞ்சு எழுத்துமே.

நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய
நமச்சிவாய 

கார்வணன், நான்முகன், காணுதற்கு ஓணாச்
சீர்வணச் சேவடி செவ்வி, நாள்தோறும்
பேர்வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட்கு
ஆர்வணம் ஆவன, அஞ்சு எழுத்துமே.

நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய
நமச்சிவாய 

புத்தர், சமண் கழுக்கையார், பொய்கொளாச்
சித்தத் தவர்கள் தெளிந்து தேறின
வித்தக நீறு அணிவார் வினைப் பகைக்கு
அத்திரம் ஆவன அஞ்சு எழுத்துமே.

நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய
நமச்சிவாய 


நற்றமிழ் ஞானசம்பந்தன், நால்மறை
கற்றவன் காழியார் மன்னன் உன்னிய
அற்றம்இல் மாலை ஈர்ஐந்தும் அஞ்சு எழுத்து
உற்றன் வல்லவர் உம்பர் ஆவரே


நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய
நமச்சிவாய

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வேலவனுக்கு மூத்தவனே விக்கன விநாயகனே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா

கொண்டாடும் தெய்வமே முருகனல்லவா

சென்னிமலை சுப்ரமணிய சாமிக்கு . . . அரோகரா . . .

நின்றருளும் அருணாச்சலன் பிள்ளையல்லவா

தாயும் தந்தையும் நீயல்லவா

எனக்கு தாயும் தந்தையும் நீயல்லவா

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வைகுண்டஏகாதசி - ஸ்ரீரங்கநாதர் பாடல்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க 🙏

கோமான் நபிகள் தோன்றாவிட்டால் குர்ஆன்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிறைவான மனதில்
மறைவான ஏக்கம்
திரையாக வந்து
தினம் என்னை தாக்கும்
கருவாக நெஞ்சில்
உருவான பாசம்
கற்பனைகள் கோடி
தினம் அள்ளி வீசும்


ஒரு நாள் என் நெஞ்சில்
ஆழ்ந்தது துன்பம்
அடைக்கலம் வேண்டி 7.
அழுதது கொஞ்சம்
அப்போது அண்ணலை
உள் மனதில் ஏத்தி
கற்பனை உலகில்
நான் மூழ்கி போனேன்


நம் ஊரின் எல்லையை
எம் வேந்தர் அடைந்தார்
என்றொரு செய்தியை
கேட்டு எந்தன் செவிகள்
கனவெல்லாம் வாடி 
கரை ந்தோடி நானும்
மன்னரை நாடி
நான் போனேன் தேடி

கடும் வெயிலும் மழையும்
தடை விரித்த போதும்
காருண்யர் அன்பு 
குடையாக மாறி
கண்ணுக்கு சுர்மா கல்புக்கு கலிமா நாவுக்கு ஸலவாத் அலங்காரமாகி

நெடும் பாதை ஓரம்  விரைந்தோடும் நேரம்
கலைத்தாலும் தேகம் 
குறையாத வேகம்
ஏக்கங்கள் பலமாய் எனை வாட்டினாலும்
எண்ணங்கள் பலதாய் மனக் கண்ணில் மோதும்

எம் நெஞ்சில் வாழும் 
பூமானை நோக்கி
பேராவலுடன் ஸலாம் 
உரைக்க வேண்டும்
உள்ளத்தில் தேங்கிய உளைச்சல்கள் நீங்க
உத்தமருடன் உரையாட வேண்டும்

பெருமானின் பேச்சில் நிறைவான மூச்சில்
பெரும் பாவச் சுமையும் பறந்தோட வேண்டும்
விடை பெறும் நேரம் விரைந்தாலும் உம்மை
விலகாமல் என்னுயிர் கறைந்தோட வேண்டும்

பலவாறு எண்ணம்
 சுமந்தது உள்ளம்
அடைந்தேனே நானும் 
நம் ஊரின் எல்லை
அங்கிங்கும் அலைந்தேன் அன்பரை தேடி
மனம் உடைந்து போனேன் காணாமல் வாடி

பெரும் பாவம் இழைத்தேன் பாக்கியம் இழந்தேன்
என் வாழ்க்கை வீணே என்றெண்ணி அழுதேன்
கண்ணிமைகள் நனைய  திடுக்கிட்டு எழுந்தேன்
கண்டவை அனைத்தும் கனவென்று உணர்ந்தேன்

இறைவா என் ஆசையில் தவறேதும் உண்டா
நான் கொண்ட காதலில் குறையேதும் உண்டா 
குறையேதும் இருப்பின் அடியோடு நீக்கி
பெருமானின் காட்சி நொடியேனும் தருவாய்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வழிகாட்டும் என் தெய்வமே
துணையாக எனில் வாருமே (2)
நதிமீது அலைந்தாடும் அகல்போலவே
கதியேதும் தெரியாமலே - நான்
தடுமாறும் நிலைபாறுமே

அன்பாகி அருளாகி என்னோடு ஒன்றாகி
துயரோடு போராடும் என்வாழ்வின் நலமாகி
எனைத்தாங்கும் என் தெய்வமே - என்
நிழலாக எழும் தெய்வமே

எந்நாளும் உனைத்தேடும் வரம்கேட்கிறேன்
உன்பாத நிழல்நாடும் மனம் கேட்கிறேன்
நீரின்றியே மண்ணில் வளமில்லையே
நிலமின்றியே உயிர் வாழ்வில்லையே
எந்நாளும் உனைத்தேடும் வரம்கேட்கிறேன்
உன்பாத நிழல்நாடும் மனம் கேட்கிறேன்

எனைக்காக்கும் என் தெய்வமே - என் 
உயிராக எழும் தெய்வமே

நிலவெங்கும் ஒழிந்தாலும் விழிமூடி பயனேது
துயர் மூடும் மனமுந்தன் அருள் காணும் வகையேது 
பலனாக கைமீது வா இங்கு புலனாகும் இறையாக வா

என் பாதை முடிவாகும் உம் தாளிலே 
என் வாழ்வு விடிவாகும் அந்நாளிலே 
உன் வார்த்தைகள் என் வாழ்வாகுமோ 
உன் பார்வைகள் என் வழியாகுமோ 
என் பாதை முடிவாகும் உம் தாளிலே 
என் வாழ்வு விடிவாகும் அந்நாளிலே
 
இருள் நீக்கும் விளக்காகவே - நான் 
சுடர்வீச எனை ஏற்றவா 

ஆல்போல வளர்ந்தாலும் ஆரம்பம் முளைதானே 
விண்வாழ்வின் உயர்வெல்லாம் இவ்வாழ்வின் பலன்தானே 
நிறைவாழ்வின் விதையாகவே எங்கள் நிலவாழ்வு பயன்காணவா

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என் இதய தெய்வமே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விநாயகனே வினை தீர்ப்பவனே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுட்டிபுரம் வாழும் சிவ சுந்தரியே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆனைமுகனே அரனார் திருமகனே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேரடியில் கலையிலே நான் அழுத வேளையிலே நீ திரும்பி பார்க்கவில்லை முருகா

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க🙏

அஹ்மது நபி ﷺ அவர்களின் அழகிய திருநாமங்கள் | அஸ்மாவுன் நபி ﷺ

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வானில் தவழும் வெண்ணிலவே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இயேசுவே எனக்கு என்று யாருமே இல்ல
உம்மை நம்பியே நானும் வாழ்கிறேன்
உம்மைத் தேடியே ஒடி வருகிறேன்
பாரும் இயேசுவே என்ன பாரும் இயேசுவே
கையபுடிசிட்டு என்ன நடத்தும் இயேசுவே
   இயேசுவே எனக்கு......... 

I
கவலை என்னில் பெருகும் போது கலங்கி போகின்றேன்   
வெளியில் சொல்ல முடியாமல் எனக்குள் அழுகின்றேன்
யாரும் இல்லை தேற்றிட
யாருமில்லை உதவிட
பாரும் இயேசுவே – என்ன
பாரும் இயேசுவே        
கையபுடிசிட்டு என்ன நடத்தும் இயேசுவே
   இயேசுவே எனக்கு......... 

II
உலகம் என்னை வெறுக்கும் போது உடைந்து போகின்றேன்  
நம்பும் மனிதர் விலகும் போது நெஞ்சம் வலிக்குதே
யாரும் இல்லை தேற்றிட
யாருமில்லை உதவிட
பாரும் இயேசுவே – என்ன
பாரும் இயேசுவே        
கையபுடிசிட்டு என்ன நடத்தும் இயேசுவே
   இயேசுவே எனக்கு.........

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாயயான மண்ணில் பிறந்து

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆவணி வந்தது

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தலையெழுத்தை மாற்றிவிடும்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செந்தமிழின் சந்தங்களை

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 உண்ணாமல் இருப்பேனா உறங்காமல் இருப்பேனா உன்னை எண்ணாமல் இருப்பேனோ என் இணுவை விநாயகனே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்🙏

இருலோகம் போற்றும் இறைதூதராம்
இசுலாத்தை தந்த நபிநாதராம்

அருள் வடிவானவர் அண்ணல் மஹமூதர்
இருள் நீக்க வந்தவர்
எங்கள் நபிநாதர், நபிநாதர்
அருள் வடிவானவர் அண்ணல் மஹமூதர்

கோடி கோடி இன்பம்
எங்கள் கோமான் நபி சென்ற வழியில்
பாடி பாடி மகிழ்வோம்
எங்கள் பயஹம்பர் பகர்ந்த பொன் மொழியில்
இன்னும் சொல்லவா அவர் பெருமை....
அருள் வடிவானவர் அண்ணல் மஹமூதர்
இருள் நீக்க வந்தவர் எங்கள் நபிநாதர்


ஆதி இறை தந்த வடிவம்
அன்னை ஆமினார் ஈன்றேடுத்த செல்வம்
நீதி நிலை நாட்டி என்றும்
நம்மை நெறியோடு வாழவைத்த நெஞ்சம்
இன்னும் சொல்லவா அவர் மகிமை...
அருள் வடிவானவர் அண்ணல் மஹமூதர்
இருள் நீக்க வந்தவர் எங்கள் நபிநாதர்

வானமும் வையமும் போற்றும்
நல்ல வழிகாட்டும் உயர் மார்க்கம் தந்தார்
தீன் மழை பெய்திட எங்கும்
நபி திருவேத மறை அளித்துச்சென்றார்
இன்னும் சொல்லவா அவர் புகழை...
அருள் வடிவானவர் அண்ணல் மஹமூதர்
இருள் நீக்க வந்தவர்
எங்கள் நபிநாதர்..நபிநாதர்
அருள் வடிவானவர் அண்ணல் மஹமூதர்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொல்லா நோயும் நில்லாமல் ஓடும் உங்கள் நாமம் சொன்னால் போதும்

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.