Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

H1B, H2B விசாவுக்கான தடை நீடிப்பு: அமெரிக்க ஜனாதிபதி உத்தரவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

DONALD-TRUMP-ABOUT-CORONA-INJECTION-720x450.jpg

H1B, H2B விசாவுக்கான தடை நீடிப்பு: அமெரிக்க ஜனாதிபதி உத்தரவு

வெளிநாட்டு ஊழியர்களுக்கு க்ரீன் கார்ட் மற்றும் H1B, H2B உள்ளிட்ட விசா வழங்குவதற்கான தடையை இந்த ஆண்டு இறுதி வரை நீடித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்காவில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், வெளிநாடுகளில் இருந்து அங்கு தங்கியுள்ளோர் வேறு வேலையைத் தேட வழியில்லை என்பதுடன், 60 நாட்களுக்குப் பினனர் கால நீட்டிப்பிற்காக அனுமதியும் கோர முடியாது.

இந்த நிலையில், கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட முடக்கத்தைக் கருத்திற்கொண்டு H1B, H2B விசாவை நிறுத்தி வைத்துள்ள ஜனாதிபதி ட்ரம்ப், அந்தத் தடையை இந்த ஆண்டு இறுதி வரை நீடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் மருத்துவர்களுக்கு வழங்கப்படும் ஜே 1 விசாக்களும் இனி கொரோனாவை குணப்படுத்த முன்வரும் மருத்துவர்களுக்கே வழங்கப்படும் என்றும் அமெரிக்கா புதிய கெடுபிடிகளை அறிவித்துள்ளது.

மேலும் H1B விசா முறையை சீர்த்திருத்த மற்றும் தகுதி அடிப்படையில் வழங்குமாறு ட்ரம்ப், தனது நிர்வாகத்திற்கு உத்தரவிட்டதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறுகையில், “H1B விசா முறை, தகுதி அடிப்படையிலான குடியேற்ற முறைக்கு நகர்கிறது. ட்ரம்ப் நிர்வாகம் மிக உயர்ந்த திறமையான தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்கும் அமெரிக்க வேலைகளைப் பாதுகாப்பதற்கும் குடியேற்ற முறையை சீர்த்திருத்துகிறது.

இந்த சீர்த்திருத்தங்களால் H1B திட்டம் அதிக ஊதியம் வழங்கப்படும் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கும், மேலும் அதிக திறமையான விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்படுவதை உறுதி செய்யும்.

மேலும், இது அமெரிக்கத் தொழிலாளர்களின் ஊதியத்தைப் பாதுகாக்கவும் அமெரிக்காவுக்குள் நுழையும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் அதிக திறமை வாய்ந்தவர்களாகவும் அமெரிக்காவின் தொழிலாளர் சந்தையை குறைக்காது என்பதையும் உறுதிப்படுத்த உதவும்” என  கூறியுள்ளனர்.

அமெரிக்காவில் குடியுரிமை பெறாமல், தங்கி இருந்து வேலை செய்வதற்காக ஏனைய நாட்டினைச் சேர்ந்தவர்களுக்கு H1B விசா வழங்கப்படுகிறது.

இந்த விசா வைத்துள்ள ஒருவர் 60 நாட்கள் மட்டுமே சம்பளம் இல்லாமல் அமெரிக்காவில் வசிக்க முடியும், அதன் பின்பு தாய்நாட்டுக்கு திரும்ப வேண்டும் என்பது அங்கு சட்டமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/h1b-h2b-விசாவுக்கான-தடை-நீடிப்/

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் உடனடி உத்தரவு! கடும் அதிருப்தியில் சுந்தர் பிச்சை

ஹெச்-1பி விசா உள்ளிட்ட பல்வேறு விசாக்கள் மூலம் அமெரிக்காவில் வேலைக்கு வருவதை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பிறப்பித்த உத்தரவுக்கு கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவில் வேலையின்மை அதிகரித்து வருவதையடுத்து, வேலைவாய்ப்பை உள்நாட்டு மக்களுக்கு வழங்கும் நோக்கில் ஹெச்-1பி விசா உள்ளிட்ட பல்வேறு விசாக்கள் வழங்குவதை இந்த ஆண்டு இறுதிவரை நிறுத்திவைத்து அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிகாரபூர்வமாக உத்தரவிட்டார்.

ஹெச்1பி விசா வழங்குவதை நிறுத்தி வைக்கும் உத்தரவு நாளை 24-ம் திகதி முதல்நடைமுறைக்கு வருகிறது.

இந்த உத்தரவால் அமெரிக்காவுக்குள் வேலைநிமிர்த்தமாக ஹெச்-1பி விசா, எல்1 விசா, ஜே விசா, ஹெச்-2பி, ஹெச்-4பி விசா மூலம் வருபவர்கள் இந்த ஆண்டுவரை தடை செய்யப்படுவார்கள், அதிகமான ஊதியத்தில் ஹெச்-1பி விசாவில் வரும் அத்தியாவசியமாக மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

பயிற்சி, ஆசிரியர், கவுன்சிலர், கோடைகால பணித் திட்டம் ஆகியவற்றுக்காக ஜே விசாவில் வருவோருக்கும் இந்த தடை பொருந்தும்.

இந்த புதிய விதிமுறை அமெரிக்காவில் வசிக்காமல் முறையான குடியேற்ற ஆவணங்கள், பயண ஆவணங்கள், விசா இல்லாமல் இருப்போருக்கு பொருந்தும். அதேசமயம், அமெரிக்காவில் நிரந்தரமாக தங்கி இருக்கும் வெளிநாடுகளை் சேர்ந்தவர்கள், அவர்களின் மனைவி, குழந்தைகளை இந்த உத்தரவு பாதிக்காது.

அமெரிக்க அதிபரின் இந்த உத்தரவுக்கு கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், தமிழரான சுந்தர் பிச்சை கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “அமெரிக்கப் பொருளாதாரம் உலகளவில் மிகச்சிறப்பான நிலையை அடைந்ததற்கும், வெற்றி பெற்றதற்கும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களின் பங்களிப்பு அதிகம் இருக்கிறது.

அமெரிக்காவுக்குள் வேலைக்காக வரும் வெளிநாட்டினரைத் தடுக்கும் வகையில் ஹெச்-1பி விசா உள்ளிட்ட பல்வேறு விசாக்களை நிறுத்தி வைத்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பிறப்பித்த உத்தரவு எனக்கு அதிருப்தி அளிக்கிறது.

வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு எனது ஆதரவு தொடரும். அனைவருக்கும் வாய்ப்புகள் பரந்து கிடைக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்

இதேவேளை, தி லீடர்ஷிப் கொன்பரென்ஸ் மனித உரிமைகள் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி வனிதா குப்தா வெளியிட்ட அறிக்கையில் “அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் வெளிநாட்டினருக்கான விசா ரத்து செய்யும் உத்தரவு நிறவெறி, மற்றும் பிறநாட்டு மக்களின் மீதான வெறுப்பாகவே பார்க்கிறோம்.

அதிபர் ட்ரம்ப்பின் நிர்வாகச் சீர்கேட்டின் விளைவாகவே மக்கள் அதிருப்தி அடைந்து பல்வேறு பேரணிகளை நடத்தி வருகிறார்கள், கொரோனா வைரஸ் பாதிப்பை மோசமாக ட்ரம்ப் நிர்வாகம் கையாண்டது” என்று சாடியுள்ளார்.

 

https://www.ibctamil.com/usa/80/145695?ref=rightsidebar

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதுள்ள வேலை வாய்ப்புகள் அமெரிக்கர்களுக்கே கிடைக்க வேண்டும்- டொனால்டு டிரம்ப்

தற்போதுள்ள வேலை வாய்ப்புகள் அமெரிக்கர்களுக்கே கிடைக்க வேண்டும்- டொனால்டு டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கிரீன் கார்டு நிறுத்தியது ஏன் என்பது குறித்து விளக்கமளித்துள்ளார்.
பதிவு: ஜூன் 25,  2020 09:43 AM
வாஷிங்டன்

உலகையே அச்சுறுத்தி வரும் கொடிய நோயாக கொரோனா வைரஸ் உள்ளது. இந்த நோய் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில், அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.அதுமட்டுமின்றி, கொரோனா' வைரஸ் பரவலால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பால், அமெரிக்காவில் லட்சகணக்கானவர்கள் வேலை இழந்துள்ளனர். 

இதையடுத்து, அமெரிக்காவில் வேலை பார்க்கும் வெளிநாட்டவருக்கு, கிரீன் கார்டு எனப்படும் குடியுரிமை வழங்குவதை, 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக, ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஏப்ரலில் அறிவித்தார்.
இது, இந்தாண்டு இறுதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்க குடியுரிமை சட்டத்தின்கீழ், ஆண்டுக்கு, 1.40 லட்சம் வெளிநாட்டவருக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. இது அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டவர், அவருடன் இருக்கும் அவருடைய மனைவி அல்லது கணவர், குழந்தைகளுக்குப் பொருந்தும்.

தற்போதைய நிலையில், கிரீன் கார்டு கேட்டு, 10 லட்சம் பேர் காத்திருக்கின்றனர். மேலும் ஒரு நாட்டுக்கு அதிகபட்சம், 7 சதவீதம் மட்டுமே கிரீன் கார்டு வழங்கப்படும். இந்தக் கட்டுப்பாடுகளால் அமெரிக்காவில் அதிக அளவில் பணிபுரியும் இந்தியா, சீனாவைச் சேர்ந்தவர்கள், கிரீன் கார்டு கிடைப்பதற்கு பல ஆண்டுகள் காத்திருக்கும் நிலை உள்ளது. தற்போது அது நிறுத்தி வைக்கப்படுவதால், இந்த எண்ணிக்கை மேலும் உயரும்.

இதற்கிடையே, வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படும் குடியுரிமை அல்லாத, எச்1பி விசா உள்ளிட்ட வேலைக்கான விசாக்கள் வழங்குவது, இந்தாண்டு இறுதிவரை நிறுத்தி வைத்து, டிரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கு, அமெரிக்க எம்.பி.,க்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

இந்தியா போன்ற ஆசிய நாடுகளைச் சேர்ந்த உயர் திறனுள்ளவர்கள் அமெரிக்கா வருவது தடுக்கப்பட்டு விடும். 'வெளிநாட்டு ஊழியர்களை நம்பியுள்ள அமெரிக்க நிறுவனங்கள், இந்த உத்தரவால் கடுமையாக பாதிக்கப்படும். இந்த உத்தரவு நாட்டின் நலனுக்கு எதிரானது. 'இதை, ஜனாதிபதி தேர்தலுக்கான அரசியல் நாடகமாகவே பார்க்கிறேன், என, எம்.பி., ஜூடி சூ கூறியுள்ளார்.

கிரீன் கார்டு முடிவுக்கான காரணம் குறித்த கேள்விக்கு, 'தற்போது அமெரிக்க மக்களுக்கு உடனடியாக வேலை வாய்ப்பை அளிக்க வேண்டும். தற்போதுள்ள வேலை வாய்ப்புகள் அமெரிக்கர்களுக்கே கிடைக்க வேண்டும். அதற்காக தான் இந்த முடிவு என, டிரம்ப் கூறியுள்ளார்.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/25094358/President-Donald-J-Trump-Is-Putting-American-Workers.vpf

 

 

  • கருத்துக்கள உறவுகள்

எச் -1 பி விசா: டொனால்டு டிரம்ப் அறிவிப்பு அமெரிக்க நிறுவனங்களை பாதிக்கும்

எச் -1 பி விசா: டொனால்டு டிரம்ப் அறிவிப்பு அமெரிக்க நிறுவனங்களை பாதிக்கும்

பெங்களூர்

உலகையே அச்சுறுத்தி வரும் கொடிய நோயாக கொரோனா வைரஸ் உள்ளது. இந்த நோய் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில், அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.அதுமட்டுமின்றி, கொரோனா' வைரஸ் பரவலால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பால், அமெரிக்காவில் லட்சகணக்கானவர்கள் வேலை இழந்துள்ளனர். 

இதையடுத்து, அமெரிக்காவில் வேலை பார்க்கும் வெளிநாட்டவருக்கு, கிரீன் கார்டு எனப்படும் குடியுரிமை வழங்குவதை, 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக, ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஏப்ரலில் அறிவித்தார்.
இது, இந்தாண்டு இறுதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

 எச் -1 பி விசாக்களை நிறுத்தி வைக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எடுத்த முடிவு பல பெரிய அமெரிக்க நிறுவனங்களை பாதிக்கும். அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகளின் தரவுகளின்படி, 2019 நிதியாண்டில் புதிய எச் -1 பி விசாக்களைப் பெற்ற முதல் பத்து இடங்களில் கூகிள், அமேசான், ஆப்பிள், பேஸ்புக் மற்றும் ஐபிஎம் ஆகியவை அடங்கும்.

டிரம்பின் அறிவிப்பு அமெரிக்க பொருளாதாரத்தை பாதிக்கும் மற்றும் வேலைகளை இழப்புகளை அதிகரிக்கும்" என்று கேடோ இன்ஸ்டிடியூட்டின் உலகளாவிய சுதந்திரம் மற்றும் செழிப்பு மையத்தின் குடிவரவு ஆய்வுகளின் இயக்குனர் அலெக்ஸ் நவ்ராஸ்டே கூறி உள்ளார்.

அலெக்ஸ் நவ்ராஸ்டே கூறியதாவது:-

விசாக்களை ரத்து செய்வது அமெரிக்காவில் விஞ்ஞான ஆராய்ச்சியைக் குறைக்கும். இந்தத் தடை நிறுவனங்கள் அமெரிக்காவை தேர்ந்து எடுப்பது பற்றி இருமுறை சிந்திக்க வைக்கும். அமெரிக்க நாடாளுமன்றம் நிறுவனங்களை அமெரிக்காவிற்கு ஈர்ப்பதற்காக 2017 ஆம் ஆண்டில் கார்ப்பரேட் வரிகளை குறைத்தது, ஆனால் அவை முடிந்ததால் அவை வராது" அவர்கள் கோரும் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த வேண்டும் என்று அவர் கூறினார்.

மைக்ரோசாப்ட், ஐபிஎம் மற்றும் இன்டெல் ஆகியவற்றின் பிஎஸ்ஏ மென்பொருள் கூட்டணி, இந்த நடவடிக்கை அமெரிக்க பொருளாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் என கூறி உள்ளது.

வெளிநாட்டு திறமை தொழிலாளர்களை  அமர்த்துவது  அமெரிக்க பொருளாதாரத்தின் அனைத்து துறைகளின் மீட்பு மற்றும் வளர்ச்சிக்கு முக்கியமானது என்று அது கூறி உள்ளது

https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/25153002/Donald-Trumps-announcement-will-affect-American-companies.vpf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.