Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
103093791_3898891556807063_1198915424668645632_n.jpg?_nc_cat=102&_nc_sid=8bfeb9&_nc_ohc=XhpQylJNDngAX-DNltf&_nc_ht=scontent-frt3-1.xx&oh=55c6a4a35870eeba6cbabc7bc0dbdf37&oe=5F1E5A95
 
106508522_3898891343473751_1026334004262612631_n.jpg?_nc_cat=109&_nc_sid=8bfeb9&_nc_ohc=cIePquwcuRAAX9JK68z&_nc_ht=scontent-frt3-1.xx&oh=0f936f0d6732db6a4f42ff742e273837&oe=5F20FA7F
1985 காலப்பகுதியில் தமிழகத்தில் 35 போராளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு மூத்த தளபதி கேணல் சங்கரண்ணாவின் நெறிப்படுத்தலில் நீரடி நீச்சல் பயிற்சிகள் வழங்கப்பட்டிருந்தது.
அந்த விசேட நீரடி நீச்சற்பிரிவில் லெப் கேணல் கங்கையமரன் அவர்களும் செயற்பட்டிருந்தார்.
இவ் அணியில் பயிற்சிபெற்ற சுலோஜன் என்பவர் காரைநகர் கடற்பரப்பில் தரித்துநின்ற
கடற்கலத்தை தகர்க்கும் முயற்சியில் ஈடுபட்டபோது,வீரச்சாவைத்தழுவிக் கொள்கின்றார்.இவரது
பெயரிலேயே கடற்புலிகளின் “சுலோஜன் நீரடி நீச்சல் அணி” தளபதி கங்கையமரன் அவர்களின் தலைமையில் உருவாக்கப்பட்டது.
இவ்வணியே பாரிய கடல் வெற்றிகளைப் பெற்றுத்தந்ததென்பதும்
குறிப்பிடத்தக்கது.
பின்னாளில் இவ்வணி கங்கையமரன் நீரடி நீச்சல் பிரிவாக பெயர் மாற்றப்பட்டு கடற்தாக்குதல்களில் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
கடற்புறா எனும் கடல்சார் நடவடிக்கை அணி கடற்புலிகளாக பெயர்மாற்றம் பெற்ற காலத்தில் அதன் தளபதியாகப் பொறுப்பேற்று பல வெற்றித் தாக்குதல்களுக்கு வித்திட்ட வீரத்தளபதி லெப் கேணல் கங்கையமரன் அவர்களை இதேநாள் ஆழ ஊடுருவும் அணியின் கிளைமோர் தாக்குதலின்போது இழந்திருந்தோம்.
நினைவுகளுடன்..
வீரவணக்கம்.
  • கருத்துக்கள உறவுகள்

ஒரே நோக்கத்துடன் நாம் இருவரும் சில ஆண்டுகள் ஒன்றாக பயணித்திருக்கின்றோம். வீரவணக்கம் நண்பா!

வீரவணக்கம்

  • 11 months later...
  • கருத்துக்கள உறவுகள்

தேசியத் தலைவர் அவர்களின் நன்மதிப்பைப் பெற்ற தளபதி. லெப். கேணல் கங்கையமரன்

spacer.png

 லெப். கேணல் கங்கையமரன் வீரவணக்க நாள் இன்றாகும்.!

29.06.2001 அன்று கிளிநொச்சி மாவட்டம் ஆனைவிழுந்தான் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினர் மேற்கொண்ட கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட ‘கடற்புலிகளின் தளபதி’ லெப். கேணல் கங்கையமரன், மேஜர் தசரதன் ஆகிய மாவீரர்களின்  20ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

 

 

zDGivXKpB5YVztnyAhun.jpg

கடற்புலிகளின் தொடக்க காலம் முதல் கடற்புலிகள் அணியில் பணியாற்றி வந்த லெப். கேணல் கங்கையமரன், கடற்புலிகளின் நீரடி நீச்சற்பிரிவை உருவாக்கி அதன் பொறுப்பாளராகக் கடமையாற்றியவர். சிறிலங்கா கடற்படையினருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பல வெற்றிகரத் தாக்குதல்களை வழிநடத்தியவர் என்பதும் விடுதலைப் போராட்டத்திற்கு அயராது உழைத்து கடற்புலிகளின் வளர்ர்ச்சிக்கும் பெரிதும் துனையாக திகழ்ந்தவர்.

66dyVylw8MnlJPsJyEI2.jpg

 

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் நன்மதிப்பைப் பெற்ற தளபதி.பின்னைய நாட்களில் கங்கையமரன் நீரடி நீச்சல் பிரிவு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்டு சிறிலங்காக் கடற்படையில் பல கலங்களை தாக்கி பல சாதனைகளை அதன் தலைநகரிலும் நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
 

https://www.thaarakam.com/news/af546055-9557-42aa-86c9-52932fb58a66

 

வீரவணக்கம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.