Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

பராக்... பராக்...
நம்ம...  மதுரை,  ராஜவன்னியன்... 
களத்தில், இறங்கி விட்டார்.  :grin:

  • Like 1
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

Picture1.jpg

லண்டன் "டவர் கில்ஸ்" மெட்ரோ நிலையத்தில் இறங்கி அருகே இருக்கும் சிறு பூங்காவில் (ஒரு ஆங்கிலேயரின் சிலையும் அங்கே இருந்தது) உட்கார்ந்து 'சாக்லேட் பாப்கார்ன்' கொரித்துக்கொண்டு, அப்படியே பொடிநடையாக சுரங்கப் பாதை மூலம் சாலையை கடந்தால் அங்கே ஒரு சிறிய அரண்மனை கோட்டை..!

அருகேயிருந்த 'ஸ்டார் பக்ஸ்'ஸில் ஸ்நாக்ஸ் சாப்பிட்டுவிட்டு, டவர் ப்ரிட்ஜ் பாலத்தை பார்க்க தேம்ஸ் நதியின் கரையோரம் நடந்தால், எதிர்புறம் 306 மீ உயர 'சார்ட்' கூம்பு வடிவ கட்டிடம்..😎

கடும் குளிரில் நடுங்கியபடி பிடித்த பாடலை முனுமுனுத்துக்கொண்டே நதிக்கரையோரம் டவர் பிரிட்ஜ் நோக்கி நடந்தேன்..!

லண்டன் நகர மக்களின் ரசனை, லைஃப் ஸ்டைல், துபாய் நகரத்தைவிட வேறு விதமாக இருந்தது..🤩

கீழேயுள்ள காணொளியை இன்று பார்த்தபோது 8 மாதங்களுக்கு முன் சென்று வந்த லண்டன் காட்சிகள் மனக்கண்களில்..

 

Edited by ராசவன்னியன்
  • Like 7
  • Thanks 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சரி, போட்டோவை இணைக்கலாமென தேடினால் இவைதான் கிடைத்தன..! 😎

aerial-view-flying-over-tower-hill-london-k-wall-castle-bridge-river-thames-england-uk-103727683.jpg

கோட்டை

 

london-uk-nov-22-2017-tower-hill-station-on-the-london-underground-KJTWA0.jpg

மெட்ரோ நிலையம்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 11/7/2020 at 03:40, தமிழ் சிறி said:

பராக்... பராக்...
நம்ம...  மதுரை,  ராஜவன்னியன்... 
களத்தில், இறங்கி விட்டார்.  :grin:

உறங்குகின்ற வன்னியரின் துன்பமான வாழ்வெல்லாம்

இறங்கிவர குரல் கொடுத்த கு.சாமியாரை வாழ்த்துவோம்

கறங்குபோல கைபிடித்த கமெராவின் காட்சியில்

அறுந்துபோன யாழுறவை மறுபடியும் கண்டேனே. 🤩

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, Paanch said:

உறங்குகின்ற வன்னியரின் துன்பமான வாழ்வெல்லாம்

இறங்கிவர குரல் கொடுத்த கு.சாமியாரை வாழ்த்துவோம்

கறங்குபோல கைபிடித்த கமெராவின் காட்சியில்

அறுந்துபோன யாழுறவை மறுபடியும் கண்டேனே. 🤩

தாங்கள் அனுப்பிய 'வாட்ஸ் அப்' செய்தியால்தான் அறிந்துகொள்ள முடிந்தது..

ஒரு மாதம் கழித்து மீண்டும் யாழில் சந்திக்கலாம்..

Till then, keep WhatsApping..!  8a2263e870415f50558d9ecbe58da9ec.jpg

 



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • வைத்யர் அர்ச்சனாவும் -வைத்தியர் சத்தியமுர்த்தியரும்.🤭
    • பார் பேமிட் ஏன் வழங்கினேன்?; ரணில் விளக்கம். கலால் திணைக்களத்தின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு அமைவாகவே அனைத்து கலால் உரிமங்களும் வழங்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வழக்கப்பட்ட உரிமங்கள் ஊடாக, குறித்த ஒன்பது மாதங்களில் அரசாங்கம் ஈட்டிய மொத்த வருமானம் 3.1 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமாகும் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: சுதந்திரத்திற்குப் பிறகு, 2022 வரை கலால் உரிமம் வழங்குவதற்கு அரசாங்கம் பணம் வசூலிக்கவில்லை. அப்போது, நாட்டில் நேரடி வரியை இழக்கும் போக்கு காட்டப்பட்டது. அப்போது, நாடு நிலவும் கடுமையான பொருளாதார திவால்நிலையில் இருந்து விடுபட உரிய நடவடிக்கை எடுக்குமாறு, வழிகள் மற்றும் வழிமுறைகளுக்கான பாராளுமன்றக் குழுவும் அரசுக்குத் தெரிவித்தது. அதன்படி, உடனடி நேரடி வரி இழப்புக்கு மாற்றாக, அரசு வருவாயை அதிகரிக்க, பணம் வசூலிக்கவும், கலால் உரிமம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது. 2024 பட்ஜெட் உரையில், கலால் நிர்வாக மேம்பாட்டு முறை மற்றும் வரிக் கொள்கைத் திருத்தம், பல்வேறு வகையான கலால் உரிமங்களுக்குப் பொருந்தும் வழிகாட்டுதல்களை நெறிப்படுத்துதல், புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்துதல், உரிமங்களைப் பெறுவதற்கான வரம்புகளை நிர்ணயித்தல், நிர்வாகக் கட்டணங்களை வழங்குதல் கோரிக்கைக்கு ஏற்ப உரிய உரிமக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான முன்மொழிவுகள் அடங்கிய வரவு-செலவுத் திட்ட ஆவணத்தை பாராளுமன்றம் நிறைவேற்றியதுடன், அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கும் பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கியது. அரசியலமைப்பின் பிரிவுகள் 148 முதல் 152 வரை, பொது நிதிக் கட்டுப்பாட்டின் மீது பாராளுமன்றத்திற்கு முழு அதிகாரம் உள்ளது. இது தவிர, பொது நிதிப் பொறுப்புச் சட்டத்தின் பிரிவு 3, அரசியலமைப்புச் சட்டத்தின் ஒரு பகுதியாகவும் செயல்படுகிறது. மேலும், பொருளாதார மாற்றச் சட்டத்தின் 8வது பிரிவின் கீழ், அமைச்சர்கள் குழுவின் அதிகாரங்களைப் பயன்படுத்துவதை மேற்பார்வையிட பாராளுமன்றத்திற்கு உரிமை உண்டு. பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்கும் நோக்கில் அமுல்படுத்தப்பட்ட இந்தத் தீர்மானத்திற்கு வலுசேர்க்கும் வகையில், கலால் கட்டளைச் சட்டத்தின் கீழ் 03/2024 ஆம் இலக்க கலால் அறிவிக்கையானது ஏற்கனவே உள்ள கட்டணங்களை அதிகரித்து, புதிய திருத்தங்களை 2024 பெப்ரவரி 1 முதல் நடைமுறைப்படுத்தியுள்ளது. இவை அனைத்தும் பொருளாதார மேம்பாட்டுச் சட்டத்தின் பிரிவு 4 இன் துணைப் பிரிவுகளின் d மற்றும் h இன் படி செய்யப்பட்டுள்ளன. மேலும், 2008  ஏப்ரல் 10, திகதியிட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு எண். 1544/17 (கலால் அறிவிப்பு எண். 902) மூலம் வெளியிடப்பட்ட விதிமுறைகள் 2024 ஜனவரி 12, திகதியிட்ட வர்த்தமானி அறிவிப்பு எண் 2366/39 மூலம் திருத்தப்பட்டன. அவை அனைத்தும் பாராளுமன்றத்தின் பொது நிதிக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத் தக்கது. இதன்படி, மாநகரசபை அதிகார வரம்புகளுக்கு வியாபாரத்தில் ஈடுபடுவதற்கு அறவிடப்படும் 15 மில்லியன் ரூபாய் கட்டணத்திற்கு மேலதிகமாக, வருடாந்த அனுமதிப்பத்திரக் கட்டணமாக 1 மில்லியன் ரூபாவும், 05 இலட்சம் ரூபாய் பாதுகாப்பு வைப்புத் தொகையும், நகராட்சி அதிகார வரம்புகளுக்கு வணிகத்தில் நுழைவதற்கு வசூலிக்கப்படும் ரூ.10 மில்லியன் கட்டணத்துடன் கூடுதலாக ரூ.08 லட்சம் வருடாந்திர உரிமக் கட்டணம் மற்றும் ரூ.05 லட்சம் பாதுகாப்பு வைப்புத்தொகை, ஏனைய பகுதிகளுக்கு வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு அறவிடப்படும் ஒரு மில்லியன் ரூபாய் கட்டணத்திற்கு மேலதிகமாக வருடாந்த அனுமதிப்பத்திரம் 06 இலட்சம் ரூபாய் மற்றும் பாதுகாப்பு வைப்புத் தொகை 05 இலட்சம் ரூபாய், 1,000 மில்லியனுக்கும் அதிகமான வணிக வளாகங்கள் அல்லது கடைகளுக்கு, வணிகத்தில் நுழையும் போது வசூலிக்கப்பட்ட 15 மில்லியன் ரூபாவுக்கு மேலதிகமாக, வருடாந்த உரிமக் கட்டணமாக 1.5 மில்லியன் ரூபாவும், 05 இலட்சம் ரூபா பாதுகாப்பு வைப்புத் தொகையும் வழங்கப்பட்டன. மதுபானங்களின் சில்லறை விற்பனை வெளியிடப்பட்டது. 2024 பெப்ரவரி 1, முதல் 2024அக்டோபர் 31, வரை, புதிய திருத்தத்தின்படி, 172 மதுபானக் கடைகள் மற்றும் 89 மால்கள் அல்லது கடைகளுக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமாக மதுபானங்களை விற்பனை செய்வதற்கான உரிமத்தின் கீழ் R.B.4 (F.L.4) இன் எக்சைஸ் உரிம வகைப்பாட்டின் கீழ். புதிய மதுபான உரிமங்கள் வழங்கப்பட்டன. இந்த உரிமங்கள் அனைத்தும் கலால் திணைக்களத்தின் விதிகள் மற்றும் விதிமுறைகள் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகளின்படி வழங்கப்பட்டுள்ளன. உரிமம் வழங்கும் போது, கலால் ஆணையர் ஜெனரல் பரிந்துரைத்த விண்ணப்பங்களுக்கு மட்டுமே உரிமம் வழங்கப்பட்டது. அந்த அமைப்புக்கு வெளியே ஒரு கலால் உரிமம் கூட வழங்கப்படவில்லை. இது தொடர்புடைய ஒன்பது மாதங்களில் அரசாங்கத்தால் ஈட்டப்பட்ட மொத்த வருமானம் 3.1 பில்லியன் ரூபாவைக் கொண்டு வந்துள்ளது. 2024 ஆம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இந்த முறை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டால், 2024 ஆம் ஆண்டில் அரசாங்கம் 04 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வருமானத்தைப் பெற முடியும். இந்த முறையின் வெற்றி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில், 2025 ஆம் ஆண்டு முதல் 250-300 கலால் உரிமங்கள் ஏல அடிப்படையில் குறைந்தபட்சம் 25 மில்லியன் ரூபாய் ஏலத்தில் வழங்கப்படும், மேலும் 25 சதவீத வருமானத்தில் இருந்து ஒரு நிதி ஒதுக்கப்படும். நிதானமான இயக்கத்தை ஊக்குவிக்கவும் பயன்படுத்த திட்டமிடப்பட்டது மேலும் இந்த பணிகள் நடைபெற்று வரும் நிலையில் புதிய கலால் சட்டம் கொண்டு வர தேவையான நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டன. வழங்கப்பட்ட மதுபான உரிமம் தொடர்பாக கலால் திணைக்களத்திற்கு கிடைத்த பொது முறைப்பாடுகளின் அடிப்படையில் கலால் ஆணையாளர் நாயகம் உரிமத்தை இடைநிறுத்துவதற்கு 2024 ஆகஸ்ட் 9, அன்று உரிமம் பெற்றவர் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. 2024.07.26 முதல் 2024.09.21 வரை) மதுபான உரிமங்கள் வழங்கப்பட்டால் முறையானவை தேர்தல் ஆணையம் 19.08.2024 திகதியிட்ட கடிதத்தின் மூலம் கலால் ஆணையர் ஜெனரலுக்கு ஒரு நடைமுறையைப் பின்பற்றி வெளிப்படையான முறையில் அரசியல் பதவி உயர்வு இல்லாத உரிமங்களை வழங்குவதற்கான பரிந்துரைகளை வழங்கியுள்ளது. கடந்த அரசாங்கத்தின் போது மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கப்படவில்லை. என்ன நடந்தது என்றால், அவை விற்கப்பட்டு கணிசமான தொகை மாநில வருவாயில் வசூலிக்கப்பட்டது. நாடு பொருளாதார சிக்கலில் இருந்த நேரத்தில் வரி வருமானத்திற்கு மேலதிகமாக நாட்டிற்கு வருமானத்தை கொண்டு வரும் புதிய உத்தியாக இந்த உரிமங்கள் விற்பனை செய்யப்பட்டன என்பதையும் குறிப்பிட வேண்டும். வங்குரோத்து நிலையில் உள்ள பொருளாதாரத்தை மீட்பதற்காக நீண்ட கால நோக்குடன் செயற்படுத்தப்பட்ட இந்த கலால் உரிமம் வழங்கும் நடைமுறை குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக தவறாக பயன்படுத்தப்படுவது வருத்தமளிக்கிறது. தற்போதைய செயல்பாடு வெளிப்படையானது மற்றும் நெறிப்படுத்தப்பட்டுள்ளது. புதிய வருமான வழியை இரத்து செய்வதா, இல்லையா என்பது தொடர்பில், அவ்வாறு இல்லையேல் புதிய கலால் வரி சட்டத்தை முன்வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்பது தொடர்பில் பாராளுமன்ற அனுமதியுடன் அமைச்சரவை நடவடிக்கை எடுக்கவேண்டும். அதேபோல, இதனை முன்னெடுத்து செல்வதற்கோ அல்லது இரத்து செய்வதற்கான அதிகாரம், அமைச்சரவைக்கு உரித்துடையது என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Thinakkural.lk  
    • டெல்லியில் 40 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் : பொலிஸ் தீவிர சோதனை   புதுடெல்லி:  டெல்லியில் 40 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து மாணவர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு பள்ளிகளில் போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மதர் மேரி, கேம்ப்ரிட்ஜ் பப்ளிக் பள்ளி, பிரிட்டிஷ் பள்ளி, சல்வான் பப்ளிக் பள்ளி உள்பட 40 பள்ளிகளில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. ‘30 ஆயிரம் அமெரிக்க டாலர் வேண்டும்’ - மிரட்டல் மின்னஞ்சல் scottielanza@gmail.com என்ற முகவரியில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது. அதை அனுப்பிய நபர், நான் பள்ளி வளாகங்களின் உள்ளே பல இடங்களில் வெடிகுண்டுகளை மறைத்து வைத்துள்ளேன். அவையெல்லாம் மிகச் சிறிய அளவிலானவை. அவற்றால் கட்டிடங்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்படாது. ஆனால், வெடிகுண்டுகள் வெடித்தால் நிறைய பேர் காயமடைவார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த நபர் தனக்கு 30 ஆயிரம் அமெரிக்க டாலர் வேண்டும் என்றும் கேட்டுள்ளார். தொடரும் மிரட்டல்கள்: முன்னதாக கடந்த வாரம் டெல்லி ரோஹிணி பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா குளோபல் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. சோதனையில் அந்த மிரட்டல் போலியானது என்று தெரியவந்தது. அதற்கும் முன்னதாக டெல்லி பிரசாந்த் விஹார் பகுதியில் பள்ளிக்கூடம் அமைந்த பகுதியிலிருந்து 1 கிமீ சுற்றுவட்டாரத்துக்குள் குறைந்த சக்தி கொண்ட மர்மப் பொருள் ஒன்று வெடித்தது. இதுபோல் ஒவ்வொரு முறையும் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் போது அது குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் உடனடியாக வந்து குழந்தைகளை அழைத்துச் செல்லச் செய்யப்படுகின்றனர். இது பெற்றோர்கள் மத்தியில் ஆழ்ந்த அச்சத்தையும், சோர்வையும் ஏற்படுத்தியுள்ளது. இரண்டு மாதங்களுக்கும் முன்னர் டெல்லியில் உள்ள அனைத்து சிஆர்பிஎஃப் பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. கடந்த நவம்பர் 19 ஆம் தேதி ஆம் ஆத்மி அரசும் டெல்லி காவல்துறையும் இணைந்து வெடிகுண்டு மிரட்டல்களைக் கையாள்வது தொடர்பாக விரிவான நிலையான செயல்பாட்டு வழிமுறையை வகுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. எச்சரித்த மத்திய அரசு: நாடு முழுவதுமே பள்ளி, கல்லூரிகள், விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் அவ்வப்போது விடுக்கப்படுவது தொடர்கதையாக இருக்கிறது. முன்னதாக, கடந்த சில நாட்களாக உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களுக்கு புரளியாக வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டது. இவ்விவகாரத்தில், அதனைக் கையாண்ட முறைக்காக எக்ஸ், மெட்டா தளங்களை கடுமையாக சாடிய மத்திய அரசு, ‘சமூகவலைதளங்கள் குற்றத்தைத் தூண்டுகிறது’ என்றும் விமர்சித்தது நினைவுகூரத்தக்கது.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.