Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் புதிதாக தெரிவு செய்யப்படும்  பாராளுமன்ற உறுப்பினர்கள்   நீதியை பெற்றுத்தர வேண்டும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் புதிதாக தெரிவு செய்யப்படும்  பாராளுமன்ற உறுப்பினர்கள்   நீதியை பெற்றுத்தர வேண்டும்

July 25, 2020

 

DSC_0382-800x498.jpg

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் புதிதாக தெரிவு செய்யப்படுகின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் எங்கள் போராட்டத்திற்கும், கவலைகள்,கண்ணீருக்கு காலம் தாழ்த்தாது நீதியை பெற்றுத்தர வேண்டும் என  மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

மன்னாரில் இன்று சனிக்கிழமை(25) காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அமைப்பின்  செயலாளர் பி.சர்மிலா மடுத்தீன் தெரிவித்தார்.

-அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,

மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளாகிய நாங்கள் இவ் தேர்தல் காலப்பகுதியில் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதியையும், உண்மைத்தன்மையையும் வெளிக்கொண்டு வரும் வகையில் தேர்தல் பிரச்சாரங்களை முன் வைத்து வாக்குறுதிகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

குறித்த செயற்பாடுகள் அரசிற்கு ஓர் அழுத்தத்தை கொடுப்பதாக இருந்தாலும்,இவ் பிரச்சார  இவ் பிரச்சார வாக்குறுதிகள் வெறுமனே தேர்தலில் வாக்குகளை சுவிகரிப்பதற்காக மட்டும் அல்லாது எமது உறவுகளின் ஏக்கங்களையும்,காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் பிள்ளைகளையும், கணவனையும் பறிகொடுத்து நிற்கும் எங்களுக்கு ஒரு தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கான வாக்குறுதிகளாக அமைய வேண்டும்.

தேர்தலின் பின்பு மக்களால் தெரிவு செய்யப்பட்டு ஆட்சிக்கு வரும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எங்களுக்கான நிறந்தரமான ஒரு தீர்வை பெற்றுத்தர வேண்டும். அரசிற்கு அழுத்தத்தை கொடுக்க வேண்டும்.

நீதியுடன் செயற்பட வேண்டும்.அத்துடன் இவர்கள் சர்வதேசத்தின் ஊடாகவோ அல்லது உள்ளூர் பொறிமுறைகளுடாகவோ பாதிக்கப்பட்ட எமக்கு சார்பாக நின்று நீதிக்கான நிறந்தர தீர்வை பெற்றுத்தர வேண்டும்.

வெறுமனே இவ் வாக்குறுதிகள் காற்றில் பறக்காமல் எங்களுக்கு ஓர் நியாயமான தீர்வை பெற்றுத் தருவீர்கள் என நம்புகின்றோம். ஆகவே எங்கள் போராட்டத்திற்கும், கவலைகள்,கண்ணீருக்கு காலம் தாழ்த்தாது நீதியை பெற்றுத்தர வேண்டும் என தெரிவித்தனர்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அமைப்பின் தலைவி ஏ.ரஞ்சினி,செயலாளர் பி.சர்மிலா மடுத்தீன் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. #காணாமல்ஆக்கப்பட்டோர்  #பாராளுமன்றஉறுப்பினர்கள்   #நீதி #தேர்தல் #,வாக்குறுதி
 

https://globaltamilnews.net/2020/147339/

  • கருத்துக்கள உறவுகள்

நிராகரிக்கப்படவேண்டியவர்கள் சிங்கள கட்சிகளின் வேட்பாளர்கள் மட்டுமல்ல..! தமிழ்தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களும்தான்.. 

95257333_930425297412587_195726260447687

இலங்கை அரசாங்கத்தை சர்வதேச அழுத்தங்களில் இருந்து பாதுகாத்து தமிழ் மக்களுக்கு துரோகமிழைத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட சிங்கள கட்சிகளின் தமிழ் வேட்பாளர்களை தோற்கடியுங்கள்.

மேற்கண்டவாறு வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் அமைப்பின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் திருமதி பத்மநாதன் கருணாவதி இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த 2009 ம் ஆண்டிற்கு பின்னர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு சிறீலங்கா அரசிடம் நீதி கோரிப் போராடியபோதும், அந்த முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் 2012ஆம் ஆண்டிலிருந்து ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடம் நீதி கோரிப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.

எனினும் ஐ.நா மனித உரிமைப்பேரவையால் கூட நீதி பெற்றுத்தருவது சாத்தியமற்றது என்ற நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டிலிருந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது விவகாரத்திற்கு நீதி பெற ஐ.நா பாதுகாப்புச்சபை ஊடாக சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணை வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தது. 

இவ்வாறான நிலைப்பாட்டில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக நீதி வேண்டி போராடி வரும் நிலையில் அதற்கு மாறாக உள்ளக விசாரணைக்கு சந்தர்ப்பம் வழங்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிறீலங்கா அரசுடன் இணைந்து வலியுறுத்தி வந்துள்ளது.

இலங்கை அரசுக்கு முண்டு கொடுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் எமது உறவுகளை மீட்க விடாது சிங்களத்தின் சிறைக்குள் தொடர்ந்தும் பூட்டி வைத்திருக்க எத்தனித்து வருகின்றனர். கூட்டமைப்பின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் எமக்கு துரோகம் இழைத்து வந்துள்ளனர். இலங்கை அரசுக்கு ஐ.நாவில் கால நீடிப்பினை பெற்று கொடுத்துள்ளனர் .

சிங்கள அரசுடன் இணைந்து ஓ.எம்.பி.அலுவலகத்தை திறந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களை ஏமாற்ற கூட்டமைப்பு துணை போயுள்ளனர்.ஓ.எம்.பி. அலுவலகத்தை தமிழர் தாயகத்தில் திறந்து மரண சான்றிதழ் வழங்க கூட்டமைப்பு உள்ளிட்ட சிலர் சிங்கள பாராளமன்றில் தவமிருந்து ஓ.எம்.பி.அலுவலகம் திறப்பதற்கான சட்டம் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.

அவ்வாறான அலுவலகத்தில் சில காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களும் பதிவு செய்யவேண்டிய நிலைக்கு ஏமாற்றி அழைத்து செல்லப்பட்டு மரணச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளமன்ற உறுப்பினர் சிறிதரன் சுமந்திரன் ஆகியோர் ஜெனிவா செல்வது சிங்கள அரசை பாதுகாப்பதற்காகவே மட்டும் என்பதே வெளிப்படையான உண்மையாகும்.

சர்வதேசத்தில் உள்ளக விசாரணைக்கு சந்தர்ப்பம் வழங்கி, கால அவகாசம் வழங்கி அரசுக்கு முண்டு கொடுத்து எமது உறவுகளை தேடி அலைந்து அலைந்து நோயாளராகி சாகடிக்கப்பட்ட 70க்கும் மேற்பட்ட தாய் தந்தையரின் சாவுக்கு காரணமாக இருந்த சிறீதரன் உள்ளிட்ட கூட்டமைப்பின் 16 எம்பிகளையும் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தோற்கடித்து கோத்தா அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த அனைத்து உறவுகளும் முன்வரவேண்டும் இன அழிப்புக்கான ஆதாரங்கள் இல்லை என சுமந்திரன் வெளிப்படையாகவே சர்வதேச களங்களில் கூறினார்.

ஐ நா.நிபுணர் குழுவின் ஆய்வறிக்கையை காட்டி சர்வதேச விசாரணை முடிந்துவிட்டது. எனக் கூறினார் இத்தனை காலமும் அரசுடன் இணைந்து அவர்கள் செயற்பட்டுவிட்டு இன்று எமக்காக பேசுவது போன்றதான நாடகத்தினை தங்களது வாக்கு வங்கியை நிரப்புவதற்காஅரங்கேற்ற முனைகின்றனர். நாங்கள் ஒரு போதும் கூட்டமைப்பையோ, சிங்கள அரசையோ நம்ப தயாரில்லை எமக்கான நீதியை சர்வதேச சமூகமே பெற்றுத்தர வேண்டும். 

சர்வதேச நீதி பொறிமுறைகள் உருவாக்கப்பட்டு இலங்கை அரசு மேற்கொண்ட அத்தனை குற்றங்களிற்கும் தண்டனை வழங்கப்படும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்இன்று தமிழர் வாழ்வியலில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய வகையில் 

தமிழர் தேசமெங்கும் முழுமையான இராணுவமயமாக்கல் ஆக்கிரமிக்கப்பட்ட பொது மக்களின் விவசாயக் காணிகளை கைவிடாமை மீன்பிடித்தடை என எமது வளர்ச்சியினை தடுக்கின்றது சிங்கள அரசு. அது மட்டுமன்றி பெரும் தொகையான இராணுவத்தினர், காவற்துறையினர், புலனாய்வுத்துறையினர், கடற்படையினரென எமது பிரதேசங்களில் குவிக்கப்பட்டிருந்தும் தொடர்ச்சியாக கசிப்பு உற்பத்தி கஞ்சா வியாபாரம் தனியார் வீடுகளில் கொள்ளைகள் கொலைகள் மாணவர்கள் மத்தியில் கலாச்சார சீர்கேடுகளென பட்டியல் தொடர்ந்து கொண்டே போகின்றது. இச்செயற்பாடுகள் தற்செயலானவையல்ல. நன்கு திட்டமிடப்பட்டு எமது சமூகத்தினை அழிக்கவே அனுமதிக்கப்படுகின்றது.

தமிழ் மக்களை தொடர்ச்சியாக உரிமைகளற்ற அடிமைகளாக வைத்திருக்கவே சிங்கள அரசு விரும்புகின்றது எனவேதான் நடைபெற இருக்கும் பாராளமன்ற தேர்தலில் சிங்கள தலைமைகளுக்கு வக்காளத்து வாங்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட ஏனைய கட்சிகளின் தமிழ் வேட்பாளர்களை தோல்வியடைய செய்து கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக கொண்ட கொள்கையோடும், இனப்படுகொலைக்கும், காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளின் விடுதலைக்கு சர்வதேச விசாரணையூடாக நீதியை வலியுறுத்தி நிற்கும் கட்சிகளுக்கு ஆதரவு அழித்து சர்வதேச விசாரணைக்கு பலம் சேர்த்து எமது உறவுகளை துரிதமாக மீட்டெடுக்க அனைத்து உறவுகளையும் கும்பிட்டு கேட்கின்றோம் எங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் தாருங்கள் எங்கள் உறவுகளை மீட்பதற்கு என அந்த அறிக்கையில் குறிப்பிடபட்டுள்ளது

https://jaffnazone.com/news/19558 

 

இவர்களின் துயரத்துக்கு எப்போது முடிவு? இருந்தாலும் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்கள் எந்தளவுக்கு இதட்கு முடிவு காண்பார்களோ தெரியவில்லை. ஏன் என்றால் மாற்றுக்கட்சியில் உள்ள அநேகமானோர் தமிழ் தேசிய கூட்ட்டமைப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும், கட்சியில் இவ்வளவு காலமும் அங்கத்தவர்களாகவும் இருந்தவர்களே. எனவே தெரிவு செய்த பின்னர் இன்னுமோர் ஐந்து வருடங்கள் காத்திருக்க வேண்டுமோ தெரியவில்லை, இன்னுமோர் புதிய தலைமைகளை தெரிவு செய்வதட்கு.

  • கருத்துக்கள உறவுகள்

காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் போராட்டத்தை குழப்பிய பொலிஸார்

IMG-20200727-WA0003-960x720.jpg?189db0&189db0

மட்டக்களப்பு – செங்கலடியில் இன்று (27) காலை எட்டு மாவட்டங்களினதும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் முன்னெடுக்கவிருந்த போராட்டம் நீதிமன்றின் ஊடாக பெறப்பட்ட தடை உத்தரவினால் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

வடகிழக்கில் உள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அமைப்பினர் இணைந்து ஏறாவூர் பொலிஸில் இரு தினங்களுக்கு முன்னர் அனுமதி பெற்று இன்று காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்க ஏற்பாடுகளை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் காலை 10 மணிக்கு செங்கலடியில் ஒன்றுகூடிய நிலையில் அங்குவந்த பொலிஸார் நீதிமன்ற தடையுத்தரவினை காட்டி குறித்த போராட்டத்தினை நடாத்த முடியாது எனவும் தெரிவித்து தடுத்து நிறுத்தியுள்ளனர்.

தற்போது தேர்தல் நிலைகளை எதிர்கொண்டுள்ள நிலையில் வடகிழக்கு தமிழ் மக்கள் தமிழ் தேசியத்திற்கும் தமிழர்களின் பிரச்சினைக்கு ஆதரவாகவும் செயற்படுவோரை தெரிவுசெய்யவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைகளை சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு தொடர்ச்சியாக முன்கொண்டுசெல்லும் வகையிலும் இந்த போராட்டம் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

  • IMG-20200727-WA0004-1024x576.jpg?189db0&
  • IMG-20200727-WA0003-1024x768.jpg?189db0&
  • IMG-20200727-WA0002-1024x576.jpg?189db0&
  • IMG-20200727-WA0001-1024x576.jpg?189db0&
 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.