Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

தமிழகத்தில் மும்மொழிக் கொள்கைக்கு அனுமதியில்லை..!

EeeLOtaVAAA2bjS?format=png&name=small

தமிழகத்தில் மும்மொழிக் கொள்கைக்கு அனுமதியில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், தமிழக மக்கள் கடந்த 80 ஆண்டு காலமாக இருமொழி கொள்கையில் உறுதியாக உள்ளனர். இதுதொடர்பாக, பல காலகட்டங்களில், தங்களது உணர்வை பல்வேறு போராட்டங்கள் மூலமாகவெளிப்படுத்தியுள்ளனர்.

1963ஆம் ஆண்டைய அலுவல் மொழிகள் சட்டத்தின் 3வது பிரிவில், இந்தியை அலுவல் மொழியாக பின்பற்றாத மாநிலங்களை பொறுத்த வரையில், மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான தகவல் பரிமாற்றம் ஆங்கில மொழியில் தான் இருக்க வேண்டும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இருந்தபோதும், 1965ஆம் ஆண்டில் இந்தியை அலுவல் மொழியாக மாற்ற அப்போதைய காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுத்தது. அதனை எதிர்த்து, மாணவர்களும், மக்களும், தமிழ்நாட்டில் பல்வேறு போராட்டங்களை தீவிரமாக நடத்தினர்.

மக்களிடைய மும்மொழி கொள்கையைப் பற்றிய கவலைகள் நீங்காததால், பேரறிஞர் அண்ணா, தமிழ்நாடு சட்டப்பேரவையில் 23.1.1968 அன்று தமிழ்நாட்டில் உள்ள எல்லாப்பள்ளிகளிலும் மும்மொழித் திட்டத்தை அகற்றி விட்டு தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளுக்கு இடமளித்து இந்தி மொழியை அறவே நீக்கிட இந்த மாமன்றம் தீர்மானிக்கிறது என்று வரலாறு போற்றத்தக்க தீர்மானத்தை நிறைவேற்றினார். அதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் இந்தி மொழி, பாட திட்டத்தில் இருந்து முழுமையாக நீக்கப்பட்டது.

பேரறிஞர் அண்ணாவால் தெளிவுற உரைக்கப்பட்ட இரு மொழிக் கொள்கையைச் செயல்படுத்துவதுதான் மாண்புமிகு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் உறுதியான கொள்கையாக இருந்தது. அதன்படியே, அவர் தமிழ்நாடு முதலமைச்சராக இருந்தபோது, அதாவது, 13.11.1986 அன்று, இரு மொழிக் கொள்கையை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

அம்மா, இந்தி பேசாத மாநில மக்கள் மீது இந்தியை திணிக்கக் கூடாது என்பதிலும், அவ்வாறு எடுக்கப்படும் முயற்சியை எதிர்த்து முறியடிப்பதிலும் உறுதியாக உள்ளோம் என்று சூளுரைத்தார்.மேலும், இந்தியாவில் தமிழ் மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என்றும், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்றும், அம்மா வலியுறுத்தி வந்தார்கள்.

இவ்வாறு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும், புரட்சித்தலைவி அம்மாவும், இந்தி திணிப்பை ஆணித்தரமாக எதிர்த்து வந்தனர்.

இப்படிப்பட்ட மாபெரும் தலைவர்கள் வழி வந்த அம்மாவின் அரசும், மத்திய அரசு, வரைவு தேசிய கல்விக் கொள்கையை வெளியிட்ட போதே, அதில் மும்மொழிக் கொள்கை இடம் பெற்றதை சுட்டிக் காட்டி, அதனை தீவிரமாக எதிர்த்தது. மேலும், தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், இரு மொழிக் கொள்கையையே கடைபிடிப்போம் என உறுதிபட தெரிவித்து 26.6.2019 அன்றே மாண்புமிகு பாரத பிரதமரை வலியுறுத்தி நான் கடிதம் எழுதினேன். இரு மொழிக் கொள்கையையே அம்மாவின் அரசு தொடர்ந்து கடைபிடிக்கும் என்பதை கடந்த ஆண்டு எனது சுதந்திர தின உரையிலும், சட்டமன்றத்தில் நடைபெற்ற பல்வேறு விவாதங்களின்போதும் தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்துள்ளேன்.

தற்போது மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கையில், மும்மொழி கொள்கை இடம் பெற்று இருந்தாலும், மாண்புமிகு அம்மாவின் அரசு, மும்மொழிக் கொள்கையினை தமிழ்நாட்டில் எப்போதும் அனுமதிக்காது என்றும், இருமொழி கல்விக் கொள்கையை மட்டுமே தொடர்ந்து பின்பற்றும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த மக்களின் உணர்வும், அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உட்பட பெரும்பாலான அரசியல் கட்சிகளும், இரு மொழி கொள்கையை பின்பற்றுவதையே கொள்கையாக கொண்டுள்ளனர். இந்த சூழ்நிலையில், மத்திய அரசு அறிவித்த தனது புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கல்வி இடம் பெற்றிருப்பது வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கின்றது.

ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் உணர்வை ஏற்று, மத்திய அரசு அறிவித்த மும்மொழி கொள்கையை மறுபரிசீலனை செய்து, அந்தந்த மாநிலங்கள் தங்களின் கொள்கைக்கு ஏற்ப செயல்படுத்திக் கொள்ள மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ் மொழிக்கோ, தமிழர்களுக்கோ, பாதிப்பு ஏற்படும் போது, அந்த பாதிப்பினைக் களைய உடனடி நடவடிக்கை எடுக்கும் அரசு, மாண்புமிகு அம்மாவின் அரசு தான் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தினமணி       

 



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எனக்குத் தெரிய…. கஸ்தூரியார் வீதியும், ஸ்ரான்லி வீதியும் சந்திக்கும் மூலையில் (லிடோ தியேட்டருக்கு எதிரில்) பெரிய குளம் ஒன்று இருந்தது.  அதில் பல தொழிலாளர்கள் உடுப்புகளை தோய்த்து,  அங்கேயே உள்ள விசாலமான இடத்தில் தோய்த்த உடைகளை, உலர்த்தி விட்டு எடுத்துச் செல்வார்கள். 1970 கள் இருக்கலாம்….  அவ்விடத்தில் முதன் முதலாக  “பூம்புகார்” என்ற ஒரு குளிர்பான கடை வந்தது. யாழ். மாநகர சபை எப்படி அனுமதி கொடுத்தது என்று தெரியவில்லை. எதிரே… ஹோட்டேல் பரடைஸ் என்ற கடையும், ஒரு தளபாடக் கடையும், சந்தியில்…. இராஜசூரியரின் பெற்றோல் நிலையமும் இருந்தது.
    • பல மொழிகளை பேசி, அபிவிருத்திகளை காட்டி மக்களை ஏமாற்றுவது நீடித்து நிற்கக்கூடியதல்ல. மாறாக மக்களின் தேவைகள், இழப்புகள், பாதிப்புக்களை இனங்கண்டு மனந்திருந்தி,  மன்னிப்பு கேட்டு, பரிகாரம் செய்து அந்த நிகழ்வுகள் மீண்டும் நிகழாதபடி உறுதி செய்வதே அரசின் பொறுப்பு. பேசுவதோடு கடமை முடிவதில்லை, மக்களின் நிஞாயமான ஆசைகளை வெளிகொண்டுவந்து தீர்த்து வைப்பதே மக்களின் தலைவர்களின் கடமை. அனுரா நடந்த கொடுமைகள், அதற்கான காரணங்கள், தீர்க்கப்படவேண்டிய முறைகளை தொட்டுச்சென்றிருக்கிறார். அவரின் சொந்த அனுபவங்கள் அதை புரிந்துகொள்ள உதவியிருக்கின்றன. அதை அவர் அரசியலுக்கப்பால் செயலாற்ற முன்வரவேண்டும். அர்ச்சுனா சிங்கள மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த முன்வரவேண்டும். அப்போதான் மாற்றம் வரும். வெறும் பாராளுமன்றத்திற்குள் வீர வசனம் பேசுவதால் மாற்றம் ஏற்படவோ, மக்கள் மத்தியில் நல்லிணக்கமோ வரப்போவதில்லை. அனுரா செய்வார். ஆனால் அவரோடு கூட இருப்பவர்கள், இனவாதத்தை வளர்த்து அரசியல் ருசி கணடவர்கள் அவரை அனுமதிக்கப்போவதில்லை. மக்களே  மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவர்கள்.  
    • தமிழர்கள் தமக்கு நடந்த அனைத்தையும் மறந்து, மன்னித்து, சிங்களவர்களுடன் சேர்ந்து வாழவேண்டும், பழைய விடயங்களைத் தொடர்ந்தும் பேசிக்கொண்டிருக்காது இலங்கையராக முன்னேறவேண்டும் என்று கோரிவரும்  தமிழ்த் தேசியத்தை தொடர்ச்சியாக எதிர்த்துவரும் "தீவைக் காதலிக்கும்" ஒருவரும், தமிழரசுக் கட்சியின் பிரமுகரை ஆதரிக்க வேண்டும் இதுவரை பேசிவந்து திடீரென்று அநுரவின் பக்தனாக மாறியவரும், கூடவே இதுவரை காலமும் தமிழ்த்தேசியத்தை ஆதரித்து இன்று அநுரவிற்காக காவடி தூக்கும் முன்னாள் தேசியவாதிகளும் கட்டாயம் இக்காணொளியைப் பார்க்க வேண்டும். அவர்களுக்கு இது கசப்பாக இருக்கலாம் என்கிற முன்னெச்சரிக்கையோடு இணைக்கிறேன்.  தமிழ்த் தேசியத்தை இப்போதும் நேசிக்கும் ஏனையவர்களை இக்காணொளியை விரும்புவார்கள் என்பதில் எனக்கு எள்ளளவும் ஐய்யமில்லை. 
    • என்ன இருந்தாலும் உலகளாவிய இல்லத்தரசிகளின் சேமிப்பு பழக்கத்தை இந்தளவிற்கு வழிச்சு ஊத்தக்கூடாது.😂
    • 7.0 என்றால் பெரிது தான்........... இந்த தடவையும் தப்பிவிட்டோம்............... இங்குள்ள வீடுகள் தலைக்கு மேல இடிந்து விழுந்தால் கூட தப்பி விடலாம்............... ஆனால் பரணில் வைக்கப்பட்டுள்ள பழைய சாமான்கள் உச்சந்தலையில் விழுந்தால், எதுவென்றாலும் அச்சமில்லை அச்சமில்லை என்று பாடியவரை இப்பவே மேலே போய் பார்க்க வேண்டி வந்துவிடும்........................🤣.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.