Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

Picture2.png

test.jpg

 

மறுநாள் (இன்று) வார விடுமுறை..

நள்ளிரவு தூங்கும் வரை வழக்கமாக பழைய பாடல்களை கேட்கும் எனக்கு, இந்தப்பாடல் வரிகள் கவர்ந்தன..

யூடுயூபில் தேடி படத்தை பார்த்தேன்.

பாடல்கள் அத்தனையும் அருமை.. படமும் பரவாயில்லை..

 

அசிரத்தையான ஆணின் கவனத்தை ஈர்க்க,

"எனக்கென்ன குறை..? ஏன் இந்த பாராமுகம்..?"

என பெண் பாடுவதாக கண்ணதாசன் வரிகளில், எம்.எஸ்.வி இசையில் மனம் கவர்ந்த பாடல்..!

 

ஊகிக்க முடிகிறதா..? vil-sourcils.gif



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அரிசி தட்டுப்பாட்டின் பின்னணியில் பாரிய அரசியல் சூழ்ச்சி; அமைச்சர் வசந்த சமரசிங்க 10 Dec, 2024 | 12:53 AM   (இராஜதுரை ஹஷான்) தேர்தலில் படுதோல்வியடைந்த தரப்பினர் அனைவரும் ஒன்றிணைந்து அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்க சூழ்ச்சி செய்கின்றனரென வர்த்தகம், வாணிபம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். அரிசி தட்டுப்பாட்டின் பின்னணியில் பாரிய அரசியல் சூழ்ச்சி உள்ளது. அனைத்து சூழ்ச்சிகளையும் சட்டத்தின் ஊடாக தோற்கடிப்போம் என்றும் குறிப்பிட்டார். அரிசி, தேங்காய் உட்பட அத்தியாவசிய உணவு பொருட்களுக்கான தட்டுப்பாடு குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர், அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அரிசி உற்பத்தியாளர்களை நெருக்கடிக்குள்ளாக்குவதோ அல்லது அவர்களின்  தொழிற்றுறையை கேள்விக்குள்ளாக்குவதோ எமது நோக்கமல்ல என்றும் அவர் குறிப்பிட்டார். விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல்லை கொள்வனவு செய்து அவற்றை அரிசியாக்குவதற்கான புதிய திட்டங்களை அரச கட்டமைப்பில் முன்னெடுப்பதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய உணவு பொருட்களின் மாபியாக்களுக்கு ஒருபோதும் அடிபணிய போவதில்லை என்றார்.    
    • பெருவணிகர்கள் அரிசி உற்பத்தியை வியாபாரமாக்குவதற்கு இடமளிக்காதீர்கள் - அரசாங்கத்திடம் மக்கள் போராட்ட முன்னணி வலியுறுத்தல்   10 Dec, 2024 | 02:14 AM   (நா.தனுஜா) சிறார்கள் மத்தியில் மந்தபோசணை நிலை மிக உயர்வான மட்டத்தில் காணப்படும் இலங்கையில், பேரளவு அரிசி உற்பத்தியாளர்கள் அரிசி உற்பத்தியை வியாபாரமாக்குவதற்கு அரசாங்கம் இடமளிக்கக்கூடாது என மக்கள் போராட்ட முன்னணியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் தரிந்து உடுவரகெதர வலியுறுத்தியுள்ளார். அரிசிக்கான தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் தொடர்பில் மக்கள் போராட்ட முன்னணியினால் திங்கட்கிழமை (9) கொழும்பு லயன்ஸ் கிளப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது: அரிசி விவகாரத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அதிரடித் தீர்மானங்களை மேற்கொள்வதைப் பார்த்தோம். ஆனால் சந்தையில் அரிசி இல்லை. இருக்கின்ற அரிசியின் அளவு போதுமானதாக இல்லை தற்போது அரிசி தட்டுப்பாட்டுக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணங்களைக் கூறுகிறார்கள். ஆனால் புள்ளிவிபரங்களை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில் கடந்த ஆண்டுகளில் நாம் தேவையை விட அதிகமாக அரிசியை உற்பத்தி செய்திருக்கிறோம். அவ்வாறிருக்கையில் இப்போது அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. பேரளவிலான அரிசி உற்பத்தியாளர்கள் அரிசியைத் திட்டமிட்டுப் பதுக்கியிருக்கிறார்கள். அதனூடாக அவர்கள் அதிக இலாபமீட்டுவதற்கு முனைகிறார்கள். இலங்கையின் நுகர்வோர் அதிகாரசபைச் சட்டத்தின் பிரகாரம் பொருட்களை விற்பனை செய்யாமல் பதுக்குவது தண்டனைக்குரிய குற்றமாகும். ஆனால் தற்போது இச்சட்டம் உரியவாறு நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. ஆகையிலேயே உற்பத்தியாளர்கள் இவ்வாறான முறையற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.  இப்போது அரசாங்கத்தினால் எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைக்கு அமைவாக அரிசி உற்பத்தியாளர்கள் ஒரு கிலோ அரிசி விற்பனையின் ஊடாக 50 ரூபாவுக்கும் மேல் வருமானமீட்டுகிறார்கள். அவ்வாறிருக்கையில் டட்லி சிறிசேன ஊடகவியலாளர் சந்திப்பை நடாத்தி, உண்மைக்குப் புறம்பான விடயங்களைக் கூறுகிறார்.  இந்நிலையில் அதிகாரிகள் ஊடாக அரிசி ஆலைகளில் சோதனை நடாத்தவிருப்பதாக அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் இதுபோன்ற வேடிக்கை நடவடிக்கைகள் அவசியமற்றவை. மாறாக மந்தபோசணை உயர்வாகக் காணப்படும் இலங்கையில், இனினும் அரிசி உற்பத்தியை வியாபாரமாக மாற்ற இடமளிக்கக்கூடாது என்று வலியுறுத்தினார். 
    • உதயங்க வீரதுங்க கபிலசந்திரசேனவிற்கு அமெரிக்கா பயணத்தடை – ஊழலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு 10 Dec, 2024 | 05:47 AM   ரஸ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்கவும் ஸ்ரீலங்கன் எயர்லைன்சின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபிலசந்திரசேனவும்  குறிப்பிடத்தக்க ஊழலில் ஈடுபட்டனர் என தெரிவித்துள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு பயணத்தடை விதித்துள்ளது.    
    • உரிய முறைக்கு புறம்பாக எவருக்கும் மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கவில்லை - ரணில்   10 Dec, 2024 | 02:33 AM     மதுபான அனுமதிப்பத்திரங்கள் உரிய முறைக்கு புறம்பாக எவருக்கும் வழங்கவில்லை எனவும், குறித்த அனுமதிப்பத்திரத்தால் அரசாங்கம் 3 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்க மதுபான அனுமதிப்பத்திரங்களை அரசியல் இலஞ்சமாக பெற்றுக் கொடுத்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட முறைக்கு புறம்பாக ஒரு கலால் அனுமதிப்பத்திரம் கூட வழங்கப்படவில்லை எனவும், புதிய அனுமதிப்பத்திரங்களை வழங்குவதன் மூலம் இந்த வருடத்தின் முதல் 9 மாதங்களில் அரசாங்கம் 3.1 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், மதுபான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதில் பின்பற்றப்பட்ட முறையின் சட்டபூர்வமான தன்மையை தேர்தல்கள் ஆணைக்குழு 2024 ஓகஸ்ட் 19 ஆம் திகதி கலால் ஆணையாளர் நாயகத்திற்கு அனுப்பிய கடிதத்தின் ஊடாக உறுதிப்படுத்தியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியின் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது. முறையான வருமானம் ஈட்டும் கலால் உரிமங்களை தொடரவோ அல்லது ரத்து செய்யவோ தற்போதைய அமைச்சரவைக்கு அதிகாரம் உள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.    
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.