Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இயற்கையை காப்போம்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சென்னையில் வேகமாக உருவாக்கப்படும் Miyawaki காடுகள்

 

  • Replies 152
  • Views 26.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, உடையார் said:

தமிழகம் உள்பட 15 மாநிலங்களில் காற்றின் தரத்தை மேம்படுத்த ரூ.2,200 கோடி ஒதுக்கீடு - நிதியமைச்சகம்

தமிழகம் உள்பட 15 மாநிலங்களில் காற்றின் தரத்தை மேம்படுத்த ரூ.2,200 கோடி ஒதுக்கீடு - நிதியமைச்சகம்

 

புதுடெல்லி,

இந்தியாவில் காற்று மாசுபாடு என்பது மிகப் பெரிய சூழல் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. காற்று மாசுபாட்டால் ஆண்டிற்கு பல லட்சத்திற்கு மேற்பட்ட நபர்கள் உயிரிழக்கின்றனர். குறிப்பாக டெல்லி, அரியானா, உத்தரப பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களில் காற்று மாசுபாடு கடுமையாக பாதிப்பை ஏற்படுத்துகிறது.


நம் நாட்டின் தலைநகரமான டெல்லி காற்று மாசு அதிகம் உள்ள நகரங்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. பெருகி வரும் வாகனங்கள் எண்ணிக்கை, தொழிற்சாலைகள் வெளியிடும் புகை, மாநில எல்லை பகுதிகளில் குப்பைகள் எரிக்கப்படுவது போன்ற காரணங்களால் டெல்லியில் காற்று மாசு அடைகிறது. சுத்தமான காற்றை சுவாசிக்க முடியாமல் டெல்லிவாசிகள் தவித்து வருகின்றனர்.

டெல்லிக்கு தான் அந்த நிலைமை என்றால் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களிலும் காற்றின் தரம் மோசமாகி வருகிறது. மத்திய அரசு காற்று மாசுவை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தீபாவளி சமயத்தில் பட்டாசு வெடிப்பதால் காற்று அதிகம் மாசு அடையும் என்பதால் பாரம்பரிய வெடிகளை விற்பனை செய்ய உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. 

இந்நிலையில், காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு உள்ளிட்ட 15 மாநிலங்களுக்கு 15-வது நிதிக்குழு பரிந்துரைப்படி மொத்தமாக ரூ.2,200 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. 2020-21ம் ஆண்டிற்கான முதல் தவணையாக 10 லட்சம் மக்கள் தொகைக்கு அதிகமான நகரங்களுக்கு இந்த தொகையானது விடுவிக்கப்பட்டுள்ளது. அதிக பட்சமாக மராடிய மாநிலத்துக்கு மட்டும் 396.5 கோடியும், குறைந்தபட்சமாக அரியானா மாநிலத்திற்கு 24 கோடி விடுவிக்கப்பட்டு உள்ளது.

இதில் தமிழகத்திற்கு மட்டும் மொத்தமாக ரூ.116.5 கோடி விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னைக்கு ரூ.90.5 கோடியும், மதுரைக்கு ரூ.15.5 கோடியும், திருச்சிக்கு ரூ.10.5 கோடியும் விடுவிக்கப்பட்டு உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

https://www.dailythanthi.com/News/India/2020/11/03002030/Govt-releases-Rs-2200-crore-to-15-states-towards-measures.vpf

 

காற்றை மாசு படுதலை தடுக்க 2200C😂 

இதைதான் நாம் தமிழர் கட்சி சொல்கின்றார் வீட்டுக்கு ஒரு மரம் நடுங்கள் என்று. விளங்கினாதானே

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மரத்தை வெட்டினால், மற்ற மரங்கள் அழுமா?

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2ஏக்கரை முழுமையாக பயன்படுத்திய இளம் இயற்கை விவசாயி

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
இந்த நவீன உலகத்தில் மக்கள் எல்லோரும் பணத்துக்கு பின்னால் சென்று விட்டார்கள். அதனால் கடவுள் கொடுத்த இயற்கை வரங்களை கொண்டாட தெரியவில்லை. அரசாங்கமும் வாக்கு அரசியலுக்காக கிராம புறத்து மக்களை அவர்களுடைய பண அரசியலுக்காக அவர்களுடைய சுயமரியாதை இழந்து அரசுகளிடம் பிச்சை எடுக்கிறார்கள். இந்த காணொலி மக்களிடம் சென்றடைந்தால் நகர்புறத்து மோகம் போய் கிராமத்தில் உள்ள நன்மைகளை அறிவார்கள் .என்னுடைய பெற்றோர்கள் கிராமத்தில் பிறந்தாலும் அவர்கள் கிராமத்துக்கு செல்ல பயப்படுகிறார்கள்.ஏன் என்றால் அங்கு படிப்பு மற்றும் சுகாதார வசதிகள் இருப்பதில்லை.கிராமத்தில் இந்த வசதி வாய்ப்புக்கள் வந்தால் கிராமம் போல சொர்க்கம் வேறு எதுவும் இல்லை என்பதற்கு இந்த கண்ணொளி நல்ல சாட்சி இதை தயாரித்து என்னை போன்ற மக்களிடம் கொண்டு சென்றவர்களுக்கு மிக்க நன்றி.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

16 மாதங்களின் பின்

மியாவாக்கி காடுகள் - கேரளா அரசின் நடவடிக்கை; 

இதே மாதிரி காடுகளை ஈழத்தில் தன்னலவர்கள் உருவாக்க வேண்டும், 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குமரிக்கு வெளிநாட்டு பறவைகள் வரத்து அதிகரிப்பு

குமரிக்கு வெளிநாட்டு பறவைகள் வரத்து அதிகரிப்பு

 

நாகர்கோவில்:

அடர்ந்த காடுகள், நன்னீர்நிலைகள், கடல் பகுதிகள், காயல் பகுதிகள் மற்றும் மலைகளை கொண்டது குமரி மாவட்டம். அதோடு ஆண்டுக்கு இரு பருவமழை பொழிவதால் இயற்கையாகவே குமரி மாவட்டம் பசுமையாக காட்சி அளிக்கிறது. எனவே குமரி மாவட்டத்துக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பறவைகள் படையெடுப்பது வழக்கம். அவ்வாறு வரும் வெளிநாட்டு பறவைகள் இங்குள்ள குளங்கள், காயல்கள் மற்றும் காட்டு பகுதிகளில் தங்கி இனப்பெருக்கம் செய்துவிட்டு மீண்டும் தாங்கள் வசிக்கும் இடங்களுக்கு செல்லும்.

 
குமரி மாவட்டத்துக்கு வெளிநாட்டு பறவைகள் செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்து வரும். பின்னர் நவம்பர் மாத இறுதியில் பறவைகள் இங்கிருந்து புறப்பட்டு விடும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே பருவநிலை மாற்றம் காரணமாக மழை காலம் மாறி பெய்து வருகிறது. இதன் காரணமாக பறவைகளும் தாமதமாக வந்து தாமதமாகவே செல்கின்றன.

அந்த வகையில் இந்த ஆண்டு செப்டம்பர் மாத தொடக்கத்தில் வெளிநாட்டு பறவைகள் வரத்து மிகவும் குறைவாக இருந்தது. பறவைகள் வசிக்கும் பகுதிகளில் போதுமான மழை இல்லாததால் பறவைகள் வரவில்லை என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது குமரி மாவட்டத்துக்கு பறவைகள் வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதாவது செங்கால் உள்ளான், சதுப்பு மணல் உள்ளான், பைங்கால் உள்ளான், சாதா டேர்ன், கிருதா டேர்ன், பெரிய கொண்டை டேர்ன் மற்றும் பூநாரை உள்ளிட்ட வெளிநாட்டு பறவைகள் அதிகளவில் வந்துள்ளன. இவற்றில் பெரும்பாலான பறவைகள் மணக்குடி காயலில் வசித்து வருகின்றன. மேலும் சுசீந்திரம் குளத்திலும் வெளிநாட்டு பறவைகளை காண முடிகிறது.

மணக்குடி காயலில் வெளிநாட்டு பறவைகளும், உள்நாட்டு பறவைகளும் இரை தேடி தண்ணீரில் நீந்தி செல்லும் காட்சி கண்களை கவரும் விதமாக உள்ளது. எனவே காலை மற்றும் மாலையில் அப்பகுதி மக்கள் மணக்குடி பாலத்தில் நின்றபடி பறவைகளை பார்த்து ரசிக்கிறார்கள். அதோடு குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வசிக்கும் மக்கள் விடுமுறை தினத்தில் வந்து விதவிதமான மற்றும் வண்ணமயமான பறவைகளை பார்த்து ரசிப்பதுடன் புகைப்படமும் எடுத்து கொள்கிறார்கள்.

இதுபற்றி பறவைகள் ஆர்வலர் டேவிட்சன் கூறுகையில், “குமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு செப்டம்பர் மாத தொடக்கத்தில் குறைவான வெளிநாட்டு பறவைகள் மட்டுமே வந்தன. ஆனால் தற்போது பறவைகள் வரத்து சற்று அதிகரித்து இருக்கிறது. இந்த நிலையில் மழை பெய்ய தொடங்கி இருப்பதால் மேலும் எண்ணற்ற வகை பறவைகள் வர வாய்ப்புகள் உள்ளன. அவ்வாறு வரும் பறவைகளை பொதுமக்கள் அச்சுறுத்த கூடாது. அவற்றை வேட்டையாடுவதையும் தவிர்க்க வேண்டும்” என்றார்.

https://www.maalaimalar.com/news/topnews/2020/11/07073929/2049831/Foreign-birds-inflow-increased-at-Kumari-District.vpf

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாலையில் வீசப்பட்ட குப்பை... 80 கி.மீ பயணம் - திரும்ப வந்து எடுக்கவைத்த கர்நாடக அதிகாரிகள்!

பீட்ஸா

பீட்ஸா ( Representational Image )

அதைப் பார்த்த பொதுமக்கள் சிலர் அவர்களை செல்போனில் தொடர்புகொண்டு திரும்பச் சென்று அந்த இடத்தை சுத்தம் செய்து கொடுக்க வலியுறுத்தியிருக்கிறார்கள்.

சுற்றுலா தலங்களில் வீசியெறியப்படும் குப்பைகள், இயற்கை அழகை மாசுபடுத்தும். இதைத் தவிர்த்த அரசுகளும், இயற்கை ஆர்வலர்களும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் பல மாநில அரசுகள் தண்டனை விதிப்பதை நடைமுறைப்படுத்தியுள்ளன. அந்தவகையில், கர்நாடகா மாநிலம் மடிகேரியில் உள்ளூர்வாசிகள், அதிகாரிகளின் அறிவுரையால், இரண்டு சுற்றுலாப் பயணிகள் தாங்கள் சாலையில் வீசிச் சென்ற பீட்சா பெட்டிகளை 80 கி.மீ பயணித்து வந்து அப்புறப்படுத்திய சம்பவம் நடந்திருக்கிறது.

கர்நாடகா மாநிலம் மடிகேரிக்குச் சுற்றுலா வந்த இரண்டு பேர், பீட்ஸா பெட்டிகளை சாலையிலேயே வீசிவிட்டு சென்றிருக்கிறார்கள். அது குடகு மாவட்ட சுற்றுலாத் துறை பொதுச்செயலாளர் மடேதிரா திம்மையா (Madetira Thimmaiah) உள்பட அப்பகுதிவாசிகள் கண்ணில்பட்டிருக்கிறது.

கார் - சுற்றுலா
 
கார் - சுற்றுலா Representational Image

அதன்பிறகு நடந்தவற்றை விளக்கிய மடேதிரா திம்மையா, ``மலைகிராமப் பகுதியான இந்த சுற்றுலாத் தலத்தில் பொது இடங்களில் குப்பைகளை வீசுவதைத் தடை செய்திருக்கிறோம். தடையை மீறுபவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இந்தப் பகுதியைச் சுத்தமாக வைத்திருக்க கடகடாலு (Kadagadalu) ஊராட்சிப் பணியாளர்களும் தீவிரமாகப் பணியாற்றி வருகிறார்கள். கடந்த புதன்கிழமை முதல் ஊராட்சிப் பணியாளர்களுடன் சேர்ந்து எங்கள் பகுதியை சுத்தம் செய்து கொண்டிருந்தோம்.

அதன்பின் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.15 மணியளவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோதுதான், அந்த பீட்ஸா பெட்டிகளைப் பார்த்தேன். நாங்கள், இந்த மலைப் பகுதியை சுத்தமாக வைத்துக்கொள்ள பல்வேறு முயற்சிகள் எடுத்துக் கொண்டிருக்கும் நேரத்தில், இந்தப் பெட்டிகளை பார்த்ததும் எங்கள் முயற்சி அனைத்தும் வீணானது போல உணர்ந்தேன். பின்னர்தான், அந்தப் பெட்டிகளைத் திறந்து பார்க்க முடிவு செய்தேன். அதிர்ஷ்டவசமாக அதற்குள் செல்போன் நம்பருடன் கூடிய ஒரு பில் இருந்தது.

 
 

நான் குறிப்பிட்ட அந்த எண்ணுக்கு அழைத்து அவருடன் பேசினேன். குப்பைகளை வீசிச் சென்றதற்காக அவர் மன்னிப்புக் கேட்டார். அவரைத் திரும்ப வந்து, பீட்ஸா பெட்டிகளை எடுத்துச் செல்லும்படி கேட்டேன். ஆனால், அவர் குடகு மாவட்டத்தை விட்டுச் சென்றுவிட்டதால், திரும்பி வர மறுத்துவிட்டார்.

அதன்பின், நான் உள்ளூர் காவல்துறையினரை உதவிக்கு அழைத்தேன். காவல்துறை உதவி ஆய்வாளர் பேசியபின்பும் அவர்கள் வர மறுத்தனர். அதன்பின்னர் தான் நாங்கள் இந்த சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டோம்.

அவர்களின் செல்போன் நம்பரும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. அதைப் பார்த்த பொதுமக்கள் சிலர் அவர்களை செல்போனில் தொடர்புகொண்டு திரும்பச் சென்று அந்த இடத்தை சுத்தம் செய்து கொடுக்க வலியுறுத்தியிருக்கிறார்கள். பொதுமக்கள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக மாலை 3.45 மணி அளவில் இருவரும் 80 கி.மீ பயணம் செய்து வந்து, குப்பைகளை எடுத்து குப்பைத் தொட்டியில் போட்டனர். இதற்காக அவர்கள் மிகவும் வெட்கப்பட்டனர்’’ என்றார்.

 

https://www.vikatan.com/social-affairs/miscellaneous/karnataka-travellers-who-dumped-pizza-boxes-on-road-made-to-go-back-80-kms-to-pick-up-trash

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டெல்லியில் காற்று மாசு பாடு தொடர்ந்து அதிகரிப்பு

டெல்லியில் காற்று மாசு பாடு தொடர்ந்து அதிகரிப்பு

 

டெல்லியில் ஒவ்வொரு குளிர்காலத்தின்போதும் காற்றின் தரம் மிகவும் பாதிக்கப்படும். இந்த ஆண்டு குளிர்காலத்தின் தொடக்கத்திலேயே காற்று மிகவும் மாசுபட்டு உள்ளது. கடந்த சில நாட்களாகவே தலைநகரில் காற்றின் தரம் மோசமாக இருந்து வருகிறது. 

காற்று மாசுபாட்டை குறைக்க அரசு விழிப்புணர்வு மூலமாகவும் பல்வேறு கட்டங்களாக நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றன. டெல்லியின் அண்டை மாநிலங்களில் நிகழும் குண்டு வெடிப்பு போன்றவையும் காற்று மாசுபாட்டுக்கு காரணமாக அமைகிறது.

டெல்லி என்சிஆர் பகுதி தொடர்ந்து அதிக அளவு மாசுபாட்டை பதிவுசெய்தது கவலையைத் உண்டாக்குகிறது. இந்நிலையில் நேற்று காற்று மாசுபாட்டின் தரம் ( AQI)  தொடர்ந்து 'மிகவும் மோசமான' பிரிவில் உள்ளது. டெல்லியில் காற்று மாசுபாட்டின் தரம் 385 உடன் 'மிகவும் மோசமான' வகையிலும், நொய்டாவில் மாசு அளவு 486 என்ற மட்டத்துடன் 'கடுமையான' பிரிவிலும், குர்கானில் காற்று மாசுபாடு 350 உடன் 'மிகவும் மோசமாக' இருந்ததாக தரவுகளின்படி கூறப்படுகிறது. 

நேற்று முன்தினம் டெல்லியில் ஒட்டுமொத்த காற்று மாசு அளவு 486 ஆக பதிவாகியது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் நிலவும் காற்று மாசுபாட்டால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

காற்று அளவு ( 0 - 50 ) - நல்லது , ( 51 - 100 ) - திருப்திகரமானது, ( 101 - 200 ) - மிதமானது , ( 201 - 300 ) - மோசமாக, ( 301 - 400 ) - மிகவும் மோசமாக, மற்றும் ( 401 - 500 ) - கடுமையானது என்று கருதப்படுகிறது.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/11/08103015/Delhi-Pollutants-continue-to-affect-the-qualilty-of.vpf

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அழிவின் விளிம்பில் இருக்கும் 6.5 கோடி ஆண்டுகள் பழமையான ஆஸ்பிரீட் மீன் இனம்

அழிவின் விளிம்பில் இருக்கும் 6.5 கோடி ஆண்டுகள் பழமையான ஆஸ்பிரீட் மீன் இனம்

 

அழிவின் விளிம்பில் இருந்த ஐரோப்பாவின் அரிய வகை மீன்களில் ஒன்றான ஆஸ்பிரீட்டை சமீபத்தில் கண்டுபிடித்து உள்ளனர். 31 வயதான மீன் உயிரியலாளரான டோகோ, 6.5 கோடி ஆண்டுகள் பழமையான மீன் இனமான  ஆஸ்பிரீட்டின் 12 மாதிரிகளை அக்டோபர் பிற்பகுதியில் வால்சன் ஆற்றில் கண்டுபிடித்து உள்ளார்.


எங்கள் கண்களுக்கு முன்னால் ஒரு ஆஸ்பிரீட் இருப்பது அருமையாக இருந்தது.இது ஒரு புல உயிரியலாளர் பெறக்கூடிய மிகப்பெரிய வெகுமதிகளில் ஒன்றாகும் என பிபிசிக்கு அளித்த பேட்ட்டியில் கூறி உள்ளார்.

ஆஸ்பிரீட் முதன்முதலில் ஒரு உயிரியல் மாணவரால் 1956 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது இது அழிவின் அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது.

அரிய மீன்களின் தொகை சுமார் 10-15 என்று கூறுகின்றன, இது 2000 களின் முற்பகுதியில் சுமார் 200 ஆக உயர்ந்தது.

விஞ்ஞானிகள், உயிரியியல் பாதுகாப்பு வல்லுநர்கள் ஒன்று கூடி 6.5 ஆண்டுகள் பழமையான மீன்களைக் காப்பாற்றிவருகிறார்கள்.

 

https://www.dailythanthi.com/News/India/2020/11/09180424/Scientists-conservationists-get-together-to-save-65millionyearold.vpf

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உள்ளடக்கம்:-  இயற்கை சூழல் பள்ளி , மிகச் சிறந்த பள்ளி மரங்களுடன், ஒரு கரும்பலகையும், படிப்பிக்க ஆசிரியரும் மாணவர்களும் இருந்தால் பள்ளி தொடங்கலாம், கட்டிடம் தேவையில்லை

 

Edited by உடையார்
எழுத்து பிழை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
ஆழ்கடல் அதிசயம்; துடுப்புகளை கால்கள் போல் பயன்படுத்தி நடந்து சென்ற வித்தியாச மீன்

ஆழ்கடல் அதிசயம்; துடுப்புகளை கால்கள் போல் பயன்படுத்தி நடந்து சென்ற வித்தியாச மீன்
 

தெகுசிகால்பா,

கடல்வாழ் உயிரினங்களை பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருபவர் மைக்கி சார்டரிஸ்.  ஹோண்டுராஸ் நாட்டின் ரோவாடன் தீவில் பல ஆண்டுகளாக ஆழ்கடலுக்குள் சென்று பல்வேறு உயிரினங்களை கண்டு படங்களாகவும் வீடியோ பதிவு செய்து வருகிறார்.


இதில் ஆச்சரியப்படும் வகையில் மீன் ஒன்று நீந்தி செல்வதற்கு பதிலாக தனது துடுப்புகளை கால்களை போல் பயன்படுத்தி கடலின் அடிப்பரப்பில் தரையில் நடந்து சென்றுள்ளது.

பேட்பிஷ் என்றழைக்கப்படும் இந்த மீனின் அடிவாய் பகுதி நன்க சிவந்து காணப்படுகிறது. தலையில் ஒற்றை கொம்பு காணப்படுகிறது.  நண்டுகளை போன்று மெதுவாக நடந்து சென்று இரையை தேடுகிறது.  பார்ப்பதற்கு சற்று அகோர வடிவுடன் காணப்படுகிறது.

இந்த வகை மீன்களுக்கு நீந்துவதற்கான சவ்வு இல்லை.  அதனால் அவை நீரின் அடிப்பரப்பிலேயே வசிக்கின்றன.  எனினும், தூண்டி விட்டால் தனது வாலை பயன்படுத்தி அவை நீந்தும்.  நடந்து செல்ல கூடிய ஒரு சில மீன்களில் இதுவும் ஒன்றாகும்.

இதுவரை பார்த்த உயிரினங்களிலேயே வித்தியாசம் நிறைந்த ஒன்றாக இந்த பேட்பிஷ் உள்ளது.  இதுபற்றி முன்பே கேள்விபட்டிருக்கிறேன்.  ஆனால், முதன்முறையாக இதனை படம் பிடித்துள்ளேன் என மைக்கி கூறுகிறார்.

தினமும் நீங்கள் ஆய்விற்காக ஆழ்கடலுக்குள் உள்ளே செல்லும்பொழுது, அரிதாக பவள பாறைகளில் இருந்து வெளிவரும் இந்த மீன்களை எப்பொழுதேனும் காணலாம் என அவர் கூறுகிறார்.  ஆழ்கடலில் ஆயிரம் அதிசயங்களில் இதுவும் ஒன்றாக உள்ளது.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/11/13033757/Deep-sea-miracle-Different-fish-that-walked-using.vpf

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

48 ஆண்டுகளாக பட்டாசு வெடிக்காத வேட்டங்குடி கிராமம்... இனிப்பு வழங்கி வாழ்த்திய கலெக்டர்!

இனிப்பு வழங்கிய ஆட்சியர்

இனிப்பு வழங்கிய ஆட்சியர்

வேட்டங்குடி, கொள்ளுக்குடி கிராமத்தில் உள்ள பொதுமக்கள் தங்களின் சொந்த விசேஷங்களுக்கோ, ஊர் திருவிழாவிற்கோ பட்டாசு வெடிக்க மாட்டார்கள்.

பறவையின் நலனுக்காக வெடிபோடாமல் தீபாவளி கொண்டாடும் கிராம மக்களுக்கு ஆட்சியர் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பறவைகளுக்காக 48 ஆண்டுகளாக கிராம மக்கள் வெடி வெடிக்காமல் தீபாவளி கொண்டாடி வருகின்றனர். திருப்பத்தூர் தொகுதிக்கு உட்பட்டு வருகிறது வேட்டங்குடி. இந்த வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்தில் 217 வகையான 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு பறவைகள் ஆண்டுதோறும் வந்து செல்லும்.

வேட்டங்குடியில் பறவைகள்
 
வேட்டங்குடியில் பறவைகள்

செப்டம்பர் முதல் பிப்ரவரி வரை தொடர்ந்து பறவைகள் கூடுகட்டி குஞ்சு பொறித்துச் செல்லும். உண்ணி கொக்கு, முக்குளிப்பான், நீலச்சிறவி, சாம்பால் நிற நாரை, இரவு நாரை, பாம்புதாரளி, கருநீல அரிவாள் மூக்கன், கரண்டி வாயன், நத்தை கொக்கு உள்ளிட்ட பறவைகள் அதிகளவு வேட்டங்குடியில் காண முடியும்.

 
 

இந்நிலையில் சரணாலயம் அருகே உள்ள வேட்டங்குடி, கொள்ளுக்குடி கிராமத்தில் உள்ள பொதுமக்கள் தங்களின் சொந்த விசேஷங்களுக்கோ, ஊர் திருவிழாவிற்கோ பட்டாசு வெடிக்க மாட்டார்கள். அதேபோல் பறவைகளுக்கு தொந்தரவு செய்யும் விதமாக மேள தாளங்களோ, ஒலி பெருக்கியோ வைப்பதில்லை.

இதனால் வேட்டங்குடி சரணாலயத்தில் பறவைகள் இயல்பாக வந்து செல்கின்றன. இப்பகுதி மக்கள் தீபாவளிக்கும் பட்டாசுகள் வெடிக்காமல் அமைதியான முறையில் புத்தாடைகள் உடுத்தியும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடுவது வழக்கம்.

பறவைகள்
 
பறவைகள்

இதைப் பாராட்டும் விதமாக சிவகங்கை மாவட்ட நிர்வாகம் சார்பாகவும் வனத்துறை சார்பாகவும் இப்பகுதி மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன், மாவட்ட வன அலுவலர் ரமேஷ்வரன், வனச்சரக அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். அப்பகுதியில் உள்ள 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு இனிப்புகள் வழங்கி மாவட்ட ஆட்சியர் வாழ்த்துகள் தெரிவித்தார்.

தொடர்ந்து வனத்துறை சார்பில் நடந்த மாநில அளவிலான ஓவியப் போட்டியில் 3-ம் இடம் பிடித்த கீழச்சிவல்பட்டியைச் சேர்ந்த சத்தியபிரியாவிற்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

https://www.vikatan.com/news/tamilnadu/sivaganga-collector-appreciated-the-vettangudi-people-for-their-support-for-birds

 

  • கருத்துக்கள உறவுகள்

காற்று மாசையும் ஒலி மாசையும் தவிர்க்கும் மக்களுக்கு நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 13/11/2020 at 07:40, உடையார் said:
ஆழ்கடல் அதிசயம்; துடுப்புகளை கால்கள் போல் பயன்படுத்தி நடந்து சென்ற வித்தியாச மீன்

ஆழ்கடல் அதிசயம்; துடுப்புகளை கால்கள் போல் பயன்படுத்தி நடந்து சென்ற வித்தியாச மீன்
 

 

ஆழ்கடல் அதிசயம்; துடுப்புகளை கால்கள் போல் பயன்படுத்தி நடந்து சென்ற வித்தியாச மீன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
தடையை மீறி பட்டாசு வெடிப்பு: டெல்லியில் மிகவும் மோசம் - பொதுமக்கள் அவதி

தடையை மீறி பட்டாசு வெடிப்பு: டெல்லியில் மிகவும் மோசம் - பொதுமக்கள் அவதி

டெல்லியில் ஒவ்வொரு குளிர்காலத்தின்போதும் காற்றின் தரம் மிகவும் பாதிக்கப்படும். இந்த ஆண்டு குளிர்காலத்தின் தொடக்கத்திலேயே காற்று மிகவும் மாசுபட்டு உள்ளது. கடந்த சில நாட்களாகவே தலைநகரில் காற்றின் தரம் மோசமாக இருந்து வருகிறது. 

நாட்டின் தலைநகர் டெல்லி உள்பட நாடு முழுவதும் காற்றின் தரம் மோசமாக உள்ள நகரங்களில் வரும் 30-ம் தேதி வரை அனைத்து வகையான பட்டாசுகளை விற்பனை செய்வதற்கும், வெடிப்பதற்கும் தடை விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் நேற்று டெல்லியில் தடை மீறி பல இடங்களில் பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்தனர். இதன் காரணமாக டெல்லி நகரத்தில் காற்றின் தரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

காற்றின் தரம் குறித்த ஆய்வில் டெல்லியின் அருகே உள்ள பரீதாபாத், காஜியாபாத், நொய்டா, கிரேட்டர் நொய்டா, குருகிராம் ஆகியவற்றிலும் காற்றின் தரம் மிகவும் மோசமாக பதிவானது.

டெல்லியில் காற்றின் தரம் அபாய கட்டத்தை தாண்டியதால் டெல்லி முழுவதும் எந்திரங்கள் மூலம் உயர் கட்டிடங்கள் மற்றும் மரங்களின் மீது தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. காற்றின் தரம் குறைவால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். 

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/11/15062255/Fireworks-explode-in-violation-of-the-ban-Air-quality.vpf

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வவ்வால்களை நேசிக்கும் கிராமம்: பட்டாசு வெடிக்காத மக்கள்!

வவ்வால்களை நேசிக்கும் கிராமம்: பட்டாசு வெடிக்காத மக்கள்!

 

கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூர் அருகே கொளதாசபுரம் என்ற கிராமம் உள்ளது. அங்கு சுமார் 500 பேர் வசித்து வருகிறார்கள். கிராமத்தின் மைய பகுதியில் ஏரி ஒன்று அமைந்துள்ளது. இதன் கரையோரத்தில் மா மரங்கள் உள்ளன. 

இதில் நூற்றுக்கணக்கான வவ்வால்கள் வாழ்ந்து வருகின்றன. வவ்வால்கள் இருப்பதால்தான் தங்களது கிராமம் நோய்நொடியின்றி ஆரோக்கியமாக இருப்பதாக கருதும் கொளதாசபுரம் மக்கள், வெகுகாலமாக வவ்வால்களை துன்புறுத்தாமல் நேசித்துக்கொண்டிருக்கிறார்கள். வவ்வால்களும் கிராமத்திற்குள் சென்று மக்களுக்கு தொந்தரவு கொடுப்பதில்லை.

இப்படி மனிதர்களுக்கும்-வவ்வால்களுக்கும் ஏற்பட்ட நெருக்கத்தின் பலனாக தீபாவளி நாட்களில் கொளதாசபுரம் கிராம மக்கள் வவ்வால்களை பயமுறுத்தும் வகையில் பட்டாசு வெடிப்பதில்லை. மேலும் வவ்வால்களுக்கு தொந்தரவு கொடுக்கக்கூடாது என்பதற்காக, மா மரங்களில் ஏறி மாங்கனிகளையும் பறிப்பதில்லை. 

மேலும் அதே மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி தாலுகாக்களில் வனப்பகுதியையொட்டி உள்ள உரிகம், தொட்டமஞ்சி போன்ற கிராம மக்களும் பட்டாசு வெடிப்பதை தவிர்த்து வருகிறார்கள். வன விலங்குகள் மிரண்டு ஓடும் என்பதால் பட்டாசு வெடிப்பதை தவிர்த்து எளிமையாக தீபாவளியை கொண்டாடுகிறார்கள்.

 

https://www.dailythanthi.com/News/State/2020/11/14201735/People-do-not-explode-fireworks.vpf

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
மருத்துவ மாணவர்கள் கண்டறிந்த அரிய வகை வல்லூறு இன பறவை

மருத்துவ மாணவர்கள் கண்டறிந்த அரிய வகை வல்லூறு இன பறவை

புதுச்சேரி, 

இந்தியாவின் பறவை மனிதர் டாக்டர் சலீம் அலியின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதையொட்டி புதுவையிலும் பறவை ஆர்வலர்கள் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.

இந்த ஆண்டின் கணக்கெடுப்பில் ராஜீவ்காந்தி கால்நடை மருத்துவக் கல்லூரியில் படிக்கும் முதுகலை 2-ம் ஆண்டு மாணவர் டாக்டர் விக்னேஷ்வரன், இளங்கலை 4-ம் ஆண்டு மாணவர் பூஷன் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஈடுபட்டனர். அப்போது அவர்களது பார்வையில் அமூர் வல்லூறு என்ற அரியவகை பறவை சிக்கியது. மரப்பாலம் சந்திப்பு அருகே மின் உயர் மின் அழுத்த கம்பியில் அமர்ந்திருந்த அந்த பறவையை அவர்கள் புகைப் படம் எடுத்துக் கொண்டனர்.

இந்த அரிய வகை பறவை குறித்து டாக்டர் விக்னேஷ் வரன் கூறியதாவது:-

வேட்டையாடும் குணம்

அமூர் வல்லூறு வேட்டையாடி உண்ணும் குடும்பத்தை சேர்ந்ததாகும். நீண்டதூரம் இடம்பெயரும் ஆற்றல் பெற்று இருப்பது இதன் தனிச்சிறப்பு. தெற்கு சைபீரியா மற்றும் வடக்கு சீன பகுதிகளில் இடம்பெயர்ந்து பனிக்காலத்தில் தங்களை பாதுகாத்துக் கொள்ள மற்றும் உணவு பற்றாக்குறை காரணமாக தென் ஆப்பிரிக்காவுக்கு செல்லும்.

அவ்வாறு இடம்பெயரும் போது இந்தியா, இலங்கை, மொரீஷியஸ் தீவுகளில் ஓய்வு எடுத்து விட்டு மீண்டும் தனது பயணத்தை தொடரும். இந்தியாவில் இந்த பறவைகள் நாகலாந்து மாநிலத்தில் அதிக எண்ணிக்கையில் காணப்படும். நாகலாந்து தவிர வடகிழக்கு மாநிலங்கள், மற்றும் தென் தமிழகத்திலும் இதை காணலாம்.

32 ஆண்டுகளில் முதல்முறை

சமீபத்தில் மணிப்பூர் மாநிலத்தில் 2 அமூர் வல்லூறுகள் 29 ஆயிரம் கிலோ மீட்டர் இடம்பெயர்ந்து சென்றது கண்டறியப்பட்டது. அத்தகைய அமூர் வல்லூறு புதுவையில் முதல் முறையாக காணப்பட்டது. கடந்த 32 ஆண்டுகளில் புதுவையில் இந்த பறவை காணப்பட்டதாக பதிவுகள் ஏதும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

https://www.dailythanthi.com/News/Puducherry/2020/11/14033759/Rare-bird-found-by-medical-students.vpf

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்துக்கு வந்த விருந்தாளிப் பறவைகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விளைநிலத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்த காட்டு யானை - 2 பேரிடம் விசாரணை

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கஜா புயலின் 2-ம் ஆண்டு: கொத்தமங்கலத்தில் 1000 பனை விதைகளை விதைத்த பனைமரக் காதலர்கள்

2nd-year-of-gajah-storm-palm-lovers-sow-1000-palm-seeds-in-kothamangalam புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தில் குளத்தின் கரையோரத்தில் பனை விதைகளை விதைக்கும் இளைஞர்கள்.

புதுக்கோட்டை

கஜா புயலடித்து 2 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து, புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தில் 1,000 பனை விதைகளை இளைஞர்கள் இன்று (நவ.16) விதைத்தனர்.

கடந்த 2018ஆம் ஆண்டு நவ.16-ம் தேதி சுழற்றியடித்த கஜா புயலுக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் லட்சக்கணக்கான மரங்கள் சாய்ந்தன. எனினும், பனைமரங்கள் அப்படியே நின்றன. இதையடுத்து, பனையின் மகத்துவத்தை அறிந்த கொத்தமங்கலம் பகுதி இளைஞர்கள் 'பனைமரக் காதலர்கள்' எனும் அமைப்பைத் தொடங்கினர்.

இந்த அமைப்பில் உள்ள 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள், கொத்தமங்கலத்தில் உள்ள நீர்நிலைகளின் கரையோரங்களிலும் அவ்வப்போது பனை விதைகளை விதைத்து வருகின்றனர். இந்நிலையில், கஜா புயலடித்த 2-ம் ஆண்டை நினைவுகூரும் விதமாக கொத்தமங்கலம் பெரியகுளம் பகுதியில் இன்று மாலை 1,000 பனை விதைகள் விதைக்கப்பட்டன. தொடர்ந்து, ஏராளமான மரக்கன்றுகளும் நடப்பட்டன.

இதுகுறித்து அமைப்பின் நிர்வாகி க.பிரபாகரன் கூறியபோது, “கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 10,000 பனை விதைகள் விதைக்கப்பட்டுள்ளன. அவற்றில், ஏராளமான விதைகள் முளைக்கத் தொடங்கியுள்ளன. பனைமரங்கள் அழிந்துவிடாமல் பாதுகாக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம்” என்றார்.

 

https://www.hindutamil.in/news/tamilnadu/602155-2nd-year-of-gajah-storm-palm-lovers-sow-1000-palm-seeds-in-kothamangalam.html

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெடிக்கு பதில் செடி சூலூர் அருகே கல்லூரி மாணவர்கள் பொது மக்களுடன் இணைந்து மரம் நடுவிழா

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.