Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐபிஎல் 2020: செய்திகள்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோலி தலைமையிலான ஆர்.சி.பி. யை வெற்றி கொண்டு அடுத்த சுற்றுக்கு முன்னேறியது ஐதராபாத்

முகவும் பரபரப்பான போட்டியில் விராட் கோலி தலைமையிலான ரோயல் சலன்ஞர்ஸ் பெங்களுர் அணியை 6 விக்கெட்டுகளால் வெற்றி கொண்ட சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி குவாலிபையர் -2 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

spacer.png

ஐ.பி.எல். தொடரில் எலிமினேட்டர் சுற்று அபுதாபியில் நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின.

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தலைவர் வோர்னர் பந்து வீச்சை தேர்வு செய்தார். 

ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் ஆரோன் பிஞ்ச், மொயீன் அலி, ஆடம் ஜம்பா ஆகியோர் சேர்க்கப்பட்டனர். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் சகா இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக கோஸ்வாமி சேர்க்கப்பட்டார்.

முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய ரோயல் சலன்ஞர்ஸ் பெங்களுர் அணி சார்பாக தேவ்தத் படிக்கல் உடன் விராட் கோலி தொடக்க வீரராக களம் இறங்கினார். விராட் கோலி 6 ஓட்டங்களுடனும் தேவ்தத் படிக்கல் ஒரு ஓட்டத்துடனும் ஜேசன் ஹோல்டர் பந்தில் வெளியேறினர். 

spacer.png

3.3 ஓவரில் 15 ஓட்டங்களுக்குள் தொடக்க வீரர்களை இழந்ததும் ஆர்சிபி திணறியது. பவர் பிளேயில் 2 விக்கெட் இழப்பிற்கு 32 ஓட்டங்களே எடுத்தது.

3 ஆவது விக்கெட்டுக்கு ஆரோன் பிஞ்ச் உடன் டி வில்லியர்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 7 ஓவர்கள் தாக்குப்பிடித்து விளையாடியது. என்றாலும் 41 ஓட்டங்களே அடித்தது. ஆரோன் பிஞ்ச் 32 ஓட்டங்களை எடுத்து வெளியேறினார்.

அடுத்து வந்த மொயீன் அலி ஓட்டங்கள் ஏதும் எடுக்காமல் டக்அவுட்டில் வெளியேறினார். டி வில்லியர்ஸ் அரைச்சதம்  அடித்தாலும் முக்கியமான கட்டத்தில் 18 ஆவது ஓவரின் ஐந்தாவது பந்தில் டி நடராஜனிடம் ஸ்டம்பை பறிகொடுத்தார். 

டி வில்லியர்ஸ் 43 பந்தில் சிக்ஸ் ஏதும் அடிக்காமல் 5 பவுண்டரியுடன் 56 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். ஷிவம் டுபே 8, வொஷிங்டன் சுந்தர் 5 ஓட்டங்களுடன் ஏமாற்றம் அடைந்தனர். 

நவ்தீப் சைனி 9 ஓட்டங்களுடனும் முகமது சிராஜ் 10 ஓட்டங்களுடனும் களத்தில் இருக்க, ஆர்சிபி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 131 ஓட்டங்களை பெற்றது. 

spacer.png

ஐதராபாத் அணியில் ஜேசன் ஹோல்டர் 25 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.

 132 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் டேவிட் வோர்னர், கோஸ்வாமி ஆகியோர் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களம் இறங்கினர். கோஸ்வாமி ஓட்டங்கள் ஏதும் எடுக்காமல் ஆட்மிழந்தார். அடுத்து மணிஷ் பாண்டே களம் இறங்கினார். 

வோர்னர் - மணிஷ் பாண்டே ஜோடி அதிரடியாக விளையாடி தீர்மானித்தது. ஆனால் 5.4 ஓவரில் 43 ஓட்டங்கள் எடுத்திருக்கும்போது டேவிட் வோர்னர் 17 ஓட்டங்களுடன் வெளியேறினார். 

spacer.png

அதன்பின் ஆடம் ஜம்பா, சாஹல் ஆகியோர் சிறப்பாக பந்து வீசி நெருக்கடி கொடுக்க மணிஷ் பாண்டே 24 ஓட்டங்களுடனும் பிரியம் கார்க் 7 ஓட்டங்களுடனும் வெளியேறினர். இதனால் போட்டி பரபரப்பாக மாறியது.

ஆனால் கேன் வில்லியம்சன் சிறப்பாக விளையாடி அரைசதம் அடிக்க சன்ரைசர்ஸ் ஐதராபாத் வெற்றியை நோக்கி சென்றது. 

spacer.png

இறுதி ஓவரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 9 ஓட்டங்கள் தேவைப்பட்டது. முதல் பந்தில் ஐதராபாத் ஒரு ஓட்டம் எடுத்தது, 2 ஆவது பந்தில் ஓட்டம் கிடைக்கவில்லை. 3 ஆவது பந்தில் ஹோல்டர் பவுண்டரி அடித்தார். அடுத்த பந்தையும் ஹோல்டர் பவுண்டரிக்கு விரட்ட சன்ரைசர்ஸ் ஐதராபாத் 2 பந்துகள் மீதமுள்ள நிலையில் 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று குவாலிபையர் 2 சுற்றுக்கு முன்னேறியது.

கேன் வில்லியம்சன் 44 பந்தில் 50 ஓட்டங்களுடனும் ஜேசன் ஹோல்டர் 20 பந்தில் 24 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
 

 

https://www.virakesari.lk/article/93844

  • Replies 84
  • Views 9.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்த பெண் குழந்தை.. டிவில்லியர்ஸ் விக்கெட்... மகிழ்ச்சியில் நடராஜன்..!

 

அபுதாபி : தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு பெண் குழந்தை பிறந்தது. அதே நாளில் அவர் உலகின் சிறந்த பேட்ஸ்மேன் ஆன ஏபி டிவில்லியர்ஸ் விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினார். 2020 ஐபிஎல் தொடரில் சிறப்பான அடையாளத்தை பெற்றவர் தமிழக வேகப் பந்துவீச்சாளர் நடராஜன். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முக்கிய வேகப் பந்துவீச்சாளராக மாறி இருக்கும் அவர் எலிமினேட்டர் போட்டியின் போது இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தார். யார்க்கர் மன்னன் ஐபிஎல் தொடர் மூலம் யார்க்கர் மன்னன் என்ற அடையாளத்தை பெற்றுள்ளார் வேகப் பந்துவீச்சாளர் நடராஜன். தொடர்ந்து யார்க்கர் பந்துகளை வீசி அனுபவ வீரர்களைக் கூட திணற வைத்தார் நடராஜன். அவரது பந்துவீச்சு வெளிநாட்டு வீரர்கள் மத்தியிலும் பேசப்பட்டது. முக்கிய வீரர் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியின் மூத்த வேகப் பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார் காயம் அடைந்து விலகிய நிலையில் அணியின் முக்கிய பந்துவீச்சாளராக மாறினார் நடராஜன். பல போட்டிகளில் அணியின் வெற்றியில் பங்கு வகித்தார். ஏபி டிவில்லியர்ஸ் விக்கெட் எலிமினேட்டர் போட்டியில் அவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக 18வது ஓவரில் வாஷிங்க்டன் சுந்தர், ஏபி டிவில்லியர்ஸ் என இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார். டிவில்லியர்ஸ் விக்கெட்டால் பெங்களூர் அணி கடைசி இரு ஓவர்களில் பெரிய அளவில் ரன் குவிக்கும் வாய்ப்பை இழந்தது. 

Read more at: https://tamil.mykhel.com/cricket/ipl-2020-t-natarajan-become-father-of-a-baby-girl-as-he-took-abd-wicket/articlecontent-pf80668-022534.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல்: இறுதிப்போட்டிக்கு முன்னேறும் இரண்டாவது அணி?

spacer.png

 

ஐபிஎல் கிரிக்கெட்டில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் இரண்டாவது அணியை நிர்ணயிக்கும் தகுதி சுற்றில் டெல்லி - ஐதராபாத் அணிகள் இன்று (நவம்பர் 8 இரவு 7.30 மணிக்கு மோதுகின்றன.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் 13ஆவது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இறுதிக்கட்டத்துக்கு வந்து விட்டது. சாம்பியன் யார் என்பதை அறிய இன்னும் இரண்டு ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. இதில் அபுதாபியில் இன்று (நவம்பர் 8  நடக்கும் இறுதிப்போட்டிக்கான இரண்டாவது தகுதி சுற்றில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன.

லீக் சுற்று முடிவில் 8 வெற்றிகளுடன் இரண்டாவது இடத்தை பெற்ற டெல்லி அணி இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் 57 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸிடம் படுதோல்வி அடைந்தது. இருப்பினும் புள்ளி பட்டியலில் டாப்-2 இடத்தை பிடித்திருந்ததால் இன்னொரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

தொடரின் தொடக்கத்தில் வீறுநடை போட்ட டெல்லி இப்போது தடுமாறுகிறது. சமீபத்திய ஆட்டங்களில் தொடக்கம் மோசமாக அமைந்துள்ளது. பிரித்வி ஷா கடந்த ஏழு ஆட்டங்களில் வெறும் 30 ரன்கள் மட்டுமே எடுத்து சொதப்பியுள்ளார். இதுபோல் மிடில் வரிசை பேட்டிங்கிலும் நிலைத்தன்மை இல்லை. இவற்றை சரிசெய்தால் தான் வலுவான பந்துவீச்சை கொண்ட ஐதராபாத்துக்கு எதிராக தாக்குப்பிடிக்க முடியும். அதனால் ஷிகர் தவான், ரஹானே, கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷாப் பண்ட், ஸ்டோனிஸ் உள்ளிட்ட பேட்ஸ்மேன்கள் முத்திரை பதிக்க வேண்டியது அவசியமாகும். பந்து வீச்சில் முந்தைய ஆட்டத்தில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தவிர காஜிசோ ரபடா (25 விக்கெட்), அன்ரிச் நோர்டியா (20 விக்கெட்) உள்ளிட்டோர் ரன்களை வாரி வழங்கினர். அவர்களும் அதற்கு பரிகாரம் தேட வேண்டி நெருக்கடியில் உள்ளனர்.

 

அதே நேரம் தொடக்கத்தில் தடுமாறிய முன்னாள் சாம்பியனான ஐதராபாத் அணி முக்கியமான தருணத்தில் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. வெளியேற்றுதல் சுற்று உட்பட கடைசி நான்கு ஆட்டங்களில் வரிசையாக வெற்றிகளை குவித்த ஐதராபாத் அணிக்கு பந்து வீச்சே பிரதான பலமாகும். கடைசி மூன்று ஆட்டங்களில் எதிரணிகளை 150 ரன்களுக்கு மடக்கியதே அதற்கு சான்று. குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் (19 விக்கெட்டுடன் ஓவருக்கு சராசரி 5.30 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்துள்ளார்), வேகப்பந்து வீச்சாளர்கள் சந்தீப் ஷர்மா (13 விக்கெட்), டி.நடராஜன் (16 விக்கெட்), ஜாசன் ஹோல்டர் (13 விக்கெட்) ஆகியோர் கட்டுக்கோப்புடன் பந்து வீசி அசத்துகிறார்கள். பேட்டிங்கில் கேப்டன் டேவிட் வார்னர் (4 அரைசதத்துடன் 546 ரன்), வில்லியம்சன் (250 ரன்), மனிஷ் பாண்டே (404 ரன்) நம்பிக்கை நட்சத்திரங்களாக மின்னுகிறார்கள். இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயத்தால் கடந்த ஆட்டத்தில் ஆடாத விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா இன்றைய ஆட்டத்திலும் விளையாட வாய்ப்பில்லை என்று தெரிகிறது.

நடப்பு தொடரில் இவ்விரு அணிகளும் ஏற்கனவே சந்தித்த இரு லீக் ஆட்டங்களிலும் ஐதராபாத் அணியே வாகை சூடியிருக்கிறது. இதில் ஒரு ஆட்டத்தில் 219 ரன்கள் குவித்து அதன் மூலம் டெல்லியை 131 ரன்னில் சுருட்டியது. இதனால் ஐதராபாத் அணி வீரர்கள் கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்குவார்கள்.

பனிப்பொழிவின் தாக்கம் இரண்டாவது பேட்டிங்குக்கு சுலபமாக இருப்பதால் டாஸ் வெல்லும் அணி இரண்டாவது பேட்டிங் செய்யவே விரும்பும். அபுதாபியில் கடைசியாக நடந்த 6 ஆட்டங்களிலும் இரண்டாவது பேட் செய்த அணிகளே வெற்றி கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஐதராபாத் அணி மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழையுமா அல்லது டெல்லி அணி முதல்முறையாக இறுதிச்சுற்றை எட்டி வரலாறு படைக்குமா?

மொத்தத்தில் வலுவான அணிகள் சந்திப்பதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

https://minnambalam.com/entertainment/2020/11/08/6/ipl-delhi-vs-hyderabad

 

 

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

 

பெங்களூரு அணி இந்த தவறை திருத்தும் வரை ஜெயிக்காது. தோல்விக்கான காரணத்தை சரியாக கூறிய – லாரா

 ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டி நேற்று முன்தினம் அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் வார்னர் முதலில் பந்து வீசுவதாக தீர்மானித்தார். அதன்படி முதலில் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்களை மட்டுமே குவித்தது. அதிகபட்சமாக டிவில்லியர்ஸ் 56 ரன்களையும், பின்ச் 32 ரன்களை குவித்தனர். அவர்களைத் தவிர மற்ற யாரும் சிறப்பாக விளையாடவில்லை. சன்ரைசர்ஸ் அணி சார்பாக ஹோல்டர் சிறப்பாக பந்து வீசி 4 ஓவர்களில் 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். - Advertisement - அதன் பின்னர் 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சன்ரைசர்ஸ் அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக வில்லியம்சன் ஆட்டமிழக்காமல் 50 ரன்களும், ஜேசன் ஹோல்டர் 24 ரன்களும் குவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் அணி அடுத்து டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து பெங்களூரு அணியின் தோல்விக்கு பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வர தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டனனான பிரைன் லாரா பெங்களூர் அணி குறித்த தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : பெங்களூர் அணி சிறப்பான கிரிக்கெட் விளையாட்டை வெளிப்படுத்தி வருகிறது. - Advertisement - ஆனாலும் சில நேரங்களில் அவர்கள் தடுமாறி தோல்வியை சந்திக்கின்றனர். அந்த தோல்விக்கு சரியான காரணம் யாதெனில் கோலி மற்றும் டி வில்லியர்ஸ் ஆகிய இருவரை மட்டுமே அந்த அணி பெரும்பாலும் நம்பியிருக்கிறது. அவர்கள் இருவரும் ஒரு போட்டியில் சொதப்பும் பட்சத்தில் அந்த அணி நிறையவே தடுமாறுகிறது. எனவே அவர்களை மட்டும் நம்பி அந்த அணி களம் இறங்க கூடாது என்றும் மற்றவர்களும் அணியில் தங்களது பங்களிப்பை அளிக்க வேண்டும் என்றும் இதுவே தோல்விக்கு முக்கிய காரணமாக இருக்கிறது என்றும் இதனை அந்த அணி சரி செய்ய வேண்டும் என்றும் லாரா தனது கருத்துக்களை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

https://crictamil.in/brain-lara-talks-about-rcb-failure/

  • கருத்துக்கள உறவுகள்

கோலிக்கு இது கண்டிப்பாய் தேவை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெளியேறியது ஐதராபாத் ; இறுதிப் போட்டியில் மும்பையுடன் மோதுகிறது டெல்லி

13 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இறுதிக் கட்டத்தை எட்டிவிட்ட இத் தொடரில் மும்பை இந்தியன்ஸ் முதல் அணியாக இறுதிசுற்றை எட்டியது.

spacer.png

இந்த நிலையில் இறுதிப்போட்டிக்கு நுழையும் மற்றொரு அணி எது? என்பதை நிர்ணயிக்கும் 2 ஆவது தகுதி சுற்றில் முன்னாள் சாம்பியன்  சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, டெல்லி கெப்பிட்டல்ஸை எதிர்கொண்டது. 

நேற்றிரவு அபுதாபியில் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது.

டெல்லி அணியின் ஆரம்ப வீரர்களாக மார்க்கஸ் ஸ்டொய்னஸ் மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினர்.

3 ஓட்டங்களில் பிடியெடுக்கும் கண்டத்தில் இருந்து தப்பித்து அதிரடி காட்டிய ஸ்டொய்னஸ், வேகப்பந்து வீச்சாளர் ஜாசன் ஹோல்டரின் ஒரே ஓவரில் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸரை விளாசினார். 

தவானும் அதிரடி காட்ட அணியின் ஓட்ட எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்தது. அதனால் ‘பவர்-பிளே’யான முதல் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 65 ஓட்டங்களை குவித்தது டெல்லி.

spacer.png

வலுவான அஸ்திவாரம் அமைத்து தந்த இந்த ஜோடியை சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் பிரித்தார். 

அதன்படி ஓட்ட எண்ணிக்கை 86 ஆக உயர்ந்தபோது ஒன்பதாவது ஓவரின் இரண்டாவது பந்து வீச்சில் ஸ்டொய்னஸ் மொத்தமாக 27 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடங்கலாக 38 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

அடுத்து ஸ்ரேயாஸ் அய்யர் வந்தார் களமிறங்கி துடுப்பெடுத்தாட 9.4 ஓவர்களில் டெல்லி அணி 100 ஓட்டங்களை தொட்டது. 

இதன் பின்னர் ரஷித்கான், வேகப்பந்து வீச்சாளர் தமிழகத்தை சேர்ந்த டி.நடராஜன் ஆகியோர் சாதுர்யமாக பந்துவீசியதால் அடுத்த சில ஓவர்களில் வேகமான டெல்லியின் ஓட்ட குவிப்பு சற்று கட்டுப்படுத்தப்பட்டது.

இந் நிலையில் ஸ்ரேயாஸ் அய்யர் 21 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, சிம்ரன் ஹெட்மேயர் தவானுடன் ஜோர் சேர்ந்தார். ஹோல்டரின் ஒரே ஓவரில் இருவரும் சேர்ந்து 4 பவுண்டரிகளை தெறிக்க விட்டனர். 

இதனால் ஓட்ட எண்ணிக்கை சற்று வேகமெடுத்தது. 19 ஆவது ஓவரின் போது, தவான் 78 ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். 

இறுதியாக டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 189 ஓட்டங்களை குவித்தது.

190 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அணித் தலைவர் டேவிட் வோர்னரும், பிரியம் கொர்க்கும் களமிறங்கினர்.

இரண்டாவது ஓவரின் முதல் பந்து வீச்சில் டேவிட் வோர்னர் போல்ட் முறையில் ஆட்டமிழந்து இரண்டு ஓட்டங்களுடன் நடையை கட்டினார். ரபடா வீசிய யோர்க்கர் பந்து அவரது காலில் பட்டு ஸ்டம்பை தாக்கியது. 

அடுத்து பிரியம் கொர்க் (17 ஓட்டம்), மனிஷ் பாண்டே (21 ஓட்டம்), ஜோசன் ஹோல்டர் (11 ஓட்டம்) சீரான இடைவெளியில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இதற்கு மத்தியில் கேன் வில்லியம்சன் அணியின் வெற்றிக்காக போராடினார். ஸ்டோனிஸ் உள்ளிட்டோரது ஓவர்களில் சிக்ஸர்களை விளாசித் தள்ளினார்.

அவருக்கு அப்துல் சமாத் ஒத்துழைப்பு கொடுக்க ஆட்டத்தில் பரபரப்பு தொற்றியது. முக்கியமான தருணத்தில் அதாவது ஓட்ட எண்ணிக்கை 147 ஆக உயர்ந்த போது வில்லியம்சன் 67 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

spacer.png

தொடர்ந்து சமாத் 33 ஓட்டங்களிலும், ரஷித்கான் 11 ஓட்டங்களிலும், கோஸ்வாமி டக்கவுட்டுடனும் ரபடாவின் ஒரே ஓவரில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இறுதியாக 20 ஓவர்களில் ஐதராபாத் அணி 8 விக்கெட் இழப்புக்கு 172 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து, 17 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவியது.

இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி முதன் முறையாக ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் கால் பதித்தது.

spacer.png

 

 

https://www.virakesari.lk/article/93980

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல் இறுதிப்போட்டி: கோப்பை யாருக்கு?

spacer.png

 

இன்று (நவம்பர் 10) இரவு 7.30 மணிக்கு துபாயில் நடைபெறும் ஐபிஎல் சாம்பியன் பட்டத்துக்கான இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. விறுவிறுப்பான இந்தப் போட்டியில் இந்த ஆண்டுக்கான கோப்பையை வெல்லப் போவது யார் என்பது தெரிந்துவிடும்.

எட்டு அணிகள் இடையிலான 13ஆவது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கியது. அபுதாபி, துபாய், சார்ஜா ஆகிய நகரங்களில் அரங்கேறிய லீக் ஆட்டங்கள் முடிவில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய அணிகள் முறையே முதல் நான்கு இடங்களை பிடித்து இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றன.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் முறையே ஐந்து முதல் எட்டாவது இடங்களை பிடித்து வெளியேறின.

துபாயில் கடந்த 5ஆம் தேதி நடந்த முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி ஆறாவது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. அபுதாபியில் 6ஆம் தேதி நடந்த வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸை வீழ்த்தி வெளியேற்றி இரண்டாவது தகுதி சுற்றுக்கு முன்னேறியது.

அபுதாபியில் நேற்று முன்தினம் (நவம்பர் 😎 இரவு நடந்த இரண்டாவது தகுதிச்சுற்று ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 17 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸை வீழ்த்தி முதன்முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது.

ஐபிஎல் கோப்பையை வெல்லப்போவது யார் என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி துபாயில் இன்று (நவம்பர்) இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் - ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.

 

நான்கு முறை (2013, 2015, 2017, 2019) கோப்பையை வென்று ஆதிக்கம் செலுத்தி வரும் மும்பை இந்தியன்ஸ் அணி 2010ஆம் ஆண்டில் மட்டுமே இறுதிப்போட்டியில் தோல்வியைச் (சென்னையிடம்) சந்தித்தது. மற்றபடி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்ற எல்லா தடவையும் வெற்றி வாகை சூடி அசத்தி இருக்கிறது.

இந்த சீசனில் 9 வெற்றியுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்ததுடன் முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய மும்பையின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு வலுவானதாக விளங்குகிறது. பேட்டிங்கில் குயின்டான் டி காக் (4 அரைசதத்துடன் 483 ரன்கள்), இஷான் கிஷன் (4 அரைசதத்துடன் 483 ரன்கள்), சூர்யகுமார் யாதவ் (4 அரைசதத்துடன் 461 ரன்கள்), பொல்லார்ட் (259 ரன்கள்), ஹர்திக் பாண்ட்யா (278 ரன்கள்) நல்ல பார்மில் உள்ளனர். காயம் சர்ச்சைக்கு மத்தியில் களம் திரும்பிய ரோகித் சர்மா (264 ரன்கள்) கடைசி மூன்று ஆட்டங்களில் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டம் இழந்தார். இதனால் அவர் தனது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். மும்பை அணியினர் இதுவரை 130 சிக்சர்கள் விளாசி இருக்கின்றனர். இதுவே அந்த அணியின் அதிரடிக்கு சான்றாகும். பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா (27 விக்கெட்), டிரென்ட் பவுல்ட் (22 விக்கெட்), ராகுல் சாஹர் (15 விக்கெட்) ஆகியோர் அசத்தி வருகிறார்கள்.

8 வெற்றி, 6 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்த டெல்லி அணி தொடரின் தொடக்கத்தில் வீறு நடைபோட்டது. ஆனால் தற்போது சற்று தடுமாறுகிறது. முதலாவது தகுதிச்சுற்று உட்பட கடைசி 6 ஆட்டங்களில் 5-ல் தோல்வியை சந்தித்த அந்த அணி இரண்டாவது தகுதிச்சுற்றில் ஐதராபாத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது. அந்த அணியின் பேட்டிங்கில் ஷிகர் தவான் முதுகெலும்பாக விளங்கி வருகிறார். அவர் இதுவரை 2 சதம், 4 அரைசதம் உட்பட 603 ரன்கள் குவித்து இருக்கிறார். கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (454 ரன்கள்), மார்கஸ் ஸ்டோனிஸ் (352 ரன்கள்) ஆகியோரும் பேட்டிங்கில் சிறப்பான பங்களிப்பை அளித்து வருகின்றனர். மோசமான பார்ம் காரணமாக கடந்த ஆட்டத்தில் பிரித்வி ஷா கழற்றி விடப்பட்டார். அவருக்கு இன்றைய ஆட்டத்தில் வாய்ப்பு கிடைப்பது சந்தேகம் தான். ரஹானே, ரிஷாப் பண்ட் நிலைத்து நின்று ஆடினால் அந்த அணியின் பேட்டிங் மேலும் வலுப்பெறும்.

பந்து வீச்சில் காஜிசோ ரபடா (29 விக்கெட்), நோர்டியா (20 விக்கெட்), ஆல்-ரவுண்டர் மார்கஸ் ஸ்டோனிஸ் (12 விக்கெட்), ஆர்.அஸ்வின் (13 விக்கெட்), அக்‌ஷர் பட்டேல் (9 விக்கெட்) ஆகியோர் வலுசேர்த்து வருகிறார்கள். ஐதராபாத் அணிக்கு எதிரான தகுதி சுற்றில் பழைய பார்முக்கு திரும்பி பெற்ற வெற்றி டெல்லி அணிக்கு புதிய நம்பிக்கையை அளித்து இருக்கும்.

நடப்பு தொடரில் இரண்டு லீக் ஆட்டங்களிலும் முறையே 5 விக்கெட் மற்றும் 9 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை பந்தாடிய மும்பை அணி முதலாவது தகுதி சுற்றிலும் 57 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அந்த அணிக்கு எதிராக தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் மும்பை அணியே இறுதிப்போட்டியிலும் கோலோச்ச அதிக வாய்ப்பு இருக்கிறது. மும்பைக்கு எதிரான மூன்று ஆட்டங்களிலும் தோல்வி கண்டு இருக்கும் டெல்லி அணி, அதற்குப் பதிலடி கொடுக்க முயற்சி செய்யும். எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

அதிக முறை கோப்பையை வென்று இருக்கும் மும்பை அணி ஐந்தாவது முறையாக மகுடம் சூடி தனது ஆதிக்கத்தை நிலை நாட்டுமா அல்லது முதன்முறையாக கோப்பையை வென்று நீண்ட நாள் தாகத்தை தீர்த்து டெல்லி அணி சரித்திரம் படைக்குமா?

விறுவிறுப்பான இந்தப் போட்டியில் ஐபிஎல் கோப்பையை வெல்லப்போவது யார் என்பது இன்று இரவு தெரிந்துவிடும்.


https://minnambalam.com/entertainment/2020/11/10/11/ipl-final-round

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டெல்லியை வீழ்த்தி ஐந்தாவது முறையாகவும் சம்பியானான மஹேலவின் மும்பை

டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியை 5 விக்கெட்டுகளினால் வீழ்த்தி, மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்தாவது தடவையாகவும் ஐ.பி.எல். கிண்ணத்த‍ை கைப்பற்றியுள்ளது.

spacer.png

13 ஆவது ஐ.பி.எல். தொடரின் இறுதிப் போட்டியானது ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஸ்ரேயஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிகளுக்கிடையில் ஆரம்பமானது.

துபாயில் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 156 ஓட்டங்களை குவித்தது.

டெல்லி அணி சார்பில் ஸ்ரேயஸ் அய்யர் 65 ஓட்டங்களையும், ரிஷாத் பந்த் 56 ஓட்டங்களையும் அணி  சார்பில் அதிகடியாக பெற்றனர்.

157 ஓட்டம் என்றி வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த மும்பை அணியின் ஆரம்ப வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் டிகொக் ஆகியோர் களமிறங்கினர்.

இவரும் ஜோடி சேர்ந்து டெல்லி அணியின் பந்துகளை தெறிக்கவிட மும்பையின் ஓட்ட எண்ணிக்கை வேகமாக அதிகரித்தது.

spacer.png

எனினும் 4.1 ஆவது ஓவரில் மார்கஸ் ஸ்டொய்னஸின் பந்து வீச்சில் டிகொக் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடங்கலாக 20 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய சூரியகுமார் யாதவ்வுடன் ரோகித் சர்மா ஜோடி சேர்ந்து அதிரடிகாட்ட மும்பை அணி பவர் பிளே யில் அதாவது 6 ஆவது ஓவரின் நிறைவில் 61 ஓட்டங்களை குவித்தது.

மும்பை அணி நடப்பு ஐ.பி.எல். தொடரில் பவர் பிளேயில் பெற்றுக் கொண்ட அதிகபடியான ஓட்ட எண்ணிக்கை இதுவாகும். 

இந் நிலையில் 11 ஆவது ஓவரின் ஐந்தாவது பந்தில் சூரியகுமார் யாதவ் ரன் அவுட் முறையில் ஆட்டமிழக்க மும்பை அணியின் இரண்டாவது விக்கெட் 90 ஓவர்களுக்கு வீழ்த்தப்பட்து.

மூன்றாவது விக்கெட்டுக்காக இஷான் கிஷான் களமிங்க 12 ஆவது ஓவரின் ஐந்தாவது பந்தில் ரோகித் சர்மா ஒரு பவுண்டரியை விளாசித் தள்ளியதுடன் அரைசதம் கடந்தார். 

நடப்பு தொடரில் ரோகித் சர்மா பெறும் மூன்றாவது அரைசதம் இதுவாகும். தொடர்ந்தும் அடுத்த பந்தையும் பவுண்டரி பக்கம் அவர் திருப்பியமையினால் அணியின் ஓட்ட எண்ணிக்கையும் 100 ஓட்டங்களை கடந்தது.

தொடர்ந்தும் ரோகித் சர்மா அதிரடி காட்டி வந்த நிலையில் 16.2 ஆவது ஓவரில் மொத்தமாக 51 பந்துகளை எதிர்கொண்டு 4 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் அடங்கலாக 68 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

நான்காவது விக்கெட்டுக்காக களமிறங்கித் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பொல்லார்ட்டும் ரபாடாவின் பந்து வீச்சில் ஒன்பது ஓட்டங்களுடன் போல்ட் முறையில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த பாண்டியாவும் 3 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

வெற்றியின் விளிம்பில் மும்பை இந்தியன்ஸ் அணியின் விக்கெட்டுகள் இவ்வாறு அடுத்தடுத்து வீழ்த்தன (156-5).

எனினும் குருனால் பாண்டியா களமிறங்கி ஒரு ஓட்டத்தை மாத்திரம் பெற, மும்பை இந்தியன்ஸ் அணி 18.4 ஓவரில் டெல்லி அணி நிர்ணியித்த வெற்றியிலக்கை கடந்தது.

spacer.png

மஹேல ஜயவர்தனவின் தலைமைப் பயிற்சியின் கீழ் மும்பை இந்தியன்ஸ் அணி ஐ.பி.எல். கிண்ணத்தை கைப்பற்றுவது இது மூன்றாவது சந்தர்ப்பமாம் இது என்பதும் விசேட அம்சமாகும்.
 

 

https://www.virakesari.lk/article/94140

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2020 ஐ.பி.எல். தொடரில் விருது வென்றவர்களின் முழு விபரம்

கொரோனா அச்சத்துக்கும் மத்தியிலும் 13 ஆவது ஐ.பி.எல். தொடரானது ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் வெற்றிகரமாக நடைபெற்று முடிவடைந்துள்ளது.

மொத்தமாக 8 அணிகள் பங்கு பற்றிய இத் தொடரின் இறுதிப் போட்டியில் ஸ்ரேயஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கெப்பிட்ல்ஸ் மற்றும் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

நேற்றிரவு துபாயில் ஆரம்பமான இப் போட்டியில் டெல்லி அணியை ஐந்து விக்கெட்டுகளினால் வீழ்த்தி மும்பை அணி 5 ஆவது முறையாகவும் கிண்ணத்தை கைப்பற்றியது.

spacer.png

இந் நிலையில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், நடப்பு சீசனில் விருது பெற்ற வீரர்கள் விவரம்: 

  • வளர்ந்து வரும் வீரர்: தேவ்தத் படிக்கல் (ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு)
  • அதிக ஓட்டங்களை குவித்தவர்களுக்காக வழங்கப்படும் ஆரஞ்சு தொப்பி: கே.எல் ராகுல் (14 போட்டிகளில் 670 ஓட்டங்கள்)
  • அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்களுக்காக வழங்கப்படும் ஊதா நிற தொப்பி: காகிசோ ரபாடா (30 விக்கெட்டுகள்)
  • கேம் சேஞ்சர் விருது: கே.எல் ராகுல் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்) 
  • சூப்பர் ஸ்டிரைக்கர் விருது: கீரோன் பொல்லார்ட் (மும்பை)
  • அதிக சிக்ஸர்களை விளாசியவருக்கான விருது: (இஷான் கிஷன் - (மும்பை - 30 சிக்ஸர்கள்)
  • பவர் பிளேயர் விருது: டிரண்ட் போல்ட் (மும்பை)
  • ஃபேர் பிளே விருது: மும்பை இந்தியன்ஸ்
  • மிகவும் மதிப்புமிக்க வீரர் விருது: ஜோஃப்ரா ஆர்ச்சர் (ராஜஸ்தான் ரோயல்ஸ்)
  • இரண்டாம் இடம் பிடித்தவர்களுக்கான விருது: டெல்லி கெப்பிட்டல்ஸ்
  • வெற்றியாளருக்கான விருது: மும்பை இந்தியன்ஸ்

https://www.virakesari.lk/article/94159

 

  • கருத்துக்கள உறவுகள்

சிறப்பான விளையாட்டுகள்...... நான் எப்போதும் மும்பைதான், ஆயினும் டெல்லி வந்தால் நல்லாயிருக்கும் என்று விரும்பினேன்.மிகவும் முயற்சி செய்து பைனலுக்கு வந்தவர்கள்  ஜஸ்ட் மிஸ்ட் .....! 🏏    👋

தொடர்ந்து விளையாட்டுகளைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி கிருபன்.....!  🤝👏

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.