Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் பகுதியின் தொன்மை வாய்ந்த வெடுக்கு நாறி மலை.!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் பகுதியின் தொன்மை வாய்ந்த வெடுக்கு நாறி மலை.!

IMG-20200924-142409.jpg

        (வெடுக்கு நாறி மலை)

விக்கினங்கள் தீர்ந்து விழா நாளை நெருங்கியிருக்கிறோம். நம் நெடுங்கேணியில் பதியும் வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் இறுதிநாளை அண்மித்திருக்கிறோம்.

எங்கே இருக்கிறார் இந்த ஆதி லிங்கேஸ்வரர்?

வவுனியா மாவட்டத்தின், வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குள் வருகின்ற நெடுங்கேணி எனும் அழகிய விவசாய சிறுநகரின் எல்லை கிராமமான பாலமோட்டை – ஒலுமடு கிராமங்களுக்கு அரண்செய்யும் அடர்வனத்துள் எழுந்தருளப்பெற்றிருக்கிறார் அடி முடி அறியமுடியாத ஆதிலிங்கேஸ்வரர்.

ஏ9 சாலையின் இடையே புளியங்குளம் சந்தியில் இறங்கி, முல்லைத்தீவு சாலையில் 20 கிலோமீற்றர்கள் தொலைவில் இருக்கிறது நெடுங்கேணி. அவ்விடத்தில் இறங்கி யாரைக்கேட்டாலும் ஆதியருளான் வழிசொல்வார்கள்.

என்ன சிறப்பு?

பாலமோட்டை கிராம எல்லையில் ஆரம்பிக்கிறது அடர்வனம். அதற்குள்ளால் நடந்தும், மோட்டார் சைக்கிளிலும், உழவு இயந்திரத்தின் உதவியுடனும் அடியவர்கள் வனத்தின் வாசனையை – வனத்தின் இசையை நுகர்ந்து சென்றால் இரண்டரை கிலோமீற்றர் பயமுடிவில் நாகவடிவில் நிமிர்ந்து நிற்கிறது வெடுக்குநாறி மலை.

நாகவடிவ குகை வனைவுக்குள் அமர்ந்திருந்தபடி அனைத்து அடியவர்களையும் முதலில் வரவேற்கிறார் விநாயகப் பெருமான்.

அவரைத் தரிசித்துவிட்டு, சற்றுத் தள்ளி நடந்தால் தொன்மைக்கால கேணியில் மனம் நனைக்கலாம். அதிலிருந்து வான் நோக்கி நெடிதாக வளர்ந்த மலையின் உச்சியில் பீடம் அமைத்து எழுந்தருளியிருக்கிறார் ஆதிலிங்கேஸ்வரர்.

ஏணியின் உதவியோடும், சக அடியவர்களின் கை கோர்ப்புடனும் மலையுச்சியை அடைவது மிக இலகு. ஒரு மைதானம் போல சமதரையாக இருக்கும் மலையின் மேற்தட்டில் நின்றால் நாம் நடந்து வந்த காடு புற்களாகத் தெரியும்.

முழு நிலத்தையும் சுற்றி ஒரு வட்டமடிப்புப் பார்வையில் முடித்துவிடலாம். முழுநிலத்தையும் ஒரே சுற்றில் பார்த்துவிடும் அருளை ஆதிலிங்கேஸ்வரர் நமக்கு தருகிறார்.

Nallur-Kandaswamy-Temple-To-Vedukkunari-

       ( ஆதிலிங்கேஸ்வரர் )

வெடுக்கு நாறி மலையில் இருக்கும் தொன்ம எச்சங்கள் காலக்கணிப்புக்கு அப்பாலானவை. மிக நீளமான ஆதித் தமிழ் பிராமி எழுத்துப் பொறிப்பும், வனையப்பட்ட குகையும் நம் வரலாறு குறித்த ஆச்சரியத்தை ஏற்படுத்துபவை. ஆராய தூண்டுபவை. தன்னை நோக்கி வரும் அடியவர்களுக்கு அருள் பாலிப்பையும், நம் வரலாற்றையும், அதுதொடர்பான பய பக்தியையும்தான் ஆதிலிங்கேஸ்வரர் ஏற்படுத்துகிறார். இவ்வளவு பெருங்கடாட்சங்களையும் மெய்யுணர்வால் அனுபவித்துச் செல்ல வாருங்கள். திரண்டு வாருங்கள்.

எதிர்வரும் 26 ஆம் நாள் சனிக்கிழமை காலை 11 மணிக்கு ஆரம்பமாகும் 108 பானை சிறப்புப் பொங்கல் வழிபாடுகளிலும் அடியவர்களாகிய உங்களை ஈடுபடுத்தி கொள்ளுங்கள்.

கடந்த பல வருடங்களாகவே போராடி போராடி தளை வென்று மலையுச்சியில் நிமிர்ந்து நிற்கும் ஆதியான லிங்கேஸ்வரனைத் தரிசித்துச் மெய்யருள் பெற்று இருள் நீங்கிச் செல்லுங்கள்..

ஆலய பரிபாலனம் ,

சபை நெடுங்கேணி , வெடுக்கு நாறிமலை , ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம்.

https://vanakkamlondon.com/world/srilanka/2020/09/85267/

  • கருத்துக்கள உறவுகள்

வெடுக்குநாறிமலை ஆலயத்தைப் பாதுகாக்க வேண்டும்- ஆலய நிர்வாகம் அறிக்கை

தமிழரின் அடையாளமும் பண்பாட்டு அம்சமும் மிக்க வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தைப் பாதுகாக்க வேண்டிய கடமை தமிழர்களாகிய எமக்கு உண்டு” என அவ்வாலய நிர்வாகத்தினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவான நெடுங்கேணி, ஒலுமடு பாலமோட்டை கிராமத்தில் இருந்து கிட்டத்தட்ட 3km தொலைவில் வெடுக்குநாறி மலை அமைந்துள்ளது.

வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் - Nallurlk

சுமார் 3000ம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த மலையானது பல வரலாற்றுச் சிறப்புக்களைக் கொண்டு காணப்படுகின்றது. 300m உயரமான வெடுக்குநாறி மலை அடிவாரத்தின் கீழ் தமிழ்ப்பிராமிய கல்வெட்டுக்கள் மற்றும் வட்டெழுத்துக்கள் போன்றவற்றைக் காணமுடியும்.

வெடுக்குநாறிமலை சிவன் ஆலயம் தொடர்பில் புதிய கட்டுப்பாடுகள் - Tamilwin

மலையின் உச்சியில் ஆதி லிங்கேஸ்வரர் எனும் சிவனுடைய லிங்கம் அமைந்துள்ளது. கிட்டத்தட்ட ஐந்து தலைமுறையினருக்கு மேலாக இப் பிரதேச மக்கள் இந்த ஆலயத்தை வழிபட்டு வருகின்றனர்.

2018ம் ஆண்டு இலங்கைத் தொல்பொருளியல் திணைக்களம் அதனைத் தமது பிரதேசமாக கைக்கொள்ளும் வகையில், இவ்வாலயத்தில் பூஜை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தடையாக நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. தற்போது நீதி மன்றத்தினால் வழக்கு தாக்கல் நிராகரிக்கப்பட்டு ஆலய உற்சவத்தை வழமை போன்று நடாத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழரின் அடையாளமும் பண்பாட்டு அம்சமும் மிக்க இவ்வாலயத்தை பாதுகாக்க வேண்டிய கடமை தமிழர்களாகிய எமக்கு உண்டு. அந்தவகையில் வெடுக்குநாறிமலை ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் 17.09.2020 அன்று ஆரம்பமாகி நடைபெற்று வரும் நிலையில், வருகின்ற 26.09.2020 சனிக்கிழமை அன்று 108 பானைகளில் பொங்கலுடனான இறுதி உற்சவம் நடைபெறவுள்ளது.

எனவே எவ்வித மதவேறுபாடுகளுமின்றி தமிழரின் பாரம்பரியத்தை காப்பதற்கு தமிழ் மக்களின் பூரண ஒத்துழைப்பு என்பது அவசியமாகின்றது. இன்று தமிழரின் அடையாளங்கள் பல அழிக்கப்பட்டு வருகின்றன. அவற்றை பாதுகாக்க வேண்டியது எமது தலையாய கடமையாகும். அவற்றை பாதுகாப்பதன் ஊடாக எதிர்கால சந்ததியினருக்கு தமிழரின் பாரம்பரியங்கள், அடையாளங்களை தெரியப்படுத்துகின்ற தேவை எமக்கு உண்டு.

வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலையில் ஆலயம் அமைத்து வழிபடமுடியாது. செய்திகள்,  தாயகம்

இன்று பலராலும் பேசப்படும் ஒரு விடயமாக வெடுக்குநாறிமலை ஆலயம் காணப்படுகின்றது. தமிழர்களின் எல்லையோர கிராமங்கள் திட்டமிட்டு ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றன. அதேபோன்று இவ்வாலயமும் ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்டுவிடும் என்ற பயம் எம்மவர் மத்தியில் காணப்படுகின்றது.

இந் நிலையில் இவ்வாலயத்திற்கு மக்கள் சென்று வரும் பட்சத்தில் இவ்வாலயம் தொடர்பாக மேலதிக விழிப்புணர்வு தமிழ் மக்கள் மத்தியில் கிடைக்கப்பெறும். எனவே தமிழ் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக எமது பாரம்பரியத்தை பறைசாற்றும் வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தை தினமும் சென்று வழிபடுவதன் மூலம் தமிழரின் பாரம்பரியங்களும், அடையாளங்களும் காக்கப்படும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

எனவே யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியமும் இவ்வாலய பொங்கல் நிகழ்விற்கு பூரண ஆதரவை வழங்குவதோடு அன்பான தமிழ் பேசும் உறவுகள் அனைவரையும் எமது கலாசாரத்தை பறைசாற்றும் வகையில் இப் பொங்கல் நிகழ்விலே கலந்துகொள்ளமாறும் கேட்டுக் கொள்கின்றோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

http://www.ilakku.org/வெடுக்குநாறிமலை-ஆலயத்தை/

 

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் தொடர்பில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள வேண்டுகோள்!

தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையாக எமது பாரம்பரியத்தை பறைசாற்றும் வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தை தினமும் சென்று வழிபடுவதன் மூலம் தமிழரின் பாரம்பரியங்களும், அடையாளங்களும் காக்கப்படும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அவர்கள் இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும்,

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவான நெடுங்கேணி, ஒலுமடு பாலமோட்டை கிராமத்தில் இருந்து கிட்டத்தட்ட 3 கி.மீ தொலைவில் வெடுக்குநாறி மலை அமைந்துள்ளது. சுமார் 3000ஆம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த மலையானது பல வரலாற்றுச் சிறப்புக்களைக் கொண்டு காணப்படுகின்றது.

300 மீற்றர் உயரமான வெடுக்குநாறி மலை அடிவாரத்தின் கீழ் தமிழ் பிராமிய கல்வெட்டுக்கள் மற்றும் வட்டெழுத்துக்கள் போன்றவற்றைக் காணமுடியும். மலையின் உச்சியில் ஆதி லிங்கேஸ்வரர் எனும் சிவனுடைய லிங்கம் அமைந்துள்ளது.

கிட்டத்தட்ட ஐந்து தலைமுறையினருக்கு மேலாக இப் பிரதேச மக்கள் இந்த ஆலயத்தை வழிபட்டு வருகின்றனர். இலங்கைத் தொல்லியல் திணைக்களம் அதனைத் தமது பிரதேசமாக கைக்கொள்ளும் வகையில் இவ்வாலயத்தில் பூஜை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தடையாக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

தற்போது நீதிமன்றத்தினால் வழக்கு தாக்கல் நிராகரிக்கப்பட்டு ஆலய உற்சவத்தை வழமை போன்று நடத்த அனுமதி வழங்கிய நிலையில் தமிழரின் அடையாளமும் பண்பாட்டு அம்சமும் மிக்க இவ்வாலயத்தை பாதுகாக்க வேண்டிய கடமை தமிழர்களாகிய எமக்கு உண்டு.

அந்தவகையில் வெடுக்குநாறிமலை ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் 17.09.2020 அன்று ஆரம்பமாகி நடைபெற்று வரும் நிலையில் வருகின்ற 26.09.2020 சனிக்கிழமை அன்று 108 பானைகளில் பொங்கலுடனான இறுதி உற்சவம் நடைபெறவுள்ளது.

எனவே எவ்வித மதவேறுபாடுகளுமின்றி தமிழரின் பாரம்பரியத்தை காப்பதற்கு தமிழ் மக்களின் பூரண ஒத்துழைப்பு என்பது அவசியமாகின்றது. இன்று தமிழரின் அடையாளங்கள் பல அழிக்கப்பட்டு வருகின்றன.

அவற்றை பாதுகாக்க வேண்டியது எமது தலையாய கடமையாகும். அவற்றை பாதுகாப்பதன் ஊடாக எதிர்கால சந்ததியினருக்கு தமிழரின் பாரம்பரியங்கள், அடையாளங்களை தெரியப்படுத்துகின்ற தேவை எமக்கு உண்டு.

இன்று பலராலும் பேசப்படும் ஒரு விடயமாக வெடுக்குநாறிமலை ஆலயம் காணப்படுகின்றது. தமிழர்களின் வட, கிழக்கு எல்லையோர கிராமங்கள் திட்டமிட்டு ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றன. அதேபோன்று இவ்வாலயமும் ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்டுவிடும் என்ற பயம் எம்மவர் மத்தியில் காணப்படுகின்றது.

இந்த நிலையில் இவ்வாலயத்திற்கு மக்கள் சென்று வரும் பட்சத்தில் இவ்வாலயம் தொடர்பாக மேலதிக விழிப்புணர்வு தமிழ் மக்கள் மத்தியில் கிடைக்கப்பெறும்.

எனவே தமிழ் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக எமது பாரம்பரியத்தை பறைசாற்றும் வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தை தினமும் சென்று வழிபடுவதன் மூலம் தமிழரின் பாரம்பரியங்களும், அடையாளங்களும் காக்கப்படும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

எனவே யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியமும் இவ்வாலய பொங்கல் நிகழ்விற்கு பூரண ஆதரவை வழங்குவதோடு அன்பான தமிழ் பேசும் உறவுகள் அனைவரையும் எமது கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் இப் பொங்கல் நிகழ்விலே கலந்துகொள்ளமாறும் கேட்டுக் கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

 

http://athavannews.com/வெடுக்குநாறிமலை-ஆதிலிங்/

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் சென்ற ரவிகரன் குழுவினர்

received_862721434132669.jpeg?189db0&189db0

 

 

 

received_862721434132669.jpeg?189db0&189db0https://newuthayan.com/வெடுக்குநாறி-ஆதிலிங்கேஸ/

  • கருத்துக்கள உறவுகள்

பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியில் 108 பானைகளில் உரிமை பொங்கல்

வெடுக்குநாறி ஆதி இலிங்கேஸ்வரரின் வருடாந்த பொங்கல் விழாவின் இறுதிநாள்  108 பானைகள் வைத்து உரிமை பொங்கல் விழா கோலகலமாக நடைபெற்றுள்ளது.
 
வவுனியா வடக்கு நெடுங்கேணி வெடுக்குநாறி ஆதி இலிங்கேஸ்வரரின் வருடாந்த பொங்கல் விழா நிகழ்வு கடந்த 17 ஆம் திகதி ஆரம்பமாகி தொடர்ந்து ஒன்பது நாட்கள் இடம்பெற்று நேற்று பத்தாம் நாள் இறுதி நிகழ்வுகள்  நடைபெற்றது.
அந்தவகையில் ஆலய வளாகத்தில் 108 பானைகளில் பொங்கல் பொங்கி விசேட பூஜை நிகழ்வுகளுடன்  பொங்கல்விழா நிகழ்வுகள் இடம்பெற்றது.
காலை11 மணிக்கு ஆரம்பமாகிய பூயை நிகழ்வுகளில் வவுனியா மற்றும் யாழ்பாணம் ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டிருந்ததுடன், யாழ் பல்கலைக்கழக மாணவர்கள், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம்,சட்டத்தரணி மணிவண்ணன் மற்றும் புவனேஸ்வரன் ஆகியோர் பங்கெடுத்திருந்தனர்.
இதேவேளை ஆலயவளாகத்தில் அதிகளவான காவல்துறையினர் மற்றும் புலனாய்வு பிரிவினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததுடன்,ஆலயத்திற்கு வருகை தரும் பக்கதர்கள் பதிவுசெய்யப்பட்ட பின்னரே உட்செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
அத்துடன் ஆலயத்திற்குள் உட்செல்வதற்கான சந்தியில் ஒலுமடு பிரதான வீதியின் அருகில் இராணுவத்தினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
பொங்கல் விழாவிற்கு வவுனியா தமிழ்விருட்சம் அமைப்பினால் 53 பானைகள் உபயமாக வழங்கப்பட்டுள்ளதுடன், அன்பாலயா இளைஞர்களால் தண்ணீர் பந்தலும் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.
இதேவேளை ஆலயத்தில் தியாகி தீலிபனை நினைவுகூர்ந்து தீபம் ஏற்றி நிகழ்வுகள் எதனையும் மேற்கொள்ளவேண்டாம் என வவுனியா நீதிமன்றால் வழங்கப்பட்ட தடை உத்தரவு கோரிக்கை ஒன்றின் பிரதியை நெடுங்கேணி காவல்துறையினர் ஆலயத்தின் நிர்வாகத்தினருக்கு வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.