Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நோபல் பரிசுகள்: 2020

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

2020ஆண்டு மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு

2020ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு விபரங்கள் இன்று முதல் அறிவிக்கப்படுகின்றது. இதற்கமைவாக  மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு 3பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகின்றது.

அதன்படி ஹார்வே ஜே.ஆல்டர், மைக்கேல் ஹாப்டன் மற்றும் சார்லஸ் எம்.ரைஸ் ஆகிய 3பேருக்கும் இந்த விருது பகிர்ந்தளிக்கப்படுகின்றது.

இவர்கள் மூவரும் இணைந்து ‘ஹெப்பரைற்றிஸ் சி வைரஸ்’ என்ற வைரசை கண்டறிந்தமைக்காக இவர்களுக்கு 2020இற்கான மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு வழங்கப்படுகின்றது.

ஹெப்பரைரிஸ் C ஈரலளர்சியை ஏற்படுத்தும் மூன்றாவது வகை வைரசு 1989 இல் ஹார்வியால் இனங்காணப்பட்ட போதும் மைக்கெல் ஹோட்டன் 1990 இல் அதன் உயிரியல் இரசாயன கூறுகளை இனங்கண்டு பரிசோதனை முறைகளை இனங்கண்டார், அதனை தொடர்ந்து சார்ள்ஸ் ரைஸ் ஹெப்பரைரிஸ் C வைரசு தனியாக ஈரல் அழற்சியை ஏற்படுத்த வல்லது என்பதை 1991 இல் உறுதிப் படுத்தினார்.

இக்கண்டுபிடிப்புகள் தொடர்ந்து ஹெப்பரைரிஸ் C வைரஸினால் ஏற்பட கூடிய தாக்கங்களை குறைக்கும் மருந்துகளையும் அந்நோயின் பரவளையும் தடுக்க உதவியமையை கருத்தில் கொண்டு 2020 இற்கான நோபல் பரிசு கிட்டத்தட்ட 20 ஆண்டுகளின் பின்னர் இவர்களுக்கு வழங்கப்படுவது குறிப்பிடதக்கது.

உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான நோபல் பரிசு, மருத்துவம், இயற்பியல், வேதியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது.

இதில் அமைதிக்கான நோபல் பரிசு நோர்வேயிலும், பிற துறைகளுக்கான நோபல் பரிசு சுவீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமிலும் அறிவிக்கப்படும்.

இதற்கமைவாக இந்த ஆண்டிற்கான துறை சார்பாக நோபல் பரிசுகள் இன்று (05) முதல் அறிவிக்கப்படுகின்றது. அதன்படி மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றைய துறைகளுக்கான நோபல் பரிசு விபரங்கள் அடுத்தடுத்த தினங்களில் அறிவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

http://www.ilakku.org/2020ஆண்டு-மருத்துவத்துறைக்/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2020 ம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு 2 பெண்களுக்கு கூட்டாக அறிவிப்பு

2020 ம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு 2 பெண்களுக்கு கூட்டாக அறிவிப்பு

 

ஸ்டாக்ஹோம்
 
இமானுவேல் சார்பென்டியர், ஜெனிஃபர் ஏ டவுட்னாஆகிய 2 பெண்களுக்கு  வேதியியலுக்கான நோபல் பரிசுகள் 2 கூட்டாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மரபணு சார்ந்த ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.இமானுவேல் சார்பென்டியர் - பிரான்ஸ் நாட்டவர் ஜெனிஃபர் ஏ டவுட்னா - அமெரிக்க நாட்டவர்
 
 
  • கருத்துக்கள உறவுகள்

spacer.pngகருந்துளை குறித்து ஆராய்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு

கருந்துளைகள் பற்றிய ஆராய்வுக்காக மூன்று விஞ்ஞானிகளுக்கு 2020 ஆம் ஆண்டின் பெளதீகவியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

ரோஜர் பென்ரோஸ், ரெய்ன்ஹார்ட் ஜென்சல் மற்றும் ஆண்ட்ரியா கெஸ் ஆகியோரே இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு வெற்றியாளர்களாக சுவீடனின் ஸ்டாக்ஹோமில் நடந்த செய்தி மாநாட்டில் அறிவிக்கப்பட்டனர்.

வெற்றியாளர்கள் 10 மில்லியன் குரோனர் (£864,200) பரிசுத் தொகையைப் பகிர்ந்து கொள்வார்கள்.

கருந்துளை என்பது, இவற்றின் எல்லைக்குட் செல்லும், ஒளி உட்பட்ட எதுவுமே வெளியேற முடியாத அளவு வலுவான ஈர்ப்புச் சத்தியைக் கொண்டுள்ள, அண்டவெளியின் ஒரு பகுதியாகும்.

https://www.virakesari.lk/article/91461

Edited by பிழம்பு

  • நிழலி changed the title to நோபல் பரிசுகள்: 2020
  • கருத்துக்கள உறவுகள்

இலக்கியத்துக்கான நோபல் பரிசு அமெரிக்கப் பெண்ணுக்கு

2020 ஆம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு  அமெரிக்க கவிஞர் லூயிஸ் க்ளூக் கிற்கு இன்று வழங்கப்பட்டுள்ளது.

இலக்கிய நோபல் பரிசு பெற்ற லூயிஸ் க்ளூக் அமெரிக்க சமகால இலக்கியத்தில் மிக முக்கியமான கவிஞர்களில் ஒருவராக பாராட்டப்பட்டார். 

அவர் பன்னிரண்டு கவிதைத் தொகுப்புகளையும், கவிதைகள் குறித்த சில கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார்.

இந் நிலையில் அமைதிக்கான நோபல் பரிசு வெள்ளிக்கிழமையும் பொருளாதார அறிவியலுக்கான பரிசு திங்கட்கிழமையும் அறிவிக்கப்படும்.

https://www.virakesari.lk/article/91638

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நோபல் பரிசுக்கு ஐநா-வின் உலக உணவுத் திட்டம் தேர்வு

1-27-696x464.jpg

 

2020ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு ஐநா-வின் உலக உணவுத் திட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

மருத்துவம், இயற்பியல், வேதியியல் துறைகளைத் தொடர்ந்து, அமைதிக்கான நோபல் பரிசை நார்வே தலைநகர் ஓஸ்லோவில் நோபல் பரிசு குழு  அறிவித்தது. இதில், அமைதிக்கான நோபல் பரிசுக்கு ஐநா-வின் உலக உணவுத் திட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக பரிசுக் குழுவின் தலைவர் பெரிட் ரெய்ஸ்-ஆண்டர்சன் அறிவித்தார்.

உலகம் முழுவதும்  பட்டினியை எதிர்த்துப் போராடியதற்காகவும், போர், உள்நாட்டுப் போர் நடக்கும் இடங்களில் அமைதியான சூழல் நிலவ அளித்த பங்களிப்பு, போர், பிரச்சினைக்குரிய இடங்களில் பட்டினியை ஆயுதமாக பயன்படுத்துவதைத் தடுக்க 58 ஆண்டுகள் அயராத முயற்சிகள் மேற்கொண்டதால் இந்த அமைதிக்கான நோபல்பரிசு உலக உணவுத் திட்ட அமைப்பிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பரிசுக் குழுவின் தலைவர் பெரிட் ரெய்ஸ்-ஆண்டர்சன்  கூறுகையில்,“ போருக்கான ஆயுதமாக பசியை பயன்படுத்துவதைத் தடுக்க உலக உணவுத் திட்டம் பங்களிப்பை செய்துள்ளது.  வன்முறைகளுடன் கொரோனா பெருந்தொற்றும் ஏற்பட்டதால் ஏமன், காங்கோ, நைஜீரியா, தெற்கு சூடான், பர்கினோ பசோ ஆகிய நாடுகளில் பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அவர்களுக்கு தேவையான உதவிகளை உலக உணவுத் திட்டம் வழங்கியது. உணவு பாதுகாப்பு வழங்குவது என்பது, வறுமையைத் தடுப்பதுடன், அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தும்.

உலக உணவு அமைப்புக்கு விருது வழங்குவதன் மூலம், பசியால் வாடும் கோடிக்கணக்கான மக்களின் பக்கம் உலகின் பார்வை திருப்ப வேண்டும்.” என்றார்.

UN World Food Programme wins 2020 Nobel Peace Prize, as hunger mounts | WFP awarded 2020 Nobel Peace Prize for its efforts to combat hunger | UN News

கடந்த 2019-ம் ஆண்டில் மட்டும்  உலக உணவு திட்டம் பட்டினியால் வாடிய 88 நாடுகளைச் சேர்ந்த 10 கோடி மக்களுக்கு உணவு வழங்கி பசியாற்றி, உணவுப் பாதுகாப்பை உறுதி செய்துள்ளது. உலகளவில் பட்டினியை ஒழிப்பது என்பது ஐ.நாவின் நிலையான வளர்ச்சி இலக்காக கடந்த 2015-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.

கொரோனா வைரஸின் பாதிப்பால் உலகளவில் பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக யேமன், காங்கோ ஜனநாயகக் குடியரசு, நைஜீரியா, தெற்கு சூடான், புர்கினபாசோ ஆகிய நாடுகளில் பசியோடு சேர்ந்து உள்நாட்டுப் போர் வன்முறையும் சேர்ந்து கொண்டது. இந்த காலகட்டத்தில் கொரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டதால், ஏராளமான மக்கள் பட்டினி நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இந்த பெருந்தொற்று காலத்தில்  உலக உணவு திட்டம் தன்னுடைய முயற்சிகளைத் தீவிரப்படுத்தி, பட்டினியை போக்க முயன்றது. மருத்துவரீதியான தடுப்பூசி எங்களிடம் இருக்கும் நாள் வரை, குழப்பத்துக்கு சிறந்த தடுப்புமருந்து உணவுதான் என்று உலக உணவுத்திட்டம் குறிப்பிட்டிருந்தது.

கடந்த 1963-ம்ஆண்டு ஐநாவால் தொடங்கப்பட்ட  உலக உணவு திட்டம்,1965-ம் ஆண்டு முதல் முழுமையாகச் செயல்படத் தொடங்கியது. இந்த உலக உணவுத் திட்டத்துக்கு பல்வேறு நாடுகளின் அரசுகளின் பங்களிப்பும், தனிநபர்கள், நிறுவனங்களும் நன்கொடை அளித்து பங்களிப்பு செய்கின்றன.

சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் 93 நாடுகளைச் சேர்ந்த 9.3 கோடி மக்களுக்கு உணவு வழங்கும் பணியை  இந்த அமைப்பு செய்து வருகிறது. இந்த உலக உணவுத் திட்டத்தின் தலைமை அலுவலகம் ரோம் நகரிலும், அலுவலகங்கள் உலகளவில் 80 நாடுகளிலும் செயல்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.ilakku.org/un-world-food-programme-wins-2020-nobel-peace-prize-as-hunger-mounts/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.