Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதவைத் திறக்கும் புதுடெல்லி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கதவைத் திறக்கும் புதுடெல்லி

என்.கண்ணன்

  •  “தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிற்கானஇந்தியாவின்கதவுதிறப்பதற்குசீனாவும்தமிழகமும்அடிப்படையாகஅமைகின்றன”
  • “13ஆவது திருத்தச்சட்ட விடயத்தில் இந்தியா அழுத்தம் கொடுக்குமோ என்ற அச்சம் ஆட்சியாளர்களுக்கும், சிங்கள, பௌத்ததேசியவாதசக்திகளுக்கும்மேலோங்கி வருவதால், அதற்கு மாற்றான நகர்வாக சீனாவின் பக்கம் சாயமுனைகின்றனர்”

spacer.png

செப்ரெம்பர் 26ஆம் திகதி பிரதமர் மஹிந்தராஜபக்ஷதலைமையிலான குழுவினருடன் நடத்தியதை போன்றதொரு, மெய்நிகர் கலந்துரையாடலை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்துவதற்கு இந்தியா தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இந்தியத் தரப்பில் இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இதுகுறித்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார் இரா.சம்பந்தன்.

அத்துடன், பேச்சுக்களுக்கான ஏற்பாடுகளை கொழும்பில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர் என்றும் அவர் கூறியிருக்கிறார். இந்த பேச்சுக்களுக்கான அழைப்பு புதுடெல்லியில் இருந்து தான் விடுக்கப்பட்டிருக்கிறது என்பது தான் கவனிக்கப்பட வேண்டிய விடயம்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது தடவையாக கொழும்புக்கு வந்திருந்தபோது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை புதுடெல்லிக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். அதற்குப் பின்னர், பல்வேறுசந்தர்ப்பங்களில் புதுடெல்லிக்கு பயணம் செய்து இந்தியப் பிரதமர் மோடியுடன் கலந்துரையாடுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயன்றது. கடந்த நவம்பர் மாதம் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னரும் கூட, கூட்டமைப்பு தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டது. அதற்கு சாதகமான பதில் கிடைப்பதற்குள்ளாகவே, கொரோனா தொற்று பரவல் ஏற்பட்டு விட்டது.

இதனால், கிட்டத்தட்ட எல்லா இராஜதந்திர முயற்சிகள்,  பேச்சுக்களும், குழம்பின. அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் விதிவிலக்காக இருக்கவில்லை. கடந்த சில ஆண்டுகளாகவே, புதுடெல்லிக்கு செல்வதற்கு கூட்டமைப்பு மேற்கொண்ட முயற்சி வெற்றியளிக்கவில்லை என்பதே உண்மை. இப்போது திடீரென புதுடெல்லியின் பக்கத்தில் இருந்தே  கதவு திறந்து விடப்பட்டிருக்கிறது. இந்தியா இவ்வாறு கதவைத் திறந்திருப்பதற்கு இரண்டு விதமான காரணங்களை ஊகிக்க முடிகிறது.

முதலாவது- சீனா என்ற காரணி. இரண்டாவது தமிழகம்என்றகாரணி. இந்த இரண்டும், இந்திய மத்திய அரசுக்கு முக்கியமானவை.

இந்த இரண்டையும் கையாளுவதற்கான ஒரு தரப்பாக தமிழர் தரப்பை - குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை புதுடெல்லி தெரிவு செய்திருப்பதாகவே தெரிகிறது. அண்மைக்காலத்தில்தோன்றியஇரண்டுநகர்வுகளுக்குப் பின்னர், கொழும்பு கிட்டத்தட்ட புதுடெல்லிக்கு எதிரான நிலைப்பாட்டில் இருப்பது போல் தோன்றுகிறது. முதலாவது, பிரதமர் மஹிந்தராஜபக்ஷவுடனான மெய்நிகர் பேச்சுக்களில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தியது.

இரண்டாவது, சீன உயர்மட்டக் குழு கொழும்பு வந்து பேச்சுக்களை நடத்தியது.

இந்த இரண்டு விடயங்களுக்கும் பின்னர், இந்தியா  தொடர்பான கொழும்பின் நிலைப்பாட்டில் மாற்றங்கள் தென்படுகின்றன. 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு இந்தியப் பிரதமர் கூறியதை, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களோ,  அல்லது சிங்கள பௌத்த தேசியவாத சக்திகளோ பெரும்பாலும் விரும்பவில்லை. அவர்கள் இதனை தங்கள் மீதான ஒரு தலையீடாக,  நாட்டின் இறைமையின் மீதான தலையீடாகவே பார்க்கிறார்கள். அவர்கள் இந்த விடயத்தில் இந்தியா சொல்வதை கேட்கும் நிலையில் இல்லை. 

அதனை வெளிப்படையாக எதிர்க்கிறார்கள் அல்லது ஒரு காதால் கேட்டு மறுகாதால், வெளியே விட்டுவிட்டு போகும் நிலைப்பாட்டில் இருக்கிறார்கள். 13ஆவது திருத்தச்சட்ட விடயத்தில் இந்தியா அழுத்தம் கொடுக்குமோ என்ற அச்சம் அவர்களுக்கு மேலோங்கி வருவதால், அதற்கு மாற்றான ஒரு நகர்வாக சீனாவின் பக்கம் சாய முனைந்தனர். அதுபோல,  அண்மையில் சீனாவில் இருந்து வந்த உயர்மட்ட குழு இலங்கை அரசாங்கத்துடன் நடத்தியிருக்கும் பேச்சுக்கள் மற்றும் எட்டப்பட்டுள்ள இணக்கப்பாடுகள், உறுதியளிக்கப்பட்டுள்ளஉதவிகள் என்பன, கொழும்பைஇந்தியாவின் பக்கத்தில் இருந்து சற்று நகர வைத்திருக்கின்றது,

இந்தியாவுக்கே முதலிடம்என்று கடந்த பல மாதங்களாக கூறிக் கொண்டிருந்த அரசாங்கத்திடம் இருந்து, சீனக் குழு வந்து சென்ற பின்னர், அவ்வாறான கருத்துக்கள் வெளியாவதை காண முடியவில்லை. இந்த அசைவு மாற்றங்களை இந்தியா உன்னிப்பாக அவதானித்துவருகிறது. அதனால் தான்,அதற்குமாற்றான நகர்வுகளை முன்னெடுக்கமுனைகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பையும்கூட, இதன் ஒரு கட்டமாககுறிப்பிடலாம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் எப்போது, என்னனென்ன விடயங்கள் பேசப்படப் போகின்றன என்பது இந்தப் பத்தி எழுதப்படும் வரையில் உறுதியாகாவிடினும், 13 ஆவது திருத்த விவகாரம் அதில் முக்கிய பேசுபொருளாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அதற்கு முக்கியமாக இரண்டு காரணங்கள் உள்ளன.

ஒன்று,  13 ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாமல் ஒழிக்கின்ற நகர்வுகள்கொழும்பில்தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வாறான நிலையில், அதனைப் பாதுகாக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தரப்புகள் இந்தியாவிடம் கோரிக்கைகளை முன்வைத்திருக்கின்றன. எனவே இந்த விவகாரம், பேச்சில் தவிர்க்கப்பட முடியாததாகவே இருக்கும். அதுபோல, இந்தியாவுக்கும் “13” முக்கியமானது. ஏனென்றால், இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு “13” தான் தீர்வு என்றும்,அந்ததீர்வை, பெற்றுக் கொடுத்திருப்பதாகவும் இந்தியா நம்புகிறது. அல்லது தன்னைச் சுற்றியிருப்பவர்களை நம்ப வைக்கிறது.

அந்த 13ஆவது திருத்தம், இலங்கைஅரசியலமைப்பில்இருந்து பிடுங்கியெடுக்கப்படுமானால், இந்தியாவின் தீர்வு என்னஎன்றகேள்விஎழும் அது, “13” இற்கு அப்பாலும் செல்ல வேண்டிய நிலையையும்கூட உருவாக்கி விடலாம். இதனால்,இப்போதைக்கு எல்லோரது வாயையும் அடைப்பதற்கு இந்தியாவுக்கு “13” தேவைப்படுகிறது. எனவே, இந்த விவகாரத்தை மையப்படுத்தியே பேச்சுக்கள் அமைவது தவிர்க்க முடியாததாக  இருக்கும்.

இனி, இந்தியாஏன், கூட்டமைப்புடன் பேச அவசரப்படுகிறது என்பதற்கான இரண்டாவது காரணத்தைப்பார்க்கலாம். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடக்கப் போகிறது. அதற்கான தயார்படுத்தல்கள் ஏற்கனவே தொடங்கி விட்டன.

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. இந்தமுறை எப்படியாவது தமிழகத்தில் காலூன்றி விட வேண்டும் என்பதில் பிரதமர்மோடியின் அரசாங்கம் உறுதியாக இருக்கிறது. அதற்கான வீட்டு வேலைகள், ஆட்களை இழுக்கும் வேலைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டன. இவ்வாறான நிலையில், தமிழகத்தில் எப்போதும் உணர்வுபூர்வமான விடயமாக இருக்கும் ஈழத் தமிழர் பிரச்சினையை கையில் எடுக்கத்திட்டமிடுகிறதுமோடிஅரசாங்கம். இலங்கைத்தமிழர்களுக்கு மோடி அரசாங்கம் என்னஉதவிகளைவழங்கியிருக்கிறதுஎன்பதை விளக்கும் ஒரு குறும்படம்தயாரிக்கப்பட்டுள்ளது.அது பிரசாரத்துக்காக பயன்படத்தப்படவுள்ளது.

2009 இறுதிப் போரில் காங்கிரசும், தி.மு.க.வும் தமிழர்களின்அழிவுகளை வேடிக்கை பார்த்தன, அதில் பங்காளிகளாக இருந்தன என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. அதனைப் புதுப்பித்து, ஈழத்தமிழர் ஆதரவு மற்றும்அனுதாப அலையை தம்பக்கம் திருப்ப பா.ஜ.க அரசு முற்படுகிறது. அதற்கும் கூட, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பு கை கொடுக்கும். இந்த சந்திப்பு எப்படி, எந்தச் சூழலில் நடந்தாலும், அது தமிழ் மக்களுக்கு சாதகமானதாக இருக்குமோ- இல்லையோ, இந்தியாவுக்குஅதன் நலன்களை பாதுகாப்பதற்குஉதவும்என்பதில்சந்தேகமில்லை.

https://www.virakesari.lk/article/92923

 

 

15 hours ago, கிருபன் said:

இலங்கைத்தமிழர்களுக்கு மோடி அரசாங்கம் என்னஉதவிகளைவழங்கியிருக்கிறதுஎன்பதை விளக்கும் ஒரு குறும்படம்தயாரிக்கப்பட்டுள்ளது.அது பிரசாரத்துக்காக பயன்படத்தப்படவுள்ளது.

ஆ நல்லது அடுத்த தைப்பொங்கலுக்கு அல்லது தீபாவளிகா வெளியில வருது?. 

15 hours ago, கிருபன் said:

இதனால்,இப்போதைக்கு எல்லோரது வாயையும் அடைப்பதற்கு இந்தியாவுக்கு “13” தேவைப்படுகிறது.

மோடியார் யாழ் வந்தபோது அவர் முதலமைச்சருடன் அதிக நேரம் ஒதுக்கப்படாமல் இருக்குமாறு பார்த்துக்கொண்டார்கள். இதே மோடியாருக்கு தமிழரின் தேவைகள் பற்றி விலாவாரியாக விண்ணப்பத்தையும்  முதலமைச்சர் கொடுத்த படம் வந்திருந்தது. இது நடந்து கனகாலம். இப்ப பழையபடி வேதாளம் .....

15 hours ago, கிருபன் said:

இந்த சந்திப்பு எப்படி, எந்தச் சூழலில் நடந்தாலும், அது தமிழ் மக்களுக்கு சாதகமானதாக இருக்குமோ- இல்லையோ, இந்தியாவுக்குஅதன் நலன்களை பாதுகாப்பதற்குஉதவும்என்பதில்சந்தேகமில்லை.

தமிழ் மக்களுக்கு ஒன்றும் வராமல் சிங்களமும் எங்கள் தலைமைகளும்  பார்த்துக்கொள்வார்கள். இந்தியாவின் நலனுக்கு ஒன்றும் சாதகமாக வராமல் சிங்களமும் சீனாவும் பார்த்துக்கொள்ளும். எங்கள் இனம்  பழைய மெதுவான மூங்கில் சித்திரவதை (Slow Bamboo Torture) பாணியில் மெதுவான அஸ்தமனத்தை நோக்கி நகரும்.

From the book Journey from Madras to Bombay (page 296) - ..a punishment well known in Ceylon to impale a criminal on a bamboo thus growing, which speedily makes its way through the body

https://books.google.com.au/books?id=7HMeAQAAIAAJ&pg=PA293&redir_esc=y&hl=en#v=onepage&q=bamboo&f=false

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, கிருபன் said:

செப்ரெம்பர் 26ஆம் திகதி பிரதமர் மஹிந்தராஜபக்ஷதலைமையிலான குழுவினருடன் நடத்தியதை போன்றதொரு, மெய்நிகர் கலந்துரையாடலை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்துவதற்கு இந்தியா தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இந்தியத் தரப்பில் இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இதுகுறித்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார் இரா.சம்பந்தன்.

பேச்சு வார்த்தைக்குப் போவதாக இருந்தால் முந்திரிக் கொட்டை மாதிரி முன்னுக்குப் போகாமல் மற்றைய தமிழ்கட்சிகளையும் கூட்டிக் கொண்டு போகவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

பேச்சு வார்த்தைக்குப் போவதாக இருந்தால் முந்திரிக் கொட்டை மாதிரி முன்னுக்குப் போகாமல் மற்றைய தமிழ்கட்சிகளையும் கூட்டிக் கொண்டு போகவேண்டும்.

டெல்லி வாலாக்கள் உண்மையான ஆர்வத்துடன் வருகினம் எண்டு நம்புறீங்களா?

இலங்கை தீவீல, இனபேதமில்லாமல், அணைவருமே உறுதியா நம்பும் ஒரே விசயம், இந்த டெல்லிக்காரர்களை நம்ப ஏலாது எண்டது தான்.

இவர்களுக்கு உண்மையான ஆர்வம் இல்லை, சும்மா புளுடா விடுவினம் அப்பப்ப என்று தானே, சிங்களவரும், சீனாக்காரரோடு, இவ்வளவு தூரம்.... அன்னியோன்யமா பழகுறான்.

எனக்கெண்டா, நம்ம பிரச்சணைப் பந்து இந்தியாவிடம் இல்லை. சீனாவிக்கும், அமேரிக்காவுக்கும் இடையில மாட்டிவிட்டது.

பொம்பியோ வந்து போக ஓரளவு தெரியும்.

ஜோ பிடன் வந்தா, இந்தியா உள்ள வரக்கூடிய நிலையில், வேற மாதிரி போகலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

கதவை தயவு செய்து மூடிவிடுங்கள், உடல் நலத்திற்கு கேடு, நல்ல காத்தில்லை

சும்மா அடிக்கடி பூச்சாண்டி காட்டிக்கிட்டு, கிந்திய கொள்கை வகுப்பாளர்கள் மாறும் வரை ஒன்றுமே நடவாது, சிங்களத்துக்கு தெரியும் அவர்களின் பலவீனங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, உடையார் said:

கதவை தயவு செய்து மூடிவிடுங்கள், உடல் நலத்திற்கு கேடு, நல்ல காத்தில்லை

சும்மா அடிக்கடி பூச்சாண்டி காட்டிக்கிட்டு, கிந்திய கொள்கை வகுப்பாளர்கள் மாறும் வரை ஒன்றுமே நடவாது, சிங்களத்துக்கு தெரியும் அவர்களின் பலவீனங்கள்

கொள்கையும் இல்லை, நாட்டுப்பற்றும் இல்லை.

தலைக்கு மேலே வெள்ளம் போக விட்டு பிறகு ஓடிப் பிடிக்க வெளிக்கிடுறது தான் இவயட வேலை.

இது தானே நேபால் கதை. இது தான் பூட்டான் கதை.... இது தான் மாலதீவு கதை.

இது தான் இலங்கை கதையும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவை நம்பி இன்னொரு முள்ளிவாய்க்காலுக்கு.......😏

 

மிக மோசமான போலித் தோற்றமொன்றை ஏற்படுத்த இப் போலி ஊடகங்கள் முனைகின்றன ☹️

இந்தியா எங்களுக்கு கதவைத் திறக்க வேண்டியதில்லை. எங்களைத்தேடி இந்தியா வரட்டும். 😡

அதற்கு முள்ளந்தண்டுள்ள, சுய புத்தியுள்ள அரசியல்வாதிகள் எமக்கு இருந்தாலே போதும் 😡

****

Edited by நியானி
அநாகரீகமான சொல்லாடல்

43 minutes ago, Kapithan said:

மிக மோசமான போலித் தோற்றமொன்றை ஏற்படுத்த இப் போலி ஊடகங்கள் முனைகின்றன ☹️

இதை தான் பல தமிழ் ஊடகங்களில் காண்கிறோம்.ஓர் வசன செய்தியை ஆய்வு என்ற பெயரில் சீன, தமிழகம், சிங்களம், தமிழ் அரசியவாதிகள் என்ற பாத்திரங்களை இணைத்து எப்படி நீட்டுவது என்பதில் தான் இவர்களின் நிபுணத்துவம். இவர்கள் உண்மையான ஆய்வாளர்கள் என்றால் இதுவ்ரை இந்தியாவின் அணுகுமுறைகள் பற்றிய ஒரு ஆழ்ந்த ஆராய்ச்சி செய்து எழுதட்டும், அதை விடுத்தது பத்திரிகை பக்கங்களை நிரப்ப இதிகாசம் புனைவது தான் இவர்களின் வேலை.  

வீரகேசரி மேல அப்படி கதை புனைய இவர் இப்ப இப்படி கதை விடுகிறார். சுத்த கோமாளிகள் 

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இந்திய அரசுக்கும் இடையிலான பேச்சு தாமதமாகலாம் என்று தெரியவருகின்றது."

 

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தனுடன் இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே சந்திப்பு

 
sam-ihc.600.png
 51 Views

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை இன்று சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

இலங்கையில் இந்தியாவினால் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி மற்றும் பொருளாதாரத் திட்டங்கள் குறித்து இதன்போது பேசப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

https://www.ilakku.org/கூட்டமைப்புத்-தலைவர்-சம்/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.