Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனா பாதிப்பு – சர்வதேச ரீதியில் 112 ஆவது இடத்திற்கு முன்னேறிய இலங்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா பாதிப்பு – சர்வதேச ரீதியில் 112 ஆவது இடத்திற்கு முன்னேறிய இலங்கை

உலகை அச்சுறுத்தும் கொடிய கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை 112ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

கொரோனா வைரஸின் தாக்கம் உலகளவில் மக்களை அச்சுறுத்திவரும் நிலையில், இலங்கையிலும் அதன் பாதிப்பு தற்போதைய காலங்களில் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக மினுவங்கொட மற்றும் பேலியகொட கொரோனா கொத்தணி காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துச் செல்கிறது.

மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொரோனா கொத்தணியில் மாத்திரம் பதிவாகியுள்ள மொத்த வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஐயாயிரத்து 731 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், நாட்டில் இதுவரை பதிவாகியுள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒன்பதாயிரத்து 205ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இந்த வைரஸ் காரணமாக நாட்டில் 19 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

இவ்வாறான நிலையில், கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் கடந்த மாதமளவில் சுமாராக 30ஆவது இடத்தில் இருந்த இலங்கை கடந்த சில தினங்களில் சடுதியாக முன்னேறி 112ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

இதற்கு முன்னர் இலங்கையில் கொரோனா பரவல் ஆரம்பமாகிய காலப்பகுதியில் கடந்த ஜுன் மாதமளவில் இலங்கை 100ஆவது இடத்தில் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/கொரோனா-பாதிப்பு-சர்வதேச/

மோசடியில முதலிடம்.

தமிழவின் செய்திபடி  250மில்லியன் பெறுமதியான PCR இயந்திரம் பழுதடைந்துள்ளதால் பரிசோதனை முடிவுகள் 6 நாட்களாக தடைபட்டுள்ளது. வழமையான விலை மனுக்கோரல் (outside the tender process) நியதிகளுக்கு அப்பால் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் மோசடி செய்து வேண்டிய உபகரணம் என்பதால் இந்த நிலை என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. ஆக இந்த உபகரணம் உத்தரவாதம் (service or replacement warranty) ஒன்றுடன் வந்ததா என்பது இப்பொது கேள்விக்குறி!

மூலம்: https://www.tamilwin.com/community/01/259719?ref=imp-news

Edited by puthalvan

  • கருத்துக்கள உறவுகள்

நியூசிலாந்தை முந்தியடித்துக் கொண்டு  சிறிலங்கா முன்னிலையில் நின்றதே. எப்படி 112 ம் இடத்துக்கு போனது??

 

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, puthalvan said:

மோசடியில முதலிடம்.

தமிழவின் செய்திபடி  250மில்லியன் பெறுமதியான PCR இயந்திரம் பழுதடைந்துள்ளதால் பரிசோதனை முடிவுகள் 6 நாட்களாக தடைபட்டுள்ளது. வழமையான விலை மனுக்கோரல் (outside the tender process) நியதிகளுக்கு அப்பால் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் மோசடி செய்து வேண்டிய உபகரணம் என்பதால் இந்த நிலை என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. ஆக இந்த உபகரணம் உத்தரவாதம் (service or replacement warranty) ஒன்றுடன் வந்ததா என்பது இப்பொது கேள்விக்குறி!

மூலம்: https://www.tamilwin.com/community/01/259719?ref=imp-news

ம்..1.3 மில்லியன் அமெரிக்க டொலருக்கு ஒரு பி.சி.ஆர் இயந்திரம் வாங்கியிருக்கிறாங்கள்! மிக மலிவான இயந்திரம் 5000 டொலர், மிகவும் படாடோபமான இயந்திரம் 10,000 டொலர். 

குறைந்தது 130 இயந்திரங்கள் வாங்கியிருக்கலாம்! 100% வரி என்று பார்த்தாலும் 65 இயந்திரங்கள் வாங்கியிருக்கலாம்!

இது உண்மையா அல்லது தமிழ் வின்னின் வழமையான "பூச்சியங்கள்" பற்றிய குழப்பமா?😊

39 minutes ago, Justin said:

 உண்மையா அல்லது தமிழ் வின்னின் வழமையான "பூச்சியங்கள்" பற்றிய குழப்பமா?😊

ஸ்ரீலங்கா மிரர் இதழில் அண்மையில் திறக்கப்படட அந்த பரிசோதனை மையம் 250,000 மில்லியன் பெறுமதியானது என்றும் 4000 பிசிர் சோதனைகளை செய்யக்கூடியது என்றுள்ளது. அதனை மொழிபெயர்த்த தமிழவின் (ஆங்கிலம் கொஞ்சம் லூஸ்?) முழு இயந்திரமும் அந்த விலை என்று நினைத்திருக்கக்கூடும்!

Capacity of PCR machine in Mulleriyawa questioned? 

Allegations have been levelled that the expected capacity from the newly established laboratory at the Colombo East Base Hospital (Mulleriyawa Hospital) is not being delivered.

It was claimed that the lab, set up at the cost of Rs. 250 million, had a capacity to complete 4,000 PCR tests on a daily basis.

It is reported that the National Trade Union Center has requested President Gotabhaya Rajapaksa to look into the matter.

Source: https://srilankamirror.com/news/19953-capacity-of-pcr-machine-in-mulleriyawa-questioned

Edited by puthalvan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.