Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னை: கனமழை; வேகமாக நிரம்பிவரும் செம்பரம்பாக்கம்! - அப்டேட் நிலவரம்; தூத்துக்குடிக்கு ரெட் அலர்ட்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: கனமழை; வேகமாக நிரம்பிவரும் செம்பரம்பாக்கம்! - அப்டேட் நிலவரம்; தூத்துக்குடிக்கு ரெட் அலர்ட்

சென்னையில் கனமழை

சென்னையில் கனமழை ( ராகேஷ் பெ )

சென்னையில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி தனது முழு கொள்ளளவை நெருங்கி வருகிறது. ஏரி திறந்துவிடப்பட்டால், சென்னையில் வெள்ளம் ஏற்பட வாய்ப்பிருக்கிறதா?

கடந்த 2015-ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தை இன்றளவும் நாம் யாரும் மறந்திருக்க மாட்டோம். காரணம், அந்த வெள்ளம் ஏற்படுத்திச் சென்ற பாதிப்பு அத்தகையது. 2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்துக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும். செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து அதிகளவு தண்ணீர் திறந்து விட்டது தான் முக்கிய காரணமாகக் கூறப்பட்டது. கடந்த சில நாட்களாகச் சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழையால் செம்பரம்பாக்கம் ஏரி, தனது 24 அடியில், தற்போது 21 அடி வரை நிரம்பியுள்ளது. அதோடு, ஏரியின் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், விரைவில் ஏரி முழு கொள்ளளவை எட்ட வாய்ப்புள்ளதாகத் தெரியவருகிறது. பூண்டி ஏரியிலிருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்குத் திறந்துவிடப்பட்ட நீர் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சென்னை வெள்ளம்
 
சென்னை வெள்ளம்

செம்பரம்பாக்கம் ஏரியைப் பொறுத்தவரை 21 அடியைத் தாண்டியதும் உபரி நீர் திறந்துவிடப்படுவது வழக்கம். தற்போது வினாடிக்கு 390 கன அடி நீர் ஏரிக்கு வந்துகொண்டிருக்கிறது. 21 அடி எட்டியதும் ஏரியிலிருந்து உபரி நீர் திறந்துவிட பொதுப்பணித் துறை ஊழியர்கள் தயார் நிலையில் இருக்கிறார்கள். மதகுகளின் உறுதித்தன்மை குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. ஏரியில் நீர்வரத்தை வேடிக்கை பார்க்க மக்கள் கூட்டம் கூடலாம் என்பதால், தற்போது ஏரிக்குப் பொதுமக்கள் யாரும் செல்லாத வண்ணம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதோடு, 2015-ம் ஆண்டு நடந்தது போல எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்கக் கரையோரத்து மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதோடு, செம்பரம்பாக்கம் ஏரியில் 22 அடி நீர் எட்டியதும் அனைவருக்கும் தகவல் தெரிவித்து அணையிலிருந்து நீர் திறந்துவிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

 

வெள்ளம் வர வாய்ப்புள்ளதா?

கடந்த 2015-ம் ஆண்டு வெள்ளத்துக்கு முக்கிய காரணம், நீர்நிலைகள் மீதான ஆக்கிரமிப்புகளும், மழை நீர் வடிகால்கள் சரியாக இல்லாததும் தான் என்று கூறப்பட்டது. அதையடுத்து, ஆற்றின் இரண்டு கரைகளிலும் இருந்த பெரும்பாலான ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. சென்னை முழுவதும் மழை நீர் வடிகால்கள் கட்டும் பணி தொடங்கியது. 2016 மற்றும் 2017-ம் ஆண்டு அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள், இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் அந்த இடங்களில் தற்போது மெல்ல மெல்ல மீண்டும் ஆக்கிரமிப்புகளுக்கு உள்ளாகியுள்ளது. அதோடு, மழைநீர் வடிகால்கள் கட்டும் பணியும் 2018-ம் ஆண்டுக்குள் முடிக்கப்படும் என்று சொல்லப்பட்ட நிலையில், இன்றுவரை அந்த பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சென்னையில் கனமழை
 
சென்னையில் கனமழை ராகேஷ் பெ

பெரும் மழை பெய்யும் போது, ஊருக்குள் மழைநீரைத் தேங்கவிடாது செய்வதில் மழைநீர் வடிகால்களுக்குத் தான் முக்கிய பங்கு உள்ளது. ஆனால், தற்போது பல இடங்களில் கட்டியும் காட்டாமலும் இருக்கும் வடிகால்கள் எந்த அளவுக்குப் பயனளிக்கும் என்பது சற்று சிந்திக்க வேண்டிய ஒன்றாக உள்ளது. சென்னையைச் சுற்றியுள்ள ஏரிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கொசஸ்தலை ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

 

''செம்பரம்பாக்கத்தை பற்றிய பயம் முற்றிலும் தேவையற்றது. இப்போது வெள்ளம் குறித்த பயம் இல்லை. 2015-ம் ஆண்டு நடந்ததை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் ஒவ்வொரு நிகழ்வையும் 2015 வெள்ளத்துடன் ஒப்பிட வேண்டியதில்லை. எனவே நிம்மதியாகத் தூங்குங்கள். இந்த மழை பாதிப்பில்லாதது'' என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

சென்னையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் பேசிய போது, "இந்த வருடம் சென்னையில் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு இல்லை. ஆறுகள் தூர் வாரப்பட்டுள்ளது, ஆற்றின் இரண்டு பக்க கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. நீர் செல்லும் அனைத்து கால்வாய்களும் சுத்தம் செய்து தயார் நிலையில் இருக்கிறது. மழைநீர் வடிகால்கள் சரியாகச் செயல்படுகிறது. தற்போது சென்னையில் பெய்துவரும் கன மழையிலும் பெருமளவு மழைநீர் எங்கும் தேங்காது உடனுக்குடன் வடிந்து விடுவதை நம்மால் பார்க்க முடிகிறது. அனைத்து வகையான மழைக்கால முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கத்தில் தண்ணீர் திறந்துவிடப்பட்டாலும், அடையாற்றில் எந்த தங்குதடையும் இல்லாது செல்லும். தண்ணீர் திறந்து விடுவதற்கு முன்னர் முறைப்படி அறிவிப்புகள் வெளியிடப்பட்ட பின்னர் தான் தண்ணீர் திறந்துவிடப்படும். சென்னை மக்கள் வெள்ளம் குறித்த அச்சம் கொள்ளத் தேவையில்லை. தேவையற்ற வதந்திகளை நம்பவேண்டாம். அரசு சொல்லும் அறிவிப்புகளை மட்டும் கேட்டுக்கொள்ளுங்கள்" என்று கூறினார்.

பேரிடர் மேலாண்மை ஆணையம் வேண்டுகோள்!

இன்று மாலை, தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை வலுத்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள எச்சரிக்கை: -

வெள்ளக் காலங்களில் பொதுமக்களுக்கு ஓர் வேண்டுகோள்.

பின்வரும் பொருட்களை தங்களுடன் வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது . மெழுகுவர்த்திகள், தீப்பெட்டிகள் ஒரு வாரத்திற்கான அத்தியாவசியப் பொருட்கள் , எரிவாயு, மண்ணெண்ணெய், மருந்து, பேட்டரிகள், டார்ச்கள், முகக்கவசங்கள்.

தமிழகத்தில் தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருவதால் பழைய கட்டிடங்களில் தங்குவதோ அருகில் செல்லவோ வேண்டாம். அவ்வாறு பழைய கட்டிடங்களில் தங்கி இருப்பவர்கள் உடனடியாக வெளியேறி, பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்துக்கு அடுத்த 12 மணி நேரத்தில் அதிதீவிர கனமழை; இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தூத்துக்குடியில் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் அதீத கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தூத்துக்குடி மாவட்டத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் சார்பில் ரெட்அலர்ட் விடப்பட்டுள்ளது. காலை 8.30 மணி வரை மிக கனமழை பெய்யும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

https://www.vikatan.com/government-and-politics/environment/chembarambakkam-lake-filling-in-high-speed-is-chance-for-the-flood-in-chennai

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பல ஏரிகள் வேகமாக நிரம்பிவருவதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. தமிழகத்தில் கடந்த மாதம் 28-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அன்றுதொட்டு இன்றுவரை பல மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. பருவமழை தொடங்கியது முதல் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது.

செம்பரம்பாக்கம் ஏரி
 
செம்பரம்பாக்கம் ஏரி

தொடர் மழையின் காரணமாகச் சென்னையைச் சுற்றியுள்ள நீர்நிலைகளில் வேகமாக நிரம்பி வருகின்றன. சென்னையைச் சுற்றியுள்ள நீர்நிலைகளில் மட்டும் கடந்த ஒரு மாதத்தில் 600 மில்லியன் கன அடி நீர் அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 909 ஏரிகள் இருக்கின்றன. இதில், காஞ்சிபுரத்தில் உள்ள 13 எரியும், செங்கல்பட்டில் உள்ள 54 எரியும் என மொத்தம் 67 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

மேலும், 125 ஏரிகள் 75 சதவிகிதமும், 206 ஏரிகள் 50 சதவிகிதமும், 125 ஏரிகள் 25 சதவிகிதமும் மற்றும் 324 ஏரிகளில் 25 சதவிகிதத்திற்கும் குறைவாகவும் நீர் நிரம்பியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் நான்கு ஏரிகளுக்கு நீர்வரத்து இல்லை எனவும் பொதுப்பணித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.vikatan.com/news/tamilnadu/67-lakes-in-chengalpattu-and-kanchipuram-districts-reach-full-capacity

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெல்லையில் பலத்த மழை; விவசாயிகள் மகிழ்ச்சி! - ஒரே நாளில் 9 அடி உயர்ந்த பாபநாசம் அணை நீர்மட்டம்

பழைய குற்றாலம் அருவி

பழைய குற்றாலம் அருவி

நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழையால் பாபநாசம் அணை நீர்மட்டம், ஒரே நாளில் 9 அடி உயர்ந்தது.

குமரிக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் வெள்ளத்தால் சேதம் ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மழையால் சாலையில் தேங்கிக் கிடக்கும் தண்ணீர்
 
மழையால் சாலையில் தேங்கிக் கிடக்கும் தண்ணீர்

நெல்லை மாநகரில் கடந்த சில தினங்களாகத் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாகத் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கிக் கிடக்கிறது. ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடக்கும் சந்திப்பு பேருந்து நிலையம் மற்றும் குடிநீர் குழாய்களுக்காகத் தோண்டப்பட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்கிக் கிடக்கிறது.

 

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்யும் கனமழையின் காரணமாக குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்டவற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருப்பதால் ஆர்ப்பரிக்கும் அருவிகளில் குளிக்க ஆள் இல்லாமல் வெறிச்சோடிக் காணப்படுகிறது.

பாபநாசம் அணை நீர்மட்டம் உயர்வால் விவசாயப்பணிகள் தொடக்கம்
 
பாபநாசம் அணை நீர்மட்டம் உயர்வால் விவசாயப்பணிகள் தொடக்கம்

குற்றாலத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை நம்பி கடைகளை வாடகைக்கும் எடுத்த வியாபாரிகள் பெரும் ஏமாற்றத்துக்கு உள்ளாகியிருக்கிறார்கள். தொடர்ச்சியாகப் பெய்யும் மழையின் காரணமாக மகிழ்ச்சி அடைந்துள்ள விவசாயிகள் நாற்று நடவு செய்யும் பணிகளைத் தொடங்கியிருக்கிறார்கள்.

 

அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்கிறது. பாபநாசம் அணைப் பகுதியில் நேற்று 13 செ.மீ மழை பதிவானது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 9 அடி அதிகரித்து 111 அடியாக உயர்ந்தது. 156 அடி நீர்மட்டம் கொண்ட சேர்வலாறு அணை, ஒரே நாளில் 18.5 அடி அதிகரித்தது.

குறுக்குத்துறை முருகன் கோயில்
 
குறுக்குத்துறை முருகன் கோயில்

தொடர் மழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாமிரபரணி ஆற்றில் உள்ள குறுக்குத்துறை முருகன் கோயிலை வெள்ளம் சூழ்ந்துள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு நெல்லை மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

 

https://www.vikatan.com/news/tamilnadu/rain-slashes-in-western-ghat-water-level-in-nellai-dams-increased-drastically

  • கருத்துக்கள உறவுகள்

125242586_160327549158978_372925068162510920_n.jpg?_nc_cat=104&ccb=2&_nc_sid=dbeb18&_nc_ohc=RG2jC--oBJEAX_hWR6N&_nc_ht=scontent-frt3-1.xx&oh=80df605d310e8c6ed3143f531f7e6763&oe=5FDBB7A4

 

 

125230188_2700885646828538_3434047899653837345_o.jpg?_nc_cat=102&ccb=2&_nc_sid=8bfeb9&_nc_ohc=ttrqF-hFB70AX-kw9TZ&_nc_ht=scontent-frt3-1.xx&oh=4b19325a14c3de4b29b11fa2b261a472&oe=5FD9325C

இவ்வளவு மழை பெய்யுது. ஆனால்  6 மாசம் கழித்து, மீண்டும் வறட்சி.

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
ஸ்ரீவைகுண்டம் அணை நிரம்பி வழிகிறது காயல்பட்டினத்தில் கொட்டித்தீர்த்த கனமழை 215 மில்லி மீட்டர் பதிவானது

ஸ்ரீவைகுண்டம் அணை நிரம்பி வழிகிறது காயல்பட்டினத்தில் கொட்டித்தீர்த்த கனமழை 215 மில்லி மீட்டர் பதிவானது
 

தூத்துக்குடி, 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததால், கடந்த சில நாட்களாக பரவலான இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் தூத்துக்குடியில் கொட்டித்தீர்த்த கனமழையால் தூத்துக்குடி மாநகரமே தத்தளித்தது.


நேற்று முன்தினம் மதியத்துக்கு பிறகு மழை பெய்யாமல் இருந்தது. ஆனால் நேற்று முன்தினம் இரவு மீண்டும் மழை வெளுத்து வாங்கியது. நேற்று காலையில் லேசான மேகமூட்டம் இருந்தது. காலை 11 மணி அளவில் வெயில் அடிக்க தொடங்கியது. மாலை 3 மணி முதல் மீண்டும் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது.

தேங்கிய மழைநீரால் பாதிப்பு

நேற்று முன்தினம் பெய்த கனமழையால் தூத்துக்குடியில் பல இடங்களில் மழைநீர் குளம் போன்று தேங்கி கிடக்கிறது. தூத்துக்குடி மாநகரில் முக்கிய சாலையான திருச்செந்தூர் ரோட்டில் 3 நாட்களாக மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து முடங்கியது. இதனால் மக்கள் கடுமையாக பாதிப்படைந்தனர். அந்த பகுதியில் தூத்துக்குடி தீயணைப்பு நிலைய அதிகாரி சங்கரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இதேபோன்று தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சித்த மருத்துவ பிரிவு கட்டிடத்துக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் சித்த மருத்துவ பிரிவு வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது. தூத்துக்குடி வி.எம்.எஸ்.நகர், கதிர்வேல் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியது.

தற்காலிக பஸ் நிலையத்தில் மழைநீர் தேங்கியதால், சேறும் சகதியுமாக பயணிகள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு காட்சி அளிக்கிறது. மேலும் மாநகர பகுதிகளில் ஆங்காங்கே தேங்கி உள்ள மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

நிரம்பி வழியும் ஸ்ரீவைகுண்டம் அணை

பலத்த மழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட கடைசி அணையான ஸ்ரீவைகுண்டம் தடுப்பணை நிரம்பி வழிகிறது. இதனால் அணையை தாண்டி விழுந்து வினாடிக்கு 1,100 கன அடி தண்ணீர் வீணாக கடலுக்கு செல்கிறது. மேலும், இந்த அணையில் இருந்து மருதூர் மேலக்காலில் வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீரும், கீழக்காலில் 400 கனஅடி தண்ணீரும், ஸ்ரீவைகுண்டம் வடகாலில் 1,093 கனஅடி தண்ணீரும், தென்காலில் 1,230 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் தாமிரபரணி பாசன குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.

இதேபோன்று பல்வேறு பகுதிகளிலும் பெய்த பலத்த மழை காரணமாக, ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் பெரும்பாலான குளங்களுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக இதுவரை 3 வீடுகள் முழுமையாகவும், 37 வீடுகள் பகுதியாகவும் சேதம் அடைந்து உள்ளன.

மழை விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 215 மில்லி மீட்டர் மழை பெய்தது. இது தவிர மற்ற இடங்களில் பெய்த மழை விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-

திருச்செந்தூர்-91, குலசேகரன்பட்டினம்-77, விளாத்திகுளம்-48, காடல்குடி -46, வைப்பார்-26, சூரங்குடி-23, கோவில்பட்டி-39, கழுகுமலை-16, கயத்தார்-68, கடம்பூர்-70, ஓட்டப்பிடாரம்-31, மணியாச்சி-47, கீழஅரசடி-10.4, எட்டயபுரம்-76, சாத்தான்குளம்-49, ஸ்ரீவைகுண்டம்-65, தூத்துக்குடி-33.

 

https://www.dailythanthi.com/News/Districts/2020/11/19001711/Srivaikuntam-dam-overflows-Heavy-rains-in-Kayalpattinam.vpf

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.