Jump to content

ஒரு துரோகத்தின் நாட்காட்டி 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 6, மார்கழி, 2011

சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபடும் பிள்ளையான் கொலைக்குழு, எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்த மக்கள் மீது ராணுவம் தாக்குதல்

மட்டக்களப்பு மாவட்டத்தின் சந்தன மடு ஆற்றிலிருந்து சட்டவிரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்டுவரும் பிள்ளையான் கொலைக்குழு ஆயுததாரியும், செங்கலடிப் பிரதேச சபையின் உறுப்பினருமான நபர் ஒருவருக்கெதிராக இப்பகுதிமக்கள் சித்தாண்டி முருகன் ஆலய முன்றலில் ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டனர். தமக்கெதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மக்களைக் கலைப்பதற்கு பிள்ளையான் குழு முறக்கொட்டாஞ்சேனை ராணுவ முகாம் அதிகாரியினையும், ஏறாவூர் பொலீஸ்நிலைய பொறுப்பதிகாரியையும் துணைக்கு அழைத்திருந்தனர்.

பிள்ளையானின் உத்தரவின் பேரில் ஆர்ப்பாட்டக்காரர்களைத் தாக்கிய ராணுவமும் பொலீஸாரும் அவர்களைக் கலைத்துவிட்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

சந்தன மடு ஆற்றுப்பகுதியில் வாழ்ந்துவரும் மக்கள் பிள்ளையான் கொலைக்குழு உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் சட்டவிரோத மண் அகழ்வினால் தமது நிலம் விரைவில் ஆற்றினால் அடித்துச் செல்லப்படப் போகிறதென்று இந்த நடவடிக்கைக்கு எதிராக குரல் எழுப்பி வந்திருக்கின்றனர். அவர்களின் தொடர்ச்சியான கோரிக்கைகளை உதாசீனம் செய்துவரும் கிழக்குமாகாணசபை தலைவர், கொலைக்குழு பிள்ளையான், தொடர்ந்தும் இப்பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்டு வருகிறார்.


மக்களின் ஜனநாயக ரீதியிலான  ஆர்ப்பாட்டத்தின்மேல் ராணுவத்தை ஏவிவிட்டு மக்களை அடித்துத் துரத்திய பின்னர் அப்பகுதிக்கு வந்த பிள்ளையான் கொலைக்குழு ஆயுததாரிகள், சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்டவரை தாம் தமது கட்சியிலிருந்து நீக்கிவிட்டதாகவும், இன்னொருவர் இப்பதவிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாகவும் கூறி தமது மணற்கொள்ளையினை மறைக்கமுயன்றபோதும்கூட, நடப்பதை நன்கு அறிந்துவைத்திருந்த மக்கள் அவர்களின் விளக்கத்தினை ஏற்றுக்கொள்ள மறுத்ததாகத் தெரிகிறது.

ஆர்ப்பாட்டம் செய்த மக்கள் மீது ராணுவம் கண்மூடித்தனமாகத் தாக்கி கலைத்த ஒரு சில நாட்களிலேயே பிள்ளையான் மீண்டும் சந்தன மடு ஆற்றிலிருந்து மண் அகழ்வினை ஆரம்பித்துள்ளதாகவும், இதுபற்றி பேசினால் பாரிய விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று மக்கள் மிரட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

https://www.tamilnet.com/art.html?catid=13&artid=34679

  • Like 1
Link to comment
Share on other sites

  • Replies 587
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ரஞ்சித்

ஒரு துரோகத்தின் நாட்காட்டி  தமிழினம் தனது சரித்திரத்தில் பல தியாகிகளை, வரலாற்று நாயகர்களை, வீர மறவர்களைக் கண்டிருக்கிறது. ராஜ ராஜ சோழன் முதல் பாண்டியர்கள், வன்னியர்கள் என்று பல தமிழ் எழுச்சி வரலா

ரஞ்சித்

இதனைப் படிக்கும் அனைவருக்கும் வணக்கம், நான் எழுதுவதை எத்தனை பேர் படிக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. இதனை ஒரு ஆவனமாக பதிய வேண்டும் என்பதற்காகவே எழுதிவருகிறேன். கருணாவின் துரோகம் பற்றிய ச

ரஞ்சித்

கெப்பிட்டிக்கொல்லாவைத் தாக்குதல் நடந்த காலத்தை முன்வைத்துத்தான் இந்த செய்தி நான் குறிப்பிட்ட இணையத்தில் வெளியாகியிருந்தது. இதற்கு முன்னர் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட சிவிலியன்கள் மீதான தாக்குதல்கள் பற்ற

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 9, மார்கழி, 2011

மேலும் 3500 ஏக்கர் மேய்ச்சல் நிலம் சிங்களமயமாக்கப்படுகிறது, மெளனமான கருணா

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று தெற்குப் பிரதேசச் செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சுமார் 3500 ஏக்கர் மேய்ச்சல் நிலத்தினை உயர் பாதுகாப்பு வலயம் என்கிற பெயரில் தாம் எடுத்துக்கொள்வதாக இலங்கை ராணுவத்தின் மட்டக்களப்புத் தலைமைப் பீடம் அறிவித்திருக்கிறது.

ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் இப்பகுதியில் இருந்து தமிழ் கால்நடை விவசாயிகளை உடனடியாக  தமது கால்நடைகளை எடுத்துக்கொண்டு வெளியேறுமாறு ராணுவம் அறிவித்துவருகிறது.

சிறந்த மேய்ச்சல் தரையான இப்பகுதி 1978 ஆம் ஆண்டு வர்த்தமாணி வெளியீட்டின்மூலம் தமிழர்கள் தமது கால்நடைகளை மேய்க்கும் இடமாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. 

தமிழர்களின் மேய்ச்சல் நிலத்தினை அபகரித்து நிற்கும் ராணுவம் இப்பகுதியில் தமது பயிற்சித்தளங்களை நிறுவப்போவதாக கூறியிருக்கும் நிலையில், இந்நிலம் சிங்கள விவசாயிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டு வருவதோடு இச்சிங்களக் குடியேற்றத்திற்கு ராணுவப் பாதுகாப்பும் வழங்கப்படப்போவதாக பாதிக்கப்பட்ட மக்கள்  சந்தேகிக்கின்றனர். 

  பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட அரச அதிபருக்கும், விவசாய நிவாரண உத்தியோகத்தருக்கும் இதுபற்றி முறைப்பாடு செய்திருக்கின்றனர்.

மாதவனைக் கண்டம் பகுதியில் நிலைகொண்டிருக்கும் ஆக்கிரமிப்பு ராணுவம் உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் இப்பகுதிக்குள் எவரும் நுழையக் கூடாதென்று மிரட்டி வருகின்றனர்.

தமது மேய்ச்சல் நிலங்கள் பறிபோயுள்ளதனால் நிர்க்கதியாய் நிற்கும் விவசாயிகள் மீள்குடியேற்ற பிரதியமைச்சரும், துணைராணுவக் குழுத் தலைவனுமாகிய கருணாவின் உதவியாளர் ரவீந்திரனிடம் இதுபற்றி முறையிட்டதாகத் தெரிகிறது. ரவீந்திரன் மக்களின் முறைப்பாடு பற்றி மட்டக்களப்பு ராணுவத்திற்குத் தெரியப்படுத்தியபோது, "ராணுவத் தேவைக்காக இப்பகுதியை நாம் கையகப்படுத்தியிருக்கிறோம்" என்று சொல்லப்படவே அவரும் மெளனித்துவிட்டதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

கோரளைப்பற்று தெற்குப் பகுதியில் , மாதவணைக்கண்டம், மண்திண்டி, மயிலத்தமடு, மொழிவளை ஆகிய நீண்டு செல்லும்  ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர்களின் மேய்சால் நிலங்களில் இப்பகுதியும் சேர்க்கப்பட்டிருப்பதுகண்டும் மக்கள் செய்வதறியாது நிற்பதாக தெரியவருகிறது.

கல்குடா பாராளுமன்ற உறுப்பினர் தேவநாயகம் அரசில் இருந்த 1978 ஆம் ஆண்டில் இப்பகுதி முழுவதும் தமிழருக்கான மேய்ச்சல் நிலங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது நினவிலிருக்கலாம்.

https://www.tamilnet.com/art.html?catid=13&artid=34689

Edited by ரஞ்சித்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துரோகத்தின் நாட்காட்டி : 29, மார்கழி 2011

பிள்ளையானின் சட்டவிரோத மண் அகழ்வை எதிர்த்தவர்கள் மீது முறக்கொட்டாஞ்சேனை ராணுவம் தாக்குதல்

சந்தன மடு ஆற்றில் சட்டவிரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்டுவரும் பிள்ளையானின் சமூகவிரோதச் செயலினைக் கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களை தமது முகாமிற்குச் சமூகமளிக்குமாறு அழைத்த முறக்கோட்டாஞ்சேனை ராணுவம் பிள்ளையானுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடவேண்டாம் என்று கடுமையாக அச்சுருத்தியிருக்கின்றனர். தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் கொல்லப்படுவீர்கள் என்று மிரட்டிய ராணுவம், இரு சமூகநலன் செயற்பாட்டாளர்களான 30 வயது நிரம்பிய முத்துப்பிள்ளை நடேசன் மற்றும் 28 வயது நிரம்பிய ரூபன் வேலாயுதம் ஆகியோரைக் கடுமையாகத் தாக்கிக் காயப்படுத்தியிருக்கிறது.

நடேசனும் ரூபனுன் முன்னாள் புலிகள் இயக்கப்போராளிகள் என்பதும், ரூபன் மிக அண்மையிலேயே ராணுவத்தால் விடுவிக்கப்பட்டிருந்தார் என்றும் கூறப்படுகிறது.

இவர்கள் இருவருமே முன்னாள்ப் போராளிகள் என்பதால், சந்தன மடு ஆற்று மண் அகழ்விற்கெதிராக போராடினால் உங்களை மிக இலகுவாகக் கொன்றுவிடுவோம் என்றும் இவர்கள் ராணுவத்தால் மிரட்டப்பட்டிருக்கிறார்கள்.

ராணுவத்தால் இவர்கள் இருவரும் தாக்கப்பட்டதை வெளியே கூறினால் கொல்லப்படுவீர்கள் என்கிற எச்சரிக்கையினையும் மீறி இவர்கள் சிவில் மனிதவுரிமை அமைப்பொன்றிடம் முறையிட்டபோதும், அவ்வமைப்பினால் இதுவரை இதுதொடர்பாக எதனையும் செய்யமுடியவில்லை.

மட்டக்களப்பு மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் கனிமப்பொருள் மத்திய நிலையம் ஆகியவற்றினல் தொடர்ச்சியாக விடுக்கப்பட்டு வந்த மண் அகழ்வினால் சந்தன மடு ஆற்றங்கரைக்கும் மக்களுக்கும் ஏற்பட்டுவரும் அழிவுகள் பற்றிய அறிவுரைகளையும் மீறி, பிள்ளையானின் கொலைக்குழுவிற்கு இப்பகுதியில் மண் அகழும் அனுமதியை அரசு வழங்கியிருப்பதுடன், இந்த சமூகவிரோதச் செயளுக்கான ராணுவப் பாதுகாப்பினையும் தொடர்ச்சியாக வழங்கிவருகிறது.

இவ்வாற்றிலிருந்து தொடர்ச்சியாக மண் அகழப்படும் இடத்து, இன்னும் ஒருவருடத்தினுள் ஆறு சுமார் ஒரு கிலோமீட்டர் ஊர்மனைகள் நோக்கி வரும் பாரிய ஆபத்து இருப்பதாக சூழலியல் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

சந்தனமடு ஆற்றிலிருந்து மண் அகழ்ந்துவரும் பிள்ளையான் இதில் தலையிட வேண்டாம் என்று உள்ளூர் அதிகார அமைப்புக்களை எச்சரித்திருப்பதனால், இதுதொடர்பாக பேசுவதற்கோ அல்லது நடவடிக்கை எடுப்பதற்கோ எவரும் முன்வரவில்லையென்று மக்களால் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது.


கடந்த 4 ஆம் திகதி மக்களால் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தை முறக்கொட்டாஞ்சேனை ராணுவமும், ஏறாவூர்ப் பொலீஸாரும் சேர்ந்து அடித்துக் கலைத்தது நினைவிலிருக்கலாம்.

 

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் சித்தாண்டி முருகன் ஆலய வன்னியனார் தலைமையில் நடைபெற்றதென்பதோடு, அவர்கள் பிள்ளையான் கொலைக்குழுவினரின் இந்த சமூகவிரோத நடவடிக்கையினை உடனடியாக நிறுத்தம்படியும் கோரியிருந்தனர்.

 

இவ்வாறான சமூகநலன் போராட்டமொன்றில் ஈடுபட்ட சமூகவியலாளரான கேதீஸ்வரன் தேவராஜா எனும் இளைஞர் ஈ பி டி பி கொலைஞர்களால் யாழ்ப்பாணத்தின் குடத்தனைப் பகுதியில் படுகொலை செய்யப்பட்டார். டக்கிளசின் சட்டவிரோத மண் அகழ்வினை ஆதாரங்களோடு சமூக வலைத்தளம் ஒன்றில் பகிர்ந்தமைக்காகவே அவர் கொல்லப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.


 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துரோகத்தின் நாட்காட்டி : 15, மாசி 2012

மட்டக்களப்பில் உண்ணாவிரதம் இருந்த பிக்குவும், கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட கருணாவும்

munk_fast_13_02_06_2.JPG

மட்டக்களப்பு விகாரையின் பெளத்த குருவான அம்பிட்டிய சுமனரத்ன தேரர் 2010 ஆம் ஆண்டிலிருந்து மட்டக்களப்பில் தமிழர்களுக்கெதிரான கோரிக்கைகளை முன்வைத்து அவ்வப்போது உண்ணாவிரத நிகழ்வுகளில் ஈடுபட்டுவருவது தெரிந்ததே. அதன் தொடர்ச்சியாக இந்த பிக்கு தற்பொழுது மீண்டும் உண்ணாவிரதச் சம்பவமொன்றினை ஆரம்பித்துவைத்துள்ளார். 

மட்டக்களப்பில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு, வாழிடங்களிலிருந்து துரத்தப்பட்ட மக்களுக்கு மீள்குடியேற்றத் திட்டம் மூலம் மட்டக்களப்பில் அவர்களுக்கு உரிய காணிகளுக்கான உரிமைப் பத்திரங்களை அரச அதிகாரிகள் வழங்கத் தொடங்கியிருக்கின்றனர். இது தமிழர்களுக்கு சிங்களவர்களின் காணிகளை பலவந்தமாகக் கொடுக்கும் செயல் என்றும், தமிழ் அதிகாரிகளால் சிங்களவரின் காணிகள் பறிபோகின்றது என்றும், இதனால் மட்டக்களப்பில் அரச திணைக்களங்கள் அனைத்திற்கும் சிங்கள அதிகாரிகளை மட்டுமே நியமிக்கவேண்டும் என்று கோரி இந்தப் பிக்கு புதிய உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றில் குதித்திருக்கிறார்.

பிக்குவைச் சமாதானப்படுத்தும் முகமாக துணைராணுவக் குழுத்தலைவரும், மீள்குடியேற்ற பிரதியமைச்சருமான கருணாவை பிக்குவிடம் தூதராக அனுப்பினார் மகிந்த ராஜபக்ஷ.  பிக்குவோடு சமரசத்தில் ஈடுபட்ட கருணா அவரின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதாகவும், இதுபற்றி மகிந்தவிடம் பேசி அவற்றினை நிறைவேற்றுவதாகவும் கூறியபின்னர் பிக்குவும் தனது உண்ணாவிரத மிரட்டலை முடித்துக்கொண்டதாகத் தெரிகிறது.

ambitiya sumanarathna theraக்கான பட முடிவுகள்


2010ஆம் ஆண்டில் மங்கள ரஜ மகாவிகாரையின் விகாராதிபதியான இப்பிக்கு நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தினையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்பாலான அரச உயர் பதவிகளுக்கு சிங்களவர்களை அரசு நியமித்திருந்தது. 

நீதிமன்ற அலுவல்கள், மாவட்டச் செயலகம், பிரதேசச் செயலகங்கள் ஆகிய முக்கிய மக்கள் சேவைகளுக்கு சிங்கள அதிகாரிகளை மட்டுமே இம்மாவட்டத்தில் பணியில் அமர்த்தவேண்டும் என்று இந்த இனவாதப் பிக்கு 2010 ஆம் ஆண்டு மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்தினையடுத்து, அவற்றை ஏற்றுக்கொள்வதாக அரசு சம்மதித்த கணமே அவரது போராட்டம் வாபஸ் பெறப்பட்டதென்பது கவனிக்கப்படவேண்டியதொன்று.

ambitiya sumanarathna theraக்கான பட முடிவுகள்

கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கான அதியுயர் பதவி மற்றும் இதர அரச நிர்வாகச் சேவைகளுக்கான உயர் பதவிகளை சிங்கள அதிகாரிகள் அலங்கரித்ததையடுத்து, நடுத்தர மற்றும் கீழ்மட்ட பதவிகளுக்கும் தற்போது சிங்களவர்களை இம்மாவட்டத்தில் அரசு நியமித்து வருகிறது.

அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே இந்த பிக்கு இவ்வாறான போராட்டங்களில் ஈடுபட்டுவருவதாகவும், மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்கள மயமாக்கலினை இந்தப் பிக்குவைக் கொண்டே அரசு நடத்திவருவதாகவும் மட்டக்களப்பு வாழ் தமிழர்கள் தெரிவித்துவருகின்றனர்.


மகிந்த சிந்தனய எனும் சிங்கள இனவாதச் சிந்தனையின் கிழக்கு மாகாண ஒருங்கிணைப்பாளரும், கொழும்பின் சிங்கள பெளத்த இனவாத அரசின் ஒரு முகம் என்றும் பரவலாகக் கருதப்படும் இப்பிக்கு, தமிழ் மக்களுக்கெதிரான அநீதியான கோரிக்களைகளை முன்வைத்துவருவதுடன், அரச ராணுவத் துணைப்படையினரின் உதவியோடும், அரச பின்புலத்தோடும் தனது கோரிக்கைகளைத் தடையின்றி நிறைவேற்றிவருவதாக பாதிக்கப்பட்டுவரும் தமிழர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.


 

Edited by ரஞ்சித்
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 27, மாசி 2015

போற்குற்ற விசாரணைகள் தொடர்பான ஐ நா வின் தீர்மானத்திற்கெதிராக மக்களை கட்டாயப்படுத்தி போராடவைத்த கருணா மற்றும் பிள்ளையான்

இலங்கை ராணுவத்தால் வழிநடத்தப்படும் துணை ராணுவக் கொலைக்குழுக்களான கருணா மற்றும் பிள்ளையானின் அடியாட்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் கிராம அபிவிருத்திச் சபை தலைவர்களைச் சந்தித்துவந்தனர். இச்சந்திப்பின்போது ஒவ்வொரு தலைவரும் குறைந்தது 150 மக்களை தாம் ஒழுங்குசெய்யும் பேரூந்துகளில் மட்டக்களப்பு நகருக்கு அழைத்துவரும்படி பணிக்கப்பட்டது. இவ்வாறு அழைத்துவரத் தவறும் கிராமசபைத் தலைவர்களின் பதவிகளைத் தாம் பறிக்கப்போவதாகவும் துணை ராணுவக்குழு உறுப்பினர்கள் இவர்களை மிரட்டியிருந்தனர்.

இவ்வாறு வற்புறுத்திக் கூட்டிவரப்பட்ட மக்கள் மட்டு இந்துக் கல்லூரியிலிருந்து மணிக்கூட்டுச் சந்தி நோக்கி பேரணியாக அழைத்துவரப்பட்டு நகர் மத்தியில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் கொடும்பாவி எரிக்கப்பட்டதுடன், போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை சபையின் அமர்வுகள் தொடர்பாகவும் கடுமையான கண்டனக் கோஷங்களை எழுப்புமாறு பணிக்கப்பட்டனர்.

 

இவ்வாறே அம்பாறை மாவட்டத்திலிருந்து பேரூந்துகளில் வந்திறங்கிய நூற்றுக்கணக்கான சிங்களவர்களுக்கு மட்டக்களப்பு மங்கள ராம விகாரையின் விகாராதிபதி சுமனரத்ன தேரர் தலைமை தாங்கிச் சென்றர்.

அதேவேளை அரசில் அங்கம் வகிக்கும் முஸ்லீம் பிரதியமைச்சர்கள் காத்தான்குடி, ஓட்டமாவடி, ஏறவூர் ஆகிய பகுதிகளிலிருந்து தமது ஆதரவாளர்களை நகருக்குக் கூட்டிவந்ததுடன் அமெரிக்க ஜனாதிபதியின் கொடும்பாவியினை எரித்தும், மனிதவுரிமைச் சபையின் போர்க்குற்ற விசாரணை தொடர்பான அமர்விற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் கோஷங்களை எழுப்பினர்.

வாகரையில் மீன்பிடியில் ஈடுபடும் மக்கள் மற்றும் காட்டிற்கு விறகிற்காகச் செல்லும் மக்களை அச்சுருத்திய ராணுவத்தினர், ராணுவத் துணைக்குழுக்களால் ஒழுக்ன்குசெய்யப்படும் பேரணியில் கலந்துகொள்ளாதவிடத்து மீன்பிடியினை அனுமதிக்கப்போவதில்லையென்றும், காட்டிற்கு செல்ல அனுமதிக்கப்போவதில்லையென்றும் மக்களை அச்சுருத்தியிருக்கின்றனர்.

இத்தனைக்கும், ஐக்கிய நாடுகள் சபையில் இனவழிப்பினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு ஆதரவாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லையென்பதும், இலங்கை அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான கொமிஷன் வழங்கிய அனுசரணையின்படி செயற்படுங்கள் என்கிற கோரிக்கையினை மட்டுமே  ஐ நா தீர்மானம் கேட்டுக்கொள்கிறது என்பது தெரிந்தும்கூட, மகிந்த அரசினால் நாட்டில் செயற்கையாக உருவேற்றப்பட்ட சிங்களத் தேசியவாதம் நாட்டினைப் பிரிக்க ஐ நா முயல்வதாகவும், படையினரையும் அரசியல்த் தலைமையினையும் நீதியின்முன் நிறுத்தப்போகிறதென்றும் ஒரு மாயையினை உருவாக்கி பாதிக்கப்பட்ட தமிழருக்கெதிராக தமிழர்களையே போராட வற்புறுத்துகிறதென்று கிழாக்கு வாழ் தமிழர்கள் தெரிவிக்கின்றனர்.

இப்போராட்டங்கள் தொடர்பாகக் கருத்து வெளியிட்ட்ட கிழக்கு வாழ் கல்வியாளர் ஒருவர் பின்வருமாறு கூறினார்,

"கடந்த தசாப்த்தத்தில் இங்கே இடம்பெற்ற தேர்தல் மோசடிகளை அவதானித்த ஐரோப்பிய ஒன்றியக் கண்காணிப்பாளர்கள் இப்போது எங்கே போய்விட்டார்கள்? போர்க்காலத்தில் இங்கே பணியாற்றிய அரச சார்பில்லாத அமைப்பினர் இப்போது எங்கே இருக்கிறார்கள்? சுனாமியின்போதும், கருணாவின் துரோகத்தின்போதும் இங்கே நாட்கணக்கில் வலம்வந்து செய்திகளைச் சேகரித்த வெளிநாட்டு ஊடக அமைப்புக்கள் மக்கள்மீது மனிதவுரிமை மீறல்கள் அரசாங்கத்தினாலும், துணை ராணுவக் குழுக்களாலும் கட்டவிழ்த்துவிடப்பட்டபோது ஏன் அதுபற்றி ச் செய்தி சேகரிக்க வரமுடியாமற்போனது? " என்று கேள்வியெழுப்பினார்.


 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 5, ஆனி, 2012

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளைச் சிங்களமயமாக்கும் கடமையில் அமர்த்தப்பட்டிருக்கும் கருணா மற்றும் பிள்ளையான் துணைராணுவக் குழுக்கள்

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப்பகுதிகளில் அமைந்திருக்கும் தமிழருக்குச் சொந்தமான காணிகளை அபகரிக்கும் அரசின் திட்டத்திற்கு துணைராணுவக் குழுக்களான கருணா குழு மற்றும் பிள்ளையான் குழு ஆகியவற்றை ராணுவம் பாவித்து வருவதாக மக்களால் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது.

இவ்வாறு கையகப்படுத்தப்படும் தமிழர்களின் காணிகள் சிங்கள முதலீட்டாளர்களுக்கு ராணுவத்தால் விற்கப்பட்டுவருவதாகவும் கூறப்படுகிறது. இந்தக் காணிகளை அபகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் கருணா மற்றும் பிள்ளையான் ஆகியோர் பிற அரசியல்வாதிகளுக்காகவும் இதனைச் செய்துவருவதாக மக்கள் கூறுகின்றனர். அம்பாறை மாவட்டத்தின் காரைதீவுப் பிரதேசச் செயலகத்திற்குட்பட்ட பகுதியில், காரைதீவு கிராமத்தருகில் கடலோடு இணைந்த காணியொன்று சிறுவர் பூங்கா ஒன்றிற்கென்று ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், துணைராணுவக் குழுவொன்றின் பின்புலத்துடன் அப்பகுதி அரசியல்வாதியொருவர் கைய்யகப்படுத்தியிருப்பது தெரியவந்திருக்கிறது.

பிரதேசச் செயலகத்தில் பணியாற்றிவரும் அதிகாரி ஒருவர் இதுபற்றி மேலும் கூறுகையில், உள்ளூர் அதிகாரசபை ஒன்றின் தலைவர் துணைராணுவக் குழுவொன்றின் தலையீட்டூடன் இக்காணியைக் கையகப்படுத்தியிருப்பதாக கூறியுள்ளார்.

2004 ஆம் ஆண்டு சுனாமியின் பின்னர் காரைதீவுக் கடலோரத்தில் வாழ்ந்துவந்த மக்கள் வேறிடங்களுக்கு குடிபெயரவேண்டும் என்ற அரசின் கட்டளையினையடுத்து இம்மக்கள் தமது வாழிடங்களைவிட்டு இடம்பெயர்ந்துள்ள நிலையில், இக்காணிகளை துணைராணுவக்குழுக்களான கருணா மற்றும் பிள்ளையான் போன்றோர் கைய்யகப்படுத்தி ஆக்கிரமிப்பு ராணுவத்துடன் சேர்ந்து சிங்கள முதலீட்டாளர்களுக்கு விற்றுவருவதாக இம்மக்கள் தெரிவிக்கின்றனர்.

கருணாவினாலும் பிள்ளையானினாலும் இந்த ஆக்கிரமிப்பிற்குத் துணைபோகும் பிரதேச சபை அதிகாரிகளுக்கு லஞ்சமாகப் பணம் கொடுக்கப்படுவதால், சிலர் இதன் தார்ப்பரியம் தெரியாமல் அவர்களின் ஆக்கிரமிப்பிற்கு உடந்தையாவதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

காரைதீவு கடற்கரையினை அண்டிய காணியில் அமைக்கப்படவிருந்த உத்தேச சிறுவர் பூங்காவினை அமைக்க சுமார் ஒன்பது லட்சம் ரூபாய்கள் செலவாகும் என்று கணிப்பிடப்பட்டு,  மூன்று மாதங்களுக்கு முன்னர் இதன் ஆரம்பகட்ட வேலைகள் பூர்த்தியாகிய நிலையில் , உள்ளூர் அரசியல்வாதியொருவரினால் துணை ராணுவக்குழுக்களைக் கொண்டு ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 9, ஆனி, 2012

கிழக்கு பல்கலைக் கழகத்தின் நிர்வாக சபைக்கு கருணாவால் வலிந்து நியமிக்கப்பட்ட வைத்திய காலாநிதி ஜாபர் - மாணவர் போராட்டம்

கிழக்கு மாகாண பல்கலைக் கழகத்தின் நிர்வாக சபைக்கு அரசாங்கத்தினாலும் துணைராணுவக் குழுக்களாலும் மேற்கொள்ளப்பட்டுவரும் அரசியல் மயப்படுத்தப்பட்ட நியமனங்களைத் தடுக்கும் சக்தி பல்கலைக்கழகத்திற்கு இல்லையென்று அதன் துணைவேந்தர் பேராசிரியர் கே. கோபிந்தராஜா தெரிவித்திருக்கிறார்.

அண்மையில் துணைராணுவக் குழுத் தலைவரும், அரசின் மீள்குடியேற்ற துணையமைச்சருமான கருணாவினால் பல்கலைக்கழக நிர்வாக சபையினுள் மேற்கொள்ளப்பட்ட நியமனம் ஒன்றினையடுத்து மாணவர்கள்  கடந்த மூன்றுநாட்களாக கல்விநடவடிக்கைகளைப் பகிஷ்கரித்துவருவது தொடர்பாகப் பேசும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

கல்முனை வைத்தியசாலையின் நிர்வாக இயக்குநரான வைத்திய கலாநிதி ஜாபர் என்பவரை பல்கலைக்கழக நிர்வாக சபையினுள் கருணா பலவந்தமாக நியமித்ததன் விளைவாகவே மாணவரின் பகிஷ்கரிப்புப் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. நிர்வாக சபையின் உறுப்பினராகவிருந்து மரணித்த வணக்கத்திற்குரிய சில்வெஸ்ட்டர் சிறிதரன் எனும் பாதிரியாரின் வெற்றிடத்திற்கே கருணாவினால் ஜாபர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

கருணாவின் இந்த தாந்தோன்றித்தனமான நியமனம், பல்கலைக்கழகத்தின் சுயாதீனத்தினையும், அதன் உணர்வுகளையும் அடக்கியாண்டு கைய்யகப்படுத்தும் கருணவினதும் அவரை வழிநடத்தும் கொழும்பின் நடவடிக்கையே என்று குறிப்பிட்டுள்ள மாணவர்கள் இந்த நியமனத்தை எதிர்த்து பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அண்மைக்காலங்களில் வடக்குக் கிழக்கில் உள்ள பல்கலைக்கழகங்களில் அரசாலும், துணைராணுவக் குழுக்களாலும் ஏற்படுத்தப்பட்டுவரும் அரசியல் மயப்படுத்தப்பட்ட நியமனங்கள் இப்பல்கலைக் கழகங்களின் சுயாதீனத்தை பெருமளவில் பாதிக்கும் நோக்குடனேயே நடைபெற்றுவருகின்றன என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

சில வருடங்களுக்கு முன்னர், இந்த நிர்வாக சபைக்கு முழு அதிகாரங்களையும் கொண்ட சிங்களவர் ஒருவரை அரசு நியமித்திருந்தபோதும், மாணவர்களின் கடுமையான எதிர்ப்பினால் அந்த நியமனத்தை அரசு செய்யமுடியாமற் போனது என்பது குறிப்பிடத் தக்கது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினைப் போலவே மட்டக்களப்புப் பல்கலைக்கழகமும் தமிழ்த் தேசியத்தின், விடுதலை எழுச்சியின் மைய்யங்களாக இருந்துவருவதால், அவற்றினை தமது அரசியல்மயப்படுத்தப்பட்ட நியமனங்கள் மூலம் கட்டுப்படுத்தி, தமிழர்களின் எழுச்சியை, தேசிய உணர்வினைக் கட்டுப்படுத்திவிடலாம் என்று அரசாங்கமும், அதன் கூலியான கருணாவும் செயற்பட்டு வருகிறார்கள்.

புலிகளிடமிருந்து பிரிந்து சென்று அரச ராணுவத்தின் புலநாய்வுத்துறையால் இன்று வழிநடத்தப்படும் துணை ராணுவக் குழுக்களின் தலைவர்களான கருணா , பிள்ளையான் ஆகிய இருவருமே கிழக்குப் பல்கலைக்கழகத்தைத் தத்தமது கட்டுப்பாடினுள் கொண்டுவரப் பகீரதப் பிரயத்தனம் செய்வதாக மாணவர்கள் தெரிவித்திருக்கின்றனர். இன்று உப வேந்தராக இருக்கும் பேராசிரியர் கூட கருணாவின் ஆதரவுடன் வந்தவர் தான் என்று கூறும் மாணவர்கள், "அரசியலே பிரதானம் கல்வியெல்லாம் அதன் பிறகுதான்" என்னும் கோட்பாட்டிலேயே கருணா செயற்படுவதாக மேலும் தெரிவித்தனர். 

மட்டக்களப்பு கத்தோலிக்க ஆயர்,  மரணமடைந்த பாதிரியாரின் இடத்திற்கு இன்னொரு தமிழ்ப் பாதிரியாரை நியமிப்பதன் மூலம் 6 தமிழர்கள், 3 முஸ்லீம்கள், 3 சிங்களவர்கள் என்று நிர்வாக சபையில் தமிழரின் பிரதிநித்துத்துவம் குறையாமல் பாதுகாக்கப்பட முடியும் என்று சிபாரிசு செய்தபோதும், அதனை நிராகரித்தே கருணா முஸ்லீம் இனத்திலிருந்து ஜாபரை நியமித்திருக்கிறார்.

ஆயரின் கோரிக்கைக்கு ஏற்ப தமிழ்ப் பாதிரியாரே நியமிக்கப்பட வேண்டும் என்று மாணவர்கள் தொடர்ந்தும் போராடி வருகின்றனர். தமது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படும்வரைக்கும் தமது போராட்டம் தொடரும் என்று மாணவர் அமைப்புத் தலைவர் டி. கிரிஷ்ணனாத் தெரிவித்தார்.

ஆனால், கருணாவினால் மேற்கொள்ளப்பட்ட இந்நியமனத்தில் எந்த மாற்றத்திற்கும் இடமில்லையென்று அமைச்சர் எம் எல் ஏ எம் ஹிஸ்பொள்ளா கூறியிருக்கிறார்.

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துரோகத்தின் நாட்காட்டி : நாள் ஆனி 15, 2012

படுவான்கரையில் சிங்களக் குடியேற்றத்தில் ஈடுபட்டுவரும் ராணுவம், மக்களை ராணுவம் சொல்வதைக் கேட்குமாறு வலியுறுத்தும் கருணா.

தமிழர்களின் தாயகப்பகுதியான படுவான்கரையினை கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் ஆக்கிரமித்துக்கொண்ட சிங்கள ராணுவம், இயற்கை மழையினால் செழிப்புற்ற நெல்வயல்ப் பகுதிகளான மீரான் கடவை, நுரைச்சேனை மற்றும் பெரியவெளி ஆகிய கிராமங்களை உல்லாசப் பயணத்துறைக்காக அபிவிருத்திசெய்யப்போவதாக அறிவித்து அப்பகுதியில் வாழ்ந்துவரும் தமிழர்களை வெளியேறுமாறு பணித்திருக்கிறது.

இப்பகுதியில் அபிவிருத்திவேலைகளுக்கென்று தென்பகுதியிலிருந்து சிங்கள வேலையாட்களை வரவழைத்திருக்கும் ராணுவம், தமது கட்டளையினை ஏற்று இதுவரையில் இடம்பெயராதிருக்கும் தமிழர்களை விரட்ட கருணா துணைராணுவக்குழுவினை ஏவிவிட்டிருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இப்பகுதிக்கு வீதிகளை புதிதாக அமைத்துவரும் ஆக்கிரமிப்பு ராணுவத்தில் அதிகாரி கேணல் பெரேரா, யுத்தத்தினால் இன்றுவரை இடம்பெயர்ந்து வேறிடங்களில் அல்லற்பட்டுவாழும் தமிழர்களுக்கான நன்னீர் வசதிகள் உட்பட ஏனைய அடிப்படை வசதிகளைச் செய்துதர தொடர்ந்தும் மறுத்து வருகிறார் என்று இம்மக்கள் தெரிவிக்கின்றனர். 

Kudumpimalai_loc.jpg

குடும்பிமலைப் பகுதியும், வாழைச்சேனை மற்றும் மட்டக்களப்பிலிருந்து அதன் அமைவிடமும்

 

 

இப்பகுதியிலிருந்து விரட்டியடிக்கப்பட்டிருக்கும் மக்கள் கூறுகையில், தமது வயற்காணிகளை கருணா குழுவின் உதவியுடன் பறித்திருக்கும் இலங்கை ராணுவம் அபிவிருத்தி என்கிற பெயரில் புதிய சிங்களக் குடியேற்றம் ஒன்றினை அங்கு உருவாக்கிவருவதாகக் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர்.

புலிகளிடமிருந்து 2007 இப்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு பல வருடங்களுக்குப் பின்னர் கடந்த வருடமே சில தமிழர்கள் இப்பகுதியில் மீளக் குடியேற அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். அடிப்படை வசதிகளேதுமின்றி நிர்க்கதியாக விடப்பட்ட இம்மக்களுக்கான அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவிகள் கிடைப்பதை இப்பகுதியில் நிலைகொண்டிருக்கும் ஆக்கிரமிப்பு ராணுவம் தடுத்துவிட்டது. 

சில அரச சார்பற்ற நிறுவனங்களால் 2007 இற்கு முன்னர் மக்களுக்கு வழங்கப்பட்ட தகரக் கொட்டகைகளிலும், மரங்களின் கீழ் கொட்டகைகள் அமைத்துமே இம்மக்கள் இன்னமும் வாழ்ந்துவருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். 

Kudumpimalai.jpg

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்றில் அமைந்திருக்கும் குடும்பிமலை
 

 

கடல் மட்டத்திலிருந்து 534 அடி உயரத்திலமைந்திருக்கும் குடும்பிமலை, தன்னைச் சுற்றி ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் மிகச்செழிப்பான வயற்காணிகளையும்,  உயர்நிலத்தில் செழித்து வளரக்கூடிய தாவரங்களையும் கொண்டதுடன், தன்னைச்சுற்றி சில நீர்த்தேக்கங்களையும் கொண்ட ஒரு பகுதியாகும்.

இப்பகுதியைச் சுற்றியிருக்கும் மீரான் ஓடை, நுரைச்சேனை, பெரியவெளி ஆகிய கிராமங்களின் பலநூற்றுக்கணக்கான ஏக்கர்கள் வயற்காணிகள் இந்தத் திட்டத்தின்மூலம் பறிக்கப்பட்டுள்ளதுடன், குறைந்தது 5000 ஏக்கர்கள் வயற்காணிகளும், குறைந்தது ஆயிரம் ஏக்கர்கள் விளைச்சல் நிலங்களும் சிங்களமயமாக்கப்பட்டுவருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

உல்லாசப் பயணத்துறைக்கான அபிவிருத்தி என்கிற பெயரில் ஆக்கிரமிப்பு ராணுவத்தால் மேற்கொள்ளப்பட்டுவரும் இந்த நில அபகரிப்பு உண்மையிலேயே தமிழர்களை கலாசார ரீதியில் இனவழிப்புச் செய்வதனை நோக்கமாகக் கொண்டதென்றும், காணிகளைப் பறிப்பதுடன் நின்றுவிடாத இத்திட்டம், தமிழரின் வாழ்வாதாரத்தையும் நாசப்படுத்தும் நோக்குடனும் முன்னெடுக்கப்பட்டு வருகிறதென்றும் கிழக்கின் கல்விமான்களும் சமூகவியலாளர்களும் கவலை தெரிவித்திருக்கின்றனர்.

Edited by ரஞ்சித்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Paduvaankarai_kumpimalai.jpg

குடும்பிமலையின் அமைவிடமும், புதிதாக அல்லை ஓடை மற்றும் மாவட்டான் பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் ராணுவச் சோதனைச் சாவடிகளும்.

 

இனவழிப்பு அரசின் ராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் லால் பெரேரா என்பவன் ஆடி மாதத்திற்கிடையில் இத்திட்டத்தைனைப் பூர்த்தியாக்குவேன் என்று சூளுரைத்திருக்கும் நிலையில், அரசின் மீள்குடியேற்ற, இணக்கப்பாட்டு துணையமைச்சரும் துணைராணுவக் கொலைக்குழுவின் தலைவருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் இப்பகுதியிலிருந்து மக்களை ராணுவத்தின் சொற்படி உடனடியாக வெளியேற வேண்டும் என்று வற்புறுத்திவருகிறார்.


ராணுவத்தால் அமைக்கப்படும் புதிய வீதிகள் இப்பகுதியை அபிவிருத்தி செய்யவே என்று கூறப்பட்டாலும், இவ்வீதிகளை தமிழ் மக்கள் பாவிப்பதை ராணுவம் தடுத்துவருவதாக மக்கள் முறையிட்டிருக்கிறார்கள்.

மக்களுக்கான பொதுப் போக்குவரத்து வசதிகளற்ற இப்பகுதியில் மக்கள் கால்நடையாகவே நெடுந்தூரம் பயணித்துக்கொண்டிருக்கையில், இவ்வீதிகள் ஊடாக ராணுவமும், உல்லாசப் பயணிகளும் சொகுசு வாகனங்களிலும், கனரக டிரக் வண்டிகளிலும் பவணிவருவதாகத் தெரிவிக்கும் மக்கள், இவ்வீதியூடாக நடந்துசெல்வதற்குக் கூட வெலிக்கந்தைப் பகுதியிலுள்ள ராணுவச் சோதனைச் சாவடியில் அனுமதிபெற்றபின்பே முடியும் என்றும் தெரிவிக்கிறார்கள். 

ஆக்கிரமிப்பு ராணுவத்தினருக்கு அடுத்தபடியாக சிங்கள ஆக்கிரமிப்பிற்கு நேரடியாக உதவிவரும் தெற்கின் அரச சார்பற்ற நிறுவனங்களின் முகவர்களும் இவ்வீதிகளை பாவித்துவருவதாகத் தெரிகிறது.


இரு வருடங்களுக்கு முன்னர், ஜனாதிபதி மகிந்தவின் சகோதரரும், பொருளாதார அபிவிருத்தி மற்றும் உல்லாசப் பயணத்துறை அபிவிருத்தி என்கிற பெயரில் மாவட்டத்தின் எழுவான்கரைப்பகுதியின் பெருமளவு கரையோரக் காணிகளை அபகரித்து, மூலிகைக் காடுகள் உட்பட பாரிய காடழிப்பில் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. 

இதேவேளை சிங்கள ராணுவத்தினதும், கடற்படையினதும் உதவியுடன் பெருமளவு சிங்கள மீனவர்கள் தமிழ்ப் பகுதிகளில் மீன்பிடிக்கத் தொடங்கியிருப்பதுடன், கரையோரக் கிராமங்களான கோரளைப்பற்று வடக்கு, ஏறாவூர்ப்பற்று, மண்முனைப்பற்று வடக்கு ஆகிய பகுதிகளில் குடியேறிவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இனவழிப்புப் போரினால் இவ்விடங்களிலிருந்து துரத்தப்பட்ட தமிழர்கள் இன்றுவரை அகதிமுகாம்களில் வாழ்ந்துவரும் நிலையில், ஆக்கிரமிக்கப்பட்ட தமிழரின் காணிகளில் உல்லாசப்பயண விடுதிகளையும், புத்த தாதுகோபங்களையும் கட்ட அரசிற்கு எங்கிருந்து நிதிவருகிறதென்றும் இம்மக்கள் கேட்கின்றனர்.

அபிவிருத்தி என்கிற பெயரில் இனவழிப்பு அரசுக்கு பண உதவிகளை வழங்கும் சர்வதேச நாணைய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகிய முதலீட்டாளர்கள் இதுபற்றிப் பதிசொல்லக் கடமைப்பட்டிருக்கிறார்கள் என்று கிழக்கின் புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர்.

Edited by ரஞ்சித்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துரோகத்தின் நாட்காட்டி : நாள் ஆனி 28, 2012

மாகாணசபைத் தேர்தல்களில் தமக்குச் சார்பாக தமிழர்களை பயமுறுத்த இனியபாரதியை இறக்கியிருக்கும் மகிந்த ராஜபக்ஷ.

thirukkovil_iniyabarathi (1)

கிழக்கு மாகாணத்தில் எதிர்வரும் மாகாணசபைத் தேர்தல்களில் தனது கட்சி சார்பாக மக்களை அச்சுருத்தி தனக்கு வாக்களிக்கப் பண்ணுதல் முதல் பல தேர்தல் முறைகேடுகளுக்காக தனது அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், கருணா துணைராணுவக் கொலைக்குழுவின் முக்கிய ஆயுததாரியுமான இனியபாரதி  என்பவரை மகிந்த ராஜபக்ஷெ நியமித்திருப்பதாகத் தெரிகிறது.


கருணாவின் நெருங்கிய சகாவான இனியபாரதி பல கொலைச்சம்பவங்களிலும் கடத்தல்களிலும் ஈடுபட்டார் எனும் குற்றச்சாட்டில் இலங்கை நீதிமன்றத்திலேயே வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில் மகிந்தவினால் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

இரு வருடங்களுக்கு முன்னர் சந்திரநேரு சந்திரகாந்தன் எனும் பாராளுமன்ற உறுப்பினருக்கு நேரடியாகக் கொலைமிரட்டலினை விடுத்ததற்காக இனியபாரதி மீது கல்முனை நீதிமன்றில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. வழக்கில் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்ட இனியபாரதிக்கு இருவருடங்கள் கடூழியச் சிறைத்தண்டனையினை நீதிபதி சந்திரமணி விசுவலிங்கம் விதித்திருந்தார். ஆனால், இந்தத் தீர்ப்பு 10 வருடங்களுக்கு தடைசெய்யப்பட்டு வெறும் 25,000 ரூபாய்கள் தண்டப்பணத்துடனும், மக்களை மிரட்டக் கூடாது எனும் நிபந்தனையோடும் இனியபாரதி விடுவிக்கப்பட்டார்.

மக்களுக்கெதிரான வன்முறைகளான கடத்துதல், சட்டத்திற்குப் புறம்பான வகையில் படுகொலை செய்தல், கப்பம் பெறுதல் போன்ற குற்றச்செயல்கள் தொடர்பாக இனியபாரதியின் பெயர் பல்வேறு மக்களாலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் நடத்தப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கக் கொமிஷனின் முன்னால் தெளிவாக முறையிடப்பட்டிருந்தது. சுமார் 20 பெயர்கள் அடங்கிய முதன்மை மனிதவுரிமை மீறல்க் குற்றவாளிகளில் இனியபாரதியின் பெயரும் இடம்பெற்றிருந்தது.

ஐக்கிய நாடுகள் சபை உட்பட பல சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்கள் 2006 முதல் 2007 காலப்பகுதியில் பல சிறுவர்களையும், பொதுமக்களையும் கடத்திச் சென்றது, படுகொலை புரிந்தது போன்ற குற்றச்செயல்களில் இனியபாரதி ஈடுபட்டிருந்தார் என்று அறிக்கைகளை வெளியிட்டிருந்தன.

2008 மாகாணசபைத் தேர்தல்களில், மகிந்த ராஜபக்ஷவின் ஆதரவுடனான கட்சிக்கு கிழக்கில் மக்கள் வாக்களிக்குமாறு இனியபாரதி மக்களைக் கொடுமைப்படுத்தியதுடன், பாரிய தேர்தல் கால வன்முறைகளிலும் இறங்கியிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

கிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்டு புதிதாகத் தேர்தல்கள் வருகிற புரட்டாதி மாதம் நடைபெறவுள்ளதையடுத்து மிகக் கொடூரமான ஆயுததாரியான இனியபாரதியை மீண்டும் கிழக்கில் அரசாங்கம் களமிறக்கியுள்ளது.

இனியபாரதியைப் போன்றே, அரசால் முன்னைய தேர்தல்களில் களமிறக்கப்பட்ட பல முன்னாள் துணைக்குழு ஆயுததாரிகளும் இம்முறை தேர்தல்களில் அரசிற்காக வேலைசெய்ய கிழக்கிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக மவட்ட செயலகத்தின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.
 

Edited by ரஞ்சித்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துரோகத்தின் நாட்காட்டி : நாள் ஆனி 30, 2012

படுவான்கரையில் மீளக் குடியேறிவரும் மக்களின் வாழ்வாதாரத்தினைத் தட்டிப் பறிக்கும் கருணா துணைராணுவக் குழு

நன்னீர் மீன்பிடியில் தமது வாழ்வாதாரத்தை ஓட்டிக்கொண்டிருக்கும், படுவான்கரையில் மீளக்குடியேறியுள்ள மக்கள் தமது மீன்களை அரசின் துணையமைச்சரும், துணைராணுவக் கொலைக்குழுவின் தலைவருமான கருணாவின் சகாக்கள் பறித்துச் செல்வதாக முறைப்பாடு செய்துள்ளனர். 
சிங்கள ராணுவத்தால் இயக்கப்பட்டுவரும் கருணாவின் துணைக்குழு இப்பகுதியில் மக்கள் பிடிக்கும் மீன்களைக் கருவாடு போடுவதனைத் தடுத்து வருவதாகவும், சந்தையில் குறைந்தது 1,100 ரூபாய்களுக்கு விற்கப்படக் கூடிய கருவாட்டினை தமக்கு மீன்களாகவே வெறும் 50 ரூபாய்களுக்குத் தரவேண்டும் என்று அச்சுருத்திப் பறித்துச் செல்வதாகவும் முறையிடப்பட்டிருக்கிறது.

Paduvaankarai_kumpimalai.jpg

 
குடும்பிமலையின் அமைவிடம்


இலங்கை ராணுவத்தின் ராணுவ நடவடிக்கையினால் இடம்பெயர்ந்து வாழ்ந்துவந்த 439 குடும்பங்கள் மீண்டும் படுவான்கரையின் பெரிய நுரைச்சோலை மற்றும் சின்ன நுரைச்சோலை ஆகிய பகுதிகளில் மீளக் குடியேறியுள்ளன.

மீளக்குடியேறிய இம்மக்கள் தமது வாழ்வாதாரத்திற்காக குடும்பிமலையினை அண்மித்த மீரான்கடவைக்குளம், ஆத்திக் காட்டுக்குளம் ஆகிய நீர்த்தேக்கங்களில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இவ்வாறு மீளக்குடியேறிய மக்களால் பிடிக்கப்படும் நன்னீர் மீன்கள் சந்தைப்பகுதியில் ஓரளவு நல்ல விலைக்கு விற்கப்பட்டு வந்தன. 

ஆனால், கருணா துணைராணுவக் கொலைக்குழுவினரால் அச்சுருத்தப்பட்டிருக்கும் இம்மக்கள் தமது மீன்களை மிகக் குறைந்த விலைக்கு இவர்களுக்கு விற்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டு வருகின்றார்கள்.

இதேவேளை அரச சார்பற்ற நிறுவனங்களாலும் சர்வதேச தொண்டர் நிறுவனங்களாலும் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கான உதவிகள் என்கிற பெயரில் வழங்கப்படும் பணம் கருணா தலைமையிலான துணைராணுவக் குழுவினருக்கே பகிர்ந்தளிக்கப்பட்டுவருவதாக இம்மக்கள் மேலும் கூறுகின்றார்கள். மக்களுக்கான நிதியில் களவடால்களைப் புரியும் கருணாவின் சகாக்களிடம் இதுபற்றிக் கேட்ட அதிகாரிகள் பயமுருத்தலுக்கு ஆளானதோடு, வேறிடங்களுக்கும் மாற்றப்பட்டிருக்கிறார்கள்.

மிக அண்மையில் கல்லடிப் பாலத்திற்கென்று ஒதுக்கப்பட்ட நிதியில் தமக்கு ஒரு பங்கு தரப்படவேண்டும் என்று கருணா அதிகாரிகளை வற்புறுத்தியிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை இன்னொரு துணைராணுவக் கொலைக்குழுவின் தலைவரும், கிழக்கு மாகாண முதலமைச்சருமான பிள்ளையான், ராணுவத்தினரினதும், பொலீஸாரினதும் ஆதரவுடன்  சந்தனமடு ஆற்றிலிருந்து சட்டத்திற்குப் புறம்பான முறையில் மண் அகழ்வில் ஈடுபட்டுவருவது நாம் அறிந்ததே.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துரோகத்தின் நாட்காட்டி : நாள் ஆடி 03, 2012

கல்குடா கல்வி வலயத்தின் செயற்பாடுகளை கட்டுப்படுத்திவரும் துணைராணுவக் குழு

கல்குடா கல்வி வலயத்தின் அதிகார நிலையம் துணைராணுவக் குழுவினரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கிவருவதாக இவ்வலயத்தின் ஆசிரியர்களும், பாடசாலை அதிபர்களும் புகார் அளித்துள்ளனர். துணைராணுவக் குழுவினரின் அத்துமீறல்களாலும், அச்சுருத்தல்களாலும் மாணவர்களுக்கான கல்விநடவடிக்கைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக அவர்கள் கூறுகின்றன்ர். கல்குடா கல்வி வலயமானது மாகாண ரீதியில் 9 ஆவது இடத்தினை 2007 இல் பெற்றிருந்தது. ஆனால், துணைராணுவக்குழுவினரின் கட்டுப்பாட்டின் கீழ் அக்கல்வி வலயம் செயற்படத் தொடங்கியதன் பின்னர் அது 16 ஆம் இடத்திற்குத் தள்ளப்பட்டிருப்பதாக ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அத்துடன், இவ்வலயத்தின் கல்விசார் நடவடிக்கைகளுக்கென்று ஒதுக்கப்படும் பெருமளவு பணமும் துணைராணுவக்குழுவினரால் களவாடப்பட்டு வருகிறதெனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

கல்குடா கல்வி வலயத்தில் 85 பாடசாலைகள் அடங்குகின்றன. இவற்றுள் 35 பாடசாலைகள் மிகவும் பிந்தங்கிய பிரதேசங்களில் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 26 பாடசாலைகள் குறைந்தளவு அபிவிருத்தியடைந்த பகுதிகளிலும் மீதி 20 பாடசாலைகள் ஓரளவு அபிவிருத்தியடைந்த பகுதிகளிலும் அமைந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மகிந்த சிந்தனையின் கீழ் கிழக்கின் வெளிச்சம் திட்டத்தின் மூலம் இவ்வலயத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 பாடசாலைகளின் அபிவிருத்திக்கென்று ஒருபங்கு நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. இதற்கு மேலதிகமாக சில அரச சார்பற்ற நிறுவனங்கள் இப்பாடசாலைகளில் கழிவறைகளுக்கான உதவித்தொகையாக சுமார் பத்து லட்சம் ரூபாய்களை நன்கொடையாக வழங்கியிருந்தன. 

ஆனால், இந்த அபிவிருத்திகளுக்கான டென்டர்கள் துணைராணுவக் குழுவினருக்கே வழங்கப்பட்டிருக்கின்றன. 

இக்கல்வி வட்டாரத்தின் நிர்வாக அதிகாரி, சுயமாகச் செயற்பட முடியாமல், துணைராணுவக் குழுவினரின் நேரடிக் கட்டளையின் கீழேயே செயற்பட்டு வருவதாக அறியமுடிகிறது.

முன்னாள் கிழக்கு மாகாண முதல்வரும், துணைராணுவக் கொலைக்குழுவின் தலைவருமான பிள்ளையான் அண்மையில் இக்கல்வி வட்டார ஆசிரியர்களையும் அதிபர்களையும் அழைத்துப் பேசியபோது, எதிர்வரும் மாகாணசபைத் தேர்தல்களில் தனக்கே வாக்களிக்குமாறு அச்சுருத்தியுள்ளதாக இச்சந்திப்பில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துரோகத்தின் நாட்காட்டி : நாள் ஆடி 21, 2012

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களை மிரட்டிவரும் துணைராணுவக்குழு

எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேதலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புச் சார்பாக போட்டியிடும் உறுப்பினர்களை அரச ராணுவத்தின் வழிகாட்டலில் இயங்கும் துணைராணுவக் குழுவொன்று அச்சுருத்திவருவதாக முறைப்பாடு செய்யப்பட்டிருக்கிறது. 

கடந்த செவ்வாயன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய வேட்பாளர்களான துரைராஜசிங்கம் மற்றும் இந்திரகுமார் பிரசண்ணா ஆகியோரின் வீடுகள் துணைராணுவக்குழுவினரால் வெளியிலிருந்து பூட்டுப் போடப்பட்டு அடைக்கப்பட்டிருந்ததாக இவர்கள் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர். இவர்களால் பொலீஸாருக்கு இந்தவிடயம் தெரிவிக்கப்பட்டபின்னர், பொலீஸாரே கதவுகளை திறந்துவிட்டதாகத் தெரிகிறது.


துரைராஜசிங்கம் என்பவர் முன்னாள் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் என்பதுடன் வழக்கறிஞராகவும் பதவி வகித்தவர். அவரது வீடு மட்டக்களப்பு வாவிவீதியில் , முன்னாள் கிழக்கு முதலமைச்சரும் துணைராணுவக் கொலைக்குழுவின் தலைவருமான பிள்ளையானின் அலுவலகத்திலிருந்து சுமார் 15 மீட்டர்கள் தொலைவிலேயே இருக்கின்றதென்பதும் குறிப்பிடத் தக்கது.

இந்திரக்குமாரின் வீடு மட்டக்களப்பு இரண்டாம் குறுக்குத் தெருவில் அமைந்திருக்கிறது.

இவ்விரு வீடுகளுமே நகரின் அதியுயர் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்திருக்கின்றன. 

அண்மையில் கிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்ட பின்னர், துணைராணுவக்குழு உறுப்பினர்கள் மட்டக்களப்பிலும் அம்பாறையிலும் தமிழ்க் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மீது துன்புறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாக பல முறைப்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. 
 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 26, ஆடி 2012

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வக்களித்தால் இந்த மாவட்டத்திலிருந்து துரத்தப்படுவீர்கள் - வாகரை மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் துணைராணுவக் கொலைக்குழுவின் தலைவர் பிள்ளையான்.


முன்னாள் கிழக்கு மாகாணசபை முதலமைச்சரும், துணைராணுவக் கொலைக்குழுவின் தலைவருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனும் அவரது ஆயுதக் குழுவும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வாகரைப் பகுதியில் உள்ள மக்களை மகிந்த ராஜபக்ஷவின் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாகப் போட்டியிடும் பிள்ளையானுக்கு வக்களிக்கும்படியும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும் அனைவரும் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து விரட்டியடிக்கப்படுவீர்கள் என்றும் மிரட்டிவருகிறார்கள். 

jeyam TMVPக்கான பட முடிவுகள்


ஜெயம் என்று அழைக்கப்படும் திவ்வியநாதன் எனும் பிள்ளையான் குழுவின் முக்கிய ஆயுததாரியும் இந்த மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதோடு, இவர் தலைமையில் வாகரையில் ரோந்தில் சுற்றித்திரியும் கொலைக்குழுவினரே மக்களை இவ்வாறு எச்சரித்திருப்பதாகத் தெரிகிறது. வாகரையில் சுமார் 7,500 வாக்காளர்கள் இருப்பதாக தேர்தல் திணைக்களத்தினால் கணக்கிடப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

மட்டக்களப்பு நகரிலிருந்து சுமார் 75 கிலோமீட்டர்கள் தொலைவில், கோரளைப்பற்று வடக்கு பிரதேச சபைப்பகுதியில் இப்பிரதேசம் அமைந்திருக்கிறது.

ஜெயம் எனும் பிள்ளையான் கொலைக்குழு ஆயுததாரியினாலும், அவரது சகாக்களினாலும் தொடர்ச்சியாக துன்புறுத்தப்பட்டுவரும் வாகரை மக்கள் பெரும் அச்சத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2008 மாகாணசபைத் தேர்தல்களிலும் ஜெயமும் அவரது சகாக்களும் மக்களை அச்சுருத்திப் பணியவைத்தே வாக்குகளை பெற்றதாகப் பரவலான குற்றச்சாட்டுக்கள் வந்திருந்தன. இம்முறையும் இக்குழுவினர் அதேவகையான அச்சமூட்டும் வன்முறைகளிலும், மிரட்டல்களிலும் ஈடுபட்டுவருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

jeyam TMVPக்கான பட முடிவுகள்

இலங்கை ராணுவத்தின் துணையுடன் ஜெயமும் அவரது குழுவினருமே வாழைச்சேனையின் கல்குடா மற்றும் பேத்தாழை பகுதிகளில்  இடம்பெற்று வரும் கொள்ளைச் சம்பவங்களின் சூத்திரதாரிகள் என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஆட்சியிலுள்ள அரசாங்கத்தின் செல்லப்பிள்ளையான பிள்ளையானின் முக்கிய சகாவான ஜெயமும் அவரது குழுவும் செய்துவரும் சமூகவிரோதச் செயற்பாடுகள் பற்றி  முறைப்பாடுகள் செய்யப்பட்டபோது, பொலீஸாரோ ராணுவமோ அதுபற்றி நடவடிக்கை எடுப்பதனை மறுத்துவருவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.


 

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 31, ஆவணி 2012

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டுவரும் பிள்ளையான் கொலைக்குழு

மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் ஆசீருடன் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் பிள்ளையான் தலைமையிலான துணைராணுவக் கொலைக்குழுவினர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் மீது தாக்குதல்களை நடத்த ஆரம்பித்திருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வருகிற மாதம் 8 ஆம் திகதி நடைபெறவிருக்கும் இத்தேர்தல்களில் 35 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவிருக்கிறார்கள்.

கொலைக்குழு ஆயுததாரியும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான புஷ்பராசா என்னும் நபரும் அவரது கொலைக்குழுவினருமே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கெதிரான தாக்குதல்களில் ஈடுபட்டுவருவதாக முறைப்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அம்பாறை மாவட்டத்தில் கூட்டமைப்பு வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களைக் குறிவைத்து தாக்கிவரும் இவரது குழுவினருக்கெதிராக கடந்த 2008 மாகாணசபைத் தேர்தல்களிலும் வன் முறைகளில் ஈடுபட்டார்கள் என்று பல முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 

இதேவேளை இம்மாவட்டத்தில் சமுர்தி உத்தியோகத்தர்களை கூட்டமொன்றிற்கு அழைத்த பிள்ளையானும் அவரது கொலைக்குழுவினரும், தமக்கான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும்படி அவர்களை மிரட்டியுள்ளதுடன், தமது கூட்டங்களுக்கு வரமறுக்கும் சமுர்தி உத்தியோகத்தர்களுக்கான கொடுப்பணவு நீக்கப்படும் என்றும், அவர்களின் நியமனம் இரத்துச் செய்யப்படும் என்றும் மிரட்டப்பட்டிருக்கிறது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 11, கார்த்திகை 2012

கருணாவினதும் பிள்ளையானினதும்  உதவியுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் குடியேறும் 25,000 சிங்களக் குடும்பங்கள்

Lt to Rt, Mahinda Rajapaksa, Pillaiyan and Karuna

மட்டக்களப்பு மாவட்டத்தில் கருணா மற்றும் பிள்ளையான் அகியோரின் உதவியுடன் சுமார் 25,000 சிங்களக் குடும்பங்களை குடியேற்றும் நடவடிக்கைகளில் அரசு இறங்கியிருப்பதாக மட்டக்களப்பிலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. 

இதன் முதற்கட்டமாக குறைந்தது 5,000 சிங்களக் குடும்பங்கள் 16 கிலோமீட்டர்கள் நீளமான கடற்கரைப் பகுதியான பாசிக்குடா மற்றும் ஏறாவூர்ப்பற்று பகுதியான சவுக்கடி ஆகிய பகுதிகளில் ஏற்கனவே குடியமர்த்தப்பட்டிருக்கின்றனர்.

முன்னால் கிழக்கு மாகாண முதலமைச்சரும் துணைராணுவக் கொலைக்குழு தலைவருமான பிள்ளையான் மற்றும் அரச துணையமைச்சரும் இன்னொரு துணைராணுவக் கொலைக்குழுத் தலைவருமான கருணா ஆகியோரின் உதவியுடன் இப்பகுதிகளில் வாழ்ந்த தமிழர்கள் விரட்டப்பட்டு, சிங்களவர்கள் மட்டக்களப்பின் மேற்கிலும் கிழக்கிலும் குடியமர்த்தப்பட்டு வருகின்றனர்.

batticaloa%20land%20grab.jpg

இதேவேளை கோரளைப்பற்று தெற்குப் பகுதியில் அமைந்திருக்கின்ற பெரியமாதவணை பகுதியில் அத்துமீறி நுழைந்து தமிழர்களின் மேய்ச்சல் நிலங்களைக் கையகபடுத்தியிருக்கும் சிங்களக் குடும்பங்களின் எண்ணிக்கை தற்போது 450 இலிருந்து 500 வரை இருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் கணிப்பிட்டுள்ளனர். அம்பாறை மாவட்டத்தின் தெகியத்தைக்கண்டிய எனும் பகுதியிலிருந்து தற்காலிக விவசாய செய்கைக்கு வருகிறோம் என்கிற பெயரில் இதுவரை இப்பகுதிக்கு வந்த சிங்களக் குடும்பங்கள் ராணுவத்தினரின் உதவியுடன் இப்பகுதிகளில் நிலையான வீடுகளையும், களஞ்சியங்களையும் கட்டிவருவதாகவும் பாதிக்கப்பட்ட தமிழ்ப் பண்ணையாளர்கள் கூறுகின்றனர்.

இதுபற்றி மட்டக்களப்பு அரச அதிபர் ஊடாக மக்கள் ராணுவ அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்தபோது இவ்வாறான சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறவில்லை என்று மறுத்த பிரிகேடியர் ஒருவர், தமது ராணுவம் தற்காலிகமாகத் தங்கியிருக்கும் சிங்கள மக்களுக்கான உதவிகளையே வழங்குவதாக கூறினாலும், தமிழர்களின் நிலங்கள் தொடர்ச்சியாக சிங்கள விவசாயிகளாலும் ராணுவத்தினராலும் நாளாந்த ரீதியில் கையகப்படுத்தப்பட்டுவருவதை பார்த்துக்கொண்டு எதுவும் செய்யமுடியாத கைய்யறு நிலையிலேயே தமிழர்கள் இருக்கின்றனர்.

இதுபற்றி சமூக ஆர்வல்களும், கிழக்கின் கல்விமான்களும் ராணுவ அதிகாரியிடம் பேசியபோது, "தமிழர்களின் காணிகளில் சிங்களவர்கள் குடியேறுவது உண்மைதான். இதனை நீங்கள் அரசாங்கத்திடம் தான் கேட்கவேண்டும். எங்களுக்கு இடப்பட்ட கட்டளையைத்தான் நாம் பின்பற்றமுடியும், முடிந்தால் உங்களின் அரச அதிபரை அரசுடன் பேசச் சொல்லுங்கள்" என்று ஏளனமாகக் கூறியதாகச் சொல்லப்படுகிறது.

cattle belong to tamils killed by sinhalese in batticaloaக்கான பட முடிவுகள்

ஏறாவூர்ப்பற்று - செங்கலடிப் பகுதியில் புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் சிங்களக் குடியேற்றக் கிராமமான மங்களகம எனும் பகுதியில் குடியேறியுள்ள சிங்களவர்கள் தமிழர்களின் கால்நடைகளைக் கொன்றுவருவதாகவும், புதிதாக ஈணும் கன்றுக்குட்டிகளை களவாடிச் செல்வதாகவும் முறையிடும் தமிழர்கள், தமது முறைப்பாடுகளை பொலீஸார் ஏற்கமறுப்பதோடு, தம்மை விரட்டியடிப்பதாகவும் கவலையுடன் தெரிவித்திருக்கிறார்கள்.

batticaloa%20land%20grab%202.JPG

இதேவேளை கோரளைப்பற்று தெற்கு, வெள்ளாவெளி, பட்டிப்பழை, ஏறாவூர்ப் பற்று ஆகிய எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள தமிழக் கிராமங்களில் அத்துமீறிக் குடியேறியுள்ள சிங்களவர்கள், இப்பகுதி அம்பாறை மாவட்டத்தினுள் உள்ளடக்கப்பட்டிருப்பதால், தமிழர்களை இங்கிருந்து அடித்துவிரட்டுவோம் என்று மிரட்டிவருவதாகவும் அப்பகுதிமக்கள் தெரிவிக்கின்றனர்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 16, தை 2013

படுவான்கரையில் சிங்களக் குடியேற்றம் ஒன்றினை ஏற்படுத்துவதன் மூலம் சிங்களத் தேர்தல் தொகுதியொன்றினை அமைக்கும் மகிந்த - தமக்குள் போட்டிபோட்டுக்கொண்டு உதவும் கருணாவும் பிள்ளையானும்

மகிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோரின் ஆசீருடன் படுவான்கரையில் துரித கதியில் சிங்களக் குடியேற்றம் ஒன்று நிகழ்ந்துவருவதாக அப்பகுதிவாழ் தமிழ்மக்கள் தெரிவித்திருக்கின்றனர். மிகச் செழிப்பான மேய்ச்சல் நிலங்களைக் கொண்ட இப்பகுதியில் அண்மையில் இடம்பெற்றுவரும் சிங்களக் குடியேற்றங்களால் இதுவரையில் சுமார் 25,000 ஏக்கர் நிலம் சிங்களமயமாக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. இந்தச் சிங்களக் குடியேற்றம் பூர்த்தியாக்கப்படும் நிலையில், இப்பிரதேசத்திலிருந்து சிங்களப் பாராளுமன்றப் பிரதிநிதியொருவர் தெரிவாகும் வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுவதாக இப்பகுதி மக்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களிடம் தெரிவித்திருக்கின்றனர்.

இப்பகுதியில் பணிபுரிந்துவரும் தமிழ் உத்தியோகத்தர்கள் இந்த குடியேற்றம்பற்றியோ நில ஆக்கிரமிப்புப் பற்றியோ பேசக்கூடாதென்று துணையமைச்சரும், துணைராணுவக் கொலைக்குழு தலைவருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரனால் எச்சரிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது. படுவான்கரையில் அரச அழுத்தத்திற்கும் மத்தியில் இக்குடியேற்றம் தொடர்பான செய்திகளை வெளிக்கொண்ர முயன்ற பல தமிழ் அதிகாரிகள் வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டதோடு, கருணாவினாலும் கொலை மிரட்டல்களுக்கு ஆளாகியிருக்கின்றனர்.

மகிந்த ராஜபக்ஷவின் கிழக்கு மாகாண ஆலோசகர்களாகவும், ஒருங்கிணைப்பாளர்களாகவும் செயற்பட்டுவரும் கருணாவும் பிள்ளையானும் தமிழ் அதிகாரிகளை மிரட்டி, அவர்களின் பணிகளுக்கு இடையூறாக இருப்பதாகவும், இவர்கள் இருவருக்குமிடையிலான போட்டியினால், மகிந்தவுக்கு அதிகம் நெருக்காமானவர் யார் என்பதை நிரூபிக்க இந்தக் குடியேற்றங்களுக்கு ஆதரவாக இவர்கள் இருவரும் செயற்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அத்துமீறிய நில அபகரிப்பிற்கும், சிங்களக் குடியேற்றத்திற்கு இதுவரை காலமும் ஓரளவிற்காவது தடையாக இருந்துவந்த சில தமிழ் அதிகாரிகள் பலவந்தமாக சிங்களப் பகுதிகளுக்கு கருணாவினால் இடமாற்றப்பட்டதையடுத்து, இப்பகுத்யில் குடியேற்றங்கள் தங்குதடையின்றி நடைபெறத் தொடங்கியிருப்பதாக தமிழ் மக்கள் தெரிவிக்கிண்ரனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிழக்கிலிருந்தும், மேற்கிலிருந்து சிங்களக் குடியேற்றங்கள் ஊடறுத்துக்கொண்டு நிகழ்ந்துவர, வடக்கிலிருந்து முஸ்லீம்களும் தம் பங்கிற்கு தமிழ் நில ஆபகரிப்பில் இறங்கியிருப்பதாக தமிழர்கள் தெரிவிக்கின்றனர்.


 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 04, சித்திரை 2013

இந்திய அரசின் வீட்டுத்திட்டத்திட்டத்தினை தமது உறுப்பினர்களுக்கு வழங்கிய துணைராணுவக் குழுக்கள்

மட்டக்களப்பில் இந்திய அரசின் உதவியோடு கட்டப்படத் தீர்மானிக்கப்பட்ட வீட்டுத்திட்டத்திற்கு தகுதியானவர்களைத் தீர்மானிப்பதில் சமூக தலைவர்கள், கிராமப்புற அபிருத்தி அதிகாரிகள், பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் , ஆலய நிர்வாகிகள் உள்ளடங்கிய பலதரப்பட்ட அமைப்புக்களும் உள்வாங்கப்படவேண்டும் என்று மட்டக்களப்பு மக்களால்  தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வந்த கோரிக்கைகளை உதாசீனம் செய்து தனது துணைராணுவக் குழுக்களிடம் தகுதியானவர்களைத் தேர்வுசெய்யும்படி மகிந்த அரசு பணித்திருப்பதாகத் தெரியவருகிறது.

அரசாங்கத்தின் துணைராணுவக் குழுக்களிடம் வழங்கப்பட்டுள்ள இந்த அதிகாரத்தினை, இந்திய அரசு நேரடியாகவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கவேண்டும் என்று மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களும், கூட்டமைப்பின் தலைமைப் பீடமும் இந்தியாவிடம் கோரியபோது, இந்தியா இதுபற்றி கவனம் எடுக்கத் தவறிவிட்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.


 சுமார் 4000 வீடுகளைக் கட்டிக்கொடுக்கும் இந்தியாவின் உதவித் திட்டட்தின்படி 2000 வீடுகள் மட்டக்களப்பிலும் இன்னும் 1000 வீடுகள் அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் கட்டப்படவிருக்கின்றன.

75 வீதமான வீடுகள் படுவான்கரைப் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படவிருக்கின்றன. இவ்வீட்டுத் திட்டத்தின் 300 வீடுகளை சித்திர மாத முடிவிற்குள் பூர்த்தியாக்க இந்தியா விரும்புவதாகத் தெரிகிறது.

இவ்வீடுத்திட்டத்திற்கான கூட்டங்களை கருணா துணைராணுவக் குழுவும் பிள்ளையான் துணைராணுவக் குழுவுமே தற்போது நடத்திவருவதாகத் தெரிகிறது.

இத்திட்டத்திற்காக மக்களைத் தெரிந்தெடுக்கும்போது தாம் தெரிவுசெய்துவைத்திருக்கும் பெயர்ப்பட்டியலுக்கு அமைவாகவே மக்கள் தெரிவுசெய்யப்படவேண்டும் என்று துணைராணுவக் குழுக்கள் பிரதேசச் சபை அதிகாரிகளை பணித்திருப்பதாகவும், இதன்மூலம் துணைராணுவக்குழு உறுப்பினர்களுக்கும், அவர்களது உறவினர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஒவ்வொரு பிரதேசச் செயலாளர் பிரிவிலிருந்தும் சுமார் 100 குடும்பங்களுக்கு புள்ளிகள் அடிப்படையில் வீடுகள் வழங்குவதென்று முடிவெடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, ஒருவீட்டின் பிரதான குடியிருப்பாளர் உயிருடன் இருந்தால் அவருக்கு 10 புள்ளிகளும், பிரதான குடியிருப்பாளர் துணையினை இழந்திருந்தால் அவருக்கு 20 புள்ளிகளும், பெற்றோர்களை இழந்த ஒரு குடும்பத்தில் மூத்த பிள்ளை திருமணம் முடிக்காத பெண்ணாகவிருந்தால் 30 புள்ளிகளும் கொடுக்கப்பட்டன. மேலும் குடும்பத்தில் 12 வயதிற்குக் குறைந்த சிறுவர்களுக்கு 20 புள்ளிகளும், 18 வயதிற்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு 10 புள்ளிகளும் வழங்கப்பட்டன. 

ஆனால், இவை ஆரம்பத்தில் நடத்தப்பட்ட 100 வீடுகளுக்கான தெரிவுகளுக்கு மட்டுமே பாவிக்கப்பட்டதுடன் பின்னர் துணைராணுவக்குழுவினர் தேர்வை நடத்தத் தொடங்கினர். இந்தத் தேர்வில் முன்னாள்ப் புலிகளின் போராளிகளின் குடும்பங்கள் முற்றாக பிள்ளையானினாலும் கருணாவினாலும் புறக்கணிக்கப்பட்டதுடன் அவர்களின் குடும்பங்களை தேர்வில் சேர்க்கமுடியாதென்று புறக்கணிக்கப்பட்டது.

ஆனால், பெரும்பாலான படுவான்கரைக் குடும்பங்கள் புலிகளின் குடுபங்களாகவோ மாவீரர் குடும்பங்களகவோதான் இருந்தன என்பது குறிப்பிடத் தக்கது. ஆக, பெரும்பாலான வீடுகள் துணைராணுவக் குழுவினரின் குடும்பங்களுக்கும், கட்சி ஆதரவாளர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.

Edited by ரஞ்சித்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 16, ஆனி 2013

மட்டக்களப்பில் மக்களிடம் கப்பம் அறவிடும் ராணுவமும், துணைநிற்கும் துணைராணுவக் குழுவும்


மட்டக்களப்பு மாவட்டத்தில் துணைராணுவக் குழுக்களின் உதவியோடு தமிழர்களின் மேய்ச்சல் நிலங்களை அபகரித்து, சிங்களவர்களைக் குடியேற்றிவரும் ஆக்கிரமிப்பு ராணுவம் அதே துணைராணுவக் குழுக்களின் உதவியோடு பாதிக்கப்பட்ட தமிழர்களிடமிருந்து புதிய கப்பம் அறவிடுதல் நடவடிக்கையினையும் தொடங்கியிருக்கிறது.

இதன்படி கோரளைப்பற்று தெற்கின் கிரானைச் சுற்றியுள்ள மேய்ச்சல் நிலங்களில் தமது கால்நடைகளை மேய்த்துவரும் தமிழர்களிடமிருந்து ஒவ்வொரு கால்நடைக்கும் 300 ரூபாய்களைத் தமக்குக் கப்பமாக வழங்கவேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறது. அத்துடன் இக்கப்பமானது ஒவ்வொருமாதமும் 25 ஆம் திகதிக்கு முன்னர் தம்மிடம் கொடுக்கப்படவேண்டும் என்றும் அச்சுருத்தியிருக்கிறது. அல்லி ஓடைப் பகுதியில் இவ்வாறு தமிழ் விவசாயிகளிடமிருந்து கப்பம் அறவிட்ட துணை ராணுவக் குழுவினரும் ராணுவமும் இந்தப் பணத்தினை யுத்தத்தில் அங்கவீனமான சிங்கள ராணுவத்தினருக்கான வீடுகளைக் கட்டுவதற்காகப் பாவிக்கப்போகிறோம் என்று கூறியிருக்கிறார்கள்.

Paduvaankarai_kumpimalai.jpg

முன்னதாக, கருணா குழுவும், பிள்ளையான் குழுவும் இந்த விவசாயிகளிடம் தமது பங்கிற்கும் கப்பம் அறவிட்டு வந்தனர். ஆனால், இம்முறை அந்தக் கப்பத்திற்கு மேலதிகமாக ராணுவமும் கப்பம் அறவிடத் தொடங்கியிருக்கிறது.

துணை ராணுவக் குழுக்களாலும், ஆக்கிரமிப்பு ராணுவத்தாலும் தமது வாழ்வாதாரத்தைச் சிறிது சிறிதாக இழந்துவரும் தமிழ் விவசாயிகள், தம்மை நிரந்தரமாகவே இந்த மேய்ச்சல் நிலங்களில் இருந்து அப்புறப்படுத்த சிங்கள் அராணுவம் திட்டமிட்டுச் செயற்படுவதாகவும், அதற்கு துணைராணுவக் குழுக்கள் ஒத்தாசையளித்துவருவதாகவும் கூறுகின்றனர்.

ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலும் மேய்ச்சலில் ஈடுபடும் விவசாயிகளை பதிவுசெய்யும்படி கேட்கப்பட்டதற்கிணங்க பல விவசாயிகள் தமது பெயரினைப் பதிவுசெய்திருந்தனர். தற்போது இந்த பெயர்ப் பட்டியலைக் கொண்டே ராணுவமும் துணை ராணுவக் குழுக்களும் மக்களிடம் கப்பம் அறவிடுவதாகக் கூறப்படுகிறது.

இதன்படி ஒவ்வொரு தமிழ் விவசாயியும் குறைந்தது 3000 ரூபாய்களை மாதாந்தக் கப்பப் பணமாக ராணுவத்திற்கும், இன்னொரு தொகையினை துணைராணுவக் குழுக்களுக்கும் செலுத்திவருகின்றனர்.

இப்பகுதியில் ராணுவத்தால் சுமார் 500 சிங்களக் குடும்பங்கள் அண்மையில் குடியேற்றப்பட்டு அவர்களுக்குப் பாதுகாப்பளிக்கவென்று சிவிலியன் பாதுகாப்புப் பிரிவு எனும் பெயரில் ராணுவத்திலிருந்தும் பொலீஸிலிருந்தும் பதவிவிலகியவர்களைக் கொண்டு சிங்கள துணைராணுவக் குழுவொன்றினை அமைத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழ் விவசாயிகளின் கால்நடைகளைக் கொல்வது, களவாடிச் செல்வதுபோன்ற குற்றச்செயல்களில் இந்தச் சிங்கள துணைராணுவக் குழுவே ஈடுபட்டு வருவதாகவும், தேடிச் செல்லும் தமிழர்களைத் தாக்குவது கட்டிவைப்பதுபோன்ற செயல்களிலும் இந்த துணைராணுவக் குழு ஈடுபட்டுவருவதாகவும் தமிழர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.


இப்பகுதியில் குடியேறியுள்ள சிங்களவர்களால் அல்லி ஓடை எனும் தமிழ்க் கிராமத்தின் பெயர் தற்போது "அல்லியாய ஓட" எனும் சிங்களப் பெயருடன் அழைக்கப்படுவருவதாகவும் கூறப்படுகிறது.

Alli_oadai.jpg

இணைக்கப்பட்ட படத்தில் சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ள பகுதியில் 5 ஏக்கர் நிலப்பரப்பு பெளத்தவிகாரை கட்டுவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. குடும்பிமலைப் பகுதிக்கு அண்மையாகத் தமிழர்கள் பிரவேசிப்பதைத் தடுத்திருக்கும் ராணுவமும், சிங்களத் துணைராணுவக் குழுவும் பாரிய  நிர்மாண வேலைகளில் ஈடுபட்டுவருவதாக தமிழ் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.


 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 28, ஆனி 2013

தமிழர்களின் விவசாயத்திற்கான நீரை நிறுத்தி தமது உல்லாச விடுதிகளுக்கு வழங்கும் பிள்ளையானும் மகிந்தவும்

தமிழர்களின் விவசாயத்திற்கும், வாழைச்சேனை காகித ஆலைக்கும் வழங்கப்பட்டுவரும் நீரினை நிறுத்தி, தமது உல்லாசப் பயணிகள் விடுதிக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் துணைராணுவக் கொலைக்குழுவின் தலைவரான பிள்ளையானும் அவரது எஜமானர்களில் ஒருவருமான மகிந்தவும்  வழங்கிவருவதாக பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும், அரசாங்கத்தின் நிதியமைச்சினை தன்னகத்தே வைத்திருக்கும் மகிந்த வாகனேரிக்குளத்திலிருந்து பெறப்படும் நீரினை அப்பகுதியில் இருக்கும் விவசாயிகளுக்கு வழங்குவதனை முற்றாகத் தடுத்திருப்பதாகவும் தெரிகிறது.


நிதியமைச்சினால் நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டிருக்கும் பணிப்புரையின்படி கல்க்குடா மற்றும் பாசிக்குடா ஆகிய  பகுதிகளில் பிள்ளையானினாலும், மகிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தினாலும் நடத்தப்படும் உல்லாசப் பயணிகள் விடுதிகளுக்கே இந்த நீர் வழங்கப்படவேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அத்துடன், வாழைச்சேனை காகித ஆலைக்கு காவத்த முனைப் பகுதியிலிருந்து வழங்கப்படும் நீரினை முற்றாகத் தடுக்குமாறும் நிதியமைச்சு நீர்ப்பாசனத் திணைக்களத்தினைப் பணித்திருக்கிறது.


வாகனேரிக் குளத்திலிருந்து பெறப்படும் நீரினால் சுமார் 8,156 ஏக்கர்கள் நிலத்தில் விவசாயம் செய்வது ஏதுவாக்கப்பட்டிருந்ததோடு, குறைந்தது 6700 குடும்பங்கள் பயனடைந்துவந்தன என்பது குறிப்பிடத் தக்கது.

அத்துடன் இதே நீர்ப்பாசனத் திட்டத்திலிருந்து காகித ஆலைக்கும் நீர் வழங்கப்பட்டு வந்ததனால் குறைந்தது 700 தமிழ் தொழிலாளர்களும் வேலைவாய்ப்பைப் பெற்றிருந்தனர். தற்போது மகிந்த அரசினாலும், பிள்ளையானினாலும் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் நீர்ப்பாசனத் தடையின்மூலம் குறைந்தது 7500 தமிழர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

புலிகளின் கட்டுப்பாட்டில் இப்பகுதி இருந்த காலத்தில் 1994 இலிருந்து விவசாயத்திற்கும் காகித ஆலைக்கும் தங்குதடையின்றி நீர்ப்பாசனம் வழங்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத் தக்கது.
 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 11, ஆவணி 2013

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கான ஆதரவுக்காக மக்களை வஞ்சித்த கருணா

உன்னிச்சைக் குளத்தின் இடப்புற வாய்க்கால் பகுதியிலிருக்கும் சுமார் 1830 ஏக்கர் விவசாய நிலம் நீரின்றி வறண்டு போகும் நிலையினை அடைந்திருப்பதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மாகாணசபைத் தேர்தல்களில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினருக்கு ஆதரவாக வாக்களித்தார்கள் என்பதற்காக இப்பகுதிமக்களைப் பழிவாங்க மகிந்தவின் கட்டளையின்பேரில் பிரதியமைச்சர் கருணா எனப்படும்  விநாயகமூர்த்தி முரளீதரன் இப்பகுதிக்கான நீர்வழங்கும் நீர்க்கதவுகளை முற்றாக மூடிவிடுமாறு பணித்துள்ளதால் இந்நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மாவட்ட நீர்ப்பாசன பொறியியலாளரை இது தொடர்பாக கண்டித்திருப்பதோடு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ப. செல்வராசாவிடம் இது தொடர்பான முறைப்பாடு ஒன்றினையும் பதிவுசெய்துள்ளனர்.


மேலும், இந்தப் பழிவாங்கல் நடவடிகையில் தொடர்புபட்ட அதே பொறியியலாளர் மகிந்தவின் அரசுக்கு நெருக்கமானவர் என்று அறியவருவதுடன், கடந்த மாதம் கொழுவாமடு, வாகனேரி பொத்தானைப் பகுதியில் கமச்செய்கையில் ஈடுபட்ட விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தியதில் நேரடியாகப் பங்குபற்றியிருந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது.

இந்தத் தாக்குதலில் 22 விவசாயிகள் காயமடைந்திருந்தனர். இத்தாக்குதலைத் தொடர்ந்து கருணாவின் நெருங்கிய சகாவான இந்தப் பொறியியலாளருக்கும், கருணாவுக்கும் எதிரான கண்டனப் போராட்டம் ஒன்றினை இப்பகுதி விவசாயிகள் நிகழ்த்தியதும் நினைவிலிருக்கலாம்.

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 13, ஆவணி 2013

தமது மீள்குடியேற்றத்திற்காக புலம்பெயர் தமிழர்களிடம் உதவிகோரும் அரசாலும், அரச தூனைராணுவக் குழுக்களாலும் கைவிடப்பட்ட அம்பாறை மாவட்ட தமிழ்மக்கள்

உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, ஜப்பான், இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளும் அமைப்புக்களும் இலங்கை அரசு ஊடாகவும், உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடாகவும் பல பில்லியன் ரூபாய்கள் பெறுமதியான மீள்குடியேற்ற அபிவிருத்தித் திட்டங்களைச் செய்துவருவதாக திரும்பத் திரும்பக் கூறப்பட்டாலும் கூட இந்த உதவிகள் எவையுமே பாதிக்கப்பட்ட தமிழ்மக்களை வந்தடையவில்லை என்று அம்பாறை மாவட்டத்தில்  ராணுவ நடவடிக்கைகளால் இடம்பெயர்ந்து அவதியுறும் தமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.

அரச நிறுவனங்களிலிருந்து தமக்கு எதுவித உதவிகளும் கிடைக்கப்போவதில்லை என்று கூறும் அம்பாறை மாவட்டத் தமிழர்கள், தமது மீள்குடியேற்றத்திற்கு புலம்பெயர் அமைப்புக்களும், தனிநபர்களும் உதவிசெய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

திருக்கோயில், நாவிதான் வெளி, ஆலையடி வேம்பு, கல்முனைத் தமிழ்ப் பகுதி மற்றும் அம்பாறை ஆகிய பகுதிகளில் சுமார் 6 வருடங்களுக்கு மேலாகியும் உறுதியளிக்கப்பட்ட மீள்குடியேற்ற உதவிகளை அரசோ அல்லது அரசின் மீள்குடியேற்றத்திற்கான துணையமைச்சராகவிருக்கும் துணைராணுவக்குழுத் தலைவர் கருணாவோ இதுவரையில் எதுவிதமான உதவிகளையும் தமக்கு வழங்கவில்லை என்றும் இம்மக்கள் தெரிவிக்கின்றனர்.

Ampaarai_07_2013_04.jpg

அம்பாறை மாவட்டத்தில் யுத்தத்தால் இடம்பெயர்க்கப்பட்ட தமிழர்கள்.

இம்மாவட்டத்தின் அனைத்துத் தமிழ்க் கிராமங்களிலும் நன்னீருக்கான கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாகவும், பெருமளவு பிள்ளைகள் போஷாக்கிண்மையினால் அல்லற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இப்பகுதியில் இருக்கும் தாய்மார்கள் இதுபற்றித் தெரிவிக்கையில், தமது வீட்டிற்கான குடிநீருக்காக பல கிலோமீட்டர்கள் நடந்தே சென்றுவரவேண்டியிருப்பதாகவும், பல நேரங்களில் சுகயீனமுற்றிருக்கும் தமது குழந்தைகளை வீட்டில் தனியே விட்டிவிட்டே தாம் செல்வதாகவும் கவலைப்படுகின்றனர்.

மீள்குடியேற்றம் என்கிற பெயரில் இக்குடும்பங்கள் தற்காலிகக் கொட்டகைகளில் தங்கவைக்கப்பட்டிருப்பதாகவும், இம்மக்களின் வீடுகளும், விளை நிலங்களும் அழிக்கப்பட்டு காடுகளாக மாறிவருவதாகவும் இம்மக்கள் தெரிவிக்கின்றனர்.

Ampaarai_07_2013_01.jpg

அம்பாறை மாவட்டத்தில் இடம்பெயரவைக்கப்பட்டுள்ள தமிழர்கள்.

இக்கிராமங்கள் யுத்த காலத்தில்கூட தன்னிறைவான நிலையில் இருந்ததாகவும், இப்பகுதியில் அரசாலும், துணைராணுவக் குழுக்களாலும் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டமிட்ட வாழ்வாதார அழிப்பினால் இன்று இந்த மக்கள் மற்றையவர்களிடம் கையேந்தும் நிலையினை அரசும் அரசின் ஏஜெண்டுக்களும் உருவாக்கியிருப்பதாக கூறப்படுகிறது.

பலவிடங்களில் தனித்தனியாக தங்கவைக்கப்பட்டுள்ள இக்குடும்பங்கள் தமக்குள் ஒன்றாக இணைந்து தமது பகுதியை அபிவிருத்தி செய்வதையோ, தமது அடிப்படை வசதிகளை நிர்மாணிப்பதையோ அரசும் அரசின் துணைராணுவக் குழுக்களும் தடுத்துவிட்டதாக மேலும் இம்மக்கள் கூறுகின்றனர்.

Ampaarai_07_2013_03.jpg

அம்பாறை மாவட்டத்தில் இடம்பெயரவைக்கப்பட்டுள்ள தமிழர்கள்.

அம்பாறை மாவட்டத்தில் திருக்கோயில் பிரதேசத்தில், தங்கவேலாயுதபுரம், காஞ்சிரங்குடா, கஞ்சிகுடிச்சியாறு மற்றும் உடும்பன்குளம் ஆகிய தமிழ்க் கிராமங்கள் அரசால் திட்டமிட்டே புறக்கணிக்கப்பட்டுவருவதாகவும், மீள்குடியேற்றத் துணையமைச்சரான கருணா தமது அவலங்கள் பற்றி அக்கறை கொண்டவராகத் தெரியவில்லையென்றும் இம்மக்கள் தெரிவிக்கின்றனர்.

சுமார் 450 குடும்பங்கள் வசித்து வந்த தங்கவேலாயுதபுரத்தில் அரச துணை ராணுவக்குழுக்களினதும், தொடர்ச்சியான அரச ராணுவ அடக்குமுறையினாலும் பெருமளவு குடும்பங்கள் வெளியேறியுள்ள நிலையில் தற்போது 89 குடும்பங்கள் மட்டுமே இப்பகுதியில் பல சவால்களுக்கு மத்தியிலும் வசித்துவருவதாகத் தெரிகிறது.

இதே வகையான அவல வாழ்வே இப்பகுதியில் பல கிராமங்களிலும் தொடர்வதாக மக்கள் மேலும் தெரிவித்தனர்.

ஐரோப்பிய அபிவிருத்தி நிலையத்தினால் கட்டப்பட்ட இரு நன்னீர்க் கிணறுகளைத்தவிர இப்பகுதியில் வேறு கிணறுகள் ஏதும் அரசால் இதுவரையில் அமைக்கப்படவில்லையென்றும் தெரியவருகிறது.

Ampaarai_07_2013_05.jpg

அம்பாறை மாவட்டத்தில் இடம்பெயரவைக்கப்பட்டுள்ள தமிழர்கள்

இப்பகுதி மக்கள் தமது நன்னீர் தட்டுப்பாடு பற்றி மேலும் கூறுகையில், இப்பகுதியில் பாரிய கற்பாறைகள் இருப்பதால், இவற்றினைக் குடைந்து கிணறுகளை வெட்டுவதென்பது தமது சக்திக்கு அப்பாற்பட்ட விடயம் என்றும், இப்பகுதியில் குறைந்தது 30 அடிகள் வரை தோண்டினால் மட்டுமே நீரைப் பெறுதல் சாத்தியம் என்றும் தெரிவிக்கின்றனர்.
இப்பகுதிச் சிறார்கள் குறைந்தது 7 கிலோமீட்டர்கள் நடந்தே தமது பாடசாலைக்குச் செல்லவேண்டியிருக்கிறது. கஞ்சிகுடிச்சியாறு பாடசாலையில் இன்றுவரை இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் வசித்துவருகிறார்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது.

Ampaarai_07_2013_02.jpg

அம்பாறை மாவட்டத்தில் இடம்பெயரவைக்கப்பட்டுள்ள தமிழர்கள்


இப்பகுதியில் ஒவ்வொரு வீட்டின் நிர்மாணத்திற்கும் என்று தலா 320,000 ரூபாய்களை ஒதுக்கியுள்ளதாக அரசு கூறினாலும், இதுவரை ஒன்று அல்லது இரண்டு வீடுகள் 
மட்டுமே பார்வைக்காகக் கட்டப்பட்டுள்ளதுடன், ஏனைய வீடுகள் பற்றி அரசோ கருணாவோ பேசுவதில்லை என்று மக்கள் கூறுகின்றனர். 

Ampaarai_07_2013_06.jpg

அம்பாறை மாவட்டத்தில் இடம்பெயரவைக்கப்பட்டுள்ள தமிழர்கள்

இப்பகுதியில் உலவும் யானைகளினால் பல வீடுகள் சேதமாக்கப்பட்டுள்ளதாகவும், தமிழ்க் கிராமங்களுக்கிடையே தொடர்பினை ஏற்படுத்தக்கூடிய தற்காலிகள் வீதிகளைக் கூட அரசு அமைத்துத்தர மறுத்துவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Ampaarai_07_2013_07.jpg

அம்பாறை மாவட்டத்தில் இடம்பெயரவைக்கப்பட்டுள்ள தமிழர்கள்

தமிழர்கள் சிங்கள அரசாலும், அரசின் துணைராணுவக் குழுக்களாலும் திட்டமிட்ட ரீதியில் வாழ்வாதார அழிப்பிற்கும், புறக்கணிப்பிற்கும் உட்பட்டு அவதிப்பட்டுவரும் அதேவேளை இக்கிராமங்களுக்கு அப்பாலிருக்கும் சிங்கள முஸ்லீம் கிராமங்கள் அரசினாலும், முஸ்லீம் அமைச்சர்களினாலும் வெகுவாக அபிவிருத்தி செய்யப்பட்டுவருவதாகத் தெரிகிறது. இதற்குமேலதிகமாக பல கரையோரத் தமிழ்க் கிராமங்கள் அபிவிருத்தி எனும்பெயரில் சிங்களவர்களால் குடியேற்றப்பட்டு வருகின்றன என்றும் இப்பகுதி சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.


மத்திய முகாம் பகுதியில் வசிக்கும் தமிழர்கள் தமது அவலம் பற்றிக் கூறுகையில், முன்னர் 300 குடும்பங்கள் வாழ்ந்துவந்த இக்கிராமத்தில் தற்போது வெறும் 150 குடும்பங்கள் மட்டுமே வசிப்பதாகவும், தமது கிராமத்தின் ஒருபகுதியில் மற்றைய இரு இனங்களையும் சேர்ந்த குடும்பங்கள் அரசால் குடியேற்றப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Ampaarai_07_2013_08.jpg

அம்பாறை மாவட்டத்தில் இடம்பெயரவைக்கப்பட்டுள்ள தமிழர்கள்

Edited by ரஞ்சித்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பகுதிகளில் தற்போதைய நிலைமை எப்படியோ எனக்குத் தெரியாது. ஆனால், நிலைமை சுமூகமாகியிருக்கும் என்று நம்புவதற்கும் எந்தக் காரணமும் இல்லை. ஆகவே, இப்பகுதி மக்களுக்கான குறைந்தபட்சம் நன்னீர் வசதிகளையாவது புலம்பெயர் அமைப்புக்கள் செய்துகொடுத்தால் நல்லது. இதுபற்றி மேலதிகமாக தகவல் தெரிந்தோர் பரிமாறலாம். ஆனால், செய்யப்படுவது அவசியம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துரோகத்தின் நாட்காட்டி : நாள் 29, ஆவணி 2013

ஐ நா மனிதவுரிமைக் கவுன்சில் ஆணையாளர் நவநீதம் பிள்ளையின் வருகைக்கெதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட துணை ராணுவக் குழுக்கள்

UN's navipillai meets tamils in srilanka 2013க்கான பட முடிவுகள்

திருகோணமலை மாவட்டத்தில் ராணுவ ஆக்கிரமிப்பினால் இடம்பெயர்ந்துவாழும் தமிழர்கள் தற்காலிகமாகத் தங்கியிருக்கும் முகாம்களுக்குச் சென்ற இலங்கை ராணுவமும் துணை ராணுவக் குழுவும் ஐ நா மனிதவுரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் வருகைதொடர்பாக கவனயீர்ப்பு நிகழ்வுகளில் எவரையும் பங்குகொள்ளவேண்டாம் என்றும், அவ்வாறு பங்குகொண்டால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று மிரட்டியுள்ளதாக தெரிகிறது.

இதேவேளை, நவிப்பிள்ளை தமிழ் மக்களுடன் கலந்துரையாடும் எந்த நிகழ்வினையும் வெளியிடக் கூடாது என்று தீர்மானித்துள்ள அரசு, உள்ளூர் பத்திரிக்கையாளர்கள் இந்தக் கலந்துரையாடல்கள் பற்றிய செய்திகளைச் சேகரிப்பதனை பொலீஸாரைக் கொண்டு தடுத்திருக்கிறது.

இது இவ்வாறிருக்க, ராணுவ புலநாய்வுத்துறையினரால இயக்கப்படும் பிள்ளையான் மற்றும் கருணா கொலைக்குழுக்களை சேர்ந்தவர்கள் ஐ நா ஆணையாளரின் வருகையினையொட்டி ஆர்ப்பாட்டம் ஒன்றினை ஒழுங்குசெய்திருக்கிறார்கள். புலிகள் பயங்கரவாதிகள் என்றும், அவர்களே தமிழர்களுக்கு இதுவரை பிரச்சினையாக இருந்தார்கள் என்றும், அரசு தமிழர்களைக் காத்து வருகிறதென்று எழுதப்பட்ட பதாதைகளை இத் துணைராணுவக் குழுவினர் தாங்கிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. 

துணைராணுவக் குழுக்களுக்கு பக்கதுணையாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட சிகல உறுமய மற்றும் மக்கள் விடுததலை முன்னணி ஆதரவாளர்கள் பொய்யான சாட்சிகளை திருகோணமலை செயலகத்திற்கு அழைத்துவந்து நவிப்பிள்ளையின் முன்னால் புலிகளால் பாதிக்கப்பட்டவர்கள் என்று ஆர்ப்பாட்ட நாடகம் ஒன்றினை நடத்தியதாகவும் தெரியவருகிறது.

protests against UN's navipillai in srilanka 2013க்கான பட முடிவுகள்

ராணுவத்தினரினதும், கருணா பிள்ளையான் கொலைக்குழுக்களினதும் அச்சமூட்டும் மிரட்டல்களுக்கு மத்தியிலும்கூட சில தமிழர்கள் ஆங்காங்கே கவனயீர்ப்பு நிகழ்வுகளில் கலந்துகொண்டதுடன், காணாமற்போனவர்களுக்கான நீதிவழங்கல், அத்துமீறிய அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்கள்  மற்றும் மீள்குடியேற்றம் பற்றி பேசியதாகவும் தெரிகிறது.

நவிப்பிள்ளையின் வருகையினையொட்டி முஸ்லீம்கள் பெரியளவில் கவனயீர்ப்பு நிகழ்வுகளில் பங்கெடுத்திருக்கவில்லையென்று தெரிகிறது.


சம்பூர் பகுதியிலிருந்து ராணுவத்தால் விரட்டப்பட்ட அகதிகள் தங்கியிருந்த  கிளிவெட்டி தங்கு முகாம் மற்றும் நாவலடி, வெருகல் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த முகாம்களில் வாழும் இடம்பெயர்ந்த தமிழர்களையும் சந்தித்ததாகத் தெரியவருகிறது.

UN's navipillai meets tamils in sri lanka 2013க்கான பட முடிவுகள்

ஆணையாளரைச் சந்தித்த தமிழ் சமூக அமைப்புக்கள் தமிழர் தாயகத்தில் திட்டமிட்ட முறையில் அழிக்கப்பட்ட சைவக் கோயில்கள், சிங்களமயமாக்கப்படும் தமிழர் தாயகம், மீள்குடியேற்றத்தில் புறக்கணிக்கப்படும் தமிழர்கள், அகதிமுகாம்களின் இன்றைய அவலநிலை என்பன பற்றிய விரிவான அறிக்கையொன்றினைச் சமர்ப்பித்ததாகத் தெரியவருகிறது.

UN's navipillai meets tamils in sri lanka 2013க்கான பட முடிவுகள்

இதேவேளை, கடந்த 2 அல்லது 3 வருடங்களாக தமிழர்களுக்கு வழங்கப்படாது தடுத்து வைக்கப்பட்டிருந்த உலர் உணவுப்பொருட்களுக்கான அட்டைகளை அரச அதிகாரிகள் அவசர அவசரமாக வழங்கியதைக் காணமுடிந்தது என்று உள்ளூர் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், ஆணையாளரின் வருகையினையொட்டி, இதுவரை காலமும் அகதிமுகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 400 தமிழர்களை ராணுவம்  அவசர அவசரமாக கூனித்தீவில் அடிப்படை வசதிகள் ஏதுமற்ற நிலையில் குடியேற்றியிருப்பதாகவும் தெரிகிறது. 

சிங்கள ஆக்கிரமிப்பு அரசாங்கத்தின் கிழக்கு மாகாண ஆளுனர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் மொஹான் ஜயவிக்கிரம மற்றும் திருகோணமலை அரச அதிபர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் டி டி ஆர் டி சில்வா ஆகியோர் ஆணையாளருடன் மேற்கொண்ட சந்திப்புக்களை உள்ளூர்பத்திரிக்கையாளர்கள் பார்வையிடுவதற்கு பொலீஸார் அனுமதிக்கவில்லை.

இலங்கை ராணுவத்தின் முன்னாள் அதிகாரிகளுடனான நவிப்பிள்ளையின் சந்திப்பிற்கு மட்டக்களப்பு அம்பாறை ஆகிய மாவட்டங்களின் அரச அதிபர்களும் அழைக்கப்பட்டிருந்தார்கள். 
 

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.