Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

1953க்கு பின்னர் முதல்தடவையாக அமெரிக்காவில் பெண்ணொருவருக்கு மரணதண்டனை நிறைவேற்றம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1953க்கு பின்னர் முதல்தடவையாக அமெரிக்காவில் பெண்ணொருவருக்கு மரணதண்டனை நிறைவேற்றம்

அமெரிக்காவின் மரணதண்டனை விதிக்கப்பட்டஒரேயொரு பெண் குற்றவாளிக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
லிசா மொன்ட்கொமேரி என்ற பெண்ணிற்கே அதிகாரிகள் மரணதண்டனையை நிறைவேற்றியுள்ளனர்.

lisa.jpg
இந்தியானாவில் உள்ள சிறையொன்றில் விசஊசி ஏற்றி லிசா மொன்ட்கொமேரிக்கு அதிகாரிகள் மரணதண்டனையை நிறைவேற்றியுள்ளனர்.
மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கான தடையை நீதிமன்றம் நீக்கியதை தொடர்ந்து அதிகாரிகள் மரணதண்டனையை நிறைவேற்றியுள்ளனர்.
குறிப்பிட்ட பெண் சித்தசுவாதீனமற்றவர் சிறுவயதில் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்பட்டவர் என அவரது சட்டத்தரணிகள் வாதிட்டுவந்ததன் காரணமாக இந்த விவகாரம் அமெரிக்காவினதும் உலகினதும் கவனத்தை ஈர்த்திருந்தது.
லிசா மொன்ட்கொமேரி 2014 இல் கர்ப்பணிப்பெண்ணொருவரை கொலை செய்த பின்னர் அவரது வயிற்றை வெட்டி குழந்தையை எடுத்துச்சென்றார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அவருக்கு நீதிமன்றம் மரணதண்டனை விதித்திருந்தது.
கர்ப்பிணிப்பெண் உயிரிழந்த போதிலும் அவரது குழந்தை காப்பாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மரணதண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் அவரிடம் இறுதி ஆசைகுறித்து கேள்வி எழுப்பியவேளை அவர் எதுவுமில்லை என தெரிவித்துள்ளார்.
இந்த மரணதண்டனையை நிறைவேற்றிய அனைவரும் அதற்காக வெட்கப்படவேண்டும் என மரணதண்டனை நிறைவேற்றப்பட்டவரின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

death-pena-300x169.jpg
சேதமடைந்த மற்றும் மருட்சியடைந்த பெண்ணை கொலைசெய்யும் வேட்கையில் இந்த அரசாங்கம் தீவிரமாகயிருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாகவும் பின்னர் நீதிபதியொருவரின் உத்தரவு காரணமாகவும் மரணதண்டனை நிறைவேற்றப்படுவது பிற்போடப்படப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
எனினும் உச்சநீதிமன்றம் தண்டனையை நிறைவேற்றுவதற்கு அனுமதியளித்தது.
குறிப்பிட்ட பெண் பிறக்கும்போதே மூளை பாதிப்புடன் பிறந்தவர் மரணதண்டனை நிறைவேற்றப்படுவதற்கு தகுதியற்ற உடல்நிலையை கொண்டவர் என அவரது சட்டத்தரணிகள் வாதிட்டனர்.
சிறுமியாகயிருந்தவேளை அவர் தொடர்ச்சியாக குடும்ப உறவினர்களால் துஸ்பிரயோகப்படுத்தப்பட்டார் என சட்டத்தரணிகள் வாதிட்டனர்.

 

Thinakkural.lk

 

 
  • கருத்துக்கள உறவுகள்

அவருக்கு மரணதண்டனை வழங்கப்பட்டுவிட்டது.

உண்மையில் தனக்கு நிகழப்போவது மரணம் என்பது கூட தெரியாத ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு பெண்.. இவருக்கு மரணதண்டனை கொடுத்து எதை சாதித்துவிட்டார்கள்.. இவரது சகோதரி கூட சிறுவயதில் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டவர் ஆனால் அவர் பின்பு வளர்ந்த இடத்தின் சூழ்நிலையால் பாதிப்பில் இருந்து ஓரளவிற்கேனும் மீள முடிந்தது என்றும் Lisaவிற்கு அப்படி அமையவில்லை என்பதுமட்டுமல்ல மேலும் துன்பங்களையே அனுபவித்தமையால் மனநிலை மோசமாக பாதிக்கப்பட்டுவிட்டது.. 

உலகில் எத்தனையோ கொடூரங்களை செய்தவர்கள் சுதந்திரமாக உலாவும் பொழுது இந்த மனநிலை பாதிக்கப்பட்டவருக்கு மரணதண்டனை கொடுத்தது எந்தவிதத்தில் நியாயம்? 

Sandra Babcock, from the Cornell Center on Death Penalty Worldwide, described Montgomery as “not the worst of the worst” but “the most broken of the broken”.

 

https://www.google.com.au/amp/s/amp.news.com.au/world/north-america/lisa-montgomery-first-woman-executed-on-federal-death-row-had-brain-injury/news-story/560c2aa8d2c7b870258571b10000368f

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையிலேயே அந்த பெண் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றால் தூக்கில் போட்டது கொடூரம் ..நான் அமெரிக்காவின் கோல் கேஸ்கள் பார்க்கிறானான் எத்தனையோ பேர் திட்டமிட்டு கொலை செய்து விட்டு 2,3 வருசத்தால் விடுவிக்கப்பட்டு இருக்கினம் ...எல்லாம் உந்த யூரிக்களின் முடிவில் தான் உள்ளது 
 

இவரை கர்ப்பம் தரித்து இருக்கும் போது இவரது தாயார் மிக அதிகளவில் மது குடித்தமையால் பிறக்கும் போதே பிரச்சனைகளுடன் பிறந்தவர். பதின்ம வயதில் உறவுக்கார இளைஞர்களின் மிக மோசமான கூட்டு பாலியல் சித்திரவதைகள் (பாலியல் வல்லுறவின் முடிவில் அவர்கள் இவர் மீது சிறு நீர் கழித்து விட்டுச் செல்வார்கள் எனும் அளவுக்கு) மட்டுமன்றி  இவரது தந்தை முறையானவரால் கூட பல நாட்களாக தொடர்ந்து பாலியல் வல்லுறவுக்குள்ளானவர். பின் இவரது step brother ஒருவரையே திருமணமும் முடித்து 3 அல்லது 4 பிள்ளைகளின் பின் விவாகரத்தாகி மீண்டும் மணம் முடித்தவர். 


முதல் கணவருடனான உறவில் மேலும் கர்ப்பம் தரிப்பதை தவிர்ப்பதற்கான சிகிச்சையை மேற்கொண்டு விட்டு பின்னர் இரண்டாம் கணவரை திருமணம் முடித்த பின் போலியாக தான் கர்ப்பம் தரித்து உள்ளதாக ஏமாற்றியுள்ளார். தான் கர்ப்பம் தரித்தது உண்மை எனக் காட்டுவதற்காகவே ஒன்லைனில் நண்பியான 23 வயது பெண்ணின் வயிற்றைக் கிழித்து குழந்தையை வெளியே எடுத்து அது தன் குழந்தை என்று காட்ட முனைந்து இருக்கின்றார். இரண்டு ஈமெயில்களை வைத்து அவ் 23 வயதுப் பெண்ணை ஏமாற்றியுள்ளார். ஒன்றில் நண்பியாகவும் இன்னொன்றின் மூலம் நாய்க்குட்டியை வாங்க விரும்பும் பெண்ணாகவும் தன்னை வெளிக்காட்டி ஈற்றில் நாய்க்குட்டி வாங்க வருகின்றேன் என்று ஏமாற்றியே அப் பெண்ணின் வீட்டை அடைந்து கொன்று உள்ளார்.

மனனிலை பாதிக்கப்பட்டவர்கள் கொலையை கோபத்தில் எல்லை மீறியும், உணர்ச்சி வேகத்திலும் கொலையை செய்பவர்களாகவே இருப்பார். இவர் கச்சிதமாக திட்டமிட்டு கொலையை செய்தமையால் கொலை செய்த போது மனநிலை பாதிக்கப்பட்டவராக அவரை கருத முடியாது என்பதால் மரண தண்டனை தீர்ப்பு கிடைத்தது.

இவரது தாயில் இருந்து, நெருங்கிய உறவுகள், தந்தை முறையானவர் என்று எல்லாரும் இவர் விடயத்தில் தவறு செய்துள்ளனர். மிக மோசனான குற்றங்களை இவர் மேல் புரிந்துள்ளனர். அதனடிப்படையில் இவரை அணுகி மரண தண்டனையை நிறைவேற்றாமல் விட்டு இருக்கலாம். எல்லாரும் செய்த தவறால் /குற்றங்களால் ஈற்றில் இரண்டு பெண்கள் வாழ்வை இழந்தும் ஒரு குழந்தை தன் தாயை கொடூரமாக இழந்தும் போயுள்ளனர். அந்த குற்றங்களை செய்வதர்கள் எந்த தண்டனையும் இன்றி சாதாரண வாழ்வு வாழ்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான்.. 

BBC இணையத்தளத்தில் வந்த கட்டுரையையும் அவரது தங்கை, வக்கீல் ஆகியோரின் பேட்டிகளையும் பார்த்தேன்.. மிக மிக கொடூரமான வாழ்க்கையை அனுபவித்திருக்கிறார்..

ஆனால் இந்த மாதிரி வன்முறைகளுக்கு உள்ளாகுபவர்கள், அந்த சூழ்நிலைகளிலிருந்து புனர்வாழ்வு, சீர்திருத்த நிலையங்களுக்கு சென்றாலும் மீண்டும் போக்கிடமோ அல்லது ஆதரவோ இல்லாத நிலையில் மீண்டும் அதே சூழலிற்குள் போகிறார்கள்.. 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.