Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மீறப்படும் மனித உரிமை மீறல்கள் - ஜெனீவா மாநாட்டில் இலங்கை மீது ஐ.நா உயர் ஆணையர் குற்றச்சாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மீறப்படும் மனித உரிமை மீறல்கள்" - ஜெனீவா மாநாட்டில் இலங்கை மீது ஐ.நா உயர் ஆணையர் குற்றச்சாட்டு

 
இலங்கை மனித உரிமை மீறல்

பட மூலாதாரம்,OHCHR

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து 12 ஆண்டுகள் கடந்த பிறகும் அங்கு பல இடங்களில் அப்பட்டமாக மனித உரிமைகள் மீறப்படுவதாக ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில் தீர்மானத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஜெனீவாவில் நடைபெற்று வரும் 46ஆவது மனித உரிமைகள் கவுன்சில் அமர்வில் புதன்கிழமை காணொளி வாயிலாக தனது அறிக்கை முடிவு குறித்தும் தீர்மான குறிப்பு பற்றியும் விளக்கினார் ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையர் மீஷெல் பேச்சலெட்.

"எனது அறிக்கை குறிப்பிடுவது போல, உள்நாட்டு யுத்தம் முடிந்த சுமார் 12 ஆண்டுகள் கடந்த பிறகும் கூட பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பது உறுதிப்படுத்தப்படவில்லை. கடந்த காலங்களில் நிலவிய அதே அடக்குமுறை, துன்புறுத்தல் போன்றவை தொடர்ந்திருக்கிறது," என்று மீஷெல் பேச்சலெட் கூறினார்.

2015ஆம் ஆண்டில், மனித உரிமை மீறல் நடக்காதவாறு பார்த்துக் கொள்வதாக உறுதிமொழி அளித்த பிறகும், தற்போதைய அரசு, அதன் முந்தைய ஆட்சியாளர்களை போலவே, உண்மையை கண்டறியவும் குற்றங்களுக்கு பொறுப்புடைமையாக்கும் நடவடிக்கையிலும் தோல்வி அடைந்தது.

மனித உரிமை

பட மூலாதாரம்,OHCHR

 
படக்குறிப்பு,

மீஷெல் பேச்சலெட்

போரில் உயிர் பிழைத்த ஆயிரக்கணக்கானோரின் வாழ்வு நிர்மூலமாகியிருக்கிறது. அதுமட்டுமின்றி அமைப்பு முறை, கட்டமைப்பு, கொள்கைகள், பணியாளர்கள் போன்றவற்றில் முந்தைய காலம் போலவே விதிமீறல்கள் தொடருகின்றன.

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் முக்கியமான பணி, குறைகளுக்கு தீர்வு கண்டு முந்தைய விதிமீறல்கள் எதிர்காலத்தில் நடக்காதவாறு கவனிப்பதுதான்.

கடந்த ஆண்டு, முக்கிய பகுதிகளில் மிகக் கடுமையான வகையில் சங்கடத்தை தரக்கூடிய போக்கு தீவிரமாக இருப்பதை எமது அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

முந்தைய ஆண்டுகளில் வளர்ந்து வந்த சிவில் சமூகமும் ஊடக சுதந்திரமும் தற்போது வேகமாக சுருக்கி வருகின்றன. நீதித்துறை சுதந்திரம், இலங்கை மனித உரிமைகள் ஆணையம், தேசிய காவல் ஆணையம் ஆகியவை, சமீபத்தில் கொண்டு வரப்பட்ட 20ஆவது அரசியலமைப்பு திருத்தம் மூலம் பலவீனமாக்கப்பட்டுள்ளன.

முக்கியமான சிவில் நிர்வாக பணிகளில் அதிகரித்து வரும் ராணுவ தலையீடு, ஜனநாயக ஆளுகை மீதான ஆக்கிரமிப்பாக பார்க்கப்படுகிறது. பிரத்யேக சீர்திருத்தங்களை அமல்படுத்துவதில் காணப்படும் தொடர்ச்சியான தோல்வி அல்லது விதிமீறல்களுக்கு காரணமானவர்களை அடையாளம் காணாமல் இருப்பது, கொடூரமான குற்றங்கள் மற்றும் விதி மீறலில் குற்றம்சாட்டப்பட்ட ராணுவ அதிகாரிகளை பொறுப்புடைமைக்கு ஆளாக்காமல் விட்டுள்ளது அரசின் அலட்சியத்தை காட்டுகிறது.

தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மையினர், அரசின் உயர் பொறுப்புகள் உள்ளிட்ட பணிகளில் சேராத வகையில், அவர்கள் பிளவுபடுத்தக்கூடிய மற்றும் தவறான சொல்லாடல்களால் தவிர்க்கப்படுகிறார்கள்.

சிறுபான்மை சமூகங்கள் கவலை

கோவிட்-19 சடலங்கள் கட்டாயப்படுத்தப்பட்டு தகனம் செய்யப்படுவது முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவ சிறுபான்மை சமூகங்களுக்கு வலியையும் சங்கடத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வேறு வார்த்தைகளில் கூற வேண்டுமானால், நீண்ட கால அடிப்படையிலான அமைப்பு சார்ந்த பிரச்னைகள் இலங்கையில் தொடருகிறது.

கடந்த கால வன்முறைகள், இப்போதும் தொடரலாம் என்ற அபாய செய்தியின் அறிகுறி தெளிவாக தென்படுகிறது. அடுத்து வந்த அரசுகள், உண்மையையும் பொறுப்புடைமையையும் உறுதிப்படுத்துவதில் தோல்வி அடைந்து விட்டன. உண்மையில், மனித உரிமைகள் வழக்குகளில் அரசாங்கம் நீதி நடைமுறைகளுக்கு தடங்கலை ஏற்படுத்தியிருக்கிறது.

முந்தைய ஆணையங்களின் கண்டுபிடிப்புகளை மறுஆய்வு செய்வதற்காக கடந்த ஜனவரியில் அமைக்கப்பட்ட ஆணையம், அர்த்தமற்ற முடிவின்றி அதே பாணியை தொடர்ந்திருக்கிறது. ஆணையம் முன்பு வழங்கிய பரிந்துரையை அமல்படுத்தாதவண்ணம், உண்மையான முன்னேற்றத்தை தேசிய நடைமுறைகள் மூலம் செயல்படுத்தும் வாய்ப்பை அரசு மூடி விட்டது.

இதுபோன்ற காரணங்களால், புதிய வகையிலான பொறுப்புணர்வை உள்ளடக்கிய தீர்வை ஆராயவும் எதிர்காலத்தில் உறுப்பு நாடுகளில் நிலவும் மனித உரிமைகள் தொடர்பான விவகாரங்களை உறுதிப்படுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் வழிமுறைகளை கையாளவும் வலியுறுத்துகிறேன் என்று மீஷெல் பேச்சலெட் தெரிவித்தார்.

இலங்கை எதிர்வினை

இலங்கை

பட மூலாதாரம்,OHCHR

 
படக்குறிப்பு,

தினேஷ் குணவர்த்தன, இலங்கை வெளியுறவு அமைச்சர்

ஆனால், மீச்செல் பேச்சலெட்டின் குற்றச்சாட்டுகளை முற்றுலுமாக நிராகரிப்பதாக எதிர்வினையாற்றினார் இலங்கை வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன.

"உயர் ஆணையரின் அறிக்கையை இலங்கை அரசு நிராகரிக்கிறது. உறுப்பு நாட்டின் இறையாண்மை மற்றும் சுய மரியாதையை பாதிக்கக் கூடிய வகையில் இந்த அறிக்கை உள்ளது," என்று காணொளி வாயிலாக நிகழ்த்திய உரையில் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

நல்லிணக்கம், நீதி வழங்குதல் போன்ற நடவடிக்கையில் இலங்கை அரசு தொடர்ந்து ஈடுபாடு காட்டி வருகிறது. இதுநாள்வரை எந்த அடிப்படையில் இலங்கை மீதான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன என்பதற்கான ஆதாரங்களை கேட்டும் அது கிடைக்கவில்லை.

இலங்கை உள்விவகாரத்தில் ஒரு சில நாடுகளின் தன்னிச்சையான நடவடிக்கை ஏற்றுக் கொள்ள முடியாதது. மனித உரிமைகள் ஆணையரின் அறிக்கை, தவறான பிரசாரத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. எங்கள் அரசு மீதான குற்றச்சாட்டுகளை நாங்கள் முழுமையாக நிராகரிக்கிறோம்.

அறிக்கையில் உள்ள விவரங்கள், முழுமையாக ஆராயப்படாதவை. தீவிரவாத அமைப்பான விடுதலைப்புலிகள் இயக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் பற்றி அந்த அறிக்கையில் முழுமையாக பதிவாகவில்லை. முழுமையாக ஆராயப்படாமல் சமர்ப்பிக்கப்படும் அறிக்கை, அரசியல் உள்நோக்கத்துடன் கூடிய தீர்மானம் போன்றவற்றை மனித உரிமைகள் கவுன்சில் நிராகரிக்க வேண்டும்.

இந்த கவுன்சில் உள்பட ஐ,நாவுடன் சேர்ந்து மனித உரிமைகளை பாதுகாக்கும் நடவடிக்கையில் இலங்கை தொடர்ந்து ஈடுபாடு காட்டும் என்று இலங்கை அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து இந்த விவகாரம் மீதான விவாதம் வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

https://www.bbc.com/tamil/global-56190112?at_campaign=64&at_custom3=BBC+Tamil&at_custom1=[post+type]&at_medium=custom7&at_custom4=C31B1DF4-76D8-11EB-A843-643E3A982C1E&at_custom2=facebook_page&fbclid=IwAR30TwTW3167GCfY9gof74FE9kw-GCl-Uj942Hc5BDFPf9OagLKq1ZWKMns

  • கருத்துக்கள உறவுகள்

பச்லெட்டின் அறிக்கையினை  இலங்கை முற்றாக நிராகரிக்கிறது - தினேஷ் குணவர்தன

ரொபட் அன்டனி  

இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் விடுத்த அறிக்கையை அரசாங்கம் முழுமையாக நிராகரிக்கிறது.  இவ்வாறானதொரு அறிக்கையை வெளியிடுவதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கு எவ்விதமான அதிகாரமும் இல்லை.  இதனூடாக ஐ.நா. மனித உரிமை  சாசனம் மீறப்பட்டுள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் நேற்றைய அமர்வில் இலங்கை தொடர்பான மதிப்பீட்டு அறிக்கையை ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் மிச்சல் வெளியிட்டதை அடுத்து பதிலளித்து உரையாற்றும் சந்தர்ப்பத்தில் இலங்கையிலிருந்து இணையவழியில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அந்த உரையில் மேலும் குறிப்பிடுகையில்,

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் அறிக்கையானது, கடந்த ஆண்டு இந்த சபையின் 43வது அமர்வில் இலங்கை அரசாங்கம் இணை அனுசரணையிலிருந்து விலகுவதாக அறிவித்த தீர்மானம் 30/1 மற்றும் 40/1 ஆகியவற்றிலிருந்து வெளிவருகின்றது.

உயர் ஸ்தானிகரின் அறிக்கையை இலங்கை நிராகரிக்கின்றது. இது ஐ.நா. சாசனத்தின் 2 (7) வது பிரிவை முழுமையாக மீறும் செயலாகும்.   இலங்கைக்கு எதிராக இடைவிடாமல் தொடர்ந்த முன்கூட்டிய, அரசியல்மயப்படுத்தப்பட்ட மற்றும் பாரபட்சமற்ற சில கூறுகளின் நிகழ்ச்சி நிரலைப் பிரதிபலிக்கின்றது. இந்தப் பரிந்துரைகள் தவறான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அமைந்தவையாகும். 

உயர் ஸ்தானிகரின் அறிக்கையில் உள்ள முடிவுகளையும் பரிந்துரைகளையும் இலங்கை திட்டவட்டமாக நிராகரிக்கின்றது.

ஐ.நா. மற்றும் அதன் பொறிமுறைகளுடன் தொடர்ச்சியாகவும் ஆக்கபூர்வமாகவும் ஈடுபட்டு வரும் இலங்கை போன்ற ஒரு நாடு தொடர்பாக, சொத்து முடக்கம், பயணத் தடைகள், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தைப் பற்றிய குறிப்புக்கள்  சர்வதேச சமூகம் ஒட்டுமொத்தமாகக் கவனிக்க வேண்டிய ஒரு தனித்துவமான மற்றும் சிறந்த ஆபத்தை சுட்டிக்காட்டுகின்றது. 

அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தவறான தகவல்கள், தவறான கருத்துக்கள் மற்றும் தன்னிச்சையான மதிப்பீடுகள் குறித்து இலங்கை எழுத்துபூர்வ கருத்துக்களை வழங்கியுள்ளது. உயர் ஸ்தானிகர் அலுவலகம் தனது அறிக்கையை முன்னெப்போதும் இல்லாத பிரச்சாரத்துடன் இணைந்து வெளியிட்டமை மற்றும் குறித்த அறிக்கை தொடர்பான எமது கருத்துக்களை ஒரு துணை நிரலாக வெளியிட மறுத்தமை ஆகியன வருத்தமளிக்கின்றது.

இதுபோன்ற செயன்முறைகள் ஐ.நா. வின் அனைத்து உறுப்பு நாடுகளையும் பாதிக்கும் ஆபத்தான முன்னுதாரணத்தையும் அமைக்கும்.

 அரசியல் உந்துதல்களால் உந்தப்பட்டு, இந்த சபையால் இலங்கை மீது செலுத்தப்பட்டுள்ள கவனத்திற்காக நாங்கள் வருந்துகின்றோம். இந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்ட எந்தவொரு தீர்மானமும் சபையால் நிராகரிக்கப்பட்டு மூடப்பட வேண்டும்

அரசியலமைப்பிற்கு இணங்க, உள்நாட்டு முன்னுரிமைகள் மற்றும் கொள்கைகளுக்கு ஏற்ப ஆக்கபூர்வமாக இந்த ச சபையுடன் ஈடுபட  நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்றார்.  

பச்லெட்டின் அறிக்கையினை  இலங்கை முற்றாக நிராகரிக்கிறது - தினேஷ் குணவர்தன | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூற சிறீலங்கா பலமுறை தவறிவிட்டது- ஐ.நா

 
Capture-16.jpg
 71 Views

கடந்தகால மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூற சிறீலங்கா பலமுறை தவறிவிட்டது எனத் தெரிவித்த ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் மிச்சேல் பச்லெட், ஐ.நா பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் 30/1 தீர்மானத்தில் இருந்து விலகியதன் மூலம் முன்னேற்றத்துக்கான சாத்தியக் கூறுகளுக்கான வழிகளை இலங்கை அரசாங்கம் மூடிவிட்டது என்றும் கூறியுள்ளது.

மேலும் சிறீலங்காவில் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பான மதிப்பீட்டு அறிக்கையை இன்று ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அமர்வில் சமர்ப்பித்து பேசும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“சிறீலங்காவுடனான பேரவையின் ஈடுபாட்டிற்கான ஒரு முக்கிய சந்தர்ப்பமாகும். எனது முன்னைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டது போல ஆயுத மோதல் முடிவடைந்து கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப் பின்னரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை உறுதி செய்வதற்கும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்குமான உள்நாட்டு முயற்சிகள் பலமுறை தவறிவிட்டன.

2015 ஆம் ஆண்டில் பேரவையில் சிறீலங்கா சார்பில் சில உறுதிமொழிகள் வழங்கப்பட்டபோதிலும், தற்போதைய அரசாங்கம் உண்மையைக் கண்டறிதல் அல்லது பொறுப்புக்கூறல் செயல்முறைகளைத் தொடரத் தவறிவிட்டது.

சிறீலங்காவில் அனைத்து சமூகங்களிலும் போரில் பேரழிவுகளைச் சந்தித்துள்ளன. இந்நிலையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற கடுமையான விதி மீறல்களுக்கு வழிவகுத்த அமைப்புகள், கட்டமைப்புகள், கொள்கைகள் அவ்வாறே இன்னமும் உள்ளன. போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டவர்கள் அப்படியே இருக்கிறார்கள். சமீப காலங்களில் அவர்களில் இருப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

சிறீலங்காவில் சிவில் சமூகத்தினர் மற்றும் சுயாதீன ஊடகங்களுக்கான செயற்பாட்டு சுதந்திரம் கடந்த காலத்தில் ஓரளவுக்கு இருந்தபோதும் இப்போது அந்த சுதந்திரம் பறிக்கப்பட்டு வருகிறது.

அண்மையில் சிறீலங்காவில் நிறைவேற்றப்பட்ட 20-ஆவது திருத்தச் சட்டம் மூலம் நீதித்துறையின் சுயாதீனம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சிறீலங்காவின் மனித உரிமைகள் ஆணையம், தேசிய காவல் ஆணையம் மற்றும் பிற முக்கிய அமைப்புகளின் சுயாதீனத் தன்மையும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

சிவில் சமூக செயற்பாடுகள் வேகமாக இராணுவ மயப்படுத்தப்பட்டு வருவது ஜனநாயகத்தைக் கேள்விகுறியாக்கியுள்ளது.

தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மையினர் அரச உயர் மட்டத்தினரால் பாகுபாட்டுடன் கையாளப்படுகின்றனர். கோவிட்19 தொற்று நோயால் உயிரிழப்பவர்களை கட்டாயமாகத் தகனம் செய்யும் அரசின் கொள்கை சிறுபான்மை முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சமூகங்களிடையே வேதனையையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் நீண்டகால, கட்டமைப்பு மற்றும் அமைப்பு ரீதியான பிரச்சினைகள் தொடர்ந்து நீடிக்கின்றன.

இந்நிலையில் அங்கு கடந்தகாலங்களில் இடம்பெற்றதைப் போன்ற விதி மீறல்கள் முறைகள் மீண்டும் மீண்டும் நிகழக்கூடும் என்பதற்கான தெளிவான எச்சரிக்கை அறிகுறிகள் உள்ளன. அரசினால் அடுத்தடுத்து நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் உண்மையைக் கண்டறிந்து அதன் நம்பகத்தன்மையையும் பொறுப்புணர்வையும் உறுதி செய்வதற்கும் தவறிவிட்டன.

கடந்தகால மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூற சிறீலங்கா பலமுறை தவறிவிட்டது. அத்துடன் இந்தப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் 30/1 தீர்மானத்தில் இருந்து விலகியதன் மூலம் முன்னேற்றத்துக்கான சாத்தியக் கூறுகளுக்கான வழிகளை சிறீலங்கா அரசாங்கம் மூடிவிட்டது. இந்நிலையில் சிறீலங்காவில் பொறுப்புக் கூறல் பொறிமுறையை உறுதி செய்வதற்கான புதிய வழிகளை ஆராயுமாறு சர்வதேச மட்டத்தில் அனைத்து தரப்பினருக்கும் நான் அழைப்பு விடுக்கிறேன்.

அத்துடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான வழிகளைக் கண்டறியுமாறும் கோருகிறேன். மேலும் எதிர்கால பொறுப்புக்கூறலுக்கான ஆதாரங்களையும் தகவல்களையும் சேகரித்துப் பாதுகாப்பதற்கான பொறுப்பை வலியுறுத்துகிறேன்.

அத்துடன், பேரவை உறுப்பு நாடுகள் தங்கள் நாடுகளில் நீதித்துறை சார்ந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் நான் கோருகிறேன்.

சிறீலங்காவில், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் மற்றும் மனித உரிமை நிலைமைகளை தொடர்ந்து கண்காணிக்க எனது அலுவலகம் தயாராக உள்ளது”.

 

https://www.ilakku.org/?p=43144

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, உடையார் said:

கடந்தகால மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூற சிறீலங்கா பலமுறை தவறிவிட்டது. அத்துடன் இந்தப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் 30/1 தீர்மானத்தில் இருந்து விலகியதன் மூலம் முன்னேற்றத்துக்கான சாத்தியக் கூறுகளுக்கான வழிகளை சிறீலங்கா அரசாங்கம் மூடிவிட்டது. இந்நிலையில் சிறீலங்காவில் பொறுப்புக் கூறல் பொறிமுறையை உறுதி செய்வதற்கான புதிய வழிகளை ஆராயுமாறு சர்வதேச மட்டத்தில் அனைத்து தரப்பினருக்கும் நான் அழைப்பு விடுக்கிறேன்.

அத்துடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான வழிகளைக் கண்டறியுமாறும் கோருகிறேன். மேலும் எதிர்கால பொறுப்புக்கூறலுக்கான ஆதாரங்களையும் தகவல்களையும் சேகரித்துப் பாதுகாப்பதற்கான பொறுப்பை வலியுறுத்துகிறேன்.

அத்துடன், பேரவை உறுப்பு நாடுகள் தங்கள் நாடுகளில் நீதித்துறை சார்ந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் நான் கோருகிறேன்.

சிறீலங்காவில், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் மற்றும் மனித உரிமை நிலைமைகளை தொடர்ந்து கண்காணிக்க எனது அலுவலகம் தயாராக உள்ளது”.

எங்கள் வங்குரோத்துத்தனம் முற்றுமுழுதாக வெளிவந்துவிட்டது 
அது இலங்கைக்கும் தெரிந்து எங்கள்  மூஞ்சியிலேயே உச்சாவும் போய்விட்டார்கள் ,
இனி இங்கு வேலை மின்னட்டு குந்திக்கொண்டிருக்கும் லூசுகள் எல்லாம் உங்கடை,உங்கடை  நாடுகளுக்கு போய் உங்கடை அரிப்புக்களை தீர்த்துக்கொள்ளுங்கள். நாட்டிலிருக்கும் கூத்தாடிகளின் வால்கள் அடிக்கடி போராட்டம் நடை பவனி வைத்து (ஆதாரங்களை சேர்த்து) நீங்களும் இருப்பதாக காட்டிக்கொள்ளுங்கள்,
(காணாமல் போனோர் போராட்ட பேனரில் மூலையில் இருக்கும்  அந்த ஐ நா கொடி ரொம்ப முக்கியம்-அதற்கு சேதாரம் வராமல் பார்த்துக்கொள்ளுங்கோ  ) 
அடுத்த முறை fund ஒதுக்கினால் இதே வேலையை தொடர்ந்து செய்து எங்களது Peycheck இற்கு எந்த சேதாரமும் வராமல் பார்க்க வசதியாகஇருக்கும் .

அம்புட்டுதே நம்ம மிச்சலின் உள்ளடக்கம் 

Edited by அக்னியஷ்த்ரா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

154447911_10164428825790212_721571620308

153368196_10164428826205212_262501313030

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.