Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்க நாடு ஏழை நாடு மல்லி எப்ப வரும் மருந்து எமக்கு தம்பி-பா.உதயன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்


எங்க நாடு ஏழை நாடு மல்லி எப்ப வரும் மருந்து எமக்கு தம்பி-பா.உதயன்  😔
————————————————————————————————————
wealthy nations have purchased enough doses to vaccinate their entire populations.in the meantime poor countries are suffering to get their corona vaccine.Rich countries just 14% of the world population have bought 54% of the corona vaccines.they have enough vaccines for all.Rich countries have a moral obligation to help poor countries to get enough vaccines.If rich countries shares there will be enough vaccines for all world population.Pls save the poor people to.

நாலு காசு கையில் இல்லை தம்பி
நம்மை கொரோனா விட்டு 
போகுதில்லை தம்பி

எங்க நாடு ஏழை நாடு மல்லி
எப்ப வரும் பைசர் என்று சொல்லி 
இப்ப பைத்தியமே பிடிக்குது 
இந்த பைசர் மருந்தை நம்பி 

நம்ம நாட்டு வைத்தியத்தை தானே 
நாம இப்போ நம்பி இருக்கோம் தம்பி 
நாலு காசு கையில் இல்லை தம்பி
நம்ம அரசு என்ன செய்யும் மல்லி

புஞ்சி பண்டா தந்திருக்கார் மல்லி
ஏதோ புதுசாய் போத்தலில மருந்தாம் 
எங்க அமைச்சர் கூட வேண்டி குடிச்சு பார்த்தா 
அவோக்கு கூட கொரோனா இப்போ மல்லி

எல்லா சனமும் வேண்டி குடிச்சு பாத்தும் 
அந்த கொரோனா சிரிச்சு போட்டு 
போகுது எம்மை பார்த்து மல்லி
இந்த கொரோனா விட்டுத் 
தொலையவில்லை இன்னும்

ஐரோப்பா தந்த மருந்து தம்பி 
அதுகும் இப்போ பத்தாது மல்லி
இந்தியாவும் தந்திருக்கு தம்பி 
ஏதோ புண்ணியம் கிடைக்கும் என்று சொல்லி 
ஏதேன் பாத்து கீத்து செய்ய சொல்லும் தம்பி 
கொரோனாவை கொல்லுதென்று சொல்லி 
கொத்தமல்லியும் விலையாய் போச்சு மல்லி

உள்ளி இஞ்சி மல்லி என்று சொல்லி 
ஊர் முழுக்கு குடிக்கிறாங்கோ மல்லி
பணக்காரர் எல்லாம் இப்போ தம்பி 
பைசர் மருந்து கொடுத்திட்டான்கள் தம்பி

என்ன செய்யும் ஏழைச் சனம் தம்பி
எத்தனையோ ஏழை நாடு எல்லாம்  
ஏங்கி திரியுது இந்த மருந்துக்காக தம்பி 
எங்க நாடும் வங்குரோத்தில் எல்லோ
இருக்கும் காசைக் கூட சுனாமி போல 
சுரட்டிப் போட்டான் மல்லி
இந்த கொத்த மல்லி நம்பி தானே தம்பி
எங்க குடும்பம் எல்லாம் வாழுதிப்போ மல்லி

கொரோனா மட்டும் கொல்லவில்லை இங்கு 
கொடிய ஆட்சி கூட நடக்குது இங்கு தம்பி 
இறந்து போகும் மனிதருக்கு கூட 
புதைக்க கூட உரிமை இல்லை தம்பி 
இனத்துக்குள்ள ஐக்கியமும் இல்லை 
இனவாதம் கூடிப் போச்சு தம்பி 
இலங்கை ஆட்சியாளர் செய்த வினை தம்பி 

படிச்சவங்க எல்லாம் இப்போ தம்பி
பணத்துக்காக பதவிக்காக 
கதைக்கிறான்கள் தம்பி 
இனி இதைப் பேசி என்ன பலன் 
இவர்கள் எங்க திருந்த போறான் தம்பி 

எத்தனையோ மருந்து எல்லாம் வந்தும் 
காசுக்காரன் வேண்டிப் போட்டான் மல்லி
ஐரோப்பா அமெரிக்க லண்டன் கனடா என்று 
அவர்கள் எல்லாம்  பதுக்கிப் போட்டான்
மருந்தை எல்லாம் மல்லி 
ஏழைச் சனம் என்ன செய்யும் சொல்லும்

இன்று வந்த செய்தியிலும் பார்த்தோம் 
லட்ஷம் லட்ஷமாய் மருந்தை எல்லாம் வேண்டி 
பணக்காரர் தாங்க மட்டும் போடுறாங்கள் தம்பி 
இவங்கள் மட்டும் தப்ப நினைக்கிறாங்கோ 
இந்த கொரோனா விட்டுத் தொலையும் என்று சொல்லி 

எல்லா நாடும் சேர்ந்து ஒழிக்க வேண்டும் 
ஏதேன் எங்களுக்கும் தந்து உதவ சொல்லும்
எங்க மக்கள் என்ன செய்வர் தம்பி

இப்படியே எத்தனையோ ஏழை நாடு தம்பி 
பாவம் இந்த சனங்கள் எல்லாம் மல்லி
பார்க்க கூட ஆட்கள் இல்லை தம்பி
சமத்துவமே இல்லாத உலகம் இது தம்பி 
சரி வருமா இனியும் என்று 
தெரியவில்லை தம்பி .


இன்றைய நீதி சமத்துவம் இல்லா உலகு இது தான்.

பா.உதயன் ✍️

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கவிதை பகிர்விற்கு நன்றி தோழர்..👍

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல கவிதை உதயகுமார்.👍🏽

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.