Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்க பாராளுமன்றில் வாகன தாக்குதல்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க பாளுமன்றுக்குள் வாகனத்தை செலுத்த முயன்ற ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.இதன் போது ஒரு பொலிஸn உத்தியோகத்தர் கொல்லப்பட்டுள்ளார்.இன்னோரு உத்தியோகத்தர் காயமடைந்துள்ளார்.

மேலதிக தகவல்களுக்கு யாழுடன் இணைந்திருங்கள்.

வெள்ளிக்கிழமை பிற்பகல் கேபிடல் கட்டிடத்திற்கு வெளியே ஒரு சந்தேக நபர் ஒரு வாகனத்தை பொலிஸ் தடுப்புக்குள் மோதியதில் ஒரு அமெரிக்க கேபிடல் காவல்துறை அதிகாரி இறந்துவிட்டார், மற்றொருவர் காயமடைந்துள்ளார் என்று கேபிடல் காவல்துறைத் தலைவர் யோகானந்த பிட்மேன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தாக்குதலில் சந்தேகநபரும் இறந்துவிட்டார் என்று பிட்மேன் கூறினார். தாக்குதலுக்கு முன்னர் சந்தேகநபர் அமெரிக்க கேபிடல் காவல்துறையின் ரேடாரில் இல்லை, ஆனால் தாக்குதல் பயங்கரவாதத்துடன் தொடர்புடையதாகத் தெரியவில்லை என்று போலீசார் பிற்பகல் மாநாட்டில் தெரிவித்தனர். பிட்மேன் மேலும் கூறுகையில், இந்த காட்சி இன்னும் செயல்படுத்தப்பட்டு வருகிறது, மேலும் விசாரணை நடந்து வருகிறது. தொடர்ந்து அச்சுறுத்தல் இருப்பதாக எந்த அறிகுறியும் இல்லை என்று டிசி பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.அதிகாரியின் குடும்பத்தினருக்கு அறிவிக்கப்படும் வரை அதிகாரியின் பெயரை வெளியிட மாட்டேன் என்று பிட்மேன் கூறினார். காங்கிரஸின் மூத்த உதவியாளரும் அமெரிக்க கேபிடல் பொலிஸ் வட்டாரமும் சி.என்.என் பத்திரிகையிடம், வாகனத்தின் ஓட்டுநர் தனது காரை அரசியலமைப்பு அவென்யூவில் உள்ள ஒரு தடுப்பில் மோதிய பின்னர், ஓட்டுநர் கத்தியைக் கட்டிக்கொண்டு வாகனத்திலிருந்து வெளியேறினார். அதற்கு பதிலளித்த யு.எஸ்.சி.பி, சந்தேக நபரை சுட்டுக் கொன்றது.

 

CNN)One US Capitol Police officer has died and another is injured after a suspect rammed a vehicle into a police barricade outside the Capitol building Friday afternoon, acting Capitol Police Chief Yogananda Pittman told reporters.

Pittman said the suspect in the attack has also died. The suspect was not on the radar of the US Capitol Police before the attack, but the attack does not appear to be terrorism-related, police said in an afternoon briefing.
Pittman added that the scene is still being processed, and the investigation is ongoing. The DC Metropolitan Police said there is no indication of an ongoing threat. Pittman said she will not release the name of the officer until the officer's family is notified.
A senior congressional aide and a US Capitol Police source told CNN that after the driver of the vehicle rammed his car into a barricade on Constitution Avenue, the driver exited the vehicle brandishing a knife. USCP responded, shooting the suspect and taking him into custody.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமெரிக்காவும் பயங்கரவாத நாடாய் மாறிக்கொண்டு வருது.😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அமெரிக்காவும் பயங்கரவாத நாடாய் மாறிக்கொண்டு வருது.😁

அறுவடை செய்யத் தானே வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க நாடாளுமன்ற கட்டட தாக்குதல்: உயிரிழந்த அதிகாரிக்கு ஜனாதிபதி பைடன் இரங்கல்!

அமெரிக்க நாடாளுமன்ற கட்டட தாக்குதல்: உயிரிழந்த அதிகாரிக்கு ஜனாதிபதி பைடன் இரங்கல்!

அமெரிக்க நாடாளுமன்ற கட்டட தாக்குதலில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரிக்கு ஜனாதிபதி ஜோ பைடன் இரங்கல் வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘அமெரிக்காவின் கெபிடல் பகுதியில் பாதுகாப்பு சோதனை சாவடியில் நடந்த வன்முறை தாக்குதலில் பொலிஸ் அதிகாரி வில்லியம் இவான்ஸ் கொல்லப்பட்டும், சக அதிகாரி உயிருக்குப் போராடி வருகிறார் என்பது பற்றியும் அறிந்து ஜில் மற்றும் நான் மனமுடைந்து போனோம். வெள்ளை மாளிகை கொடிக் கம்பங்கள் அரை கம்பத்தில் பறக்க விடப்படும்’ என குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவில் நாடாளுமன்றம் அமைந்துள்ள கெபிடல் கட்டடத்திற்கு வெளியே காரில் வந்த மர்ம நபர் நடத்திய தாக்குதலில் பொலிஸ் அதிகாரியொருவர் உயிரிழந்தார்.

கெபிடல் கட்டடத்திற்கு வெளியே பாதுகாப்பு வளையம் அமைந்த பகுதியில் காரில் வந்த மர்ம நபர் ஒருவர் தடுப்பு பகுதியில் மோதியுள்ளார். இந்த சம்பவத்தில் 2 அதிகாரிகள் காயமடைந்தனர்.

அதனைத்தொடர்ந்து, காரில் இருந்து வெளியே வந்த மர்பநபர், அதிகாரிகளை கத்தியால் குத்தியுள்ளார். இதில் அதிகாரியொருவர் உயிரிழந்தார்.

இதனையடுத்து, குறித்த சந்தேகபர் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த சந்தேகநபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் 18 ஆண்டு கால பணி அனுபவம் கொண்ட பாதுகாப்பு அதிகாரியான வில்லியம் பில்லி இவான்ஸ் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

https://athavannews.com/2021/1207033

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க நாடாளுமன்றம் கேபிடல் கட்டிடத்தின் மீது தாக்குதல் பாதுகாப்பு அதிகாரி உயிரிழப்பு- ஜோ பிடன் அதிர்ச்சி

அமெரிக்க நாடாளுமன்றம்  கேபிடல் கட்டிடத்தின் மீது தாக்குதல் பாதுகாப்பு அதிகாரி உயிரிழப்பு- ஜோ பிடன் அதிர்ச்சி

 

வாஷிங்டன்

மர்ம நபர் ஒருவர் ஒட்டிவந்த கார் அமெரிக்க நாடாளுமன்றம் அமைந்துள்ள கேபிடல் கட்டிடத்தின் பாதுகாப்பு தடுப்புகளை உடைத்து கொண்டு உள்ளே புகுந்தது. காரில் இருந்து இறங்கிய மர்ம மனிதன் அங்கிருந்த பாதுகாவலரை கத்தியால் தாக்க முயன்றார். இதனால் பாதுகாவலர் சுட்டதில் மர்ம மனிதன் படுகாயம் அடைந்தார். 

உடனடியாக மர்ம மனிதன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிர் இழந்தார்.
இந்த தாக்குதலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. தாக்குதலில் ஈடுபட்ட நபரின் அடையாளங்களை பாதுகாப்புதுறை வெளியிடவில்லை. இந்த தாக்குதலில்  போலீஸ் அதிகாரி ஒருவரும் உயிரிழந்தார். மேலும் மற்றொரு போலீஸ் அதிகாரி படுகாயமடைந்துள்ளார்.

இதன் பின்னணியில் பயங்கரவாதிகளின் தொடர்புகள் ஏதும் இருப்பதாக தெரியவில்லையென வாஷிங்டன் பெருநகர காவல்துறைத் தலைவர் ராபர்ட் கான்டி தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி  ஜோ பிடன் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்க கேபிடல் போலீஸ் அதிகாரி வில்லியம் எவன்ஸை உயிர்த்தியாகம் செய்து உள்ளார்.  மேலும் ஒரு சக அதிகாரி தனது உயிருக்கு போராடிவருகிறார். அதிகாரி எவன்ஸின் குடும்பத்தினருக்கும், அவரை இழந்து வருந்தும்  அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த இரங்கலை  தெரிவித்து கொள்கிறோம்.கேபிடலில்  பணிபுரியும் அனைவருக்கும் இது ஒரு  கடினமான நேரம்  என்பது எனக்குத் தெரியும் என்று பிடன் கூறி உள்ளார்.

ஜனவரி 6ம் தேதி நடந்த கலவரத்தை அடுத்து நாடாளுமன்றத்தின் வடக்கு பகுதி பாதுகாப்பு அரண் அமைக்கப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தாலும், சமீபத்தில் நீக்கப்பட்டிருந்தது. தற்போது கார் மூலம் தாக்குதல் நடந்த நிலையில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

 

 https://www.dailythanthi.com/News/World/2021/04/03111045/US-President-Joe-Biden-heartbroken-over-deadly-attack.vpf

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.