Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்+

"தோற்றிடேல், மீறித் 

தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!"

-நன்னிச் சோழன்

 

  • எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…!

 

விடுதலைப்புலிகளின் வான்புலிகளிடம் இருந்த மொத்த வான்பொல்லங்களின் (airstrip) எண்ணிக்கை 9.

அவற்றின் அமைவிடங்கள் ஆவன,

 

1) பனிக்கன்குளம் வான்பொல்லம்

A9 சாலையின் மேற்குப் புறத்தில் அமைக்கப்பட்டிருந்தது.

  • கீல் கல்வீதிப்பாவு(Tarmacadam) நீளம்: 500m
  • கீல் கல்வீதிப்பாவு அகலம்: 50m

இந்த வான்பொல்லமானது நாற்சதுர வடிவிலான மணலாலான 5-6 அடி உயர மண்ணரணால் சூழப்பட்டிருந்தது. அந்த மண்ணரணின் வெளிப்புறத்தில் நீரற்ற அகழி இருந்தது. இதற்கான நுழைவுவாயில் எங்கிருந்தது என்பதை என்னால் அறியமுடியவில்லை. இதன் முதன்மை கீல் கல்வீதிப்பாவானது 'கூட்டல் (+)' வடிவிலிருந்தது. ஆனால் குறுக்காக செல்லும் ஓடுபாதை மிகவும் நீளம் குறைந்ததாக இருந்தது. தேவைப்படுபோது ஓடுபாதையின் மேல் உருமறைப்பிற்காக - வண்டுகளின் கண்ணில் மண்ணைத்தூவ - மணல் பரப்பப்படும். 

Panikkankulam airstrip, Sky Tigers, Tamileelam Air Force, Tamileelam.jpg

'வான்பொல்லத்தைக் காட்டும் வரைபடம்'

 

Panikkankulam.jpg

'மணலாலான 5- 6 அடி உயரமுள்ள மண்ணரணை அம்புக்குறி சுட்டுகிறது'

 

dvsd.jpg

'எதிரெதிர் திசையில் அமைந்திருந்த குறுக்காப் போகும் கீல் கல்வீதிப்பாவு. இது மிகவும் சிறியதாக உள்ளதைக் காண்க'

 

பனிக்கன்குளம் வான்பொல்லம்.png

'ஓடுபாதை மணலால் உருமறைக்கப்பட்டுள்ளதை கவனிக்குக'

 

 

2) நிவில் பகுதி வான்பொல்லம்

B-69 பூநகரி பரந்தன் சாலையில் உள்ள நிவில் பகுதியில் அமைக்கப்பட்டிருந்தது.

  • கீல் கல்வீதிப்பாவு நீளம்: 200m

இந்த வான்பொல்லமானது நாற்சதுர வடிவிலான வெள்ளை மணலாலான மண்ணரணால் சூழப்பட்டிருந்தது. அந்த மண்ணரணின் வெளிப்புறத்தில் நீருள்ள அகழி இருந்தது.  இதன் முதன்மை கீல் கல்வீதிபாவானது கூட்டல் வடிவில்லில்லாமல் நீட்டாக இருந்தது. தேவைப்படுபோது ஓடுபாதையின் மேல் உருமறைப்பிற்காக - வண்டுகளின் கண்ணில் மண்ணைத்தூவ - மணல் பரப்பப்படும். வெளிப்புறத்தில் ஆங்காங்கே பனங்கூடல்களும் வயல்வெளிகளும் இருந்தன.

Untitled.jpg

'வான்பொல்லத்தைக் காட்டும் வரைபடம்'

Nivil airstrip, Tamileelam Air Force, Sky Tigers.jpg

'வெள்ளை மணலாலான மண்ணரண்

நிவில் பகுதி வான்பொல்லம்..png

நிவில் பகுதி வான்பொல்லம்.w.png

கீல் கல்வீதிப்பாவு

 

 

3) அம்பகாமம் தென்கிழக்கு வான்பொல்லம்

இரணைமடுக் குளத்திற்கு தென்கிழக்கில் அம்பகாமத்தில் அமைக்கப்பட்டிருந்தது. இதன் முதன்மை கீல் கல்வீதிபாவானது கூட்டல் வடிவில்லில்லாமல் நீட்டாக இருந்தது. ஓடுபாதை அடவியால் சூழப்பட்டிருந்தது.

  • கீல் கல்வீதிப்பாவு நீளம்: வடக்கில் இருந்து கிழக்காக 350m
  • கீல் கல்வீதிப்பாவு அகலம்: 25m

 

அம்பகாமம் தென்கிழக்கு வான்பொல்லம்.png

 

4) கேப்பாப்புலவு வான்பொல்லம்

முள்ளியவளை நகரத்தின் மத்தியில் இருந்து 6.5 km மற்றும் முல்லைத்தீவு களப்பில் இருந்து தெற்காக 5 km தூரத்தில் அமைக்கப்பட்டிருந்தது. இதன் முதன்மை கீல் கல்வீதிபாவானது கூட்டல் வடிவில்லில்லாமல் நீட்டாக இருந்தது. ஓடுபாதை அடவியால் சூழப்பட்டிருந்தது.

1.5 கிமீ நீளத்திற்கு கல்வீதிபாவு போடப்பட்டிருந்தாலும் மேலும் 1கிமீ நீளம் அகட்டப்பட்டு துப்பரவு செய்யப்பட்டிருந்தது, கல்வீதிப்பாவு போடுவதற்கு. 

மொத்த நீளம்: 2.5km

  • கீல் கல்வீதிப்பாவு நீளம்: 1.5km
  • கீல் கல்வீதிப்பாவு அகலம்: 100m

கேப்பாப்புலவு வான்பொல்லம்.png

 

iranaimadu fake airport of the Tamil Eelam Airforce (1).jpg

"2011 ஆண்டு கால செய்மதிப் படம். இக்கால கட்டத்தில் எடுக்கப்பட்ட இப் படிமமானது புலிகளால் இறுதியாகக் கைவிடப்பட்ட நிலையில் இருந்த கீல் கல்வீதிப்பாவினதாகும்."

 

iranaimadu fake airport of the Tamil Eelam Airforce (2).jpg

"2011 ஆண்டு கால செய்மதிப் படம். இக்கால கட்டத்தில் எடுக்கப்பட்ட இப் படிமமானது புலிகளால் இறுதியாகக் கைவிடப்பட்ட நிலையில் இருந்த கீல் கல்வீதிப்பாவினதாகும்."

 

இவ்வான்பொல்லத்தில் வானூர்திகள் பாதுகாப்பாக நிறுத்தப்படுவதற்கு 2 பறவாடி(Hangar) அமைக்கப்பட்டிருந்தன.

  • பறவாடி:

கேப்பாப்புலவு வான்பொல்லம்2.png

கேப்பாப்புலவு வான்பொல்லம்23.png

  • பறவாடி உட்புறம்:

கேப்பாப்புலவு வான்பொல்லம்34.png

 

பறவாடியின் உறுப்புகளை விளக்கும் விளக்கப்படம்:

கேப்பாப்புலவு வான்பொல்லம்4.png

படிமப்புரவு: dossier on ltte weapons. pdf

 

 

main-qimg-b9ba1010769be229af2d50d1e0b7eba4.png

main-qimg-8146cd3e7f196ee3759ac8636b3ab928.png

main-qimg-e9528d333d4ba53f1f47127d33c72ba4.png

மேலுள்ள 4 வான்பொல்லங்கள் நிலவரைபடத்தில் காட்டப்பட்டுள்ளன.

 

5) அம்பகாமம் கிழக்கு வான்பொல்லம்

இரணைமடுக் குளத்திற்கு கிழக்கில் அம்பகாமத்தில் அமைக்கப்பட்டிருந்தது. ஓடுபாதை அடவியால் சூழப்பட்டிருந்தது.

  • மொத்த நீளம்: 1.2km
  • கீல் கல்வீதிப்பாவு நீளம்: 1.2km
  • கீல் கல்வீதிப்பாவு அகலம்: 50m
  • கட்டப்பட்டது: 2002-2003 ஆம் ஆண்டு. ஆனால் தொடர் சிங்கள வான்படையின் குண்டுவீச்சால் இது புதுபிக்கப்பட்டுக்கொண்டே வரப்பட்டது. இது சிங்களவரை ஏமாற்றுவதற்காக கட்டப்பட்டதாகும்.

ltte iranaimadu airstrip.jpg

"2003-2004 ஆண்டு கால செய்மதிப் படம்"

 

6) அம்பகாமம் வடகிழக்கு வான்பொல்லம்

இரணைமடுக் குளத்தின் வடகிழக்கில் அம்பகாமத்தில் அமைக்கப்பட்டிருந்தது. இதன் முதன்மை கீல் கல்வீதிப்பாவானது 'கூட்டல் (+)' வடிவிலிருந்தது. ஆனால் குறுக்காக செல்லும் ஓடுபாதை மிகவும் நீளம் குறைந்ததாக இருந்தது. தேவைப்படுபோது ஓடுபாதையின் மேல் உருமறைப்பிற்காக - வண்டுகளின் கண்ணில் மண்ணைத்தூவ - மணல் பரப்பப்படும்.

  • கீல் கல்வீதிப்பாவு நீளம்: 300m

அம்பகாமம் வடகிழக்கு வான்பொல்லம்.png

அம்பகாமம் வடகிழக்கு வான்பொல்லம்2.png

அம்பகாமம் வடகிழக்கு வான்பொல்லம்4.png

 

7) பிரபந்தனாறு வான்பொல்லம்

  • மொத்த நீளம்: 2km
  • கீல் கல்வீதிப்பாவு நீளம்: 350m
  • கீல் கல்வீதிப்பாவு அகலம்: 50m

இது நாற்சதுர வடிவிலான மண்ணாலான மண்ணரணால் சூழப்பட்டிருந்தது. அம்மண்ணரணில் ஆங்காங்கே காவலரண்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதன் முதன்மை கீல் கல்வீதிபாவானது கூட்டல் வடிவில்லில்லாமல் நீட்டாக இருந்தது. தேவைப்படுபோது ஓடுபாதையின் மேல் உருமறைப்பிற்காக - வண்டுகளின் கண்ணில் மண்ணைத்தூவ - மணல் பரப்பப்படும். ஓடுபாதையிலிருந்து மண்ணரண் வரை புற்றரையும் அதற்கு வெளியே சூழ்ந்ததுவாக அடவியும் இருந்தது.

பிரபந்தனாறு வான்பொல்லம்.png

 

main-qimg-2ee3466806993424a65073bdc83f8f72.png

மேலுள்ள எஞ்சிய 3 வான்பொல்லங்களும் நிலவரைபடத்தில் காட்டப்பட்டுள்ளன.

 


  • பிற்சேர்க்கை (08/12/2020):

மேலும் இரண்டு வான் பொல்லங்கள்(air strips) புலிகளின் வான்புலிகளிடம் இருந்ததாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.. இவை எதையும் சிறீலங்கா இராணுவம் கைப்பற்றும் வரை கண்டு குண்டு வீசவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். அவையாவன..

8 )புத்துவெட்டுவான் கிழக்கு வான்பொல்லம் 

இது வான்பயிற்சிக் கூடமாக இருந்தது.

  • கீல் கலவீதிப்பாவு நீளம்: 800 m
  • கீல் கல்வீதிப்பாவு அகலம்: 50 m

9)மன்னகண்டல் மேற்கு வான்பொல்லம்

இது புதுக்குடியிருப்பு முத்தையன்கட்டு வீதியில் மன்னகண்டல் மேற்குப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்தது.

  • கீல் கல்வீதிப்பாவு நீளம்: 650 m
  • கீல் கல்வீதிப்பாவு அகலம்: 35 m

 


இவற்றில் வான்புலிகளின் தளமாக இயங்கியது இரண்டுதான். மீதி அனைத்தும் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு சில வான் பயிற்சிகளை மேற்கொள்ளவும் எதிரிகளை ஏமாற்றவும் வடிவமைக்கப்பட்டவை. இதில் சிறப்பு என்னவென்றால் இறுதிவரை இலங்கை படைத்துறை உண்மையான வான்பொல்லத்தை அடையாளம் கண்டு தாக்குதல்தல் நடத்தவே இல்லை! அத்தனை சிறப்பாக உருமறைக்கப்பட்டிருந்தன.

--> முன்னாள் விடுதலைப் போராட்ட வீரர்


"வானூர்திகள்... ஓட்டி வந்த
வீரர்களைப் பார்த்துப் பார்த்து...
விசிலடித்து... ஆடுகிறோம்...
மாலைகளைக் கழுத்தில் போட்டு"

--குத்தாட்டம் போடுடா பாடலிலிருந்து.

---------------------------------------------

உசாத்துணை:

படிமப்புரவு(Image courtesy)

நிகழ்படம்(video)

ஆக்கம் & வெளியீடு

நன்னிச் சோழன்

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+
12 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

நன்றி.. அருமையான ஆவணககாப்பு...

நன்றி ஓணாண்டியாரே... 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

அம்பகாமம் கிழக்கு வான்பொல்லத்தில் புலிகள் இறுதியாக அமைத்திருந்த கீல் கல்வீதிப்பாவின் செய்மதிப் படங்கள் (2011ம் ஆண்டளவில் எடுக்கப்பட்டவை) பதிவிடப்பட்டுள்ளன.

  • 4 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

புலிகளின் கட்டிமுடிக்கப்படாத பறவாடி (hanger)

பழைய யாழ்-கண்டி சாலையில், இரணைமடுவிற்கு கிழக்காக, இப்பறவாடி அமைந்திருந்ததாக சிறிலங்கா தரைப்படையினர் தெரிவித்திருந்தனர். எனினும் சரியான இடத்தை என்னால் அறியமுடியவில்லை.

இப்பறவாடியை நோக்குமிடத்தில் இது முற்றாக கட்டுமானம் முடிவுற்றிராத ஒரு பறவாடியாகவே தென்படுகிறது.

கட்டமைப்பு:

இதன் மூன்று பக்கங்களிற்கும் கடும்பச்சை நிற இரும்புக் கொள்கலன்கள் வைக்கப்பட்டு அதனுள் மண் நிரப்பபட்டிருந்தது, வெடிப்புக் காப்பிற்காக. ஆயினும் வலப்பக்கத்தில் இருந்த கொள்கலனொன்றைக் காணவில்லை.

மேற்புறத்திலும் வலுவான அரைவட்ட வடிவ இரும்புகள் போடப்பட்டுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றிருந்ததாக அறியக்கூடியதாகவுள்ளது, காணக்கிடைக்கூடிய ஆதரங்களின் அடிப்படையில்.

இதன் இரு இரும்புக் கதவுகளும் தனித்தனியாக வைக்கப்பட்டிருந்தன. அதில் ஒன்றை நோக்குமிடத்து, அதன் வடிவம் முற்றாக கட்டிமுடிக்கப்பட்டிருந்த கேப்பாப்புலவிலிருந்த பறவாடியுடன் ஒத்துப் போகிறது. இன்னும் சொல்லப்போனால் இந்த ஒட்டு மொத்த வடிவமும் கேப்பாப்புலவிலிருந்த பறவாடியைப் போலவே கட்டப்பட்டுக்கொண்டிருந்ததைக் நோக்க முடிகிறது.

படிம ஆக்குநர்: நன்னிச் சோழன், yarl.com | மூலப் படிமம்: 6640x4067 | குறிப்பு: பல படிமங்களை ஒன்றாக்கியே இதை உருவாக்கினேன், ஆவணத்திற்காக.large.ltteskytigersairforcehanger.jpg.8f

Edited by நன்னிச் சோழன்

  • நன்னிச் சோழன் changed the title to வான்புலிகளின் வான்பொல்லங்கள் (airstrips) அமைக்கப்பட்டிருந்த இடங்கள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.