-
Tell a friend
-
Topics
-
Posts
-
By ஏராளன் · பதியப்பட்டது
பட மூலாதாரம்,GETTY IMAGES/AFP கட்டுரை தகவல் எழுதியவர், எஸ்தர் கஹூம்பி பதவி, பிபிசி செய்திகள் 2 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க நீதித்துறை அதானி குழுமத்தின் மீது அண்மையில் முறைகேடு புகார்களை முன்வைத்தது. அதனைத் தொடர்ந்து கென்ய அரசு அதானி குழுமத்துடன் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்தது. ஆனால் அதற்கு முன்பாகவே, இந்த ஆண்டு ஜூலை மாதம் கென்ய மாணவர் ஒருவர் கென்ய அரசுக்கு அதானி குழுமம் வழங்கிய ஒப்பந்த முன்மொழிவு தொடர்பான தகவல்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்தார். இது அங்கே பெரும் பேசுபொருளாக மாறியது. கென்யாவைச் சேர்ந்த, தொழில்துறை தொடர்பாக படிக்கும் மாணவர் நெல்சன் அமென்யா தான் அந்த ஆவணங்களை வெளியே கசியவிட்டது. யார் அவர்? இதனால் ஏற்பட்ட சர்ச்சை என்ன? விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு. யார் அந்த மாணவர்? தனியார் நிறுவனங்களுக்கும் அரசிற்கும் இடையே கையெழுத்தாகும் ஒப்பந்தங்களில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுக்கும் மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவராக இருக்கிறார் நெல்சன் அமென்யா. கென்யாவின் சமீபத்திய வரலாறு. ஊழல் நடவடிக்கைகளால் உருவான பெரியபெரிய ஒப்பந்தங்களால் நிறைந்துள்ளது. இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பதைத் தடுக்க சட்டங்கள் இருந்தாலும், தொடர்ந்து இத்தகைய ஒப்பந்தங்கள் போடப்பட்டு வருகிறதா என்ற சந்தேகம் நிலவுகிறது. பிரான்ஸில் தற்போது எம்.பி.ஏ. படித்துக் கொண்டிருக்கும் 30 வயதான அமென்யா, இந்திய பன்னாட்டு நிறுவனமான அதானி குழுமத்திற்கும் கென்ய அரசுக்கும் இடையே முன்மொழியப்பட்டுள்ள ஒப்பந்தம் என்று சில ஆவணங்களை அவர் ஜூலை மாதம் சமூக வலைதளங்களில் பதிவு செய்தார். அதானி மீதான மோசடி வழக்கு: இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இலக்குகளை பாதிக்குமா? எப்படி? அதானியை அமெரிக்கா கைது செய்ய முடியுமா? மற்ற நாடுகளிலும் அதானி குழுமத்திற்கு சிக்கல் வருமா? அதானி ரூ.1750 கோடி லஞ்சம் கொடுத்தாரா? அமெரிக்கா குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது ஏன்? - முழு விவரம் இது அந்த நாட்டின் மிகப்பெரிய, அந்த பிராந்தியத்தின் மிகப்பெரிய விமான நிலையமான ஜோமோ கென்யாட்டா சர்வதேச விமான நிலையம் தொடர்புடையது. மறுசீரமைப்புப் பணிகளுக்காக பல காலமாக காத்துக் கொண்டிருக்கிறது அந்த விமான நிலையம். "இதனை முதன்முறையாக பார்த்த போது, மற்றொரு அரசாங்க ஒப்பந்தம் என்று தான் நினைத்தேன். அந்த விவகாரத்தின் தீவிரம் எனக்கு தெரியவில்லை," என்று பிபிசியிடம் தெரிவித்தார் அமென்யா. ஊழலுக்கு எதிரான செயற்பாட்டாளர்களில் ஒருவராக அவருடைய பிம்பம் உயர்ந்து வருகிறது. அடுத்த முப்பது ஆண்டுகளுக்கு ஜோமோ விமான நிலையத்தை புதுப்பித்து, நிர்வாகம் செய்வதற்கான குத்தகை ஒப்பந்த முன்மொழிவு அது. 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தத்தை அதானி குழுமம் முன்மொழிந்திருந்தது. தொடர்ந்து அந்த ஆவணங்களை பார்த்துக் கொண்டிருந்த போது, இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால், அது கென்யாவின் பொருளாதாரத்தை பாதிக்கும் என்பதை உணர்ந்ததாக அவர் தெரிவித்தார். அதேநேரத்தில் இந்திய பன்னாட்டு நிறுவனமே அனைத்துவிதமான லாபத்தையும் சம்பாதிக்கும் என்றும் அவர் உணர்ந்திருந்தார். இது ஒரு நியாயமான முன்மொழிவாக அவருக்கு தெரியவில்லை. அவர் அந்த ஆவணங்களில் குறிப்பிட்டிருந்ததை படித்த போது, அதிகமாக முதலீடு செய்தாலும் கூட, கென்யாவால் அதில் நிதிசார் லாபம் ஈட்ட முடியாத வகையில் அது இருந்ததாக கூறுகிறார் அமென்யா. அந்த ஆவணங்களின் உண்மைத்தன்மை குறித்து பேசிய போது, அது நிச்சயமாக உண்மையானது என்று கூற தனக்கு காரணங்கள் இருப்பதாக அவர் தெரிவிக்கிறார். "இந்த ஆவணங்கள் அரசின் அதிகாரப்பூர்வ துறைகளில் இருந்து எனக்கு கிடைத்தன," என்று அவர் தெரிவித்தார். கந்தஹார் விமான கடத்தல் - அந்த மோசமான 8 நாட்களால் பல ஆண்டுகளாக தொடரும் ஒரு மாற்றம் என்ன?4 மணி நேரங்களுக்கு முன்னர் இரான்: 'பாலியல் துன்புறுத்தல்கள் இங்கு சகஜம்', கட்டாய ஹிஜாபுக்கு எதிராக சிறை சென்ற பெண்ணின் கதை8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜோமோ விமான நிலைய ஊழியர்கள், அந்த திட்டம் கைவிடப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர் நான் கொஞ்சம் பயந்தேன் - அமென்யா அதானி குழுமம் இஸ்ரேல், அமீரகம், ஃபிரான்ஸ், தன்சானியா, ஆஸ்திரேலியா மற்றும் கிரீஸ் போன்ற நாடுகளில் , உள் கட்டுமானம், சுரங்கம் மற்றும் எரிசக்தி துறைகளில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் நிறுவனர் கௌதம் அதானி இந்தியாவின் முக்கிய தொழிலதிபராக திகழ்கிறார். இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு நெருக்கமானவராகவும் அவர் அறியப்படுகிறார். தன்னுடைய முதலீட்டை அதானி குழுமம் 30 ஆண்டுகளில் ஈட்ட முடியவில்லை என்றால், அந்த இழப்பை கென்யா ஈடுகட்ட வேண்டும் என்கிற வகையில் ஒப்பந்தம் இருப்பதை அமென்யா கண்டறிந்தார். "அதிபர், கென்ய விமானத்துறை, அமைச்சர் போன்றோர் மக்களின் நம்பிக்கைக்கு எதிராக செயல்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் மக்களை ஏமாற்றிவிட்டனர்," என்று அவர் குற்றம்சாட்டினார். தனது கையில் உரிய ஆவணங்கள் இருந்த போதிலும் அடுத்து செய்வதறியாது தடுமாறினார் அமென்யா. அவரின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருந்தது. கென்யாவில் ஊழலுக்கு எதிரான செயற்பாட்டாளர்கள் பலரும் கடந்த காலத்தில் தாக்கப்பட்டுள்ளனர். சிலர் கொல்லப்பட்டனர். "நான் கொஞ்சம் பயந்தேன். அடுத்து என்ன நடக்கும் என்று எனக்கு தெரியவில்லை. என்னுடைய பணியை, வாழ்க்கையை நான் பணயம் வைக்கிறேன். நான் அப்படி செய்ய வேண்டும்?" என்று தனக்கு தானே கேட்டுக் கொண்டதாக அவர் கூறுகிறார். இருப்பினும், இந்த விவகாரத்தில் அமைதியாக இருப்பது சரியல்ல என்று உணர்ந்திருக்கிறார். "கோழைகள் தான் நீண்ட காலம் வாழ்வார்கள் என்று உங்களுக்கு தெரியுமே" என்கிறார் அவர். அவருக்கு அனுப்பப்பட்ட ஆவணங்களை அவர் முழுமையாக ஆராய்ந்த பிறகு, அமென்யா அந்த ஆவணங்களை அவரின் எக்ஸ் பக்கத்தில் பதிவேற்றினார். அது கென்யாவில் பெரும் போராட்டத்திற்கு வழிவகை செய்தது. ஜோமோ விமான நிலைய ஊழியர்கள், அந்த திட்டம் கைவிடப்பட வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். 'வ.உ.சிக்காக நடந்த எழுச்சி குறித்த எந்த நினைவும் இப்போது இல்லை' சாகித்ய அகாடமி விருது வென்ற வேங்கடாசலபதி6 மணி நேரங்களுக்கு முன்னர் 'சிரியாவால் உலகிற்கு அச்சுறுத்தல் இல்லை' - கிளர்ச்சிக் குழுவின் தலைவர் அகமது அல்-ஷாரா பிபிசிக்கு பேட்டி19 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 30 ஆண்டுகள் ஜோமோ சர்வதேச விமான நிலையத்தை மேம்படுத்தி, நிர்வகிக்க அதானி குழுமம் திட்டமிட்டிருந்தது மக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் நடைபெறவில்லை "இதனை நான் என் நாட்டிற்கு செய்யும் கடமையாக நினைத்தேன். நான் என் நாட்டில் இருந்து தொலை தூரத்தில் இருந்தாலும் கூட, என் நாட்டிற்காக நான் ஆற்ற வேண்டிய கடமைகள் உள்ளன. நான் கென்யா முன்னேறிய நாடாக, ஊழலற்ற நாடாக, தொழில்மயமாக்கப்பட்ட நாடாக இருப்பதை நான் பார்க்க வேண்டும்" என்று பிபிசியிடம் கூறினார் அமென்யா. அடுத்து என்னவெல்லாம் நடக்கப் போகிறது என்பதற்கான சமிக்ஞை தானா இந்த விமான நிலைய ஒப்பந்தம் என்று தான் கவலைப்பட்டதாக அவர் தெரிவிக்கிறார். அதானி குழுமத்தின் ஒப்பந்தமானது வழக்கத்திற்கு மாறான விதிமுறைகளைக் கொண்டிருந்தது. வெளிப்படைத் தன்மை இல்லாமல் இருந்ததால் தான் அது ஒரு எச்சரிக்கையாக மாறியது. அதில் கென்யாவின் சட்டங்கள் முழுமையாக புறக்கணிக்கப்பட்டிருந்தது என்றும் குற்றம் சாட்டுகிறார் அமென்யா. "இந்த அதிகாரிகள், அதானி குழுமம் தொடர்பாக முழுமையாக விசாரணை மேற்கொள்ளவில்லை. கொள்முதல் செயல்முறைகளையும் அவர்கள் முறையாக பின்பற்றவில்லை." வரி செலுத்துவோரின் பணம் தவறாக பயன்படுத்துவதை தடுக்க வகை செய்யும். பொது கருத்துக் கேட்பு கூட்டம் உட்பட சட்ட தேவைகளை, இந்த விவகாரத்தில் தவிர்த்துவிடலாம் என்று சில அரசு அதிகாரிகள் நம்பியதாகவும் குற்றம்சாட்டுகிறார் அவர். கென்ய விமான நிலைய ஆணையம் ஏப்ரல் மாதம் வெளியிட்ட அறிக்கையில் முன்மொழியப்பட்ட திட்டம் தொடர்பாக, பங்குதாரர்களுடன் ஆலோசிக்கும் திட்டம் ஏதும் இல்லை என்று குறிப்பிட்டிருந்தது. "இது ஏப்ரல் மாதத்தில் நடந்தது. ஜூலை மாதத்தில் நான் இந்த ஆவணங்களை வெளியிட்டேன். அந்த திட்டம் தொடர்பாக எந்த பொது கருத்துக் கேட்புக் கூட்டமும் நடைபெறவில்லை. அப்போது அந்த ஒப்பந்தம் கையெழுத்தாக ஒரே ஒரு மாதம் மட்டுமே இடைவெளி இருந்தது," என்கிறார் அமென்யா. "நான் இந்த ஆவணங்களை வெளியிட்டவுடன், அவசர அவசரமாக போலியாக மக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் ஒன்றை நடத்த முயன்றனர். அவர்கள் கென்ய விமான நிலைய ஆணையத்தின் ஊழியர்கள் மற்றும் பங்குதாரர்களை அழைத்து ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தினர்," என்றார் அவர். அதானி குழுமம் கூறியது என்ன? கென்யாவில் பல அரசு அதிகாரிகளும், அரசாங்கத்தின் பல்வேறு துறைகளும், இந்த ஒப்பந்த செயல்முறைகளில் முறைகேடு ஏதும் நடக்கவில்லை என்று கூறி குற்றச்சாட்டுகளை மறுக்கின்றன. அதானி குழுமத்தினரும் அமென்யாவின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று கூறுகிறது. "கென்யாவில் அரசு மற்றும் தனியார் துறை இடையிலான ஒப்பந்த விதிமுறைகளை பின்பற்றியே திட்டம் முன்மொழியப்பட்டது. உலக தரத்திலான விமான நிலையத்தை உருவாக்குவதும், பல வேலை வாய்ப்புகளை உருவாக்கி கென்ய பொருளாதாரத்தை குறிப்பிடத்தக்க வகையில் உயர்த்துவதுமே அதானி குழுமத்தின் நோக்கம்" என்று பிபிசியிடம் அதானி குழுமத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். ஆலோசனைகள் ஒப்பந்தமாக இறுதி வடிவம் பெறவில்லை என்பதால் அங்கே ஒப்பந்தம் ஏதும் கையெழுத்திடப்படவில்லை என்று அதானி குழுமம் கூறுகிறது. எரிசக்தி தொடர்பான மற்றொரு முன்மொழிவும் ஆலோசனை கட்டத்தில் தான் இருக்கிறது என்று நிறுவனம் கூறுகிறது. "குழுமத்தின் செயல்பாடுகள் மற்றும் முன்மொழிவுகளில் கென்ய சட்டங்களை மீறியதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை முழுமையாக நிராகரிக்கிறோம்," என்று அதானி குழுமம் கூறியது. இது தொடர்பாக அதானி குழுமம் வெளியிட்ட அறிக்கையில், "எங்களின் ஒவ்வொரு திட்டத்தையும், இணக்கம், வெளிப்படைத்தன்மை மற்றும் அந்தந்த நாடுகளின் சட்டதிட்டங்களை முழுமையாக பின்பற்றி அர்பணிப்புடன் நிர்வகிக்கின்றோம்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது . 404 ஏக்கருக்கு உரிமை கோரும் வக்ஃப் வாரியம், 2 மாதங்களாக போராடும் கிராமம் - கேரளாவில் என்ன நடக்கிறது? பிபிசி கள ஆய்வு5 மணி நேரங்களுக்கு முன்னர் கிசெல் பெலிகாட்: பாலியல் வன்புணர்வு செய்த 51 பேர் - முன்னாள் கணவருக்கு 20 ஆண்டுகள் சிறை19 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, எந்த சட்ட நடைமுறைகளையும் மீறவில்லை என்று கூறி குற்றச்சாட்டுகளை நிராகரிக்கிறது அதானி குழுமம் அமெரிக்காவின் பங்கு ஆனால் தன்னுடைய நிலைப்பாட்டை கென்ய அரசு மாற்றிக் கொள்வதற்கு அமென்யா மட்டும் காரணமில்லை. அமெரிக்க அதிகாரிகள் அதானி குழுமம் 250 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான முறைகேட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டை முன்வைத்த பிறகே கென்யா நடவடிக்கையைத் துவங்கியது. அதானி குழுமத்தின் பிரதிநிதிகள் அமெரிக்க அதிகாரிகள்முன் வைத்த குற்றச்சாட்டை ஆதாரமற்றவை என்று கூறி நிராகரித்தனர். கடந்த நவம்பர் மாதம், கென்ய அதிபர் வில்லியம் ரூட்டோ, அதானி குழுமத்துடனான இரண்டு திட்டங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். நாடாளுமன்றத்தில் பேசிய அவர், "முறைகேடு தொடர்பான மறுக்கமுடியாத ஆதாரங்கள் அல்லது நம்பிக்கைக்குரிய தகவல்கள் இருக்கின்ற போது, நான் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள தயங்கமாட்டேன்," என்று ரூட்டோ கூறினார். விசாரணை முகமைகள் மற்றும் நட்பு நாடுகள் வழங்கிய புதிய தகவல்களின் அடிப்படையில் இந்த முடிவு எட்டப்பட்டதாக ரூட்டோ அறிவித்ததை கென்ய மக்கள் கொண்டாடினார்கள். "இந்த அறிவிப்பு வந்த போது நான் வகுப்பில் இருந்தேன். இதை என்னால் நம்பவே முடியவில்லை," என்று அமென்யா கூறினார். "எனக்கு அழுகையே வந்துவிட்டது. நான் அவ்வளவு மகிழ்ச்சி அடைந்தேன்" என்று அவர் கூறினார். அவரை ஒரு ஹீரோவாக உணரவில்லை என்று கூறுகிறார். அவருக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பல குறுஞ்செய்திகள் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து குவிந்தன. இடது கை பேட்டர்களின் எதிரி: முரளிதரன், வார்னேவை விஞ்சி அஸ்வின் படைத்துள்ள சாதனை என்ன?18 டிசம்பர் 2024 ஒரே நாடு ஒரே தேர்தல்: சாமானியர்கள் மீது ஏற்படுத்தும் தாக்கம் என்ன? கூட்டாட்சிக்கு எதிரானதா?18 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்க அதிகாரிகள் அதானி குழுமம் 250 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான முறைகேட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தது அமென்யா என்ன செய்கிறார்? வகுப்பு முடிந்து நாற்பது நிமிடங்கள் கழித்து தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், "அடியோஸ் அதானி" என்ற புகழ்பெற்ற பதிவை பதிந்தார் அமென்யா. "அது ஒரு முக்கியமான தருணம்… நான் செய்த பணிகளுக்கு பலன் கிட்டியது" பல தனிப்பட்ட ரீதியிலான அழுத்தங்களை பல மாதங்கள் எதிர்கொண்ட பிறகே இந்த வெற்றியை உணர்ந்தேன். அதானியின் விமான நிலைய ஒப்பந்த ஆவணங்களை வெளியிட்ட பிறகு அதானி குழுமமும் கென்ய அரசியல்வாதி ஒருவரும் அமென்யா மீது மானநஷ்ட வழக்கை தொடுத்தனர். தொடர்ந்து இந்த தளத்தில் இயங்குவதா என்ற கேள்வியை அவருக்குள் அது எழுப்பியது. "அரசாங்கத்திடம் இருந்து ஒரு சிலர் என்னிடம் வந்தனர். அவர்கள் எனக்கு பணம் தரவும் முன்வந்தனர். ஆனால் அவர்கள் என்னிடம் வந்து, இந்த பணத்தை வாங்கிக் கொண்டு அரசாங்கத்திற்கு எதிராக போராடுவதை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்," என்று நினைவு கூறினார் அமென்யா. அதை நான் செய்திருந்தால் அது மிகப்பெரிய தவறாக இருந்திருக்கும். அது கென்ய மக்களை ஏமாற்றும் செயல் என்றார். "விமான நிலையம் தரம் உயர்த்தப்படுவதை தடுத்து நிறுத்தியவர்களை அவர்கள் கொண்டாடுவதை நான் பார்த்தேன். அவர்கள் ஹீரோக்களா? உங்கள் நாட்டில் விமான நிலையம் வர இருப்பதை தடுப்பதால் உங்களுக்கு என்ன கிடைக்கப் போகிறது?" என்று டிசம்பர் மாதம் பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற கென்ய அதிபர் வில்லியம் ரூட்டோ கூறினார். "அது எப்படி கட்டப்படும் என்பது பற்றி உங்களுக்கு ஒன்றும் தெரியாது. இந்த விமான நிலையத்தில் கால் வைக்காதவர்கள் தான் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களுக்கு எதையாவது எதிர்க்க வேண்டும்," என்றும் அவர் கூறினார். மற்றொரு புறம், அமென்யா இன்னும் மான நஷ்ட வழக்குகளை எதிர் கொண்டு வருகிறார். சட்ட உதவிகளுக்காக அவர் நிதி திரட்டிவருகிறார். கென்யாவில் அவருக்கு எதிர்காலம் இருக்குமா என்பது நிச்சயமற்றது என்றும் அவர் கூறினார். "உளவுத்துறைகளிடம் இருந்தும் அச்சுறுத்தல்கள் வந்தன. நான் செய்தது தொடர்பாக பலர் அங்கே கோபத்துடன் உள்ளனர் என்பதால் கென்ய மக்கள் நான் மீண்டும் அங்கே வர வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டனர்," என்று அமென்யா தெரிவிக்கிறார். நியாயமான செயலுக்காக என்ன விலை கொடுக்கவும் தயாராக இருப்பதாக கூறும் அமென்யா, "நம்மை காப்பாற்ற ஒருவர் வருவார் என்று நாம் காத்துக் கொண்டிருக்க தேவையில்லை" என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c7ve809gmlqo -
எங்கள் தவறுகளை அடையாளம் காணும்வரை பிறரை நாம் குற்றம் சொல்ல முடியாது.
-
மருந்து எப்போதோ ஆயத்தம் செய்யப்பட்டுவிட்டது. நோய்க்கூறு முற்றும்போது பாவிக்கப்படும். 😉
-
"வன்னியில் உள்ள தமிழ்ச்செல்வன், காஸ்ட்ரோ, பொட்டுஅம்மான், நியூயோர்க்கில் உள்ள உருத்திரகுமாரன் போன்றவர்கள் ஒஸ்லோவின் அனுசரணையுடன் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு எனக்கு எதிராக பிரபாகரனின் மனதில் தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்திவிட்டார்கள் என்று பாலசிங்கம் பதிலளித்தார். மேலும், இலங்கை இராணுவத்தை தோற்கடிக்க முடியும் என்றும் ராஜபக்சவுக்கு எதிராக உலகம் விடுதலை புலிகளை ஆதரிக்கும் என்றும் அவர்கள் தவறான விடயங்களை கூறி பிரபாகரனைநம்பவைத்தும் விட்டார்கள்." போராட்டத்தை அழித்தது வெளிநாடு வாழ் போலித் தமிழ்த் தேசிய வியாபாரிகள் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்படுகிறது.
-
By ஏராளன் · பதியப்பட்டது
21 DEC, 2024 | 05:21 PM மாவீரர் துயிலும் இல்லங்களில் அரசியல் தலையீடுகளுக்கு இடமளிக்கப் போவதில்லை என மாவீரர் போராளி குடும்ப நலன் காப்பகத்தின் ஏற்பாட்டுக் குழு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இன்று (21) மாவீரர் போராளி குடும்ப நலன் காப்பகத்தின் ஏற்பாட்டில் வடக்கு, கிழக்கு இணைந்த கலந்துரையாடல் நிகழ்வொன்று நடைபெற்றது. இதில் முன்னாள் போராளிகள், மாவீரர்களின் பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்துகொண்டனர். மூன்று மாவீரர்களின் தாய்மாரை மாவீரர் நாளன்று பொதுச்சுடர் ஏற்றுவதற்கு அழைத்துவரப்பட்ட பின்னர், அவமதித்து வெளியே அனுப்பிய சம்பவம் தொடர்பாக இதன்போது பேசப்பட்டது. இனி வரும் காலங்களில் மாவீரர்களின் பெற்றோர்கள் கௌரவிக்கப்படுதல், மாவீரர் துயிலும் இல்லங்களில் அரசியல் தலையீடின்றி மாவீரர் நினைவேந்தல் அனுஷ்டிப்பது மற்றும் மூன்று மாவீரர்களின் தாய்மாரை அவமதித்தமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இக்கலந்துரையாடல் கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து, மாவீரர் போராளி குடும்ப நலன் காப்பகத்தின் தலைவர் தேவராசா தீபன் ஊடக சந்திப்பொன்றை நடத்தினார். இதன்போது அவர், எதிர்வரும் காலத்தில் மாவீரர் நினைவேந்தல்களை தாம் பொறுப்பேற்று செய்வதாகவும் அதற்கேற்றவாறு தாம் நிர்வாகங்களை தெரிவு செய்து இனிவரும் காலங்களில் அரசியல் தலைவர்கள் இன்றி, முன்னாள் போராளிகள் தலைமைதாங்கி மாவீரர் நினைவேந்தலை நடத்தவுள்ளதாகவும் அதற்கு முன்னாயத்த கூட்டமாக இந்த கலந்துரையாடல் நடைபெற்றது எனவும் தெரிவித்தார். அரசியல்வாதிகள் யாரும் இந்த நிர்வாகத்தை எதிர்த்து செயற்பட்டால், அவற்றுக்கு முகங்கொடுத்து எமது பணிகளை திறம்பட நிறைவேற்றுவோம் எனவும் திட்டவட்டமாக கூறினார். https://www.virakesari.lk/article/201827
-
-
Our picks
-
"முதுமையில் தனிமை [Senior Isolation]"
kandiah Thillaivinayagalingam posted a topic in வாழும் புலம்,
"முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.-
- 4 replies
Picked By
மோகன், -
-
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
kandiah Thillaivinayagalingam posted a topic in மெய்யெனப் படுவது,
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!
“ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
-
- 4 replies
Picked By
மோகன், -
-
வேதத்தில் சாதி இருக்கிறதா?
narathar posted a topic in மெய்யெனப் படுவது,
இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.
ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.-
- 4 replies
Picked By
மோகன், -
-
மனவலி யாத்திரை.....!
shanthy posted a topic in கதை கதையாம்,
மனவலி யாத்திரை.....!
(19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)
அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.-
- 1 reply
Picked By
மோகன், -
-
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை
mooki posted a topic in சமூகச் சாளரம்,
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்
Friday, 16 February 2007
காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.-
- 20 replies
Picked By
மோகன், -
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.