Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

`நிமிட்ஸ்' போர்க்கப்பல் நாளை அதிகாலை சென்னை வருகிறது- 6 இடங்களில் சுற்றுச்சூழல் சோதனை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

`நிமிட்ஸ்' போர்க்கப்பல் நாளை அதிகாலை சென்னை வருகிறது- 6 இடங்களில் சுற்றுச்சூழல் சோதனை

சென்னை, ஜுலை. 1-

அமெரிக்காவின் மிகப் பிரமாண்டமான போர்க்கப்ப லான `நிமிட்ஸ்' சென்னை நோக்கி வந்து கொண்டிருக் கிறது. அணுசக்தியால் இயங் கும் இந்த கப்பல் 90 விமானங் களை சுமந்து வருகிறது. 4 ஏக்கர் பரப்பளவுக்கு பரந்து விரிந்துள்ள இந்த கப்பலில் இருந்து ஒரே நேரத்தில் 4 போர் விமானங்கள் கிளம்பிச் செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கப்பலில் அணு ஆயுதங்களும், நீண்ட தூரத்துக்கு பாய்ந்து செல்லும் ஏவுகணைகளும் இருக்கின்றன.இந்த கப்பலில் உள்ள அணு உலைகளில் இருந்து கதிர்வீச்சு அபாயம் ஏற்படலாம் என்று சர்ச்சை கிளம்பியது.

ஆனால் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளும், ஆய்வுகளும் செய்யப்பட்டிருப் பதால் நிமிட்ஸ் கப்பல் சென்னை வர மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

நிமிட்ஸ் கப்பல் இன்று பகல் சென்னையில் இருந்து சுமார் 100 மைல் தூரத்தில் வந்து கொண்டிருந்தது. நாளை (திங்கள்) அதிகாலை 6 மணிக்கு நிமிட்ஸ் சென்னை துறைமுகத்தில் இருந்து சுமார் 2 கடல் மைல் (3.7 கி.மீ.) தூரத்தில் கொண்டு வந்து நிறுத்தப்படும். நிமிட்ஸ் கப்ப லுக்கு துணையாக பிக்னி என்றொரு போர்க்கப்பலும் வருகிறது.

இந்த 2 கப்பல்களிலும் சேர்த்து 450 உயர் அதிகாரிகள் உள்பட சுமார் 6 ஆயிரம் வீரர்கள் உள்ளனர். இவர்கள் 5-ந்தேதி வரை சென்னையில் இருப்பார்கள். அப்போது சமூகசேவையில் ஈடுபடுவார் கள்.

சுற்றுலா செல்வதோடு, ஷாப்பிங் செல்லவும் அமெரிக்க வீரர்கள் அனும திக்கப்படுவார்கள். இதற்கான ஏற்பாடுகளை கடற்படை, சென்னை துறைமுக பொறுப் புக்கழகம் மற்றும் சென்னை போலீசார் ஒருங்கிணைந்து விரிவாக செய்துள்ளனர்.

அமெரிக்க வீரர்கள் நாளை முதல் 5-ந்தேதி வரை 4 நாட் களுக்கு சென்னையில் தங்கி இருப்பார்கள். மொத்தம் உள்ள 5450 வீரர்களில் சுமார் 2 ஆயிரம் வீரர்கள் சென்னை யில் உள்ள நட்சத்திர ஓட்டல் களிலும், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரிசார்ட்ஸ் களிலும் தங்க வைக்கப்படு வார்கள்.

3, 4-ந்தேதிகளில் அமெரிக்க வீரர்கள் பல்வேறு இடங் களுக்கு அழைத்து செல்லப் படுவார்கள். இந்திய கடற்கரை அதிகாரிகள் அவர்களுக்கு துணையாக செல்வார்கள். சென்னை போலீசின் அதிர டிப்படை வீரர்கள் அமெரிக்க கடற்படை வீரர்களுக்கு பாது காப்பு அளிப்பார்கள்.

ஜுலை 4-ந்தேதி அமெரிக்கா சுதந்திரம் பெற்ற தினமாகும். அன்றைய தினத் தன்று, சென்னையில் தங்கி இருக்கும் அமெரிக்க வீரர்கள் சுதந்திர தின கொண்டாட்டத் தில் ஈடுபடுவார்கள். இதற்கு தேவையான ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க வீரர்கள் எந் தெந்த பொழுதுபோக்கு மையங்களுக்கு அழைத்துச் செல் லப்படுவார்கள் என்பது அறிவிக்கப்படவில்லை. கிழக்கு கடற்கரைசாலை, மகாபலி புரம், கோவளம், காஞ்சீபுரம் ஆகிய இடங்களுக்கு அமெரிக்க வீரர்கள் செல்வார்கள்.

இதற்காக தனியார் சொகுசு ஆம்னி பஸ்கள் ஏற்பாடு செய் யப்பட்டுள்ளன. சென்னை யில் தங்கி புத்துணர்ச்சி பெறும் நோக்கத்தில் அமெரிக்க வீரர் கள் வருகின்றனர். எனவே அமெரிக்க வீரர்களை குதூ கலப்படுத்தும் வகையில் ஏராளமான விசேஷ ஏற்பாடு களை இந்திய கடற்படை செய்துள்ளது.

இதற்கிடையே நிமிட்ஸ் கப்பலில் இருந்து கதிர்வீச்சு அபாயம் எதுவும் இல்லை என்று திட்டவட்டமாக அறி விக்கப்பட்டுள்ளது. என்றாலும் நிமிட்ஸ் அணு கதிரியக்கம் பற்றிய சர்ச்சை எழுந்ததால் நிமிட்ஸ் கப்பல் சென்னையில் இருக்கும் 4 நாட்களும் அடுத் தடுத்து பாதுகாப்பு சோதனை களை நடத்த ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

6 இடங்களில் சோதனை மையம் உருவாக்கப்பட்டுள் ளது. நிமிட்ஸ் கப்பலில் இருந்து சுமார் 1 மைல் தொலைவில் இந்திய கடற்படை கப்பல் நிறுத்தப்பட்டு இருக்கும். இதில் ராணுவ ஆய்வு நிபுணர்கள் இருப்பார்கள். அவர்கள் அடிக்கடி நிமிட்ஸ் கப்பலை சுற்றி உள்ள கடல் நீரை சோதனை செய்து பார்ப்பார்கள்.

சென்னை துறைமுகத்தில் 3 சோதனைக்கூடங்கள் உருவாக் கப்பட்டு இருக்கிறது. அவர்கள் காற்று, தண்ணீரை பரிசோதித்து கதிர்வீச்சு ஏதேனும் உள்ளதா என்று உறுதி செய்வார்கள். இவை தவிர சென்னை கடலோரப் பகுதியில் 2 வேன்கள் ரோந்து சுற்றி வரும்.

அந்த 2 வேன்களிலும் நவீன ஆய்வுக்கூடம் உள்ளது. இந்த நடமாடும் வேன்கள் மூலமாக கடற்காற்று சோதித்து பார்க்கப்படும். நாளை காலை முதல் இந்த வேன்கள் சென்னை கடலோரத்தில் ரோந்து சுற்றி வரும்.

கதிர்வீச்சு சர்ச்சை எழுந் துள்ளதால் நிமிட்ஸ் கப்பலில் இருந்து பொருட்களை இறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதோடு இரவில் நகர்ந்து செல்லக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

நிமிட்ஸ் கப்பலை நாளை காலை முதல் சென்னை மக்கள் கடற்கரை பகுதியில் இருந்து பார்க்க முடியும்.

மாலைமலர்

மார்டின் சீன் நடித்த 'நிமிட்ஸ்' திரைப்படம் ஞாபகத்திற்கு வருகிறது.

இக்கப்பல் ஏன் சென்னைக்கு வருகிறது ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

The Final Countdown திரைப்படத்தின் நாயகனே இந்த கப்பல் தான்

  • கருத்துக்கள உறவுகள்

பெரும்பாலும் கதிர்வீச்சு வெளியேறுவதற்கான சாத்தியம் இல்லை என்றே சொல்லலாம். ஆனால் தற்செயலாக அமெரிக்காவிற்கு எதிரான அமைப்புக்கள் இந்தியாவில் வைத்துத் தாக்குதல் நடத்தினால் என்னாகுமே என்ற அச்சத்தில் தான் சமூக ஆர்வலர்களால் இப்பிரச்சனை எழுப்பப்பட்டிருக்கலாம்.

இருந்தாலும் கல்பாக்கம் அணுஉலை உற்பட்ட சில அணுஉலைகளைத் தமிழகத்தில் கொண்டிருக்கின்றபோது அதனால் ஏற்படும் பாதிப்புக்கள் பற்றியும் இச்சமூக ஆர்வலர்கள் சிந்திக்க வேண்டும். ஏதும் அதற்கு நடந்தால் பல லட்சம் தமிழர்களுக்குத் தான் ஆபத்து.

இது முற்றுமுழுதான சந்தர்பவாத எதிர்பே என க்ருத வேண்டி இருக்கின்றது துயவன் சொன்னமாதிரி கால்பாக்கம் அணுமின்னிலையத்தில் அக்கரை செலுத்தாத இவர்கள் இந்த கப்பலின் மீது அக்கறை செலுத்துவது வேடிக்கையானது.இதை அதிமுக தலைவர் சந்தர்பவாத அரசியல்வாதி ஜெயலலிதா எதிரிகிறார் ஆனால் அணுமின்னிலையத்தை எதிர்கவில்லை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சென்னை வந்தது நிமிட்ஸ்: கடும் எதிர்ப்பு

ஜூலை 02, 2007

சென்னை: பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் அமெரிக்க போர்க்கப்பலான யுஎஸ்எஸ் நிமிட்ஸ் இன்று காலை சென்னை வந்து சேர்ந்தது. சென்னை துறைமுகத்திலிருந்து மூன்றரை கடல் மைல் தொலைவில் அது நிறுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மிகப் பெரும் அணு சக்தியால் இயங்கும் போர்க் கப்பல்களில் ஒன்று யுஎஸ்எஸ் நிமிட்ஸ். ஓல்ட் சால்ட் என்ற செல்லப் பெயர் கொண்ட இந்தக் கப்பல் ஈராக் போரில் பெரும் பங்கு வகித்தது.

ussnimitzrt5.jpg

Shot at 2007-07-02

இந்தக் கப்பலை தளமாக பயன்படுத்தித்தான் ஈராக் மக்கள் மீது அமெரிக்க போர் விமானங்கள் குண்டு வீசித் தாக்கி அழித்தன. இக் கப்பலில் இரண்டு அணு உலைகள் உள்ளன.

இக்கப்பல் பல்வேறு நாடுளுக்கு சுற்றுலாவாக சென்று வருகிறது. அந்த வகையில் சென்னைக்கும் இக்கப்பல் வந்துள்ளது. ஆனால் அணு சக்தியுடன் கூடிய இந்தக் கப்பல் சென்னைக்கு வந்தால் சென்னை நகருக்கும், தென் மாநிலங்களுக்கும் பெரும் ஆபத்து ஏற்படும் என பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

ஆனால் இதை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி நிராகரித்தார். இக்கப்பலால் அணு கதிர்வீச்சு அபாயம் ஏதும் இல்லை என்று அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில் 6000 போர் வீரர்கள் மற்றும் ஊழியர்களுடன் நிமிட்ஸ் இன்று காலை சென்னைக்கு வந்து சேர்ந்தது. சென்னை துறைமுகத்திலிருந்து மூன்றரை கடல் மைல் தொலைவில் இக்கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது.

அங்கிருந்து ஊழியர்களை, இன்னொரு அமெரிக்க கப்பல் ஏற்றிக் கொண்டு சென்னை துறைமுகத்திற்குக் கொண்டு வரும். பின்னர் வருகிற 5ம் தேதி வரை சென்னையில் அவர்கள் தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள்.

சென்னை துறைமுகத்திலிருந்து நேராக அவர்கள் எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அங்கிருந்தது பல்வேறு பிரிவுகளாக பேருந்துகள் மூலம் சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களுக்கு செல்கிறார்கள்.

இதற்கிடையே, நிமிட்ஸ் கப்பலால் ஆபத்து ஏதும் உள்ளதா என்பதைக் கண்காணிக்கவும், இந்திய கடலியல் பகுதியை பாதுகாக்கும் நோக்கத்துடனும், இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஒரு போர்க் கப்பல் சென்னை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இக்கப்பல் நிமிட்ஸ் கப்பலைக் கண்காணித்தபடி இருக்கும். இதில், அணு சக்தித் துறையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் அடங்கிய குழு தங்கியுள்ளது.

நிமிட்ஸ் வருகையை எதிர்த்து இன்று சென்னை துறைமுகம் எதிரே இடது சாரிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம் செய்யவுள்ளன.

எந்த ஆபத்தும் இல்லை-நிமிட்ஸ் கேப்டன்

இதற்கிடையே நேற்று பத்திரிக்கையாளர்கள் நிமிட்ஸ் கப்பலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இலங்கை கடல் எல்லையில் நின்று கொண்டிருந்த நிமிட்ஸ் கப்பலுக்கு சிறிய கப்பல் மூலம் பத்திரிக்கையாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

அவர்களிடம் கப்பலின் கேப்டன் மைக்கேல் மெனசீர், கமாண்டர் ஜான் டெரன்ஸ் பிளாக், ஆகியோர் பேசினர். அவர்களிடம் கப்பலில் அணு ஆயுதங்கள் உள்ளதா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, இந்தக் கப்பல் மிகுந்த பாதுகாப்புடன் கூடியது.

57 ஆண்டுகளாக இது பயன்பாட்டில் உள்ளது. இதுவரை எந்த அசம்பாவிதமும் ஏற்பட்டதில்லை. இதனால் உங்களுக்கு (இந்தியாவுக்கு) எந்தவித ஆபத்தும் கிடையாது என்று உறுதியளிக்கிறோம் என்றனர்.

அணு ஆயுதங்கள் உள்ளதா என்று மீண்டும் செய்தியாளர்கள் கேட்டபோது, சில விஷயங்களை அவ்வளவு எளிதில் சொல்லி விட முடியாது என்று மழுப்பலாக அவர்கள் பதிலளித்தனர்.

http://thatstamil.oneindia.in/news/2007/07/02/nimitz.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'நிமிட்ஸ்' வீரர்கள் 'ஜாலி'க்கு துணை நடிகைகள்,

மாடல் அழகிகள் 'ஏற்பாடு'!!!

ஜூலை 03, 2007

சென்னை: சென்னை வந்துள்ள அமெரிக்க போர்க் கப்பல் நிமிட்ஸில் இடம் பெற்ற வீரர், வீராங்கனைகள், ஊழியர்கள் நேற்று ஆட்டோக்களில் ஏறி சென்னை நகரை வலம் வந்து சுற்றிப் பார்த்தனர்.

அவர்கள் சென்னையில் நட்சத்திர ஹோட்டல்களில் தங்கியிருந்து மாடல் அழகிகள், துணை நடிகைகளுடன் ஜாலியாக பொழுதைக் கழிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாம்.

அமெரிக்காவின் பிரமாண்ட அணு சக்தி போர்க் கப்பல் நிமிட்ஸ் சென்னைக்கு வந்துள்ளது. நேற்று காலை சென்னை வந்த நிமிட்ஸ், துறைமுகத்திலிருந்து மூன்றரை கடல் மைல் தொலைவில் நிமிட்ஸ் நிறுத்தப்பட்டுள்ளது.

அங்கிருந்து குட்டி கப்பல்கள் மூலம் நிமிட்ஸ் வீரர், வீராங்கனைகள், ஊழியர்கள் துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் அனைவரும் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்திற்குக் கொண்டு வரப்பட்டனர்.

அவர்களை சென்னை மாநகர காவல்துறை அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் சென்னை நகரம் குறித்து அமெரிக்க வீரர்களிடையே காவல்துறை சார்பில் சிற்றுரை நிகழ்த்தப்பட்டது. அதன் பின்னர் சென்னை நகரை சுற்றிப் பார்க்க ரெடியா என்று காவல்துறை அதிகாரிகள் கேட்டனர். அதற்கு அமெரிக்கர்கள், சிறு குழந்தைகள் போல எஸ் போட்டனர்.

எப்படிப் போக விரும்புகிறீர்கள் என்று கேட்டபோது பெரும்பாலானவர்கள் ஆட்டோவில் சவாரி செய்ய விரும்புவதாக கூறினர். இதையடுத்து ஆட்டோக்கள் வரவழைக்கப்பட்டன. வரிசையாக நிறுத்தப்பட்ட ஆட்டோக்களில் இரண்டு பேராக, மூன்று பேராக, நான்கு பேராக அமெரிக்க வீரர், வீராங்கனைகள் ஏறிக் கொண்டனர்.

பெரும்பாலான ஆட்டோக்களில் ஜோடி ஜோடியாக வீரர், வீராங்கனைகளைப் பார்க்க முடிந்தது. ஆட்டோக்களில் பயணம் செய்பவர்கள் யார், அந்த ஆட்டோவின் எண், டிரைவர் பெயர் ஆகியவற்றை முன்கூட்டியே போலீஸார் குறித்து வைத்துக் கொண்டனர். பின்னர் ஆட்டோக்கள் கிளம்பின.

சென்னை நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் ஆட்டோக்கள் சென்றன. சென்னை சென்டிரல் ரயில் நிலையம், அண்ணா சாலை உள்ளிட்ட பல இடடங்களுக்குச் சென்று அமெரிக்க வீரர், வீராங்கனைகள் சுற்றிப் பார்த்தனர்.

சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து கடற்கரை ரயில் நிலையம் வரை மின்சார ரயிலிலும் பயணம் செய்து சந்தோஷப்பட்டனர். அண்ணா சாலையில் உள்ள ஸ்பென்சர் பிளாசாவுக்குள்ளும் புகுந்தனர். கைக்குக் கிடைத்த பொருட்களை பர்ச்சேஸ் செய்து மகிழ்ந்தனர்.

அமெரிக்க வீரர், வீராங்கனைகளுக்காக சென்னை நகரில் உள்ள 18க்கும் மேற்பட்ட ஸ்டார் ஹோட்டல்களில் அறைகள் போடப்பட்டுள்ளன. இங்குதான் அவர்கள் தங்கியிருக்கப் போகிறார்கள்.

கடலிலேயே பல மாதங்களாக இருந்து வந்த வீரர்கள், வீராங்கனைகளுக்கு புத்துணர்ச்சி ஊட்டும் வகையில் பல வகையான ஏற்பாடுகளை அமெரிக்க தூதரகம் தடபுடலாக செய்து வைத்துள்ளது.

வீரர்களுக்கு உற்சாகம் கொடுக்கும் வகையில் சீனா, ஜப்பான் போன்ற நாடுகளிலிருந்து ஏராளமான மாடல் அழகிகளை சென்னைக்கு அழைத்து வந்துள்ளனராம். இது தவிர கோலிவுட் துணை நடிகைகள் பலரும் கூட 'ஏற்பாடு' செய்யப்பட்டுள்ளனராம்.

வீரர்கள் தங்கியிருக்கும் நட்சத்திர ஹோட்டல்களில் மது விருந்து, டான்ஸ் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விருந்துகளில் மாடல் அழகிகளும், துணை நடிகைகளும் கலந்து கொண்டு அமெரிக்க வீரர்களை உற்சாகப்படுத்தவுள்ளனர்.

வெளிநாட்டு மாடல் அழகிகளை கலாச்சாரக் கோஷ்டி என்ற பெயரில் கூட்டி வந்து தங்க வைத்துள்ளனர். அமெரிக்க வீரர்களை உற்சாகப்படுத்த வேண்டும், நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும் என்று இவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம். இதைத் தவிர வேறு வேலையே அவர்களுக்குக் கிடையாதாம்.

அமெரிக்க வீரர்கள் ஜாலி செய்யும் ஹோட்டல்களில் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

சென்னை தவிர மாமல்லபுரத்தில் உள்ள ஜி.ஆர்.டி டெம்பிள் பே, ஸ்டெர்லிங், பார்ச்சூன், ஐடியல் பீச் ஆகிய இடங்களிலும் அமெரிக்க வீரர்களில் ஒரு பிரிவினர் தங்குகின்றனர்.

இதையொட்டி மாமல்லபுரம் மற்றும் கோவளம் ஆகிய பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மிதக்கும் நகரம் - நிமிட்ஸ்:

நிமிட்ஸ் கப்பலை ஒரு மிதக்கும் நகரம் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு ஒரு நகரில் உள்ள அத்தனை வசதிகளும் இந்தக் கப்பலில் உள்ளன.

நாலரை ஏக்கர் பரப்பளவில் இந்த ராட்சத கப்பல் உள்ளது. மொத்தம் 23 அடுக்குகளை (மாடிகள்) கொண்டதாக நிமிட்ஸ் கப்பல் உள்ளது. ஆனால் கடல் மட்டத்துக்கு மேலே 5 மாடிகள் மட்டுமே உள்ளன. மற்றவை தண்ணீருக்குக் கீழே உள்ளன.

சென்னை வந்துள்ள நிமிட்ஸ் கப்பலில் 6 வகையான 62 விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஹெலிகாப்டர்களும் உள்ளன. கடலில் நின்றாலும் கூட சற்றும் அசைவில்லாமல் 'கன்' மாதிரி நிற்கிறது நிமிட்ஸ்.

நிமிட்ஸ் கப்பலின் மேல் தளத்திற்குச் செல்ல 4 ராட்சத லிப்ட்டுகள் வைத்துள்ளனர். ஒரே நேரத்தில் 100 பேர் வரை இந்த லிப்ட்டில் பயணிக்க முடியும். இதுதவிர மேல் தளத்தில் நிறுத்தப்பட்டுள்ள போர் விமானங்களில் ஏதாவது பழுது ஏற்பட்டால் லிப்ட்டுகள் மூலம் கீழ் தளத்திற்குக் கொண்டு வருகிறார்கள். அந்த இடம் மிகப் பெரும் தொழிற்சாலை போல காணப்படுகிறது.

கப்பலின் மேல் தளத்தில் கார்களும் உள்ளன. கப்பலின் 'இந்தாண்டை'யிலிருந்து 'அந்தாண்டை' செல்வதற்கு இந்தக் கார்களைப் பயன்படுத்துகிறார்கள்.

கப்பலில் 5,000 பேருக்கு தினசரி 20 ஆயிரம் சாப்பாடு தயார் செய்யப்படுகிறது. வீரர், வீராங்கனைகள் பயன்படுத்தும் துணிமணிகளை சலவை செய்ய ராட்சத வாஷிங் மெஷின் உள்ளது. முடிவெட்டிக் கொள்வற்காகவே 2 சலூன்களையும் கப்பலில் வைத்துள்ளனர். வாரத்திற்கு 1,500 பேர் வரை முடி வெட்டிக் கொள்வார்களாம்.

ஒரு தையல்காரரும் கடையில் ... அதாவது கப்பலில் உள்ளார். இதுதவிர நவீன மருத்துவமனை ஒன்று உள்ளது. 53 படுக்கைகளைக் கொண்டது இந்த மருத்துவமனை. அதில் அவரச சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட சகல வசதிகளும் உள்ளன. பல் டாக்டர்கள், இதயநோய் மருத்துவர், மன நல மருத்துவர் உள்பட பல்வேறு பிரிவு டாக்டர்களும் உள்ளனர்.

இதெல்லாம் போக ஒரு சிறிய சர்ச்சும் உள்ளது. அங்கு 3 பாதிரியார்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கும் போர்க் கலைகள் தெரியுமாம். எதிரிகள் தாக்க வந்தால் 'அட்டாக்' பண்ணக் கூடிய பாதிரியார்களாம் இவர்கள்.

அப்புறம் ஒரு தபால் அலுவலகம் இருக்கிறது. இங்கு ஆண்டுக்கு 10 லட்சம் தபால்கள் வீரர், வீராங்கனைகளுக்கு வருகிறதாம். கூடைப்பந்து, ரக்பி போன்றவை விளையாட மைதானமும் உள்ளன. ரக்பிக்காக தனித் தனி அணிகளும் உள்ளன. போரின்போது எதிரிகளுடன் விளையாடும் வீரர், வீராங்கனைகள், போர் இல்லாதபோது அவர்களுக்குள் விளையாடிக் கொள்வார்களாம்.

அமெரிக்க வீரர், வீராங்கனைகளைப் பார்க்கும்போது படு க்யூட்டாக இருக்கிறார்கள். ஆண்கள் பெரும்பாலும் 25 வயதுக்குள்தான் இருப்பார்கள் போலத் தெரிகிறது. பெண்களும் குறைந்த வயதினர்தான் அதிகம். பெண்களுக்கு அமெரிக்க கடற்படையில் நல்ல முக்கியத்துவம் தரப்படுமாம். நிமிட்ஸ் கப்பலில் கூட ஏராளமான பெண்களைப் பார்க்க முடிகிறது.

ஆண்கள் அனைவரும் படு கச்சிதமாக இருக்கிறார்கள். அத்தனை பேரும் கட்டுமஸ்தாக, நல்ல உயரமாக, கம்பீரமாக இருக்கிறார்கள். தொப்பையை ஒருவரிடம் கூட பார்க்க முடியவில்லை. நம்ம ஊர் போலீஸ்காரர்கள் எல்லாம் இவர்களைப் பார்த்து தொப்பையில்லாமல் வாழ்வது எப்படி என்பதை கற்றுக் கொள்ளளாம்.

மொத்தத்தில் நிமிட்ஸ் ஒரு கப்பலே இல்லை, மிதக்கும் நகரம் என்று கூறலாம். இப்படிப்பட்ட மிதக்கும் நகரங்கள் அமெரிக்காவிடம் 11 இருக்கிறதாம்.

http://thatstamil.oneindia.in/news/2007/07/03/nimitz.html

அப்ப துணை நடிகைகள் குறிப்பிட்ட சில வருடங்களிற்கு கலை நிகழ்வுகளிற்காக வெளிநாடுகளிற்கு எல்லாம் போக மாட்டார்கள். இங்கேயே அந்த பணத்தை பெற்றுவிடுவார்கள் என்று சொல்றீங்களா ? இந்தியா எங்கேயே போகுதய்யா ?

nimitz_070703_5.jpg

Edited by Paranee

கப்பி அக்கா சொல்லுறதை பார்க்கும் போது நாமளும் கப்பலில போனா எப்படி இருக்கும் என்று தோன்றுது................ஆனா எனக்கு ஒரு டவுட் யாராவது கிளியர் பண்ணுங்கோ..............லாரியில எல்லாம் எலுமிச்சம்பழம் கட்டுற மாதிரி கப்பலில என்ன கட்டுவீனம்.............

அப்ப வரட்டா............ :P

கப்பலிலை கருவாடு கட்டுவினம்

உண்மையாவோ..................கருவாடு கட்டாத கப்பல் தான் நியூகாசில கரை ஓதுங்கின மாதிரி ஒதுங்குமோ.......... :P

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையாவோ..................கருவாடு கட்டாத கப்பல் தான் நியூகாசில கரை ஓதுங்கின மாதிரி ஒதுங்குமோ.......... :P

எப்படி இப்படி அறிவுபூர்வமாக சிந்திகிறிங்கள் யம்மு

:):lol::D

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி இந்தியா போர்கப்பல் அமேரிக்கா போனாலும் இப்படி நல்லவரவெற்ப்பு கிடைக்குமோ?வெள்ளைக்கார நடிகைகள் வந்து உற்சாகம் கொடுப்பார்களா? அப்படி என்றால் இந்தியா கப்பற் படையில் வேலைபார்க்.............கலாம் என்று ஒரு விருப்பத்தில்தான்......

எப்படி இப்படி அறிவுபூர்வமாக சிந்திகிறிங்கள் யம்மு

:lol::D:D

இந்த அறிவோ............அது பரம்பரை பரம்பரையா வர வேண்டும் பாருங்கோ...........எங்கே இருந்து வந்தது என்று தெறியுதோ.................... :P

(என்னை வைத்து காமெடு கீமெடி பண்னவில்லை தானே புத்து............நாம கொஞ்சம் ஓவரா போயிட்டமோ) :)

  • கருத்துக்கள உறவுகள்

நிமிட்ஸ் கப்பலைப் பற்றி...

அமெரிக்கா அணு ஆயுதப் போர்க் கப்பல் சென்னை துறைமுகப் பகுதியில் 3 மைல் தொலைவில் நிறுத்தப்பட்டுள்ளது. அணு ஆயுதக் கப்பல் என்பதால் பல்வேறு எதிர்ப்புகள்...

அணு ஆயுதக் கப்பலை சென்னை துறைமுகத்தில் நிறுத்த எதிர்ப்புத் தெரிவித்து அஇஅதிமுக, இடது சாரிகள் அறிக்கைகளும், போராட்டங்களும் நடத்தின. ஒன்றும் அறியா பொதுமக்களும் அணு ஆயுத போர் கப்பல் சென்னைக்கு வந்தால், சென்னையே அழிந்துவிடும்... அணுக் கசிவு ஏற்பட்டால் தமிழகமே இருக்காது.... என்று பலவாறு பேசிக் கொண்டிருக்கின்றனர்.

அப்படிப்பட்ட நிமிட்ஸ் பற்றிய உண்மை என்னவென்று தெரிய வேண்டாமா?

அமெரிக்காவின் மிகப் பெரிய விமானத்தாங்கி கப்பலான நிமிட்ஸ், இராக்கில் போர் பணியாற்றிவிட்டு சற்று இளைப்பாற சுற்றுலா கிளம்பிவிட்டது. அதன் ஒரு பகுதியாகவே நிமிட்ஸ் இந்தியா வந்துள்ளது. அக்கப்பலில் உள்ள வீரர்கள் இந்தியாவில் சில நாட்கள் தங்கியிருந்து தங்களை புதுப்பித்துக் கொண்டு செல்லவே சென்னையில் மையம் கொண்டுள்ளனர்.

இந்த கப்பல் அணுசக்தி மூலம் இயங்க கூடியது. எனவே அணு கசிவு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனினும் இந்த தொழில்நுட்பம் பாதுகாப்பனது என்று உறுதி செய்யப்பட்ட பின்னரே, இந்த கப்பல் சென்னைக்கு வர மத்திய அரசு அனுமதித்தது. அதன்படி நேற்று முன்தினம் காலை நிமிட்ஸ் சென்னை மெரீனா கடற்கரைக்கு கிழக்கே 4 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை நிறுத்தப்பட்டது.

நிமிட்ஸ் போர் கப்பலில் பணியாளர்கள், அதிகாரிகள் உட்பட 6,000 வீரர்கள் உள்ளனர். அவர்கள் நேற்று படகுகள் மூலம் சென்னை நகருக்குள் வந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளனர். இவர்களுக்காக நட்சத்திர விடுதிகளில் அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அங்கு அவர்கள் அமெரிக்க சுதந்திர தின விழாவை கொண்டாட உள்ளனர்.

மகிழ்ச்சியாக இருக்கும் அதே நேரத்தில் கப்பல் ஊழியர்கள் சென்னையில் உள்ள அனாதை இல்லம், மன நல காப்பகம் போன்றவற்றுக்கு சென்று பல்வேறு சமூக சேவை பணிகளிலும் ஈடுபடுகின்றனர். எலியட்ஸ் கடற்கரையை அவர்கள் சுத்தம் செய்தனர். அனாதை ஆசிரமத்தில் வாழும் குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்தனர்.

நிமிட்ஸ் போர்க் கப்பலில் வந்தவர்கள் இப்படியிருக்க... நிமிட்ஸ் போர் கப்பலோ நமது சென்னை துறைமுகத்தில் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது. அணுசக்தி மூலம் இயங்குவதால் அதில் 2 அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் கசிவு ஏற்பட்டால் சென்னை நகரமே அழிந்து போகும் அளவிற்கு ஆபத்தானதுதான். ஆனால் இந்த தொழில்நுட்பம் கடந்த 57 ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ளது. ஆனால் இதுவரை எவ்வித அசம்பாவிதமும் ஏற்பட்டதில்லை. அதில் இருக்கும் நாங்களே மிகவும் பாதுகாப்பாக உணர்கிறோம் என்று கப்பலில் வந்த அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

மேலும், கப்பலில் அணு கசிவு ஏதேனும் ஏற்படுகிறதா என்பதை கண்காணிக்க இந்திய அணு விஞ்ஞானிகள் குழு ஒன்று இந்திய போர் கப்பல் மூலம் அந்த பகுதிக்கு சென்றுள்ளனர். நிமிட்ஸ் கப்பல் அருகே இந்திய கப்பல் முகாமிட்டுள்ளது. அணு கசிவை துரிதமாக கண்டறிந்து தகவல் அளிக்கும் கருவியும் அதில் பொருத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் 24 மணி நேரமும் நிமிட்ஸ் கண்காணிக்கப்பட்டு வருகிறது. நாளையே அமெரிக்க கப்பல் புறப்பட்டு செல்கிறது. அதுவரை விஞ்ஞானிகள் அங்கேயே தங்கி இருப்பார்கள்.

அதே போல 2 வேன்களில் விஞ்ஞானிகள் குழு கடற்கரையில் சுற்றி வருகின்றர். அவர்களும் கருவி மூலம் அணு கசிவை கண்காணிப்பார்கள்.

பொதுவாக அணுசக்தி கப்பலை கடற்கரையில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பால்தான் நிறுத்துவது வழக்கம். ஆனால் சென்னையில் 3 கிலோ மீட்டருக்கு அப்பால் நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்று இந்திய ராணுவ ஆராய்ச்சி துறை பாதுகாப்பு தலைமை அதிகாரி ஏ.கே.ரெட்டி கூறினார்.

கப்பலில் அணு ஆயுதம் எதுவும் எடுத்து வரவில்லை என்று அமெரிக்க ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த கப்பல் 4 1/2 ஏக்கர் பரப்பளவு கொண்டது. 1092 அடி நீளம், 252 அடி அகலம் உடையது. 23 மாடிகள் கொண்ட இந்த கப்பலில் ஒரே நேரத்தில் 65 போர் விமானங்கள் நிறுத்தும் வசதி உள்ளது. இவற்றுடன் வீரர்கள் பயணம் செய்யும் விமானம், ஆபத்து நேரத்தில் மீட்பு பணிகளில் ஈடுபடும் விமானம், ஹெலிகாப்டர் ஆகியவையும் உள்ளன. 30 வினாடியில் ஒரு விமானம் கப்பலில் இருந்து புறப்படும் அளவுக்கு வசதி உள்ளது.

1975-ம் ஆண்டு மே மாதம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்த இக்கப்பல் கடந்த 32 ஆண்டுகளாக சளைக்காமல் பணியாற்றி வருகிறது. 2-ம் உலகப் போரில் அமெரிக்காவின் பசிபிக் கடல் பகுதி ராணுவ கமாண்டராக இருந்து பெரும் பணிபுரிந்த ஜெஸ்டர் நிமிட்ஸின் நினைவாக அவரது பெயரே இந்த கப்பலுக்கு சூட்டப்பட்டுள்ளது.

நிமிட்ஸில் 53 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை உள்ளது. அதில் 6 மருத்துவர்களும், தனியாக 5 பல் மருத்துவர்களும் இருக்கின்றனர். உணவு பொருட்களை 70 நாட்கள் வரை கெடாமல் பாதுகாக்கும் குளிர்சாதன வசதிகளும் உள்ளன.

கடல் நீரை நல்ல நீராக மாற்றி பயன்படுத்த அதற்கான தனி தொழிற்கூடம் உள்ளது. அதன் மூலம் தினமும் 4 லட்சம் காலன் நல்ல தண்ணீர் உற்பத்தி செய்யப்படுகிறது. இவை குடிநீர் தேவைக்கும் மற்ற தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.

கப்பலிலேயே தனி தபால் நிலையம் உள்ளது. ஆண்டுக்கு 10 லட்சம் கடிதங்களை இது கையாள்கிறது. தினமும் தபால் நிலைய கடிதங்களை பட்டுவாடா செய்யும். இதற்காக தினமும் வேறு கப்பல்கள் மூலமாகவோ அல்லது விமானங்கள் மூலமாகவோ இங்கு கடிதங்கள் கொண்டு வரப்படும். கப்பலில் இருப்பர்கள் வழிபாட்டிற்காகக் கூட வெளியே செல்ல வேண்டாம். வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்கள் பலரும் கப்பலில் இருப்பதால் அவர்களுக்கு வசதியாக 3 வழிபாட்டு தலங்களும் கப்பலில் உள்ளன.

கப்பலில் தேவைக்கு மேல் 50 விழுக்காடு ஆயுதங்களை வைத்து கொள்ளவும், விமானங்களுக்கு தேவையான 2 மடங்கு எரி பொருளை சேமித்து வைக்கவும் வசதி உள்ளது. போர் விமானங்கள் பழுதடைந்துவிட்டால் அவற்றை உட்பகுதிக்கு கொண்டு சென்று பழுது பார்க்கும் தளமும் உள்ளது.

உணவு உண்ணுவதற்கான தனிக் கூடம், மாநாட்டு அறை, பொழுதுபோக்கு கூடம் என அனைத்து வசதிகளும் இந்த போர்க் கப்பலில் உள்ளன. மொத்தத்தில் ஒரு சிறிய நகரத்தில் இருக்கும் அத்தனை வசதிகளும் இருக்கும் இந்த கப்பலை மிதக்கும் நிமிட்ஸ் நகரம் என்று கூறினால் பொருத்தமாக இருக்கும்.

-வெப் துனியா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சென்னையிலிருந்து கிளம்பியது நிமிட்ஸ்

ஜூலை 05, 2007

சென்னை: சென்னையில் ஐந்து நாட்களாக முகாமிட்டிருந்த அமெரிக்க போர்க் கப்பல் நிமிட்ஸ், இன்று தனது இந்தியப் பயணத்தை முடித்துக் கொண்டு கிளம்பிச் சென்றது.

அமெரிக்காவின் பிரமாண்ட அணு சக்தி போர்க் கப்பலான நிமிட்ஸ் கடந்த 2ம் தேதி சென்னைக்கு வந்தது. நிமிட்ஸ் கப்பல் சென்னைக்கு வருவதற்கு கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன. இருப்பினும் மத்திய அரசு அதைக் கண்டுகொள்ளவில்லை.

இந்த நிலையில் 2ம் தேதி சென்னைக்கு வந்த நிமிட்ஸ், துறைமுகத்திற்கு மூன்று கடல் மைல் தொலைவில் நிறுத்தப்பட்டது. இந்தக் கப்பலில் வந்திருந்த வீரர், வீராங்கனைகள் சென்னை நகரில் பல்வேறு இடங்களுக்கும் சென்று சுற்றிப் பார்த்தனர். மகாபலிபுரத்திற்கும் சென்றனர்.

இவர்களின் வசதிக்காக துணை நடிகைகள், மாடல் அழகிகளின் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஸ்டார் ஹோட்டல்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஐந்து நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நிமிட்ஸ், இன்று காலை கிளம்பிச் சென்றது.

இந்திய பயணம் மிகவும் இனிமையானதாக அமைந்ததாகவும், மறக்க முடியாத அனுபவமாக இருந்ததாகவும் வீரர், வீராங்கனைகள் குறிப்பிட்டனர்.

நிமிட்ஸ் கப்பலை இந்திய கடற்படையினர் இந்திய கடற்படை அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர். பின்னர் வளைகுடா நோக்கி நிமிட்ஸ் தனது பயணத்தைத் தொடங்கியது.

வளைகுடா நாடுளில் நிமிட்ஸ் சில நாட்கள் நிலை கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

http://thatstamil.oneindia.in/news/2007/07/05/nimitz.html

இவர்களின் வசதிக்காக துணை நடிகைகள், மாடல் அழகிகளின் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஸ்டார் ஹோட்டல்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஐந்து நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நிமிட்ஸ், இன்று காலை கிளம்பிச் சென்றது.

இந்திய பயணம் மிகவும் இனிமையானதாக அமைந்ததாகவும், மறக்க முடியாத அனுபவமாக இருந்ததாகவும் வீரர், வீராங்கனைகள் குறிப்பிட்டனர்.

நிமிட்ஸ் போய்விட்டது, ஆனால் அது விதைத்து விட்டுப்போன எயிட்ஸ்?

அணுக் கசிவை கண்காணித்தவர்கள் எயிட்ஸ் விதைப்பை கண்டுகொள்ளவில்லை!

Edited by சாணக்கியன்

நிமிட்ஸ் போய்விட்டது, ஆனால் அது விதைத்து விட்டுப்போன எயிட்ஸ்?

அணுக் கசிவை கண்காணித்தவர்கள் எயிட்ஸ் விதைப்பை கண்டுகொள்ளவில்லை!

இதற்குமேல் அங்கு விதைப்பதற்கு இடமில்லை. நிமிட்ஸ் சிப்பாய்களின் பாடுதான் பரிதாபம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.