Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

பாக்டீரியா தொற்றிய கொசுவைப் பரப்பி டெங்கு வைரசை கட்டுப்படுத்தும் ஆய்வு: 77 சதவீதம் பலன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
  • ஜேம்ஸ் கலேகர்
  • பிபிசி சுகாதாரம் & அறிவியல் செய்தியாளர்

பாக்டீரியா தொற்றிய கொசுக்களைப் பரப்பி டெங்கு வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் ஒரு திட்டத்தை பரிசோதனை செய்து பார்த்ததில் 77 சதவீதம் டெங்கு பரவல் கட்டுப்படுவது தெரியவந்துள்ளது என்கிறார்கள் அறிவியலாளர்கள்.

வோல்பாசியா என்ற இந்த 'அற்புத' பாக்டீரியா தொற்றிய கொசுக்களிடம் டெங்கு கிருமியை பரப்பும் தன்மை கணிசமாகக் குறைகிறது.

இந்த பரிசோதனை இந்தோனீசியாவில் இருக்கும் யோக்யகர்தா நகரத்தில் மேற்கொள்ளப்பட்டது. டெங்கு வைரஸை இது முற்றாக ஒழிக்கும் என்ற நம்பிக்கையோடு இப்பரிசோதனை விரிவுபடுத்தப்படுகிறது.

உலகம் முழுவதையும் பாடாய்ப் படுத்தும் டெங்கு வைரசுக்கு இது ஒரு தீர்வாக இருக்கலாம் என உலக கொசு திட்ட அணியினர் கூறுகிறார்கள்.

50 ஆண்டுகளுக்கு முன் வெகு சிலர் மட்டும் டெங்கு வைரஸ் குறித்து கேள்விப்பட்டிருந்தனர், ஆனால் இப்போது இது இடைவிடாமல் மெதுவாகப் பரவும் பெருந்தொற்றாக இருந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளில், டெங்குவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

1970ம் ஆண்டு உலகில் மொத்தம் ஒன்பது நாடுகளில் மட்டுமே டெங்கு காய்ச்சல் பரவியது. தற்போது ஆண்டுக்கு 40 கோடி பேர்டெங்கு வைரசால் பாதிக்கப்படுகிறார்கள்.

டெங்கு தொற்றியவர்களுக்கு எலும்பிலும், தசைகளிலும் கடுமையான வலி உண்டாகும். டெங்கு அதிக அளவில் பரவத் தொடங்கினால் மருத்துவமனைகளில் நோயாளிகள் கூட்டம் குவியத் தொடங்கிவிடும்.

எதிரிக்கு எதிரி

கொசுக்கள்

பட மூலாதாரம்,WORLD MOSQUITO PROGRAMME

இந்த பரிசோதனையில் வோல்பாசியா (Wolbachia) பாக்டீரியா தொற்றிய கொசுக்கள் பயன்படுத்தப்பட்டன. இவை இயற்கையாகவே அற்புதத் தன்மை கொண்டவை என ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான டாக்டர் கேட்டி ஆண்டர்ஸ் கூறுகிறார்.

வோல்பாசியா பாக்டீரியா கொசுக்களுக்கு தீங்கு விளைவிக்காது, ஆனால் கொசுக்களின் உடலில் எந்த பகுதியில் டெங்கு வைரஸ் குடியேறுமோ, அந்த இடங்களில் எல்லாம் இந்த வோல்பாசியா பாக்டீரியா சென்று அமர்ந்து கொள்ளும்.

பாக்டீரியா தான் இருக்கும் இடத்துக்காக வைரசோடு போட்டியிடுகிறது, அந்த பாக்டீரியாவை வெளியே தள்ளி, அந்த இடத்தை பிடிக்க டெங்கு வைரசுக்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே கொசு கடிக்கும்போது டெங்கு தொற்று ஏற்படும் வாய்ப்பு குறைகிறது.

இந்த பரிசோதனையில் வோல்பாசியா தொற்றிய 50 லட்சம் கொசு முட்டைகள் பயன்படுத்தப்பட்டன. ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் ஒரு முறை கொசு முட்டைகள் நகரில் தண்ணீர் இருக்கும் வாளிகளில் வைக்கப்பட்டன. கொசு கூட்டத்தில் பாக்டீரியா தொற்றிய கொசுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஒன்பது மாதங்கள் ஆயின.

யோக்யகர்த்தா நகரம் 24 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, அவற்றில் பாதியில் மட்டுமே கொசுக்கள் விடுவிக்கப்பட்டன.

கொசு

பட மூலாதாரம்,GETTY IMAGES

'நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின்' என்கிற அறிவியல் சஞ்சிகையில், இந்த பரிசோதனையின் முடிவுகள் வெளியிடப்பட்டு இருக்கின்றன. கொசுக்கள் விடுவிக்கப்பட்ட பிறகு டெங்கு தொற்று 77 சதவீதம் குறைவாகப் பதிவானது. அதே போல டெங்கு தொற்றியவர்கள் மத்தியிலும் மருத்துவமனையில் சிகிச்சை தேவைப்படும் அளவுக்கு நோய் முற்றியவர்கள் எண்ணிக்கையும் 86 சதவீதம் குறைந்திருப்பதாக அப்பரிசோதனை முடிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"இது மிகவும் உற்சாகமளிக்கிறது. உண்மையில் நாங்கள் எதிர்பார்த்ததை விட இந்த பரிசோதனை முடிவுகள் சிறப்பாக வந்திருக்கின்றன" என்று ஆண்டர்ஸ் பிபிசியிடம் கூறினார்.

டெங்கு வைரசைக் கட்டுப்படுத்தும் இந்தமுறை மிக சிறப்பாக இருக்கிறது, கொசுக்கள் நகரம் நெடுகிலும் வெளியிடப்பட்டுள்ளன, மேலும் இத்திட்டம், டெங்குவை ஒழிக்கும் நோக்கத்துடன் அப்பிராந்தியத்தின் மற்ற பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்படுகிறது.

"இந்த முடிவுகள் அற்புதமானவை" என உலக கொசு திட்ட அமைப்பின், தாக்க மதிப்பீட்டு பிரிவின் இயக்குநராக இருக்கும் டாக்டர் ஆண்டர்ஸ் கூறினார்.

"டெங்கு வைரஸ் ஒரு பெரிய பொது சுகாதாரப் பிரச்சனையாக இருக்கும் பெரிய நகரங்களில் இம்முறை பயன்படுத்தப்படும் போது, இது இன்னும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நினைக்கிறோம்."

வோல்பாசியா, தான் குடியிருக்கும் கொசுக்களின் இனபெருக்கத்தன்மையை மாற்றியமைக்கும். இதன் மூலம் கொசுக்களின் அடுத்த தலைமுறைக்கும் இந்த பாக்டீரியா கொண்டுசெல்லப்படும்.

அதாவது ஒரு முறை வோல்பாசியா பாக்டீரியா கொசுக்களின் உடலில் அமர்ந்துவிட்டால், அது நீண்ட காலத்துக்கு ஒட்டிக்கொண்டு, டெங்கு தொற்றை ஏற்படவிடாமல் பாதுகாப்பு வழங்கும்.

கொசு

பட மூலாதாரம்,GETTY IMAGES

இது மற்ற கட்டுப்பாட்டு முறைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. கொசுக்களை அடக்குவதற்கு பூச்சிக்கொல்லிகள் அல்லது அதிக எண்ணிக்கையிலான மலட்டு ஆண் கொசுக்களை விடுவித்தல் போன்ற வழிமுறைகளை மேற்கொள்வதென்றால் தொடர்ந்து அது போன்ற பணிகளை செய்து கொண்டே இருக்க வேண்டும்.

"இந்த பரிசோதனையின் முடிவு எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது" என யோக்யகர்தா நகரத்தின் நோய் தடுப்புத் தலைவர் மருத்துவர் யூடிரியா அமெலியா கூறினார்

"இந்த வழிமுறையை யோக்யகர்த்தாவின் அனைத்து பகுதிகளுக்கும், இந்தோனீசியாவின் அனைத்து நகரங்களுக்கும் விரிவாக்க முடியும் என நம்புகிறோம்." என்றார் அவர்.

டெங்கு வைரசைப் பரப்பும் ஏடிஸ் ஈஜிப்டி (Aedes aegypti) வகை கொசுவுக்கு பொதுவாக வோல்பாசியா நோய்த் தொற்று ஏற்படாது. எனவே பல ஆண்டு கால ஆராய்ச்சிக்குப் பிறகு இந்தப் பரிசோதனை வெற்றி அடைந்திருப்பது மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று.

வோல்பாசியா டெங்கு காய்ச்சலை முழுமையாக நசுக்க போதுமானதாக இருக்கும் என நோய் மாதிரி ஆய்வுகள் கணித்துள்ளன.

ஜிகா, மஞ்சள் காய்ச்சல் மற்றும் சிக்கன்குனியா போன்ற பிற நோய்களும் கொசு கடியால்தான் பரவுகின்றன. அந்த நோய்களைக் கட்டுப்படுத்துவதில் கூட இந்த முறை ஒரு தீர்வாக அமைய வாய்ப்பிருக்கிறது என பாஸ்டன் பல்கலைக்கழகத்தின் உலக சுகாதாரம் மற்றும் மருத்துவ பேராசிரியர் டேவிட் ஹமர் கூறுகிறார்.

பாக்டீரியா தொற்றிய கொசுவைப் பரப்பி டெங்கு வைரசை கட்டுப்படுத்தும் ஆய்வு: 77 சதவீதம் பலன் - BBC News தமிழ்

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 12 ) சசிகலா ரவிராஜ் வெற்றிபெற மாட்டார் என 23 பேர் சரியாக கணித்திருக்கிறார்கள் 1)பிரபா - 36 புள்ளிகள் 2)வீரப்பையன் - 31 புள்ளிகள் 3) வாதவூரான் - 31 புள்ளிகள் 4) வாலி - 31 புள்ளிகள் 5) கந்தையா 57 - 30 புள்ளிகள் 6) தமிழ்சிறி - 30 புள்ளிகள் 7) Alvayan - 30 புள்ளிகள் 😎 புரட்சிகர தமிழ் தேசியன் - 30 புள்ளிகள் 9) நிழலி - 29 புள்ளிகள் 10) சுவைபிரியன் - 28 புள்ளிகள் 11)ஈழப்பிரியன் - 28 புள்ளிகள் 12)ரசோதரன் - 28 புள்ளிகள் 13)நூணாவிலான் - 27 புள்ளிகள் 14)வில்லவன் - 27 புள்ளிகள் 15) நிலாமதி - 27 புள்ளிகள் 16)கிருபன் - 26 புள்ளிகள் 17)goshan_che - 26 புள்ளிகள் 18)சசிவர்ணம் - 25 புள்ளிகள் 19) புலவர் - 24 புள்ளிகள் 20) வாத்தியார் - 23 புள்ளிகள் 21)புத்தன் - 23 புள்ளிகள் 22)சுவி - 20 புள்ளிகள் 23) அகத்தியன் - 18 புள்ளிகள் 24) குமாரசாமி - 18 புள்ளிகள்  25) தமிழன்பன் - 13 புள்ளிகள் 26) வசி - 12 புள்ளிகள் இதுவரை 1, 2,4, 7, 8,10 - 13, 16 - 18, 22, 27 - 31, 33, 34, 38 - 42 , 48, 52 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 56)
    • இவர்கள் ஊரில் இருந்தால் பியதாசவுக்கு போட்டிருப்பார்கள் என நினைக்கிறேன்.
    • அது பகிடி. @vasee கேட்ட கேள்வி - திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா? என்பதுதான். இது ஒரு எதிர்வுகூறல். உங்கள் விருப்பம் அவர் போக வேண்டுமா இல்லையா? என்பதல்ல கேள்வி. நான் பரிட்சையில் கேட்ட கேள்விக்கு ஆம் என என் எதிர்வு கூறலை கூறி உள்ளேன். எனது விருப்பம்? அவர் அரசியலை விட்டு விலக வேண்டும். திரிசா கோசானை திருமணம் செய்வாரா என்பது கேள்வி. இவர்கள் திரிசா கோசானை கலியாணம் முடிப்பது சரியா பிழையா என தம் மனதில் எழுந்த கேள்விக்கு பதில் எழுதி விட்டு…. ஒழுங்கா கேள்வியை வாசித்து. கிரகித்து பதில் எழுதியனவை பிராண்டுகிறார்கள்.  
    • ரணிலுக்கு சுமன்… அனுரவுக்கு சாத்ஸ் என்பது தெரிந்த விடயம்தானே. புஞ்சி அம்மே நவே, தங் புஞ்சி அங்கிள்🤣
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.