Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறுதி யுத்தமும் இரைக்காக காத்திருந்த தேசிய உணர்வு சார்ந்த கழுகுகளும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2009 ஆம் ஆண்டு இரண்டாம் மாத காலப்பகுதியில் நான் நோர்வே சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கு உணவு தயாரிக்கும் இடத்தை துப்பரவு செய்யும் தொழிலாளியாக வேலை செய்தேன்.
நோர்வேயில் துப்பரவு தொழில் நிறுவனங்களை வழிநடத்திய கோபால், மோகன், செல்வா, சிவா, அண்ணா இவர்களிடம்தான் நான் நோர்வேயில் வசித்த காலத்தில் வேலை செய்தேன்.கோபால் அண்ணா புற்று நோய் வந்து மரணித்து விட்டார்.இறுதியாக சிவா அண்ணாவிடம் நோர்வே சர்வதேச விமான நிலையத்தில் கடமையாற்றினேன்.
பெயர் விபரங்களை தெரியப்படுத்துவதற்கு காரணம் என்னை அடையாளப்படுத்துவதற்கு எண்ணில் ஒரு பழக்கம் எந்த பதிவாக இருந்தாலும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல் உடன் பதிவு செய்ய வேண்டும் என்பது.
மாலை 4 மணிக்குப் விமான நிலையத்திற்கு வேலைக்கு சென்றால் அதிகாலை 4 மணிக்கு வேலை முடிந்து பின்னர் காலை ஏழு மணிக்கு 2 வியாபார நிலையங்களை துப்புரவு செய்வதற்காக செல்லவேண்டும் இது அந்தக் காலப்பகுதியில் எனது அன்றாட வேலை.
சரி நான் கூற வந்த பதிவுக்கு வருகிறேன்.2009 இரண்டாம் மாதம் சண்டை புதுக்குடியிருப்பை அண்மித்து விட்டது.தாயகத்தில் இருந்து வந்த அதைவிட புலம் பெயர்ந்த தேசங்களில் தமிழ் மண்ணுக்காக செயல்பட்ட நிதி சேகரிப்பாளர்கள்.நிதி சேகரிப்பதில் அதிக ஆர்வம் காட்டத் தொடங்கிவிட்டார்கள்.நோர்வே சுவீடன் 2 நாடுகளையும் உள்ளடக்கி நிதி சேகரித்தவர் எனக்கு அறிமுகமான ஒருவர் நான் சமாதான காலத்தில் தாயகத்தில் அரசியல் போராளியாக கடமையாற்றும் பொழுதும் என்னை அறிந்தவர் முழுமையாக.
நோர்வேயில் ஸ்வீடனில் விடுதலைப் புலிகள் அமைப்பு சார்ந்து செயல்பட்ட அதிகமானவர்கள் எனக்கு நண்பர்கள் அறிமுகமானவர்கள்.மிகவும் அவசரமாக
ராணுவத்திடம் பறிபோன நிலங்களை மீட்பதற்காக நிதி சேகரிப்பில் மிகவும் ஆர்வமாக செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள்.ஒருவரிடம் குறைந்தது 5,000 KR தொடக்கம் 10 000KR(இலங்கை மதிப்பில் குறைந்தபட்சம் ஒரு லட்சம் தொடக்கம் 2 லட்சம் வரை)கண்டிப்பாக வழங்க வேண்டும் என்ற உத்தரவு ஆனால் சிலரை வற்புறுத்தி அதிக தொகையை பெற்றுக் கொண்டார்கள்.
கையில் காசு இல்லாதவர்கள் வங்கிக் கடன் அட்டைகள் மூலம் காசை வழங்கி வைத்தார்கள்.சிலருக்கு போலி வாக்குறுதிகள் வழங்கப்பட்டு அதிகமான தொகை பெற்றுக் கொள்ளப்பட்டது.நோர்வே தலை நகரத்தில் இருக்கும் எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவரிடம் பொய்யான வாக்குறுதிகளை கூறி அதாவது மீண்டும் நாங்கள் ராணுவத்திடம் பறிபோன நிலங்கள் அனைத்து கைப்பற்றி விடுவோம் அதன்பின் நோர்வேயில் உங்களுக்கு மிகவும் தகுதியான ஒரு பதவியை தருவோம் என்று கூறி 5000KR நோர்வே காசுக்கு வழியில்லாத ஒருவரிடம் 50,000 KR பெற்றுக்கொண்டார்கள் இப்படி பல பேரிடம்.
இவர்கள் அவசரமாக நிதி சேகரிக்கும் பொழுது எனக்கு தெரிந்த நண்பர்கள் அறிமுகமானவர்கள் என்னை தொடர்பு கொண்டு.ஸ்ரீ காசு கேட்கிறார்கள் கொடுக்கலாமா என்று அதிகமானவர்கள் கேட்டார்கள் அவர்களுக்கு நான் கூறிய பதில் கொடுக்காதீர்கள் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள் யுத்தம் முடிந்ததும் எமது மக்களின் வாழ்வை கட்டியெழுப்புவதற்கு என்று.
இந்தத் தகவல் நிதி சேகரித்தவர்களின் காதுகளுக்கு சென்றுவிட்டது என்னை துரோகியாக முத்திரை குத்த தொடங்கிவிட்டார்கள் இது எனக்கு பழகிப் போன ஒன்று.நான் தாயகத்தில் சமாதான காலத்தில் அரசியல் செய்த பொழுது மக்களுக்காக உண்மையாக செயல்பட்ட பொழுது இதேபோல் முத்திரை குத்தப்பட்டேன் சமாதான காலத்தில்.அதன் காரணமாகத்தான் தாயகத்தை விட்டு வெளியேறினேன் மிகுந்த சிரமத்தின் மத்தியில்.
நான் சொல்லிய கருத்தையும் மீறி அதிகமானவர்கள் நிதி வழங்கி வைத்தார்கள் நிச்சயம் எமது தாய்மண்ணை மீட்டெடுப்போம் என்று.
நான் யதார்த்தத்தை மிகவும் புரிந்துகொண்டு செயல்படுபவன் எப்பொழுதுமே.நிச்சயம் எனக்கான பதில் கிடைக்கும் என்று காத்திருந்தேன்.
அன்று நோர்வே சுவீடன் உள்ளடங்கலாக நிதி சேகரிப்பதற்கு நியமிக்கப்பட்ட முக்கிய ஒருவரிடம் 2650 விபரங்கள் இருந்தன நான் இறுதியாக அவரை சந்திக்கும் பொழுது 2000 பேருக்கு மேல் நிதியை வழங்கி அந்த பட்டியலில் முதன்மை வகித்தார்கள்.யுத்தம் முடிவுக்கு வரப்போகிறது இவர்கள் சேர்க்கும் நிதிகள் அங்கு சென்றடையாது என்பது எனக்கு உறுதியாகத் தெரியும் ஆனால் என்னை நம்புவதற்கு யாரும் இல்லை அன்று.
2009 ஐந்தாம் மாதம் 18ஆம் திகதி யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது.அதன் பின்னும் சில குறிப்பிட்ட மாதங்கள் சில பொய்யான வாக்குறுதிகளை வழங்கி கொண்டிருந்தார்கள் நிதி சேகரிப்பாளர்கள்.நிதியை வசூலிப்பதற்காக அவர்கள் கூறிய வார்த்தைகளை நான் இங்கு பதிவு செய்ய விரும்பவில்லை.
சில மாதங்கள் கடந்துவிட்டன.நான் அதிகமானவர்களுக்கு நிதியைக் கொடுக்க வேண்டாம் என்று கூறிய அத்தனை பேரும் என்னை தொடர்பு கொண்டு நிதியை சேகரித்தவரின் தொலைபேசி இலக்கத்தை கேட்கத் தொடங்கி விட்டார்கள் அவர் தலைமறைவாகி விட்டார்.அவர் மட்டுமல்ல அன்று முன்னின்று நிதியை சேகரித்த அத்தனை பேரும் ஒதுங்கிவிட்டார்கள் மறைந்து விட்டார்கள்.
உலகம் ஒரு உருண்டை எங்கு சுற்றினாலும் எங்கோ ஓரிடத்தில் சந்திப்புகள் உருவாக்கப்படும் தொடர்ந்து படியுங்கள்.
கடந்த வருடம் 2020 ஐந்தாம் மாதம் கொரோனா காரணமாக சுவீடன் நோர்வே டென்மார்க் பின்லாந்து நாடுகளில் கட்டுப்பாடுகளை நடைமுறைக்குக் கொண்டுவர தொடங்கிவிட்டார்கள் கொரோனாவை பார்த்து பயந்து.
நானும் எனது தாயாரும் 130 கிலோமீட்டர் தூரம் சென்றால் தான் எமது இலங்கையில் உற்பத்தியாகும் மரக்கறிகளை கொள்வனவு செய்ய முடியும்.
எனது காருக்காக எரிபொருள் நிரப்புவதற்காக ஒரு எரிபொருள் நிலையத்தில் காரை நிறுத்தினேன்.எனது காருக்கு முன்னுக்கு கோடைகாலத்தில் சொகுசு பேருந்தாக பயன்படுத்தப்படும் ஒரு வாகனம் எரிபொருள் நிரப்பிக் கொண்டு இருந்தது.அந்த வாகனத்தை பற்றி கூறுவதாக இருந்தால் சமைத்து சாப்பிடதற்கான வசதி முறைகள் உறங்குவதற்கு மற்றும் மலசலகூட வசதிகள் தொலைக்காட்சிப் பெட்டிகள் இப்படி அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய வாகனம்.எனக்கு முன்னே எரிபொருள் நிரப்பிக் கொண்டு இருக்கிறது.அதன் பெறுமதி இலங்கை மதிப்பில் 4 கோடி தொடக்கம் ஏழு கோடி வரும்.மிகவும் புதிய ரக வாகனம்.
எரிபொருளை பூர்த்தி செய்பவரின் பின்பக்கம் தான் எனக்கு தெரிகிறது முதுகு முழுதும் பச்சை குத்தி இருக்கிறார்.பார்ப்பதற்கு அழகாக இருந்தது.திரும்பும் பொழுது அவரின் முகத்தை பார்த்து அதிர்ந்து விட்டேன்.
காரைவிட்டு இறங்கி சென்று பக்கத்தில் பார்த்து விட்டு உரையாட தொடங்கினேன்.
வேறு யாரும் இல்லை தாயகத்திலிருந்து உணர்வோடு தேசிய சிந்தனையோடும் புலம்பெயர்ந்த தேசத்திற்கு வந்து இறுதி யுத்தம் வரை சுவீடன் நோர்வேயில் நிதி சேகரித்த பிரதானமானவர்.
எப்படி அண்ணா இருக்கிறீர்கள்?..என்னை தெரிகிறதா தம்பி எப்படி இருக்கிறீர்கள்?..ஓம் அண்ணா நான் நலமாக இருக்கிறேன்.உங்களைப் பார்த்து 10 வருடங்கள் கடந்து விட்டன..ஓம் தம்பி.
எங்கே போகிறீர்கள்?கொரோனா தானே வீட்டில் இருப்பதை விட பாதுகாப்பான இடத்தில் பொழுதை போக்குவோம் என்று போகிறேன்..
அண்ணா எப்படி போகிறது உங்களது பழைய செயல்பாடுகள் எல்லாம்?..அதை எல்லாம் நான் 2009 உடன் விட்டுவிட்டேன் இப்பொழுது நானும் எனது குடும்பமும்..
என்ன தொழில் செய்கிறீர்கள்?சிங்கப்பூர் துபாய் நாடுகளுக்கு சென்று நகையை எடுத்து வந்து ஐரோப்பிய நாடுகளில் விற்பனை செய்வது.நல்ல தொழில் அண்ணா
வாழ்த்துக்கள்
 
.
நீங்கள் என்ன தொழில் செய்கிறீர்கள்? நான் ஒரு உணவகத்தில் சமைக்கிறேன் அண்ணா.
என்ன அண்ணா அடையாளம் மாறிவிட்டீர்கள் தேசியம் உணர்வு உண்மையாக செயல்பட்ட ஒருவர் என்று நம்பினேன்.இப்படி உடம்பெல்லாம் பச்சை குத்தி இருக்கிறீர்கள்?மிக சொகுசான வாழ்க்கை வாழ்கிறீர்கள். அது எல்லாம் கடந்த காலம் தம்பி.சரி அண்ணா.
ஒரு கேள்வி உங்களை சந்தித்த படியால்.
2009 ஆம் ஆண்டு நீங்கள் நிதி சேகரிக்கும் பொழுது என்னை குற்றவாளியாக துரோகியாக அடையாளம் காட்டினீர்கள்.என்னை துரோகியாக முத்திரை குத்தி நீங்கள் நிதியை சேகரித்து அந்த நிதியை தாயகத்திற்கு அனுப்பினீர்களா அண்ணா?
தொடர்ந்து வாருங்கள் எனது அடுத்த பதிவில் முடிவு செய்கிறேன் நிகழ்கால தேசியம் சார்ந்த போலிகளை.மக்களுக்காக இன்றைய இளைய சமுதாயத்திற்காக மிகுந்த எதிர்ப்புக்கு மத்தியில் பதிவு செய்கிறேன்.நிகழ்காலத்தை எதிர்காலத்தை சிறந்த முறையில் எமது இளைய சமுதாயம் உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில்.
தரன் ஸ்ரீ💐💐💐
  • கருத்துக்கள உறவுகள்

.சிலருக்கு போலி வாக்குறுதிகள் வழங்கப்பட்டு அதிகமான தொகை பெற்றுக் கொள்ளப்பட்டது.நோர்வே தலை நகரத்தில் இருக்கும் எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவரிடம் பொய்யான வாக்குறுதிகளை கூறி அதாவது மீண்டும் நாங்கள் ராணுவத்திடம் பறிபோன நிலங்கள் அனைத்து கைப்பற்றி விடுவோம் 

நான் கூறிய பதில் கொடுக்காதீர்கள் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள் யுத்தம் முடிந்ததும் எமது மக்களின் வாழ்வை கட்டியெழுப்புவதற்கு என்று.

இந்தத் தகவல் நிதி சேகரித்தவர்களின் காதுகளுக்கு சென்றுவிட்டது என்னை துரோகியாக முத்திரை குத்த தொடங்கிவிட்டார்கள்

நான் தாயகத்தில் சமாதான காலத்தில் அரசியல் செய்த பொழுது மக்களுக்காக உண்மையாக செயல்பட்ட பொழுது இதேபோல் முத்திரை குத்தப்பட்டேன் சமாதான காலத்தில்.அதன் காரணமாகத்தான் தாயகத்தை விட்டு வெளியேறினேன் மிகுந்த சிரமத்தின் மத்தியில்.

நான் யதார்த்தத்தை மிகவும் புரிந்துகொண்டு செயல்படுபவன்

இவர்கள் சேர்க்கும் நிதிகள் அங்கு சென்றடையாது என்பது எனக்கு உறுதியாகத் தெரியும் 

-------------------------------------------------------------------------------------------------------------

என்ன அண்ணா அடையாளம் மாறிவிட்டீர்கள் தேசியம் உணர்வு உண்மையாக செயல்பட்ட ஒருவர் என்று நம்பினேன்.இப்படி உடம்பெல்லாம் பச்சை குத்தி இருக்கிறீர்கள்?

என்னை துரோகியாக முத்திரை குத்தி நீங்கள் நிதியை சேகரித்து அந்த நிதியை தாயகத்திற்கு அனுப்பினீர்களா அண்ணா?

நிகழ்கால தேசியம் சார்ந்த போலிகளை.மக்களுக்காக இன்றைய இளைய சமுதாயத்திற்காக மிகுந்த எதிர்ப்புக்கு மத்தியில் பதிவு செய்கிறேன்.

 

சார அம்சம் இதுதான் ..
நிகழ்கால தேசியம் சார்ந்த ?????  
பதிவுகள் இன்னும் வருமாம். 

தேசிய உணர்வு சார்ந்த கழுகுகளிற்கு மிக அதிகமான இரை கிடைத்தது சுவிற்சர்லாந்தில் தான். கிட்டத்தட்ட முள்ளிவாய்கால் பேரழிவு போல ஒன்றை ஏற்படுத்தி மக்களின் துன்பத்தில் இரை தேடின.  பாதிக்கப்பட்ட அனைவருமே முன்பு தேசியத்திற்காக விரும்பி பங்களிப்பு செய்தவர்களே. ஏற்கனவே தேசிய விருப்பில் இருந்த மக்கள் விசேடமாக குறிவைக்கப்பட்டு வாய்சவடால்கள் மூலம் உசுப்பேற்றப்பட்டு அவர்களின் சக்திக்கு மிஞ்சி பல்லாயிரம் பிராங்க் வங்கிகளில் கடனெடுக்க நிர்பந்திக்கப்பட்டனர். 

பல்வேறு தந்திரோபாயங்கள் பிரயோகிக்கப்பட்டன. நிதி சேகரிக்க சென்றவரே தனது பெயரில் மிக பெரிய தொகைக்கு கடன் எடுத்து கொடுத்ததாக போலிப்  பத்திரம் தயாரிக்கப்பட்டு அதை காட்டி உணர்வூட்டப்பட்டனர். சில இடங்களில் பேசப்பட்டதற்கு மேலதிகமாக தொகை மாற்றப்பட்டு பல ஆயிரம் பிராங் பெறப்பட்டது. அதற்காக போலி சம்பள பத்திரம் தயாரிக்கப்பட்டது. முதலாவது கட்டுத்தொகைக்கான கடிதம் வங்கியில் இருந்து வரும் போது தான் எவ்வளவு கடனெடுத்ததாக பாதிக்கப்பட்டவர் அறிந்து கொண்டார். அந்த நேரத்தில் நிதி சேர்த பலரின் தொலைபேசிகள் அணைக்கப்பட்டன. அழைத்து சென்ற உள்ளூர் பிரநிதிதியே வாங்கி கட்டினார். ஆனால் அவரால் எதுவும் செய்ய முடியாது. 

முன்பு தேசிய நிகழ்வுகள் அனைத்துக்கும் ஆர்வத்தோடு வரந்து பங்களிக்கும் பலர் தேசியம் என்ற சொல்லை கேட்டாலே வெறுத்து ஓடி ஒதுங்கும் நிலையை ஏற்படுத்தினர். இங்கு நடந்த  சம்பவங்களை எழுத வெளிக்கிட்டால் பல பக்கங்கள் நீளும்.  

 

 

  • கருத்துக்கள உறவுகள்
On 20/6/2021 at 15:50, tulpen said:

தேசிய உணர்வு சார்ந்த கழுகுகளிற்கு மிக அதிகமான இரை கிடைத்தது சுவிற்சர்லாந்தில் தான். கிட்டத்தட்ட முள்ளிவாய்கால் பேரழிவு போல ஒன்றை ஏற்படுத்தி மக்களின் துன்பத்தில் இரை தேடின.  பாதிக்கப்பட்ட அனைவருமே முன்பு தேசியத்திற்காக விரும்பி பங்களிப்பு செய்தவர்களே. ஏற்கனவே தேசிய விருப்பில் இருந்த மக்கள் விசேடமாக குறிவைக்கப்பட்டு வாய்சவடால்கள் மூலம் உசுப்பேற்றப்பட்டு அவர்களின் சக்திக்கு மிஞ்சி பல்லாயிரம் பிராங்க் வங்கிகளில் கடனெடுக்க நிர்பந்திக்கப்பட்டனர். 

பல்வேறு தந்திரோபாயங்கள் பிரயோகிக்கப்பட்டன. நிதி சேகரிக்க சென்றவரே தனது பெயரில் மிக பெரிய தொகைக்கு கடன் எடுத்து கொடுத்ததாக போலிப்  பத்திரம் தயாரிக்கப்பட்டு அதை காட்டி உணர்வூட்டப்பட்டனர். சில இடங்களில் பேசப்பட்டதற்கு மேலதிகமாக தொகை மாற்றப்பட்டு பல ஆயிரம் பிராங் பெறப்பட்டது. அதற்காக போலி சம்பள பத்திரம் தயாரிக்கப்பட்டது. முதலாவது கட்டுத்தொகைக்கான கடிதம் வங்கியில் இருந்து வரும் போது தான் எவ்வளவு கடனெடுத்ததாக பாதிக்கப்பட்டவர் அறிந்து கொண்டார். அந்த நேரத்தில் நிதி சேர்த பலரின் தொலைபேசிகள் அணைக்கப்பட்டன. அழைத்து சென்ற உள்ளூர் பிரநிதிதியே வாங்கி கட்டினார். ஆனால் அவரால் எதுவும் செய்ய முடியாது. 

முன்பு தேசிய நிகழ்வுகள் அனைத்துக்கும் ஆர்வத்தோடு வரந்து பங்களிக்கும் பலர் தேசியம் என்ற சொல்லை கேட்டாலே வெறுத்து ஓடி ஒதுங்கும் நிலையை ஏற்படுத்தினர். இங்கு நடந்த  சம்பவங்களை எழுத வெளிக்கிட்டால் பல பக்கங்கள் நீளும்.  

 

 

உங்களுக்கு  இவை  மட்டுமே  நன்றாக வரும்  என்பது தெரிந்தது தான்

எழுதுங்கோவன்

ஆனால்  பெயர் சாட்சிகளுடன் எழுதுங்கள்

துரோகிகளும்  மக்களது  பணத்தை  ஏப்பம் விட்டவர்களும் இனம்  காட்டப்படணும் என்பது எவ்வளவு  முக்கியமோ

அதே அளவு ஒரு சுற்றவாளியோ அல்லது எல்லோரையும்  ஒரு மூட்டைக்குள் போட்டு அடிப்பதோ தவிர்க்கப்படணும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.