Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜூன் 25இல் வெளியாகிறது மேதகு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

large.0C4E3C36-D13F-46B9-9E10-AC2A0BA1ED32.jpeg.49c62135b6aee2d5eab2ca47198bfb6d.jpeg

பல தடங்கல்கள், தமிழ் நாட்டில் தமிழ் தேசியத்தை குத்தகைக்கு எடுத்துள்ளவர்களின் உள்ளடி வேலைகள் எல்லாவற்றையும் தாண்டி, தமிழர்களால் நடத்தப்படும் OTT தளத்தில் ஜூன் 25 வெளியாகிறது மேதகு திரைப்படம்.

எந்த OTT தளமும் வெளியிட மறுத்த படத்தை BS Value என்று தாமே ஒரு தளம் தொடங்கி வெளியிடுவதாக அறிகிறேன்.

இந்த படத்துக்கு எழுந்த இந்திய ஆளும் வர்கத்தின், அவர்களின் ஏஜென்டுகளின் எதிர்ப்பு, இந்த படம் நமக்கானது என்ற நம்பிக்கையை தருகிறது.

படம் பார்த்த பின்தான் சொல்ல முடியும்.

இந்த படத்தை சமூக வலைதளங்களில் எவரும் டிரெண்ட் செய்யவில்லை என்பது கவலையான விடயம்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

Family Man - 2ற்கு மாற்றுப்படைப்பாக இருக்குமா? ஏனெனில் Family Manற்கு தேவையில்லாத விளம்பரத்தை நாங்களே கொடுத்துவிட்டோமோ என்ற எண்ணம் அதைப்பற்றி வரும் செய்திகளை வாசிக்கும் பொழுது ஏற்படுவதால் அதற்கு மாற்றுப்படைப்பாக ஏதும் செய்யமுடியவில்லை என்ற ஆதங்கம் இருக்கிறது.. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

Family Man - 2ற்கு மாற்றுப்படைப்பாக இருக்குமா? ஏனெனில் Family Manற்கு தேவையில்லாத விளம்பரத்தை நாங்களே கொடுத்துவிட்டோமோ என்ற எண்ணம் அதைப்பற்றி வரும் செய்திகளை வாசிக்கும் பொழுது ஏற்படுவதால் அதற்கு மாற்றுப்படைப்பாக ஏதும் செய்யமுடியவில்லை என்ற ஆதங்கம் இருக்கிறது.. 

அப்படி இருந்தால் சந்தோசம்🙏🏾.

இதை தமிழர்களிடம் கொண்டு சேர்ப்பதே கடினமாக இருக்கும் (அதனால்தான் முன்னர் இடம் கொடுத்த ஓடிடி தளங்கள் மீது வெளியிட வேண்டாம் என்று அழுத்தம் கொடுக்கப்பட்டது). 

படத்தின் மொழியும் தமிழில் மட்டுமே.

ஆகவே மாற்றுப்படைப்பாக இருந்தாலும் அதன் தாக்கத்தில் 1% இது எட்டினாலும் ஆச்சரியமே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

பார்க்கும் வழிமுறைகள்👆🏼

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, goshan_che said:

 

பார்க்கும் வழிமுறைகள்👆🏼

தகவலுக்கு… நன்றி, கோசான். 🙏🏽

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

 

பார்க்கும் வழிமுறைகள்👆🏼

நன்றி!!

 

On 23/6/2021 at 01:17, goshan_che said:

அப்படி இருந்தால் சந்தோசம்🙏🏾.

இதை தமிழர்களிடம் கொண்டு சேர்ப்பதே கடினமாக இருக்கும் (அதனால்தான் முன்னர் இடம் கொடுத்த ஓடிடி தளங்கள் மீது வெளியிட வேண்டாம் என்று அழுத்தம் கொடுக்கப்பட்டது). 

படத்தின் மொழியும் தமிழில் மட்டுமே.

ஆகவே மாற்றுப்படைப்பாக இருந்தாலும் அதன் தாக்கத்தில் 1% இது எட்டினாலும் ஆச்சரியமே.

என்னைப்பொறுத்தவரை, எங்களைப்பற்றி பொய்யான படங்கள் வருவதைவிட இப்படி ஒன்றை எடுத்ததை பாராட்டவேண்டும்.. 

ஆனால் இந்த படத்தைபற்றி எனது நட்புவட்டத்தின் WhatsApp chatல் போட்டபொழுது..

ஒரு குழு மெளனம் சாதித்தது.. இன்னொன்று “ எங்களது பிரச்சனைகள் சம்பந்தப்பட்ட படத்தை பார்ப்பதில்லை ஏனெனில் காயங்களை மீளவும் கிளறும்” என்றது.. 

மூன்றாவது “ தலைவரை வைத்து எடுத்து தாங்கள் நல்ல பெயரை சம்பாதிக்கிறார்கள்..இவர்களில் பாரிசாலனை தவிர மற்றவர்களைப்பற்றி நம்பமுடியாது .. இவர்கள் எல்லோரும் எங்களது பிரச்சனையை வைத்து நன்மை அடைகிறார்கள்.. எங்கட சனமும் அவர்களை தலைவைத்து கொண்டாடி உண்மையான பிரச்சனையான, இதற்குபின்னால் உள்ள திராவிட சதியை மறந்துவிடுவார்கள் etc etc “ என்றது.. 

இப்படித்தான் நாங்கள்.. 

உண்மையில் எங்களது சமூக பிரச்சனைகளைப்பற்றி, புலிகளின் போர் வரலாறுகளைப்பற்றி, தளபதிகளை பற்றிய குறிப்புகளை பற்றி தெரிந்தவர்கள்/ செய்யக்கூடிய ஆற்றல் உள்ளவர்கள் எத்தனையோ எழுதலாம், படமாக்கலாம் ஆனால் அப்படி அவர்களை செய்ய விடாமல் தடுப்பது எது என்பது தெரியவில்லை.. 

 

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் வாழ்வைச் சொல்லும் ‘மேதகு’ திரைப்படம் இன்று வெளியிடப்பட்டது

June 25, 2021
WhatsApp-Image-2021-06-25-at-10.49.08-PM

 

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் ஆரம்பகால வாழ்க்கையைச் சொல்லும் ‘மேதகு’ திரைப்படம், BS value OTT தளத்தில் இன்று வெளியானது.

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் ஆரம்பகால வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்யும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள படம், ‘மேதகு’. இதன், கதை, திரைக்கதை, வசனம் எழுதி த.கிட்டு இயக்கியுள்ளார். BS Value என்ற ஓடிடி தளத்தில் இந்தப் படம் இன்று வெளியாகி உள்ளது.

இலங்கையில் தமிழர்களின் உரிமைகள் எப்படியெல்லாம் பறிக்கப்பட்டு அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது என்பதையும், அதனை தனது சிறு வயது முதல் பார்த்து கோபமடைந்த ஒரு சாதாரண இளைஞன் எப்படி தனது இனத்தின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தும் முடிவுக்கு வருகிறான் என்பதை பற்றியும் மிகவும் யதார்த்தமாகவும், நேர்த்தியாகவும் படம் பிடித்துக்காட்டியுள்ளார் இயக்குனர்.

இந்த திரைப்படத்தை கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார் இயக்குனர் தி.கிட்டு. மேலும் ஒளிப்பதிவாளர் ரியாஸ், இசையமைப்பாளார் பிரவீன் குமார், கலை இயக்குனர் முஜிபூர் ரகுமான், படத்தொகுப்பு இளங்கோவன் மற்றும் திரை வண்ணம் விநாயகம் ஆகியோர் இணைந்து இத்திரைப்படத்திற்கு மெருகூட்டியுள்ளனர். இந்த திரைப்படத்தினை தஞ்சை குமார் மற்றும் சுமேசு இருவரும் தயாரிப்பு நிர்வாகத்தை மேற்பார்வையிட்டு இப்படைப்பினை உருவாக்கியுள்ளனர். தயாரிப்பு நிர்வாகத்தில் ஈஸ்வர் பாட்சா மற்றும் சதீசு இருவரும் துணை புரிந்துள்ளனர். இந்தப் படத்தில் பிரபாகரன் கதாபாத்திரத்தில் குட்டி மணி நடித்துள்ளார். விடுதலைப்புலிகள் இயக்கத்தை அவர் உருவாக்க அவரைத் தூண்டிய விடயங்கள் உள்ளிட்ட இளமைக் கால பிரபாகரனை காட்சிப்படுத்தி உள்ளனர்.

இந்தப் படத்திற்கு இந்திய திரைப்பட பிரபலங்கள் பலரும் வாழ்த்துச் செய்தியை பகிர்ந்தும், படம் வெற்றிபெற தங்கள் வாழத்துரைகளை சமூகவலைத் தளங்களில் பகிர்ந்தும் உள்ளனர். இந்த வகையில், இயக்குநர் சசிகுமார், அவரது ருவிட்டர் பக்கத்தில், ‘ஈழத்தின் போராட்டத்தையும், அர்ப்பணிப்பையும் உலகுக்கு உரக்கச் சொல்லும் படமாக ‘மேதகு’ உருவாகி இருக்கிறது. ஈழத்தின் மீதான உலகளாவிய நற்பார்வை பெருக இந்தப் படம் மகத்தான வெற்றி பெற வேண்டும். வெல்வோம்’ என்று பதிவிட்டிருக்கிறார்.

Capture-23.jpg?resize=653%2C511&ssl=1

மேலும் நடிகர் சத்தியராஜ் “மேதகு பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை திரிப்பவர்களுக்கு ‘மேதகு’ படம் நல்ல பதிலடியாக இருக்கும் என இந்த படத்தின் வெற்றிக்கு தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் ” முப்படை கட்டி ஆண்ட ஒப்பற்ற தமிழரினத்தின் பெருமை மாவீரர் தலைவர் ’மேதகு’ பிரபாகரன் அவர்களின் வரலாற்றை ஒட்டி பதிவு செய்யப்பட்டுள்ளது. மாபெரும் வெற்றியடைய வாழ்த்துகள்” எனது தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிக்கிறார்.

இவர்களுடன் நடிகர் ராஜேஷ், இயக்குனர் பொன்வண்ணன், இயக்குனர் சேரன், இயக்குனர் அமீர், இயக்குனர் மாரி செல்வராஜ், இயக்குனர் கவுதமன், மற்றும் இயக்குனர் நவீன் ஆகியோர் இந்த திரைப்படத்தின் வெளியீட்டு அறிவிப்பினை தங்கள் சமூகவலைத் தளங்களில் பகிர்ந்து பாராட்டி வாழ்த்துரை வழங்கியுள்ளனர்.

இந்த மேதகு திரைப்படம் வெளியாகும் BS value OTT தளம் ஏற்கனவே பிரபலமான Black sheep என்கின்ற நிறுவனத்தின் Pay Per View என்கின்ற வசதியின் கீழ் முதன்முறையாக வெளிவரவிருக்கின்றது.

 

https://www.ilakku.org/?p=53415

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.