Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடல் அரிப்பிற்கு உள்ளாகும் மன்னார் அல்லிராணி கோட்டை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடல் அரிப்பிற்கு உள்ளாகும் மன்னார் அல்லிராணி கோட்டை

July 4, 2021

154637242_262153265387016_58368143193275

மன்னார் முசலி பிரதேசத்திற்கு உட்பட்ட அரிப்புத்துறையில் அமைந்துள்ள தமிழர்களின் வரலாற்றை பறை சாற்றி நிற்கும் அல்லிராணி கோட்டையானது கடலரிப்பினால் பாதிக்கப்படும் நிலையில் உள்ளது.

இது தொடர்பாக அவ்வூர் மக்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

தமிழர்களின் மரபுரிமை வரலாற்று சின்னம் ஒன்று மெல்ல மெல்ல அழிவடைந்து கொண்டிருப்பதை எவரும் கண்டுகொள்ளாமல் இருக்கின்றார்கள்.

கடல் அரப்பிற்கு உள்ளாகிக் கொண்டிருக்கும் அல்லிராணி கோட்டைப் பகுதியில் சில வருடங்களுக்கு முன்பு கடலரிப்பு ஏற்பட்ட பகுதியில் 100 மீட்டர் அளவில் பாறைகள் போடப்பட்டு கோட்டை பகுதி மட்டும் கடலரிப்பினால் பாதிக்கப்படாமல் தடுப்பணை ஏற்படுத்தப்பட்டது.

ஆனால் தற்பொழுது கற்பாறைகள் போட்ட இடத்தை விட்டு அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் பாதிக்கப்படுகின்றது.  இது குறித்து பல முறை உரியவர்களிடம் தெரிவித்தும் எந்த தீர்வும் கிடைக்கவில்லை என்றனர்.

154637239_262153235387019_12549336473259

மேலும் கடல் அரிப்பு ஏற்படும் பகுதிகளில் விரைவாக கற்பாறைகளை கொண்டு தடுப்பணை அமைக்காவிட்டால் நிச்சயமாக இன்னும் சில வருடங்களில் தமிழர்களின் மரபுரிமை வரலாற்று சின்னமான அல்லிராணி கோட்டை அழிந்துவிடும் என்று அவ்வூர் மக்கள்  கவலை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை மன்னார் மாவட்டத்தில் கிழக்கு கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள கொக்கு படையான் போன்ற மீனவ கிராமங்களும் கடல் அரிப்பிற்கு உள்ளாகி கொண்டிருப்பதாக மக்கள் பல முறை அரசுக்கு தெரியப்படுத்தியுள்ளார்கள். ஆனாலும் எந்த தீர்வும் இது வரையில் எடுக்கப்படவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

https://www.ilakku.org/allirani-fort-arippu-east-mannar/

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு பிரித்தானிய ஆளுனர் முத்து வியாபாரத்தை கட்டுபடுத்தும் நோக்கில் கட்டிய டொரிஸ் கோட்டை அல்லவா?

கட்டியவர் பிடெரிக் நோர்த் என நினைகிறேன்.

நான் போய் பார்த்த போது காதல் ஜோடிகளின் சரணாலயமாக இருந்தது🤣.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

எத்தனை மணித்தியாலம் நிண்ட நீங்கள் அதை சொன்னால் தான் நாங்கள் கணக்கிட முடியும் எத்தனை  ஜோடிகளை கணக்கு எடுத்திருப்பியள் என 

இலங்கை தற்போது கடல் அரிப்பால்  அதிகம் பாதிக்கப்படுகிறது குறிப்பகா கிழக்கு இதை விட வேகம் அதிலும் அம்பாறை அதிகம் என சொல்லலாம் 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

எத்தனை மணித்தியாலம் நிண்ட நீங்கள் அதை சொன்னால் தான் நாங்கள் கணக்கிட முடியும் எத்தனை  ஜோடிகளை கணக்கு எடுத்திருப்பியள் என 

இலங்கை தற்போது கடல் அரிப்பால்  அதிகம் பாதிக்கப்படுகிறது குறிப்பகா கிழக்கு இதை விட வேகம் அதிலும் அம்பாறை அதிகம் என சொல்லலாம் 

ஒருமணத்தியாலம் அளவில் நின்றேன். இரெண்டு மாடி கட்டடம். மாடியின் தளம் மரத்தால் செய்திருப்பார்கள் போலும். மரம் இப்போ இல்லை ஆனால் மரம் கட்டைகள் போட்ட வளைகள் இருக்குது. படிகட்டும் உண்டு. ஏறி மேலே போய் முகப்பில் நின்றால் அந்த குடா முழுதும் பார்வைக்குள் வரும்.

நான் நிற்கும் போது மூன்று மோட்டார் சைக்கிள் நிண்டது ஆனால் ரெண்டு ஜோடிதான் கண்டனான்🤣.

  • கருத்துக்கள உறவுகள்

https://www.sundaytimes.lk/120304/Plus/plus_05.html
 
👆🏼இந்த கட்டுரையில் இந்த டோரிக் பங்களா பற்றிய ஆய்வு கட்டுரைகளின் விபரம் உள்ளது. 

உண்மையில் இது ஒரு கோட்டை அல்ல. கொஞ்சம் பெரிய ஆங்கில ஸ்டைல் பங்களா. (Bungalow style house). 
 
நேரில் போய் பார்த்தால் இது அண்மையில் கட்டபட்ட கட்டடம் என்பது தெளிவாகும். தவிரவும் இதை கட்டியது பற்றிய குறிப்புகளும் உள்ளன.

ஆனால் உள்ளூர் மக்கள் இதை அல்லிராணி கோட்டை என்றே அழைக்கிறார்கள்.

இணைப்புக்கு நன்றி தல.

இந்த கட்டுரையில் சில, உண்மையானவையா என்ற கேள்விகள் எழுகின்றன.

முக்கியமாக திகதியை பாருங்கள். 

‘The Doric’, residence of the first British Governor of Ceylon Frederick North (1798-1805) என்கிறார் கட்டுரையாளர்.

பண்டாரவன்னியன் வீழ்ந்தது: Wanni Chiefdom Fell : 31st October 1799

Crown colony: 25 March 1802 – 2 March 1815

Kandy Capture - 1815

Combined Ceylon 1834

Crown Colony of Ceylon: 1834 - 1948

அண்மையில் வாசித்தேன். லிங்கினை தேடி இணைக்கிறேன். 

ஒல்லாந்தரின் கிழக்கிந்திய கொம்பனிக்கு, கூலிப்படையாக பாதுகாப்பு கொடுத்தது சுவிஸ் நாட்டில் இருந்து இயங்கிய ஒரு படைப்பிரிவு. இவர்கள், மிகவும் ஆயுத பலம் பொருந்தியவர்களாக இருந்தார்கள்.

கிழக்கிந்திய கொம்பனி, ஒரு குறுக்கு வேலை பார்த்து, இந்த கூலி படையின் தலைமைக்கு, 1 மில்லியன் பவுண்ட் தருவதாக சொல்லி, ஒரு earl ஒருவரை லண்டனில் இருந்து சுவிசுக்கு அனுப்பியது.

கூலிப்படை தலைமை, இசைய, அவரது ஆணையை, கொண்டு போய், ஒரு ஸீஸ் கட்டியினுள் வைத்து, கொழும்பு துறைமுகத்தில் ஒல்லாந்த அதிகாரிகள் கண்ணில் படாமல் கடத்தி, அங்குள்ள கூலி படையின் ராணுவ அதிகாரிக்கு கொடுக்க, இரவோடிரவாக, அவர்கள் ஆதரவை விலக்க, ஒல்லாந்தர், கொழும்பில், இருந்து வெளியேறினார்கள், ஆங்கிலேயர்கள் உள்ளே வந்தார்கள்.

ஆகவே, மிகவும் பரபரப்பு மிக்க இந்த காலப்பகுதியில், கவர்னர் கொழும்பில் இல்லாமல், அரிப்பில், வீடு கட்டி தங்கி இருப்பார் என்று நினைக்கவில்லை. சிலவேளை, முன்பே இருந்த கோட்டையில் அவர் தங்கி இருந்து வன்னி யுத்தத்தினை நடாத்தியிருக்கலாம்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Nathamuni said:

இந்த வீட்டில் நோர்த் ஒரு போதும் தங்கவில்லை என்பதும், அதை கட்டுவித்தாலும் அதை வந்து பார்க்ககூட இல்லை என்பது வேறு எங்கோ வாசித்த நினைவு. இது பிரதானமாக முத்து வியாபாரத்தை கட்டுபத்த அமைக்கபட்ட ஒரு கட்டடம்.

ஒல்லாந்தரிடம் இருந்து இலங்கை ஆங்கிலேயர் கைக்கு போனதற்கும், பிரான்ஸ் கையில் போகாமைக்கும் பல அன்றைய புவிசார் அரசியல் காரணங்கள் உள்ளன. 

அதில் பிரதானமானது அப்போதைய ஒல்லாந்தின் ஆட்சியாளராகிய பிரின்ஸ் ஒரேஞ் (வில்லியம்) பிரெஞ்சு படைகளுக்கு பயந்து இங்கிலாந்தில் தஞ்சம் அடைந்தது. அவர் கியூ (Kew) வில் இருந்து கியூ கடிதங்கள் என ஒல்லாந்தின் ஒவ்வொரு குடியேற்ற நாடும் தற்காலிகமாக தம்மை பிரிட்டனிடம் ஒப்படைக்க வேண்டும் என எழுதினார்.

இதன் அடிப்படையில் ஒவ்வொரு ஒல்லாந்த கவனர்ரையும் பிரிட்டன் நெருக்கி நாடுகளை பெற்றது. அதில் கொழும்பில் நடந்த நெருக்குதலின் ஒரு அங்கம்தான் நீங்கள் சொல்லும் சம்பவம். ஆனால் தென்னாபிரிக்கா, இலங்கை உடபட பலநாடுகள் கைமாறியதன் பின்னான காரணம் - ஐரோப்பாவில் ஒல்லான்ந்துக்கு பிரான்சு கொடுத்த நெருக்கடியே.

தவிரவும், திருகோணமலை ஒல்லாந்து கமாண்டன் கியூ கடிதம் படி சரணடையாமல், போராடி பின் சரணடைந்தார்.

ஆனால் இதற்கு முன்பே திருமலையை, சென்னையை, பாண்டி சேரியை மையமாக வைத்து பல தொடர் கடற்போர்கள் பிரித்தானியாவுக்கும், பிரான்சுக்கும் நடந்தது. ஒரு சமயம் திருகோணமலையின் ஆளுகை பிரான்ஸ் வசமும் போனது.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

Quote

அப்போதைய ஒல்லாந்தின் ஆட்சியாளராகிய பிரின்ஸ் ஒரேஞ் (வில்லியம்) பிரெஞ்சு படைகளுக்கு பயந்து இங்கிலாந்தில் தஞ்சம் அடைந்தது.

அட... இது வேற நடந்ததா.... விளக்க முடியுமா?........எப்ப நடந்தது?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, goshan_che said:

நான் நிற்கும் போது மூன்று மோட்டார் சைக்கிள் நிண்டது ஆனால் ரெண்டு ஜோடிதான் கண்டனான்

நிலக்கீழ் சுரங்க ஆய்வுக்கு சென்ரார்கள் என்னவோ ?? தெரியல

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

அட... இது வேற நடந்ததா.... விளக்க முடியுமா?........எப்ப நடந்தது?

இதில் சுருக்கமான விளக்கம் உள்ளது.large.9F250333-C1D0-4447-8086-57BC7ED4E262.jpeg.bb8f43db0069836c87758129be16174f.jpeg

1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

நிலக்கீழ் சுரங்க ஆய்வுக்கு சென்ரார்கள் என்னவோ ?? தெரியல

இருக்கலாம். அருகில பற்றைகள் வேறு உள்ளது, கண்ணி வெடி அகற்றும் பணிக்கும் போயிருக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நிலக்கீழ் சுரங்க ஆய்வுக்கு சென்ரார்கள் என்னவோ ?? தெரியல

அப்ப நீங்களும் அல்லிராணி கோட்டைக்கு போயிருக்கிறியள்.
அடிக்கடி போயிருக்கிறியள்.
ராசனுக்கு சுரங்க பாதை தண்ணிபட்ட பாடம்.
அங்கை நீங்களும் அகழ்வாராய்ச்சி செய்திருக்கிறியள்.

ஆரோடை அல்லிராணி ரூர் எண்டது எனக்கு தேவையில்லாத வேலை.வாலிப வயதிலை இதெல்லாம் சகஜமப்பா:cool:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இன்னும் அந்த மாவட்டத்திற்கு நான் போகவில்லை அண்ணை அந்த இடமும் தெரியாது ஆனால் சில இடங்களில் படித்த நியாபகம் 

நான் ஏன் அந்த மாவட்டத்திற்கு போவான் இருக்கிறது நுவரேலியா அங்க நல்ல பூந்தோட்டமும் நல்ல குளிரான காலநிலையும் இருக்க அதுமட்டும் அல்லாமல் நல்ல பனிக்காடுகள் சுகமோ சுகம் கண்டியளோ குடைக்குள் மழை சாமியார்🤩

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

இதில் சுருக்கமான விளக்கம் உள்ளது.large.9F250333-C1D0-4447-8086-57BC7ED4E262.jpeg.bb8f43db0069836c87758129be16174f.jpeg

🙏

வரலாறு எழுதுபவர்கள், முழுவதுமாக புரியாமல் எழுதுகிறார்கள் என்று நினைக்கிறேன்.

வில்லியம் V, இங்கிலாந்து ஓடி வந்து கியூ மாளிகையில் தங்கி இருந்தார்.

ஆனால், அவர் எழுதிய கடிதங்களை, காலனி கவனர்கள் கண்டு கொள்ள மாட்டார்கள் என்று பிரித்தானியர்களுக்கு புரிந்து இருந்தது. அதுக்கு காரணம் இருந்தது.

பதவியில் இருந்து பயத்தில் ஓடிய, அகதியாக இருக்கும் ஒருவர் உத்தரவினை மதிப்பதா அல்லது, ஒல்லாந்தின் ஆட்சி பீடத்துக்கு புதிதாக வரக்கூடியவர்களின் உத்தரவினை மதிப்பதா என்ற குழப்பம் காலனி கவனர்கள் மத்தியில் இருந்தது.

ஆகவே, பிரிட்டன், இலங்கையை பொறுத்து வரையில் ஒரு தந்திரம் செய்த்து.

அதனை நேற்று சொல்லி இருந்தேன். 

இதை பாருங்கள். எமக்கே தெரியாத எவ்வளவு விடயங்கள் உள்ளன.

https://www.britishempire.co.uk/maproom/ceylon.htm

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

நான் மேலே தந்தது இலங்கை கல்வி வெளியீட்டு திணைக்களத்தின் பிரசுரம். இதை ஒரு நிபுணர்கள் குழுவே தயாரிக்கும். அதில் உள்ளவர்கள் எல்லாரும் வரலாற்று நிபுணர்கள். ஆகவே யாரும் இங்கே வரலாற்றை புரியாமல் எழுதவில்லை.

மேலேயே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. சில ஒல்லாந்து கவர்னர்கள் கியூ கடிதம் பிரகாரம் சண்டையின்றி சரணடைய சிலர் அதை ஏற்காமல் சண்டையிட்டு, தோல்வியுற்று சரணடைந்தனர்.  

கியூ கடிதங்களை ஏற்பதா இல்லையா என்ற குழப்ப நிலை ஒல்லாந்த குடியேற்ற கவர்னர்களிடம் நிலவியது. அவ்வாறான கட்டத்தில் நாடுகளை பொறுப்பேற்க்க, எதிர்க்கும் ஒல்லாந்து கவர்களை மடக்க பிரித்தானியா பல உத்திகளை கையில் எடுத்தது, அப்படி கொழும்பில் நடந்த ஒரு சிறு சம்பவம்தான் நீங்கள் சொல்வது.

இவை எல்லாம் தெளிவாக எழுதப்பட்டுள்ள வரலாறு. போற போக்கில் எழுதிவிட்டு போகமுடியாது.

நீங்கள் தந்த இணைப்பு மிக மேலோட்டமாக கொழும்பில் நடந்த நிகழ்வை மட்டும் சொல்லி - அப்படியே கவர்னர் தோற்றார், இலங்கை பிரித்தானிய வசமானது என முடிக்கிறது- ஆனால் தனியே இந்த சுவிஸ் பேரத்தால் மட்டும் இலங்கை வீழவில்லை. அது பல சம்பவங்களின் கோர்வையில் ஒரு சிறு சம்பவம். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நான் ஏன் அந்த மாவட்டத்திற்கு போவான் இருக்கிறது நுவரேலியா அங்க நல்ல பூந்தோட்டமும் நல்ல குளிரான காலநிலையும் இருக்க அதுமட்டும் அல்லாமல் நல்ல பனிக்காடுகள் சுகமோ சுகம் கண்டியளோ குடைக்குள் மழை சாமியார்🤩

ராசன் வேற லெவல்....😁

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

நான் மேலே தந்தது இலங்கை கல்வி வெளியீட்டு திணைக்களத்தின் பிரசுரம். இதை ஒரு நிபுணர்கள் குழுவே தயாரிக்கும். அதில் உள்ளவர்கள் எல்லாரும் வரலாற்று நிபுணர்கள். ஆகவே யாரும் இங்கே வரலாற்றை புரியாமல் எழுதவில்லை.

மேலேயே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. சில ஒல்லாந்து கவர்னர்கள் கியூ கடிதம் பிரகாரம் சண்டையின்றி சரணடைய சிலர் அதை ஏற்காமல் சண்டையிட்டு, தோல்வியுற்று சரணடைந்தனர்.  

கியூ கடிதங்களை ஏற்பதா இல்லையா என்ற குழப்ப நிலை ஒல்லாந்த குடியேற்ற கவர்னர்களிடம் நிலவியது. அவ்வாறான கட்டத்தில் நாடுகளை பொறுப்பேற்க்க, எதிர்க்கும் ஒல்லாந்து கவர்களை மடக்க பிரித்தானியா பல உத்திகளை கையில் எடுத்தது, அப்படி கொழும்பில் நடந்த ஒரு சிறு சம்பவம்தான் நீங்கள் சொல்வது.

இவை எல்லாம் தெளிவாக எழுதப்பட்டுள்ள வரலாறு. போற போக்கில் எழுதிவிட்டு போகமுடியாது.

நீங்கள் தந்த இணைப்பு மிக மேலோட்டமாக கொழும்பில் நடந்த நிகழ்வை மட்டும் சொல்லி - அப்படியே கவர்னர் தோற்றார், இலங்கை பிரித்தானிய வசமானது என முடிக்கிறது- ஆனால் தனியே இந்த சுவிஸ் பேரத்தால் மட்டும் இலங்கை வீழவில்லை. அது பல சம்பவங்களின் கோர்வையில் ஒரு சிறு சம்பவம். 

தல, நீங்கள் எழுதியதாக நான் சொல்லவில்லையே.

மஹாவம்சத்தினை சரித்திர பாடத்தில் சேர்த்த, இலங்கை கல்வி வெளியீட்டு திணைக்களம் ஏதோ எல்லாம் அறிந்தவர்கள் என்று எப்படி சொல்ல முடியும்?

ஆகவே, இவர்கள் சொல்வது எல்லாம் சரி என்று நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.

இலங்கைத்தமிழர் சரித்திரத்தினையே, தப்பும் தவறுமாக மாணவருக்கு சொல்கிறார்கள் என்று குற்ற சாட்டே உள்ளது.

அனைத்துக்கும் மேலே, வரலாற்று கதைகள் என்பது, சில தெரிந்த புள்ளிகளை, புனைவு கோடுகள் ஊடாக இணைக்கும் வேலை தான். ஆகவே அவர் சொல்வது சரி, இவர் சொல்வது பிழை என்பது தவறு.

வரலாறு எழுதுபவர்களின் முக்கியமான தவறு பொத்தாம் பொதுவாக எழுதுவது. வாஸ்கொ ட காமா இந்தியா வந்தார் என்று எழுதுவார்கள்.

பிரிட்டிஷ் காரர்கள் வரும்வரை இந்தியா என்ற நாடே இல்லை என்பதே நிதர்சனம்.

நீங்கள் தனது இணைப்பில், 1658ல் இலங்கையின் கரையோர பிரதேசங்கள் அனைத்தும் ஒல்லாந்தர் கட்டுப்பாடில் இருந்தது என்கிறார்கள். பிரிட்டிஷ்காரர் வரும்வரை இலங்கையே இல்லையே. அதாவது வன்னியும் அதன் இருபக்க கரையோரமும், கண்டி ராஜதானிக்கு பகுதிக்கு உள்பட்ட கிழக்கின் கரையோர பகுதிகளும், ஒரு குறித்த காலப்பகுதி வரை நீர்கொழும்பு பகுதியும் ஒல்லாந்தர் வசம் இருக்கவில்லை.

****

மேலும், ஒரு ஆரோக்கியமாக விவாதம் செய்யும் போது, தனிப்பட்ட முறையில் எடுத்தும் உங்களை தாக்குவதாக எடுத்து, பதில் அளிப்பது போல தெரிகிறதே, ஏன்? 

இங்கே நான் அறிந்ததை சொல்கிறேன், நீங்கள் அறிந்ததை சொல்கிறீர்கள். எல்லோரும், தெரியாததை தெரிந்து கொள்கிறோம். அதுக்காக நான் சொல்வது மட்டுமே சரி என்று சொல்ல முடியாது அல்லவா

நான் சொல்வது சரி, நீ சொல்வது பிழை என்று தனிப்பட்ட ரீதியில் எடுக்காமல் இருந்தால், விவாதம் ஆரோக்கியமாக தொடரும். இல்லாவிடில், வேறு திரியில் சந்திப்போம் என்று போய் கொண்டே இருக்க வேண்டியது தான். 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ராசன் வேற லெவல்....😁

முனிவர், ஆசிரமம் வைத்திருந்த போது பக்த (தை) கோடிகளுடன், தியானத்துக்கு போய் வந்த இடங்கள். 😄

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Nathamuni said:

மஹாவம்சத்தினை சரித்திர பாடத்தில் சேர்த்த, இலங்கை கல்வி வெளியீட்டு திணைக்களம் ஏதோ எல்லாம் அறிந்தவர்கள் என்று எப்படி சொல்ல முடியும்?

நீங்கள் இதை தூக்கி கொண்டு வருவீர்கள் என நினைத்தேன். அப்படியே நடக்கிறது 😎.

அவர்கள் புனைவது அண்மைய ஐரோப்பியர் வரலாற்றை அல்ல. அப்படி புனைந்தால் தாம் சொல்வது எல்லாமே புனைவு என்று ஆகிவிடும் என்ற தெளிவு அவர்களுக்கு உண்டு.

தவிர இவை எல்லாம் மிக நேர்த்தியாக பிரைமறி சோசில் உள்ள வரலாறு. ஆகவே யாரும் கதை புனைய முடியாது.

கல்வி வெளியீட்டு திணைகளம் மட்டும் அல்ல நான் மேலே சொன்னது பலராலும் ஏற்கப்பட்ட வரலாறு.

40 minutes ago, Nathamuni said:

அனைத்துக்கும் மேலே, வரலாற்று கதைகள் என்பது, சில தெரிந்த புள்ளிகளை, புனைவு கோடுகள் ஊடாக இணைக்கும் வேலை தான். ஆகவே அவர் சொல்வது சரி, இவர் சொல்வது பிழை என்பது தவறு.

இது மிக அண்மைய வரலாறு. இதில் புள்ளிகளை இணைக்க அதிக அவசியம் இல்லை. தவிர வரலாற்று கதை வேறு, வரலாறு வேறு.

42 minutes ago, Nathamuni said:

மேலும், ஒரு ஆரோக்கியமாக விவாதம் செய்யும் போது, தனிப்பட்ட முறையில் எடுத்தும் உங்களை தாக்குவதாக எடுத்து, பதில் அளிப்பது போல தெரிகிறதே, ஏன்? 

இங்கே நான் அறிந்ததை சொல்கிறேன், நீங்கள் அறிந்ததை சொல்கிறீர்கள். எல்லோரும், தெரியாததை தெரிந்து கொள்கிறோம். அதுக்காக நான் சொல்வது மட்டுமே சரி என்று சொல்ல முடியாது அல்லவா

நான் சொல்வது சரி, நீ சொல்வது பிழை என்று தனிப்பட்ட ரீதியில் எடுக்காமல் இருந்தால், விவாதம் ஆரோக்கியமாக தொடரும். இல்லாவிடில், வேறு திரியில் சந்திப்போம் என்று போய் கொண்டே இருக்க வேண்டியது தான். 

தனிப்பட்டு ஏதும் இல்லை. ஆனால் முன்பே சொல்லியது போல யூடியூப் விடியோக்கள், குவோரா, மேலே இணைத்தது போல  இணைய தளங்களில் உள்ளதை மட்டும் வைத்து நீங்கள் வரலாற்றை கதைக்கும் போது அதை மறுக்க வேண்டியதாகிறது. 

நான் சொல்வது மட்டுமே சரி என எழுதவில்லை. ஆனால், ஏலவே நான் தெளிவாக சொல்லியுள்ளேன்… இலங்கை ஒல்லாந்தரிடம் இருந்து பிரித்தானியரிடம் போனதற்கு மிக முக்கியமான, அடிப்படை காரணம், பிரான்சின் குடியரசு, பத்தாவிய குடியரசை ஒல்லாந்தில் நிறுவியதும், இளவரசர் ஒரேஞ் லண்டன் ஓடி வந்து, அங்கிருந்து கியூ கடிதங்களை வரைந்ததும்தான்.

இதில் கொழும்பில் முரண்டு பிடித்த ஒல்லாந்து கவர்னரை போரில் பலவீன படுத்த, பிரிடிஸ்சார் எடுத்த ஒரு நகர்வுதான் அவரின் ஒரு படைபிரிவை (சுவிஸ் பிரெஞ்சுகாரர்களால் ஆன தனியார் இராணுவம் mercenaries) அவரை விட அதிக கூலிக்கு வாங்கியது.

ஆனால் இந்த நிகழ்வு வரலாற்றில் ஒரு காற்புள்ளி (a footnote in history).

ஐரோப்பாவில் நிகழ்ந்த மாற்றாங்கள் நிகழ்ந்திராது விடின், கியூ கடிதம் இல்லாவிடில், ஒல்லாந்து அரசன் இங்கிலாந்தில் அபயம் கேட்கும் நிலை வந்திராவிடில் - இலங்கை ஒல்லாந்தரிடம் இருந்து ஆங்கிலேயருக்கு கைமாறி இராது.

இதுதான் வரலாறு.  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

வரலாறு எழுதுபவர்களின் முக்கியமான தவறு பொத்தாம் பொதுவாக எழுதுவது. வாஸ்கொ ட காமா இந்தியா வந்தார் என்று எழுதுவார்கள்.

பிரிட்டிஷ் காரர்கள் வரும்வரை இந்தியா என்ற நாடே இல்லை என்பதே நிதர்சனம்.

நீங்கள் தனது இணைப்பில், 1658ல் இலங்கையின் கரையோர பிரதேசங்கள் அனைத்தும் ஒல்லாந்தர் கட்டுப்பாடில் இருந்தது என்கிறார்கள். பிரிட்டிஷ்காரர் வரும்வரை இலங்கையே இல்லையே. அதாவது வன்னியும் அதன் இருபக்க கரையோரமும், கண்டி ராஜதானிக்கு பகுதிக்கு உள்பட்ட கிழக்கின் கரையோர பகுதிகளும், ஒரு குறித்த காலப்பகுதி வரை நீர்கொழும்பு பகுதியும் ஒல்லாந்தர் வசம் இருக்கவில்லை

மன்னிக்கவும் இது எழுதுபவர் பிழை அல்ல வாசிப்பவரின் கிரகிப்பு குறை.

வாஸ்கொடகாம “இந்தியா” வந்தார். இபின் பதூதா “இலங்கை” வந்தார் என எழுதும் வரலாற்று நிபுணர்களுக்கு அந்த காலங்களில் “இந்தியா” “இலங்கை” என்ற நாடுகள் இல்லை என்பது தெரியாமல் இல்லை.

“இன்று இந்தியா எனப்படும் நிலப்பரப்பு” என்பதைதான் சுருக்கமாக அப்படி எழுதுவார்கள். 

இதே போலதான் குக் அவுஸ்ரேலியா போனார், கொலம்பஸ் அமெரிக்கா போனார் என்பதும்.

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, goshan_che said:

நீங்கள் இதை தூக்கி கொண்டு வருவீர்கள் என நினைத்தேன். அப்படியே நடக்கிறது 😎.

அவர்கள் புனைவது அண்மைய ஐரோப்பியர் வரலாற்றை அல்ல. அப்படி புனைந்தால் தாம் சொல்வது எல்லாமே புனைவு என்று ஆகிவிடும் என்ற தெளிவு அவர்களுக்கு உண்டு.

தவிர இவை எல்லாம் மிக நேர்த்தியாக பிரைமறி சோசில் உள்ள வரலாறு. ஆகவே யாரும் கதை புனைய முடியாது.

கல்வி வெளியீட்டு திணைகளம் மட்டும் அல்ல நான் மேலே சொன்னது பலராலும் ஏற்கப்பட்ட வரலாறு.

இது மிக அண்மைய வரலாறு. இதில் புள்ளிகளை இணைக்க அதிக அவசியம் இல்லை. தவிர வரலாற்று கதை வேறு, வரலாறு வேறு.

தனிப்பட்டு ஏதும் இல்லை. ஆனால் முன்பே சொல்லியது போல யூடியூப் விடியோக்கள், குவோரா, மேலே இணைத்தது போல  இணைய தளங்களில் உள்ளதை மட்டும் வைத்து நீங்கள் வரலாற்றை கதைக்கும் போது அதை மறுக்க வேண்டியதாகிறது. 

நான் சொல்வது மட்டுமே சரி என எழுதவில்லை. ஆனால், ஏலவே நான் தெளிவாக சொல்லியுள்ளேன்… இலங்கை ஒல்லாந்தரிடம் இருந்து பிரித்தானியரிடம் போனதற்கு மிக முக்கியமான, அடிப்படை காரணம், பிரான்சின் குடியரசு, பத்தாவிய குடியரசை ஒல்லாந்தில் நிறுவியதும், இளவரசர் ஒரேஞ் லண்டன் ஓடி வந்து, அங்கிருந்து கியூ கடிதங்களை வரைந்ததும்தான்.

இதில் கொழும்பில் முரண்டு பிடித்த ஒல்லாந்து கவர்னரை போரில் பலவீன படுத்த, பிரிடிஸ்சார் எடுத்த ஒரு நகர்வுதான் அவரின் ஒரு படைபிரிவை (சுவிஸ் பிரெஞ்சுகாரர்களால் ஆன தனியார் இராணுவம் mercenaries) அவரை விட அதிக கூலிக்கு வாங்கியது.

ஆனால் இந்த நிகழ்வு வரலாற்றில் ஒரு காற்புள்ளி (a footnote in history).

ஐரோப்பாவில் நிகழ்ந்த மாற்றாங்கள் நிகழ்ந்திராது விடின், கியூ கடிதம் இல்லாவிடில், ஒல்லாந்து அரசன் இங்கிலாந்தில் அபயம் கேட்கும் நிலை வந்திராவிடில் - இலங்கை ஒல்லாந்தரிடம் இருந்து ஆங்கிலேயருக்கு கைமாறி இராது.

இதுதான் வரலாறு.  

ஐரோப்பாவில் நிகழந்த நீங்கள் சொன்ன மாறுதலுக்கும் மேலாக, பிரான்சின் அடாவடிகள் காரணமாக, டச்சு கிழக்கிந்திய கொம்பனி பெரும் கடன் நெருக்கடியில் சிக்கித்தவித்தது. அதன் மீன்பிடி, கிழக்கிந்திய ஏற்றுமதி, இறக்குமதி பெரிதும் பாதிக்கப்பட, அதனது பல கப்பல்களை இந்தியாவில், பெரும் பொருள் ஈட்டிக் கொண்டிருந்த ஆங்கில கிழக்கிந்திய கம்பனி வாங்கியிருந்தது.

இருந்தும், கடன் பெரிய பிரச்சனையாக இருந்தது. இந்த நிலையில் தான், தவிச்ச முயல் அடிப்பது போல, டச்சு கிழக்கிந்திய கொம்பனிகளின் காலணிகளை, அடிமாட்டு விலைக்கு வாங்குவது என்று ஆங்கில கிழக்கிந்திய கொம்பனி முடிவு செய்தது.

சுவிஸ் கூலிப்படை, சில டச்சு கிழக்கிந்திய கொம்பனி அதிகாரிகள் என்று ஏறிய வேண்டிய இடங்களில், பணத்தினை எறிந்து இலங்கை, தென் அப்பிரிக்காவினை 'வாங்கிப்' போட்டது.

கியூ கடிதங்கள் என்பது, தாம் செய்வது எல்லாமே, இங்கிலாந்தில் இருந்த, ஒல்லாந்த அரசரிடம் 'முறைப்படி' வாங்கியதாக காட்ட நடந்த வரலாறின் 'பூச்சூடல்'.

1664ம் ஆண்டில், டச்சு காலனியாக இருந்த நியூ ஆம்ஸ்டர்டாம், நியூ யார்க் ஆக ஆங்கிலேயர் கையில் விழுந்ததும் வேறு கதை.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

கொலம்பஸ் அமெரிக்கா போனார் என்பதும்.

அதை தான் சொல்கிறேன். நம்மை போல சும்மா வரலாறை விவாதிப்பவர்கள் சொல்லலாம். ஆனால் மாணவர்களுக்கு போதிப்பவர்கள் கவனமாக சொல்ல வேண்டும்.

இவர்கள் ஒருபோதுமே, பிரிட்டிஷ் காரர்கள் வரும்வரை, தீவு, தமிழர்கள் வேறாகவும், சிங்களவர்கள் வேறாகவும் ஐரோப்பியர் ஆளுகைக்கு உள்பட்டிருந்தது என்று சொல்லவே மாட்டார்கள். 

இதன் காரணமாகவே, தமிழர்களின் உரிமைகளை மதிக்காத கல்வி சிங்களவர்களுக்கு புகட்டப்பட்டுள்ளது. மகாவம்சம் சேர்ந்து கொள்ள, தமிழர்கள் வந்தேறு குடிகள், நாடு நமது என்றே படிக்கிறார்கள்.

கொலம்பஸ் போனது இந்தியாவுக்கு: வெஸ்ட் இந்தியா இன்றும் இருக்கிறது. அங்கே அவர் பார்த்த பூர்வ குடிகளை, சிவப்பு இந்தியர் என்று சொன்னார், இன்றும் அவ்வாறே அழைக்கப்படுகின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Nathamuni said:

ஐரோப்பாவில் நிகழந்த நீங்கள் சொன்ன மாறுதலுக்கும் மேலாக, பிரான்சின் அடாவடிகள் காரணமாக, டச்சு கிழக்கிந்திய கொம்பனி பெரும் கடன் நெருக்கடியில் சிக்கித்தவித்தது. அதன் மீன்பிடி, கிழக்கிந்திய ஏற்றுமதி, இறக்குமதி பெரிதும் பாதிக்கப்பட, அதனது பல கப்பல்களை இந்தியாவில், பெரும் பொருள் ஈட்டிக் கொண்டிருந்த ஆங்கில கிழக்கிந்திய கம்பனி வாங்கியிருந்தது.

இருந்தும், கடன் பெரிய பிரச்சனையாக இருந்தது. இந்த நிலையில் தான், தவிச்ச முயல் அடிப்பது போல, டச்சு கிழக்கிந்திய கொம்பனிகளின் காலணிகளை, அடிமாட்டு விலைக்கு வாங்குவது என்று ஆங்கில கிழக்கிந்திய கொம்பனி முடிவு செய்தது.

சுவிஸ் கூலிப்படை, சில டச்சு கிழக்கிந்திய கொம்பனி அதிகாரிகள் என்று ஏறிய வேண்டிய இடங்களில், பணத்தினை எறிந்து இலங்கை, தென் அப்பிரிக்காவினை 'வாங்கிப்' போட்டது.

கியூ கடிதங்கள் என்பது, தாம் செய்வது எல்லாமே, இங்கிலாந்தில் இருந்த, ஒல்லாந்த அரசரிடம் 'முறைப்படி' வாங்கியதாக காட்ட நடந்த வரலாறின் 'பூச்சூடல்'.

1664ம் ஆண்டில், டச்சு காலனியாக இருந்த நியூ ஆம்ஸ்டர்டாம், நியூ யார்க் ஆக ஆங்கிலேயர் கையில் விழுந்ததும் வேறு கதை.

டச்சு கிழகிந்திய கம்பெனிக்கு நெருக்கடி ஏற்பட காரணமே பிரான்சில் ஏற்பட்ட புதிய அரசும், அதன் ஒல்லாந்து மீதான அழுத்தமும்தான்.

கியூ கடிதங்கள் பூச்சூடல் அல்ல. பிரான்சினால் ஐரோப்பாவில் பலமிழக்க செய்யபட்டு கொண்டிருக்கும் ஒல்லாந்தின் காலனிகள் பிரிதானியாவிடமா அல்லது பிரான்சிடமா போய் சேர வேண்டும் என பிரான்சும், பிரித்தானியாவும் போட்ட போட்டியின், அதாவது நான் முதல் பதிவில் சொன்னது போல அன்றைய உலகின் புவிசார் அரசியலின் ஒரு அங்கமே அது.

ஒல்லாந்தில் தாம் உருவாக்க உதவிய கலக அரசின் (பத்தேவிய குடியரசு) மூலம் பிரான்சும், தம்மிடம் சரணடைந்த இளவரசர் மூலம் பிரித்தானியாவும் ஒல்லாந்த காலனிய நாடுகளை அடைய முயன்றன. 

இதில் பிரிதானிய வென்றது. இதில் பல சிறு சம்பவங்கள் உள்ளன. பெரும் கடற்போர்கள் பிரான்ஸ், பிரித்தானியா இடையே திருமலை கடலில் நிகழ்ந்துள்ளது. தரையிலும் துறைமுகம் இடைபட்ட காலம் பிரான்சின் ஆழுகையின் கீழ் வந்துள்ளது.

அப்படி ஒரு வரலாற்றின் சம்பவமே நீங்கள் சொல்லும் சுவிஸ் படையணி விவகாரமும். ஆனால் இதனால்தான் இலங்கை ஒல்லாந்தரிடம் இருந்து பிரித்தானியரிடம் போனது என்பது குருடன் யானை பார்த்ததை போல.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Nathamuni said:

அதை தான் சொல்கிறேன். நம்மை போல சும்மா வரலாறை விவாதிப்பவர்கள் சொல்லலாம். ஆனால் மாணவர்களுக்கு போதிப்பவர்கள் கவனமாக சொல்ல வேண்டும்.

இவர்கள் ஒருபோதுமே, பிரிட்டிஷ் காரர்கள் வரும்வரை, தீவு, தமிழர்கள் வேறாகவும், சிங்களவர்கள் வேறாகவும் ஐரோப்பியர் ஆளுகைக்கு உள்பட்டிருந்தது என்று சொல்லவே மாட்டார்கள். 

இதன் காரணமாகவே, தமிழர்களின் உரிமைகளை மதிக்காத கல்வி சிங்களவர்களுக்கு புகட்டப்பட்டுள்ளது. மகாவம்சம் சேர்ந்து கொள்ள, தமிழர்கள் வந்தேறு குடிகள், நாடு நமது என்றே படிக்கிறார்கள்.

கொலம்பஸ் போனது இந்தியாவுக்கு: வெஸ்ட் இந்தியா இன்றும் இருக்கிறது. அங்கே அவர் பார்த்த பூர்வ குடிகளை, சிவப்பு இந்தியர் என்று சொன்னார், இன்றும் அவ்வாறே அழைக்கப்படுகின்றனர்.

இல்லை. வரலாற்று நிபுணர்கள் வாஸ்கொடகாம இந்தியா வந்தார், கும் அவுஸ்ரேலியா போனார் என சொலவதற்கும் இலங்கைதீவின் ஆரம்ப வரலாற்றை திரிப்பதற்கும் பலத்த வேறுபாடு உண்டு.

இலங்கையில் போதிக்கபடும் வரலாறு நீங்கள் சொல்வது போல் இல்லை.

போத்துகேயத்கள், வரும் போது யாழ்பாண அரசு இருந்தது என்றே இலங்கையிலும் போதிக்க படுகிறது.

அதை புனைய முடியாது.

ஆனால் - இந்த யாழ்பாண அரசு ஒரு வன்தேறிகளின் கலக அரசு, சேனன் குதிகனோடு குதிரை விற்க வந்த, சோழர் படையில் வந்த தமிழர், சிங்களவர் நிலமான வடக்கில் எழுப்பிய அரசு என்றே போதிக்க படுகிறது. அதுதான் இனவாதத்தை வளர்கவும் உதவுகிறது.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

டச்சு கிழகிந்திய கம்பெனிக்கு நெருக்கடி ஏற்பட காரணமே பிரான்சில் ஏற்பட்ட புதிய அரசும், அதன் ஒல்லாந்து மீதான அழுத்தமும்தான்.

கியூ கடிதங்கள் பூச்சூடல் அல்ல. பிரான்சினால் ஐரோப்பாவில் பலமிழக்க செய்யபட்டு கொண்டிருக்கும் ஒல்லாந்தின் காலனிகள் பிரிதானியாவிடமா அல்லது பிரான்சிடமா போய் சேர வேண்டும் என பிரான்சும், பிரித்தானியாவும் போட்ட போட்டியின், அதாவது நான் முதல் பதிவில் சொன்னது போல அன்றைய உலகின் புவிசார் அரசியலின் ஒரு அங்கமே அது.

ஒல்லாந்தில் தாம் உருவாக்க உதவிய கலக அரசின் (பத்தேவிய குடியரசு) மூலம் பிரான்சும், தம்மிடம் சரணடைந்த இளவரசர் மூலம் பிரித்தானியாவும் ஒல்லாந்த காலனிய நாடுகளை அடைய முயன்றன. 

இதில் பிரிதானிய வென்றது. இதில் பல சிறு சம்பவங்கள் உள்ளன. பெரும் கடற்போர்கள் பிரான்ஸ், பிரித்தானியா இடையே திருமலை கடலில் நிகழ்ந்துள்ளது. தரையிலும் துறைமுகம் இடைபட்ட காலம் பிரான்சின் ஆழுகையின் கீழ் வந்துள்ளது.

அப்படி ஒரு வரலாற்றின் சம்பவமே நீங்கள் சொல்லும் சுவிஸ் படையணி விவகாரமும். ஆனால் இதனால்தான் இலங்கை ஒல்லாந்தரிடம் இருந்து பிரித்தானியரிடம் போனது என்பது குருடன் யானை பார்த்ததை போல.

நீங்கள் சொல்வதற்கு மேலாக, இன்னொரு காரணமும் உண்டு. 

பிரிட்டிஷ் இந்தியா.

பெரும் நாடு ஒன்றினை கட்டி எழுப்பிய பின்னர், அங்கே படை திரட்டிய பிரித்தானியர்களுக்கு எதிராக, புதுசேரியில் மட்டுமே இருந்த பிரான்ஸ் மோதி வெல்ல முடியாது என்ற நிதர்சனமும் இருந்தது. அதனாலே, ஐரோப்பிய கள நிலவரம் உடனடியாக தெரிய முடியாத ஒரு காலப்பகுதியில், பல டச்சு கவனர்கள், பிரிட்டிஷ் பக்கம் சாய்ந்தார்கள். 

--****--

நல்லது தல... நல்ல உரையாடல்.... நாளை தொடர்வோம். இரவு வணக்கம். 🙏

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.