Jump to content
  • 0

கடற்புலிகளுக்கு கடற்படையின் தரநிலைகள் இல்லாமல் தரைப்படை தரநிலைகளை வழங்கியது ஏன்?

Question

  • கருத்துக்கள உறவுகள்+
பதியப்பட்டது

விடுதலைப்புலிகளின் கடற்புலிகளுக்கான தரநிலைகள் ஒரு கடற்படையின் தரநிலைகளை ஒத்ததாக இல்லாமல் - அட்மிரல், வைஸ் அட்மிரல், கொமோடோர், கப்டன் போன்று - ஒரு தரைப்படையின் தரநிலைகளை ஒத்ததாக - லெப். கேணல், கேணல், மேஜர் போன்று - வழங்கப்பட்டது ஏன்? எதற்காக?

3 answers to this question

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஊகத்தின் அடிப்படையில்.

நேவியில் கேப்டன் என்பது ஆமியில் கேணலுக்கு சமானம்.  

ஆனால் புலிகளில் இறுதி பத்தாண்டுக்கு முன்னர் வரை வீரச்சாவின் பின்னே பதவி நிலைகள் கொடுத்தனர். 

2000 க்கு பிறகுதான் இருக்கும் போதே சில தளபதிகள் கேணல் என அடையாளப்படுத்த பட்டனர்.

எனவே ஏனைய இராணுவங்கள் போலன்றி புலிகளில் பதவி நிலை என்பது, அவர்கள் வீரச்சாவின் பின்னான ஒட்டுமொத்த போராட்ட வாழ்வின் மதிப்பீடாகவே இருந்தது.

இந்நிலையில் புலிகளின் தரை, கடற் படைகளுக்கு இடையில், ஒத்த தியாக வரலாறுக்கு வேறு பட்ட பதவி நிலையை கொடுப்பது குழப்பத்தை தரும் என்பதால் இதை தவிர்ந்திருக்கலாம்.

உதாரணமாக இரெண்டு போராளிகள் சரி சமமான தியாக வாழ்வு வாழ்ந்து வித்தாகிறார்கள் என வைப்போம்.

ஒருவர் தரைப்புலி. மற்றையவர் கடற்புலி.

பாரம்பரிய முறையின் படி, தரைபுலியை கப்டன் என்றும், கடற்புலியை கொமொடோர் என்றும் அழைகவேண்டி வரும் (நேவி கப்டன்>ஆமி கப்டன்). 

இதில் நியாயம் இல்ல என்பதால் - எல்லாரையும் ஒரே தரத்தில் இறுதி மதிப்பீடு செய்யும் முறை வந்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இயக்கத்துக்குள் உள்வாங்கப்பட்டு பயிற்சி கொடுக்கும் போது தரைப்படைகளுக்கான பயிற்சியே வழங்கப்பட்டு அதன் பின்னர் அவர்களில் இருந்து தேர்வு சிலர் செய்யப்பட்டு கடற்படைக்கான  விசேட பயிற்சிகள் வழங்கப்படுகின்ற காரணமாக இருக்குமோ?
 அரசாங்கம் தனித்தனியாகவே படைகளுக்கான  ஆட்சேர்ப்பு, பயிற்சிகளை வழங்குகிறது என நினைக்கிறன்.  

  • கருத்துக்கள உறவுகள்+
Posted
3 hours ago, goshan_che said:

3 hours ago, Sasi_varnam said:

இயக்கத்துக்குள் உள்வாங்கப்பட்டு பயிற்சி கொடுக்கும் போது தரைப்படைகளுக்கான பயிற்சியே வழங்கப்பட்டு அதன் பின்னர் அவர்களில் இருந்து தேர்வு சிலர் செய்யப்பட்டு கடற்படைக்கான  விசேட பயிற்சிகள் வழங்கப்படுகின்ற காரணமாக இருக்குமோ?
 அரசாங்கம் தனித்தனியாகவே படைகளுக்கான  ஆட்சேர்ப்பு, பயிற்சிகளை வழங்குகிறது என நினைக்கிறன்.  

மிக்க நன்றி... 
என்னெண்டு சொன்னால் இந்தக் கேள்விக்கு எனக்கு எந்த மறுமொழியும் தெரியவில்லை. ஆனால் நீங்கள் இருவரும் சொன்னதை வைத்துப் பார்த்தால் அப்படியாக இருக்கலாம் என்ற ஒரு ஊகத்தினை எனக்கும் வழங்குகிறது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.