Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீரத்தளபதி மேஜர் 'அன்ரனி'யின் வீரமும் வஞ்சகன் 'கருணா'வின் வஞ்சனையும்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்+

வீரத்தளபதி மேஜர் அன்ரனியின் வீரமும் வஞ்சகன் கருணாவின் வஞ்சனையும்.

 

(தடித்த எழுத்துக்களுக்கு மாற்றியவன் நானே)

 

Major Antony.png

 

தமிழீழத்தில் இயற்கையவள் அள்ளித்தந்த பச்சைவயல் வெளிகளும் அருவிகளும் அழகு சேர்க்கும் அம்பாறையின் கல்முனை தந்த தமிழ்வீரன் அவன் நல்ல திடகாத்திரமான ஆனழகன்,உயர்ந்த உருவம், ஊடுருவும் பார்வை, நிமிர்ந்தநடை, உச்சிமீது வானிருந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே என்ற மகாகவியின் பாடலைப்போல அவன் செயல்கள். சிலோன் சில்வஸ்ரார் என்றெல்லாம் அவனை அழைத்து கொண்டே போகலாம்.

அம்பாறையில் இப்படியெல்லாம் பெயர் சொல்ல ஓருவர் இருந்தான் என்றால் அவன் தான் மேஜர் அன்ரனி என்ற தமிழ்மறவன். தனது வீரத்தினை நிலை நாட்ட 1983ல் தமழீழவிடுதலைப்புலிகளில் தன்னை இனைத்து கொண்ட இவன் இந்தியாவில் 5 வது பயிற்சி முகாமில் தனது ஆயுதப்பயிற்சியை பெற்றுக்கொண்டான். பல முனைத்தாக்குதலில் அரசபடைக்கெதிராக ஈடுபட்ட அன்ரனி IPKF காலத்தில் அம்பாறைத் தளபதியாகச் செயல்பட்டான். அவ்வேளைகளில் IPKF யினருக்கு எதிரான பல தாக்குதல்களை முன்னின்று செய்தவன் இவனாகும்.

தேசியத்தலைவர் மீது மேஜர் அன்ரனி வைத்திருந்த நம்பிக்கையும் விசுவாசத்திற்கும் ஒரு எடுத்துக்காட்டுச் சம்பவத்தை முன்வைக்கிறேன். அதாவது IPKF காலமது வன்னிக்காட்டிக்கு தேசியத்தலைவரைச் சந்திக்க அன்ரனி செல்கின்றான். அவ்வேளை கருணாவும் வன்னியில் நிற்கிறான். அன்ரனிக்கு நன்கு பழக்கமான போராளி ஒருவர் அன்ரனியிடம் கேட்கிறார்!

ஏன் அன்ரனி வன்னியில் IPKF ற்கு எதிராக நாம் சன்டையிடுவதைப்போல மட்டக்களப்பில் உள்ளவர்களால் சன்டை செய்யமுடியவில்லை!

என்ன காரணம்?

அதற்கு அன்ரனி புன்முறுவலுடன் அந்த போராளிக்கு ஒரு உதாரணக் கதையைக் கூறுகின்றான். அதாவது காட்டில் வேட்டை நாய் ஒன்று காட்டு முயலொன்றை துரத்துகிறது. முயல் ஒடிக்கொண்டேயிருக்கிறது.

கொஞ்சநேரத்தில் ஒரு புளியமரத்தின் கீழ் ஒடி நின்ற முயல் மீண்டும் புது வீரத்துடன் வேட்டை நாயை விரட்டுகின்றது. இதை எதிர்பார்க்காத வேட்டை நாய் பயத்தினால் திரும்பி ஓட்டம் பிடித்தது.

ஏனனில் முயலுக்கு வீரம் வந்த அந்த புளியமரத்தில் தானாம் வீரபாண்டியன் கட்டப்பொம்மனை ஆங்கிலேயர் துக்கிலிட்டனராம் அதனால் தானாம் அந்த முயலுக்கு வீரம் வந்தாம்.

ஏனனில் தேசியத்தலைவரின் அரவனைப்பிலும் நேரடிக்கண்காணிப்பிலும் உள்ளவர்களுக்கு ஒரு தனித்துவமான திறமையும் வீரமும் அங்கு ஊட்டப்படுகிறது மட்டுமல்ல நிழழாக அவர்களைப்படர்கிறது என்றே சொல்ல்லாம். அதன் பிரதிபலிப்புத்தான் வன்னிக்காட்டியில் IPKF யினர் வாங்கிய அடி!

இச்சம்பவத்தை மேஜர் அன்ரனி நாசுக்காக சுவாரசியமாக வேட்டைநாய் முயல் கதையாக அந்த போராளியிடத்தில் எடுத்துதம்பினான். இந்த நிகழ்வால் ஒன்றை புரிந்து கொள்ளாலாம் தேசியத்தலைவரிடத்தில் அன்ரனி வைத்திருந்த விசுவாத்தையும் தலமையிடத்தில் அவனுகிருந்த நம்பிக்கைக்கும் இது ஒரு எடுத்துகாட்டாகும்.

அன்ரனிக்கு ஏற்கனவே பிஸ்டல் பழக்கப்பட்டது தான். ஆனாலும் அதில் பெரியளவு தேர்ச்சி பெற்றவனல்ல! தலைவரை அன்ரனி சந்திக்க சென்ற வேளையில் அவர் அன்ரனியையழைத்து பிஸ்டலால் இலக்கொன்றைச் சுடச் சொன்னார்.

தலைவருக்கு முன்னால் இலக்கைச் சுடுவதற்கு தயங்கி நின்ற அன்ரனியை அவர் அழைத்து தைரியம் ஊட்டி சுடக்கூறினார்.

அன்ரனிக்கு திரும்ப திரும்ப தலைவர் ஊக்கம் கொடுத்தார். இதனால் அந்த ஊக்குவிப்பால் அன்ரனியும் பிஸ்டலால் குறிபார்த்துச்சுடுவதலில் திறமையுள்ள வல்லுனரான தளபதியாகிவிட்டான்.

இச்சம்பவத்தை நேடியாக நோக்கிய கருணாவுக்கு அன்ரனி மீது பொறாமையும், வெறுப்பும் உண்டாகின. இவ்வேளையில் முல்லைத்தீவிப் பகுதில் IPKFனரின் முகாம் ஒன்றின் மீது தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது.

இச்சம்பத்தில் எறிகனைத்தாக்குலில் ஈடுபட்டு தாக்குலை சிறப்பாக வெற்றியடையச் செய்து அன்ரனி துனைபுரிந்தான். இதனால் தேசியத்தலைவரிடத்தில் அன்ரனி பாராட்டையும் பெற்றான்.

இக்கால கட்டத்தில் பயிற்சிப்பாசறை ஒன்றில் சகபோராளிகளுக்கு திறமையாக இராணுவப்பயிற்சியை அன்ரனி வழங்கினான்.

இதை நேரடியாக உற்று நேக்கிக்கொண்டியிருந்த கேணல் கிட்டு அன்ரனியை மிகவும் பாராட்டி ஒரு திறமைமிற்க கொமாண்டர் என்று தேசியத்தலைவருக்கு சிபார்சு செய்தார். இவ்வேளையித்தான் அன்ரனிக்கு தலைவர் M 203 ரைபிள் லேஞ்சர் வழங்கினார்.

தேசியத்தலைவராலும் முதி நிலைத்தளபதியாலும் சகபோராளிகளாலும் திறமையக பாராட்டப்பெற்ற அன்ரனியை நினைத்த துரோகி கருனாவின் உள்ளம் வஞ்சகத்தால் வேகமாகத் துடிப்பு கொண்டது. அந்த துரோகின் உள்ளமதில் ஆயிரம் கேள்விகள் துளைபோட்டன! அன்ரனி என்னை மிஞ்சி விடுவானோ?

எனது மதிப்பு இனிவரும்காலங்களில் குறைந்து விடுமா?

சீ!சீ! அப்படி நடக்காது! நடக்கவும் விடமாட்டேன் அந்த ஆயிரம் கேள்விகளுக்கும் உடன் விடை தெரியாமல் புனிதபுமி முகாமிலிருந்த உளுவிந்த மரமொன்றை தலையை பிய்த்தபடி பலதடவை கருணா என்ற அந்தக்காட்டு பன்றி வலம் வந்தது. இருப்பினும் அந்த பன்றின் மனம் குறிப்பெடுத்து கொண்டது. அன்ரனியை எப்படி ஓரம்கட்டி வீழ்த்தி பழிதீர்க்கலமென்று…!

மீண்டும் அம்பாறைக்கு பயணமான அன்ரனி அங்கு வன்னியில் தலைவரிடத்தில் தான் பெற்ற அனுபத்தையும் நேரடியாக தலைவரிடத்தில் பெற்ற பிஸ்டல் பயிற்சியையும் கூறி தற்போது தான் பிஸ்டல் சுடுவதில் அனுபம் பெற்று விட்டேன் என்றும் குறிதவறாமல் இலக்கு ஒன்றை சுட்டும் காட்டினான்.

அம்பாறையில் ;IPKFயினருக்கும் தமிழ்தேசவிரோதக்கும்பலுக்கு எதிராக தாக்குதலலை துரிதப்படுத்தப்போவதாக சக போராளிகளிடத்தில் அன்ரனி எடுத்துக் கூறினான். இக்கூற்றுக்கமைய 1989ல் அம்பாறை மல்வத்தையில் IPKF யினர் மீது தாக்குதல் ஒன்றை அன்ரனி முன்னெடுத்து செய்தான். இதில் IPKF யினரைக் கொண்டு04 றைபிள்களும் கைப்பற்றினான்.

முன்னால் இலங்கை ஜனாதிபதி ரனசிங்க பிறேமதாசாவின் ஒப்பந்தக் காலப்பகுதில் IPKF யினர் முதலில் அம்பாறையை விட்டு வெளியேறிக் கொண்டியிருந்தனர். அக்காலப்பகுதியில் தமிழ் தேசவிரோதக்குழுக்கள் அம்பாறை திருக்கோவிலிலும், தம்பிலுவிலிலும் இரண்டு பெரிய முகாம்கள் அமைத்திருந்தனர்.

அந்த இரண்டு முகாம்களையும் அன்ரனி வேவு பார்த்தான். வேவு எல்லாம் புர்த்தியாகி விட்டது. மட்டக்களப்பிலிருந்து மேலதிக போராளிகளை அம்பாறைக்கு அனுப்பி வைக்கும்மாறு கருணாவிடம் அன்ரனி கோட்டான். மற்றைய போராளிகளுடன் கருணாவும் சென்றான். இரண்டு தமிழ்த்தேசவிரோத முகாம்களையழிக்க தலைமை தாங்கி அன்ரனி களத்தில் இறங்கினான்.

இந்த இரு முகாம் சன்டையில் வெகுதுரத்தில் நின்று கொண்டு அன்ரனி எங்கு நிற்கிறாய்! என்று கருணா கேட்டான். அதற்கு அன்ரனி சன்டை நடக்கும் முகாமுக்குள்தான் நிற்கிறேன். கருணா உனக்கு பிரச்சனையில்லையா என்று அன்ரனி வேடிக்கையாக வோக்கி டோக்கில் கேட்டான். கருணா வெட்கத்தால் மௌனமானான்.

இச்சன்டையில் தனிப்பட்டரீதியில் கருணா முடிவெடுத்து சரணடைந்த சில தமிழ் தேச விரோதக் குழுக்களைச்சேர்ந்தவர்களை சுட்டுக் கொன்றான். அன்ரனி இச்சம்பவத்தை கடுமையாக எதிர்த்தான். சண்டையில் அவர்கள் இறந்ததாக கருணா கதைபரப்பினான்.

இந்த முகாம்கள் அழிப்பில் கைப்பற்றப்பட்ட ஆயத தளபாடங்களை எடுத்துக் கொண்டு செல்லும் போது TNA என்றழைக்கப்பட்ட தமிழ்தேசவிரோதக்குழுக்கள் பதுங்கித்தாக்குலை செய்தனர்.

இச்சம்பவத்தில் கருணா பின்வாங்கி ஓடிவிட்டான். பதில் தாக்குதல் செய்து முறியடித்து தமிழ்தேசவிரோதிகளை பின்வாங்கச் செய்து விட்டு வெற்றிகரமாக ஆயுத தளபாடங்களை அன்ரனி முகாமுக்கு கொண்டு சேர்த்தான். இதில் TNA என்றழைக்கப்பட்ட ராசிக்குழுவினர் நிலை குலைந்தனர். அன்ரனி மீது சகபோராளிகளிடத்தில் மதிப்பும் மரியாதையும் உயர்ந்தது சகபோராளிகள் அன்ரனியை 'அன்ரனிக்குயின்' என்று பெயர் வைத்து அழைத்தனர். ஆனால் இச்சன்டையை தான் தான் முன் நின்று நடத்தி வெற்றி பெற்றதாக கருணா பெயர் வாங்கினான்.மட்டக்களப்பிலிருந்து IPKF யினர் கொஞ்சம் கொஞ்சமாக விலகிக் கொண்டார்கள்.

அம்பாறையில் பின்னடைவைக் கண்ட ராசிக்குழுவினர் மட்டக்களப்பு வடக்கே சத்துரக்கொண்டான் தொடக்கம் கல்லடிப்பாலம்வரை கட்டுப்பாட்டுக்குள்ளாக்கி முகாம்களை அமைத்திருந்தனர். அன்ரனியின் செல்லவாக்கைச்சரியச் செய்ய இதுதான் தருனம் என கனவு கண்ட கருணா தனது படையணியை இறக்கி தன்னாமுனை வரை நகர்த்தினான் ஆனால் சத்துருக்கொண்டானில் ராசிக் குழுவினர் கடுமையான எதிர்ப்பிருந்தது. தன்னாமுனைக்கு மேல் நகரமுடியாமல் கருணாவின் படையணி திண்டாடியது. படுவான்கரைப்பிரதேசங்களான வவுனதீவு, உன்னிச்சை, ஆயித்தியமலை, மகிழவெட்டுவான் என்பன ராசிக்குழுவினரின் கட்டுப்பாட்டுக்குள்ளிருந்த பிரதேசங்களாகும்.

அந்த TNA யின் ராசிக்குழுவினர் நரிப்புல்தோட்டம் வழியாக பங்குடாவெளி வந்து ஏறாவுர் வர முயற்சி எடுத்துக்கொண்டிருந்தனர். இந்த நகரைத் தக்கவைக்க பங்குடாவெளியில் மதியை கருணா நியமித்தான்(கிரானில் முதல் படுகொலையை கருனாவுடன் சேர்ந்து செய்த மதி) சகபோராளிகளுகுத் தெரியாமல்அவர்களை விட்டு விட்டு மதி தப்பியொடி விட்டான்.

அவ்வேளையில் கருணா தனது மெய்க்காப்பாளர்களுடனும் சில போராகளிகளுடனும் கொம்மாதுறையில் தளமிட்டிருந்தான். பங்குகுடாவெளியில் ராசிக்குழுவினர் வருவதையறிந்த கருணா தனது மெய்க்காப்பாளர்களை அழைத்துக் கொண்டு தனது சொந்தக் கிராமமான கிரானுக்குத் தப்பிச்சென்று விட்டான். பங்குடாவெளி வரை வந்த ராசிக்குழுவினரை மேஜர் அபயனும் ரம்போ பிரசாத்தும் சகபோராளிகளுடன் சேர்ந்து மிக துனிச்சலுடன் கொஞ்ச நிமிடத்திற்குள் பதில் தாக்குதல் செய்து முறியடித்து பின்வாங்க செய்தனர்.

பங்குடாவெளி வந்த ராசிக்குழுவினர் நரிப்புல்தோட்டம் வரை பின்நோக்கி ஒடி விட்டனர். ராசிக்குழுவினர் பின்வாங்கிய செய்தியை மேஜர் அபயனும் ரம்போ பிரசாத்தும் கருணாவுக்கு அறிவித்தனார். நீங்கள் கூறுவது உண்மையா எனக் கேட்ட கருணா அதை உறுதிப்படுத்திய பின்னர் மீண்டும் கொம்மாதுறைக்கு வந்து சேர்ந்தான்.

தெல்லிப்பளையை சேர்ந்த மேஜர் அபயனுக்கும் ரம்போ பிரசாத்திற்கும் கருணா செய்த துரோகங்கள் என்ன என்னென்று இத்தொடரில் பின்னர் உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். இது இவ்வாறு இருக்க இரண்டு நாட்களாகியும் தான்னாமுனையிருந்து கருனாவின் படையனியால் முன்னேற முடியவில்லை! மட்டுநகரை ஏன் உங்களால் இன்னுமும் பிடிக்க முடியவில்லை! என்ன காரணம்? என்று தலைவர் கருணாவுடன் தொடர்பு கொண்டு கேட்டார். கருணாவுக்கு இது பெருத்த அவமானமாகயிருந்தது. இதில் சம்பந்தப்பட்ட பொறுப்பாளர்களையும் தளபதிகளையும் பலமைல்களுக்கு அப்பாலிருந்து கொண்டே தொலைத்தொடர்பில் தொடர்பு கொண்டு கருணா காரணம் கேட்டானான். அதற்கு அவர்கள் அன்ரனி இருந்திருந்தால் எப்போதே பிடித்திருப்போம் என்றும் அன்ரனி இங்கு வரவேண்டும் என்றும் எல்லோரும் விரும்பினர்.

அந்நேரம் தலைவர் தன்னை பிழையாக விளங்கிகொள்வார் என நினைத்த கருணா அன்ரனியை அம்பாறையிருந்து உடன் வரும்படி அறிவித்தான். அன்ரனி என்ற வீரத்தளபதி வருகின்றான் என்பதை அறிந்து கொண்ட ராசிக்குழுவினர் கொஞ்சம் கொஞ்சமாக தங்களது முட்டை முடிச்சுகளைக்கட்டி மட்டுநகரை விட்டு ஒடத் தொடங்கினர். அன்ரனியால் முற்றுமுழுதாக மட்டு நகர் மீட்கப்பட்டது.ஆனால் மட்டு நகரை தான் வெற்றிகொண்டு மீட்டதாக கருணா கதையளந்தான்.

பளுகாமத்தில் ராசிக்குழுவினரின் முகாமைத் தாக்கும் போது கொக்கட்டிச்சோலையிருந்து சக ராசிக்குழுவினரின் உதவி கிடைக்கும் என்று கொக்கட்டிச்சோலை அம்பலத்தடியில் மேஜர் றோபேட் தலைமையில் கட்அவுட் போடப்பட்டது. இவ்வேளையில் குறுமன்வெளியைச்சேர்ந்த தாசன் என்ற போராளி ராசிக்குழுவின் முகாமைப்பார்க்கச் சென்றார். ராசிக்குழுவினர் ஆயுததளபாடங்களை வாகனங்களில் ஏற்றி வைத்துவிட்டு ஏற்கனவே தப்பி சென்று விட்டனர். தாசன் கைக்குண்டு ஒன்றை வெடிக்க வைத்து விட்;டு ஆயுதங்களை வாகனத்தில் கொன்டு வந்து சேர்த்தான். இதை வெகுதெலையிருந்து அவாதனித்த கருணா ராசிக்குழுவின் முகாமை தகர்த்து பெருமளவு கனரக ஆயுதங்களை தான் கைப்பற்றியதாக எல்லாருக்கும் பிரச்சாரம் செய்தான். ஆனால் இந்த தாசனுக்கு கருணவால் செய்யப்பட்ட கொடுமைகள் பல.. பல இந்த தாசன் தற்போது எங்கு எந்த நிலையில் வாழ்கின்றான் என்று தெரியாது!

ராசிக்குழுவினரின் பளுகாமம் முகாம் கைப்பற்றப்பட்டு செய்தி கேட்டு மற்றய TNA யினர் முன்னேறி வந்தனர். 1989ல் இச் சம்பவம் நடந்தது. மேஜர் றேபேட்டுடன் 6 போராளிகளும் பரந்த வெளியில் பகலில் ராசிக்குழுவினருடன் எதிர்ச்சமரில் ஈடுபட்டியிருந்தனர். அப்போது அவர்களின் ரவை முடிந்து விட்டது. கருணாவிடம் உதவியும் ரவையும் கேட்டனர். கருணா பதில் கூறவில்லை! இறுதிவரை போராடினோம் ரவை முடிந்து விட்டது! ஆனால் சரணடையமாட்டேம் என்று இறுதியாக தொலைத்தொடர்பு சாதனத்தில் பேசி சயனைட் அருந்தி மேஜர் றோபேட் மற்றும் கொம்மாதுறையைச் சேர்ந்த வேனு உட்பட 6 போராளிகள் வீரச்சாவடைந்தனர். இதே நேரம் 3 கிலோ மீற்றருக்குள் 300 பேருடன் கருணா என்ற நயவஞ்சகன் இருந்தான் என்பது குறிப்பிடதக்க விடயம்.

ஆனால் அந்த 6 மாவீரர்களின் புகழுடலைக்கூட கருணாவால் எடுக்க முடியவில்லை! மாறாக மேஜர் அபயனனையும் தாசனையும் வீண் பழிசுமத்தினான், கருணா! இதனால் மனமுடைந்த தாசன் இயக்கத்தை விட்டே வெளியேறினான். இச்செய்தியை அறிந்த அன்ரனி அம்பாறையிருந்து வந்து சேர்ந்தான்.

இச் செய்தியையறிந்த அன்ரனி அம்பாறையிருந்து வந்து சேர்ந்தான்….. கொக்கட்டிச்சோலையும் பளுகாமத்தையும் ஒரே நேரத்தில் வெற்றியிட்டிருக்கலாம். ஏன் அவசரப்பட்டீர்கள். ஒரே நேரத்தில் இரண்டு முகாம் அம்பாறையில் வெற்றி கொண்டோம். ஆறு போராளிகளை ஏன் வீணாக சாவு கொடுத்தீர்கள். அன்ரனி இல்லாமல் செய்து காட்டவேண்டும் என்றா இப்படி செய்தீர்கள் என்று அன்ரனி கருணாவிடம் கேட்னான். இதனால் கருணாவுக்கும் அன்ரனிக்கும் கடும் வாக்குவாதம் கூட ஏற்பட்டது.

உன்னிச்சையிருந்த ராசிக்குழுவினரின் முகாமை அழிக்க அன்ரனியின் உதவியை நாடக்கூடாது என்று கருதிய கருணா அன்ரனியை கரடியனாற்றில் நிறுத்தி விட்டு தானும் செல்லாமல் படையனியை அனுப்பினான். ஆனால் ராசிக்குழுவினரின் எதிர்தாக்குதலை சாமாளிக்க முடியாத படையனிகள் கருணாவிடம் இது பற்றி என்ன செய்லாம் எனக் கேட்டனர். ஒழுங்கான திட்டமிடல் இல்லாததால் அவர்கள் சிக்கியிருந்தனர்.

ிரச்சைனையாகவுள்ளது அன்ரனி நீ போ என கருணா கெஞ்சுவது போல அன்ரனியிடம் கூறினான். அன்ரனியின் வேகமான தாக்குதலால் நிலை குலைந்த ராசிக்குழுவினர் உயிர் தப்பினால் போது என்று சிதறி ஓடினர். இதனால் சக போராளிகள் அன்ரனியை மிகவும் பாரட்டினர். போராளிகளிடத்தில் மட்டுமல்ல மக்கள் இடத்திலும் அன்ரனியின் செல்வாக்கு உயரத் தொடங்கியது.

மட்டக்களப்பு அம்பாறையில் நடந்த ராசிக்குழு மற்றும் இந்திய படை மீதான சன்டைகளை தானே முன்னின்று நடத்தி வெற்றி வாகை சுடியதாக கயவன் கருணா பெயர் வாங்கினான். பல சந்தர்ப்பங்களை பயன் படுத்தி அன்ரனி மீது பொய் பிரச்சாரங்களை நடத்தி தலைமையிடம் தான் நல்ல மனிதன் போல பெயர் வாங்கிக் கொண்டான். ஆனால் அன்ரனியுடன் நின்று செயல் பட்டவர்களுக்கும் அவனின் போர் திறனை நேரடியாக கண்டவர்களுக்கும் அவனின் வீரம் புரியும்.

ஏன்! ராசிக் என்ற துரோகி உயிருடன் இருந்திருந்தால் அன்ரனியின் அதிரடித்தாக்குதல்கள் பற்றி அடிக்கடி நினைத்திருப்பான்.

யாழ் மண்ணதும் அன்ரனியவனின் வீரமறியும். யாழ் கோட்டை மற்றும் பலாலிப்பகுதிகளிலும் அன்ரனியின் தாக்குல் வியுகங்கள் அமைந்தன. ஒரு தடவை பலாலியிருந்து முன்னேறிய சிறிலங்கா படைகளை தனது புPஆபு இயந்திர துப்பாக்கியால் தனித்து நின்று தனக்கு உதவி கிடைக்கும் வரை இராணுவத்தினர் மீண்டும் முன்னேற முடியாமல் தடுத்த பெருமை அன்ரனியை சாரும் என பலரும் போசிக் கொன்டனர். மேஜர் அன்ரனியுடன் யாழில் நின்று செயற்பட்ட போராளிகள் அன்ரனியின் இனிமையான நினைவுகளை அடிக்கடி நினைவு கூர்வர்;.

1990 காலப்ப்பகுதிகளில் அன்ரனி மட்டக்களப்பிலிருந்திருந்தால் கும்புறுமுலை, களுவாஞ்சிக்குடி இராணுவமுகாம்களின் தாக்குதலகள் தோல்வியடைந்திருக்கமாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது. மேஜர் அன்ரனிக்கு கருணாவால் பின்னப்பட்ட சதிவலைதன்னை இனம் காட்டி கருணாவுடன் நேரடியாக எதித்தவர்களில் முக்கியாக கருதப்பட்டவர் கிரேக் மாஸ்டர். யார் இவர்? இவரின்பின்னனி என்ன என்று பார்ப்போம். கனேசர் கரிகாலன் என்ற இயற்பெயர் கொண்ட கிரேக்மாஸ்டர் யாழ்ப்பாணம் சன்டியிலிப்பாய்யை சேர்ந்தவர். இயற்கையாவே பண்பும் பணிவும் மற்றவர்களிடத்தில் கனிவுடன் நடக்கும் குணவியல்பும் கொண்ட இவர் நேர்மையற்ற செயல் நடக்கும் போதொல்லாம் அதை தட்டிக்கேட்க தவறுவதில்லை. ஒரு மருத்துவ போராளியாக தென்தமிழித்திற்கு 1987யில் காலடி எடுத்து வைத்தாh. புலிபாய்ந்தகல் பகுதியிலும் அதன் பின் 1988லிருந்து 1989 வரை அம்பாறையில் மருத்துவ போராளியாகச் செயற்பட்டார்.

இவர் அன்ரனியின் நெருங்கிய நண்பராவார் ஒருதடைவை இவரின் தாயார் யாழ்ப்பானத்திலிருந்து அம்பாறை வந்து இயக்கத்தை விட்டு விலகி வரும் படியும் வெளிநாடு அனுப்புவதாகவும் கூறினார். அதை முற்று முழுதாக மறுத்த இவர்; தான் இயக்கத்தையோ சக போராளிகளையோ விட்டு வரமாட்டேன் எனக்கூறி தாயாரை அனுப்பி வைத்தார். அன்ரனிக்கு கருணா செய்த வஞ்சகத்தை எதிர்த்து கருணாவுடன் வார்த்தை போரில் ஈடுபட்டு அதே கருணாவால் வஞ்சிக்கப்பட்டார். தனது தாய் அழைத்த நேரம் மறுத்து நின்ற அந்த மனிதன் அன்ரனியின் பிரச்சனையால் மனம் உடைந்து யாழ் சென்றார்.அங்கு சென்று மௌனமாகி விட்டார். ஏன் அவரின் உன்மைகள் மௌனீத்தன என்று தெரியாது! ஆனால் தன்னால் ஏன் இயக்த்திற்குள் பிரச்சைனை என்று நினைத்தாரோ!அல்லது பிச்சை வேண்டாம் நாயைப்பிடி ! ஆளை விட்டால்; போதும் என்று நினைத்தாரோ யாருக்கும் தெரியும்!

1990யில் அன்ரனி யாழ்ப்பாணத்தில் நேரடியாக சந்தித்த கிரேக் மாஸ்டர் அன்ரனியிடம் இப்படி கூறினாராம். ஏன்றைக்கோ ஒரு நாளைக்கு இயக்கத்திற்கு கருணா கரியை புசுவான் என்று வேறு சில நெருங்கிய போராளிகளுக்கும் இதை கூறினாராம். தற்போது கிரேக் மாஸ்டர் இயக்கத்தை விட்டு விலகி ஜரோப்பிய நாடென்றில் வாழ்ந்து வருகிறார்.

பலாலிப்பகுதில் இராணுவத்துடன் நடந்த நேரடி மோதலென்றில் மேஜர்அன்ரனி என்ற வீரத்தளபதி வீரச்சாவடைந்து விட்டான். தமிழ் தேசிய உணர்வு கொண்டவனும் தலைமைத்துவ அதீத விசுவாசம் கொண்டவனுமான அந்த செயல் வீரனை யாழ் மண்ணது பெருமையுடன் ஏற்றுக் கொண்டது. அன்ரனியின் இழப்பால் அவனை நேசித்தவர்களின் இதயம் கனத்தது. ஆனால் கருணா என்ற துரோகி மட்டும் நிம்மதி பெருமுச்சு விட்டு குதுகலித்தான் என்பது மட்டும் நிஜம்.

கருணா என்ற துரோகி மட்டக்களப்பு மண்ணுக்கு மட்டுமல்ல ஒடடுமொத்த தமிழினத்திற்ம் தன்னை வளர்த்த இயக்கத்திற்கும் தலைவருக்கும் மாபெரும் துரோகமதைச் செய்தான். தன்னிச்சையாக தனது துரோகத்தனத்தை தமிழினத்துற்கு மட்டுமல்ல முழுஉலகத்திற்குமே வெளிப்படுத்தினான். குளிபானம் அருந்திக்கொணடே இயக்கத்திலிருந்து பிரிந்து தான் தனியே செயற்படபோவதாக செய்தி ஊடகங்ளுக்கு பேட்டியளித்தான்.

ஆனால் அன்ரனி மட்டும் அம்பாறையில் அந்நேரத்திலிருந்திருந்தால் குளிர்பானங்கள் என்ன பல பாணங்கள் அருந்த செய்து கருணா என்ற கயவனின் குடலலையே உருவி மாலையாக அணிந்திருப்பான் எனற உண்மை எத்தனை பேருக்குத் தொரியுமோ தெரியாது.

 

http://www.eddappar.com/24.stm

 

 

Edited by நியானி
யாழ் கருத்துக்கள பெட்டக மூலம் கொடுக்கப்பட்டுள்ளது

  • நன்னிச் சோழன் changed the title to வீரத்தளபதி மேஜர் 'அன்ரனி'யின் வீரமும் வஞ்சகன் 'கருணா'வின் வஞ்சனையும்!
  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் எத்தனை பேர் கதை விடுவார்களோ 

  • கருத்துக்கள உறவுகள்

பழைய குப்பையை பையன் ஏன் இப்ப கிண்டியுள்ளார்....பொழுது போகேல்லையோ😂 
உதை  வாசிச்சால் அல்பேட்டும் ,அன்ரனியும் இன்னுமொருக்கால் தற்கொலை செய்வினம்...இப்படியே நின்று குண்டு சட்டிக்குள் குதிரையோட்டிக் கொண்டு இருக்க வேண்டியது தான் ...முந்தி எல்லாம் மலையாளிகள் தான் போராட்டத்தை பற்றி கேவலமாய் படம் எடுத்தார்கள் .....இப்ப தமிழ்நாட்டில் இருந்தும் எடுக்க தொடங்கி இருக்கிறார்கள் ....அவர்களை சொல்லி குத்தமில்லை ...நீங்கள் சொல்வதை ,செய்வதை தான் அவர்கள் படமாய் எடுக்கிறார்கள்.
இணைச்ச ஆள் பையன் சின்ன வயசு ...சின்ன வயசில் ஓடி வந்த ஆள் ....பச்சை குத்தின ஆட்களை பார்த்தால் எப்பவும் உசுப்பேத்திற, எங்களை சந்தோசப்படுத்திற செய்திகள் இருந்தால் காணும் ...அவர்களுக்கு உண்மை ,பொய் இடண்டாம் பட்சம் தான் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.